திமுகவின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை...
திமுக தலைவர்கள் தளைப்படுத்தப்பட்டனர். மிகப்பெரிய அடக்குமுறையை இந்திய அரசு ஏவி விட்டது. அன்று எழுந்த மாணவர் போராட்டம் கண்டு அரண்டு போன திமுக, பின்வாங்கியது. அந்த இயக்கமும் ஆங்கிலத்துக்கு தான் வரிந்து கட்டிக்கொண்டு நின்றதே அன்றி தமிழுக்காக அல்லவே! இந்த நிலையில், அம்மாபெரும் மொழிப்போரில் பெரிதாகப் பங்கெடுக்காமல் அந்த கழகம் ஒதுங்கியே நின்றது.
அண்ணா தம்முடைய உண்மை உருவத்தைக் காட்டி விட்டார்! அம் மொழிப்போருடன் "ஒட்டுமில்லை, உறவுமில்லை" என்று அறிக்கை விடுத்து திமுக வின் கயமைக்கு கட்டியம் சொன்னார். அம் மொழிப்போரை கைவிடுமாறு 10.2.1965 அன்று மாணவர்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார். அதை கண்டு பெரியார் "பூனை கோணியில் இருந்து வெளிவந்துவிட்டது" என்று சொல்லி நகையாடினார்." -- கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.
இறுதியில் உயிர்கள் பல செத்து விழுந்தாலும், தமிழுக்கென்று போராடாமல், பின்வாங்கிய திமுக, செத்த உயிர்களின் மீது முதன் முறையாக 1965 இல் ஆட்சி அமைத்தது.
இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது..
இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன் மொழிந்த திராவிடர்கள், தமிழருக்காக தமிழரால், தமிழை முன்னிறுத்தி தன்னிச்சையாக எழுந்த தமிழ் தேசிய சின்னமான 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, மீண்டும் தங்கள் கயமைத் தனத்தால் தனது அரத பழசான 'இந்திக்கு மாற்றான ஆங்கிலம்' என்று திசை திருப்பி, தமக்குள்ள அரசியல் செய்து தமிழ் தேசிய எழுச்சியை அடக்கினர்.
இதன் காரணமாக, அன்று முதல் இன்று வரை எந்த திராவிட இயக்கத்திலும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இளைஞர்கள் இல்லாமல் மிக கவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டு வருகிறது.
வருடம் 2013..
சமீபத்தில் தமிழகத்தில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், ஈழத்துக்காக ஒரு பெரு நெருப்பு 'லயோலா' கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு அது தமிழ் நாடு முழுவதும் பற்றி கொண்டது. இதை பார்த்து ஆளும், எதிர் கட்சிகள் அரண்டு தான் போயின. ஆளும் கன்னட ஜெயலலிதா அம்மையாரின் அரசோ, 'இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும்' என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, 'அது தீர்மானமாக மட்டுமே இருக்க வேண்டும், செயல் வடிவம் பெற்றுவிட கூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
விளைவு அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை அறிவித்தார். அனைத்து கல்லூரி விடுதிகளையும் மாணவர்கள் உடனே காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மாணவர்களின் எழுச்சியை அடக்க தனக்கே உரிய பாணியில் பணியாற்றினார்.
தமிழருக்கான நாடுகேட்டு மாணவர்கள் போராட்டம் (2013)..
ஆனால் எதிர் கட்சியாய் இருக்கும் விஜயகாந்த் அரசோ, அதற்க்கு அடுத்து இருக்கும் தெலுங்கர் கருணாநிதி அரசோ இதை வைத்து வேறு ஒரு அரசியல் நாடகம் ஆடியது.
மாணவர்களின் உண்மையான போராட்டம் 'ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும்' என்பதே. இதை பல முறை, அனைத்து மாணவர்களும் 'புதிய தலைமுறை' உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக ஆணித்தரமாகவே வலியுறுத்தினர்.
ஆனால், திராவிட ஊடங்கங்கள் 'அமேரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்று போராடுவதாக அயோக்கியத்தனமாக செய்தியை திரித்து வெளியிட்டனர்.
இதன் மூலம் தங்களின் இந்திய (திராவிடர்களின் பாணியில் சொன்னால் ஆரிய பாசம்) பாசத்தை மறைமுகமாக வலியுறுத்தினர்.
இதன் மூலம் 'மாணவர்களின் ஈழ நாடு' கோரிக்கை என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்டது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.