07/04/2017

பகவத் கீதையின் மறுபக்கம்...

                         
             

மகாபாரதம் நடந்த கதையா?

பகவத் கீதை தனியொரு ஆன்மீக நூலாகவும், பாராயணம் செய்ததற்குரிய பக்தி நூலாகவும்  கருதப்படுகிறது. ஆனால் இது மகாபாரதம் எனும் பெருங்காப்பியத்தின் ஒரு பகுதியேயாகும்.

பாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் பதினெட்டு நாள் போர் நடக்கிறது, போரின் முதல் நாளன்றே, போர் துவங்கும் நிலையில் பாண்டவர்களுள் ஒருவனாகிய அர்ஜுனன் போரிடத் தயங்குகிறான், எதிர் அணியில் தனது சிற்றப்பன், ஒன்று விட்ட சகோதரனும், மாமனும், குல குருவும் ஆகிய  நெருங்கிய உறவினரவினர் இருப்பதே இதற்குக் காரணம்.

அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வருகிற கண்ணன் அவனுக்குத் தெளிவும் அறிவும் புகட்டி போரிடுமாறு தூண்டுகிறான்.

இப்படி கண்ணனின் கூற்றாக வரும் பகுதியே பகவத் கீதை எனப்படுகிறது.

ஆயினும் உண்மை நிலை என்னவென்றால் மகாபாரதமே நிகழ்ச்சியல்ல, அது  வெறும் கற்பனையே இதுபற்றி பல அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

தொன்மையான நூல்களாக இருக்கும் வேத கால இலக்கியங்களிலும் பிராமணங்கள், சூத்திரங்கள் ஆகியவற்றிலும் பாண்டவர்கள் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை.

கீழை நாட்டுப் புனித நூல்களை, ஆங்கிலத்தில் பெயர்த்த ஜெர்மனிய அறிஞர் மாக்ஸ்முல்லர் என்பாரும், பாண்டவர்கள் பற்றிய குறிப்பு பண்டைய நூல்களில் இல்லை என்றே கூறுகிறார்.

தொன்மையான வட மொழி இலக்கண நூலை இயற்றிய பாணினியும் பாண்டவர் பற்றி பேசவில்லை.

கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தையதான இந்த நூலில் பாண்டவர்களைப்பற்றி எந்த விதமான குறிப்பும் இல்லை என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த பாரதப்போர் உண்மையிலேயே நடைபெற்றிருந்தால், மேற்குறிப்பிட்ட வேத கால நூல்களில் சிறு குறிப்பாவது இடம் பெற்றிருக்கலாம் அல்லவா ?

எனவே தான் ஆராய்ச்சியாளர்கள் மகாபாரதம் ஒரு கற்பனை என கூறுகின்றனர்.

வரலாற்று ஆராய்ச்சி அறிஞர் தர்மானந்த கோசாம்பி என்பார் பண்டைய இந்திய பண்பாடு, நாகரீகம் பற்றி வரலாறு எனும் நூலை எழுதியுள்ளார், அந்நூலில் மகாபாரதம் பற்றி சற்று விரிவாகவே ஆய்வு செய்கிறார், உண்மையாகவே பதினெட்டு நாள் போர் நடந்திருந்தால், பாரதப்போர் அநேகமாக கி, மு 850 - ஆண்டை ஒட்டிய காலப்பகுதியாக இருக்கலாம், ஆயினும் அந்த நிகழ்ச்சிக்கு வேண்டுமென்றே ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மகாபாரதம் நடந்ததாக குறிக்கப்படும் அஸ்தினாபுரம் என்னும் நகரில் பூரு- குரு எனும் பரம்பரையினரே வாழ்ந்து வந்ததாக தெரிகிறது, பாண்டு புத்திரர்கள் என்பார் இப்போது டில்லியை அடுத்துள்ள இந்திரபிரஸ்தம் எனும் பகுதியில் காடுகளை அழித்து நிலங்களை திருத்தி உழுது பயிரிட்டனர், அப்போது அடுத்ததுடுத்து வாழ்ந்த இரண்டு உறவுக்கார அரச குடும்பங்களிடையில் போர் நிகழ்ந்தது, ஆயினும் அதில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர் என்பதெல்லாம் வெறும் கற்பனையே, குரு வம்சத்தினர் எந்த காலத்திலும் பேரரசுகளாக இருந்ததில்லை, அவ்வம்சத்தை சார்ந்த பரீட்சித்து மன்னர் தட்ச சீலத்தில் முடி சூட்டிக்கொண்டார் என்று கூறபடுகிறது, ஆனால் அந்நாளைய தட்சசீலம் என்பது ஒரு சிறு கிராமமே தவிர பேரு நகரமல்ல.

எனவே மகாபாரதம் என்பது கற்பனையில் உதித்த தெய்வீகத்தை அடிப்படையாக கொண்ட வெறும் கற்பனைக்கதை.

அக்காலத்திய மரபுப்படி இதனுடைய தோற்றத்தையும், வளர்ச்சியையும் தனிப்பட்ட வள்ளல் யாரும் ஆதரித்ததாக தெரியவில்லை.

பாடுவதை தொழிலாகக் கொண்ட பாணர்கள் தொடக்க நிலையில் இக்கதையினை மிகச்சிறிய அளவில் பாடியிருக்க வேண்டும், காலப்போக்கில் இக்கதையினை பிராமணர்கள் திருத்தியும் பதுக்கியும் பெரிது படித்தி இருக்க வேண்டும்.

புதிய பதிப்புகளை அவ்வப்போது வெளிக்கொண்டு வந்த ஆரியர்கள், பலதரப்பட்ட வாசகர்களை கவரும் நோக்கமுடன் புராணங்கள், அக்காலத்திய தெய்வீக கதைகள் ஆகியவற்றிலிருந்து வேண்டும் பகுதியை எடுத்து இக்காவியத்தில் சேர்த்தனர், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காவியங்களில் வழங்கிய கதைகளை இக்காப்பியத்துடன் இணைத்ததால் , காப்பிய அளவும் பெரிதாக போய்விட்டது.

இக்காப்பியத்தில் போர்க் கதைகளும் பிற நிகழ்சிகளும் சேர்க்கப்படுகிற மரபு  கி,பி 2- ஆம் நூற்றாண்டோடு  நின்று விடவில்லை, கி,பி 19- ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்து வந்துள்ளது.

பவுத்த மதக்கொள்கைகள் வேரூன்றி இருந்த நிலையில் தனது வைதீக மதத்தினை பரப்பும் நோக்கமுடன் பிராமணர்கள் ஆண்டவன் பெயரால் கீதையினை மகாபாரதத்திற்குள் நுழைத்து விட்டனர், கீதையில் வருகிற சமஸ்கிரத மொழியின் இலக்கண நடையும் கூட கி,பி, மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்ப்பட்டதாகத்தான் தெரிகிறது.

ஜெர்மனி அறிஞர் மாக்ஸ் முல்லர் எழுதிய வடமொழி இலக்கிய வரலாறு, எனும் நூலிலும் மகாபாரதப் போரைப் பற்றி நான்கு வேதங்களிலும் எந்த வித குறிப்பும் இல்லை என்று கூறுகிறார்.

குருட்சேத்திரம் எனும் ஊரைப்பற்றி குறிப்பு இருந்தாலும் அது போர் நடந்த இடமாக சுட்டிக்காட்டப் பெறவில்லை, வியாசர், வைசாம்பயா என்பார் மகாபாரதத்தின் தொடக்க நிலை நூலாசிரியர்கள் என்ற குறிப்பும் காணப்படவில்லை, சகத் சாமித எனும் பண்டைய நூலில், திருதினாட்டிணன் பற்றி குறிப்பு இருந்தாலும், பாரதப்போர் பற்றிய செய்தி எதுவும் இல்லை,

மகாபாரதக் காப்பியம் அர்ஜுனனை இந்திரனது இயற்க்கைப் புதல்வன்  என்கிறது, சதபதப்பிராமணம்  எனும் நூலில் இந்திரனும் அர்ஜுனனும் ஒருவனே என்று கூறுகிறது.

பாரதத்தில் வருகின்ற புள்ளி விவரப்படி 11 அக்குரோணி சேனைகள் கவுரவரிடமும், 7 அக்குரோணி சேனைகள் பாண்டவரிடமும் இருந்தன, அதாவது 3,93,660 ரதங்கள், 3,93,600 யானைகளும், 11,180,980 குதிரைகளும், 19,78,300 வீரர்களும், போர்க்களத்தில் அணிவகுத்து நின்றனவாம், இத்தகைய பிரம்மாண்டமான சேனை, போர்க்களம் எங்காவது இருக்க முடியுமா?

அபாரக் கர்ப்பனை இது என்பது தவிர வேற என்ன சொல்ல முடியும்?

இவையெல்லாம் பகுத்தறிவிற்க்குப் போருந்துமா என்று எண்ணிப் பாருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.