28/02/2018

இன்னும் Syriaவில் மனித வேட்டை நடந்து கொண்டு தான் உள்ளது...


Twitter: Twitter.com/ThamizhAnons

கன்னடன் கமல் அரசியலுக்கு வந்ததற்கும் இந்த சந்திப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நம்புங்கள்...


கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.


அப்படி நடந்து கொண்டிருந்த சமயத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த தனியார் உளவு அமைப்பு நடத்தும்  அமர் பிரசாத் ரெட்டி  கமலையும், ரஜினியையும் பொன்னாருடன் தனித்தனியாகச் சந்தித்து தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் உள்ளது ( ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு) என்று கூறி அரசியலுக்கு அழைத்தார்கள்.


ரஜினியை அழைத்தது பா.ஜ.க.வை வலுவாக்க செய்ய...

கமலை அழைத்தது தமிழ் தேசியத்தை  வலுவிழக்க செய்ய...

சீனாவில் தயாரிக்கப்படும் செயற்கை முட்டைக்கோஸ்... உஷார்...


வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் பிரசவம்.. எந்த ஊசியும் தேவை இல்லை இதை மட்டும் செய்தால் போதும்...


குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக அதாவது அதிக அடர்த்தியுடன் பற்று போட, பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்குமாம்.

மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது.

பெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.  இந்த அற்புதத்தை தெரியாமல் கண்டகண்ட ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்.

இதன் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு உடையும்,

இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி காணாமல் போகும். வேரை ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளையை அப்படியே  கால் குவளையாக வரும் வரை  காய்ச்சி, காலையிலும், மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும்..

உலகத்தின் எதிரிகள்... அமெரிக்கா.. இஸ்ரேல்.. ரஷ்யா...


#SAVE_SYRIA 

உலகத்தின் எதிரிகள்... அமெரிக்கா.. இஸ்ரேல்.. ரஷ்யா...


#ENEMY_OF_THE_WORLD_AMERICA_ISRAEL_RUSSIA...

#SAVE_SYRIA

தமிழர்களை நம்பி புரட்சிக்காக காத்திருக்கும் நண்பர்களுக்காக அனைவரும் Twitter வாருங்கள்...


இன்று நீ பேசவில்லை என்றால் நாளை நீ சாகர்மாலாவுக்கு போராடும் பொழுது எவனும் உனக்காக பேச வரமாட்டான்..

விழித்துக்கொள்ள தமிழா...

Twitter Page : twitter.com/thamizhanons
Hashtag: #SaveSyria #SaveGhouta

உலகில் யார் அடிபட்டாலும் முதலில் கண்ணீர் விடுவது தமிழர்கள் தான்...


16 வது நாளாக தொடரும் போராட்டம் ஆதரவற்று தவிக்கும் தூத்துக்குடி மக்கள்...


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசக்கார ஆலைக்கு எதிரான அ.குமரெட்டியாபுரம் மக்களின் தொடர் போராட்டம் இன்று 16வது நாள். போராடும் மக்களுக்கு குரல் கொடுப்போம்...

தமிழகம் வளர்ச்சி என்று எம்மிடம் வாதிட வந்தாலும் எம் வாதம் இதுதான்...


இந்திய திராவிட சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழினப் போராளி தமிழரசன்...


ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக் கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?

ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்...

தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது...

ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,

கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.

அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.

ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்..

நேரடியாக மோத பயந்து கொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.

அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி...

எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலை செய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.

தமிழரசன் வந்தார்..
கொள்ளையடித்து விட்டு வாசலை நெருங்கும் போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.

மக்கள் தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரை விட்டார்.

குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.

உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.

ஆம். முல்லைப் பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன் தான்...

காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக் கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக் கொண்டவர்.

அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது மலையாளி எம்.ஜி.ஆர் ஆட்சி.

தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து..

கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது...

பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்...

சிரியா நாடு போல தமிழகத்தை அழிப்பதற்கு வல்லரசு நாடுகள் போட்டி போடும், இதில் தமிழகம் சுடுகாடாக மாறும், மிக விரைவில்...


திமுக தெலுங்கர் ஸ்டாலினை.. பாஜக எச்ச. ராஜா சர்மா காரி துப்பிய போது...


புதிய தலைமுறை தொலைக்காட்சி எண் 044-45969500...


மக்கள் பிரச்சனைகளை பேசாத மீடியாக்களை கேள்வி நல்லா கேளுங்கள்.. புத்தி வரட்டும்...

தமிழகத்தின் எல்லா மீடியாக்களுக்கு எச்சரிக்கை...

நீங்கள் கூறிய உட்பிரிவு சண்டைகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றன...


அவைகள் மக்களால் உருவாக்கப்படவில்லை.. அதிகார வர்க்கத்தினர் மக்கள் ஒன்று சேர கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதே மதம், சாதி போன்றவை..

சாதி, மத சண்டையில் ஒருபோதும் அதிகார வர்க்கத்தின் பாதிப்பதில்லை..

அதிகார வர்க்கத்தின் ஒரே குறிக்கோள் பணம் மற்றும் மக்களை குழப்பத்தில் வைத்திருப்பது..

இசுலாம் நாடுகளில் எண்ணெய் வளத்தை பிரதானமாக வைத்து இவ்வளவு பிரச்சனைகள் உருவாக்கப்படுகின்றன...

புற்றுநோய் பாதித்த டெல்லி பெண்ணின் உயிரை காப்பாற்றிய கோவை இளைஞர்...


டெல்லியை சேர்ந்த புற்றுநோய் பாதித்த பெண்ணின் உயிரை ரத்த ஸ்டெம்செல் தானம் மூலம் கோவை வாலிபர் காப்பாற்றியுள்ளார்.

டெல்லியை சேர்ந்தவர் கரிமா சரஸ்வத்(37). இவருக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பரிசோதனையில் இவருக்கு ரத்த புற்றுநோய் தாக்கி இருப்பதும் அது பயங்கரமாக வளர்ச்சி அடைந்து உயிரை பறிக்கும் நிலையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து உறவினர்கள் அல்லாதவரின் ரத்த ஸ்டெம்செல்கள் மூலம் கரிமா சரஸ்வத்தின்  உயிரை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது தாத்ரி என்ற உடல் உறுப்பு தான அமைப்பை தொடர்பு கொண்டனர். அங்கு பதிவு செய்திருந்த குருமூர்த்தி (27) என்பவரின் ரத்த ஸ்டெம் செல் கரிமாவின் உடலுக்கு ஒத்துப்போனது தெரிய வந்தது. எனவே அவரிடம் இருந்து ரத்த ஸ்டெம்செல்கள் தானமாக பெற்று கரிமாவுக்கு செலுத்தப்பட்டது. இதனால் அவர் மரணத்தில் இருந்து மீண்டு உயிர் பிழைத்தார்.

கரிமாவுக்கு ரத்த ஸ்டெம்செல்கள் தானம் செய்த வாலிபர் குருமூர்த்தி, கோவையை சேர்ந்தவர். இவர் மெக்கானிக் ஆக பணிபுரிகிறார். குருமூர்த்தியின் தங்கை 3 வயதில் ரத்த புற்று நோயால் மரணமடைந்து விட்டார். தற்போது கரிமாவுக்கு ரத்த ஸ்டெம் செல்கள் தானம் வழங்கி காப்பாற்றியதன் மூலம் அவரை தங்களது மகளாகவே குருமூர்த்தியின் குடும்பத்தினர் கருதுகின்றனர். புற்று நோயிலிருந்து முற்றிலும் குணமாகிய சரஸ்வத், குருமூர்த்தியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்...

நீங்கள் உலக பிரச்சனைகளை பொருளாதார அரசியல் ரீதியாக பார்க்காத வரை, என் பதிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதி, மதமாக, பிரிவினைவாதமாக தான் தெரியும்.. அது என் தவறு இல்லை...


ஈர்ப்பு விதி...


எண்ணங்களுக்குக் காந்த சக்கி இருக்கிறது.

அவற்றிற்குக் குறிப்பிட்ட அலைவரிசைகளும் உண்டு.

எண்ணங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அவை பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படுகின்றன எண்ணங்கள் பௌதீகப் பொருட்களாக உருப்பெறும்.

விரும்பியவற்றை மூன்று எளிய படிகள் மூலமாக உருவாக்க...

1.கேளுங்கள் (ASK)
2.நம்புங்கள் (BELIEVE )
3.பெறுங்கள் ( RECEIVE)

1. கேளுங்கள் (ASK)...

உங்களுக்கு வேண்டியதைப்
பிரபஞ்சத்திடன் கேட்கும்போது, விருப்பம் குறித்த தெளிவை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.

2.நம்புங்கள் (BELIEVE)...

கேட்டது ஏற்கனவே கிடைத்துவிட்டது போல நடந்து கொள்வது, பேசுவது, மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும்.

கிடைத்துவிட்டது என்ற அலைவரிசையில் ஒளிப்பரப்பும் போது அதை பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை, நிகழ்வுகளை மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

3.பெறுங்கள் (RECEIVE )...

வேண்டும் என்று விரும்புபவற்றிற்கு, முன்னதாக நன்றி தெரிவிக்கும் செயல் ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்கையை அனுப்பும்.. வேண்டியதை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை மனத்தில் உருவாக்குவதுதான் அக்க்காட்சிப்படைப்பாகும்.

அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும் போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் சக்திமிக்க எண்ணங்களையும் உருவாக்கும்.

மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்...

இதை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாமல், அது உள்நாட்டுப்போர், இருபிரிவுகளுக்குள் இருக்கின்ற பிரச்சனை, மதப்பிரச்சனை என கூறுபவர்களின் மனநிலை மிருகத்தின் விட கொடியதாக இருக்கும் என நினைக்கிறேன்...


எங்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எதிர்த்து கொள்ளுங்கள்..

ஆனால் ஓரு நாட்டின் இனப்படுகொலையில் நீங்கள் வேற பிரச்சனையாக பார்ப்பீர்கள் என்றால் நீங்கள்..?

217 வங்கிகளில் 4மில்லியன் அமெரிக்க டாலர்களை hack செய்து அதை ஆப்பிரிக்க பாலஸ்தீன வறிய மக்களுக்கு வழங்கி விட்டு தூக்கு தண்டனை சிரிப்போடு எற்று கொண்ட நீ மனிதன் டா...


மனிதன் உருவம் இது..

இவர் அடித்த அடி அடியல்ல இடி..

இலுமினாட்டிகளை எதிர்க்க இவர் போன்ற ஆட்கள் தான் சரியான ஆட்கள்...

கடவுள் எங்கே..?


உலக சதியின் பிடியில் சிக்கிய அப்பாவி மக்கள் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கடவுள் எங்கே என்ற கேள்வியோடு ஒவ்வொரு உயிரும் துடிதுடித்து மடிந்து போகின்றதே...

வைரம் பற்றிய நாம் அறியாத சில தகவல்....


இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வச்(ஜ்)ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.

இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர்.

இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது? பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 அளவு (டிகிரி) சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கரிபொருள் (carbon) மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது. வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 பத்து லட்சம் (million) ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. வைரம் ஏன் இவ்வளவு பிரகாசிக்கிறது?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை முழுமையான உள்பிரதிபலிப்பு (Internal Reflection TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர்.

அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் பிரகாசிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது. வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர்.

ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது. ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம்.

அதாவது 5 காரட் 1 கிராம் எடை. சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ? ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள். உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட். நீலமான யா(ஜா)கர்(Blue Jager)வைரம் என்றால் என்ன?

தென் ஆப்பிரிக்காவில் யாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு நீலமான யாகர் (Blue Jager) என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை. வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 பார எடை அலகு (ton 35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது. இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது. பெல்சி(ஜி)யம் வெட்டு என்றால் என்ன ?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்சியம் நாட்டை சேர்ந்த லோடெவிச் (ஜ்)க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக பிரகாசிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்சியம் கட்டிங். வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும். பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது.

இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை (Hardness) என்கிறோம். வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ? வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பழுப்பு நிற (brown), சாம்பல் நிறம் உடைய(gray) பச்சை, செம்மஞ்சள் நிறமான (orange), இளஞ்சிவப்பு (pink), நீலம், வெளிர்பச்சை, ஊதா வர்ணம் (violet) வர்ணங்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது. இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் இலண்டன் கோபரம் (Tower of London) என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது. இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு விழா (Golden Jubilee) தான் மிகப்பெரியது இதன் எடை 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது...

வனத்தை மெல்ல இழந்துவரும் கோவை குற்றாலம்...


கோவை குற்றாலத்தில் ஒரு பாவமும் அறியாத சிறுமியை காட்டு யானை மிதித்துக் கொன்றது 2004 ஆம் ஆண்டில். சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் வந்தது 2017 ஆம் ஆண்டு. இந்த 13 ஆண்டுகள் இடைவெளிக்குள் இந்தச் சுற்று வட்டாரத்தில் புறப்பட்ட புதுப்புது கட்டிடங்களும், குடியிருப்புகளும், சொகுசு மாளிகைகளும், அதனால் நடந்த சூழலியல் மாற்றமும், அதன் விளைவாய் காட்டு மிருகங்களுக்கும் ஏற்பட்ட தொந்தரவுகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

கோவை குற்றாலம் 2004-ம் ஆண்டில் இருந்தது போல் இப்போது இல்லை.

கோவை குற்றாலத்தின் முகப்பு கிராமங்களாக இருக்கும் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், காருண்யா நகர், நல்லூர் வயல், நண்டங்கரை, சாடிவயல் என ஒவ்வொன்றிலும் ஏராளமான கான்கிரீட் கட்டிடங்களை - இல்லையில்லை கான்கிரீட் காடுகளையே காண முடிகிறது. இப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனம் மட்டும் 13 ஆண்டுகளில் 10 மடங்குகளுக்கு தன் கட்டிடங்களை விஸ்தீரணப்படுத்திவிட்டது.

பழங்குடிகள் மேம்பாடு காரணம் சொல்லி கோவை குற்றாலம் மலைகளுக்கு மேலே அடர்ந்த காட்டுக்குள் இருந்த கல்கொத்திப்பதி எனப்படும் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த வெறும் 40 க்கும் மேற்பட்ட இருளர் குடிகளை கீழே நண்டங்கரைக்கு கொண்டு வந்து குடியமர்த்தி விட்டனர் அதிகாரிகள். இந்தப் பழங்குடிகளுக்கு மேன்மை ஏற்பட்டதா என்றால் இன்றளவும் இல்லை. தொழில் இல்லாமல், இடிந்து விழும் கூரை வீடுகளுடன் தன் சுயம் தொலைத்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் பேசினால் நாங்கள் திரும்ப மலைக்கே போகிறோம் என்றே குரல்கள் ஒலிக்கின்றன.

இந்த நண்டங்கரைக்கு முன்னதாக இருந்த முண்டந்துறை ஓடையில் ஒரு தடுப்பணை கட்டி, அதற்கு மேலே ஒரு நிறுவனம் தன் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு சொகுசு விடுதிகளை அமைத்துள்ளது. கண்ணுக்கு விருந்தாகும் மலைகள், நீர்நிலைகள் சூழ்ந்த குளிர்ச்சியான இப்பகுதியில் இருந்தால் மலையேற்றம் எனப்படும் 'டிரக்கிங்' போகலாம். அணையில் தேங்கும் நீரை அருந்த வரும் காட்டு யானைகள், இதர வன விலங்குகள், பறவைகளை சொகுசு காட்டேஜிலிருந்தே தரிசிக்கலாம் என்ற ஏற்பாடு ஒரு பக்கம். இன்னொரு பக்கம் வீடியோ, புகைப்படங்களை விதவிதமாக எடுக்கலாம்என்பது இவர்களின் கேளிக்கை சமாச்சாரமாக இருக்கிறது.

மலை உச்சியில் பாரம்பரியமாக குடியிருந்த பழங்குடிகள் இருந்தால் சூழல் கேடு, மரக்கடத்தல், வனவிலங்கு வேட்டை நடக்கும், வனப்பொருட்கள் அவர்கள் சேகரிக்கக் கூடாது என தடை போடும் அதிகாரிகள், இந்த உல்லாச வாதிகளுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறது என்பதெல்லாம் தொடர்ந்து சர்ச்சையாகும் விஷயங்கள்.

அதன் உச்சகட்டமாக இதே நண்டங்கரையில் 2009-ம் ஆண்டில் ஒரு கோடு கட்டி மறுகோடி வரை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஷெட் போட்டு ஆயிரக்கணக்கான பணியாற்ற திரைப் படப்பிடிப்பு நடந்தது. இப்படப்பிடிப்பு அப்போதைய ஆட்சியாளும் பெருந்தகையின் பேரப் பிள்ளை என்பதால் எல்லா திக்கிலிருந்தும் அனுமதி கிடைத்தது. இதைப் பார்த்து சூழல்வாதிகள் கொந்தளிக்க மீடியாக்கள் அதை சுட்டிக்காட்ட, எதிர்கட்சி எம்எல்ஏ (தற்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி) இதற்கெதிராக தன் ஆதரவாளர்களை இங்கே திரட்டி வர, தன் படப்பிடிப்பை ரத்து செய்து கிளம்பியது சினிமா குழு.

மீடியாக்களில் இந்த மாதிரி விஷயங்கள் பிரபல்யமாகும் போது அங்கே என்னதான் இருக்கிறது என உடைத்துப் பார்க்க புறப்பட்டு விடுவது என்பது மனித இயல்புதானே?

அதன் தொடர்ச்சியாக ரியல் எஸ்டேட் அதிபதிகளின் கண்கள் இங்கே விழுந்து தொலைத்து விடுகிறது போலும். எந்த இடத்தில் காடுகள், எந்த இடத்தில் விவசாய நிலங்கள், எந்த இடத்தில் குடியிருப்புகள் என்றே புரிபடாத அளவில் திரும்பின பக்கமெல்லாம் வீட்டுமனைகள் உருவாகி வருகின்றன. இதில் மலையிடப் பாதுகாப்பு விதிமுறைகள் எல்லாம் காற்றில் விடப்படுகின்றன.

இயற்கையோடு இயைந்து வாழ வீடு வேணுமா, குளு,குளு சுவிட்சர்லாந்து போல் வாசம் வேணுமா எங்க கிட்ட வாங்க என்று கூவி அழைக்காத குறையாக வியாபாரம்.

2013 வாக்கில் இதே நண்டங்கரையில் பார்த்தால் சாமியார் குடில்கள் மாதிரி பழைய கட்டிட தோரணையில் சில கட்டிடங்கள். சமீபத்தில் பார்த்தால் இதே பகுதியில் பிரம்மாண்ட ராட்சஷ மரமே வளர்ந்தது போல எல்லாம் அலுவலக வீடு. அந்த ராட்சஷ மரம் முழுக்க முழுக்க கான்கிரீட் கம்பிகளாலும், கலவைகளாலும் ஆனது; அதற்கு வர்ணம் மட்டுமே காடுகளின் செயற்கை வர்ணம் என்பதெல்லாம் இங்கே வந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.

இதையெல்லாம் தாண்டிச் சென்றால் எட்டுவது கோவை குற்றாலத்தின் அடிவாரமான சாடிவயல். ஆண்டுக்கு பத்து மாதம் பன்னீர் போல் சாடிவயல் ஆற்றில் (இது நொய்யலை உருவாக்கும் முக்கியமான ஓடைகளில் ஒன்று) ஓடும் நீரில் சில ஆண்டுகளாக பாஸ்டர் ஆப் பாரீஸில் ஆன விநாயகர் சிலைகள் விடப்படுகின்றன. அவை அழுகியும் கிடக்கின்றன.

இந்த அழுகல் சிலைகள் ஒரு பக்கம் ஆற்றோரம் கரையாமல் கிடக்கிறது என்றால் இந்த ஆற்றோரமே ஏராளமான ஆழ்குழாய் கிணறுகள். 300 அடி, 500 அடி என்று ஆழம் சென்று நீரை உறிஞ்சி, 3 கிலோ மீட்டர் 4 கிலோ மீட்டர் தூரம் கூட குழாய்கள் மூலம் தண்ணீர் செல்கின்றன.

சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த செம்மேடு, முட்டத்துவயல், அதை அடுத்துள்ள ஆன்மீக மையத்தின் சுற்றுவட்டாரங்கள், வரும் அத்தியாயங்களில் காணப்போகும் நரசீபுரம், வைதேகி நீர்வீழ்சசி எனப்படும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 78 மினரல் வாட்டர் கம்பெனிகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள்.

இந்த கணக்கு கூட பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளின் கணக்கு. இப்படி பதிவு செய்யாமல் பல மடங்கு மினரல் வாட்டர் சப்ளை கம்பெனிகள் செயல்படுவதாக அதிர்ச்சியூட்டுகின்றனர் இப்பகுதி விவசாயிகள். அவர்கள் 90 சதவீதம் நீரை ஆழ்குழாய் கிணறுகளிலும், நேரடியாக ஆற்றிலிருந்துமே எடுக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.

கடந்த இருபதாண்டுகளில் மட்டும் இந்த அளவுக்கு இங்கே கம்பெனிகள் பெருகியிருக்கிறது. வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு கூட இங்கிருந்துதான் தண்ணீர் சப்ளையாகிறது என்றால் இங்குள்ள நீர்நிலைகள், நிலத்தடி நீர் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும்? பசுமை மர சூழல் காணாமல் போயிருக்கும் என எண்ணிக் கொள்ளுங்கள். அதன் மூலம் வனஉயிரினங்களின் ஜீவாதாரம் எந்த அளவு கெட்டிருக்கும்? அதில் யானைகளின் பாடு எந்த அளவு திண்டாட்டமாகியிருக்கும்?

இதையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டியது வனத்துறை. இந்த குறிப்பிட்ட வனப்பகுதி போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குள் வருகிறது. மங்களப்பாளையம் கிழக்கு மற்றும் மேற்கு, சாடிவயல், வெள்ளப்பதி, முள்ளாங்காடு, பூண்டி தெற்கு, மத்தியம் மற்றும் வடக்கு, நரசீபுரம், தேவராயபுரம், கெம்பனூர், மருதமலை என இ்நத வனச்சரகத்தின் 'பீட்'டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் நடுநாயகமாய் விளங்குவதுதான் சாடிவயல் தாண்டி உள்ள கோவை குற்றாலம். இங்கே ஒரு காலத்தில் மனிதர்களுக்கு அனுமதியே இல்லாமல் இருந்தது. காட்டுயானைகள் சுதந்திரமாக உய்யும் இடமாகவும் விளங்கியது.

1970 -80களில்தான் வனத்துறையினர் அனுமதியோடு இங்கே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதும் கூட காடு காடாக இருந்தது. சேலம் சிறுமி காட்டுயானையிடம் சிக்கி பலியான பிறகு வனத்துறை சில ஏற்பாடுகளை செய்தது. சாடிவயலிலிருந்தே மக்களை அவரவர் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும், பொடி நடையாகவும் அனுமதித்து வந்த வனத்துறையினர் இங்கிருந்து சுற்றுலா பயணிகளை தங்கள் வண்டியிலேயே அனுமதித்து வரும் பணியை செய்ய ஆரம்பித்தது. அதற்கு கட்டணமும் வசூலித்தது.

வனத்துறை வாகனத்தில் சென்று அருவிக்கு 1 கிலோமீட்டர் தொலைவில் பொதுமக்கள் இறக்கிவிடப் படுகிறார்கள். அங்கேயே சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் காகிதங்கள், தீப்பெட்டிகள், மதுபாட்டில்கள் சோதனையிடப்பட்டு அங்குள்ள வாட்ச்சர்களால் வாங்கிக் கொள்ளப்படுகின்றன. தின்பண்டங்கள் பழங்குடியின மக்கள் விற்பவை மட்டுமே.

முன்பு எந்த வித கட்டுமானப்பணியும் செய்யாமல் இருந்த வனத்துறை இதை 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா தலமாக அறிவித்ததோடு, அதற்கேற்ப சில வசதிகளையும் செய்துள்ளது. அதற்காக அருவிக்கு செல்ல படிக்கட்டுகள், இரும்புத் தடுப்புகள், வனத்துறை ஊழியர்கள் இருந்து கண்காணிக்க அறைகள் எல்லாம் கட்டப்பட்டுள்ளன. இப்படியெல்லாம் செய்ததனால் இன்றைக்கு விடுமுறை தினங்களில், பண்டிகை தினங்களில் மட்டும் தலா 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கோவை குற்றாலம் வருகின்றனர். இதுவே 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சில நூறுகளில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இருந்தாலே அதிசயம் என்கிறார்கள் சூழலியாளர்கள். கானுயிர்கள் வசிக்கும் பூமியில் மனிதனும், மனிதனின் எச்சமிச்சங்களும் நிறைந்தால் அவற்றின் நிலை என்னவாகும் என்பது நம்மவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதைவிட பெரும் கொடுமை, இந்த கோவை குற்றாலம் காடுகளில் ஒரு காலத்தில் யானைகளின் விருப்ப உணவான மூங்கில்கள் நிறைந்து காணப்பட்டன. கூடவே புளியன், தாளி, ஈட்டி, மலைவேம்பு, கொய்யா, நெல்லி போன்றவை நிறைய காணப்பட்டன. அவையெல்லாம் இப்போது அருகி அங்கொன்றும் இங்கொன்றுமாகவே உள்ளன. மற்றபடி திரும்பின பக்கமெல்லாம் தேக்குமரங்களே நிறைந்து கிடக்கின்றன. அதனூடே தைல மரங்களும் தலையசைக்கின்றன.

தேக்கு மரங்களையும், தைலமரங்களையும் மட்டுமல்ல, அதன் இலைகளைக் கூட யானைகள் முகர்ந்துபார்க்காது என்பதே யதார்த்த உண்மை. நம் நாட்டு வகை காடுகள் அழிப்பும், தேக்கு மரக் காடுகள் உருவாக்கமும் பிரிட்டீஸார் காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது என்பதுதான் வேதனை...

அப்துல்கலாம் ஐயாவை நேசிப்பவர்கள் பகிருங்கள்...


தேன்கனிக்கோட்டை அடுத்த உரிகம் கிராமத்தில் மருத்துவர் இல்லாததால் மாடு உயிர் இழந்த சோகம், மானுக்காக வைக்கப்பட்ட கனியில் மாடு மாட்டி பரிதாபமாக உயிர் இழப்பு, நடைவடிக்கை எடுக்காத வனச்சரக அலுவலர்கள்...


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா உரிகம்  கிராமத்தில் விவசாயின் மாடு ஒன்று நன்கு நாட்களாக  உடல் நலம் குறையைந்த்து காணப்பட்டது எந்த கிரமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை பல ஆண்டுகளாக செய்யப்படாமல் உள்ளது இதன் காரணமாக மருத்துவமனைக்கு செல்ல  சுமார் 30 கிலோமீட்டர் உள்ள அஞ்செட்டி செல்ல வேண்டும் அல்லது 70 கீ.மீ துரம் உள்ள தேன்கனிக்கோட்டை செல்ல வேண்டும் அங்கு சென்று அலைத்து வந்தாலும் 2000 வரை பணம் கேட்கின்றனர் என பொது மக்கள் கூறியுள்ளார் எனவே கிராமத்தில் உள்ள மருத்துவமனை உடனடியாக சீரமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்...

மகிழ்வுடன் வாழுங்கள்...


மகிழ்ச்சியாக இருப்பதற்கு முன்நிபந்தனை எதும் தேவையில்லை மற்றும் இந்த நொடியை தவிர மகிழ்ச்சியாக இருக்க நேரம் எதுவுமில்லை.

உலகில் உள்ள அனைவருமே மகிழ்வுடன் வாழத்தான் விரும்புகின்றனர்.

மகிழ்ச்சியின் காரணிகள் மற்றும் அளவீடுகள்...

1. மகிழ்ச்சி ஒரு மனநிலை...

அடிப்படையில், மகிழ்ச்சி என்பது ஒருவரின் மனநிலை சார்ந்ததே என்பதை இன்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அது நமக்கு வெளியே இல்லை, . மகிழ்ச்சி நமக்குள் தான் இருக்கிறது. எனவே, மகிழ்வான மனநிலையை உருவாக்கிக்கொள்வது அவசியம் என்கின்றனர் உளவியலாளர்.

2. மகிழ்ச்சி ஒரு தேர்வு...

மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கின்றது என்றாலும், அதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும், ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது மகிழ்ச்சியின்றி இருப்பதைத் தேர்ந்தெடுக்கலாம். விக்டர் பிராங்கிள் என்னும் உளவியலாளர் சிறையிலும்கூட ஒருவர் மகிழ்ச்சியுடன் வாழ்வதைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைத் தனது வாழ்வு அனுபவத்தின் மூலம் எண்பித்துள்ளார்.

3. உறவே மகிழ்ச்சி...

மகிழ்ச்சி பற்றிய ஆய்வுகள் தரும் முக்கியமான ஓர் உண்மை, நல்ல உறவுகளே மகிழ்ச்சியின் முதன்மையான காரணி. எனவே, யாருக்கு நல்ல குடும்ப உறவுகளும், நண்பர்களும் அமைந்திருக்கின்றார்களோ, அவர்கள் நிச்சயம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். மாறாக, நல்ல உறவுகள் அமையாவிட்டால், எவ்வளவு வசதிகள், வாய்ப்புகள் இருப்பினும் மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும். எனவே, குடும்பத்திற்குள் கணவன் - மனைவி, பெற்றோர்-பிள்ளைகள் உறவை ஆழப்படுத்துவோம்.

4. பணி நிறைவு...

நமது வேலையில் நமக்குக் கிடைக்கும் மன நிறைவை மகிழ்ச்சியின் இன்னொரு காரணியாக இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நமது பணியில் நமக்கென்று சில இலக்குகளை உருவாக்கி, அவற்றை அடைந்துவிட்டோமென்றால், அது மிகப்பெரிய மகிழ்வை நமக்குத் தரும். எனவே, பணி இலக்குகளை உருவாக்குவோம், அவற்றை அடைய உழைப்போம். (பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டவர்களும்கூட, குடும்பத்தில் தாத்தா, பாட்டி என்னும் பணியில் மன நிறைவும், மகிழ்ச்சியும் பெறலாம்).

5. ஆன்மீக நிறைவு...

மகிழ்வின் இன்னொரு காரணி சமயச் செயல்பாடுகளில் கிடைக்கும் நிம்மதி. ஆன்மீக வாழ்வில் ஈடுபாடு கொண்டு, நிறைவு கொள்பவர்கள் நிறைவான மகிழ்ச்சி அடைவர். தியானங்களில், வழிபாடுகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி வருகிறவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். குருக்கள், துறவிகள் இந்த ஆய்வு முடிவை மனதில் கொண்டு மக்களை ஆன்மீக நிறைவுக்கும், மகிழ்ச்சிக்கும் இட்டுச் செல்ல வேண்டும். குடும்பங்களில் அன்றாட குடும்ப செபம், இறைமொழி வாசிப்பு, ஆண்டுத் தியானம் போன்றவை தவறாது இடம் பெற்றால், அக்குடும்பங்களுக்கு "உலகம் தரமுடியாத" மகிழ்ச்சி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

6. சொந்த வளர்ச்சி...

புதிதாக ஒன்றை நாம் கற்றுக்கொள்ளும்போதோ, அல்லது திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போதோ, அதுவும் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனவே, எப்போதும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவர்களாக இருத்தல் நலம். நல்ல நூல்களை வாசிப்பதும், நலமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதும் மகிழ்ச்சியின் காரணிகளே. பயணம் செய்வது, இயற்கையை ரசிப்பது போன்றவையும் மனிதருக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இயன்றபோதெல்லாம் நாம் இவற்றைச் செய்யலாமே.

7. நலவாழ்வு...

உடல் நலத்தோடு வாழ்வது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி என்பதை நாம் நோய்வாய்ப்படும்போதுதான் உணர்கிறோம். "நல்ல உடல் நலமும், மோசமான நினைவாற்றலும்தான்; மகிழ்ச்சி" என்று ஆல்பர்ட் ஸ்வைட்சர் என்னும் அறிஞர் மொழிந்துள்ளார். எனவே, உடல், உள்ள நலனில் எப்போதும் அக்கறையுடன் இருப்போம்.

8. தேவையான மறதி...

ஆல்பர்ட் ஸ்வைட்சரின் இரண்டாவது கருத்து நம் கவனத்துக்குரியது. சில சமங்களில் கடந்த காலத்தின் தவறுகள், தோல்விகள் எப்போதும் நம் கண்முன்னே நின்று நாம் நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க விடாமல் தடுக்கின்றன. எனவே, கடந்த காலத்தை மறந்துவிடுவது நிகழ்கால மகிழ்ச்சிக்குக் கட்டாயத் தேவை.

9. சமூக அக்கறை...

"பிறரைப் பற்றிச் சிந்திப்பதும், அவர்கள்மீது பரிவுகொள்வதுமே மகிழ்ச்சியைத் தரும்" என்றார் nஉறலன் கெல்லர். பிறர்மீது பரிவு கொண்டு சமூகப் பணிகளில் ஈடுபடுகிறவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, எப்போதும் நம்மைப் பற்றியும், நமது தேவைகள், மகிழ்ச்சியைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிராமல், பிறரது தேவைகளைப் பற்றியும் கொஞ்சம் அக்கறை செலுத்தினால், மகிழ்ச்சி தானாக நம்மைத் தேடிவரும்.

10. படைப்பாற்றல்...

புதிதாகப் படைக்கும் திறன் கொண்டவர்கள் - ஓவியர்கள், பாவலர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள் போன்ற படைப்பாற்றல் படைத்தவர்கள் - மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க கற்றுக்கொண்டு விட்டால், துன்பங்களின் நிழல் கூட நம்மை அணுக முடியாது...

நீங்கள் நல்லதுக்கு என செய்கின்ற உதவிகள் யாவும் நீங்கள் நினைப்பவர்களுக்கு 10 சதவிகிதம் கூட சென்றடையவில்லை...


மதம் கடவுள் நம்பிக்கையாக இருக்கும் போது யாருக்கும் பிரச்சனையில்லை, ஆனால் என் மதம் தான் எல்லாம் என்று நினைக்கும் போது தான் இங்கு பிரச்சனை உருவாகிறது...

குமரிக்கண்டம் இருக்க கவலை ஏன்?


13ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டு கேட்பாரற்று கிடக்கிறது.

அழிக்கப்பட்ட கல்வெட்டுகள் திரும்பக் கிடைத்தன.

செய்தி...

கண்மாய்க்குள் சிதறி கிடக்குது 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் : பாண்டியர் காலத்தவை என ஆய்வில் தகவல்
10.09.2017 தினகரன்..

எத்தனை சான்றுகள் அழிக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை.
நம்மிடம் ஒரு கருவூலம் இருக்கிறது.
ஒரு கண்டமே இருக்கிறது.

தமிழர்நாடு தமிழரின் கட்டுப்பாட்டில் வந்ததும் மக்கள் நிலை ஓரளவு மேம்பட்ட பிறகு நாம் கடலில் இறங்கி குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும்.

நாம் உலகின் முன்தோன்றிய மூத்தகுடி, நமது நாகரீகமே முதல் நாகரீகம் என்பதை நிறுவவேண்டும்.

அதுவரை தமிழர் பழமைக்கான சான்றுகளைப் பற்றி கவலைப்படாமல் இன விடுதலைக்காகப் போராட வேண்டும்...

ஹிட்லர் தீயவராக சித்தரிக்கப்பட்டார்...


தமிழரின் இசைக் கருவி....


தமிழர்களின் வழக்கொழிந்துப் போன பண்டைய இசைக் கருவிகளில் குட முழவமும் ஒன்றாகும்.

மிகப் பெரிய தமிழர் இசைக் கருவிகளில் ஒன்றான இது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது.

திருவாரூர் தியாகராஜர் மற்றும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவில்களில் மட்டுமே இப்போது குட முழவத்தைக் காண முடியும்.

வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமானக் குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும். வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வாயிலிருந்து வெவ்வேறு விதமான பண் (இசை)  எழுப்பப்படும்.

குட முழவம் போலவே கேராளவிலும் பழமையான இசைக் கருவி பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் அதில் ஒரே ஒரு வாய் மட்டுமே இருக்கும். அதை மலையாளத்தில் ”மிழவு” என்றழைக்கின்றர்கள்.

சங்க இலக்கியங்களில் குட முழவத்தைப் பற்றி பலப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. மேலும் மறவர்களின் தோல் வலிமைக்கும், பலாப் பழத்திற்கும், பனை மரத்தின் அடிக்கும், இக்கருவியை ஒப்பிட்டும் பல சங்கப் பாடல் பாடப்பட்டுள்ளன...

நீங்கள் குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானவரா என கேட்டவர்களுக்கு இது சமர்ப்பணம்...


தமிழால் தழைக்கிறது செளராஷ்டிரம்...


வடமொழிக்கு முன்பு நிலவிய பிராகிருத மொழிகள் ஐந்தில் ஒன்று "ஸெளரஸேனி' மொழியாகும்.

அத் தொன்மையான மொழியிலிருந்து கிளைத்த மொழியே செளராஷ்டிர மொழியாகும்.

இம்மொழிக்கு சொந்த எழுத்து இருப்பினும், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இச்சிறிய மொழியினரில் சில ஆயிரம் பேர் மட்டுமே சொந்த எழுத்தினை அறிவர். பெரும்பாலோர் பேச்சு மொழியாகவே கொண்டுள்ளனர்.

ஆனால், பொது இடங்களில் இம்மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர். தங்கள் மொழி இலக்கியங்களை தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தியே வெளியிட்டும், தங்கள் மொழி, சமூக இதழ்களில் தங்கள் மொழி எழுத்துகளுடன் தமிழ் எழுத்துகளையும் சேர்த்தே சுமார் 100 ஆண்டு காலமாக பிரசுரம் செய்தும் வருகின்றனர்.

உதாரணமாக, 1921-ஆம் ஆண்டில் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் வரலாறு, 1958-இல் செüராஷ்டிர ஸங்க்ரஹ ராமாயணம், 2013-இல் கவி வேங்கடசூரியின் ஸங்கீத ராமாயணொ - இம் மூன்றும் தமிழ் எழுத்திலேயே பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இம்மொழிக்கென வெளிவரும் "பாஷாபிமானி' எனும் மாத இதழில் தலையங்கம் செளராஷ்டிர எழுத்துடன் தமிழ் எழுத்திலும் பிரசுரமாகிறது. இம்மொழி இலக்கியங்களுக்கு தமிழில் உரை எழுதப்படுகிறது.

ஆக, செளராஷ்டிர மொழி இலக்கியங்கள் காப்பாற்றப்படுவதற்கு தமிழ் மொழி - தமிழ் எழுத்தின் உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தமிழ் மொழியால் இன்னொரு மொழியின், அதுவும் ஒரு சிறிய மொழியின் இலக்கியங்கள் காப்பாற்றப்படுகின்றன என்பது தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் சேர்க்கிறதே...

மீடியா உலகை ஆள்பவர்களின் ஆயுதம் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்...


உல்லாசம் தான் வாழ்க்கை என்று நினைத்து நண்பருடன், இருபத்திமூன்று வயதில் பயணிக்கும் ஒரு சாமானிய இளைஞன், பயணத்தின் முடிவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்ப, அது அவனது வாழ்வை மாற்றி அமைக்கிறது...


அதன் பின்னர் போராட்டமே வாழ்வு
என மாற, உலகின் வல்லரசுகளை எதிர்த்து நின்று முழங்குகிறான்.

முப்பத்தியொன்பது வயதில்
ஒரு போராட்டத்தில் அமெரிக்க
கூட்டு படையால் கொலை செய்யப்படுகிறான்.

உலகம் இந்த இளைஞனை மறந்துவிடும் என்று உலகின் வல்லரசுகள் நினைக்க,
உலகில் எந்த மூலையில் மக்கள்
புரட்சி வெடித்தாலும் அங்கெல்லாம்
இவனது முகமே சர்வாதிகாரத்திற்கும்,
வல்லரசுகளின் கொட்டதிற்க்கும்,
முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிரான
அடையாளமாக காட்டப்படுகிறது.

அந்த முகத்தின் பெயர் 'சே' என்று செல்லமாக அழைக்கப்படும் எர்நெஸ்டொ 'சே' குவேரா.

"எனது போராட்டத்தை யாரேனும்
தொடரும் நிலையில், நான்
வீழ்வதை பற்றி எனக்கு கவலையில்லை"

என்று முழங்கிய மாவீரனின்
வாக்குப்படி இன்றும் உலகில் ஏதேனும்
ஒரு மூலையில் மக்கள்
ஒடுக்குமுறைக்கு எதிராக
முழங்குகின்றனர்.

அக்டோபர் ஒன்பதாம் திகதி உலகின் மாபெரும் போராளிகளில்
ஒருவரான சே குவேரா மறைந்த தினம்.

அநீதிக்கு எதிராக உன் உள்ளம்
குமுறினால், நீயும் எனது சகப் போராளி
என்றுரைத்த மக்களின் போராளி
சே குவேரா...

தமிழக விபச்சார ஊடகங்கள்.. மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது...


1960ல் ஆஸ்த்திரேலியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மண் வாசனைக்கான (Earthy Smell) காரணத்தை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய சேக்கிழார்...



நன்கு மழை பெய்வதற்கு முன் நம்மால் மண்வாசனையை நன்றாக உணர முடியும். அந்த வாசனை மண்ணில் வந்துக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது தவறு. மரங்களில் பூக்கும் பூக்கள் வெளியிடும் நறுமன எண்ணையின் கலவைதான் அந்த வாசனை. இதை என்ன அழகாக சேக்கிழார் உவமையுடன் கூறுகிரார்...

நனைமருவும் சினை பொதுளி
நறுவிரைசூழ் செறிதளிரில்
நினகரமண் டலம் வருடும்
செழுந்தருவின் குலம்பெருகிக்
கனம் மருவி அசைந்தலையக்
களிவண்டு புடைசூழப்
புனல் மழையோ மது மழையோ
பொழிவு ஒழியா பூஞ்சோலை.

பெரிய புராணம்; திருநாளைப் போவார் நாயணார் புராணம்: 1048...

பொருள் - மலரும் அரும்புகளின் நறுமனம் சூரிய மண்டலத்தை வருட, செழுமையான மரங்கள் வானுயர்ந்து மேகங்களை தழுவ, தேன் உண்ணும் வண்டுகள் யாவும் ரீங்காரமிட பெய்யும் மழை தேன் மழையோ, மது மழையோ என்று சுவைத்திட பூஞ்சோலைகள் எங்கும் பூத்துக் குலுங்குகிறது.

அறிவியல் -  சில மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில்தான் மழை வளம் அதிகம் இருக்கும். அது எத்தகைய மரங்கள்? எனில் அதிக நறுமனத்தை தரும் பூக்களுடைய மரங்கள் இருக்கும் இடம். அதாவது புங்கை, சந்தனம், ஆலம், போன்றவை. இவ்வகையான மரங்கள் ஒரு வகையான நருமன எண்ணெயை (petrichor) வெளிவிடும். அந்த எண்ணெய் மழை பெய்யும் முன் வரும் நீர்த்தன்மையுள்ள காற்றில் கலந்து மண் வாசனையாக வெளிப்படுகிறது. இந்த வாசனையானது காற்றில் பயனிப்பதால் நெடு தூரத்திற்க்கு பயணிக்க வல்லது.

ஆதலால் மழை வளத்தை பெறுகும் இவ்வகையான மரங்களை வீதிகள் தோறும் வளர்ப்போம்.. மழை வளத்தை பெறுவோம்....

தமிழக விபச்சார ஊடகங்களே... எப்போது தான் மக்களின் பிரச்சனை பற்றி பேசுவீர்கள்...


ஆயுத எழுத்து...


முப்புள்ளி எழுத்தின் மூலம்...

உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்து மொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரி வடிவ எழுத்து தோன்றியது. “அ’ என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து.

“அ’ என எழுதினால் அது வரிவடிவ எழுத்து. காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துக்கள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.

ஆயுத எழுத்து தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. இந்த ஆயுத எழுத்தைத் தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அஃகேனம் முதலிய பெயர்களால் குறிப்பிடுகின்றனர். உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர் மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று தனியொரு எழுத்தாக இருப்பதால் “தனிநிலை’ எனப்படுகிறது.

இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளி களாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப்பெயர் பெற்றுள்ளது. ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது. வழக்காற்றில் இதை “ஆயுத’ எழுத்து என்றே கூறுவர்.

“ஆயுத’ எழுத்து என இலக்கண நூலார் கூறுவதில்லை. பத்துவகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆயுத எழுத்து கூறப்பட்டுள்ளது.இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆயுத எழுத்து, ஓசை குறைந்து கால் மாத் திரையாக ஒலிக்கும்பொழுது “ஆயுதக்குறுக்கம்’ என்ற சார்பெழுத்து ஆகிறது.

ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும். கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆயுதக் குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும் பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னேருமே வரும். ஆயுதம் என்பது பொதுவாக கருவி எனப்பொருள்படும்.

ஆயினும், போர்க்கருவிகளையே ஆயுதம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆயுதம் எனப் பெயர் பெற்றது. போர்வீரன் வலக்கையில் வாளை ஏந்தி இருப்பான். இடக்கையில் கேடயத்தைத் தாங்கி இருப்பான். எதிரியை வாளால் தாக்குவான். எதிரியின் வாள், தன்னைத் தாக்காமல் கேடயத்தால் தடுத்து, காத்துக்கொள்வான்.

அந்தக் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு வட்டவடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத் தில் கைப்பிடி இருக்கும். மறு பக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டு வதுபோல் இடித்துத் தாக்கும்.

அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆயுதம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப்பெற்றது. “போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்க்கருவிகளில் சூலமும் ஒன்று, சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும்.

அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்துகொள்ளலாம். இக்காட்சியைக் கோயில்கள் சிலவற்றில் காணலாம்.

இந்த ஒப்புமையாலும் முப்புள்ளி எழுத்து ஃ, ஆயுதம் எனப்பெயர் பெற்றது’ என்று தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கர் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகர் கூறக்கேட்டுள்ளேன். தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன.

அவ்வாறே ஆயுத எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது.

(செய்தி ஆதாரம் 07.03.2010ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழில் புலவர் ம.நா.சந்தானகிருசுணன் என்பவர் எழுதியுள்ளார்)...

திருக்குறளில் திருவள்ளுவர் கடவுளை ஆதிபகவன், வாலறிவன், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் முதலிய பெயர்களில் கடவுளைக் குறிப்பிட்டிருக்கிறார்...


தமிழனின் அறிவியல்...


தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக் கொண்டார்கள்.

அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்..

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்று பக்கம் திறந்த வெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.

அதன் உச்சியில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது.

ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும்.

இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு.

இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்வார்கள்.

சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டே போகும்.

ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது..

ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று அர்த்தம். பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.

நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத் துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள்.

சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன.

ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை....

இலுமினாட்டி கன்னடன் கமலின் நோட்டமிடும் கண்களையும் நோட்டமிடுங்கள். யார் நோட்டம் வெல்லுமென பார்க்கலாம்...


நூறாவது குரங்கு...


1952 ஆம் ஆண்டு சில ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கோஷிமா என்ற தீவில் ஒரு வகைக் குரங்கினத்தின் இயல்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் குரங்குகளுக்கு உணவாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு தந்து வந்தார்கள்.

அவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெட்ட வெளியில் போட குரங்குகள் அவற்றை எடுத்து சாப்பிட்டு வந்தன.

பெரும்பாலும் ஈர சகதியில் விழுந்திருந்த கிழங்கை எடுத்து சாப்பிட்ட குரங்குகள் அந்த சகதியின் சுவையும் கிழங்கோடு சேரவே, அதை சிரமத்துடன் சாப்பிட்டன.

அதில் பதினெட்டு மாதப் பெண் குரங்கு ஒன்று மட்டும் அந்தக் கிழங்கை பக்கத்தில் இருந்த ஓடையில் அந்த சகதியை நீக்கி சாப்பிட்டது.

அது சுவை குறையாததாக இருக்கவே அப்படிக் கழுவி சாப்பிடும் வித்தையை தன் தாயிற்குக் கற்றுத் தந்தது.

அதைப் பார்த்த மற்ற சில குரங்குகளும் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சாப்பிட ஆரம்பித்தன.

ஆனால் வயதான குரங்குகள் மட்டும் பழையபடி சகதியுடன் இருந்த கிழங்குகளையே சாப்பிட்டன என்றாலும் இளைய குரங்குகள் கிழங்குகளைக் கழுவி சாப்பிடும் வழக்கத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன.

கிட்டத்தட்ட 1958 ஆம் ஆண்டு ஒரு கணிசமான எண்ணிக்கையுடைய குரங்கினம் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சாப்பிட ஆரம்பித்தவுடன் கிழங்கைக் கழுவாமல் சாப்பிடும் குரங்கே இல்லை என்கிற நிலை வந்தது.

அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் அந்தத் தீவில் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட எல்லா தீவுகளிலும் உள்ள குரங்குகளும் உடனடியாக இந்தப் புதிய முறையைக் கடைபிடிக்க ஆரம்பித்தது தான் அதிசயம்.

அந்த ஆராய்ச்சியாளர்கள் எந்தப் புதிய பழக்கத்தையும், வழிமுறையையும் பயன்படுத்துவோர் ஒரு கணிசமான எண்ணிக்கையை எட்டியவுடன் மன அலைகள் மூலமாகவே வெகுதூரம் அந்தப் புதிய பழக்கம் அல்லது வழிமுறை உடனடியாகவும் தானாகவும் பரவுகிறது என்று கண்டுபிடித்தனர்.

அந்தக் கணிசமான எண் என்ன என்று துல்லியமாகச் சொல்லா விட்டாலும் உதாரணத்திற்கு நூறு என்ற எண்ணைக் குறியீடாகச் சொன்னார்கள்.

இந்த தத்துவத்தை நூறாவது குரங்கின் விளைவு (Hundredth Monkey Effect) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes) என்பவர் எழுதி பிரபலமாக்கினார்.

அவரும் அவருக்குப் பின் வந்த ஆராய்ச்சியாளர்கள், மற்றும் சிந்தனையாளர்களும் இதே தத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கருதினர்.

அந்த ஆரம்பக் கணிசமான தொகையை எட்டுவது தான் கடினமான விஷயம். அந்தக் கணிசமான தொகையை எட்டியபின் அந்த சிந்தனைகளும், செயல்களும் உலகின் பல்வேறு பாகங்களில் உள்ள மனிதர்களிடையே தானாக ஏற்பட்டு பரவும் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது.

இதே கருத்தை வாழ்க்கை அலை (Lifetide) என்ற புத்தகத்தில் லயால் வாட்சன் (Lyall Watson) என்ற எழுத்தாளரும் உதாரணங்களுடன் கூறுகிறார்.

இப்போது இந்தக் கருத்து பரவலாகப் பலம் பெற்று வருகிறது.

எந்தப் புதிய நன்மையையும் சிந்திப்பதும், கடைப்பிடிப்பதும் ஆரம்பத்தில் கடினம். அப்படி ஆரம்பத்தில் கடைபிடிப்பவர்களை யாரும் ஆரம்பத்தில் உற்சாகப்படுத்துவதில்லை.

மாறாக சந்தேகப் பார்வையுடனேயே பார்க்கிறார்கள். பரிகசிக்கிறார்கள்.

ஆனாலும் தாக்குப்பிடித்து மனபலத்துடன் புதிய நல்ல விஷயங்களை சிந்தித்துப் பின்பற்றுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் சரித்திரம் அவர்களாலேயே எழுதப்படுகிறது என்று கூட சொல்லலாம்.

அவர்களுடன் ஒரு கணிசமான ஒத்த சிந்தனையுள்ளவர்கள் சேர்ந்து செயல்படும் போது பெரிய மாற்றங்கள் தானாக ஏற்பட ஆரம்பிக்கின்றன.

நூறாவது குரங்கு ஒன்றைப் பின்பற்ற ஆரம்பித்தவுடன் அதிசயம் நிகழ்ந்து பல இடங்களில் அதே வழக்கம் பின்பற்றப்படுகிறது என்ற கோட்பாடு சிந்தனைக்குரியது.

எத்தனையோ நன்மைகள் நிகழ, எத்தனையோ பெரும் மாற்றங்கள் ஏற்பட இன்னும் ஒரு நபரின் உதவி அல்லது பங்கு மட்டுமே கூட தேவைப்படலாம். ஏன் அந்த ஒரு நபராக, நூறாவது குரங்காக, நீங்கள் இருக்ககூடாது? உங்கள் பங்கும் சேர்ந்து அற்புதங்கள் நிகழுமானால் அது மிகப்பெரிய பாக்கியம் அல்லவா?

ஒவ்வொரு புதிய நல்ல சிந்தனை நடைமுறைப்படுத்தப் படுவதை நீங்கள் காணும் போதும், ஒவ்வொரு நல்ல மாற்றத்திற்காக சில முயற்சிகள் நடைபெறுவதை நீங்கள் பார்க்கும் போது இந்த நூறாவது குரங்குத் தத்துவத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஏதாவது நல்ல மாற்றங்களுக்கான வழிமுறைகள் புதியதாய் உங்கள் மனதில் உருவாகுமானால் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பியுங்கள்.
அது சரியா, நடைமுறைக்கு ஒத்து வருமா, யாராவது பரிகசிப்பார்களோ என்ற தயக்கம் வேண்டாம். அதில் குறைகள் இருக்குமானால் அதைப் போகப் போக சரி செய்து கொள்ளலாம். ஏனென்றால் இன்று நாம் பயன்படுத்தும் எல்லாமே உருவான விதத்திலேயே இருப்பனவல்ல.

காலப்போக்கில் மெருகூட்டப் பட்டவை தான். மேம்படுத்தப்பட்டவை தான்.

அதே போல் மற்றவர்கள் ஆரம்பித்த நல்ல மாற்றங்களிலும் உற்சாகமாகப் பங்கு பெறுங்கள். அதற்கு வலுவூட்டுங்கள்.

முதல் நூறில் ஒருவராக இருந்து பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருக்க முடிந்தால் அதல்லவா அர்த்தமுள்ள வெற்றிகரமான வாழ்க்கை?

இன்று நாம் அனுபவிக்கும் எத்தனையோ நன்மைகள் இது போன்ற ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டவையே அல்லவா?

நம் பங்கிற்கு நாமும் ஏதாவது நன்மையை இந்த உலகில் ஏற்படுத்தி விட்டுச் செல்வதல்லவா நியாயம்...

வங்கி மோசடிகள் : உங்கள் பணம் உங்களுக்கில்லை என்பதற்கான முன் அறிவிப்பு...


இதற்கும் ஆதாரம் கேட்பவர்களுக்கு...

https://tamil.goodreturns.in/news/2018/02/26/9-500-high-risk-finance-companies-shocking-list-from-finance-ministry-010513.html

நாங்கள் ஒரு போதும் ஊடகமாக இருக்க விரும்புவதில்லை...

சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா?


இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள்தான்.

ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள்.

சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை.

ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே.

ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும்.

அந்த சித்தர்களை குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக்கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும்.

இதைத் தான் திருமூலரும்…

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே..

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்..

அகத்தியரும்...

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே..

என்கிறார்..

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.

மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது?

வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக்கொள்வது? யார் உதவுவார்கள்?

ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி.

அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன.

சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ் வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி? யார் உதவி செய்வார்கள்?

இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே..

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே.

மற்றவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல... பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது.

நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள்.

அவர்கள் நம்முடைய தகுதிக் கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மை யான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.

அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள்.

அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.

ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி.

தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும்.

ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும்...

உலகத்தின் எதிரி அமெரிக்கா.. லிபியா நாட்டின் மீது போர் தொடுத்து கடாஃபியை கொன்றது ஏன் தெரியுமா.?


வல்லாதிக்கத்தின் கை வெளியோங்குகிறது...

வரலாறுகள்  பொய்யாக்கப்படுகிறது...

மீடியாக்கள் அதற்கு துணை நிற்கிறது...

மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்கிறேன்...

மீடியாவின் பின்னால் செல்லாதீர்கள் தமிழர்களே...

சிரியா போர் காரணங்களில் ஒன்று...


ஐஸ்ஐஸ் முகமதிய அமைப்பா இலுமினாட்டி அமைப்பா?


இன்றைய பதிவு பலரும் அறிந்திருக்கலாம்..

ஆனால் கிறித்தவம் மற்றும் இந்து சமயத்தை பின்பற்றுவோருக்கு தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இல்லை. நான் முகமதியன் இல்லை..

ஐஸ்ஐஸ் முகமதிய அமைப்பா ?

இல்லை, காரணங்கள்...

1. எந்த முகமதிய அமைப்பும் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதில்லை. அது ஓர் இழுக்கு.

2. அதன் தலைமையில் இருப்பவன் .ஓர் யூதன்.

விளக்கமாக - இந்த அமைப்பினர் அருகில் இருக்கும் இசுரேயலை  நோக்கி விரலை கூட நீட்ட வில்லை.  ஆனால் அதை தாண்டி உள்ள நாடுகளை சீண்டுறாங்க..

இந்த அமைப்பின் தலைவன் பெயர் Abu Bakr al-Baghdadi.. இவனின் இயற்பெயர் Simon Elliott..

இவனுடைய பெற்றோர் யூதர்கள். இசராயேலின் உளவு அமைப்பான மொசாத்தை சார்ந்தவன்..

ISIS பெயர் காரணம்.. இது எகிப்திய பெண் கடவுள். இருளின் கடவுள். நிழலின் கடவுள். அறியாமையின் கடவுள்.

சிலர் ஒளியின் கடவுளாகவும் வழிபாடு செய்கிறார்.

இதுக்கும் இலுமினாட்டிக்கும் என்னையா சம்மந்தம்? நிறைய இருக்கு இப்போ சொல்ல முடியாது..

தமிழ் முகமதியரே தயவு செய்து யூதர்கள் தான் இலுமினாட்டிகள் என முடியு செய்து விடாதீர்கள்..

ISIS அமைப்பு இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப் பட்டுவருகிறது...

சிரியாவில் இருந்து குடிபெயரும் மக்களுக்கு ஆதரவு தருகிறார் கனடா பிரமதர் ஜஸ்டின்...



இவரே உலகின் சிறந்த பிரதமர் நன்றி ஐயா...

இங்குள்ள பிரச்சனையை பேசிவிட்டு உலகத்தை பற்றி பேசுங்கள் என கடுங்கோபம் கொள்பவர்களிடம்...


முதலில் இந்த குழந்தையின் கேள்விக்கு பதிலளித்து விட்டு செல்லுங்கள்..

இங்கே இருக்கிற பிரச்சனையை நாங்கள் எப்போதும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்..

இங்கு பிரச்சனை இருப்பதற்காக, மற்ற பிரச்சினை பேசாமல் இருப்பதும் என்பது முட்டாள்தனத்தின் உச்சம்...