02/10/2017
புல்ரோரர் - Bullroarer...
இந்த இசைக்கருவியானது கி.மு.17000 ஆண்டை சேர்ந்தது என்று அகழ்வாராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது உக்ரைன் நாட்டினரால் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர்.
இதனை ஆசியா, ஐரோப்பா மற்றும் முந்தைய அமெரிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஒரு மரக்கட்டையை சிறு துளையிட்டு அதில் கயிற்றை கட்டி காற்றில் வேகமாக சுற்றுவார்கள்.
அதில் எழும்பும் இசையை அந்த கால மக்கள் வெகு தொலைவில் இருப்பவருடன் தொடர்புக் கொள்ள பயன்படுத்தியுள்ளனர்.
இத்துடன் தாளத்தையும் சேர்த்து பல சடங்குகளிலும் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த இசையை தம் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு இறைநிலையை அடையவும் பண்டைய மக்கள் பயன்படுத்தியுள்ளனர்..
திராவிடம் - 6...
ஆங்கிலேயர் 'திராவிடத்தை' உருவாக்கியது என்பது முன்பே ஊகித்து செய்தது அது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து அவர்களுக்குப் பயன்பட்டது.
ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் 'உங்கள் சிறப்பை ஆராய்கிறேன் பேர்வழி' என்று கூறிக்கொள்ளும் சில ஆராய்ச்சியாளர்களையும் மதபோதகர்களைஅப்பகுதி மக்களோடு கலந்து விடுவர்.
இதைப் பொதுவாக அன்றைய அனைத்து காலணியாதிக்க நாடுகளும் செய்தன என்றாலும் ஆங்கிலேயலர் இதை மிகவும் சிரத்தையுடன் செய்தனர்.
இன்றும் 'ஆங்கில மொழி' உலகை ஆட்டிப்படைக்கக் காரணம் அன்றைய ஆங்கிலேயர்கள் உலகம் முழுதும்சென்று அப்பகுதி மக்களின் இனவரலாறு, மதம்,உணவுப்பழக்கம், பண்பாடு, மருத்துவம், கலாச்சாநம்பிக்கைகள் என அத்தனைத் தகவல்களையும் ஆங்கிலத்தில் தொகுத்து வைத்ததேயாகும்.
(அப்போது தானே பிரித்தாள முடியும்)
மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் தமிழரை ஆராய வந்த வெளிநாட்டவர் தமிழ் மேல்காதல் கொண்டு தமிழுக்குத் தொண்டு செய்து தமிழரோடு தமிழராக ஒன்றிவிட்டனர்.
இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்தான் வீரமாமுனிவர், ஜி.யு.போப் போன்றவர்கள்..
அவ்வாறு தமிழ்நாட்டுக்கு வந்தவர்தான் 'திரு.ராபர்ட் கால்டுவெல்'.
'திராவிடம்' என்கிறக் கருத்தியலை உருவாக்கியவர்.
இவர் 1814ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்.
ஸ்காட்லாந்தில் கல்வி கற்ற இவர் மொழியாராய்ச்சியிலும் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.
கிறித்துவ மதத்தை பரப்ப 1838ல் தமிழகத்துக்கு வந்தார்..
தமிழருடன் நெருங்கிப்பழக தமிழ் கற்க ஆரம்பித்துதமிழின்மீது ஈடுபாடு அதிகமாக, தமிழர்வரலாற்றை ஆராயத் தொடங்கினார்.
தென்னிந்திய மொழிகளின் ஒற்றுமையையும்வட மொழிகளிலிருந்து அவை முற்றிலும்வேறுபட்டவை என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்ட இவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணம்' இன்றும் திராவிடவாதிகளின் வேதநூலாக உள்ளது.
இவரைப் பற்றிய விமர்சனங்களும் உள்ளன..
'சாணார்' மக்களைப் பற்றி இவர் எழுதிய நூலின்கருத்துக்களுக்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கஆங்கில அரசே அந்நூலைத் தடைசெய்யும் நிலையும் வந்தது..
(அப்போது இவர் இரண்டு வருடங்கள் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது).
இவர் கிறித்துவ மதத்தில் தீவிரமாக இருந்தவர் என்றும் தெரிய வருகிறது.
ஆனால் இவர் தமிழுக்கு செய்த தொண்டைக் கருத்தில் கொண்டால் இவர் உண்மையில் தமிழ்ப் பற்றுள்ளவர்என்றே தெரிகிறது.
எது எப்படியோ, இவர் பிராமணரே ஆரியர்என்றோ தென்னிந்தியர் அனைவரும் ஒரே இனத்தவர் என்றோ கூறவில்லை.
இவர் எடுத்துரைத்த 'திராவிடம்' தென்னிந்திய மக்கள் பேசும் மொழிகள்ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததென்றகருத்தியலை முன்வைக்கிறது அவ்வளவே.
திராவிடம் அல்லது திராமிடம் எனும் சொல் 'தெற்கு' எனும் பொருள் தருவதாக வடமொழியில் வழங்கி வந்ததாகக் கூறுவர்.
திராவிடப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட,
ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை பற்றிப் பாடிய பாடலில் 'திரமிட' எனும் சொல் தெற்கு என்றபொருள்படும்படி கையாளப்பட்டுள்ளது.
"த்வ சத்ன்யாம்
மான்யே தாரணிதாரா கன்யே ஹிருதயதா
பய பராப்ஹார பரிவஹதி சாரச்வத்மியா
தஹயவாத்யா தாட்தம் திரமிட
சிசு ராசவத்யா தாவா யாத்
காவீனம்
ப்ரோயுதனா மஜானி காமனியா கவாயிதா"
இப்பாடலில் ஆதிசங்கரர் திரிஞான சம்பந்தரை 'திராவிடசிசு'என்று இழிந்து கூறுவதாக திராவிடவாதிகள் மேடை தோறும் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
முட்டி மோதி உருண்டு புரண்ட பின்பு அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆதாரம் இதுதான்.
இதுவும் உண்மையா என்றால் அதுவும் இல்லை.
முழுப்பாடலையும் ஆராய்கையில், இது திருஞானசம்பந்தரை புகழ்வதாகவே அமைந்துள்ளது.
"தெற்கில் ஒரு குழந்தை உன் மார்பில் பால் குடித்ததால் சிறந்த அறிவுடன் விளங்குகிறது" என்று பார்வதியை புகழ்வதாக இப்பாடல் பொருள் தருகிறது.
தவிர இதில் 'திரமிட' என்ற வார்த்தைதான் வந்துள்ளது 'திராவிட' என்று வரவில்லை.
(திராவிட- எதிலிருந்து வந்தது என்பதைப் பின்னர் விளக்குகிறேன்)
இவற்றைக் கூறியது ஏனென்றால், திராவிடம் என்ற சொல் தமிழுக்கு சிறிதும்சம்பந்தமில்லாதது என்பதையும்,
திராவிடம் என்ற கருத்தியலே தற்போதைய 'திராவிடக் கோட்பாட்டுக்கு' முரணானது என்பதையும் விளக்கவே.
நூறுவருடம் எடுபடாத ஒரு கோட்பாடு எப்படி நடைமுறையில்திடீரென்று குதித்தது?
தமிழ்ப் பிராமணர்களே ஆரியர்என்று எப்படி நம்பவைக்கப்பட்டது?
மற்ற மொழியினரும் தம்மொழிப் பிராமணரை அந்நியராகக் கருதினரா.?
டுவிட்டரில் தெறித்து ஓடிய மோடி.. அப்போ நேரடி விவாதம் என்றால்?
அமெரிக்காவில் , பிரிட்டனில் இரண்டு பேர் இறந்தால் டுவிட்டரில் அதற்கு இரங்கல் தெரிவித்து தன்னை முக்கிய தலைவராக காட்டிக்கொள்ளும் திருவாளர் மோடி .. தனது அட்சியில் நடந்த ஒரு அவலத்தை பற்றி டுவிட்டரில் கருத்தை பதிந்தார் என்றால் அது மும்பை ரயில் நிலைய கோர விபத்தால் பலியான 20 அப்பாவிகளின் மரனத்தை பற்றிதான்.
ஆனால் சில நாட்களுக்கு அந்த போஸ்டை நீக்கி உள்ளார்.. காரணம் அந்த போஸ்டுக்கு மக்கள் வழங்கிய எதிர்கருத்துக்கள் தான்.. 3600 கோடிக்கு உயிரற்ற சிவாஜி சிலைக்கு செலவிடுவதில் என்ன பயன் மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என்று தொடர்சியான கருத்துக்களின் விளைவு அந்த போஸ்டை சைலண்டா நீக்கியுள்ளார்.
என்ன செய்ய கடந்த எட்டு ஆண்டுகளில் 16,722 போஸ்டுக்களை போட்ட மோடிக்கு இந்த ஒரு போஸ்ட் பல பாடங்களை கற்றுக்கொடுத்து விட்டது போலும்..
டுவிட்டரிலேயே தெரிந்து ஓடும் மோடி எங்கிருந்து லைவ் சோவில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள.. கரன் தாபர் வந்து போவாரல்லவா...
சம நீதி...
சட்டம் என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது என்றால், அந்த சட்டத்தை ஏன் மக்கள் புரிந்துக் கொள்ளும்படி இயற்றலாமே..
மக்கள் எந்தவொரு சட்டப் பிரச்சனை என்றாலும் வழக்குறைஞர்களை நாட வேண்டி இருக்கிறது..
அனைத்து சட்டங்களும் மக்களுக்கு புரியும்படி இருந்தால் தான் சட்டம் உண்மையாக மக்களுக்காக இயற்றப்பட்டது என்றாகும்..
இல்லையென்றால் பணம் படைத்தவனும் மெத்த படித்தவனும் தான் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தனகேற்றது போல வளைத்துக்கொள்ள முடியும்...
அதைப் போல் பெரும்பாலும் உலகெங்கிலும் இருக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளை "MY LORD" என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதே.
தீர்ப்பை வழங்கும் ஒரே காரணத்தால் நீதிபதிகளை கடவுளுக்கு இணையாக வைத்து கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?
பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி - வாஞ்ஜுர்...
பாதங்களைத் தாக்குவதில் பித்த வெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி.
இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.
அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது.
இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.
கால் ஆணி ஏற்படக் காரணம்:
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.
கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.
காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.
கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.
கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.
இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.
மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.
பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.
மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்...
திராவிடம் - 5...
ஆம், வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இந்து-இசுலாமிய பிரித்தாளும் கொள்கை வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் நன்றாகவே வேலைசெய்தது.
இன்றும் அது மக்களின் மனதில் நன்கு வேறூன்றியுள்ளது.
இதை நீதியரசர் மார்க்கன்டேய கட்ச்சு கூட சமீபத்தில் இடித்துரைத்துள்ளார்.
ஆனால் தெற்கில் அது எடுபடவில்லை.
ஆங்கிலேயர் இதற்கு என்ன செய்யலாம் என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தனர்.
மிண்டோ-மார்லி மற்றும் மாண்டேகு-செம்சுபோர்டு சீர்திருத்தத்திற்குப் பிறகு அரசுவேலை பெறும் இந்தியர்களை உற்றுநோக்கத் தொடங்கினர்.
மற்ற எந்தப்பகுதியிலும் இல்லாத அளவு பிராமணர் அதுவும் தமிழ்ப்பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமுள்ளதையும்,
அதை வேற்றுமொழியினர் பொறாமையுடன் பார்ப்பதையும், மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் அப்பதவிகளை அபகரிக்கத்துடிப்பதையும் அவதானித்தனர்.
போதாதா?! தயாரானது திட்டம் ஒருபக்கம் ஆரியர் வரலாறையும், அவர்கள் திராவிடர் (Dravid) என்று அழைத்தாக தமிழர் வரலாறையும் தேவைக்குத்தகுந்தபடி திருத்தி ஆராய்ச்சியாளர்கள் மூலம் வெளியிட்டு 'திராவிடர்' என்கிற சொற்பதத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.
இதை அவர்கள் 1800களிலிருந்தே செய்து வந்திருந்தனர் (அங்கேதான் நிற்கிறான் வெள்ளைக்காரன்).
ஆனால் பிராமண ஆதிக்கம் தலைதூக்கிய பின் திராவிடப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி அவர்கள் சூழ்ச்சி வேலைசெய்ய ஆரம்பித்தது.
எப்படி தெற்கைத் தவிர மற்ற இடங்களில் இப்பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தவே 'இந்து' என்கிற எப்போதும் இல்லாத வார்த்தையை உருவாக்கினார்களோ அது போலத்தான்.
ஆம்; 'இந்து' என்கிற வார்த்தை எந்தவேதத்திலும் கிடையாது. இந்து என்கிற வார்த்தையே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.
கேட்டால் இசுலாமிய நாடுகளில் இந்தியத் துணைக்கண்டத்தை அல்-ஹிந்த் (எண்களின் நாடு) என்று அழைக்கின்றனர் என்பர் அல்லது 'சிந்து' ஆற்றின் பெயரிலிருந்து வந்தது என்பர் அல்லது 'பாகியான்'(Fagian) குறிப்புகளில் 'இந்து சமுத்திரம்' எனும் சொல் கையாளப்பட்டது என்பர்.
எது எப்படியோ. ஆனால், இதுவரை உலகில் அமைந்த ஆட்சிகளை எல்லாம்விட மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட ஆங்கிலேயர் அதைக் கட்டமைக்க கடைப்பிடித்த தாரகமந்திரம் 'பிரித்தாளுதல்'.
எந்த நாட்டில் காலடிவைத்தாலும் அங்குள்ள மக்களை இனத்தால் , மதத்தால், நிறத்தால் , சாதியால் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பிரிவினையைப் பரப்பி
அவர்களை அவர்களாலேயே அழித்து தமது ஆதிக்கத்தை நிறுவுவதில் கைதேர்ந்தவர்கள்.
அவர்கள் செய்த வினையின் விளைவுகள் பல நாடுகளில் இன்றும் மோதல்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கின்றன.
'இந்து' பிறந்த கதைக்கும் 'திராவிடம்' பிறந்த கதைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் மக்களை பிரிக்க,ஒன்று ஏற்கனவே உள்ள பிரச்சனையை பெரிதாக்குவார்கள் அல்லது இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.
'இந்து-இசுலாம்' முதல் வகை.
'திராவிடம்' இரண்டாம் வகை.
ஏட்டளவில் 'திராவிடம்' எப்படி உருவாக்கப்பட்டது?
ஏட்டளவில் உருவாக்கப்பட்ட 'திராவிடம்' நடைமுறையில் எப்படிப் பிறந்தது?
தமிழர் தமது வரலாற்றில் கூறியும் கேட்டுமிராத திராவிடம் எப்படி தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தது?
இஸ்லாம் கிருத்துவம் இந்து மூன்றுமே தமிழனுக்கு அந்நிய மதங்கள் தான்...
இந்துமதம் பறையர்களை மட்டும் ஒதிக்கியது என்று பரப்பி கிருத்துவம் இஸ்லாத்துக்கு ஆள் பிடிக்கும் கூட்டங்களே ....
இந்து மதம் என்கிற முக மூடி போட்டு எம்மை வீழ்த்தியவன் நோக்கம் வேறு..
அதில் புரிதல் இல்லாத இந்துக்களும் துணை நின்றார்கள் என்பதை மறுக்க முடியாது..
இருந்தாலும்.... தொடர்ந்து பறையர்களை இந்துக்கு எதிரானவனாகவும் இஸ்லாம் கிறுத்துவத்திற்க்கு ஆதராணவன் போலவும் பரப்பும் நோக்கம் என்ன ?
ஒன்னு எல்லா மதமும் இல்லனு சொல்லு, இல்ல எல்லா மதமும் இருக்குனு சொல்லு, இல்ல எல்லா மதத்தில் இருக்கும் நன்மையும் தீமையும் ரெண்டையும் சொல்லு...
இதில் நீ எதையும் பேசவில்லை என்றால் உங்கள் புரட்சியை நிறுத்தி கொள்ளுங்கள்...
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...
அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும்.
அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது .
ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்..
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும்.
அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம்.
அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள்.
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . .
கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும்.
பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம்.
அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...
இந்திய வரலாறும் தமிழர்களும்....
இந்திய வரலாறு - காலக் குறிப்புகள்...
கி.மு 4440 - தமிழின் முதல் சங்கம் கடலடியில் உள்ள “தென் மதுரையில்”
கி.மு 3700 - இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில்
கிமு 3500 -1500 - சிந்து வெளி நாகரிகம்
கி.மு 1850 - மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்”
கிமு 1000 - கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல் / வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்
கிமு 554 - புத்தரின் நிர்வாணம்
கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்பு
கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா
கிமு 326 - அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு
கிமு 321 - பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்
கிமு 272-232 - அசோகர் ஆட்சி
கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
கிமு 58 - விக்கரம் ஆண்டு
கிமு 30 - தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்
கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
கிபி 52 - புனித தாமஸ் இந்தியா வருகை
கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம்
கிபி 98-117 - கனிஷ்கரின் காலம்
கிபி 320 - குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
கிபி 380-143 - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது
கிபி 405-411 - பாகியான் வருகை
கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
கிபி 609 - சாளுக்கிய வம்சம் தோற்றம்
கிபி 622 - ஹீஜிரா வருடம் துவக்கம்
கிபி 629-645 - யுவான் சுவாங் வருகை
கிபி 712 - முகமது பின் காசிம் படையெடுப்பு
கிபி 985 - ராஜராஜன் சோழன் காலம்
கிபி 1001-1026 - முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
கிபி 1191 - முதலாம் தரைன் யுத்தம்
கிபி 1192 - இரண்டாம் தரைன் யுத்தம்
கிபி 1206 - டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்
கிபி 1221 - ஜென்கின்கான் படையெடுப்பு
கிபி1232 - குதும்பினார் கட்டப்பட்டது
கிபி1298 - மார்க்கபோலோ இந்தியா வருகை
கிபி1333 - இப்னுபத்துக் இந்தியா வருகை
கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்
கிபி1347 - பாமினி அரசு துவக்கம்
கிபி1398 - தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 - டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 - லோடி வம்சம்
கிபி1496 - குருநானக் பிறப்பு
கிபி1498 - வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 - போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526 - முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 - குருநானக் இறப்பு
கிபி1556 - ஆக்கப் பதவி ஏற்பு - இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65 - கானிகோட்டா யுத்தம்
கிபி1576 - ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 - கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604 - சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631 - தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 - சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 - டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 - நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748 - முதல் ஆங்கிலேய - பிரஞ்சுப் போர்
கிபி1757 - பிளாசிப் போர்
கிபி1761 - மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 - பாக்ஸர் போர்
கிபி1790-92 - மைசூர் போர்
கிபி1799 - நான்காம் மைசூர் போர்
கிபி1803 - ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 - மராத்தியர் தோல்வி
கிபி1835 - ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 - ஆங்கிலேயர் - சீக்கியர் போர்
கிபி1853 - முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் - தானே)
கிபி1857 - முதல் இந்திய சுதந்திரப் போர் (தமிழகத்தில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858 - கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 - முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 - மின்டோ - மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 - முதலாம் உலகப் போர்
கிபி1919 - மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920 - காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921 - பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922 - சட்ட மறுப்பு இயக்கம்
கிபி1928 - சைமன் கமிஷன் வருகை
கிபி1931 - காந்தி - இர்வின் ஒப்பந்தம்
கிபி1934 - சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது
கிபி1938 - காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
கிபி1942 - வெள்ளையனே வெளியேறு போராட்டம்
கிபி1945 - ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிட்டிஷாரிடம் தோல்வி
கிபி1947 - இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றது)...
தனக்கு நிகர் வேறு யாரும் மொழி உணர்வாளர் இல்லை என்று நினைக்கும் ஒரு அறிவாளித் தமிழர் நம்மிடம் கேட்டுள்ள கேள்வி இது தான்...
தமிழை மட்டும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த தமிழ் அமைப்புகளுக்கு குறைந்த அளவு பொதுபுத்தி கூட இல்லை.
எல்லா மாநில மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று தானே தமிழர்கள் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்? அதை விடுத்து ஒரே ஒரு மொழி மட்டும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நியாயம் தானா ?
இவருக்கு நம் பதில்...
இவருக்கு குறைந்த அளவு அரசியல் அறிவு இல்லை என்பதே உண்மை.
இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர்கள் அளவு எந்த மாநிலமும் போராடவில்லை.
தமிழகம் இந்தியை எதிர்த்து போல் எந்த மாநிலமும் எதிர்க்கவும் இல்லை.
இன்னும் பல மாநிலங்கள் தங்கள் மேல் திணிப்பு உள்ளது என உணரக் கூட இல்லை.
பல மாநிலங்கள் இந்தியை ஏற்றுக் கொண்டும் விட்டனர்.
இந்தி எதிர்ப்பு பலமாக உயிர்ப்புடன் இருப்பது தமிழகம் மட்டுமே.
இந்த நிலையில் நம் பக்க நியாயத்தை புரிய வைக்கவும் , நம் மீது ஏவப்பட்டுள்ள இந்தித் திணிப்பையும் தமிழ் மக்களுக்கு புரிய வைக்க நாம் கையில் எடுத்த கோரிக்கை தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவது தான்.
இந்த கோரிக்கையே பல தமிழர்களுக்கு என்னவென்று புரியவில்லை.
ஏன் தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும் என பல தமிழர்கள் கேள்வி கேட்கும் நிலை தான் இன்றும் நிலவுகிறது.
இந்நிலையில் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை தான் தமிழ்நாட்டில் எடுபடும் .
குறைந்த அளவு வரவேற்பு பெரும்.
இங்கு தமிழர்களின் பலத்தை திரட்ட இம்முயற்சி பலன் தரும்.
ஆனால் எல்லா மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை தொடக்கக் காலத்தில் பயன்தராது.
காரணம் அதற்கான முன்னெடுப்பு அந்தந்த மாநிலங்களின் சூடு பிடிக்க வேண்டும். எல்லா மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் வைக்கப்பட்ட இதே கோரிக்கை வலுப்பெற வேண்டும்.
அது வலுப்பெறாமல் நாம் மட்டும் அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை வைப்பது தமிழகத்தில் கூட அந்த கருத்து எடுபடாது.
இது தான் அரசியல் யதார்த்தம்.
இதை புரிந்து கொண்டே தமிழை முன்னிறுத்தி கோரிக்கை வைக்கிறார்கள்.
இது நாம் புதிதாக வைத்த கோரிக்கை அல்ல .
காயிதே மில்லத் 50 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை தான்.
உண்மையில் தமிழ் மொழிக்கு மட்டுமே இந்தியாவின் தேசிய மொழியாவதற்கு அனைத்து தகுதியும் உண்டு என்று நிரூபித்தவர் காயிதே மில்லத் அவர்கள்.
இப்போது நாம் அதே கோரிக்கையை வைக்கிறோம்..
இதற்கு மேல் அந்த அறிவாளித் தமிழருக்கு நாம் எந்த பதிலும் அளிக்கப் போவதில்லை...
சித்தர் ஆவது எப்படி - 6..?
புத்தியின் கனல் தன்மை...
மனிதன் இரண்டாக பிளவு பட்டு இருக்கிறான் .. மனம் கொண்ட மனிதன் தன் மனதில் கனலாகவும் வெளிச்சமாகவும் இரண்டாக பிளவு பட்டு இருப்பதையே இதை குறிக்கின்றது...
வெளிச்சமான உருவ பூதங்களான மண் நீர் பூதங்களை காட்டவும், கனலாய் அருவ பூதங்களான புத்தி அறிவினை வலு ஊட்டவும்,ஆக இரு செயல்களை மனம் செய்கிறது... வெளிச்சத்தை மனம் காட்ட காட்ட மனிதன் விலங்கியல் நிலைக்கும், கனலாய் மாற மாற மனிதன், தெய்வநிலைக்கும் செல்லுவதை முன்பே பார்த்தோம்..
இயல் நிலையில் மனிதன் வெளிச்சமாய் உள்ள நிலையில் யோக பயிற்சியின் மூலம் கனலை பெருக்கி தெய்வீக நிலைக்கு போகிறான்..
கனலை பெருக்காத நிலையில் தெய்வ நிலையை அடைய முடியாமல், மனிதன் மனிதனாக ஜென்ம ஜென்மாக பிறவி எடுக்கிறான் என மகான்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்...
பிரபஞ்ச ஆற்றலை புத்தியின் மூலம் சுத்த கனலாக பெற்றுக்கொண்ட மனம் அதை வெளிச்சமாக மாற்றி உலகியலில் தொடர்புக்கு தன்னுடைய பஞ்ச பொறி புலன்களுக்கு செலவழிக்கிறது..
அப்படி செலவு செய்து பழக்கப் பட்ட மனம், பெற்ற மொத்த ஆற்றலையும், பொறி புலன்களுக்கே செலவு செய்ய துடிக்கிறது..
ஆனால் புத்தி அதனை தடுத்து விட்டாலும், புத்தியின் செயலில் தோய்வு ஏற்பட்டாலும், புத்தியின் பலத்தைக் காட்டிலும் மனம் மிகுந்த பலத்தோடு செயல் படுகின்ற பொழுது, புத்தி செயல் இழந்து போகும் போது, மனம் தான் பெற்ற கனல் சக்தி முழுமையையும் பொறி புலன் வாயிலாக தான் பெற்ற அனைத்து கனலையும் வெளிச்சமாக மாற்றி விடுகிறது...
அப்படி வெளிச்சமாக மாறும் போது, எண்ண அலைகளை உருவாக்குகின்றது.. அப்படி உருவான எண்ண அலைகள் சித்தத்தில் உள்ள அதற்கு ஒத்த பழைய எண்ண பதிவுகளையும் தூண்டி எண்ண குவியல்களை ஏற்படுத்துகிறது..
இந்த எண்ண குவியலின் ஆதிக்கமே புத்தியும் அறிவும் தாராளமாக செயல் பட முடியாமல் தடையாய் அமைகிறது.. இந்த நிலையில் தான் புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் ஏற்படுகின்றது...
மனம் புத்தியிடம் இருந்து பெற்ற ஆற்றலை அதாவது கனலை வெளிச்சமாக மாற்றுவதை குறைக்க, குறைக்க; புத்தியில் கனல் பெருகி புத்தியின் செயல் திறன் அதிகமாகிறது....
வலுவடைந்த புத்தி அறிவினை முழுமையாக பயன் படுத்தி கொள்ளும்..
ஏதோ ஒரு வகையில் ஒட்டு மொத்தமாக சிக்கி கொண்ட நாம், மனதின் செயல் பாட்டால் அதாவது கனலை வெளிச்சமாக பூரணமாக மாற்றிய விதத்தால், அனைவரும் ஒட்டு மொத்தமாக புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் உடையவர்களாக உள்ளோம்...
முதலில் எண்ண குவியலில் இருந்து விடுபட்டு பின் தனி தனி எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டால் ஒழிய வெளிச்சம் மூலமாக ஆற்றல் குறைந்த அவல நிலையிலிருந்து மீள முடியாது... இப்போது நம்மை யார் மீட்பது என்பது தான் மிக பெரிய கேள்வி...
தடு மாற்றம் அற்ற திடமாற்றம் காண என்ன வழி ?
புத்தி என்பது பூரண கனல்.. கனலான ஒன்றே ஆற்றலானது.. புத்தியில் கனல் நிறைந்து புத்தி வலு பெற வேண்டும் என்றால் புத்தியிடமிருந்து கனலை கிரகிக்கும் மனதின் செயல் பாட்டை நிறுத்த வேண்டும்..
புத்தியிலிருந்து ஒரு குறிபிட்ட அளவிற்கு மேல் மனம் கனலை பெற முடியாது..
புத்தியானது தன் தேவைக்கு வேண்டிய அவசியமான கனலை தன் பால் வைத்துக்கொண்டு சதாகாலமும் செயல் பட்டுக் கொண்டு இருக்கும்..
மனம் ஆனது புத்தியின் தேவைக்கு மேல் உள்ள கனலை பெறுவதற்கு ஒன்றும் இல்லை என்றால் கனல் இல்லாமல் சோர்ந்து தூங்கி விடும்..
ஆனால் புத்தி மட்டும் சதா காலமும் விழித்துக் கொண்டே இருக்கும்.. தூக்கத்தில் ஏதாவது சத்தம், அதிக வெளிச்சம் அல்லது தட்டி எழுப்புதல் மூலம், தேக உணர்வு அதிகமானால் புத்தி மனதை விழிப்பு அடைய செய்து வெளிச்சத்திற்கு வரும்..
அதாவது பொறிகள் மூலம் புலன்கள் வேலை செய்ய தொடங்கும்...
தியானத்தின் ஒரு செயல், பெற்ற கனலை மனம் வெளிச்சம் ஆக்காமல் புத்தி தடுத்து தன்பால் புத்தியானது கனலை தக்க வைத்துக் கொள்வது தான்...
புத்தியானது வேண்டிய அளவிற்கு மட்டுமே மனதிற்கு கனலை கொடுக்க தொடங்கி விட்டால் மனம் புத்தியின் பூரண கட்டுப் பாட்டில் வந்து விடும்...
மனதிற்கு தொல்லை கொடுப்பது, சித்தத்தின் எண்ண பதிவுகளின் ஆதிக்கமே..
இந்த எண்ண பதிவுகளை மனம் கையாள அல்லது கட்டு படுத்த எந்த வகையிலும் முடியாது...
ஆனால் சித்தத்தை கட்டு படுத்த புத்தியால் மட்டுமே முடியும்.. பொறி புலன்களை ஆதிக்கம் செய்வதற்காகவே மனம் படைக்கப் பட்டு இருக்கிறது..
பொறி புலங்களின் மேல் புத்தி, மனம் இல்லாத போது மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்.. இப்படியான கட்டமைப்பினை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்...
நமக்கு இப்பொழுது முக்கியமான தேவை, தனக்கு தேவையான கனலை தக்க வைத்து உள்ள , ஆனால் மனத்தின் ஆதிக்கத்தால் செயல் பாடு குறைந்துள்ள, புத்தியை தட்டி எழுப்புவதே...
புத்திமதி யார் வழங்குவார்.. ஒரு குரு தானே வழங்குவார்..
குருவின் துணை யின்றி எதுவும் நடக்காது..
புத்திமதி என்பது புத்தியின் விழித்து எழுந்த நிலை..
ஆம் புத்தியின் நிலையிலே இருந்து கொண்டு குரு செய்யும் பணியை செய்வது இந்த புத்தி என்ற எழுந்த பூதம் தான், முதலில் எழ வேண்டும்..
எழுந்த புத்தியே குருவாக முடியும்.... எழுந்து பலப்படவேண்டும்..
பலப் பட்ட பின் தான் குருவினுடைய ஆதிக்கம் தொடங்கும்..
பின் ஒவ்வொன்றாக சீர் அடைய தொடங்கும்..
சதா காலமும் விழித்து கொண்டு இருக்கும் இந்த புத்தி என்ற பூதம் முதலில் தான் செய்ய வேண்டியது இன்னதென்று அறியாத, புத்தி கெட்ட நிலையில் உள்ளது..
அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய ஒரு இடத்தை காண்பித்து விட்டால், போதும் மற்றவை எல்லாவற்றையும் சித்தராகக் கூடிய நிலைவரை அதுவே குருவாக இருந்து வழி நடத்தி செல்லும்..
ஒரு தீக்குச்சி பெரும் காட்டு தீயிக்கு வழி வகுப்பது போல், அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய தகுந்த ஒரே ஒரு இடத்தையும் அங்கு புத்தி பலம்கெட்ட நிலையிலிருந்து புத்தி பலப்பட்ட நிலையை அடையும் நுணுக்கத்தையும் அடுத்த பகுதியில் விளக்கமாக பார்க்கலாம்...
திருப்பூர் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் மோ(ச)டி கும்பல்...
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றுவரும் ‘மோ(ச)டி’ கும்பலின் வசூல்வேட்டை புதுவகை மாதிரியாக உள்ளது. அதாவது “2022 – ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் வீடு கொடுப்பது, எரிவாயு இணைப்பு கொடுத்து புகையில்லா வீட்டை உருவாக்குவது” என மோடி வாயால் வடை சுட்ட திட்டங்களை வைத்துக் கொண்டு பல பகுதிகளில் வசூல் வேட்டை நடக்கிறது.
குறிப்பாக திருப்பூர் பாண்டியன் நகர், கூத்தம்பாளையம், JP நகர், அன்னூர், குன்னத்தூர் என சுமார் 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா வீடு வழங்கும் திட்டம்” என்ற பெயரில் சுமார் 8000-த்திற்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களிடம் ரூ.60 முதல் ரூ.80 வரை விண்ணப்பக் கட்டணம் என்று ஆட்டையைப் போட்டுள்ளனர் உள்ளூர் பாஜக நிர்வாகிகள்.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டை பஞ்சாயத்து கும்பல் தான் திருப்பூர் பாஜக-வின் உள்ளூர் நிர்வாகிகளாக உள்ளனர். இவர்களின் திருட்டு மேலும் நுட்பமானது. ஊர் முழுக்க பிரதமரின் இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கான முகாம் நடைபெற உள்ளதாக மோடியின் படத்துடன் தமிழிசை, பொன். ராதாகிருஷ்ணன் என தங்கள் கோஷ்டி தலைவர்களின் படங்களுடன் சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்கின்றனர்.
அதனைப் பார்த்து சாதாரண ஏழை மக்களும், நடுத்தர வருவாய் உடையவர்களும் அரசு நடத்தும் முகாம் என எண்ணி வருகின்றனர். அவர்களிடம் மத்திய அரசின் திட்டத்திற்கான சேர்க்கை என்று கூறி கட்டனம் வசூலித்துக் கொள்கின்றனர். அதே முகாமில், பாஜக-வின் ரியல் எஸ்டேட் கும்பல் போனியாகாத தங்களின் மனை அல்லது வீடுகளை அங்கு வரும் நடுத்தர வர்க்கத்தினர் தலையில் கட்டிவிடுகின்றனர்.
அதே முகாமில், அரசின் எரிவாயு இணைப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு தனியார் ஏஜென்சிகளுக்கு வாடிக்கையாளர்களைச் சேர்த்து விடுவதையும் செய்கின்றனர். மொத்தத்தில் மோடி வாயால் சுட்ட வடையை வைத்து தங்களிடம் போணியாகாத நிலங்களை அப்பாவி மக்களின் தலையில் கட்டிவிடுவதோடு பதிவுக்கான கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து பணம் பறிக்கிறது பாஜக கும்பல்.
இது போன்று 2 மாதங்களுக்கு முன்பு பாஜக கும்பல் நடத்திய முகாமில் ரூ.80 செலுத்தி பதிவு செய்து, டோக்கன் பெற்றவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது வரிசைப்படி வீடு ஒதுக்கிய பின்பு SMS வரும் அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறும், பதிவு செய்யும் போது, அவர்கள் பெற்ற பணம், ஆதார் எண் மற்றும் ரேசன் கார்டு சரிப்பார்த்தற்கான கட்டணம் தானேயொழிய வீடு தருவதற்கும் அதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை எனவும் புரட்டிப் பேசுகிறது இக்கும்பல்.
மேலும் இத்தகைய முகாம்களை நடத்த காவல்துறையிடமோ அல்லது சம்மந்தப்பட்ட அரசு அலுவலகத்திலோ முறையான அனுமதி ஏதும் பெறப்படுவதில்லை. இது குறித்து போலீசில் யார் முறையிட்டாலும், நாங்கள் போய் பார்க்கிறோம் என்று முடித்துக் கொள்கின்றனர்.
குறிப்பாக இந்த முகாம்களுக்கு பேனர் போட்டு விளம்பரம் செய்து ஏற்பாடு செய்யும் உள்ளூர் பாஜக பிரமுகர்கள் யாரும் முகாம் நடக்கும் இடத்தில் தலைகாட்டுவதில்லை, வெளியில் இருந்து வரும் ஆட்களைக் கொண்டு இந்த திருட்டு வேலைகளை நடத்துகின்றனர். இவ்வாறு தேர்ந்த ’420’ கும்பலாக செயல்படுகிறது பாஜக கும்பல்.
இது போன்று அரசு சலுகைகள் வழங்குவதாக கூறிக் கொண்டு உழைக்கும் மக்களின் ரத்தம் குடிக்கும் இந்த கயவர்களின் செயலை எந்த ஓட்டுக் கட்சியினரும் தடுத்து நிறுத்தவோ, கண்டிக்கவோ இல்லை.
கொல்லைப்புறமாக டாஸ்மாக் கடைகளை பெயர்ப்பலகைக்கூட இல்லாமல் திருப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் திறந்துவிட்டு மக்கள் தாலியறுக்கும் OPS – EPS கும்பலும், BJP காவிகளும் திருப்பூரிலிருந்து மட்டுமல்ல தமிழகத்தைவிட்டே துரத்தினால் மட்டுமே உழைக்கும் மக்களுக்கு விடிவு கிடைக்கும்.
தகவல் : மக்கள் அதிகாரம், திருப்பூர்...
சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதியின் பெயர் இடம்பெற வேண்டும் என நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்து உள்ளார்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அடையாறில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தினுள் கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
மணிமண்டப திறப்பு விழா இன்று காலை நடந்தது. காலை 10.20 மணியளவில் துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரபு, சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதியின் பெயர் இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நடிகர் பிரபு பேசுகையில், அம்மா (ஜெயலலிதா) மறைவுக்கு சில காலத்துக்கு முன்பு எங்கள் குடும்பத்தை கூப்பிட்டு சிவாஜிக்கு நினைவிடம் அமைக்க என்னை விட வேறு யார் இருக்க முடியும் என்றார். இன்று அம்மா கனவு நினைவாகிறது. இந்த மணிமண்டபத்தை கட்டிய அனைவரும் மனப்பூர்வமாக ஈடுபட்டனர். அப்பா சிவாஜி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்த கட்சியாக இருக்கட்டும். அத்தனை பேரும் சிவாஜி மேல் அன்பு கொண்டவர்கள். முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை போனில் கூப்பிட்டு உன் பெரியப்பா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. என்னை மன்னிச்சுடு என்று சொன்னார்.
விழாவுக்கு துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள் பங்கேற்பார்கள் என்றார். புரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழா நடைபெறும் இத்தருணத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைத்து ‘அம்மா’ கனவும் நினைவாகி உள்ளது. அப்பா சிவாஜி மீது எல்லோருக்கும் அளவு கடந்த அன்பு உண்டு. நான் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்டு உள்ளேன். அவரும் அன்பாக பழகுவார். இதே போல் ஒவ்வொருவரும் இனிமையாக பழக கூடியவர்கள். அனைவரும் விழாவுக்கு வந்தது மகிழ்ச்சி தருகிறது. கருணாநிதி திறந்து வைத்த சிவாஜி சிலை மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
எனவே சிவாஜியின் சிலை பீடத்தில் கலைஞர் கருணாநிதியின் பெயரை ஒரு ஓரத்திலாவது வையுங்கள் என்றார்...
குவைத் மன்னருக்கு பதிலாக சவுதி மன்னருக்கு வாழ்த்து கூறிய பாஜக தமிழிசை...
குவைத் மன்னருக்கு நன்றி தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ட்வீட் செய்திருந்தார்.
அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை சரியாக கவனிக்காமல் அதை அப்படியே ரீ ட்வீட் செய்த தமிழிசை சவுதி மன்னருக்கு இந்தியா வாழ்த்து என எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நெட்டிசன்களில் விமர்சனத்தை தொடர்ந்து தனது ட்வீட்டை தமிழிசை நீக்கியுள்ளார்...
மண் பானை சமையல் நல்லதா?
மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். தற்போது தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தினால் தான் அறிய முடியும்.
ஆனால் அது போல் இல்லாமல் மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.
மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.
மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.
ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது.
மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை.
எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கிய மானதாகும்...
உலக அளவில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த சிறப்பு...
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது...
இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்.
உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம்.
இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான்.
உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம்.
உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது, அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாதது தான்.
தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை, இந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
மெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம், கனாடாவின் பெரியநகரமான டொராண்டோ, பெரிய ஹோட்டல்களுக்கு பெயர்போன துபாய், உணவுகளில் வெரைட்டி காட்டும் துருக்கியின் செஸ்மே, பழமையான நகரமான சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில் தமிழ்நாடு 24-வது இடத்தை பெற்றுள்ளது.
இதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாஷிங்டன், பார்சிலோனா, வியட்நாம், கான்சாய், சிட்னி, க்ரீஸ் போன்ற இடங்கள் தமிழகத்தை விட பின்னால் உள்ளது என்பதுதான் தமிழகத்தின் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை தான் இந்த பட்டியலும் கூறுகிறது...
இராமாயணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்...
இராவணன் ஆய கலைகளின் நாயகன். அதிலும் பூத கனங்களுக்கேல்லாம் இருக்கும் பக்தியை விட மகேஸ்வரனின் மேல் இராவணுக்கு பக்தி அதிகம்..
அனுமன் நெஞ்சை பிளந்து தான் தனது உள்ளத்தில் சிதாஇராமன் இருப்பதை காண்பித்தார்.
ஆனால் தனது மூச்சில் கூட மகேஸ்வரன் வாசம் என்பதை வசிஸ்டரின் வஞ்சனையை எரித்ததில் இருந்தே காணலாம்.
சரி கதைக்கு வருவோம்.
பக்த பித்தனான இராவணனுக்கு ஏதாவது தரவேண்டும் என அன்னை மகேஸ்வரனிடம் கேட்க அவனுக்கேன்று ஒரு உலகம் தாருங்கள் என அன்னையின் வேண்டுகோள்.
மகேஸ்வரனின் மறுபதில் அவனுக்கேன்று ஒரு உலகம் தந்தால் எங்கும் சிவ சந்நிதானம் அமைத்து தனக்கேன்று இருக்க இடமின்றி சுற்றிவருவான் என்றதும், அன்னை புன்னகைத்து ஒரு திட்டத்தை கூறினார்.
இராவணனை அழைத்து மகேஸ்வரர் இராவனா நீதான் ஆயகலைகளிலும் அற்புதன் ஆயிற்றே உனது அன்னைக்கேன்று ஓர் உலகம் செய் என்றார்.
சிவனாரின் வேண்டுகோள் அல்லவா அதுவும் தனது அன்னைக்கு என ஒரு தாய்க்கு மகன் ஆற்றும் கடமை அத்தனையும் உருக்கொண்டு வந்து அமைத்து முடித்தான்.
முடிந்த உடன் அன்னையை அதைக்காண அழைக்க அதன் அழகைகண்டு வியந்து போனார்கள்.
திட்டப்படி மகேஸ்வரன் இராவணனிடன் இராவணா இவ்வளவு அழகான நகரை படைத்த உணக்கு என்ன வேண்டும் கேள் என்றார்.
அதற்கு இராவணனோ ஐயனே தாய் தந்தை இருக்கும் இக்கயிலையை விட்டு எங்கும் பிரியாவரம் வேண்டும் என கேட்க அதற்கு எம் இருப்பிடம் உனக்கு என்றும் உண்டு. அதே நேரத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடு நாங்கள் கொடுக்கும் எதையும் நீ மறுக்க கூடாது என்பது தான்.
உத்தரவிற்கு இணங்கி வாக்கு கொடுத்தான் இராவணன். இதோ இங்கு உன்னால் அன்னைக்கு படைக்கபட்ட நாடு உனக்காகுக உனக்கு தரவே அன்னையின் நாடகம் என மீன்டும் இராவணுக்கே அந்த நகரை தந்து உனது சந்ததில் இந்நகரில் இருந்து பெருகி உலகெங்கும் பரவி உன்னை போலவே பல கலைகளில் புகழ்பெற்று விளங்கட்டும் என ஆசீகள் தந்து இலங்கேஸ்வரன் என்ற பெயரும் இட்டு அனுப்ப.
இலங்கேஸ்வரனுக்கு அழகான பெண் குழந்தை பிறக்க இந்த பெண் குழந்தைக்கு அன்பை காட்டும் போது தனது அன்னைக்கு காட்டும் அன்பில் குறைவந்து விடுமே என அஞ்சி அக்குழந்தையை பூமாதேவிக்கு வார்த்து விட்டார்.
பூமாதேவியும் அக்குழந்ததையை சனகனிடம் (இன்றைய நேபாளத்தின் அன்றைய இராஜா) சேர்க்க அங்கு வளர்ந்த குழந்தை இராமணனை மணமுடிக்க பிறகு புத்திரகண்டம் வந்த தயரதன் வாக்குபடி இராமன் வனம் செல்ல தனது குழந்தை காட்டில் மழையிலும் குளிரிலும் வாடுகிறதே என்ற ஏக்கத்தில் இலங்கை கொண்டு செல்கிறான்.
இந்த நிகழ்ச்சிதான் வில்லன் யாரை போடுவோம் என நினைத்த வால்மிகிக்கு கிடைத்தான் இலங்கேஸ்வரன் பாவம்.
தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவையே கொடூரபடுத்தி விட்டான்..
இந்த செயலால் தான் வால்மிகி தனது வாழ்வின் கடைசி நாட்களில் குஸ்ட ரோகம் வந்து இறந்தான் என புரானங்கள் சொல்கிறது...
இன்று மகாத்மா காந்தி ஜெயந்தியாம்...
காந்தியின் மறுபக்கம் மகாத்மா எனும் அடைமொழி இவருக்கு ஏன்?
தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே.
மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது.
சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி.
இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது.
அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது.
ஒருநாள் தூக்கத்தில் அவருக்கு விந்து வெளியேறியதால் அவரது பிரம்மச்சர்யத்தைப் பரிசோதிக்க எடுத்த முடிவு அநாகரிகமானது.
பதினெட்டு வயதான அவரது பேத்தி மனுவுடன் ஓரிரவு ஆடையில்லாமல் படுக்கையில் இருப்பதன் வாயிலாக தனது பிரம்மச்சர்யத்தை அவர் பரிசோதித்தார்.
காந்தி தன்னுடன் ஆசிரமத்தில் இருந்த பெண்களை உடலுறவு இல்லாமல் வாழும்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தினார். ஆசிரமப் பெண்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருந்தது அவரது தொண்டர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது. மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக் கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும்.
கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். (“I am taking service from the girls” என்று காந்தி பலமுறை இதைப்பற்றிக் கடிதங்களில் குறிப்பிடுகிறார்.) - “மோகன்தாஸ்” புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி.
மேற்கூறிய செய்திகள் வாயிலாக நான் காந்தியைப் பெண் பித்தர் எனச் சொல்ல வருவதாக எண்ண வேண்டாம். அவரது திருமணத்து வெளியேயான உறவுகள் என்பது அவரது தனிப்பட்ட விடயம் என்பதில் எனக்கு விமர்சனம் இல்லை.
ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக, தன்னைப் பின்பற்றிய, தன்னுடனிருந்த பெண்களை, ஒரு கருவிபோல மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிச்சயம் விமர்சனம் செய்யப்பட வேண்டியதே.
பிரம்மச்சர்யத்தை சோதித்துத் தன்னை நிரூபித்தார், சரி, அதில் பயன்படுத்தப்பட்ட மனுவின் கதி?
இத்தகைய முரண்பாடான அரசியல் மற்றும் சொந்த வாழ்வைக் கொண்டிருந்த காந்தி ஏன் இன்றளவும் அப்பழுக்கற்றவராகக் காட்டப்படுகிறார்?
இந்தக் கேள்வியை எழுப்பவே மேலேயுள்ள தகவல்களைத் தர வேண்டிய அவசியம் உருவாகிறது...
Subscribe to:
Posts (Atom)