15/11/2018

புதுவையில் தினகரன் - அன்புமணி ரகசிய சந்திப்பு- உறுதியானது பாமக - அமமுக கூட்டணி...


திமுக தலைமையிலான கூட்டணிக்கு போட்டியாக தினகரன், கமல் கட்சிகளுடன் பாமக கூட்டணி அமைக்க இருப்பதாக நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது தினகரனின் அமமுகவுடன் பாமக கூட்டணி என்பது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் புதுவையில் தினகரனும் அன்புமணி ராமதாஸும் அண்மையில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசியல் கட்சிகளில் ‘திராவிட’ என்ற சொல்லை பயன்படுத்தாதவை பாமகவும் அமமுகவும் தான்.

பாமகவை பொறுத்தவரையில் முதல் எதிரியாக பார்ப்பது திமுகவை மட்டும்தான்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக கலகலத்துப் போய்விட்டது. அரசியல் களத்தில் வலிமையான தோற்றத்துடன் இருக்கும் ஒரே கட்சி திமுக. அக்கட்சியை பலவீனப்படுத்துவதில் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஆர்வம் காட்டி வருகின்றன.

பாமகவும் திமுகவை வீழ்த்துவதில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் வட தமிழகத்தில் வன்னியர்கள் சமூகத்தில் இன்னமும் செல்வாக்குடன் திமுக இருந்து வருகிறது. இதனால் பாமக பல தொகுதிகளில் 2-வது இடத்துக்கு தள்ளப்படுகிற நிலைதான் இருந்து வருகிறது.

ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கினால் திமுகவை ஆட்டம் காண செய்துவிட முடியும் என்பது பாமகவின் வியூகம். இதனால் தினகரனுடன் கை கோர்க்க பாமக முடிவு செய்தது.

இதையடுத்து கடந்த மாதம் கோனேரிகுப்பத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சட்டகல்லூரி திறப்பு விழா நாளின் போது தைலாபுரத்தில் அன்புமணி ராமதாஸ் முகாமிட்டிருந்தார். அதேநாளில் புதுவையில் உள்ள பண்ணை வீட்டில் தினகரன் தங்கியிருந்தார்.

தினகரனிடம் இருந்து அழைப்பு வந்ததைத் தொடர்ந்து புதுவைக்கு சென்ற அன்புமணி கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்த ஆலோசனையின் போது, ஆட்சி அதிகாரம் இல்லை என்கிற போது அதிமுக முழுமையாக என் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

மேலும் முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகம் இணைந்தால் நாம் 10 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என தினகரன் கூறியிருக்கிறார்.

இதை ஆமோதித்த அன்புமணியும் கூட்டணிக்கு தயார் என சிக்னல் கொடுத்திருக்கிறார் என்கின்றன பாமக வட்டாரங்கள்...

https://tamil.thesubeditor.com/tamilnadu/8437-pmk-ammk-new-alliance.html

காலமெல்லாம் தமிழர் நலனுக்கு பாடுபட்ட தமிழனுக்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் தண்டனை சிறைவாசம்...


பழ நெடுமாறன் ஐயா தன் சிறு வயது முதல் தமிழ் சமூக தொண்டாற்றி வருபவர். தன்னலம் பாராது மக்கள் சேவையில் உள்ளவர். அவர் ஆற்றிய மனித நேய பணிகள் வருமாறு.

1981 - தருமபுரி மாவட்டத்தில் மோதல் சாவுகள் என்ற பெயரில் அப்பாவி ஊர்ப்புற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து உண்மைகளை அறிந்து வந்து அம்பலப்படுத்தி மோதல் சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

1991 - தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையிட்டு அவர்கள் விடுதலை பெற உதவினார்.

1993 - பன்னாட்டுக் கடல் எல்லையில் விடுதலைப் புலிகள் தளபதி கிட்டு பயணம் செய்த கப்பலை இந்தியக் கடற்படை வழி மறித்ததைத் தொடர்ந்து கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. தளபதி கிட்டு உட்பட பல தோழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். கப்பலின் மாலுமிகள் 9 பேரை இந்தியக் கடற்படைக் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை நடத்தி 9 பேரின் விடுதலைக்கும் வழி வகுத்தார்.

1998 - இராசீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டு மொத்தமாகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காக குழுவை அமைத்து வழக்கை நடத்தி 19 பேர் விடுதலை பெறுவதற்கும் மூவருக்கு வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்படுவதற்கும் வழிவகுத்தார். 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மட்டுமல்ல, இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் பெரும் இயக்கத்தை நடத்தியதோடு சென்னையில் ஐம்பதினாயிரம் பேரைத் திரட்டி மரண தண்டனை ஒழிப்பு ஊர்வலம் நடத்தினார். அதன் விளைவாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினியின் மரண தண்டனை வாழ்நாள் தண்டையாக குறைக்கப்பட்டது.

2000 - கன்னட நடிகர் இராசகுமாரை வீரப்பன் கடத்திய போது காட்டுக்குள் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்று வீரப்பனிடம் பேசி இராசகுமாரை விடுவிக்க உதவினார். இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையே மூளவிருந்த இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அதிரடிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்

2000 - வீரப்பனுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டப்படிக் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் வாடிய 121 அப்பாவி ஊர்க்காரர்களின் வழக்கைச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தி அவர்களில் 117 பேரின் விடுதலைக்கு வழி வகுத்தார்.

2007 - பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் திரட்டும் இயக்கத்தினை நடத்தி, தமிழகமெங்குமிருந்து ஏறத்தாழ ரூபாய் 1 கோடி பெறுமானமுள்ள பொருட்களைத் திரட்டினார். அப்பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப இந்திய அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பல கட்சியினரை ஒன்று திரட்டி நாகப்பட்டினத்திலும், இராமேசுவரத்திலும் படகுப் பயணப் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் சாகும் வரை பட்டினிப் போராட்டம் மேற்கோண்டார்.

இவ்வாறு தமிழ் சமூக சேவை செய்து வந்த நெடுமாறன் ஐயா தன்னுடைய 80 வயதில் உலகத் தமிழர் ஒன்றுபட வேண்டும் என்ற அடிப்படையில் முள்ளிவாய்க்கால் முற்றம் தஞ்சையில் எழுப்பினார். இதன் மூலம் உலகத் தமிழர்கள் தங்களுக்கான ஒரு கோவில் அமைந்து விட்டதை கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர். தமிழர் ஒற்றுமையை பொறுக்காத இந்திய , தமிழக அரசு தமிழர்களின் அடையாள சின்னமான முற்றத்தை இடிக்க எத்தனித்தது. இதை தடுக்க முயன்ற நெடுமாறன் ஐயா உட்பட 82  பேர்களையும் சிறையில் அடைத்தது.

இப்படி தமிழர் விரோதப் போக்கை அரசு கடைபிடிக்க காரணம் தமிழ் நாட்டில் தமிழர் அல்லாதவர் பன்னெடுங்காலமாக ஆட்சி செய்து வருவதால் தான். இனியும் தமிழர் விரோத சக்திகளை தமிழ் நாட்டில் ஆட்சி செய்ய அனுமதித்தால் , வருங்காலத்தில் தமிழர்கள் எவரும் தமிழ் நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இன்றே நாம் சூளுரைப்போம். தமிழகத்தை இன உணர்வுள்ள தமிழரையே ஆள வைப்போம். வேற்றின மக்களின் ஆதிக்கத்தை வேரறுப்போம்.

ஒன்றாக வேண்டும் தமிழர்..
வென்றாக வேண்டும் தமிழ்...

உடலை எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கணுனா... எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க...


உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக் கூட எளிதில் தீர்த்துவிட முடியும்.

பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்றால், உடல் பருமன், தொண்டைப் புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது.

இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் சொல்ல மறந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சரியான குடலியக்கத்திற்கு...

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

தொண்டை புண்ணை சரிசெய்ய...

எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.

இளமையை தக்க வைக்க...

எலுமிச்சை அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க...

எலுமிச்சையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

எலுமிச்சையில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்தவிதமான நோய் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

கொழுப்பை குறைக்க...

எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும். எனவே உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

குமட்டலை போக்க...

சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம்.

வாத நோயை சரிசெய்ய...

எலுமிச்சையில் நீர்ப்பெருக்கப் பொருள் அதிகம் உள்ளது. அதாவது, எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது.

புற்றுநோயை தடுக்க...

அனைவருக்குமே எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது என்று தெரியும். அதேப் போன்று இதில் பல வகையான புற்றுநோயை தடுக்கும் பொருளும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயத்திலிருந்து விடுபடலாம்.

தலைவலியை போக்க...

உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் இருந்தால் வருவது தான் தலைவலி. இத்தகைய தலைவலியைப் போக்குவதற்கு, எலுமிச்சை டீ மிகவும் சிறந்ததாக இருக்கும்.

நாடாப்புழுக்களை அழிக்க...

குழந்தைகளுக்கு வயிற்றில் நாடாப்புழுக்களானது இருக்கும். இவ்வாறு வயிற்றில் புழுக்கள் இருந்தால், வயிற்று வலி மற்றும் வழக்கத்திற்கு மாறாக மலம் கழிக்க நேரிடும். இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். எப்படியெனில் எலுமிச்சையில் புழுக்களை அழிக்கக்கூடிய அளவில் சக்தியானது உள்ளது.

உணவை செரிப்பதற்கு...

அனைவருக்குமே செரிமானப் பிரச்சனை அவ்வப்போது வரும். இவ்வாறு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் குணமாகிவிடும்.

உடலை சுத்தப்படுத்த...

தினமும் உடலில் நச்சுக்களானது பலவாறு உள்ளே நுழையும். உதாரணமாக, ஜிங்க் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றின் மூலம் நுழையும். ஆனால் அத்தகைய நச்சுக்களை போக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

பற்களை ஆரோக்கியமாக வைக்க...

எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

காயங்களை குணப்படுத்த...

உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அப்போது அதனை குணமாக்குவதற்கு, அன்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, காயங்கள் எளிதில் குணமாகிவிடும்.

முகப்பருவை போக்க...

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒரு சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எனவே தான் சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.

கல்லீரல் பிரச்சனைக்கு...

எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

பிறப்புறுப்பை சுத்தமாக்க...

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த பயமாக உள்ளதா? அப்படியெனில், கெமிக்கல் இல்லாத இயற்கைப் பொருளான எலுமிச்சையைக் கொண்டு சுத்தம் செய்தால், பிறப்புறுப்பில் எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருக்கும்.

கண் பிரச்சனையை போக்க...

எலுமிச்சையில் ரூடின் என்னும் பொருள் உள்ளது. ஆகவே எலுமிச்சை உணவில் சேர்த்தால், கண் பார்வை கூர்மையாவதோடு, ரெட்டினாவில் உள்ள பிரச்சனைகளையும் சரிசெய்யலாம்

சிறுநீரகக் கற்களை கரைக்க...

எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள், எலுமிச்சை ஜூஸை அவ்வப்போது குடித்து வந்தால், சிட்ரிக் ஆசிட்டானது சிறுநீரகக் கற்களை கரைத்து விடும்...

பலி – தமிழர் அறிவியல்...


தமிழர்கள் வாழும் கிராமங்களில் அடிக்கடி காணும் ஒரு காட்சி குலதெய்வ கோவிலில் ஆட்டையோ , சேவலையோ கழுத்தை அருத்து பூசாரி ஒருவர் இரத்தம் குடித்து குறி சொல்லுவார், அந்தநேரம் அவரின் உடல் துடித்தாடும் , அசுர பலம் அவருக்கு உண்டாகும், தைரியம் உண்டாகும், சிந்தனை கூர் அடையும், ஒருவித பதட்டம் ஏற்பட்டு அவரை அறியாமல் ஒரு ஆட்டம் ஆடுவார்…

இதை தமிழர்கள் சாமி ஆடுதல், முருகு, கருப்பு ஆடுதல் என பல்வேறு பெயர்களில் அழைப்பதுண்டு.. பலர் இதை ஒரு காட்டுமிராண்டி தனம் எனவும், அறிவுக்குப் புறம்பான உயிர்நேயம் அற்ற தனம் எனவும் தமிழர்களே பேசி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் வாழ்ந்த அனைத்து இன மக்களும் இதை கடைபிடித்தார்கள் , குறிப்பாக இஸ்லாமிய மக்கள் இதை இன்றளவும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

அப்படி என்ன இந்த பலி கொடுத்தலில் அறிவியல் இருக்கப்போகிறது ? அதை ஏன் உலகம் முழுவதும் மக்கள் கடைபிடித்தார்கள் ? இதற்கான பதிலில் தமிழரின் போர் மரபு மறைந்துள்ளது.

இயற்கையில் அனைத்து விலங்குகளிடமும் அட்ரினலின் (adrenaline) அல்லது எபிநெப்ரின் (Epinephrine) என்ற இயக்குநீர் (hormone) உள்ளது.

ஒரு விலங்கு அபாயத்தை உணர்ந்தால் இந்த இயக்குநீர் அதன் உடம்பில் சுரக்க ஆரம்பிக்கும். இந்த இயக்குநீர் அந்த விலங்கு தப்பித்து ஓட அல்லது எதிர்த்து சண்டையிட தேவையான உடனடி உடல் பலத்தை அந்த விலங்கிற்கு கொடுக்கும்.

அதாவது ஒரு விலங்கு தனக்கு ஆபத்து வருவதை உணர்ந்தவுடன் அட்ரினலின் அட்ரினலின் சுரப்பிகளில் சுரந்து இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பரவும், அட்ரினலின் முதலில் நரம்பு மண்டலத்தை வேகமாக இயங்க உந்துகிறது , அது அந்த விலங்கின் செயல், சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனை கூர்மை படுத்துகிறது.
நுரையீரல்களின் திறனை அதிகரித்து மூச்சு திறனை வேகப்படுத்தும், இதயத்துடிப்பை அதிகரிக்கும், இரத்தத்தை கால் நோக்கி நகர்த்தி வேகத்தை கூட்டும், தசைகளை இறுக்கம் பெற செய்து உடல் பலத்தை அதிகரிக்கும்.. மற்றும் உடல்கொழுப்பை உடனடியாக கரைக்கும், உடலில் உள்ள சக்கரையை உடனடியாக செரித்து அந்த விலங்கு சன்டையிடவோ அல்லது தப்பிக்கவோ தேவையான பலத்தை உடனடியாக தரும்.

இந்த இயக்குநீர் மனித உடலில் சுரந்தாலும் அதை அதிகரிக்க தமிழர்கள் கண்ட நுட்பம் தான் பலி கொடுத்து இரத்தம் குடித்தல், விலங்கின் கழுத்தை அடிப்பக்கமாக அறுத்தால் அந்த விலங்கின் இரத்தத்தில் பயத்தின் காரணமாக அதிகப்படியான அட்ரினலின் சுரந்து கலந்திருக்கும்.. அதை அப்படியே குடிப்பதின் மூலம் அசூர பலம் உடனடியாக நம் உடலில் உண்டாகும்..

சமீபமாக விக்ரம் நடித்து வெளியான இருமுகன் என்ற இல்லுமினாட்டி படம் இதை மையப்படுத்தி வெளியான படமே.

ஆதிகாலத்தில் தமிழர்கள் போருக்கு தயாராகும் முன் இதற்காகவே பலி கொடுத்தார்கள்.

அட்ரினலின் நமது சிந்தனையையும் அதிகரிப்பதினால் அதை சமுக பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுத்தினார்கள் இதுவே குறி கூறுதலாகவும்.. சாமியாடுதலாகவும் தோன்றுகிறது..

பலி கொடுத்தலும் தமிழர் மரபே.. அதுவும் ஓர் அறிவியலே.. அதை நாம் ஒருபோதும் இழந்துவிட கூடாது..

இதையும் தடைசெய்ய இலுமினாட்டிகள் தொடர்ச்சியாக பல முறை முயற்சி செய்து வருகிறார்கள்..

நம் அடையாளங்களை அழியாது காப்போம். உண்மையை ஆராய்வோம்...

டூபாக்கூர் நியூஸ் 7 தொலைக்காட்சியே... இதைப் பற்றி எப்போது விவாதம் நடத்தப் போகிறாய்...


வருமான வரித்துறை 95℅ வடயிந்தியர்...


 கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த "வருமான வரித்துறை அதிகாரி" மற்றும் "உதவி வருமான வரித்துறை அதிகாரி" ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் சென்னை மண்டலத்திற்கு தேர்வான "வருமான வரித்துறை அதிகாரிகள்" 92 பேர்.

இதில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்.

அதேபோல சென்னை மண்டலத்திற்கு தேர்வான "உதவி வருமான வரித்துறை அதிகாரிகள்" 233 பேர்.

இதில் 17 பேர் மட்டுமே தமிழர்கள்.

எந்த மாநிலத்தை எடுத்தாலும் மத்திய அரசு பதவிகள் அனைத்திலும் ஹிந்தி பேசுவோரே நிறைந்து வழிகின்றனர்.

அத்தனைபேரும் குறுக்குவழியில் நுழைந்த திறமையற்ற நபர்கள்...

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு...


லார்ட் லபக் தாஸ் யார்?


உண்மையில் லார்ட் லபக் தாஸ் ஒரு ஆங்கிலேயர் கிடையாது.

இந்த சொல் 1900 களில் சென்னையில் பெரிய நிலம் வாங்கி வசதியாக வாழ்ந்த குஜராத்திகளைக் குறிக்கும்.

(அந்த நிலம் இன்றும் பார்டர் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
குஜராத்திகள் இப்போதும் இருக்கிறார்கள்).

அவர்கள் பெயர் லாட் என்று தொடங்கி தாஸ் என்று முடியும்.

இன்றும் L.G.N road, V.N.Doss road, Mohan doss road, Gopal doss road ஆகியன இவர்களின் பெயரிலேயே அமைந்துள்ளன...

சுத்தமான தேனை எப்படிக் கண்டு பிடிக்கலாம்?


ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது.

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால் தூய தேனைக் கண்டு பிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு..

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக...

இறந்தது சகோதரர் அன்வர் மட்டும் அல்ல.. மனிதாபிமானமும் தான்...


சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...


வரக்கொத்தமல்லி - அரை கிலோ...
வெந்தயம் - கால் கிலோ...

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்து கொள்வதற்காக.

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும்.

பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...

இது நம் பிள்ளைக்கான எதிர்கால பாதுகாப்புகானது என்று தொடங்கப்பட்ட வணிகம்...


இதற்கென்று supervisor, sample collecter,  என நிறையபேர் இருக்காங்க...

தனியார் மருத்துவமனையில் மட்டும் தடம் பதித்த இந்த அமைப்பு அரசுபணியில் இருக்கும் தனியார் மருத்தவமனை உரிமையாளர்களால் மெல்ல தனக்கென தடம் பதித்து கொண்டு இருக்கிறது...

இதற்கான விளம்பரம் மிகபெரிய பிரபலங்களை வைத்தே எடுக்கப்படுகிறது... காரணம் பிரபலங்கள் எதை சொன்னாலும் சிந்திக்காமல் ஏற்றுகொள்வோம் என்பது அனைத்து வணிகனும் அறிந்ததே...

பிரபலங்கள் என்றுமே பெரு நிறுவனங்களின் விளம்பரதூதர்கள் மட்டுமே.இதனை உணர்ந்து செயல்படுங்கள்....

தொப்புள்கொடியை பாதுகாக்க நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை குறித்த நேரத்தில் கொடுத்தாக வேண்டும்...

எனக்கு தெரிந்து நமது தொப்புள் கொடியை பதப்படுத்தி அதனை தாயத்தில் பத்திரப்படுத்தி வைப்பார்கள் என்று படித்திருக்கிறேன்...

ஆனால் இன்று நம் பாரம்பரியத்தை மறந்துவிட்டோம் அதனால் அவர்கள் இதனை வணிகமாக மாற்றிவிட்டார்கள்...

இவர்களின் ஆயுதம் நம் அறியாமையும், குழந்தையின் மேல் உள்ள அன்பும் தான்.அவர்கள் சொல்லும் எதையும் ஏற்கும் அளவில் மூளைச்சலவை செய்வார்கள், சில சமயம் குழந்தையின் உடல்நலனில் பிரச்சினை என்று பயம்முறுத்தவும் செய்வார்கள்...

கருஉருவாவதில் இருந்து கரு வளர்ச்சி அடைந்து குழந்தைபிறந்து வளரும் வரையில் மருத்துவ வணிகர்களின் பங்கு மிக அதிகம்...

அவர்களின் சோதனை பொருளாகவே நம் பிள்ளைகள் பிறப்பிக்கப்படுகிறார்கள்...

இந்த செயல்முறையை முடிந்த அளவு தவிர்திடுங்கள்...இது தேவையற்ற செலவு தான்... இந்த தொப்புள் கொடி மாபெரும் வியாபாரம்...

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது... உளாவியில் தேடி பாருங்கள் இந்த விடயம் சார்ந்து ...

எதிர்வரும் காலங்களிலாவது நமக்கு தெரிந்த விடயங்களை அடுத்த தலைமுறைக்கு கையளித்து செல்வோம்...

நல்ல நீரூற்று என அறிவது எப்படி.....?


மனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்.

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி?

அதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்...

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று.. கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி?

அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

இலங்கை என்ற நாடு அல்ல அது தமிழ் ஈழம்...


உலக அரசியலும் தமிழர்களின் ஈழம் எனும் அரசியலை அடுத்த பதிவில் காணலாம்..

ஈழம் ஏன் அழிக்கப்பட்டது..? எதற்கு உலக அரங்கில் நாம் அகதிகளாக அழைக்கப்பட்டோம்..?

தமிழர் என்பதாலேயே அழித்தார்கள் என்று ஏன் ஊடகங்களில் தொடர்ச்சியாக காட்டப்பட்டது என்பதை அடுத்த பதிவில் காணலாம்...

தமிழ்மறை திருமந்திரம் கற்போம்...


வேற்றுமையை ஒழிப்போம்..
ஒற்றுமையை வளர்ப்போம்..

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே - ஆசான் திருமூலர்.

பிறப்பால் எவரும் பிராமணர் ஆகமுடியாது.

எவ்வுயிரையும் தன்னுயிர் போலப் போற்றி, தன் எண்ணம், தான் செய்கின்ற செயல் எதிலும் அறவழியைக் கடைப்பிடைத்து, இறையை அடைந்த ஞானிகள் / சித்தர்களே மெஞ்ஞான அந்தணர் ஆவர். இன்று மனிதரில் சிறு கூட்டம் பிற மனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறிச் சில வேத, ஆகமங்களைப் பொருளுணராது கற்றுத் தம்மைத் தாமே அந்தணர் என்றும், உயர்குலத்தோர் என்றும் பொய்யுரைக்கின்றனர். இவர்கள் முத்திநெறி அறவே அறியாத மூர்க்கர் கூட்டம் ஆகும். இவர்கள் சொல்லும், செயலும் படுபாதகம் ஆகும்.

பேர் கொண்ட பார்ப்பான்
பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப்
பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப்
பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி
தெரிந்து உரைத்தானே.
- ஆசான் திருமூலர் -

தம் பெயரில் மட்டுமே(பிறப்பால்) பார்ப்பான்/ பிராமணன்/ அந்தணன் என்போர் எம்பிரானை அர்ச்சனை செய்யத் தகுதியற்றவர்கள். அப்படி அவர்கள் செய்தால் அந்த நாட்டுக்கும், அரசனுக்கும் தாங்கொணா வேதனைகளும், நாட்டு மக்களுக்கும் பொல்லாத வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை தன்னாசானான சித்தபெருமான் நந்தீசர் உரைத்ததாகக் கூறுகிறார் ஆசான் திருமூலர். இதன் மூலம் ஆசான் திருமூலர் சொல்வது பிறப்பால் / பெயரால் யாரும் இறையை அர்ச்சிக்கும் தகுதியைப் பெறமாட்டார். மெய்யாக அறவழியில் நிற்கும் அனைவருக்கும் இறையை அர்ச்சிக்கும்(பூசிக்கும்) தகுதியுண்டு. அவர்களே ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலக்க வல்ல 'அறவாழி அந்தணர்' (சித்தர்/ஞானிகள்) ஆவார்கள்.

இங்கு யாருமே பிராமணர் கிடையாது. பிறப்பால் யாரும் பிராமணர் ஆகமுடியாது

சத்தியம் இன்றித்
தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும்
உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப்
பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர்
பிராமணர் தாம்அன்றே.
-ஆசான் திருமூலர்-

சத்தியம், ஞானம், இறையுணர்வு, இறையன்பு எதுவுமே இருக்காது. ஆனால், தம்மைத் தாமே உயர்ந்த பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் ஆசான் திருமூலர். இது பிறப்பில் தாமே பிராமணர் என்றும், வார்த்தையில் மட்டும் எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகக் கூறிச் சகமனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறி உலகை ஏமாற்றும் பித்தேறிய மூடருக்காகக் கூறப்பட்டுள்ளது.

பிறவாநெறி (சகாக்கல்வி / மரணமில்லாப் பெருவாழ்வு) அறிந்த ஆசான் திருமூலரின் குருவாகிய ஆசான் நந்தீசர் போன்ற, ஆதியாகிய இறையுடன் இரண்டறக் கலந்த ஞானிகள்/ சித்தர்களே 'அறவாழி அந்தணர்கள்' ஆவார்கள்.

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.
-ஆசான் திருமூலர்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
-ஆசான் திருவள்ளுவர்

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு அறவழி வாழ்பவர் எவரோ, அவரே அந்தணர்.

யாரையும் நோகடிப்பதல்ல எமது நோக்கம். தமிழர் வேதங்களான திருமந்திரம், திருக்குறள், திருவாசகம், திருவருட்பா போன்ற எண்ணற்ற தமிழ்மறை நூல்களில் மனிதரில் எந்தவிதப் பிரிவினையும் பிறப்பால் இருப்பதாக இல்லை. உண்மையை உரக்கச் சொல்வதே நம் பணி.

ஒன்றே குலம், ஒருவனே தேவன்
- ஆசான் திருமூலர்.

வேற்றுமையை ஒழிப்போம்...
ஒற்றுமையை வளர்ப்போம்...

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே.
- ஆசான் திருமூலர்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் என்றார். எல்லா தெய்வத்தையும், ஒன்றாக பார்க்கக்கூடிய அறிவை உனக்கு தலைவன் தந்திருக்கின்றார்.

தலைவனை அறிமுகப்படுத்த வேண்டும். தலைவன் ஆசான் ஞானபண்டிதன்தான் என்றும், ஒருமுறை ஆசானை நினைத்தாலே போதும், செய்த பாவங்களையெல்லாம் பொடியாக்கி, வாழ்க்கையில் வெற்றி பெறச்செய்வான்.

ஆன்மா ஆக்கம் பெற ஞானபண்டிதன் சுப்பிரமணியர் நாமத்தை ஜெபிப்போம். ஒருவன் பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தினால் மட்டுமே ஞானிகள் திருவடிகளை பற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு கோடி தவம் செய்த மக்கள்தான் ஆசான் அகத்தீசரை வணங்கி ஆசி பெறலாம். ஞானிகளை நினைக்க முடியும். இல்லையென்றால் அறிய முடியாது.

மரணமில்லாப்பெருவாழ்வை தரக்கூடிய ஆசான் ஞானபண்டிதனை நீ அறிந்திருந்தாலும், அவர்களுக்கு அது புரியக்கூடிய காலம் வரவில்லை. அந்த வாய்ப்பு அவனுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஆசான் திருமூலர் திருவடிகள் போற்றி...

வருங்காலம்...


உங்கள் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் எதுவும் நிச்சயமாகக் கூற முடியாது. சொல்லவும் கூடாது.

வருங்காலம் என்பது ஒரு திறந்த வெளி.

இதை அறிந்து கொள்ளும் மனிதனின் முயற்சி நகைப்புக்குரியது.

ஆனால் மனிதன் இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான்.

இறந்த காலத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான்.

இது ஒருக்காலும் நடக்காது.

நீங்கள் எப்போதும் நிகழ்காலத்துக்கு வருவதில்லை.

நடந்து முடிந்ததை  நீங்கள் சீர் செய்ய முடியாது.

நடக்கக் கூடியதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.

வருங்காலத்தை உங்கள் அறிவால்  தீர்மானிக்க முடியாது. வருங்காலத்தைப் பற்றி எதுவும் நிலையில்லை.

ஆனால் மனிதன் வருங்காலத்தை முன் கூட்டியே தெரிந்து  கொண்டு அதைத் தனக்கு சாதகமாகச் செய்ய முயலுகிறான்.

இது முட்டாள் தனம்.

நீங்கள் அதை முன்பே அறிந்து கொண்டால் அது வருங்காலமில்லை..

அது இறந்த காலமாகி விடுகிறது...

மும்பை தாக்குதலில் நேரடி தொடர்புடைய நடிகர் சஞ்சய்தத் கைதான போது யார் அந்த நடிகர் என்று கேள்வி கேட்காமல் பீலிங் பண்ணிய மராட்டிய ரஜினிகாந்த்...


இன்று அப்பாவி தமிழர்கள் அதுவும் மறைமுகமாக வழக்கில் சிக்கவைக்கப்பட்டு 28 வருடம் சிறையில் இருப்பவர்களை பார்த்து எந்த ஏழு பேர் என்று கேட்கிறார்.

ஆகவே தான் நாங்கள் சொல்லுகிறோம், தமிழகத்திற்கு தேவை எங்கள் வலிகள் புரிந்த தகுதியான மண்ணின் மைந்தன்...

நெல்லிக்காயும், நோய் எதிர்ப்புத் திறனும்...


நெல்லிக்காயில் உயிர்ச்சத்து – சி (Vitamin C) அதிகமாக உள்ளது.

உயிர்ச்சத்து – சி செல்களின் இனப் பெருக்கத்தில் (Cells Reproduction) முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் உயிர்ச்சத்து – சியில் ஆண்டி – ஆக்சிடன்ட் (Anti – Oxidant) தன்மை அதிகமாக உள்ளதால் நோய் வராமல் தடுக்கிறது.

எனவே கற்ப மூலிகையாக கருதப்படுகிறது...

வாங்கும் பொருளை பாத்தாலே தெரியும் அது உபயோகபடுத்தியதா இல்லையா என்று...


அதை கூட கவனிக்க நேரமில்லாமல்  பணத்தை கொட்டி எல்இடி டிவியோ, வாஷிங் மெஷினோ, ரெஃப்ரிஜ்ரேட்டரோ வாங்கிட்டு..

அப்றம் பழுதாய்டுச்சுன்னு உங்க தலையில் மிளகா அரைச்சிடுவானுக...

மெல்லோட்டம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்...


மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள்.

விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.

இந்த மெல்லோட்டத்தை ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.

மெல்லோட்டம் பயிற்சியில் ஈடுபடும் முன் பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோ மீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்..

மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.

நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.

இதயத் தசைகள் வலுவாக்குகிறது. இதயம் சுருங்கி விரியும் போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.

எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.

முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.

மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்...

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது அந்நாட்டு உச்சநீதிமன்றம்...


இறப்பிற்கு 50% காரணமான கொசுக்கள் பற்றி தெரிந்ததும் தெரியாததும்...


உலகத்திலேயே மிக ஆபத்தான பூச்சி எது என்று பார்த்தால்… நாம் நினைப்பது போன்று அமேசான் காடுகளிலோ அல்லது ஆப்பிரிக்க காடுகளிலோ இருக்கும் ஒரு இனம் தெரியாத ஜந்து அல்ல…

நம்மை சுற்றி இருக்கும் நாம் அறிந்த  நுளம்பு/கொசு தான்... உலகிலேயே மிக ஆபத்தான பூச்சியாகும்!

மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை காய்ச்சல், மேற்கு நைல் வைரஸ் போன்ற எண்ணிலடங்காத நோய்கள் பரவுவதற்கு இந்த கொசுக்கள் காரணமாக அமைகின்றது.

வருடா வருடம் லட்சக்கணக்கான மக்களின் இறப்பிற்கு இந்த கொசுக்கள் காரணமாக இருக்கின்றன.

கற்காலம் முதல் இன்றுவரை உலகில் வாழ்ந்த மனிதர்களில் 50% இறப்பிற்கு கொசுக்கள் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இனி கொசுக்களை பற்றி தெரிந்த, தெரியாத சுவாரஷ்யங்களைப் பார்ப்போம்…

1. பெண் கொசுக்கள் மாத்திரமே மனிதரையும் விலங்குகளையும் கடிக்கும். ஆண் கொசுக்கள் பூக்களில் இருந்து உணவைப் பெற்றுக்கொள்ளும்.

2. இது அனைவருக்கும் தெரிந்த விசயம். ஆனால், பெண் கொசுக்கள் மனிதரை தாக்குவதற்கான காரணம் தமது இனப்பெருக்க முட்டைக்குத் தேவையான புரதத்தை (protein ) பெற்றுக் கொள்வதற்காகவே.

3. சில இடங்களில் இருக்கும் கொசுக்கள் மனிதரை கடிப்பதே இல்லை (பெண் கொசுவாக இருந்தாலும்) அவை விலங்குகள் மற்றும் பறவைகளை மட்டுமே கடிக்கின்றன.

4. கொசுக்கள் மணிக்கு 1.5 – 2 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.

5. இது ஏனைய பூச்சிவகைகளுடன் ஒப்பிட்டால் மிகவும் மந்தமானது. போட்டி வைத்தால் கொசுக்கள் கடைசியாகவே வரும்.

6. ஒரு செக்கனிற்கு 300-600 தடவைகள் தமது இறக்கைகளை அடிக்கும்.

7. இதன் விளைவாகவே உங்கள் தலைப்பகுதியை கொசு அண்டும் போது ஒரு வித ஒலி ஏற்படுகின்றது.

8. பொதுவாக வீடுகளை அண்டியே கொசுக்கள் வாழும். ஆனால் சிலவகை கொசுக்கள் 160 கிலோமீட்டர் தூரத்தில் கூட தமது இனப்பெருக்கத்தை நடத்தும். (நீரிலேயே தமது குஞ்சுகளை இடும்.)

9. டைனோசர் காலத்தில் இருந்தே கொசுக்கள் இருந்து வந்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். தென் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகி உலகம் முழுவதும் பரந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

10. கொசுக்கள் கடித்து இரத்தத்தை உறிஞ்ச முதல் சிறிய அளவில் சிறு நீரை கழிக்கின்றன. சில வேளைகளில் கடித்த இடத்தை சுற்றி ஈரமாக இருப்பதை உணர முடியும்.

11. கொசுக்கள் ஆண்களை விட பெண்களையே அதிகம் கடிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

12. பண்டைய கொசுக்கள் தற்போது இருக்கும் கொசுக்களை விட 3 மடங்கு உருவில் பெரியது.

13. 75 அடி தூரத்தில் இருக்கும் ஒரு மனிதரை சரியாக இனங்கண்டு கடிக்கும் மோப்ப சக்தி கொசுக்களுக்கு உண்டு.

14. ஒரு கொசு 5-6 மாத காலம் வரை வாழும் தகுதியுள்ளது.

15. கொசுக்கள் 6 கால்களை உடையன.

16. ஒரு கொசுவின் சாதாரண நீளம் 16 மில்லிமீட்டர்களாக இருக்கும்.

17. 2700 – 3500 வகையான கொசுக்கள் உலகம் பூராவும் இருக்கின்றன.

18. mosquito என்பது biting fly என்பதையே குறிக்கின்றது...

பாஜக மோடிக்கு இரகசியமாக ஆதரவளிக்கும் மராட்டியன் ரஜினி...


தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனை துளி...


சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும்...

தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும்.

பயந்து பயந்து பதற்றத்துடன் வாழ வேண்டும்.

படிப்படியாக அழிந்து போக வேண்டும்..

ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை...

– எம் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் ..

உலகில் முதலில் தோன்றியது நம் தமிழே...


இலுமினாட்டி களின் டைட்டானிக்கும் உலக அரசியலும்...


இந்த உலக அரசியல் பற்றிய விழிப்புணர்வு நம்மை இலுமினாட்டிகளின் மாய வலையிலிருந்து தப்பிக்க வைக்கும்.

அவர்கள் நம் வாழ்வை சீரழித்து வருகிறார்கள் எல்லா வழிகளிலும். இப்பொழுதைய பதிவில் அட்லண்டிக் பெருங்கடல் பேரழகாய் ஒய்யாரமாக பயணம் செய்த டைட்டனிக் பற்றி பார்ப்போம்...

இவளின் ஒய்யாரப் பயணம் 15 ஏப்ரல் 1912, அதிகாலை 2:20 ல் நிறைவு ஏய்தியது..

இந்நிகழ்விற்கு காரணமாகவும் இலுமிணாட்டிகளே இருந்துள்ளனர்..

இவர்கள் எப்பொழுதுமே ஒரு கல்லில் பல மாங்கா அடிப்பவர்கள். விழுந்த ஒரு மாங்காவை பற்றி மட்டும் இதில் பார்ப்போம்...

US Federal Reserve bank...

இந்த மாங்காவை பற்றி தான் பார்க்க போகிறோம்..

இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே ரிசர்வ் வங்கி உருவாக்கிய ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தார் அடுத்து அமேரிக்காவுக்கு குறிவைக்கின்றனர்.

நம்ம இலுமிணாட்டிகள் அவங்க இருப்பது அனைவருக்கும் தெரிய கூடாதுனு முடித்தவரை சட்டப்படி தான் செய்வார்கள்.

சில நேரம் சட்டங்களை உருவாக்கியும் செய்வார்கள்.

அதன்படி யூனிடட் சிடேட் பெடரல் ரிசர்வ் அமைக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தாங்க. அப்போ அதற்கு எதிராக நின்றவர்கள் முக்கியமாக மூன்று பேர்.

Benjamin Guggenheim,  Isa strauss, Jecob Astor...

இவர்களால் 1912 ஏப்ரல் மாத தொடக்கத்தில்  அந்த வங்கி திட்டம் ஊத்தி மூடப்பட்டது..

TITANIC SECRET...

டைட்டானிக் பயணம்.. அதே ஏப்ரலில் இம்மூவரும் டைட்டானிகில் பயணம் செய்தனர். மூன்று பேரும் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் 15 தேதி கப்பலோடு மூழ்கினர்..

மீண்டும் ரிசர்வ் வங்கி டிசம்பர் 1913 ல் US Federal Reserve Bank செயல்பட ஆரம்பித்தது. இதுவே விழுந்த மாங்காய்களில் ஒன்று..

எப்போதுமே சொல்லிட்டு செய்வது இலுமிணாட்டிகள் இதையும் அப்படி தான் செய்தார்கள்..

Morgan Robertson, 1898ல Futility என்று ஒரு நாவல் வெளியிடுகிறார்..

அதில் டைட்டன் என்ற மூழ்கடிக்க முடியாத கப்பல் ஏப்ரல் மாதத்தில் ஒரு பனிபாறையில மோதி மூழ்குது,  உயிர் காக்கும் படகுகள் குறைவா இருந்ததால நிறைய பேர் இறந்து போறாங்க. இது கதை..

இது பதினான்கு ஆண்டுகள் கழித்து உண்மையானது டைட்டானிக்...

நான் ஜெகப் அஸ்டர் என சொல்லியதை கவனித்தீர்களா..

அஸ்டர் குடும்பமும் இலுமிணாட்டி குடும்பங்களில் ஒன்று..

அப்போ ஏன் இவரும் அந்த வங்கி வரவிடாமல் தடுக்க முயர்ச்சித்தார்..

இதை அடுத்த  பதிவில் பார்க்கலாம்...

பாக்கெட் பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து உணவு பொருட்களுக்கும் "FSSAI" உரிமம் (License) கொடுத்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...


முகத்தில் கரும்புள்ளிகளைப் போக்கும் மாஸ்க் மருத்துவம்...


மூக்கின் ஓரங்களில் தங்கியுள்ள கரும்புள்ளிகளை தேய்த்து தேய்த்து சோர்ந்து விட்டீர்களா? அப்படியெனில், அதனைப் போக்க வேறு என்ன வழி உள்ளது என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

சரி, இந்த கரும்புள்ளிகள் எப்படி வரு கிறதென்று தெரியுமா?

சருமத்துளைகளானது எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்களால் அடைக்கப்படுகிறதோ, அப் போது தான் கரும்புள்ளிகள் உருவாகின்றன. பொதுவாக இந்த கரும்புள்ளிகள் மூக்கு, தாடை, நெற்றி மற்றும் கன்னங்களில் அதிகம் காணப்படும்.

ஏனெனில் அந்த இடங்களில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால், அந்த பகுதிகளில் அதிகம் ஏற்படுகிறது. எனவே தான் முகத்திற்கு அவ்வப்போது மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை மேற்கொள்வது இன்றியமையாததாக உள்ளது.

அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி ஸ்கரப் செய்ய வேண்டாம். வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, அருமையான முறையில் கரும் புள்ளிகளை போக்கலாம். இப்போது முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்குவதற்கு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும் என்று பார்ப்போம்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் பவுடரை பாலில் கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், கரும் புள்ளிகளானது எளிதில் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

தயிர் :

தயிரில் தேன் மற்றம் கடலை மாவு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய வைத்து, தண்ணீர் ஊற்றி மீண்டும் ஸ்கரப் செய்ய வேண்டும்.

எலுமிச்சை :

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் இருப்பதால், அதனைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசையுடன், கரும்புள்ளிகளும் நீங்கிவிடும். மேலும் முகமும் வெள்ளையாகும்.

ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தை ஸ்கரப் செய்து, உலர விட்டு கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடாவும் ஒரு சூப்பரான கரும்புள்ளியைப் போக்கும் பொருள் தான். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, ஈரமான முகத்தில் அதனைக் கொண்டு மசாஜ் செய்தால், கரும்புள்ளிகளுடன் முகப்பருக்களும் நீங்கி விடும்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


நினைவில் நிறுத்த சில உண்மைகள்...


இது வரையில் ஆழ்மன சக்திகள் அடையத் தேவையான அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் விளக்கமாகப் பார்த்தோம். ஆழ்மன சக்திகளில் ஒன்பது வகைகளில் அடிப்படையான ஒருசில சக்திகளை அடையும் வழிகளையும் பார்த்தோம். உயர் உணர்வு நிலை, ஒருமுனைப்படுத்தப்பட்ட மனது, எண்ணங்களில் கட்டுப்பாடு, மனதில் உருவகப்படுத்தி எதையும் தெளிவாகக் காணும் பழக்கம் ஆகியவை ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சக்தி வாய்ந்த உபகரணங்கள். அந்த உபகரணங்களை வைத்துக் கொண்டு, முயல்பவர்களுக்கு மற்ற சக்திகளையும் பெறத் தேவையான, இனி மேல் போக வேண்டிய, வழிகள் தானாகப் புலப்படும்.

ஆவிகளுடன் பேசுதல், தொடர்பு கொள்ளுதல், மற்றவர்களை வசியம் செய்து தங்கள் விருப்பப்படி நடக்க வைத்தல் போன்ற சக்திகளையும் சிலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். பதஞ்சலியோ தன் யோக சூத்திரங்களில் ஆழ்மன சக்திகளைப் பெற்ற மனிதன் கூடு விட்டு கூடு பாயலாம், மற்றவர்கள் கண்களில் இருந்து மறைந்து போகலாம், தண்ணீரில் மூழ்காமல் இருக்கலாம் என்று எல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறார்.

பதஞ்சலி சொல்லும் பல அதீத சக்திகளுக்கான பயிற்சிகள் கடுமையானவை மட்டுமல்ல, அந்தப் பயிற்சிகள் குறித்த முறையான ஞானம் உள்ளவர்களும் மிகவும் குறைவு. அபூர்வமான சித்தர்கள், யோகிகள் மட்டுமே அறிந்த, கடைபிடிக்க முடிந்தவையாக அந்தப் பயிற்சிகள் கருதப்படுகின்றன. மொத்தத்தில் ஆழ்மன சக்தியால் சாதிக்கக் கூடிய அற்புதங்களின் எல்லை மனிதனின் கற்பனையின் எல்லை என்றே சொல்லலாம்.

இத்தொடரில் நாம் பார்த்த ஆழ்மன சக்தி பெற்றவர்கள் பெரும்பாலும் தற்செயலாக அந்த சக்தியைப் பெற்றவர்களாக இருந்ததைப் பார்த்தோம். ஏதோ ஒரு வகையில் அந்த குறிப்பிட்ட சக்திக்கு ‘ட்யூன்’ ஆனவர்கள் அவர்கள். அவர்களில் ஒருசிலர் அப்படி ’ட்யூன்’ ஆன பிறகு அதனை ஒத்த தன்மையுள்ள ஓரிரு சக்திகளையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சிறப்புத் தன்மை அந்த ஒன்று அல்லது ஓரிரண்டு சக்திகளுடன் நின்று போகிறது. அவர்கள் எவ்வளவு தான் விருப்பப்பட்டாலும் வேறு ஏதாவது ஆழ்மன சக்தியைப் பயன்படுத்த முயற்சித்தால் அதில் தோல்வியே அடைகிறார்கள். இப்படி ஒரு வரம்புக்குள்ளேயே இருக்க நேர்வது தற்செயலாக ஒரு சக்தியைப் பெற்றவர்களுடைய குறைபாடாகி விடுகிறது. இன்னொரு குறைபாடு என்னவென்றால் அந்த சக்தி திடீரென்று வந்தது போல திடீரென்று போய் விடவும் வாய்ப்பு இருக்கிறது.

முறைப்படி பயிற்சிகள் செய்து படிப்படியாக மனதை பக்குவப்படுத்தி, ஆட்கொண்டு, ஆழ்மன சக்திகளை அடைந்தவர்கள் இப்படி ஓரிரு சக்திகளின் வரம்புகளுக்கு உட்பட்டு தங்கி விட வேண்டிய அவசியமில்லை. அது போல அந்த சக்திகளுக்கு எதிரான செயல்பாடுகள் இல்லாத வரையில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பெற்றிருக்க வேண்டிய நிலையும் இருக்காது. யோகிகள், சித்தர்கள் போல எல்லா ஆழ்மன சக்திகளைப் பெற முடியா விட்டாலும், அடைந்துள்ள முன்னேற்றத்தையும், ஆற்றலையும் பொறுத்து, தங்களிடம் பல விதமான ஆழ்மன சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் பார்க்க பிரமிக்க வைத்தாலும் நிஜ வாழ்க்கைக்கும், நமது முன்னேற்றத்திற்கும் பயன் தராத சக்திகளைப் பெற அதிகமாக ஒருவர் பாடுபடுவது முட்டாள்தனம். உதாரணத்திற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்த சக்தி படைத்த ஒரு சாதுவைச் சொல்லலாம். அந்த சாது ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் முன்னாலேயே மறு கரையில் இருந்து நதி நீர் மீது நடந்தபடியே இக்கரைக்கு வந்தார். அந்த சக்தி பெற நிறைய பயிற்சிகளை நிறைய காலம் செய்து பெற்றதாகச் சொன்னார். ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொன்னார். “காலணா கொடுத்தால் படகுக் காரன் நதியைக் கடந்து இறக்கி விடுகிறான். அப்படிப்பட்ட வேலைக்காக நீங்கள் ஏன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்?”. அவர் கேட்டது போல காலணா சமாச்சாரங்களுக்காக நிறைய கஷ்டப்படாதீர்கள். உங்கள் நிஜ வாழ்க்கைக்கு உதவக்கூடிய, உங்களை மேம்படுத்தக்கூடிய ஆழ்மன சக்திகளைப் பெறவே முயற்சியுங்கள். வெறும் புகழுக்காக ஆழ்மன சக்திகளை வெளிப்படுத்த நினைப்பது ஒருவித மூன்றாந்தர வெளிப்பாடாகவே விஷயமறிந்தோர்களால் கருதப்படுகிறது.

இதை தன்னுடைய நூலில் (A search in Secret India) பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவ ஞானி ப்ரம்மா என்ற யோகியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் காணச் சென்றார். அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்புவதாகச் சொன்னார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதிலும், அவர்களுக்கு சொல்லித் தருவதிலும் என்ன நஷ்டம்?"

ப்ரம்மா சொன்னார். ஐயா அரசன் பொன்னையும், செல்வத்தையும் வீதிகளில் நான்கு பேர் பார்க்க விரித்து வைப்பதில்லை. பொக்கிஷங்களை கஜானாவில் தான் பாதுகாப்பாக வைக்கிறான். அவனிடம் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்லை. அது போல் எங்கள் தேசத்தில் உண்மையான யோகிகள் தங்கள் சக்திகளைப் பொக்கிஷமாகவே பாதுகாக்கிறார்கள். அவற்றைப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்லை. அதன் அவசியமும் அவர்களுக்கு இல்லை. மேலும் எல்லா உன்னதமான கலைகளையும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே யோகிகள் கற்பிக்கவும் முனைகிறார்கள். ஏனென்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கூட தீமையான விளைவுகளைத் தான் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்....

மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள் அவை. ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் இதை நினைவில் வைத்திருப்பது நல்லது. தங்களுடைய பயிற்சிகளையும், அதன் விளைவுகளையும் ரகசியமாகவே வைத்துக் கொள்வதே உத்தமம். ஆரம்பத்தில் இதில் கிடைக்கும் சிறு வெற்றிகள் தரும் மகிழ்ச்சி சாதாரணமானதல்ல. அப்போது இயல்பாகவே பலரிடம் சொல்லி ஆனந்தப்படத் தோன்றும். ஆனாலும் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையும் வரை நாம் பெறும் வெற்றிகளை எல்லோருக்கும் பிரகடனப்படுத்துவது முழுமையான வெற்றிக்கு ஒரு தடையாகவே இருக்கும். ஏனென்றால் அப்படிச் செய்கையில் அந்த ஆழ்மன சக்தியைப் பெறுவதை விடவும் அதிகமாக அதை அடுத்தவருக்கு நிரூபிக்கவும், அவர்களிடம் பெயர் வாங்கவுமே நம்மை அறியாமலேயே நாம் முக்கியத்துவம் தர ஆரம்பிப்போம். இது நமது உள்நோக்கிய பயணத்தை வெளி நோக்கிய பயணமாக மாற்றி திசை திருப்பி விடும். சிலர் பாராட்டுவார்கள். சிலர் நம் சக்திகளைக் காட்டி நம்மை சாமியார்களாக ஆக்கியும் விடக் கூடும். இப்படி அற்ப சாதனைகளில் கிடைக்கும் இந்த அற்ப திருப்திகளில் மகிழ்ந்து அத்துடன் நின்று விட்டால் இனியும் நமக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டங்களை நாம் அடைய முடியாமல் போய் விடும்.

இதில் முழு ஆளுமையை அடைகிற வரையில் ஒரு முறை சாத்தியப்பட்டது அடுத்த முறை சாத்தியப்படாமல் போகலாம். அதற்கு காரணங்கள் நமக்குள்ளோ, நமக்கு அப்பாற்பட்டோ இருக்கலாம். உண்மையான காரணங்களை அறிந்து நம் முயற்சியில் உள்ள குறைபாடுகளாக இருந்தால் அதை சரி செய்து கொண்டு, நமக்கு அப்பாற்பட்ட, நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் என்றால் அதை ஏற்றுக் கொண்டு நாம் முன்னே செல்ல வேண்டி இருக்கும். ஆனால் கூட்டம் கூட்டி நாம் முயற்சி செய்யும் போது, வெற்றி கிடைக்காத போது பலர் ஏளனம் செய்ய ஆரம்பிக்கலாம். நமக்கே முன்பு கிடைத்த வெற்றி தற்செயலாகக் கிடைத்தது தான் போல இருக்கிறது, உண்மையில் நமக்கு இந்த சக்திகள் இல்லை என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கலாம். இதெல்லாம் நாம் வெற்றி பெற பெரும் தடையாக மாற ஆரம்பிக்கும். மேலும் ஒரிரு முறை வெற்றி பெற்று பின் வெற்றி பெற முடியாதவர்களில் சிலர் தங்கள் புகழைத் தக்க வைக்க பின் ஏமாற்று வேலைகளில் கூட ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். ஏமாற்ற ஆரம்பிக்கிறவர்கள் அந்த சக்தியை நிரந்தரமாகவே இழக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த ஆழ்மன சக்திகள் விஷயத்தில் வெற்றி விகிதம் எப்போதுமே நூறு சதவீதமாக இருப்பதில்லை. பத்து முதல் இருபது சதம் வரை தோல்விகளுக்கு வாய்ப்பு உள்ளது. அதற்குக் காரணங்கள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதாகக் கூட இருக்கலாம். அந்த உண்மையை மறப்பதும், மறுப்பதும் உண்மையான சாதகனுக்கு உகந்ததல்ல. எத்தனை பெரிய கைராசிக்கார மருத்துவராக இருந்தாலும் அவர் சிகிச்சை செய்யும் நோயாளிகளில் சிலரும் இறப்பதுண்டு. அதற்கென யாரும் அவரைக் குறைத்தோ, அந்த மருத்துவ சாஸ்திரத்தைக் குறைத்தோ மதிப்பிடுவதில்லை அல்லவா? அதே போலத் தான் இதுவும். பெரும்பான்மை வெற்றிகளை வைத்தே மதிப்பிடல் முக்கியம். சில முயற்சிகளில் தோல்வி வருவது இயற்கையே. அதனால் அதை மறைக்கவோ மறுக்கவோ முற்படாதீர்கள். அந்தப் பக்குவம் இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தின் அடுத்த கட்டங்களை உங்களால் சென்றடைய முடியும்.

மேலும், ஆழ்மன சக்தி வகை எதுவானாலும் அதை அடைய அதற்கான
பிரத்தியேக, உறுதியான, தொடர்ந்த ஆர்வம் இருத்தல் தேவை. அந்த ஆர்வம் பத்தோடு சேர்ந்த பதினொன்றாக இருந்தால் அதில் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது. முன்பே பல முறை குறிப்பிட்டது போல அசாத்தியப் பொறுமையும் வேண்டும். கீரை விதைத்தவன் படுகிற அவசரம் தென்னை விதைத்தவன் படக்கூடாது. ஆழ்மனசக்தி வேண்டி முயற்சிக்கிறவர்கள் இதை எப்போதும் நினைவில் இருத்த வேண்டும். அதே போல சில முறை நமக்கு சில வெற்றிகள் விரைவாகக் கிடைக்கலாம். சில முறை நம் முயற்சிகளுக்குப் பலன் இருப்பது போலவே தோன்றாது. நம் பயணம் அப்படியே தேக்கமடைந்து விட்டதைப் போன்ற பிரமை கூட ஏற்படும். அந்த நேரத்தில் தான் நாம் முயற்சிகளைக் கை விட்டு விடக்கூடாது. வெளிப்பார்வைக்குத் தெரியா விட்டாலும் சில நுணுக்கமான மாற்றங்கள் உள்ளுக்குள்ளே நடந்து கொண்டு தான் இருக்கும். ஒட்டு மொத்தமாக ஒரு நாளில் நாம் உணர நேரிடலாம். எனவே பொறுமையாக நாம் தொடர வேண்டியது முக்கியம்.

இதை எல்லாம் சொல்லும் அளவுக்கு செயல்படுத்துதல் அவ்வளவு சுலபமல்ல. படிக்கும் போதும், மற்றவர் சாதனையைக் கேட்கும் போதும் நமக்குள் எழுகிற எழுச்சியையும், ஆர்வத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுதல் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இது சாத்தியப்பட, இது சம்பந்தமான நூல்களை தொடர்ந்து அதிகம் படியுங்கள். இதில் ஆர்வம் உள்ளவர்களுடன் அதிகம் தொடர்பு வையுங்கள். ஓரளவு வெற்றி பெறும் வரை தாக்குப்பிடித்து உங்கள் முயற்சிகளில் தொடர்ந்து இருப்பது மிக மிக முக்கியம். அந்த வெற்றிகள் சாத்தியமானவுடன், உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்.

ஆழ்மன சக்தியில் ஆளுமையைப் பெறும் வரை அதனை சோதித்து பார்த்துக் கொண்டு இருப்பது இயற்கையே. ஆனால் அதனை முழுமையாகப் பெற்ற பிறகும் தேவையில்லாமல் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனமே. நம்மால் கையை அசைக்க முடிகிறது என்பதற்காக நாம் வெறுமனே கையையே அசைத்துக் கொண்டிருப்போமா? எப்போது தேவையோ அப்போது மட்டும் தானே நாம் கையை அசைப்போம். அது போல ஆழ்மன சக்தியையும் தேவைப்படும் போது தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவது தான் முறையானது.

ஆழ்மன சக்தியின் கீழ்நிலை சக்திகளாக மாந்திரீகம், செய்வினை, பலவீனமானவர்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைத்தல் போன்றவையெல்லாம் கூட சொல்லப்படுகின்றன. உண்மையாக ஆழ்மன சக்தி வாய்ந்தவர்கள் யாரும் இது போன்ற முறைகளில் இறங்குவதுமில்லை. இந்த சக்திகளால் அவர்கள் பாதிக்கப்படுவதுமில்லை. கீழ்நிலை சக்திகள் மேல்நிலை சக்திகள் முன்பு என்றும், எப்பொழுதும் பலம் இழந்து போகின்ற தன்மை வாய்ந்தவை. மேலும் இது போன்ற கீழ்நிலை சக்திகளைப் பயன்படுத்தி அடுத்தவரைத் துன்புறுத்த முயல்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் துன்பப்பட்டு அழிந்து போகிறார்கள் என்பது ஆணித்தரமான உண்மை. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் அந்த வகை சக்திகளில் ஆர்வம் காட்டக்கூட முற்படாதீர்கள்.

ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன் தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம். உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது.

மேலும் ஆழ்மன சக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம். அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட.

பலர் தாங்கள் அடையக்கூடிய அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்றறியாமலேயே பரம தரித்திரர்களாக இருந்து விடுகிறார்கள் என்பது இரக்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்று அறிந்தும் அதை அடையும் வழி பற்றி தெரிந்தும் அந்த வழியில் பயணம் செய்யாமல் இருப்பதும், அந்த வழியில் சிறிது தூரம் பயணித்து திரும்பி வந்து விடுவதும் வடிகட்டிய முட்டாள்தனம்.

உலகில் எதுவுமே தற்செயல் இல்லை. இது போன்ற ஒரு தொடரைப் படிக்க நேர்வதும் கூட அப்படியே. இதைப் படிக்கையில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு தோன்றுமானால், படிக்கும் போது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதை உணருங்கள். இது பற்றி நிறைய சிந்தியுங்கள். இந்த உண்மைகளை மனதில் ஊறப்போடுங்கள். நிஜ வாழ்க்கையில் இது ஒரு பாகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பாதையில் பயணத்தைத் தொடருங்கள். பயணத்தின் வேகம் எப்போதும் ஒரே போல சீராக இருக்காது. பயணம் அவ்வப்போது வேகமும் மந்தமுமாக இருக்கலாம். ஆனால் பயணத்தைக் கை விடாமல் இருப்பது முக்கியம். இதில் முழு வெற்றி, தகுதிகளை வளர்த்துக் கொண்டு கடைசி வரை பயணிப்பவர்க்கே வாய்க்கும் என்றாலும் பயணிக்கும் மற்றவர்களுக்கும் முயற்சி செய்த அளவு வெற்றியும் நற்பலன்களும் கண்டிப்பாகக் கிடைக்கும். முக்கியமாக பிரபஞ்ச சக்தியுடன் கண நேரமானாலும் தொடர்பு கொள்ளும் வரையாவது பயணம் செய்யுங்கள். முன்பு சொன்னது போல உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்...

நடுத்தர வர்க்கத்திலிருந்து மேல்தட்டு வர்க்கம் வரை தங்களுக்கான பொருள வாங்க இந்த மாதிரியான இடங்களுக்கு போகாம இருக்க மாட்டீங்க...


ஆனா உங்களையும் தாண்டி அங்க நடக்குற பித்தலாட்டங்கள் தெரிஞ்சா உங்களோட மனநிலை என்னவா இருக்கும்...

அடுத்தடுத்த பதிவில் அங்கு நடக்கும் முறைகேடுகள் அம்பலப்படுத்தப்படும்...

பாஜக பினாமி 1 கோடி டூபாக்கூர் ராகவா லாரணஸ்...


ஒரு கோடி வெகுசனத்திற்கு புரியாத தருணம் இன்று புரிந்திருக்கும்..

இனி அவர்கள் புரியும் செயலும் உங்களுக்கு புரியாத புதிராய் அமையும்...

மாற்றான் என்றுமே தமிழனாக முடியாது...

தெலுங்கன் லாரண்ஸ் தெலுங்கன் தான்..

கன்னடன் ஆதி கன்னடன் தான்...

தனிமை...


தந்தையாக சூரியன் தட்டி எழுப்புகிறார் தினமும் செல்லும் இடமெல்லாம் கைகோர்த்து வருகிறார்..

தோழன் தோழியாக நம்மை சுற்றிலும் காடுகள், மலை, மரங்கள், மழை, ( இயற்கை ) இருக்கிறது..

சொந்தங்களாக நமதுவீட்டு விலங்குகள் இருக்கிறது..

விருந்தாளியாக பறவைகள் வருகிறது..

உடல் நலன் விசாரிப்பதாக நமது முன்னோர்கள்  தினமும் காற்றாக நம்மை சுற்றி சுற்றியே வருகிறார்கள்..

தாயாக நிலவு இரவில் உரங்க வைக்கிறாள்..

தாயுடன் தாயின் தோழிகள் நட்சத்திரமாக வருகிறார்கள்..

இவை அனைவரும்  இருக்கும் போது மனிதன் எப்படி தனிமையை உணர முடியும்..

தனிமை என்பது மனிதனின் மனம் மட்டுமே உருவாக்கி கொள்ளும் கற்பனை..

மகிழ்ந்து இருங்கள் வாழ்க்கையில்...

செருப்படி பதில் அக்கா வாழ்த்துகள்...


திமுகவோடு போகும் அண்ணன் திருமாவுக்கும் பொருந்தும் இந்த பதில்...

நிகோலா டெஸ்லா வும்...வேற்றுக்கிரகவாசி உண்மைகளும்...


நிகோலா டெஸ்லா.. உலக மக்கள் அனைவருக்கும் இலவச மின் ஆற்றல் மற்றும் மாற்று சக்தி ஆகியவற்றை வழங்குவதே. அவரின் முக்கிய லட்சியமாக இருந்தது என்று தான் நாம் அறிந்து இருந்தோம்.

அதுவே அவரின் அடையாளம் இருந்த போதிலும். உண்மையில் வெகுஜன மக்கள் அறியாத, அவரின் அடையாளமாக வேறொன்றும் இருந்தது.

டெஸ்லாவின் புரட்சிகர வாகனத்தின் முறைகள் மற்றும் வடிவமைப்பு, வட்ட வடிவ பறக்கும் பொருட்கள் மற்றும் வேற்றுகிரக உயிரினங்களிடம் அலைகள் மூலமான கலந்துரையாடல்கள் தான். அவரின் அறியப்படாத மற்றொரு அடையாளம்.

டெஸ்லா உருவாக்கி பறக்கும் தட்டு  மின்-ஆப்டிகல் லென்ஸால் செய்யப்பட்ட 'கண்கள்' எனக் கருதப்படுகிறது, இது பைலட் அனைத்தையும் பார்க்க அனுமதிக்கிறது. திரைகள் ஒரு கருவியில் வைக்கப்படுகின்றன, அங்கு உள்ள உலாவியானது வாகனத்தைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் சுழன்று கண்காணிக்க முடியும், மற்றும் டெஸ்லாவின் நம்பமுடியாத கண்டுபிடிப்பு, மாபெரும் அந்த லென்ஸை உள்ளடக்கியது, இதை நிலைகள் மாறாமல் பயன்படுத்த முடியும்.

அத்தகைய வாகனத்தின் சான்றுகளை. 1911 முதல் நிகோலா டெஸ்லா மற்றும் தி நியூ யார்க் ஹெரால்ட் ஆகியோருக்கு இடையே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்:

"என் பறக்கும்தட்டு" இயந்திரம் இறக்கைகளை வைத்திருக்காது. நீங்கள் தரையில் அதை பார்க்கலாம். ஆனால் அது ஒரு பறக்கும் இயந்திரம் என்று உங்களால் யூகிக்க முடியாது. இருப்பினும் அது "காற்றில் துளைகளை" அல்லது கீழ்நோக்கிய நீரோட்டங்களைப், வானிலை மாற்றங்களை பொருட்படுத்தாமல்,
இதுவரை அடைந்ததை விட அதிக வேகத்தில், சரியான பாதுகாப்புடன் எந்த திசையிலும் காற்று வழியாக செல்ல முடியும்.. !!!

நீங்கள் விரும்பினால் இதே போன்ற நீரோட்டங்களில் அது மேலேறும்.
மேலும் இந்த இயந்திரம் காற்றடிக்கும் காற்றிலும், காற்றோட்டத்திலும் முற்றிலும் நிலையாக இருக்க முடியும். அதன் தூக்குதல் சக்திக்கு சுழன்று பறக்க வேண்டியிருக்கும், ஆனால் நேர்மறை இயந்திர செயல்பாட்டின் மீது எந்தவிதமான நுட்பமான சாதனங்களையும் சார்ந்து இருக்காது.

இவ்வாறு அந்த நேர்காணல் நிகழ்ச்சியில். தான் உருவாக்கிய "பறக்கும் தட்டு" இயந்திரம் பற்றிய அம்சங்களை கூறியிருந்தார். இந்த நேர்காணலுக்கு பிறகே அவரை உலக மக்களிடமிருந்து மறைத்து ஒரு கும்பல். ஏதோ இன்றுவரை அவரின்  பெயரை மட்டுமாவது சொல்லிக்கொண்டு இருக்கிறோம்!

ஒருமுறை அவரது கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் திருடுவதைக் குறித்து கேட்டபோது, “அவர்கள் என் கண்டுபிடிப்புகளை திருடுவது எனக்கு கவலை அளிக்கவில்லை. சொந்தமாக யோசிக்கும் அளவிற்கு அவர்களுக்கு திறன் இல்லை என்பது தான் எனக்கு கவலை அளிக்கிறது!” என்றார்.

இவ்வுலகமே இப்போது மெச்சும் #களவு மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களிடம் ஒரு பத்திரிகையாளர் இப்படி கேட்டார். “இந்த உலகத்திலேயே மிக சிறந்த மேதையாக நீங்கள் இருப்பதை எவ்வாறு உணர்கிறீர்கள்?”
கொஞ்சமும் யோசனையின்றி  ஐன்ஸ்டின்,

எனக்கு எப்படி தெரியும்? இது நீங்கள் டெஸ்லாவிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா?" என்றார்...