கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகி போனது.. இந்தியாவிலேயே அதிக போராட்டம் நடந்தது தமிழ்நாட்டில் தான்.. இவை பெரும்பாலும் மத்திய அரசால் திணிக்கப்பட்ட திட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் தான்.. மண்ணில் இருந்து மலை வரைக்கும் போராடியே நாம் காப்பாற்ற வேண்டி இருக்கிறது..
இந்த போராட்டங்கள் அனைத்தும் எந்த கட்சியாலும் முன்னெடுக்கப்படாமல் மக்கள் தன்னெழுச்சியாக நடத்தியவை.. இவற்றால் அரசுகளுக்கு ஏற்படும் தலைக்குனிவையும், எதிர்ப்பையும் அகற்றுவதற்கு அல்லது மடைமாற்றுவதற்கு, பல உத்திகளை உளவுத்துறைகள் கையாள்கின்றன.
அதில் முக்கியமான ஒரு உத்தி என்னவென்று பார்ப்போம்.. இந்த உத்தியை தான் உளவுத்துறையினர் அதிகம் பயன்படுத்துகின்றனர்..
அதாவது, ஓரளவு பிரபலமான "தேச விசுவாசக் கொள்கையுடையவர்களை" இனம் கண்டு, அதில் இளையோரைக் கவரும், ஒரு சிலரை தெரிவு செய்வது..
பின் அவர்ளை தொடர் கண்காணிப்பின் பின், நம்பகத்தன்மையை கணிப்பிட்டு, அவர்களுக்கேற்றாற் போல் அதில் சிலரை நேரடியாக தங்கள் தேவையைக் கூறி தங்களுடன் பயணிக்க வைப்பது..
அடுத்தது, இன்னும் சிலரை அவர்களுடன் எந்தவித நேரடித்தொடர்பும் இல்லாது அவர்களுக்கே தெரியாமல் கையாள்வது!
அது எப்படி ஒருவருடன் நேரடித் தொடர்பு இல்லாது கட்டுப்படுத்துவது?
ஆட்சியில் இருக்கும் அரசு, அரசியலில் பங்குபெறாத ஆனால் அதில் ஆர்வம் கொண்ட மிக நெருங்கிய நட்பை கொண்டிருக்கும்.. சில VIP க்களும் இருப்பார்கள்.(உதாரணத்திற்கு ரஜனி மோடிக்கு நெருக்கமானவர், அவர் சொல்வதை சிரமேற்கொண்டு இவர் செய்வார்)
இவர்களை போன்றவர்களை அரசியல் தலைமைகள், நண்பன் என்ற ரீதியில் அணுகி உதவி பெறுவர்.. இவர்களை நெறிப்படுத்தி, அதற்கு அடுத்த கட்டத்தில் இருக்கக் கூடிய நபர்களிடம் இந்த VIP க்கள் ஊடாக நட்பு உருவாக்கப்படும்!
இவர்களுக்கு அந்த VIPக்களின் நட்பென்பது கனவு போன்றது.. அவர்களின் சொற்களை வேத வாக்காக கொண்டு இவர்கள் செயல்படுவார்கள்..
இவர்களின் அடி மனதில், அவர்களின் கருத்துக்கள், மாற்றமெதுவும் இல்லாது உள்வாங்கப்படும்.. அந்தக்கருத்து, இவர்களை அறியாமல் இவர்களையே கட்டுப்படுத்தும்!
கடந்த காலங்களில் நடந்த கூடங்குளம் அணுவுலை மற்றும் காவிரி நதிநீர்ப் போராட்டங்களை நீர்த்துப்போக வைக்க இந்திய உளவுத்துறைகளின் கைகள் கடைசி எல்லைவரை நீண்டிருந்தன..
இந்தியம் என்பது, "பல துணிகளால் தைக்கப்பட்ட ஆடையே" ஆகும்..
மிக மெல்லிய தையல்களை உடைய இந்த ஆடை எப்போது கிழியுமென்ற ஆபத்திலேயே உள்ளது.. மிகப்பழமை வாய்ந்த பல மாநிலங்களின் கூட்டாட்சியில் இருக்கும் இந்திய ஒன்றியத்திற்கு, இப்போதைய பெரும் பிரச்சனை "தமிழ் தேசியமும், அதைப் பேசுபவர்களுமே"..
தமிழ்த்தேசியவாதிகளை கத்தியில் நடப்பது போல் மிகக் கவனமாக கையாள்கின்றது, ஹிந்திய உளவுத்துறை..
தமிழ்த்தேசியவாதிகளை, வெளிப் பார்வைக்கு "கண்டும் காணாமலும் விடுதல்" முறையை கையாண்டு, மறைமுகமாக இவர்களுக்கு எதிரான பரப்புரைகளை மிக கட்சிதமாக செய்கின்றன.. அதற்கு இந்திய ஊடகங்களும் துணை போகின்றன, அல்லது பணிய வைக்கப்படுகின்றன..
தமிழ்த்தேசியம் மக்களிடத்தில் போய் சென்று விடாதபடி, அதற்கு எதிரான கருத்துக்களை விதைத்து, தமிழ் தேசிய கருத்தியல் பேசுபவர்களின் உளவுரணை சிதைத்து, அதிலிருந்து அவர்களை அகற்றும் உத்தியே இதுவாகும். இதைத் தான் அரசுகள் இப்போது கையாளுகின்றன..
இந்த "தமிழ்த் தேசிய" முறியடிப்பு புலனாய்வுக்கு, உண்மையான தேச அபிமானிகளும், பலியாகிவிடுவதுதான், இவர்களது வெற்றி..
சல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள் மற்றும் தமிழ் இளையோர் மாபெரும் போராட்டத்தை நடத்தி வென்று காட்டினோம்..
இந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் தடை செய்து, தமிழ் இளையோர் என்ற அடையாளமே முன் நின்றது.. அதுவரை எல்லாம் சரியாகவே நகர்ந்தது.!
பின்னர் மெதுமெதுவாக உள்நுழைந்த தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டாம் கட்ட நடிகர்களின் கைகளில் மாணவர்கள் அறியாமலே தமிழர் போராட்டம் கைமாறிச்சென்றது..
அப்போது இந்த நடிகர்களுக்கு ஊடகங்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்தார்கள்.. மக்கள் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக "இவர்கள் தான்" இந்த எழுச்சியின் நாயகர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயன்றார்கள் அல்லது கிட்டதட்ட உருவாக்கி விட்டார்கள்..
இவர்கள் யாரென்று பார்த்தால் தமிழனென்று வெளியில் கூறி இந்திய தேசியத்தின்/திராவிடத்தின் செல்லப் பிள்ளைகளாக வலம் வருபவர்கள்.. இவர்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் தேசியம்/தமிழர் அடையாளம் மறைக்கப்பட்டு, இந்தியம்/திராவிடம் திணிக்கப்பட்டது..
தமிழர் இன்னும் சினிமா
கதாநாயகர்களை, நிசக்கதாநாயகர்கள் என்று நம்பும் மாயை அல்லது உளவியல் நோயிலிருந்து மீளவில்லையோ! என்ற எண்ணத்தை தான் இது தோற்றுவிக்கிறது..
மெரீனாவில் ஆரம்பித்த தமிழர் எழுச்சியும், "தமிழ்த்தேசிய சித்தாந்தத்துக்கான" தொடக்கமும் ஹிந்திய தேசியத்துக்கு ரசிக்கக் கூடியதாக நிச்சயம் இருந்திருக்காது..
அதன் பின்னர் நடிகர்; தன்னார்வலர்; போராளிகள் என்ற போர்வையில் தமிழின விரோத சக்திகளை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.. அவர்களில் சிலர் களத்துக்கு வராமலேயே ஒதுங்கி விட்டனர்..
இதற்கு முக்கிய காரணம் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அரசியல் ரீதியாக தேர்ச்சியானவர்களாக மாறி அவர்களை வரும் முன்பே அப்புறப்படுத்தியதே காரணம்.. ஆனால் நாம் சற்றும் எதிர்ப்பார்க்காத நபர்களை அவர்கள் களத்தில் இறக்கக் கூடும்..
அவர்கள் ஒரே நேரத்தில் ஹிந்தியத்தையும் சாடுவார்கள்; திராவிடத்தையும் சாடுவார்கள்.. அதாவது நாணயத்தின் இரண்டு பக்கத்தையும் திராவிடம் ஹிந்தியத்துக்கு ஒதுக்கிவிட்டு தமிழ்த்தேசியத்தை இரட்டடிப்பு செய்வதற்கான உத்தியே இது..
சிலர் உலகத்தாயம் கூட பேசுவார்கள்; ஆனால் மறந்தும் தமிழர்களை ஒருங்கிணைப்பது குறித்து இவர்கள் பேச்சோ செயல்பாடோ இருக்காது.. தமிழரிடையேயான முரண்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஊதி பெரிதாக்க இவர்கள் தவற மாட்டார்கள்..
இது போன்ற டெஸ்ட் ட்யூப் தலைமைகளை கண்டறிய வழிமுறை உண்டு.. பிராந்திய ரீதியாக பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை பிரிந்தே கையாளுவார்கள்.. தமது இன, குடி அடையாளத்தை ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.. காட்டாறு வெள்ளத்தில் தன்னை மீறி பூர்வக்குடி தமிழர் ஒருவர் தலையெடுக்க வாய்ப்பளிக்கவே மாட்டார்கள்..