18/12/2018

குமரிக்கண்டத்து இசை...


உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே.

உலகில் அதிற்சிறந்தது தமிழிசையே.

தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்.

கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும்.

சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்...

அருகம்புல்...


இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினமும் அருகம்புல் ஜூஸ் - இயற்கை வைத்தியம்...

அருகம்புல்லில் குளோரோபில், அமினோ அமிலம், கனிமம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. இவை, இரத்த சோகை, இரத்த அழுத்தம், வயிற்று புண், மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி, கர்பப்பை கோளாறு போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் இயற்கை மருந்தாக திகழ்கிறது அருகம்புல் ஜூஸ். பிரச்சனைகள் இருந்தால் தான் தினசரி அருகம்புல் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றில்லை. உங்களது உடலுக்கு எந்த கோளாறுகளும் அண்டாமல் இருக்க கூட நீங்கள் தொடர்ந்து தினசரி அருகம்புல் ஜூஸை குடிக்கலாம். இனி அருகம்புல் மூலம் நாம் அடையும் ஆரோக்கிய நலன்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

நச்சுக் கிருமிகள்...

அருகம்புல்லில் இருக்கின்ற குளோரோபில் உடலில் இருக்கும் தீய நச்சுக் கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கவும், அழிக்கவும் உதவுகிறது. இதனாலேயே நமது உடலில் ஏற்படும் பல்வேறு உடல்நல கோளாறுகளை தடுத்திட இயலும்.

நுரையீரல்...

அருகம்புல்லிற்கு நமது நுரையீரலை சுத்திகரிக்கும் தன்மை இருக்கிறது. இதனால், நமது உடலில் நுரையீரல் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அருகம்புல் ஜூஸ் பருகுவது நல்லது.

இரத்த சர்க்கரை அளவு...

அருகம்புல் ஜூஸ் பருகுவதனால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். இதனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் அருகம்புல் ஜூஸ் பருகுவது மிகவும் நல்லது.

செயல்திறன் அதிகரிக்க...

அருகம்புல் நமது உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த உதவுகிறது, இதனால் நமது மூளை மற்றும் அனைத்து தசைகளும் நன்கு செயல்படுகிறது. ஆகையால் நமது ஒட்டுமொத்த உடலின் செயல்திறனும் அதிகரிக்க அருகம்புல் ஜூஸ் பருகுவது நல்லது.

வயிற்று புண்...

அருகம்புல் ஜூஸ் தினமும் பருகவதனால் வயிற்றில் இருக்கம் கிருமிகளும் அழியும் மற்றும் வயிற்று புண்ணும் குணமாகும்.

கர்பப்பை கோளாறுகள்...

அருகம்புல்லில் இருக்கும் குளோரோஃபில்லின் நற்குணம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் குறைந்து, விரைவில் குணமடைய உதவுகிறது.

மலச்சிக்கல்...

தினந்தோறும் அதிகாலை அருகம்புல் ஜூஸ் பருகி வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

சளி குணமாகும்...

நுரையீரல் சார்ந்த சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க கூடியது அருகம்புல் ஜூஸ்.

இரத்த அழுத்தம்...

அருகம்புல் ஜூஸ் தினசரி பருகுவதனால் இரத்த சர்க்கரை அளவு மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க முடியும்.

உடல் எடை குறைக்க...

உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், உங்களது உடல் எடையைக் குறைக்க தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருகம்புல் ஜூஸ் பருகிவந்தால் உடல் எடை குறையும்.

இரத்தம் அதிகரிக்க...

அருகம்புல் ஜூஸ் பருகுவதனால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இரத்தம் அதிகரிக்கும். மற்றும் அருகம்புல் ஜூஸ் பருகுவதனால் இரத்தம் சுத்தீகரிக்கப்படும்.

உடல் துர்நாற்றம்...

நம் உடலில் இருக்கும் நச்சுக்கிருமிகளால் தான் உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. அருகம்புல் ஜூஸ் பருகுவதால் நமது உடலில் உள்ள தீமை விளைவிக்கும் நச்சுக் கிருமிகள் அழிக்கப் படுகின்றன. இதனால் நமது உடலில் இருந்து வரும் துர்நாற்றம் குறையும்.

தொண்டை கரகரப்பு...

அருகம்புல் ஜூஸை கொண்டு வாய் கொப்பளித்தால், தொண்டை கரகரப்பு சரியாகும்.

அஜீரணம்...

உங்களுக்கு அஜீரண கோளாறு இருந்தால் தினமும் அருகம்புல் ஜூஸை குடியுங்கள். அருகம்புல் ஜூஸ் அஜீர்ண கோளாறுகளை குணமடைய செயும்.

நரம்பு தளர்ச்சி மற்றும் தோல் வியாதி...

அருகம்புல்லில் இருக்கும் அமினோ அமிலம் மற்றும் வைட்டமின் சத்துகள், நரம்பு தளர்ச்சி மற்றும் தோல் சார்ந்த வியாதிகளில் இருந்து குணமடைய பயன்தருகிறது...

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...


மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?


தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம்...

1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது.

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது.

பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம்மாவினுடையது.

குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி.
மதுரையில் கொடிகட்டிப் பறந்த தாசி..

பெரும் செல்வச் செழிப்பு - மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது.

வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவை தான்.

தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.

கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து - வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.

பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது..

வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்.

இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர்.

அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது - ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர்.

அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர்.

ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை.

தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது -
அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.

தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது - ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள்.

தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்.

ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம்..

நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது.

நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது.

ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.

பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு, எல்லாவற்றையும் எரித்தது.

அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.

கல் பதித்த தங்க நகைகள் - வெள்ளி நகைகள் - முத்துக்கள் - காசு மாலை  -மோதிரம் - ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.

தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது.

தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.

அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானான்.

யாரைப் பற்றிப் பேச - யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள்.

அவள் முகம் மலர்ந்திருந்தது - தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.

ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு - விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய் - தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை.

சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி - கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது.

கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் - என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.

நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர்.

அவள், நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள் - எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.

அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது..

சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர்.. மாமதுரை மக்கள்...

தெலுங்கன் தான் தமிழினத்தின் முதல் எதிரி என்று நான் சொல்வது இதற்காக தான்...


அனைவரும் நாட்டு விதை/செடிகளாக வாங்கி வீட்டிலேயே வளர்த்து பயன் பெருங்கள் உறவுகளே...


ஏனெனில் இப்போது கிடைக்கும் கீரை,கொத்தமல்லி, கருவேப்பிலை இலைகளில் கூட மரபணு மாற்றப்பட்ட வகைகள் வந்து விட்டன.

கொத்தமல்லி இலைகளின் மருத்துவ குணங்கள் ஒவ்வாமை, சிறுநீர் கழிக்கையில்  ஏற்படும் எரிச்சல் , ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் நோய்களுக்கு  நிவர்த்தி செய்வது.

கறிவேப்பிலையயும் நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் இளமைத்தோற்றம் நிலைத்து நிற்கும்...

ஆத்திசூடி...


ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!/
Let's Spread Aathisudi to the World..

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.

2. ஆறுவது சினம் /
2. Control anger.

3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.

4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.

5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.

6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.

7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.

8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.

9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.

10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.

11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.

12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.

13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.

14. கண்டொன்று சொல்லேல்/
14. Don't flip-flop.

15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.

16. சனி நீராடு /
16. Shower regularly.

17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.

18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.

19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.

20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.

21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.

22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.

23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.

24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.

25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.

26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.

27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.

28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.

29. இளமையில் கல் /
29. Learn when young.

30. அரனை மறவேல் /
30. Cherish charity.

31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.

32. கடிவது மற /
32. Constant anger is corrosive.

33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.

34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.

35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.

36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.

37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.

38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.

39. கேள்வி முயல் /
39. Learn from the learned.

40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.

41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.

42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.

43. கெளவை அகற்று /
43. Don't vilify.

44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.

45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.

46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.

47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.

48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.

49. சூது விரும்பேல் /
49. Don't gamble.

50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.

51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.

52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.

53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.

54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.

55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.

56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.

57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.

58. தீவினை அகற்று /
58. Don't sin.

59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.

60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.

61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.

62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.

63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.

64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.

65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.

66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.

67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.

68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.

69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.

70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.

71. நூல் பல கல் /
71. Read variety of materials.

72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.

73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.

74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.

75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.

76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.

77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.

78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.

79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.

80. பீடு பெற நில் /
80. Follow path of honor.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.

82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.

83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.

84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.

85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.

86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.

87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.

88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.

89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.

90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.

91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.

92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.

93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.

94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.

95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.

96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.

97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.

98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.

99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.

100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.

101. வித்தை விரும்பு /
101. Long to learn.

102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.

103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.

104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.

105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.

106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.

107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.

108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.

109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial i n judgement.

- ஔவையார்  / Avvaiyaar...

சத்தான தமிழர் பானத்தை தடை செய்து விஷத்தை விற்பனை செய்கின்றனர்.. கார்பரேட் மறைமுக கைகூலிகள்...


நினைவுகள்...


மனிதன் என்பவன் நினைவுகளாக பலஆயிரம் ஆண்டுகள் வாழலாம் என்பதை சொல்லும் படம்.

இப்படத்தில் ஒரு மனிதனின் மூளையில் உள்ள  நினைவை Silicon electronic gel ல் உள்ள Nano transmitter வழியாக Fiber optical cable மூலமாக Copy செய்து Digital லாக மற்றொரு device  ல் store செய்து அதனை இதே Processing மூலமாக மற்றொரு  மனிதனின் மூளைக்கு மாற்றுவதன் மூலம் ஒருவன் நினைவுகளாக பல ஆயிரம் வருடங்களுக்கு வாழலாம் என சொல்கிறார்கள்..

உண்மையில் இந்த ஆராய்ச்சி இப்போது நடந்து கொண்டுள்ளது. இதற்கு 425 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2045 ல் முடிவுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது அறிவித்தவர் Bill maris CEO of Google Ventures...

இதுக்கு இப்படினா.. அவரு புள்ளைங்க சொத்தையும் பாருங்க.. இன்னும் எளிமையா இருக்கும்...


அடிமைகளுக்கு எல்லாம் கொடுக்கப்படுமே தவிர கிடைக்காது...


எங்கள் தமிழ் தேசிய அரசியலை ஏளனமாக பார்க்கும் நீதான் உண்மையான மிகச்சிறந்த அடிமை..

உன்னுடைய தாயை நீ தவறாக பார்க்கிறாய் அதை பெருமையாக பொது தளத்தில் பேசுகிறாய், நீ வாழ்வது வாழ்க்கையா...?

திராவிடமே தமிழினத்தின் முதல் எதிரி...


திமுகவின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை...

திமுக தலைவர்கள் தளைப்படுத்தப்பட்டனர். மிகப்பெரிய அடக்குமுறையை இந்திய அரசு ஏவி விட்டது. அன்று எழுந்த மாணவர் போராட்டம் கண்டு அரண்டு போன திமுக, பின்வாங்கியது. அந்த இயக்கமும் ஆங்கிலத்துக்கு தான் வரிந்து கட்டிக்கொண்டு நின்றதே அன்றி தமிழுக்காக அல்லவே! இந்த நிலையில், அம்மாபெரும் மொழிப்போரில் பெரிதாகப் பங்கெடுக்காமல் அந்த கழகம் ஒதுங்கியே நின்றது.

அண்ணா தம்முடைய உண்மை உருவத்தைக் காட்டி விட்டார்! அம் மொழிப்போருடன் "ஒட்டுமில்லை, உறவுமில்லை" என்று அறிக்கை விடுத்து திமுக வின் கயமைக்கு கட்டியம் சொன்னார். அம் மொழிப்போரை கைவிடுமாறு 10.2.1965 அன்று மாணவர்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார். அதை கண்டு பெரியார் "பூனை கோணியில் இருந்து வெளிவந்துவிட்டது" என்று சொல்லி நகையாடினார்." -- கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.

இறுதியில் உயிர்கள் பல செத்து விழுந்தாலும், தமிழுக்கென்று போராடாமல், பின்வாங்கிய திமுக, செத்த உயிர்களின் மீது முதன் முறையாக 1965 இல் ஆட்சி அமைத்தது.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது..

இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன் மொழிந்த திராவிடர்கள், தமிழருக்காக தமிழரால், தமிழை முன்னிறுத்தி தன்னிச்சையாக எழுந்த தமிழ் தேசிய சின்னமான 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, மீண்டும் தங்கள் கயமைத் தனத்தால் தனது அரத பழசான 'இந்திக்கு மாற்றான ஆங்கிலம்' என்று திசை திருப்பி, தமக்குள்ள அரசியல் செய்து தமிழ் தேசிய எழுச்சியை அடக்கினர்.

இதன் காரணமாக, அன்று முதல் இன்று வரை எந்த திராவிட இயக்கத்திலும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இளைஞர்கள் இல்லாமல் மிக கவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டு வருகிறது.

வருடம் 2013..

சமீபத்தில் தமிழகத்தில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், ஈழத்துக்காக ஒரு பெரு நெருப்பு 'லயோலா' கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு அது தமிழ் நாடு முழுவதும் பற்றி கொண்டது. இதை பார்த்து ஆளும், எதிர் கட்சிகள் அரண்டு தான் போயின. ஆளும் கன்னட ஜெயலலிதா அம்மையாரின் அரசோ, 'இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும்' என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, 'அது தீர்மானமாக மட்டுமே இருக்க வேண்டும், செயல் வடிவம் பெற்றுவிட கூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

விளைவு அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை அறிவித்தார். அனைத்து கல்லூரி விடுதிகளையும் மாணவர்கள் உடனே காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மாணவர்களின் எழுச்சியை அடக்க தனக்கே உரிய பாணியில் பணியாற்றினார்.

தமிழருக்கான நாடுகேட்டு மாணவர்கள் போராட்டம் (2013)..

ஆனால் எதிர் கட்சியாய் இருக்கும் விஜயகாந்த் அரசோ, அதற்க்கு அடுத்து இருக்கும் தெலுங்கர் கருணாநிதி அரசோ இதை வைத்து வேறு ஒரு அரசியல் நாடகம் ஆடியது.

மாணவர்களின் உண்மையான போராட்டம் 'ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும்' என்பதே. இதை பல முறை, அனைத்து மாணவர்களும் 'புதிய தலைமுறை' உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக ஆணித்தரமாகவே வலியுறுத்தினர்.

ஆனால், திராவிட ஊடங்கங்கள் 'அமேரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்று போராடுவதாக அயோக்கியத்தனமாக செய்தியை திரித்து வெளியிட்டனர்.

இதன் மூலம் தங்களின் இந்திய (திராவிடர்களின் பாணியில் சொன்னால் ஆரிய பாசம்) பாசத்தை மறைமுகமாக வலியுறுத்தினர்.

இதன் மூலம் 'மாணவர்களின் ஈழ நாடு' கோரிக்கை என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்டது...

பத்மாசனம்...


நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து  உட்காரவும். நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.

பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்...

இணையதளத்தை அதிர வைத்த Go Back Soniya...


திராவிடமே தமிழினத்தின் முதல் எதிரி...


வைகோ நல்லவர் தானே...?

சிங்கள குடியேற்றத்தையும், சிங்கள இராணுவ மயமாக்கலையும் எதிர்க்கும் வைகோவுக்கு இங்கே பல நூறு ஆண்டுகளாக தெலுங்கர்களின் குடியேற்றமான பாளையங்களும், தெலுங்கர்களின் இராணுவ மயமாக்கலின் வடிவமாக அவை இன்றும் தமிழருக்கு எதிராக அதே பெயரில் வழங்கி வருவதும் தெரியாதா...? அதை அவர் எதிர்க்க வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் அதை வெளியில் சொல்லி இருப்பாரா...? ஏன்? ஊருக்கு மட்டும் உபதேசமா?

ஈழத்தில் ஒரு தமிழனை தலைவராக நிறுத்தும் போது, தமிழகத்தில் திராவிடனை ஏன் நிறுத்த வேண்டும் என்ற ஒரு அடிப்படை கேள்விக்கு பதில் சொல்வாரா..?

விஜய நகர பேரரசு தொடங்கி இன்று வரை தமிழனை மொட்டை அடிப்பது தெலுங்கர்களான திராவிடர்கள் தான் என்று உண்மை தெரிந்தும், வைகோ  அவர்களின் தலைமையை தமிழர்கள் ஏற்கத் தான் வேண்டுமா?

எந்த தமிழன் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் சாதி கட்சி என்றும், எந்த தெலுங்கர் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் முற்போக்கு கட்சி என்று சொல்லும் திராவிட ஊடங்கள், 'வைகோ போன்று தமிழனுக்கு உழைத்த ஒரு தமிழனை காட்டு பார்ப்போம்' என்று கேட்பதில் நியாயம் இருக்கிறதா?

முதலில், தமிழனுக்காக தமிழன் போராட இங்கே தமிழ் நாட்டில் களம் இருக்கிறதா?

ஆளும் கட்சி, எதிர் கட்சி, மூன்றாம் நான்காம் கட்சி என்று எல்லாருமே தெலுங்கர்கள் நிரம்பி இருக்க, எமக்காக யாம் எங்கே போராடுவது?

ஸ்டெர்லைட் - பாஜக - அதிமுக - நீதிமன்றம் சதி....



இது எப்படி சாத்தியம்..?

M.V.D D VICTORY
Copper Concentrate
M.QTY.25000 M.T
PENCHING
SINGAPORE
AND PERU
CHA:SEAPOL
VOC IV BERTH

திருச்சி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ, பெண் போலீஸ் நடத்திய காம லீலை...


திருச்சி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ, பெண் போலீஸ் நடத்திய காம லீலைகளின் 3 நிமிடம் ஆபாச வீடியோ காட்சிகள் வெளியாகி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக இருப்பவர் பாலசுப்பிரமணி (50). கொடாப்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர். இதே போலீஸ் நிலையத்தில் கணினி பிரிவில் திருச்சி புத்தூர் நால்ரோட்டை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் பணியாற்றி வருகிறார். கடந்த 10ம் தேதி இரவு ரோந்து பணியில் பாலசுப்பிரமணி ஈடுபட்டு இருந்தார். ஸ்டேஷனில் பெண் போலீஸ் மட்டும் பணியில் இருந்தார். இந்நிலையில், ரோந்து பணியின் இடையில் 10.30 மணியளவில் காவல் நிலையத்திற்கு எஸ்எஸ்ஐ பாலசுப்பிரமணி வந்தார். அங்கு பெண் போலீஸ் மட்டும் கணினியில் வழக்கு விவரங்களை பதிவு செய்துகொண்டிருந்தார்.

அப்போது, அவர் அருகில் வந்த எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பிரமணி, ‘‘பனி அதிகமாக உள்ளது, குளிர் தாங்கமுடியவில்லை’’ என பேச்சை தொடங்கி, சிறிது நேரத்தில் அவரது கன்னத்தில் முத்தமிட்டு கட்டி அணைத்துக்கொண்டு காம லீலைகளை தொடங்கினார். அப்போது, உளவுத்துறை போலீஸ் ஒருவர் காவல்நிலையத்திற்கு வந்தார். உடனே, உஷரான அந்த பெண் போலீஸ் உளவுத்துறை போலீஸ்காரரிடம், எஸ்.எஸ்.ஐதான் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து காம லீலைகளில் ஈடுபட்டதாக குமுறி உள்ளார். பெண் போலீசின் கண்ணீரை நம்பி உளவுத்துறை போலீஸ்காரர், இதுகுறித்து மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பி உள்ளார். மேலும், மறுநாள் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ், மாவட்ட எஸ்.பியிடம் எஸ்.எஸ்.ஐ மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்தார். உடனே, எஸ்.பி ஜியா உல்ஹக் சம்பவம் குறித்து முறையாக விசாரிக்காமல், உடனடியாக எஸ்.எஸ்.ஐயை சஸ்பெண்ட் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்.எஸ்.ஐ, ‘‘இருவரும் சம்மதத்தோடுதான் ஜாலியாக இருந்தோம். தண்டனை கொடுத்தால் இரண்டு பேருக்கும்தான் கொடுக்கணும்.

எனக்கும் மட்டும் தண்டனை கொடுப்பதில் என்ன நியாயம் இருக்குது’’ என ஆதங்கப்பட்டார்.   இதையடுத்து, சுதாரித்து கொண்ட மாவட்ட எஸ்.பி காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய டி.எஸ்.பி ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று பாலசுப்பிரமணி இரவு 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்து உள்ளார். அப்போது அங்கு பெண் போலீஸ் பணியில் இருந்தார். சில நொடிகளில் அந்த பெண் போலீஸ் அருகில் செல்லும் அந்த எஸ்.எஸ்.ஐ, அவருக்கு ஒரு முறை முத்தம் கொடுத்துவிட்டு, அவரிடம் பேச்சு கொடுக்கிறார்.

சில நொடிகளில் காமத்தின் உச்சத்திற்கே செல்லும் அவர், அந்த பெண் போலீசின் முகத்தை பிடித்து இழுத்து ‘லிப் டூ லிப்’ அடிக்கிறார். 2 நிமிடம் 50 நொடிகள் ஓடும் வீடியோவில் அந்த பெண் போலீஸ் கொஞ்சமும் எதிர்ப்பு தெரிவிக்காமல் முழு மனதோடு அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பது தெரியவந்தது.
முன்னதாக இருவரின் காம சேட்டையின் போது, காவல் நிலைய வளாகத்திற்குள் பைக்கில் உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் வருகிறார். அதில், அடிக்கும் லைட் வெளிச்சத்தை பார்த்து இருவரும் ஒதுங்கி இருப்பதும், எஸ்.எஸ்.ஐ வெளியே சென்றதும் உளவுத்துறை போலீஸ்காரரிடம் அந்த பெண் போலீஸ் பொய் புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

மெகா திட்டம் போட்ட பெண் போலீஸ்
இருவரின் காம சேட்டை விவரத்தை உளவு பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வெளியே சென்றவுடன், பெண் போலீஸ் வீடியோவில் பதிவான காட்சிகளை தனியாக அவர் பதிவு செய்து கொண்டார். உண்மை வெளிச்சத்துக்கு வந்ததும் எஸ்.எஸ்.ஐ தினமும் எனக்கு கொடுக்கும் பாலியல் தொந்தரவை ஆதாரத்துடன் நிரூபிக்கதான், அந்த உளவுத்துறை போலீஸ்காரரை நான் வரவழைத்தேன் என்று அந்த பெண் போலீஸ் கூறியதாக கூறப்படுகிது. இருப்பினும், வீடியோவில் பதிவான காட்சிகளை பார்க்கும்போது இருவரின் சம்மதத்துடன் காமசேட்டை அரங்கேறியதாக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால், மிக விரைவில் அந்த பெண் போலீஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது...

தீர்வு அதுதான்னு இருந்தா யாராலையும் தடுக்க முடியாது...


ஏன்னா நாம குடுத்த உயிர்பலிகளுக்கு நீதி கெடைச்சே ஆகனும்...

உடல் உஷ்ணம் குறைய..


உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி...

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது.

இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.

இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது.

இதனை சரி செய்ய நம் சித்தப் பெருமகான்களின் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

தேவையான பொருள்கள்...

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

செய்முறை...

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.

எண்ணெய் இலேசாக சூடாகியதும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.

2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்கக் கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.

மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்தக் காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும்.

மேலும், சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

இந்தச் செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்களும்) பயன் பெற இந்தச் செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்...

மனிதன்...


ஒரு உண்மையான மனிதன்,
ஒரு போதும் நம்புவதில்லை...
அவன் கற்கிறான்.

ஒரு உண்மையான மனிதன்,
ஒரு போதும் எல்லாம் தெரிந்தவனாக ஆகிவிடுவதில்லை...
அவன் எப்போதும் வெளிப்படையாக இருக்கிறான்.

நம்புகிறவன்,
அவனுக்குத் தகுந்தாற் போல்...
உண்மையை ஒத்துப்போகச்
செய்ய நினைக்கிறான்...

தேடுகிறவன்,
உண்மைக்குத் தகுந்தாற்போல்...
 தன்னை மாற்றிக் கொள்கிறான்...

உண்மையான மனிதன்,
கடைசி வரை வளர்கிறான்...
அவன் இறக்கும்போது கூட
வளர்ந்து கொண்டிருக்கிறான்...

அவனுடைய வாழ்வின்
கடைசிக் கணம் கூட...
விசாரித்தாலாக இருக்கும்...
தேடலாக இருக்கும்...
கற்றலாக இருக்கும்...

ஒருவனின்,
சுய பரிசோதனையே...

அவனின்,
அனுபவம், அகநிலை மாற்றம்...

அழகிய ஆச்சரியங்கள்...


திராவிடமே தமிழர்களுக்கு முதல் எதிரி...


விஜயகாந்த் உள்ளிட்ட தெலுங்கர்கள் குறித்து பாரதி ராஜா..

இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான்.

டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான்.

ஆனால், தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள்?

கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவர்களைத் துரத்தியடிச்சுட்டாங்க. ஆனால், தமிழ்நாட்டில்?

இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே...

கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவர்களையும் வாழவெச்சுட்டு இருக்கு..

அவர்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க.

தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க...

Source: http://tamil.oneindia.in/movies/news/2013/06/bharathirajaa-s-attack-on-vijayakanth-177987.html

விழித்துக்கொள் எம் தமிழினமே...


நெகிழி மக்க 1000வருடங்களுக்கு மேல் ஆகும். பாதிப்பு 84 லட்ச உயிரினத்திற்கும். சிந்திப்போம்...


இன்று ஒரு வேலைக்காக குழி தோண்டினோம் அப்பொழுது 10வருடங்களுக்கு மேல் புதைக்கப்பட்ட சக்தி மசாலா நெகிழி பார்த்தேன். கொஞ்சம் கூட மக்கவில்லை.

சிந்திப்போம்.. மனிதா.. தமிழா...

நெகிழி தவிர்ப்போம்.
பிளாஸ்டிக் தவிர்ப்போம்.
Avoid Plastic.

துணிப்பை.. காகிதம்.. காகிதபை பயன்படுத்துவோம். 

84 லடச உயிரினத்தை பாதுகாப்போம்...

நிலத்தடி நீருக்கும் வரி...


திராவிடமே ஈழ விடுதலைக்கு முதல் எதிரி...


தமிழரை வீழ்த்திய காலம் தொட்டு, இன்று வரை நேரடியாகவும், திராவிடம் என்று மறைமுகமாகவும் தெலுங்கர்களும், கன்னடர்களும் நம்மை அடிமை படுத்தி ஆண்டு கொண்டு இருக்கின்றனர்.

எனவே வைகோ போன்ற தெலுங்கர்கள், ஈழத்தில் தமிழனுக்கென்று ஒரு நாடும், அதற்க்கு அவனே தலைமையும் இருக்க வேண்டும் என்று போராடுவது உண்மை என்றால், தமிழ் நாட்டிலும் அதையே அவர் வழிமொழிய வேண்டும். மற்றபடி வைகோ , திராவிடத்தை விடுத்து எமக்காக போராடும் தெலுங்கர் இன தோழராக இருக்கலாம். தலைவராக ஆக முடியாது.

மீண்டும் மீண்டும் தெலுங்கரிடம் ஆட்சியை கொடுத்து அடிமைப்பட தமிழர்கள் தயார் இல்லை.

எனவே தமிழனுக்கென்று ஒரு நாடு அமைவதையோ, அவனுகென்று ஒரு அடையாளம் இருப்பதையோ எதிர்க்கும் முதல் எதிரிகளே திராவிடர்கள் தான்.

இவர்கள் ஈழம் பெற்று தருவார்கள் என்று பகல் கனவு காணும் மூட தமிழர்களே..... இனிமேலாவது திருந்துங்கள்....

காந்தி கணக்கு என்றால் என்ன?


சாகர் மாலா திட்டம் ஒரு பேரழிவுக்கான திட்டம் என்று ஏன் கூறுகிறோம்?


1.திட்டத்தின் மைய மற்றும் முதன்மை நோக்கமே கப்பல் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவது மட்டும்தான். மற்ற எந்த நோக்கமும் கிடையாது. இதற்காக ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை துறைமுகங்களுடன் இணைப்பதாகும்.

2.கடற்கரைகள் முழுமையாக துறைமுகங்களின் கீழ் வசப்படுத்தப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.

3.கடற்கரைகளில் ஸ்மார்ட் நகரங்கள் மட்டும் அமைக்கப்படும்.

4.சாகர் மாலாவிற்காக லட்சக்கணக்கான கடற்கரை மற்றும் நீர் நிலைகள் மற்றும் நதிகளை ஒட்டியும் கடற்கரை நிலங்களும் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படும்.

5.கடற்கரை கிராமங்கள் மற்றும் நகரங்களில் பாரம்பரியமாக வாழும் மீனவர்கள், உள்நாட்டு நீர் வழித்திட்டங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் வாழும் விவசாயிகள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் முழுமையாக விரட்டியடிக்கப்படுவார்கள்.

6.கடலிலும் கடற்கரைகளிலும் உள்நாட்டு நீர் நிலைகளிலும் உள்ள சூழல் அமைப்பு நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட முழுமையாக எண்ணற்ற சரக்குகளின் போக்குவரத்தினால் மீட்க முடியாதபடி நாசமடையும்.

7.இடைவிடாத சரக்கு போக்குவரத்துடன் ஏற்படுத்தும் சூழல் மாசினால் மீன் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் தாவர இனங்கள் அழியும் அபாயம் ஏற்படும்.

8.லட்சக்கணக்கான கடற்கரை மீனவர்கள் உள்நாட்டு மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

9.நாடு முழுவதும் கடற்கரை மாநிலங்கள், நதிகள் மற்றும் நீர் நிலைகள் உள்ள மாநிலங்களின் விவசாயம் மற்றும் மீன்பிடி பொருளாதாரம் அடியோடு சீர்குலையும். லட்சக்கணக்கான மீனவர்களும் விவசாயிகளும் இடம் பெயருவதைத்தவிர வேறு வழியில்லாததால் அவர்கள் உள்நாட்டு அகதிகளாக மாறுவதை நோக்கி தள்ளப்படுவார்கள்.

10.சாகர்மாலா தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தை சார்ந்து தொடங்கப்படுவதால் நாட்டின் கடற்கரைகள் மட்டுமின்றி, தீவுகளும் கார்பரேட்டுகளின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்படும் அபாயம் ஏற்படும்.

11.உலக அளவில் மிகப் பெரிய சுற்றுச்சூழல் அபாயமாக உள்ள கால நிலை மாற்றம் உள்ளது. தற்போதைய துறைமுகம் சார்ந்த வளர்ச்சியினால் தட்பவெப்ப நிலையும் கடலும் மிகவும் சூடாகும். இதனைத் தொடர்ந்து கடல் அமிலமயமாவதும் தவிர்க்க இயலாமல் போகும்.

இன்னும் எத்தனையோ பாதிப்புகளுக்கும் பேரழிவுகளுக்கும் அடிப்படையாக உள்ள சாகர்மாலா திட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே கொள்ளை லாபம் அளிக்கும் திட்டம். நமக்கோ சாகர்மாலா சாவு மணி அடிக்கும், மீள முடியாத பேரழிவுத்திட்டம்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...