07/04/2017
திமுக தெலுங்கு கன்னடம் பேசும் மக்களுக்காக தெலுங்கர் கருணாநிதி செய்த மாபெரும் சேவைகள்....
தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் வேதனை அடையக்கூடிய வகையில் 2001இல் அமைந்த அ.தி.மு.க. அரசு, உகாதித் திருநாளுக்கான அரசு விடுமுறையை ரத்து செய்தது. ஆனால், தெலுங்கு கன்னட மக்களின் நலம் நாடி மீண்டும் உகாதித் திருநாள் விடுமுறையை நடைமுறைப்படுத்தியது 2006 இல் அமைந்த தி.மு.க. ஆட்சி..
தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் குழந்தைகள் பயில உரிய பாட நூல்களைத் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் தயாரித்து வழங்கி, அவர்களின் மொழி உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்ததும் தி.மு.க. ஆட்சியே.
தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் அண்டை மாநில மக்களையும் உறவினர்களாக, உடன் பிறப்புகளாகவே கருதி வருவது திமுக கட்சியே.
குறிப்பு : இதை வாக்குமூலமாக கொடுத்ததே தெலுங்கர் கருணாநிதி தான்...
இவ்வளவு செஞ்ச இதே கருணாநிதி தான் தமிழர்களின் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து குடுத்தார்...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 2...
அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்..
முன்பு குறிப்பிட்ட டெல்·பை ஆரக்கிள், ப்ளோரிடாவின் குறி சொல்லும் பெண்மணி ஆகியோர் எப்படி தாங்கள் நேரில் கண்டிராத அந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள் என்பதை நம்மால் அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை.
ஆனால் எல்லா நாட்டுப் புராணங்களிலும், மதநூல்களிலும் இது போன்ற அற்புதச் செயல்கள் ஏராளம் உள்ளன. இதற்கும் ஒருபடி மேலாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அசரீரியோ, தேவதூதர்களோ சொல்லும் நிகழ்வுகள் எல்லா மதநூல்களிலும் உள்ளன.
தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் ஜனிப்பான். அவன் உன்னைக் கொல்வான் என்று கம்சனுக்கு அசரீரி சொன்ன கதையை நாம் அறிவோம்.
கம்சன் அதைத் தடுக்க எல்லா வழிகளைப் பிரயோகித்தும் நடப்பதை மாற்ற முடியவில்லை. இயேசு கிறிஸ்துவும், முகமது நபியும் பிறப்பதும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதாக அந்த மதநூல்கள் சொல்கின்றன.
இதெல்லாம் நிஜம் தான் என்று நம்ப முடியாத பகுத்தறிவு வாதிகள், இது மதவாதிகளின் கட்டுக் கதை என்று சொல்லலாம். மற்றவர்கள் இதெல்லாம் தெய்வ சக்தி அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பு சக்தி என்று நினைக்கலாம். ஆனால் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் சாதாரண மனிதர்கள் சிலருக்கும் அப்படிப்பட்ட அற்புத சக்திகள் கிடைத்த போது, அது பகுத்தறிவுக்கோ, மற்ற அறிவுக்கோ எட்டாத விஷயமாக அனைவரையும் குழப்பியது.
1967 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிகாகோ ரேடியோவில் ஒரு பேட்டியில் ஜோசப் டிலூயிஸ் என்ற 'கிரிஸ்டல் பந்து ஞானி' அந்த வருட இறுதிக்குள் ஒரு பெரிய பாலம் இடிந்து விழும் என்றார். மூன்று வாரம் கழித்து 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓஹையோ நதியின் குறுக்கே இருந்த வெள்ளிப்பாலம் இடிந்து விழுந்து பலர் இறந்தனர்.
1968, ஜனவரி எட்டாம் தேதி நாட்டில் பெரிய கலவரம் வரும் என்றார். 1968, ஏப்ரல் ஏழாம் தேதி சிகாகோவில் பெரிய கலவரம் வந்து ஐயாயிரம் மத்திய அரசுப்படையினர் வந்து அடக்க வேண்டியதாயிற்று.
1969, ஜனவரி 16 ஆம் தேதி சிகாகோ நகரின் ஓட்டலின் ஒரு பாரில் நுழைந்து அங்குள்ள சர்வரிடம் சிகாகோவின் தெற்குப்பகுதியில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தைப் பற்றி அன்றைய தினப் பத்திரிக்கையில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று கேட்க அங்குள்ளவர்கள் திகைத்துப் போனார்கள். முன்பே அவர் இது போன்ற விஷயங்களில் பிரபலமானபடியால் அன்றைய பத்திரிக்கைகளில் ஒன்றும் வராவிட்டாலும் ரேடியோவிலாவது ஏதாவது செய்தி வருகிறதா என்று ரேடியோவைப் போட்டார்கள். அப்போது இரவு மணி 11.
ஆனால் ரேடியோவில் விபத்தைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. அது வரை நடக்கவில்லை என்பதை அறிந்த டிலூயிஸ் உறுதியாகச் சொன்னார்.
இந்தப் பகுதியில் கடந்த 25 வருடங்களில் இது போன்ற பெரிய விபத்து நடந்திருக்காது. அப்படிப்பட்ட விபத்து நடக்கும்.
இரண்டு மணி நேரம் கழித்து சிகாகோவிற்குத் தெற்கே இல்லினாய்ஸ், சென்ட்ரல் ரயில்கள் பனிமூட்டத்தின் காரணமாக மோதிக் கொண்டன. 47 பேருக்குப் பலத்த காயம். மூன்று பேர் இறந்தனர். அவர் கூறியது போல அதுவே அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் மிகப்பெரிய விபத்து.
1969, மே 21ல் டிலூயிஸ் இண்டியானாபோலிஸ் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும். அதில் 79 பேர் மரணமடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் 330 என்ற எண் அதில் சம்பந்தப்படும் என்றார். 1969, செப்டம்பர் 9 ஆம் தேதி அலிகனி ஏர்லைன்ஸ் விமானம் ஒரு தனியார் விமானத்துடன் மோதி 79 பயணிகள் இறந்தனர். விபத்து நேர்ந்த நேரம் மதியம் 3.30.
1968 டிசம்பர் 15 ஆம் தேதி டிலூயிஸ் கென்னடி குடும்பத்திற்கு தண்ணீர் மூலம் ஒரு கண்டம் இருக்கிறது. ஒரு பெண் நீரில் மூழ்கியதைப் பார்த்தேன் என்றார். 1969, ஜூலை 18 ஆம் தேதி மேரிஜோ என்னும் பெண் எட்வர்டு கென்னடியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சம்பவம் எட்வர்டு கென்னடியின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.
பொதுவாகவோ, எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும்படியாகவோ சிலர் எதை எதையோ சொல்வதுண்டு. அப்படிச் சொல்வதில் ஏதாவது ஒன்று பலித்து விட்டால் அதை விளம்பரப்படுத்தி நல்வாக்கு சித்தர் என்றோ முக்காலமும் உணர்ந்த மகான் என்றோ பெயர் வைத்துக் கொள்வதுண்டு.
உதாரணத்திற்கு அடுத்த ஆண்டு ஒரு பெரும் ரயில் விபத்து நடக்கும். நாட்டில் எங்காவது குண்டு வெடிக்கும். புதியதாக ஒரு நோய் வந்து மனிதர்களைத் தாக்கும் என்று நான் சொன்னால் மூன்றில் இரண்டு கண்டிப்பாகப் பலிக்க சாத்தியமுண்டு. உடனே நான் விகடனில் அன்றே இந்த தேதியில் இப்படிச் சொன்னேன் என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படி இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது. ஆனால் டிலூயிஸ் அப்படி பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லவில்லை. அவர் சொன்னது எல்லாமே அப்படி சொல்ல முடிந்த விஷயங்கள் அல்ல.
இப்படி நடப்பதை முன் கூட்டியே சொல்லி திகைப்பில் ஆழ்த்திய டிலூயிஸ் ஒரு சாதாரண முடிதிருத்தக் கலைஞர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் கடற்படையில் சேர்ந்தார். பணியிலிருந்து விலகுவதற்கு முன்பு ஒரு முறை தான் வேலைக்கு செல்லும் கிடங்கில் ஏதோ ஒரு பெரிய விபத்து ஏற்படுவதாக அவர் உள்ளுணர்வு சொல்ல அவர் அன்று வேலைக்குப் போகாமல் இருந்து விட, உண்மையாகவே அங்கு ஒரு பெரும் விபத்து அன்று நிகழ்ந்தது. அன்று வேலைக்குப் போகாததால் அவர் உயிர் தப்பித்தார். பிறகு இவர் கிரிஸ்டல் பந்தைப் பார்த்து எதிர்காலக் கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
அந்த ஆரம்ப உள்ளுணர்வின் பின் இவருடைய எல்லா முன்கூட்டிய கணிப்புகளைக் கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும். எல்லாமே விபத்துக்கள் பற்றியதாகத் தான் இருந்தன.
ஜோசப் டிலூயிஸிற்கு இப்படி விபத்துகளை அறியும் சக்தி கிடைத்ததென்றால் சில மனிதர்களுக்கு திடீரென்று வேறு மாதிரியான அபூர்வ சக்திகள் கிடைத்த நிகழ்ச்சிகளும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
அவற்றையும் பார்ப்போமா?
இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....
பழந்தமிழர் அளவைகள்...
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை= ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்).
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்...
இலுமினாட்டி யும் பேஸ்புக்கின் மர்ம பின்னனி...
நாம் அனைவரும் பயன்படுத்தும் சமூகத்தளமான பேஸ்புக் தொடர்பான இலுமினாட்டி தன்மையை ஆராய்வோம்.
பிரபல சமூகத்தளமான பேஸ்புக் 2004 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, இப்போது சுமார் 1,15 பில்லியனுக்கு மேற்பட்ட பாவணையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இதன் நிறுவனரான Mark Zuckerberg பற்றியே இன்று பார்க்கப் போகின்றோம்.
மார்க் ஒரு யூதர் என்பதை இங்கு நீங்கள் கருதில் கொள்ளுங்கள். காரணம், யூதர்களுக்கும் இலுமினாட்டிக்கும் தொடர்பிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
அது தொடர்பாக பின்னர் பார்க்கலாம். இப்போது மார்க் தொடர்பாக பார்ப்போம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மார்க் ஃபேஸ்புக் தளத்தின் பாவணையாளார்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அமெரிக்க புலனாய்வுத்துறையுடன் உத்தியோக பூர்வமாக பகிர்ந்து கொண்டமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
D8 எஅ அழைக்கப்படும் பிரபல தொழில்நுட்ப நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பேஸ்புக் தளம் தொடர்பான கேள்விகளுக்கு மார்க் நேரடியாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தனிதகவல் பாதுகாப்புத் தொடர்பான பேச்சு எழுந்த போது, பேட்டிகளின் போது மார்க் அணிந்துவரும் மேலங்கிய பார்வைக்கு காட்டுமாறு எதேச்சையாக நேர்காணலை நடத்தியவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அந்த கேள்வி கேட்ட அடுத்த கணமே மார்க்கின் முகம் மாறியது. எனினும் அவர்கள் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டதன் பின்னர் தனது மேலங்கியை கழற்றினார்.
கழற்றும் போதே… தமது பேஸ்புக் திட்டம் அந்த அங்கியில் பொறிக்கப் பட்டுள்ளதாக கூறினார்.
எனினும், அந்த அங்கியை உற்று நோக்கும் போது அது இலுமினாட்டியின் சின்னத்தையும், பகுதி திட்டத்தையும் குறிப்பதாக அமைந்திருந்தது.
யூதர்களின் நாடான இஸ்ரேலின் கொடியிலுள்ள மைய நட்சத்திரத்தை மையமாகக்கொண்டு அந்த வடிவமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.
கீழ் வரும் புகைப்படங்களில் அவற்றை உண்ணிப்பாக அவதானியுங்கள்…
மேலங்கி தொடர்பான கேள்வியின் பின்னர் மார்க்கின் சஞ்சல முகம்.
மேலும், பேஸ்புக் உடன் இணைந்து இயங்கும் அமைப்புக்களை ஆராயும் போது அதில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு இருப்பதுடன்.. பேஸ்புக்கின் அடிப்படை இணை அமைப்பான information awareness office இல் இலுமினாட்டி சின்னம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலுமினாட்டியின் இஸ்ட இலக்கம் 13.. பேஸ்புக் உள் நுழைவு முகப்பை அவதானியுங்கள். 13 நபர்கள் காட்டப்படுவார்கள். அவர்கள் நாம் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அதே 13 குடும்பங்களை குறிப்பதாக இருக்கலாம்.
இணையத்தில் தேடிப்பெற்றவற்றின் தொகுப்பை என் போக்கில் பதிவிட்டுள்ளேன்.
மர்மமாகவே இயங்கிவரும் இந்த இலுமினாட்டி மர்மக்குழுவின் திட்டங்களையும் அது நம்மிடையே ஏற்படுத்தப்போகும் பாதிப்புக்களையும் அறிந்திருப்பதும் எதிர்வு கூறுவதும் அவசியமான ஒன்று...
பாஜக மோடியும் டூபாக்கூர் வேலையும்...
கருப்புப் பணத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்து ஒழித்து விட்டதாக மோடி சொன்னார்...
தற்போது ஆர்.கே நகரில் பணப் பட்டுவாடா நடப்பதாக பாஜகவும் பட்டியல் வாசிக்கிறது.
அரசியல் கட்சிகளின் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டிருந்தால், எப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடிகிறது?
அப்படியெனில் ஒழிக்கப்பட்டதாக சொன்ன பணம் யாருடையது? கறுப்புப் பண ஒழிப்பு எனும் நாடகம் அம்பலமான இடம் தான் ஆர்.கே நகர்.
இதைப் பற்றி கேள்வி கேட்டால், திரு.கங்கை அமரன் அவர்களின் கரகாட்டக்காரன் திரைப் படத்தில் வரும் அந்த ரெண்டாவது பழம் தாண்ணே இது வசனத்தை ஒட்டுமொத்த பாஜகவும் இப்போது பேசும்...
தற்போது ஆர்.கே நகரில் பணப் பட்டுவாடா நடப்பதாக பாஜகவும் பட்டியல் வாசிக்கிறது.
அரசியல் கட்சிகளின் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டிருந்தால், எப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடிகிறது?
அப்படியெனில் ஒழிக்கப்பட்டதாக சொன்ன பணம் யாருடையது? கறுப்புப் பண ஒழிப்பு எனும் நாடகம் அம்பலமான இடம் தான் ஆர்.கே நகர்.
இதைப் பற்றி கேள்வி கேட்டால், திரு.கங்கை அமரன் அவர்களின் கரகாட்டக்காரன் திரைப் படத்தில் வரும் அந்த ரெண்டாவது பழம் தாண்ணே இது வசனத்தை ஒட்டுமொத்த பாஜகவும் இப்போது பேசும்...
ஆகாயத்தில் ஒரு ஒளி - 2...
தீர்க்க தரிசனங்கள் என்றுமே பொய்த்துப் போனவை அல்ல, அப்படி நடைபெறாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு.
ஒருவர் தன்னை மிகைப்படுத்திக் கொள்வதற்காக வெளியிடப்படும் தீர்க்க தரிசனங்கள் யாவும் இன்றுவரை உலகில் நடைபெறாமல் இருந்துள்ளன.
ஆனால் தன் சுயலாபமின்றி, உலகின் நன்மைக்காக இறைவனின் ஆசிர்வாதத்தோடு வெளிப்படும் தீர்க்க தரிசனங்கள் இன்றுவரை நடந்து வருகின்றன.
அதற்கு உதாரணமாக பைபிள், குரான், மற்றும் இந்து மதத்தின் நிஜமான ஞானிகளின் தீர்க்க தரிசனங்கள் போன்றவை இன்றுவரை வியத்தகு வகையில் நடைபெற்று வருகின்றன.
ஆகயத்தில் ஒரு ஒளி என்ற இந்த ஆன்மீக தொடரில் இன்று இடம்பெறும் தீர்க்க தரிசனம் மிக முக்கியமான தீர்க்க தரிசனமாகும்.
இப்புவியின் மீது இறைவனின் நியாத்தீர்ப்புகள் வழங்கும் இறுதிநாள் என்று பல மதத்தினர் இன்றும் பிரசங்கம் செய்து வருகின்றனர், இது உண்மையில் நடக்கும் செயலா? என்ற கேள்வி நம் எல்லோருக்கும் உண்டு.
ஆனால் உலகம் முழுவதும் அழியும் ஊழிக்காலம் இக்காலம் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.
ஆனால் படைத்த இறைவன் அனைத்தையும் அழிக்கும் நிலைக்கு போகமாட்டார், ஆனால் அவரின் பிரவேசம் இப்புவி மீது முழுமையாக இருக்கும்படி அமையும், இதுவே இறைவனின் வருகைக்கான முக்கிய ஒரு அறிவிப்பாக நாம் இங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாம் தீர்க்க தரிசனம் எதுவென்றால் என்னை ஆழம் பார்க்கும் அனைத்து மக்களையும் நான் ஆழம் பார்க்க தவறமாட்டேன், இதுவே என் வருகையின் நிமித்தம் என்று கடவுளின் கோட்பாடு ஒன்று தெரிவிக்கின்றது.
ஆகவே மக்கள் நிரம்பியுள்ள இந்த பூமியின் மீது இறைவன் நடமாடும் தினம் வெகு அருகில் உள்ளது என்பதை நாம் இங்கு உணர வேண்டிய ஒன்றாகும், அது இதன் வாயிலாக உறுதியாகின்றது.
இப்புவியில் உள்ள மக்களின் மனதில் இறைவன் பற்றிய அவநம்பிக்கைகள் அதிகமாக துளிர்விட ஆரம்பித்துவிட்டன, இதனால் நம்பிக்கை இல்லா மக்களின் வாழ்வாதார சீர்கேடுகளை இச்சமூகம் நிறைய அனுபவித்து வருகின்றது, அதனை சீரமைப்பது யார்?
அதற்காகத்தான் கடவுளின் வருகை இப்புவியின் மீது என்று பல மத தீர்க்க தரிசனங்கள் தெரிவிக்கின்றன.
பரலோக ராஜ்யம் நமக்கானது என்று பல சமூக மக்கள் கூறி வருகின்றன.
பரலோகம் என்பது எது? என்ற கேள்வியை இங்கு நாம் எழுப்ப வேண்டும்.
ஆம் அது இதுவே பரமன் குடிகோள்ளும் உலகம் என்று நாம் இங்கு பொருள்கொள்ள வேண்டும், அப்படி என்றால் இந்த புவியின் மீது நடக்கும் இறைவன், அவர் விரும்பும் உலகம் இந்த புவிதான் என்பது நிச்சயமாக தெரிய வருகிறது.
ஆகையால் இந்த புவியையே இறைவன் தான் வசிக்கும் இடமாகவும், தன் ஆட்சியை இப்புவியின் மீது நடத்திட திடமாக உள்ளார் என்றும் தெரிய வருகிறது.
ஆகையால் இறைவனை நேசிக்கும் அனைவருக்கும் இப்புவியில் நிச்சயம் இடம் உண்டு என்பதனை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது.
இந்த இரண்டாம் தீர்க்க தரிசனம் என்பது என்ன? என்பதை பற்றி உங்களுக்கு நான் விளக்கம் தருகிறேன்..
ஒவ்வொரு யுகமாற்றத்தின் போதும் இறைவன் இப்புவியின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தி அதனை சீர்படுத்தியுள்ளார், அந்த வகையில் தற்போது கலியுகம் முடிந்து சத்தியயுகம் துவங்கும் காலகட்டமான இச்சமயத்தில் அவரின் வருகை இப்புவியின் மீது என்பது யாராலும் மறுக்க முடியாது.
அவரின் வருகையின் போது என்னென்ன சம்பவங்கள் இப்புவியில் நடக்கும் என்பதை இங்கு நாம் உற்று கவனிப்போம், அவர் வருகையின் சமீபமாக கீழ்கண்ட சம்பவங்கள் நிச்சயம் நடக்கும் என இரண்டாம் தீர்க்க தரிசனங்கள் தெரிவிக்கின்றன்,
அவைகள்..
இப்புவியின் மீது அக்னி மழை பொழியும்.
வானத்தில் பலத்த இடி ஓசை தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
கடல் பொங்கும். கானகக் குயில்கள் யாவும் எட்டுதிசை எங்கும் சப்தத்தை எழுப்பும்.
வானத்தின் நிறம் மாறும். இரண்டு சூரியன்கள் தென்படும். இரண்டு கிரகணங்கள் ஏற்படும். செயற்கை கோள்கள் பல செயலிழக்கும்.
மதத்தை சார்ந்த அதிசய தூதுவர் ஒருவரின் வருகை இப்புவியில் மூன்று இடங்களில் தென்படும். ஒரு பிரபல மதமானது, இது இறைவனின் வருகை என்று பிரகடனப்படுத்தும்.
இப்புவியில் பல வியத்தகு அதிசயங்கள் மக்களிடையே எழும்பும். பல அரசியல் மாற்றங்கள் உலக நாடுகள் முழுவதும் நடந்து முடியும். கடலிருந்து அழிந்து போன பழமையான் ஒரு நாகரீக உலகம் வெளிவரும்.
ஆங்காங்கே வானத்தில் பல ஊர்திகளை மக்கள் கண்களால் காணும் காட்சி தென்படும்.
உலக வரலாற்றை புரட்டி போடும்படி இரு நாடுகளுக்கு இடையே ஒரு மிகப்பெரிய யுத்தம் நடைபெறுவதற்கான சூழல் ஏற்படும்.
உலகமே கண்டு வியப்படையும் ஒரு அதிசயம் கடலின் நடுவே நடக்கும்.
இதுவே கடவுளின் வருகை இப்புவியின் மீது நிகழும் சமயத்திற்கு முன்பாக இப்புவியில் தென்படும் தீர்க்கதரிசன அறிகுறிகளாகும்.
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயூடு வைப் பற்றி ப. ஜீவனாந்தம்...
ஈ.வே. ராமசாமி நாயூடு வின் முரண் பாடுகளை கம்யூனிஸ்ட் வாதியான ப. ஜீவானந்தம் தோலுரித்துக் காட்டகிறார். இதோ..
1. ஈரோட்டில் சமதர்ம வேலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார். பின்னர் சமதர்ம விரோதிகளான ஆர். கே. சண்முகம், ஏ. ராமசாமி முதலியார்களைத் தேர்தலில் ஆதரித்தார் ஈ.வே. ரா.
2. சுயமரியாதை இயக்கத்தின் அரசியலுக்காக சமதர்மக் கட்சி வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு ஜஸ்டிஸ் கட்சிக்குத் திரும்பவும் ஓடினார் ஈ.வே. ரா.
3. ஜமீன்தார் – அல்லாதார் மகாநாடு கூட்டி, பொப்பிலி முதல் எல்லா ஜமீன்தாரிகளும் ஒழிய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, பொப்பிலி அரசர் சிறந்த சமதர்ம வீரர் என்று பாராட்டி, பொப்பிலி தலைமையைப் புகழ்ந்தார் ஈ.வே. ரா.
4. லேவாதேவிக்காரர் – அல்லாதார் மாநாடு கூட்டி, லேவாதேவிக் காரர்களெல்லாம் ஓழிய வேண்டுமென்று சரமாரியாகச் சொன்மாரி பொழிந்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குமார ராஜா முத்தையா செட்டியாரோடு கொஞ்சிக்குலாவினார் ஈ.வே. ரா.
5. மதங்களெல்லாம் ஒழிய வேண்டுமென்று விருதுநகர் மாகாகண சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இஸ்லாம் மார்க்கம் நல்லதென்றும் அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேருங்கள் என்று பிரசாரம் செய்தார் ஈ.வே. ரா.
(நூல் : ஈரோட்டுப் பாதை சரியா).
இதுபோன்ற முன்னுக்குப்பின் முரணான வகையில் நடந்துக் கொள்வதும்..
முன்னுக்குப்பின் முரணான வகையில் பேசுவதும்...
வரலாற்றைத் திரித்துக் கூறுவதிலும் ஈ.வே. ராமசாமி நாயூடு விற்க்கு நிகர் ஈ.வே. ராமசாமி நாயூடு தான்...
திமுக கருணாநிதி பதவி தேவை இல்லை என்று ராஜினாமா செய்யும் அவ்வளவுக்கு நல்லவரா என்று யோசிக்கும் புதியதலைமுறை அரசியல் நோக்காளர்களுக்கு...
1969 ஆம் ஆண்டு அண்ணாதுரை இறந்த பின் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார்.. ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் வந்துவிட்டதால் 1971 யில் மீண்டும் தேர்தல் வந்தது.
கருணாநிதி சைதாபேட்டையிலும் எம்ஜியார் பரங்கிமலையிலும் வெற்றி பெற்றனர்.
இதற்கு முன்னர் 1967 யில் திமுக முதல் முறை ஆட்சி அமைத்த பொழுதே அமைச்சருக்கு இணையான பதவியில் இருந்த எம்ஜியார் 1971 தேர்தலில் வெற்றியில் தன பங்கும் இருக்கிறது என்ற எண்ணத்தில் அதற்கும் சற்றே பெரிய பதவியை எதிர்பார்த்து அமைச்சர் பதவி கேட்கிறார்.
கருணாநிதிக்கு எப்பொழுதும் இருக்கும் வஞ்சக எண்ணத்தில் அதை தர மறுக்க, எம்ஜியார் அதிர்ப்தியில் தி.மு.கவின் பொருளாளராக இருந்தமையால் கணக்கு வழக்கு கேட்க 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தி.மு.கவிலிருந்து தற்காலிகமாக நீக்கினார் கருணாநிதி. அடுத்த நாலு நாட்களில் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
அடுத்த மூன்று நாளில் அக்டோபர் 17 அன்று அண்ணா திமுகவை ஆரம்பித்தார் எம்ஜியார். மதியழகன் தான் அப்போதைய சபாநாயகர். கடந்த (1969 - 1971 ) ஆட்சியில் பதவியை துஷ்ப்ரயோகம் செய்ததாக கருணாநிதி மதியழகனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருந்தார், அதில் அதிர்ப்தியாய் இருந்த மதியழகன் எம்ஜியார் பக்கம் சாய்ந்தார். சபாநாயகரை கைக்குள் வைத்து கொண்டு எம்ஜியார் விளையாடியதை கருணாநிதி அவரை நீக்கி கூச்சல் குழப்பம் செய்து அடித்துடைத்தார். எம்ஜியார் இனி சட்டசபைக்கே வரமாட்டேன் என்று சபதம் செய்து வெளியேறினார்.
கருணாநிதியை எதிலாவது தோற்க்கடிக்க வேண்டும் என்று இருந்த எம்ஜியாருக்கு வகையாக வந்து சிக்கியது 1973 திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தல்.
எம்ஜியார் கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து திண்டுக்கலில் மாயதேவரை ஒருலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்தார். திமுக மூன்றாம் இடம் தான் பெற முடிந்தது.
அடுத்து வந்த பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்தது (சில நாட்களில் அந்த ஆட்சியை இந்திரா காந்தி கவிழ்த்தார்).
தொடர்ந்து எம்ஜியார் சட்டபைக்கு செல்வதை புறக்கணித்து திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்து வந்தார்.
திமுக ஊழல் கட்சியாக முழுவதுமாக உருவெடுத்தது இந்த காலகட்டத்தில் தான்.
எமர்ஜன்சி காரணமாக 1971 க்கு பிறகு 1977 யில் தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பாண்டிச்சேரியில் துரோகம் செய்த இந்திரா காங்கிரசின் உறவை முறித்துக் கொண்டு தனியாக நின்று எம்ஜியார் 130 இடங்கள் பெற்று அமோக வெற்றி பெற்று முதல்வரானார்.
1979 ஆண்டு காங்கிரசிற்கு எதிராக கட்சிகளை திரட்டும் முயற்சியின் முகமாக திமுகவையும் அதிமுகவையும் இணைக்க ஜனதா கட்சியின் பிஜுபட்நாயக் தலைமையில் முயற்சி நடந்தது.
முதல் நாள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு விட்டு அன்று இரவே டெல்லி சென்று எம்ஜியாரை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எந்த கட்சிக்கு எதிராக திமுக தொடங்கப்பட்டதோ, எந்த கட்சி எம்ஜர்ஜன்சி சமயத்தில் திமுகவை ஒடுக்கியதோ அந்த கட்சியோடு கூட்டணி அமைத்தார் கருணாநிதி.
அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளே ஆனநிலையில் கருணாநிதி தூண்டுதலில் இந்திரா காந்தியால் ஆட்சி கலைக்கப்படடது.
அதன் பின் மே 28 1980 அன்று நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று முழங்கி காங்கிரசோடு கைகோர்த்து நின்றார் கருணாநிதி.
கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து நின்றார் எம்ஜியார். மக்களிடம் இருந்த அபரீதமான செல்வாக்கால் 38.75 சதவீத வாக்கு பெற்று மீண்டும் எம்ஜியார் முதல்வரானார்.
கடந்த தேர்தலை விட 11 தொகுதி குறைவாக பெற்றது கருணாநிதிக்கு விழுந்த பெரிய அடி, அத்தோடு காங்கிரசும் கருணாநிதியை கழட்டி விட்டது.
அத்தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி காங்கிரசும் எம்ஜியார் பக்கம் சாய்ந்த நிலையில் எம்ஜியாரை எதிர்த்து அரசியல் செய்ய வேற வழி இல்லாமல் தமிழீழ பிரச்சினையை கையில் எடுத்து 1983 ஆகஸ்ட் 10-ல் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து அன்பழகனை கூட்டிக்கொண்டு ராஜினாமா செய்தார்.
ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சிறிது காலத்தில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.
இந்த பதவியை ராஜினமா செய்வது போல செய்து விட்டு அந்த பதவியில் சென்று அமர்ந்து கொண்டார் கருணாநிதி. இது தான் அவரின் ஈழ தியாகம்..
இதை தான் இன்றைய திமுகவினர் தங்கள் தலைவரின் இணையற்ற தியாகம் என்று சொல்லி வருகின்றனர்.
இதில் ஒன்னொரு விசயமும் இருக்கிறது. கருணாநிதி ராஜினாமா நாடகம் என்று தெரிந்ததால் தான் என்னவோ மக்கள் அதன் பின் 1984 டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் திமுகவை அசிங்கமாக தோற்கடித்தனர். கருணாநிதி தேர்தலில் நிற்காமல் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்த பொழுதும் கடந்த தேர்தலை விட 13 தொகுதிகள் குறைவாக பெற்றது திமுக..
தயவு செய்து இனியும் கருணாநிதி ஈழ தமிழர்களுக்காக பதவியை தூக்கி எறிந்தார் என்று உடன் பிறப்புகள் சொன்னால் அவர்கள் மீது கையில் கிடப்பதை தூக்கி எறியுங்கள்.. அது காலில் கிடப்பதாக இருந்தாலும் சரி...
தமிழகத்தில் அடிமைப் பெண்கள் ஏற்றுமதி - சொல்லப்படாத வரலாறு...
திராவிடர் ஆட்சிக் காலம், தமிழக பெண்களுக்கு இருண்ட காலமாக அமைந்தது. அதுவரை பெண்கள் அனுபவித்து வந்த உரிமைகள் மறுக்கப்பட்டன.
அக் காலப் பெண்கள் நிலை குறித்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்து சிலவற்றை மட்டும் காண்போம்.
ஆண்கள் வரதட்சிணை வாங்கும் வழக்கம் திராவிடர்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.
வரதட்சிணை -திராவிடர் வழக்கமே..
சோழர்காலம் வரை, மணமகளுக்கு மணமகன் பரிசம் போட்டுத் திருமணம் செய்யும் முறையே இருந்தது.இது குறித்து வராற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்.
பெண் வீட்டார் மணமகனைத் தேடிச் செல்லுதல் பழந்தமிழர் பண்பாட்டுக்கு முரணாகும். மணமகன் வீட்டார் பெண்ணை நாடி மணமகள் வீட்டுக்கு வரவேண்டும். மணமகன் பெண்ணுக்குப் ’பரியம்’ (ஸ்பரிசம்) அல்லது தொடுவிலை போட வேண்டும். பெண் வீட்டார் மணமகனுக்கு வரதட்சிணை வழங்குதல் தமிழரின் மரபு அன்று.
ஆனால், பெண்களுக்கு நிலங்களைச் சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் அந்நாளிலும் உண்டு. தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. விக்கிரமசோழன் காலத்தில் மங்கை நல்லூரில் வாழ்ந்திருந்த அகளங்கராயன் என்பான் ஒருவன் தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவிட்டுவிட்டதற்காக, அவளுக்குச் சிறு நிலங்களை ஈடாகக் கொடுத்தான் என்று ஒரு கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.
எந்தக் காரணத்தாலோ, சில பிராமண குலங்களில் பெண்ணுக்குப் பரியம் கொடுக்கும் பழக்கம் நுழைந்து விட்டதெனத் தெரிகிறது. அதைக் கண்டித்து ஒரு கிராமத்துப் பிராமணருள் கன்னடியர், தமிழர், தெலுங்கர், இலாடர் ஆகியவர்கள் தமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்படி, கன்னியாதானமாகவே தம் பெண்களுக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்றும், மணமகளின் தந்தைக்குப் பரியப் பணம் கொடுக்கும் மாப்பிள்ளையும், பரியம் பெற்றுக்கொள்ளும் மணமகளின் தந்தையும் குலத்தினின்றும் தள்ளி வைக்கப்படுவர் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. (தமிழர் வரலாறும் பண்பாடும் / முனைவர் கே.கே.பிள்ளை).
ஆக, வரதட்சிணை முறை தமிழர் முறை அன்று என்பதும், அம்முறையை அறிமுகப்படுத்தினோரே, திராவிடர்களாகிய தென்னிந்திய பிராமணர்தான் என்பதும் தெளிவாகிறது. இந்த திராவிடர்களாகிய தென்னக பிராமணர்கள் தமக்கான ஆட்சிக் காலத்தில் ஆடிய ஆணாதிக்கக் கூத்துகளில் சிலவற்றைக் காண்போம்.
பொதுவாக பெற்றோர்கள் தங்களின் மகள்களைப் பாரமாகவே கருதினர். அவர்களுக்கு விரைவில் மணமுடிக்க விரும்பினர்.
பெண்கள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படவில்லை.
மனுதர்ம அடிப்படையில் நடந்துகொள்ள பெண்கள் வலியுறுத்தப்பட்டனர்.
பொதுமகளிர் எனப்பட்ட விபசாரிகள் முறை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது.
உடன்கட்டை ஏறும் வழக்கமிருந்தது.
அரசர்கள் இறந்தால் அவர்களுடைய மனைவியர், காமக்கிழத்தியர் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தீயில் விழுந்து மாண்டனர்.
உடன்கட்டை ஏறாத பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தது. அவர்கள் தலையை மொட்டை அடித்துக்கொண்டனர். ஆபரணங்களைக் களைந்து வெள்ளை நிற ஆடை அணிந்தனர்.
உணவுப்பழக்கமும் மாற்றப்பட்டது.பொது இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி/ சரசுவதிமகால் வெளியீடு 2007/ பக் – 106, 107, 108).
மேற்கண்ட பெண்ணடிமைத்தன வழக்கங்கள் குறித்து திராவிடக் கோட்பாட்டாளர்கள் கடந்த 100 ஆண்டுகளாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
ஆனால், அவர்கள் பேச்சின் சாரமாக, தமிழர்கள் ஆணாதிக்கவாதிகள் என்ற கருத்து இருக்கும். இதற்காக, கண்ணகியின் வீரத்தைக் கொச்சைப்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை. ’திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோர் ஆணாதிக்கவாதிகள்’ என்ற அடாத பழியைப் போடவும் அவர்கள் தயங்குவதில்லை. ஆனால், விஜயநகர, நாயக்கர் காலத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய சான்றுகளை அவர்கள் முன் வைப்பதே இல்லை.
திராவிடர் ஆட்சியில் தமிழக வரலாற்றின் அழிக்க முடியாத களங்கமான போக்கும் உருவாக்கப்பட்டது. அடிமைப் பெண்கள் பெண்களை ஏற்றுமதி செய்யும் வணிகம்தான் அது. விஜயநகரப் பேரரசில், பெண்கள் ரோமப் பேரரசுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். (மேலது நூல் / 76).
பெண்களை அடிமைகளாக்கும் விதிகளை உருவாக்கியது மனுநீதி. பெண்களைப் பண்டங்களாக்கி ஏற்றுமதியும் செய்த மனிதகுல விரோத ஆட்சிதான் திராவிடராகிய தென்னிந்திய பிராமணர்ஆட்சி என்பதை உணர வேண்டும். பெண்கள் வணிகம் என்பது ஒரு குறியீடுதான். பெண்கள் ஏற்றுமதியே செய்யப்பட்டார்கள் என்றால், சமூகத்தில் பெண்கள் நிலை எந்தளவு மோசமாக இருந்திருக்கும் எனக் கற்பனை செய்தால் வேதனையே மிஞ்சும்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான சமூகநிலையைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஆட்சி முறை திராவிட அரசர்கள் காலத்தில் உருவானது.
தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005).
கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.
கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்
நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)
மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?
இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை அல்லவா...
பிராமணருக்கு தேவதாசிகள் இலவசம்: திராவிட அரசர் காலத்தின் பதிவுகள்...
விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் முதன்முறையாக, நால்வருணக் கோட்பாட்டின்படி ஆட்சி செய்தது.
விஜயநகரப் பேரரசின் சமூக அமைப்பைப் பற்றி வரலாற்றாசிரியர் குறிப்பிடுவது, ‘சமுதாயத்தில் உயர்குடி மக்களாகக் கருதப்பட்டவர்கள் பிராமணர்களாவர். இரண்டாவதாகச் சத்ரியர். மூன்றாவதாக வைசியர்கள், இறுதியாகச் சூத்திரர்கள்’ (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி / பக் – 98/முனைவர் அ.சிங்காரவேல்/ சரசுவதி மகால் நூலக வெளியீடு 2007).
தமிழ் அரசர் ஆண்ட காலத்து வரலாற்றில் பிராமணருக்கான முக்கியத்துவம் குறித்து பூதக் கண்ணாடி வைத்துத் தேடும் ’முற்போக்கு’க் கோட்பாட்டாளர்கள், வெகு அண்மைக் காலத்தில் ஏற்பட்ட இந்த சீரழிவுகளைப் பற்றி வாயே திறப்பதில்லை.
மரபு வழியாகவே எச்சாதியினரும் பூசை செய்யலாம் என்ற நிலையிலிருந்த பழனிக் கோயிலில் பிராமணர் அல்லாதோர் பூசை செய்யக்கூடாது எனத் தடுத்தவர் ’திராவிடர்’ திருமலை நாயக்கர்.
இதற்கான செப்பேட்டுச் சான்று,
பிராமணர் அல்லாத பண்டாரங்கள் பழனி கோயிலில் பூசை செய்வதை ஏற்றுக்கொள்ளாமல் புதிதாகப் பிராமணர்களை நியமித்து அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் குறிப்பிட்டு இராமப்பய்யன் செப்பேடு வழங்கியுள்ளார். புலிப்பாணி பாத்திர மரபில் வந்த பண்டாரங்களுக்கும் சிவப்பிராமணர்களுக்கும் எந்த எந்த வேலை என்பதை இராமப்பய்யன் வரையறுத்துள்ளார். திருமலை நாயக்கர் செப்பேடு என்பதில் ஐயமில்லை. செப்பேட்டில் திருமலையின் பெயரும் உள்ளது. தற்போது பழனிக் கோயிலில் இச்செப்பேடு உள்ளது. (தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி-2/ ச.கிருக்ஷ்ணமூர்த்தி/மெய்யப்பன் தமிழாய்வகம் 2002/ பக் – 81).
தமிழர்கள் மரபுவழியாகவே, தம் கோயில்களில் தமிழர்களைத்தான் பூசாரிகளாகக் கொண்டிருந்தனர், தமிழில்தான் வழிபாடு செய்துவந்தனர். இந்த முறையை மாற்றியது திராவிடர் ஆட்சிதான். விஜயநகர, நாயக்கர் அரசுகளின் ஆட்சி மொழி, தெலுங்கு, வழிபாட்டு மொழி, சமஸ்கிருதம். தமிழ் புறந்தள்ளப்பட்டது. இதற்கான மிக முக்கியச் சான்றுதான், பழனி கோயிலில் பிராமணர்தான் பூசை செய்ய வேண்டும் என்ற திருமலை நாயக்கரின் ஆணை.
திராவிட அரசர்கள் பிராமணருக்கு இந்தளவு முக்கியத்துவம் அளித்தமைக்கு அடிப்படைக் காரணம், ‘திராவிடர்’ என்பது தென்னிந்திய பிராமணரின் தொகுப்புப் பெயர் என்பதே ஆகும். விஜயநகரப் பேரரசு, நாயக்கர் அரசு ஆகியவற்றின் அரசர்கள் பிறப்பால், முழு சத்ரியர்கள் அல்லர். பிராமணக் கலப்பாளர்கள். இதற்கான பல சான்றுகளை முந்தைய பதிவுகளில் கண்டோம்.
திராவிடர் என்போர் தென்னாட்டு பிராமணரே என்ற கருத்துக்கான சான்றுகள் இவை. இவைபோல இன்னும் ஏராளமான சான்றுகள் வரலாற்றுப் பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன.
திராவிடர் என்றால்தான் பிராமணர் வரமாட்டார் என்று கூறுவது, வரலாற்றை அறியாமல் முன் வைக்கும் கருத்து அல்லது அறிந்தே ஏதோ உள் நோக்கில் வெளிப்படுத்தும் கருத்து.
தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசரும் நாயக்கரும் சீரழித்ததில், தமிழரின் மதிப்பீடுகள் பெருமிதங்கள் வாழ்வியல் நெறிகள் அனைத்தும் நிலைகுலைந்தன. தமிழரின் சமூக அமைப்பு முறையே தலைகீழ் மாற்றத்தைக் கண்டது. தமிழ்க் குலங்கள், சாதிகளாக மாறி தமக்குள் சண்டையிட்டுக்கொள்ளத் தொடங்கின. இவ்வாறான ஏற்றத் தாழ்வை சாதிய அடுக்கை பிராமணர்கள்/ திராவிடர்கள் திட்டமிட்டு உருவாக்கினர்.
ஆங்கிலேயர் வருகையின்போது தமிழகம் இருந்த நிலையைப் பார்க்கலாம்.
புக்கானன் என்ற ஆங்கிலேய அதிகாரி தான் ஆய்வு செய்த ஊர்களில் எந்தச் சாதியினர் நிலவுடைமையாளராக இருந்தனர் என்பதைப் பட்டியலிடுகிறார். கொங்குப் பகுதித் தரவுகளில் சில கீழே தரப்படுகின்றன.
1. கடம்பூர் – விளைநிலங்களை வைதிகப் பிராமணரே பயிரிடுகின்றனர். அவர்களுக்கு வரி குறைவு. ஊரில் உள்ள மற்ற வீடுகளையும் தமதாக்கி வாழ்ந்தனர். அவர்களுக்கு வீடு இலவசம். உணவு இலவசம். தேவதாசிகள் இலவசம்.
2. கரூர் – பெரும்பகுதி நிலம் பிராமணருக்கு சொந்தம்.
3. நல்லராயன்பாளையம் – பிராமணரே இங்கு நஞ்சை பூமிக்குச் சொந்தக்காரர்.அது அவர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்.
4. கிராமத்துக் கால்வாய் 200 காணி நிலத்திற்குப் பாய்கிறது (265 ஏக்கர்). இங்குள்ள நஞ்சை யாவும் பிராமணருக்கே சொந்தம். மீதி நிலம் யாவும் பொட்டல்.இதுவும் நான்கு பிராமணருக்கே சொந்தம்.
5. பெருந்துறை – இவ்வூரில் பிராமணருக்கும் முகமதியருக்கும் இனாம் நிலங்கள் உள்ளன. முகமதியர் சில கடமைகளைச் செய்ய வேண்டும். பிராமணருக்கு அது இல்லை.
(கொங்குநாடும் கிழக்கிந்தியக் கம்பெனியும் 1792-1858/தமிழ்நாடன்/புதுமலர் பதிப்பகம் 2009/ பக் – 9).
இது ஒரு சிறிய சான்று அவ்வளவே..
தமிழகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் பிராமணர் நிலவுடைமையாளராக இருந்தனர். அவர்கள் தமிழ்க் குலங்களை அடிமைகள் போல் நடத்தினர். இந்தக் காலத்தில்தான், திராவிட/ தென்னிந்திய பிராமணர் ஆட்சிக்காலத்தில்தான் தீண்டாமை உருவெடுத்தது.
நிலம், சாதி ஆதிக்கத் தனியாருக்கு முழு உடைமை ஆகிய பிறகு, பிற குலத்தவருக்குப் பிழைப்புக்கு வேறு வழியில்லை என்றான பிறகு, சாதியக் கொடுமைகள் உருவாகத்தான் செய்யும். இத்தகைய நிலவுடைமை, தமிழர் அரசாண்ட எந்தக் காலத்திலும் நிலவவில்லை.
ஆங்கிலேயர் வந்தபோது எடுக்கப்பட்ட மற்றொரு கணக்கு இது.
கொங்கு மண்டலத்தின் குறிப்பிட்ட பகுதியின் ஜமீன்கள்/ பாளையங்கள் எந்தெந்த சாதியினரிடம் இருந்தன என்பதைப் பட்டியலிடுகிறது.
பாளையங்கள் – 17
ஜமீன்கள் – 6
பட்டக்காரர் – 6
மற்றவர் – 9
மொத்தம் – 38
இவற்றில்,
நாயக்கர் உரிமை – 20
கவுண்டர் காணி -12
மற்றவர் – 6
(மேலது நூல்).
பாளையங்கள், ஜமீன்கள்தான் சுரண்டலின் கொடூர வடிவங்கள். இம்முறையை முதலில் அறிமுகம் செய்தவர் விசுவநாத நாயக்கர் எனக் கடந்த பதிவில் கண்டோம். பிராமணரை மட்டுமே தனது உயர் அதிகாரிகளாக வைத்திருந்து, அதை நியாயப்படுத்தி – அர்த்த சாத்திர நெறிப்படி அரசாண்ட கிருக்ஷ்ணதேவராயரின் அதிகாரி இவர் எனது குறிப்பிடத்தக்கது.
இந்த விசுவநாத நாயக்கர் வகுத்துகொடுத்த பாளையக்காரப் பாதையில், அவருக்குப் பின்னர் வந்த நாயக்க மான்னர்கள் பீடு நடைபோட்டனர்.
தொல் தமிழ்க் குலங்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றை, பிராமணர் - வைசியர் – சத்ரியர் - சில தமிழ் வேளாளக் குலத்தவர் -ஆகிய பிரிவினருக்கு வழங்கினர் நாயக்க மன்னர்கள். இதன் விளைவுகளே மேற்கண்ட பாளையப்பட்டுப் பட்டியல்.
இவற்றில் பெரும்பான்மையை நாயக்கர் எடுத்துகொள்ள, தமிழ்க் குலங்களில் ஒன்றான கவுண்டர்களும் பிற தமிழ்க் குலத்தவர் சிலரும் இப்பாளைய முறையில் ஈடுபட்டுச் சொந்த மக்களையே சுரண்டினர். இதுதான், சாதி வடிவத்தின் ஊற்றுக் கண் ஆகும்.
திராவிட / பிராமணருக்கு சேவகம் செய்த, பாதுகாப்பளித்த பல தமிழ்க் குலங்களை அப் பிராமணர், ஆதிக்கச் சாதிகளாக்கினர். அதாவது, அச் சாதிகள் தம்மோடு மோதாமல் அவற்றுக்குள்ளேயே மோதிக் கொள்ளும்படிப் பார்த்துக்கொண்டனர்.
இதற்காகவே, அவர்கள் தமிழ்க் குலத்தினர் சிலரையும் நிலவுடைமைச் சுரண்டல்காரர்களாக வளர்த்துவிட்டனர் எனலாம்.
மேலும் தென்னிந்திய பிராமணரான திராவிட ஆட்சியாளருக்கு, தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் தமக்கெதிராகத் திரும்பிவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அடுத்த நாட்டில் சுரண்டும் எந்தப் பிரிவுக்கும் உள்ள அச்சமே இது. இந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ளவும், இவ்வாறு செய்தனர் எனலாம்.
இந்தத் திராவிடக் கொள்ளை நடத்தப்பட்டபோது, தமிழர்களின் பெரும்பகுதி மக்கள் அனுபவித்த கொடுமைகள் வார்த்தைகளில் விளக்க இயலாதவை. அதுவரை, அறிவார்ந்த குலமாக இருந்த பறையர், பள்ளர், வள்ளுவர், பாணர், கணியர், அம்பட்டர்,சானார் உள்ளிட்டவை கடுமையாக ஒடுக்கப்பட்டன.
உண்மையில், இந்தக் குலங்கள் அனைத்துமே சாதிகளாக மாற்றப்பட்டது, திராவிட ஆட்சியில் தான்...
ஆவடி காவல்துறையின் அராஜகம்.. நீதிபதி தீர்ப்பை மதிக்க மாட்டோம்...
ஜட்ஜு சொல்றதயெல்லாம் நாங்க கேக்க மாட்டோம்.. நள்ளிரவில் நட்டாந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளை வெளியே போகச் சொல்லும் ஆவடி போலிசார்...
உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே இல்லையா, போலீசுடன் போராடும் இளைஞர்கள்..
விடிய விடிய நைட்ல கிளப்பில் கும்மாலம் போடுவதற்கு அனுமதி கொடுப்பீர்கள், தனியார் இடத்தில் உறங்க விவசாயிகளுக்கு அனுமதி இல்லையா ?
யாருய்யா ஆட்சி நடத்தரது தமிழகத்தில் ஹிட்லரின் அண்ணன் தம்பிகளா ? என இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்...
பகவத் கீதையின் மறுபக்கம்...
மகாபாரதம் நடந்த கதையா?
பகவத் கீதை தனியொரு ஆன்மீக நூலாகவும், பாராயணம் செய்ததற்குரிய பக்தி நூலாகவும் கருதப்படுகிறது. ஆனால் இது மகாபாரதம் எனும் பெருங்காப்பியத்தின் ஒரு பகுதியேயாகும்.
பாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் பதினெட்டு நாள் போர் நடக்கிறது, போரின் முதல் நாளன்றே, போர் துவங்கும் நிலையில் பாண்டவர்களுள் ஒருவனாகிய அர்ஜுனன் போரிடத் தயங்குகிறான், எதிர் அணியில் தனது சிற்றப்பன், ஒன்று விட்ட சகோதரனும், மாமனும், குல குருவும் ஆகிய நெருங்கிய உறவினரவினர் இருப்பதே இதற்குக் காரணம்.
அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வருகிற கண்ணன் அவனுக்குத் தெளிவும் அறிவும் புகட்டி போரிடுமாறு தூண்டுகிறான்.
இப்படி கண்ணனின் கூற்றாக வரும் பகுதியே பகவத் கீதை எனப்படுகிறது.
ஆயினும் உண்மை நிலை என்னவென்றால் மகாபாரதமே நிகழ்ச்சியல்ல, அது வெறும் கற்பனையே இதுபற்றி பல அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
தொன்மையான நூல்களாக இருக்கும் வேத கால இலக்கியங்களிலும் பிராமணங்கள், சூத்திரங்கள் ஆகியவற்றிலும் பாண்டவர்கள் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை.
கீழை நாட்டுப் புனித நூல்களை, ஆங்கிலத்தில் பெயர்த்த ஜெர்மனிய அறிஞர் மாக்ஸ்முல்லர் என்பாரும், பாண்டவர்கள் பற்றிய குறிப்பு பண்டைய நூல்களில் இல்லை என்றே கூறுகிறார்.
தொன்மையான வட மொழி இலக்கண நூலை இயற்றிய பாணினியும் பாண்டவர் பற்றி பேசவில்லை.
கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தையதான இந்த நூலில் பாண்டவர்களைப்பற்றி எந்த விதமான குறிப்பும் இல்லை என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.
சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த பாரதப்போர் உண்மையிலேயே நடைபெற்றிருந்தால், மேற்குறிப்பிட்ட வேத கால நூல்களில் சிறு குறிப்பாவது இடம் பெற்றிருக்கலாம் அல்லவா ?
எனவே தான் ஆராய்ச்சியாளர்கள் மகாபாரதம் ஒரு கற்பனை என கூறுகின்றனர்.
வரலாற்று ஆராய்ச்சி அறிஞர் தர்மானந்த கோசாம்பி என்பார் பண்டைய இந்திய பண்பாடு, நாகரீகம் பற்றி வரலாறு எனும் நூலை எழுதியுள்ளார், அந்நூலில் மகாபாரதம் பற்றி சற்று விரிவாகவே ஆய்வு செய்கிறார், உண்மையாகவே பதினெட்டு நாள் போர் நடந்திருந்தால், பாரதப்போர் அநேகமாக கி, மு 850 - ஆண்டை ஒட்டிய காலப்பகுதியாக இருக்கலாம், ஆயினும் அந்த நிகழ்ச்சிக்கு வேண்டுமென்றே ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மகாபாரதம் நடந்ததாக குறிக்கப்படும் அஸ்தினாபுரம் என்னும் நகரில் பூரு- குரு எனும் பரம்பரையினரே வாழ்ந்து வந்ததாக தெரிகிறது, பாண்டு புத்திரர்கள் என்பார் இப்போது டில்லியை அடுத்துள்ள இந்திரபிரஸ்தம் எனும் பகுதியில் காடுகளை அழித்து நிலங்களை திருத்தி உழுது பயிரிட்டனர், அப்போது அடுத்ததுடுத்து வாழ்ந்த இரண்டு உறவுக்கார அரச குடும்பங்களிடையில் போர் நிகழ்ந்தது, ஆயினும் அதில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர் என்பதெல்லாம் வெறும் கற்பனையே, குரு வம்சத்தினர் எந்த காலத்திலும் பேரரசுகளாக இருந்ததில்லை, அவ்வம்சத்தை சார்ந்த பரீட்சித்து மன்னர் தட்ச சீலத்தில் முடி சூட்டிக்கொண்டார் என்று கூறபடுகிறது, ஆனால் அந்நாளைய தட்சசீலம் என்பது ஒரு சிறு கிராமமே தவிர பேரு நகரமல்ல.
எனவே மகாபாரதம் என்பது கற்பனையில் உதித்த தெய்வீகத்தை அடிப்படையாக கொண்ட வெறும் கற்பனைக்கதை.
அக்காலத்திய மரபுப்படி இதனுடைய தோற்றத்தையும், வளர்ச்சியையும் தனிப்பட்ட வள்ளல் யாரும் ஆதரித்ததாக தெரியவில்லை.
பாடுவதை தொழிலாகக் கொண்ட பாணர்கள் தொடக்க நிலையில் இக்கதையினை மிகச்சிறிய அளவில் பாடியிருக்க வேண்டும், காலப்போக்கில் இக்கதையினை பிராமணர்கள் திருத்தியும் பதுக்கியும் பெரிது படித்தி இருக்க வேண்டும்.
புதிய பதிப்புகளை அவ்வப்போது வெளிக்கொண்டு வந்த ஆரியர்கள், பலதரப்பட்ட வாசகர்களை கவரும் நோக்கமுடன் புராணங்கள், அக்காலத்திய தெய்வீக கதைகள் ஆகியவற்றிலிருந்து வேண்டும் பகுதியை எடுத்து இக்காவியத்தில் சேர்த்தனர், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காவியங்களில் வழங்கிய கதைகளை இக்காப்பியத்துடன் இணைத்ததால் , காப்பிய அளவும் பெரிதாக போய்விட்டது.
இக்காப்பியத்தில் போர்க் கதைகளும் பிற நிகழ்சிகளும் சேர்க்கப்படுகிற மரபு கி,பி 2- ஆம் நூற்றாண்டோடு நின்று விடவில்லை, கி,பி 19- ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்து வந்துள்ளது.
பவுத்த மதக்கொள்கைகள் வேரூன்றி இருந்த நிலையில் தனது வைதீக மதத்தினை பரப்பும் நோக்கமுடன் பிராமணர்கள் ஆண்டவன் பெயரால் கீதையினை மகாபாரதத்திற்குள் நுழைத்து விட்டனர், கீதையில் வருகிற சமஸ்கிரத மொழியின் இலக்கண நடையும் கூட கி,பி, மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்ப்பட்டதாகத்தான் தெரிகிறது.
ஜெர்மனி அறிஞர் மாக்ஸ் முல்லர் எழுதிய வடமொழி இலக்கிய வரலாறு, எனும் நூலிலும் மகாபாரதப் போரைப் பற்றி நான்கு வேதங்களிலும் எந்த வித குறிப்பும் இல்லை என்று கூறுகிறார்.
குருட்சேத்திரம் எனும் ஊரைப்பற்றி குறிப்பு இருந்தாலும் அது போர் நடந்த இடமாக சுட்டிக்காட்டப் பெறவில்லை, வியாசர், வைசாம்பயா என்பார் மகாபாரதத்தின் தொடக்க நிலை நூலாசிரியர்கள் என்ற குறிப்பும் காணப்படவில்லை, சகத் சாமித எனும் பண்டைய நூலில், திருதினாட்டிணன் பற்றி குறிப்பு இருந்தாலும், பாரதப்போர் பற்றிய செய்தி எதுவும் இல்லை,
மகாபாரதக் காப்பியம் அர்ஜுனனை இந்திரனது இயற்க்கைப் புதல்வன் என்கிறது, சதபதப்பிராமணம் எனும் நூலில் இந்திரனும் அர்ஜுனனும் ஒருவனே என்று கூறுகிறது.
பாரதத்தில் வருகின்ற புள்ளி விவரப்படி 11 அக்குரோணி சேனைகள் கவுரவரிடமும், 7 அக்குரோணி சேனைகள் பாண்டவரிடமும் இருந்தன, அதாவது 3,93,660 ரதங்கள், 3,93,600 யானைகளும், 11,180,980 குதிரைகளும், 19,78,300 வீரர்களும், போர்க்களத்தில் அணிவகுத்து நின்றனவாம், இத்தகைய பிரம்மாண்டமான சேனை, போர்க்களம் எங்காவது இருக்க முடியுமா?
அபாரக் கர்ப்பனை இது என்பது தவிர வேற என்ன சொல்ல முடியும்?
இவையெல்லாம் பகுத்தறிவிற்க்குப் போருந்துமா என்று எண்ணிப் பாருங்கள்...
Subscribe to:
Posts (Atom)