28/05/2018
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போலீஸ் காரரின் சூழ்ச்சி... விலகும் மர்மங்கள்....
துப்பாக்கிச் சூடு நடந்த கலெக்டர் அலுவலகம், துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலை இரண்டுமே தூத்துக்குடி சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்குள் வருகிறது.
இங்கே இன்ஸ்பெக்ட்ராக இருக்கும் ஹரிஹரன் பத்து வருடங்களாக இதே பணியில் இருக்கிறார். காவல் துறையின் எல்லா விதிகளையும் மீறி இங்கே பத்து வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். சிலசமயம் டிரான்ஸ்பர் போடுவது போல் போடுவார்கள். ஆனால் இரு நாட்களில் மீண்டும் இங்கேயே டூட்டியில் சேர்ந்துவிடுவார் ஹரிஹரன். அவ்வளவு செல்வாக்கோடு இருக்கிறார். இந்த செல்வாக்குக்குக் காரணம் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்கும் ஸ்டெர்லைட்டுக்கும் இருக்கும் பரஸ்பர அண்டர்ஸ்டேண்டிங்தான் என்று சொல்லுகிறார்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருக்கும் போராட்டக்கார்கள், ஒருங்கிணைப்பாளர்கள் யார் யார் என்பது லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அத்துப்படியான விஷயம்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் கடந்த சில மாதங்களில் தீவிரம் அடைந்ததிலிருந்து யார் யார் அதைக் கையிலெடுத்தார்கள், யார் யார் ஒருங்கிணைத்தார்கள் என்ற பட்டியல் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்குக் கிடைக்க அந்த பட்டியலை அவர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்குக் கொடுத்திருக்கிறார்.
இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு தான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இன்ஸ்பெக்டர் கொடுத்த லிஸ்டில் இருந்தவர்கள்தான் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்று மனித உரிமை அமைப்புகள் இப்போது கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலும் ஓய்வு பெற்ற ஐஜியான அலெக்சாண்டர் துப்பாக்கிச் சூடுக்கு மூன்று நாட்கள் முன்பே தூத்துக்குடியில் தான் இருந்ததாகவும், அவருக்கும் இந்த துப்பாக்கிச் சூடுக்கும் தொடர்பு இருப்பதாகவும் மக்கள் கண்காணிப்பகம், எவிடென்ஸ் ஆகிய மனித உரிமை அமைப்புகள் சொல்கின்றன. இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
ஹரிஹரன் தீவிரமான போராட்டக்காரர்களைப் பட்டியல் போட்டுக் கொடுக்க அதன் பின் அலெக்சாண்டரோடு ஆலோசனை நடத்தப்பட்டதாம். ‘கொஞ்ச பேரை சுட்டுக் கொன்னாதான் அடுத்து யாரும் போராட மாட்டான்’ என்று அலெக்சாண்டர் ஆலோசனை சொல்ல அதன் பேரிலேயே லோக்கல் போலீஸைத் தவிர்த்து வெளியூர் பட்டாலியனிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து ஆபரேஷனை முடித்திருக்கிறார்கள் என்பதே மனித உரிமை அமைப்புகளின் அழுத்தமான வாதம்.
இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர்களின் வீடுகளுக்குக் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறார் தூத்துக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் வனிதா.
இவர் வேறு யாருமல்ல; இன்ஸ்பெக்டர் ஹரிஹரனின் மனைவிதான்.
இவர் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உறவினர்களிடம், ‘போராட்டத்தைப் பார்க்கச் சென்றபோது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்து என் உறவினர் இறந்துவிட்டார். இதில் ஏதும் சதியில்லை’ என்று எழுதிக் கையெழுத்துப் போடச் சொல்லி வற்புறுத்துகிறார் இன்ஸ்பெக்டர் வனிதா. கொல்லப்பட்ட மேலும் சிலரின் வீடுகளுக்கு சென்று வெற்றுக் காகிதத்திலும் கையெழுத்து கேட்கிறாராம். ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மறுப்பு தெரிவிப்பதால் அவர்களைப் பல வகையிலும் சமாதானம் செய்துவருகிறார் இன்ஸ்பெக்டர் வனிதா.
இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், இன்ஸ்பெக்டர் வனிதா இருவருமே தமிழக அரசுக்கு வேலை பார்க்கிறார்களா அல்லது ஸ்டெர்லைட்டுக்கு வேலை பார்க்கிறார்களா என்பதுதான் மனித உரிமை அமைப்புகளின் கேள்வி. விரைவில் இந்த இன்ஸ்பெக்டர் தம்பதி பற்றிய முழு விவரங்களையும் மனித உரிமை அமைப்புகள் பிரஸ் மீட் வைத்து வெளியிடப் போகிறார்கள்...
நீல நிறமும் இரகசியமும்...
ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டது என்னவென்றால்..
நீல நிறம் உங்களின் பசியின் தன்மையை குறைக்கும் ஒரு மந்திர கோலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பசியின்மையை குறைக்கவும், ஒரு வித்தியாசத்தை காணவும் நீல வண்ணத்தைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் உணவு தட்டுகள், மேஜை துணி எல்லாம் மாற்றியமையுங்கள்.
அத்துடன் உங்கள் டைனிங் பகுதியில் ஒரு நீல நிற லைட்பல்ப் சேர்க்கும் போது அது ஒரு பசியின்மையை தருகிறது.
ப்ளூ ஒரு இயற்கை வண்ணமாக இருப்பதோடு மற்றும் பெரும்பாலும் விஷ உணவுக்கு தொடர்புடையதாக உள்ளது..
எனவே நீங்கள் இதற்காக இந்த வண்ணத்தை பாராட்ட வேண்டாம், இது நம் பசி வேட்கையை நீக்கச் செய்கிறது அவ்வளுவே...
இன்று கேரளாவில் முஸ்லிம்கள் மட்டுமே தூத்துக்குடி மக்களுக்காக கண்டண பேரணி செய்தனர்...
மதச்சார்பற்ற தன்மை ஓங்கும்
சுடு பட்டதில் அனைவரும் மததால் இந்துவே இந்துத்துவம் பேசும் எந்த
அமைப்புகளும் குறல் கொடுக்க வில்லை மாறாக எதிர்த்து பேசுகின்றனர்.. இதுதான் இந்துத்துவா கொள்கை
மததாள் வேறுபட்டு இருந்தாலும் மனிதர்கள் என்ற ஒரே
நிலைதான் அவர்களுக்கு மொழியால் மாறு பட்டு இருந்தாலும் அவர்களுக்கு தேவை மனிதன் என்ற உண்ணத மறியாதை தான்...
கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி முகத்தில் கரிபூசிய ஜின்னா...
1940ஆம் ஆண்டு பெரியார் மும்பைக்குச் சென்று ஜின்னா, அம்பேத்கர் ஆகிய இரண்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசிய நிகழ்வை வரலாற்றின் முக்கிய நிகழ்வாக திராவிட இயக்கத்தவர் குறிப்பிடுவர். அந்தச் சந்திப்பில் பெரியார் திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவளிக்க வேண்டுமாறு ஜின்னாவை வற்புறுத்தினார் என்று ஒற்றை வரியில் சொல்லி மழுப்பி விடுவார்கள்.
உண்மையில் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவு தந்தாரா? இல்லையா? எனும் கேள்விக்கு விடை சொல்வார் எவருமில்லை.
பெரியாரும், அண்ணாவும் கூட இந்தச் சந்திப்பு குறித்து திறந்த மனதோடு கூறிட முன்வரவில்லை.
அதற்குக் காரணம் திராவிடநாடு விடுதலை என்பது மக்களின் விருப்பமானதும் அல்ல. சாத்தியமானதும் அல்ல என்பதை ஜின்னா தெளிவுபடுத்தி விட்ட காரணத்தால் இதனை தமது இயக்கத்தவர்களிடம் கூற வேண்டியிருக்கும். இதன் காரணமாக இயக்கத்தவர் நம்பிக்கை இழந்து விடுவர் என்பது தான்.
இதைப் பற்றி விரிவாகக் காண்போம்...
8.1.1940 மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை ஜின்னா, அம்பேத்கர், பெரியார் சந்திப்பு கலந்துரையாடல் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில் அண்ணா பங்கேற்காமல் தாராவி சென்று விடுகிறார். இந்தச் சந்திப்பு குறித்து அண்ணா கூறுவதை பார்ப்போம்.
தோழர் ஜின்னாவை நமது தலைவர் சந்திக்க விரும்பிய போது நான் உடன்வர மறுத்தேன் என்றும் நான் அப்போது துரோகம் செய்தேன் என்றும் சமீபத்தில் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நான் உடன்போக மறுத்தது உண்மை தான். தோழர் ஜின்னாவை ஒரு திட்டமான முடிவை வைத்துக் கொண்டு பாருங்கள். வெறும் உபச்சாரத்திற்காகப் பார்ப்பதில் பலனேதும் இல்லை என்று சொன்னேன். தலைவருடைய சந்திப்பு உபச்சார சந்திப்பு என்று நான் அறிந்து கொண்ட காரணத்தினால் தான், நான் உடன் போக மறுத்தேன்.
தலைவரோடு சண்டே அப்சர்வர் ஆசிரியர் தோழர் பி.பாலசுப்பிரமணியம், சைவச்சீலராக விளங்கும் தோழர் கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் உடன் சென்றார்கள். மூவரும் திரும்பி வரும்போது ‘மனக்கசப்போடு’ தான் வந்தார்கள். சந்தர்ப்பம் அப்போதெல்லாம் தவற விடப்பட்டது. தோழர் அம்பேத்கரைச் சந்தித்த வாய்ப்பும் பயனற்றே போயிற்று.
இப்படியாக தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் (சி.என்.ஏ. பரிமளம்- அறிஞர் அண்ணாவின் தன் வரலாறு)
அண்ணா மூவரும் மனக்கசப்போடு தான் வந்தார்கள் என்று கூறுவதன் மூலம் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வில்லையென்பதை சுட்டிக் காட்டுகிறார்.
அடுத்து, ஜின்னா சந்திப்பு குறித்து பெரியாரிடம் ஆனந்த விகடன் இதழுக்காக (11.4.1965) சாவி, மணியன் ஆகிய இருவரும் பேட்டி கண்டனர். அதில் பெரியார் வெள்ளைக்காரன் அதிகார ஒப்படைப்பை தன்னிடம் அளிக்க மறுத்து விட்டதை தெரிவித்து விட்டு ஜின்னா சந்திப்பை கூறுகிறார்..
இத்தோட விட்டு விடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக்கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்லறதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டு, சரி நான் மெட்ராசுக்கு வரப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்னு சொன்னாரு….
கேள்வி: ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?
பெரியார் பதில்: உன் கொச்சனைத் (பிரச்சனை) தனியாகவே எடுத்து சொல்லிக் கோன்னுட்டுப் போயிட்டாரு. அப்பதான் ஜின்னா ராமசாமி மூஞ்சியிலே கரியைப் பூசிட்டாருன்னு பத்திரிகையிலே எழுதினாங்க.
பெரியார் பேட்டியில் ஜின்னா சொல்ல வந்ததை மறைத்து விட்டு உன்பிரச்சனை என்று கூறியதாக தெரிவிக்கிறார். திராவிடநாடு என்பது பெரியாரின் அகநிலைக் கருத்து என்பதே ஜின்னாவின் திட்டவட்ட முடிவாகும்.
26.1.1941இல் நீதிக்கட்சி பிரமுகர் வி.வி.இராமசாமி நாடார் மற்றும் ‘நாடார்குல மித்திரன்’ இதழாசிரியர் எம்.ஏ.முத்து நாடார் இருவரும் மும்பை சென்று ஜின்னாவை சந்தித்து திராவிட நாடு குறித்துப் பேசினர்.
வி.வி.இராமசாமி: எங்களுடைய திராவிடநாடு கோரிக்கை கதி என்ன?
ஜின்னா: ‘உங்களுடைய திராவிட நாட்டினுடைய ஜனங்களின் விருப்பம் இன்னாதெனத் தெரிய வேண்டும்’ என்றார். மிகச்சரியாக ஓராண்டு முடியும் நிலையில் ஜின்னா நினைவாற்றலுடன் தான் இதைக் கேட்டுள்ளார். (செ.அருள் செல்வன்-அண்ணாவின் அரசியல்குரு ‘சண்டே அப்சர்வர்’ பி.பாலசுப்ரமணியம்)
அன்று பெரியார்- ஜின்னா பேச்சை மொழிபெயர்த்தவர் பி.பாலசுப்பிரமணியம். அப்போது ஜின்னா கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பெரியார் திணறியுள்ளார்.
இந்த தகவலை தனது தந்தையார் பாலசுப்பிரமணியம் தன்னிடம் தெரிவித்ததாக அவரின் மகள் ஜெயா தெரிவித்ததையும் மேற்படி நூலில் அருள்செல்வன் குறிப்பிடுகிறார்.
9.8.1944இல் பெரியார் ஜின்னாவிற்குப் பாகிஸ்தான் கோரிக்கையையும் ஒன்றாக இணைத்துக் காந்தியோடு பேச்சு வார்த்தை நடத்துமாறு ஒரு கடிதம் எழுதினார். அப்போது ஜின்னா அதற்கு கோபம் கொப்பளிக்க பதில் தந்தார். அது வருமாறு..
எனக்கு எப்போதும் மதராஸ் மக்களிடம் பரிவு உண்டு. அவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் பிராமணர் அல்லாதவர். திராவிட நாட்டை அமைக்க நினைத்தால் அதைப்பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும். இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்ல முடியாது. உங்களுக்காக நான் பேச முடியாது. உங்களுடையை நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன். உங்களது செயல்பாடுகளில் உறுதியில்லை . (Dr.E,Sa.Viswanathan- The Political Career of E.V.Ramasami Naicker)
பெரியார் இந்தக்கடிதத்தில் தனக்குச் சாதகமாக உள்ள பகுதிகளை மட்டும் வெளியிட்டதாகவும் அதைக் கேள்விபட்ட ஜின்னா தனக்கும் பெரியாருக்குமிடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தை செய்தி ஏடுகளுக்கு கொடுத்ததாகவும் மேற்படி நூலாசிரியர் விசுவநாதன் கூறுகிறார்.
திராவிட நாட்டு விடுதலையை தமிழரல்லாத தெலுங்கர் கன்னடர், மலையாளி ஆகிய மூன்று இனத்தவரின் பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்பதை வடநாட்டில் பிறந்த ஜின்னாவால் கூற முடிகிற போது, தமிழ்நாட்டில் பிறந்த பெரியாரால் இதை ஏன் கூற முடியவில்லை என்பது தான் தமிழர்கள் மனதில் எழும்புகின்ற கேள்வியாகும்...
108 காயகல்ப மூலிகைகளின் தளபதி வல்லாரை...
நினைவாற்றலை பெருக்கும் கிழட்டு தன்மையை தடுக்கும்...
நினைவாற்றலை பெருக்க வேண்டும் என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது ‘வல்லாரை’ தான். ஆனால் வல்லாரைக்கு இதை தவிர வேறு சில நோய்களை குணப்படுத்தும் சக்தியும் இருக்கிறது. வல்லாரைக்கு ‘சரஸ்வதி’ என்ற பெயரும் உண்டு. ஒருவரை புத்திமானாக்கும் அற்புத சக்தி இருப்பதால் அந்த பெயர் ஏற்பட்டது.
தென்மாவட்டங்களில் வல்லாரையை கீரையாகவோ, துவையலாகவோ சமைத்து சாப்பிடுகிறார்கள். இது மிக நல்லது. வல்லாரையை அப்படியே உலர்த்தி பொடி செய்து மாத்திரையாகவும் தருகிறார்கள்.
இதன் தாவரவியல் பெயர் Centelle asiatia (linn) Urban. மண்டூகபரணி, ஆரை, சிங்கி, சண்டகி, குடகம், விக்கிராத்தா, குளக்குறத்தி, குணச்சாலி குணத்தி என்ற பெயர்களும் உண்டு.
மலை வல்லாரை, கருவல்லாரை என்ற இருவகைகள் உள்ளன. இது கணுக்களில் வேர்விட்டு தரையோடு படரும் சிறு செடி இனம். இதன் இலைகள் கரும்பச்சை நிறமாக இருக்கும். வட்ட, அரைவட்ட வெட்டு பற்களுடன் கூடிய கை வடிவ நரம்பு அமைப்புகளுடன் நீண்ட காம்புடைய ஆழமான இதய வடிவ இலைகளை கொண்டது. இதன் பூ ரோஸ் நிறத்திலும், பழங்கள் சிறிய முட்டை வடிவிலும் இருக்கும். கசப்புடன் கூடிய துவர்ப்பு சுவை உடையது. இதன் மகத்துவம் மிகப்பெரியது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட மனநல நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.
இந்த மூலிகையில் asiaticoside, resins போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. இது நினைவாற்றல், அறிவு, மனதை ஒருமுகப்படுத்துவது, துடிப்போடு இருக்க செய்வது ஆகிய செயல்களை தூண்டி, மூளையின் திசுக்களை புதுப்பிக்கவும் செய்கிறது. வல்லாரையில் இருக்கும் antiascorbic acid தோலில் ஏற்படும் பலவித நோய்களையும் குணப்படுத்தும். இது தொழுநோயை கூட குணப்படுத்தும் சக்தி படைத்தது. இதில் இருக்கும் ஹைட்ரோகாட்டிலின் நம் மூளையின் செயல்களை முடுக்கி விடுகின்றன. வல்லாரையில் இருக்கும் வல்லாரின் என்கிற அல்கலாய்டு நரம்புகளுக்கு மிகப்பெரிய சக்தியை தருகிறது.
நோயை நீக்கவும், உடலை பலப்படுத்தவும், வியர்வையை அதிகப்படுத்தவும், தாதுபலத்தை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.
மூலாதார நரம்புகள் புதுப்பிக்கப்பட்டு கபால நரம்புகள் செயல்பட்டு நல்ல நினைவாற்றலை தருகிறது.
வல்லாரையுடன் வெங்காயம், பூண்டு, மிளகாய், புளி, சிறு பருப்பு சேர்த்து வேகவைத்து பின்னர் கடைந்து தக்காளி, சிறிது கடுகு சேர்த்து தாளித்து வைத்துக்கொண்டு வெயில் நேரத்தில் உண்டு வந்தால் நரம்புகள் நல்ல வலுப்பெற்று சுருக்கத்தை போக்கி சீராக வைத்துக்கொள்கிறது.
வல்லாரை இலையை உலர்த்தி பொடி செய்து சிறிது நெய் சேர்த்து உணவில் பிசைந்து ஒரு பிடி அளவு சாப்பிட்டால் வாதம், வாயு, அண்டவீக்கம், யானைக் கால், குஷ்டம், நெறிகட்டி, கண்ட மாலை, மேகரணம் குணமாகும்.
வல்லாரை சூரணத்தை ஒரு சிட்டிகை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் வீக்கம், தோல் வியாதிகள், மூளை நரம்பு சம்பந்தமான நோய்கள், இளநரை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் குணமாகும். உடல் கிழட்டுதன்மை அடைவதை தடுக்கும். தோலுக்கு நிறத்தையும் மினு மினுப்பையும் தரும்.
வல்லாரை இலையுடன் தூதுவளை இலையை சம அளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து 20 துளியை மட்டும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர தொண்டை கரகரப்பு, சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் குணமாகும்.
பல மருத்துவ குணங்கள் வல்லாரைக்கு உண்டு. மூலிகைகள் பல இருந்தாலும் அவற்றில் வல்லாரைக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 108 காயகல்ப மூலிகைகளில் வல்லாரை ஒரு தளபதி நிலையில் உள்ளது.
உயர் ரத்த அழுத்த நோயை குணமாக்குவதில் வல்லாரைக்கு முக்கிய பங்கு உண்டு. இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதிலும் வல்லாரை தனி இடம் வகிக்கிறது.
சிலருக்கு வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லையே என்ற தவிப்பான மனநிலை (anxiety) இருக்கும். இதை செய்யலாமா, அதை செய்தால் சரியாகிவிடுமா என்ற மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்களது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கும் வல்லாரையில் தீர்வு இருக்கிறது.
சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த Scleroderma (ஸ்கிளீரோடெர்மா) என்ற இணைப்பு திசுக்கள் கடினமாதல் மற்றும் தண்டுவட பிரச்னைக்கு பெரிதும் பயன்பட்டுள்ளது. வல்லாரை குளம், குட்டை போன்ற சிறிய நீர் நிலைகளில் அமோகமாக வளரும். இது குறிப்பாக மலைபாங்கான இடங்களில் தானாகவே வளர்கிறது.
விஷத்தை நீக்க வேண்டும்...
வல்லாரையை பச்சையாக உபயோகிக்க கூடாது. இதில் ஒருவித விஷத்தன்மை உள்ளது. எனவே சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும். புதிய மண் சட்டியில் பசும்பால் முழுவதும் ஊற்றி ஒரு வெள்ளை துணியை கட்டி அதில் வல்லாரை இலைகளை போட்டு மூடி வைத்து சிறு தீயில் எரிக்க வேண்டும். பால் ஆவியாகி வல்லாரையிலுள்ள விஷத்தன்மையை முறித்து கீழே தள்ளிவிடும். பின்னர் இலையை உலர்த்தி இடித்து பொடியாக்கி பயன்படுத்தவேண்டும்.
வல்லாரை கேப்சூல் ஆபத்து...
வல்லாரையின் மொத்த செடியும் மருந்துதான். ஆனால் சிலர் வல்லாரையிலுள்ள அல்கலாய்டுகளை சிந்தெடிக் முறையில் பிரித்து கேப்சூல்களாக விற்கிறார்கள். இது தவறு. காரணம் இயற்கை எப்போதும் தன் படைப்புகளில் ஒரு சமநிலையை வைத்திருக்கிறது. அதை பிரிப்பதால் நிச்சயம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே கூடுமானவரை கேப்சூல்களை தவிர்த்து நேரடியாக தயாரிக்கப்பட்ட மாத்திரை அல்லது சமைத்து சாப்பிடலாம்...
அரசியல் கட்சிகளின் மாற்றம் ஒரு போதும் உங்கள் அரசியல் வாழ்வியல் மாற்றத்தை தரப்போவதில்லை...
இங்கே நடக்கும் ஒவ்வொன்றிக்கும் பின்னால் நாம் ஏமாற்றப்படுகிறோம், நம் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதே அறிவீர்களேயானால்,
நான் கூறும் அடிப்படை புரியும்..
வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேலாக
நம் தந்தை உழைத்தார், இன்னும் உழைக்கிறார்
நாமும் உழைக்கிறோம், இன்னும் உழைத்து கொண்டே இருப்போம்
ஆனால் நம் வாழ்வில் கனவாக நினைக்கக்கூடிய வாழ்க்கையை ஒருநாள் கூட நம்மால் வாழ முடியாது..
ஆனால் அவர்கள் அதையே தினமும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்...
தமிழர் வாழ்வில் புலால் (Non-veg) உணவு...
புலால் (Non-Veg) தமிழர் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம்...
உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவையில் காய் கனிகள் மட்டுமல்லாது, ஏராளமாய் புலால் உணவும் அன்றைய ஐந்து திணையிலும் இருந்தது.
ஆட்டிறைச்சி, மாட்டியிறைச்சியில் இருந்து ஆமை, மூஞ்சூறு, முதலை வரை அனைவற்றிலும் நம் அப்பத்தாக்கள் லெக் பீஸ், ஹெட் பீஸ் என போட்டு வெளுத்து வாங்கிய வரலாறு சங்க இலக்கியம் முதல் தொட்டே உள்ளது. கோழி, காடை, கவுதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலாலில்லை.
பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும், புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன் குறித்து சங்க இலக்கியம் பல இடங்களில் பேசும்.
(உடனே வீரமாய் பச்சை ஊன் பிரியாணி ஒரு பிளேட் எனக் கேட்டுக் கிளம்பிவிட வேண்டாம். சரியாய் சமைக்காத கறியில் உள்ள பூச்சி முட்டைகள் மூளை இரத்த நாளங்களின் முடிவில் சென்று அடைத்து ஏற்படும் Cysticircosis நோய் வந்துவிடும்)
சில 100 ஆண்டுகள் சமணமும், பவுத்தமும் தமிழகத்தை ஆண்டதில்தான் நம் சாமியும்கூட சுத்த வெஜிடேரியன் ஆகிவிட்டது. புலால் உண்ணாமையும், கள் உண்ணாமையும் வள்ளுவனால் கற்பிக்கப்பட்டவுடன், புலால் மெல்ல உழைக்கும் வர்க்கத்தில் மட்டும் ஒட்டிக் கொண்டது.
நான் வெஜ் சாப்பிட்டால் உடம்பு வளரும், மூளை வளராது என்ற பொய்ப் புராணங்கள் கற்பிக்கப்பட்டதில், புலாலைப் பார்த்தவுடன் ஐய்யே உவ்வே என்பது அதிகமாகிவிட்டது.
100 க்கு 100 வாங்கி என் பையன் புரபஷனல் காலேஜில் ஐக்கியமாகிவிடவேண்டும் என முக்கி முனகும் பெற்றோருக்கு ஒரு விஷயம். 90 சதவீதம் நோபெல் பரிசு வாங்கியவர்களும், உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்;ட், ஆப்பிள் முதலாளிகளும் மூணு வேளையும் நான் வெஜ்ஜர்கள்தான்.
புலாலில் உள்ள புரதமும், சில நுண் சத்துக்களும் பொதுவாய் காய்கறிகளில் குறைவு. உதாரணத்திற்கு 100 கிராம் ஈரலில் 6000 மைக்ரோகிராம் இரும்பு உண்டு. 100 கிராம் கேரட்டில் 3000 மைக்ரோகிராம்தான் இரும்பு.
எதை, எப்போது, எவ்வளவு சாப்பிடனும் என்பதை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
அன்று போருக்குப் போன வீரன் சாப்பிட்டதைப்போல இன்று காரில் போகும் சுகவாசி உண்டால் சரிப்படாது. நெடுஞ்சாணாய் நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாய் லைட் டின்னரில் ஃபிஷ் பிரை ஆர்டர் செய்யும் நபருக்கு சரிவராது.
உழைக்கும் அளவும், வாழும் நிலமும்தான் உண்ணும் அளவை இனி தீர்மானிக்க வேண்டும்.
- மருத்துவர். கு.சிவராமன் (நல்லுணவும், நலவாழ்வும் என்ற புத்தகத்தில்)...
கடலில் உருவான குட்டி நாடு...
நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா?
கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு.
இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா?
இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும்.
இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நாடு.
இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் அல்லவா?
அப்படி அந்தப் போர் தொடங்கிய போது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது.
கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்த துறைமுகத்தைக் கட்டியிருக்கிறார்கள்.
போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் போடுவதற்காக இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
போர் முடிவடைந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ரப் டவர் எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டு விட்டார்கள் ஆங்கிலேயர்கள்.
1967-ம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இந்தத் துறைமுகத்துக்குப் போய்த் தங்கிவிட்டார்.
இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். இங்கு வந்த பேட்ஸ், ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார்.
அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்பப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிறைய முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார்.
இந்த நாட்டுக்கென்று தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.
கடலுக்குள்ள ஒரு குட்டி கட்டிடத்தில்தான் இந்த நாடே இருக்கிறது. ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போன போது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள்.
1987-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனாலும் முடியவில்லை.
சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.
அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார்.
தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள்.
ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக் கொண்டு தான் வர வேண்டும்.
ஒரு கட்டிடமே தனி நாடாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறதல்லவா?
இந்திய உளவுத்துறை இசுரேலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால், இங்குள்ள கட்டமைப்பை கட்டமைத்தவர்கள் யார்..?
நீங்கள் நன்றாக யோசித்து பாருங்கள்..
அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் போதுதான் அது நமக்கு அதிகமான பாதிப்பை தருகிறது..
சல்லிக்கட்டு - பீட்டா - இறுதியாளில் அதிகார வர்க்கத்தின் வன்முறை..
ஸ்டெர்லைட் - வேதாந்தா நிறுவனம் - இங்கிலாந்து - வன்முறை மற்றும் கொலைகள்..
இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதை இந்த இரண்டு நிகழ்வுகளில் அப்பட்டமாக தெரியும்...
உலகை அச்சுறுத்திய வயிற்றுப் போக்கு...
1664ம் ஆண்டுகளில் 400,000 மக்கள் தொகையில் 70,000 பேரைப் பலிகொண்ட மாபெரும் தொற்று வியாதிக்குப் பேர் வாந்தி வயிற்றுப்போக்கு...
இதன் தாக்கம் மேற்குலகை அன்றைய காலகட்டத்தில் செய்வதறியாது நின்றது, ஏறக்குறைய பல பேரை பலியிட்டு இதற்கு காரணத்தை கண்டு பிடித்தனர்..
அதில் முக்கியமானது சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவு..
இதை இரண்டை சரி செய்தாலே மக்களை காப்பாற்றிவிடலாம் என்று யோசனை சொன்னார்கள்.
இதற்கிடையில் கிருஸ்துவ சபை இதை நிராகரித்தது இது ஆண்டவனின் சாபம், இதில் கைவைக்க நாங்கள் அனுமதி தரமாட்டோம் என்றது..
பின்னர் தான் மதகுருமார்கள் பலர் இந்த வாந்தி பேதியின் தாக்கத்தால் இறக்கும் நிலையில் அவர்கள் தங்கள் கூற்றை மாற்றிக் கொண்டனர்.
பின்னர் சுகாதாரமான குடிநீர் உணவு மூலம் இதை கட்டுப்படுத்தினார்கள்..
மட்டுமின்றி பிரமாண்ட போர்கள் கூட இந்த வயிற்றுப்போக்கு மூலம் நிரந்தரமாக தடை செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு..
ஆனால் இந்த நோயை மேற்கத்திய பணக்கார நாடுகள் ஆயுதமாக அந்நிய ஏழை நாட்டின் மீது செலுத்தி வந்தனர் என்ற கொடூர வரலாற்றையும் நாம் மறந்து விடக்கூடாது..
2004ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 2.5 பில்லியன் வயிற்றுப்போக்கு நோயாளிகள் ஆதாரப்பூர்வாமாக பதியப்பட்டுளார்கள்..
அதில் ஐந்து வயதிற்கும் குறைவான 1.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.
இவற்றில் பாதிக்கும் மேலானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள்...
வளமான ஆப்பிரிக்காவை வளமிழக்க செய்த மிகப்பெரிய துரோக நடவடிக்கையில் இதுவும் ஒன்று..
இன்றைய மேற்கத்திய பணக்கார நாடுகள் ஏறக்குறைய அனைத்தும் ஏழைகளின் வயிற்றில் அடித்து அவர்களை கொன்று குவித்து உருவாக்கப்பட்டது தான்..
அதில் மிகவும் முக்கியமான இரண்டு கேடுகெட்ட நாடுகள் அமெரிக்க இத்தாலி...
வெயிலைத் தாக்குப் பிடிக்க.....
வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.
உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.
ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.
குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.
வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.
வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.
கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.
முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.
இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது...
கோல்டன் ரேஷியோ... இயற்கையின் கணிதம்...
உங்களுக்கு golden ratio என்பதை பற்றி தெரியுமா?
Fibonacci number...?
இவை நம்மை சுற்றி இயற்கையில்.. இயற்கையாகவே அமைந்து உள்ள ஒரு அதிசய கணிதம்..
இவைகள் என்னவென்பதை பற்றி இன்று பார்ப்போம்..
உங்களுக்கு "pi " என்பதை பற்றி தெரிந்திருக்கும்.. அதாவது.. அந்த 3.14....
ஆனால் "phi" பற்றி தெரியுமா?
இது கிரேக்க எழுத்துக்களில் 21 வது எழுத்து. கணிதத்தில் இதுதான் " கோல்டன் ரேஷியோ" காண சிம்பல்.
ஒரு பெரிய கோட்டை இரண்டாக பிரிக்கிறீர்கள்.. சரிபாதியாக அல்ல ஒன்னு பெரிது ஒன்னு சின்னதாக... இப்போது அந்த பெரிய கோட்டை சின்ன கோட்டை கொண்டு வகுத்தால் வரும் என் இருக்கிறதே.. அது அந்த கோட்டின் மொத்த நீளத்தை பெரிய கோடை கொண்டு வகுத்தால் வரும் எண்ணுக்கு சமமாக இருப்பதை ... அந்த விகிதாசாரதைதான் Golden ratio என்கிறார்கள்.
கோல்டன் ரேஸ்யோவை குறிக்க phi யை பயன் படுத்த காரணம்.. முன்பு சொன்ன அந்த விகிதாச்சாரம் phi இன் மதிப்பாகிய 1.6 க்கு நெருக்கமாக இருப்பது தான்.
இந்த phi ஆர்வலர்கள் ஆய்வாளர்கள்
அந்த காலத்தில் கட்டபட்ட.. மர்மம் நிறைந்த கட்டிடமான பிரமிட்.. இந்த கோல்டன் ரேஷியோ படி கட்ட பட்டுள்ளதை கவனித்தார்கள். க்ரேட் பிரமிடு கிசா இருக்கிறதே அதன் ஓவொரு பக்கத்திலும் அதன் நீளம் 786 அடி. மேலும் அதன் உயரம் 481 அடி.. அதாவது இவை இரண்டுக்கும் உள்ள விகிதம் 1.57 .அதாவது phi யின் மதிப்புக்கு மிக நெருக்கமாய்.
இப்படி பிரமிடுகளில் மட்டும் அல்லாமல் பழைய கட்டிடங்கள் பல வற்றில் இந்த கோல்டன் ரேஸ்யோ பயன்படுத்த பட்டிருப்பதை கவனிதார்கள்.
பிபோனாச்சி நம்பர் என்பதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள்.
1200 களில் லியனார்டோ பிபோனச்சி
என்ற கனிதவியலாளரால் இது கண்டுபிடிக்க பட்டது.
அதாவது 0,1,1,2,3,5,8,13,21,34, இப்படி எழுதுவது தான் பிபோநாச்சி நம்பர்..
இதில் உள்ள சிறப்பு என்ன என்று கவனித்தால் எந்த ஒரு நம்பரும் அதற்கு முந்தய இரு நம்பர்களின் கூட்டு தொகையாக இருக்கும்.
இந்த எண்களின் மாறும் விகிதம் தான் கோல்டன் ரேஷியோ.... இது phi மதிப்பிற்கு நெருக்கமாக உள்ளது.. அதிலும் எண்கள் பெரிதாக பெரிதாக phi மதிப்பாகிய 1.618 ஐ அதிகம் நெருங்குகிறது.
உதாரணமாக 3 கும்5 கும் இடையிலான விகிதம் 1.666 ஆனால் 13 க்கும் 21 க்கும் இடையிலான விகிதம் 1.625... இன்னும் பெரிய என்னானால்... 144 கும் 233 கும் பார்த்தால் 1.618 இப்படி....
லியர்னடோ டாவின்ஸி தான் வரைந்த ஓவியங்களில் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
அவரது லாஸ்ட் சப்பர் ஓவியத்தில் இயேசு தனது சீடர்களுடன் உணவு உண்ணும் காட்சியில் உள்ள மேஜை மற்றும் சில பொருட்களில் இந்த விகிதாச்சாரத்தை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. அவரது மோனோலிசா ஓவியம் கூட இதை பயன் படுத்தி வரைய பட்டது தான்.
இதை மனிதன் பயன்படுத்தி இருக்கிறான் என்பதை இவ்வளவு நேரம் நான் சொன்னது இல்லை ஆச்சர்யம்..
இனி சொல்ல போவது தான் ஆச்சர்யம்..
இயற்கை தனது படைப்பில் இதை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
ஒரு சூரிய காந்தி பூவில் மையத்தில் சுருள் சுருளாக இருக்கிறதே அந்த டிசைன் அதை உற்று கவனித்தால் கோல்டன் ரேஷ்யோ படி அமைந்துள்ளதை கவனிக்கலாம்..
ஒரு மரத்தில் கிளைகள் அதில் இலைகள் எப்படி எந்த எண்ணிக்கையில் படி படியாக வளர்கிறது என்று பார்த்தால் இந்த விகிதம் தான்.
தாவரத்தில் மட்டும் அல்ல ஒரு நத்தையின் ஓடு இந்த விகித அடிப்படையில் தான் சுருளாக இருக்கிறது.. விலங்குகளின் உடலமைப்பை கவனித்தால் இந்த விகிதம் இருக்கிறது.
அவ்வளவு ஏன் மனிதனின் கைகள் மற்றும் விரல்கள் இந்த விகிதத்தில் தான் அமைந்துள்ளது என்றால் பார்த்து கொள்ளலாம்.
இப்போது இனொன்று சொல்கிறேன் இயற்கை உயிரினங்களில் மட்டும் இல்லை .. பல இயற்கை ஆற்றல்களில்.. படைப்புகளில் இதை வெளிப்படுத்துகிறது.. என்பது இன்னும் ஆச்சரியமானது.
சூறாவளி ஏற்படும் போது அதன் சுழல் கவனித்தால் இந்த விகிதத்தை பார்க்கலாம்..
கடல் அலையை கவனித்தால் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பார்க்கலாம்.
இன்னும் எங்கெங்கே இயற்கை இதை பயன் படுத்துகிறது என்பதை ஆராய மனிதன் சிரிதினும் சிறிதான DNA சுருளை ஆராய்ந்து பார்க்க அந்த சுருளே இந்த விகிதத்தில் தான் அமைந்துள்ளது என்பதை பார்த்து அதிசையித்தான்..
பிறகு பெரிதினும் பெரிதான கேலக்சிகளை அதன் சுருள் அமைப்பை ஆராய்ந்த மனிதன் இந்த பிரபஞ்சமே அந்த கோல்டன் ரேஷியோ வை பயன்படுத்தி அமைந்துள்ளதை கண்டு மேலும் அதிசயித்து போனான்..
இந்த பிரபஞ்சம் அறிவியலால் ஆனது என்று எப்போதும் சொல்லி வந்துள்ளோம்..
ஆனால் அது நாணயத்தின் ஒரு பக்கம் தான் அதன் அடுத்த பக்கத்தில் பிரபஞ்சம் முழுக்க.. முழுக்க கனிததால் ஆனது என்ற அதிசயத்தை வியந்து நோக்கி இன்றைய கட்டுரையை நிறைவு செய்கிறேன்...
Subscribe to:
Posts (Atom)