உங்கள் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் எதுவும் நிச்சயமாகக் கூற முடியாது. சொல்லவும் கூடாது.
வருங்காலம் என்பது ஒரு திறந்த வெளி.
இதை அறிந்து கொள்ளும் மனிதனின் முயற்சி நகைப்புக்குரியது.
ஆனால் மனிதன் இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான்.
இறந்த காலத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான்.
இது ஒருக்காலும் நடக்காது.
நீங்கள் எப்போதும் நிகழ்காலத்துக்கு வருவதில்லை.
நடந்து முடிந்ததை நீங்கள் சீர் செய்ய முடியாது.
நடக்கக் கூடியதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.
வருங்காலத்தை உங்கள் அறிவால் தீர்மானிக்க முடியாது. வருங்காலத்தைப் பற்றி எதுவும் நிலையில்லை.
ஆனால் மனிதன் வருங்காலத்தை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதைத் தனக்கு சாதகமாகச் செய்ய முயலுகிறான்.
இது முட்டாள் தனம்.
நீங்கள் அதை முன்பே அறிந்து கொண்டால் அது வருங்காலமில்லை..
அது இறந்த காலமாகி விடுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.