18/01/2018

காவிரிக்காக கன்னடனை கைக்கட்டி அமரவைத்த தமிழன் மாவீரன் வீரப்பன்...


நான்கு மாநில போலிசாரையே நடு நடுங்க வைத்த நாயகன்...

கிழக்கு தொடர்ச்சி மலையும்
மேற்கு தொடர்ச்சி மலையும் இணையும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகளுக்கு நடுவே வாழ்ந்து வந்த ஒற்றை காட்டுசிங்கம் வீர தமிழன்  மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு  பிறந்தநாள் வாழ்த்துகள்...

தமிழ்மொழி மீட்புப் போராளி ப.சீவானந்தம் நினைவு நாள் - 18.1.1963...


கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீய, ஆரிய, கிரேக்க, இலத்தீன், மெக்ஸிக்கன், பெருவியன் மொழிகள் வழக்கொழிந்து போய் விட்டன. அத்துணைத் தொன்மையான தமிழ் மொழி இன்னும் உயிரோடு கன்னித் தமிழாக விளங்குகிறது.

மொழியை முதலாளி மொழியன்றோ, தொழிலாளி மொழியன்றோ  எந்த ஒரு வர்க்கமும் தனி உரிமை கொண்டாட முடியாது. மொழி சமுதாய மக்களின் ஒவ்வொரு துளிக்கும் முழுக்கடலுக்கும் சொந்தம்.

எந்த மொழியும் ஒரு தனி வர்கத்தின் கருவியல்ல.

சமுதாய மக்கள் பரஸ்பரம் சகல விதத்திலும் ஈடுபாடு கொள்வதற்கும், உறவு கொண்டாடுவதற்கும் இன்றியமையாத கருவி மொழி.

புதிய புதிய சமூக அமைப்புகள் தோன்றும் பொழுது, புதிய புதிய உற்பத்தி முறைகளும், ஒட்டுறவுகளும், ஆட்சி அமைப்புகளும், வாணிபப் போக்குகளும், பண்பாட்டு வெளியீடுகளும், இன்னோரென்னவைகளும் தோன்றும். மொழி இவைகளை எல்லாம் பிரதிபலிக்க வேண்டும். மொழி அல்லது சொல்லகராதி சர்வசதா மாறுதலுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற தொழிலும், விவசாயமும், வர்த்தகமும், போக்குவரத்தும், தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் தாங்கள் செயல்படும் பொருட்டுப் புதிய சொற்களாலும், வெளியீடுகளாலும் ஒவ்வொரு மொழியும்  சொல்லகராதியைப் பெருக்கிச் செழிப்படையச் செய்ய வேண்டுமென்று தேவைப்படுகின்றன. தேவைக்குத் தக்கபடி வேர்ச்சொல் தொகுதியைப் பெருக்கவோ சொல்லகராதியை வளப்படுத்தவோ கொஞ்சமும் தயக்கம் காட்டுதல் கூடாது.

இவ்வாறு செய்தால்தான், எந்த மொழியும் சமுதாயத்தின் சகல ஈடுபாடுகளுக்கும், உறவு முறைகளுக்கும் பயன்படும். அவ்வாறு பயன்படாத மொழி அழிந்தொழிந்து போகும்.

அன்றிருந்த தமிழர்கள் அன்றைய நிலைமைக்குத் தக்கபடி சொற்களை உற்பத்தி செய்தனர். அதே போல் இன்றையத் தமிழர்களும்  இன்றைய வளர்ச்சிக்குத் தக்கபடி தமிழில் சொற்களை உற்பத்தி செய்ய முடியும். சிறந்த வேர்ச்சொல் தொகுதியும் அற்புதமான இலக்கண முறையும் கொண்டது நமது தாய்மொழியாம் தமிழ்மொழி.

டாக்டர் நீரா.சீனிவாசன் போன்ற புதிய புதிய எழுத்தாளர்கள் சகல விஞ்ஞான உண்மைகளையும் தமிழில் கூற முடியுமென்று முன் வந்திருக்கிறார்கள். ஒரு சாதாரண யந்திரத் தொழிலாளியிடம் பேசிப்பார்த்தால் அவன் நவீன தொழில் முறை நுட்பங்களைத் தமிழில் அனாயாசமாக வெளியிடுவதைப் பார்க்கலாம். எத்தகையப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் தமிழில் பேசவும் எழுதவும் வல்லார் எண்ணிக்கைத் தமிழர்களிடையில் பெருகி வருகிறது.

சோவியத் யூனியனில் ரஷ்ய மொழியில் மட்டுமல்ல, அண்மையில் வளர்ச்சியடைந்த உக்ரேனியன், பைலோரஷ்யன், எஸ்டோனியன், லாட்வியன், லிதுவேனியன் போன்ற ஐரோப்பிய மொழிகளில் மட்டுமல்ல, மத்திய ஆசிய மொழிகளான உஸ்பெக், காஷக், அர்மேனியன், தாத்தார், அஜர்பைஜான், பாஷ்கீர், டாக்மென் மொழிகளிலும் சகல பொருள்களையும் கற்றுக் கொடுக்கின்றனர்.

தமிழ் நாட்டில் தேசியக்கல்வி நடைபெற வேண்டுமாயின் அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ்பாசையில் நடத்த வேண்டும் என்பது பொருள் என்று பாரதி 'தேசியக் கல்வி' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.. என்று பாரதி தமிழ் மக்களை அழைக்கிறார்.

- ப.சீவானந்தம்.

- 14.4.1962இல் சீவானந்தம் எழுதியது...

நமக்குள் இருக்கும் சக்தி...


நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகாசக்தி இருக்கிறது. அது நம்முடைய பார்வைக்குத் தெரியாவிட்டாலும் கூட நம்மால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாதமான பலன்களைப் பெற முடியும்.

இந்த உலகம் பார்த்திருக்கிற புதிய கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், மருத்துவ சிகிச்சைகள், புத்தகங்கள், இசைத் தொகுப்புகள், இன்னும் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாமே இந்த ஒரு சக்தியின் துணையோடு உருவாக்கப்பட்டவை தான்.

சராசரி மனித மனதில் நல்ல சிந்தனைகள், கெட்ட சிந்தனைகள் இரண்டுமே உண்டு. அவற்றின் விகிதம் மாறலாமேதவிர, முழுக்க முழுக்க நல்லதைமட்டுமே நினைக்கிறவர் என்று யாரும் கிடையாது.

வெறுப்புச் சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைந்து அன்புச் சிந்தனைகளை ஊக்குவித்து வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, செயல்திறன், சாதனைகள் என்று படிப்படியாக மேலே அழைத்துச் செல்கிறது.

நமக்குள் இருக்கும் அந்தச் சக்தியை அடையாளம் காண்பது எப்படி? அதை வெளிக் கொண்டு வருவது எப்படி?

எதையும் சாதிக்கக்கூடிய இந்தப் ‘சக்தி’ பூட்டைத் திறப்பதற்கு மூன்று சாவிகள் உள்ளன. அவை...

1. அன்புச் சாவி
2. நன்றிச் சாவி
3. விளையாட்டுச் சாவி

1. அன்புச் சாவி...

உலகின் மிக உன்னதமான ஆற்றல், அன்புதான். அதைக் கொண்டு எந்தக் கதவையும் திறந்துவிடலாம்.

ஒரு மனிதரை, ஒரு குடும்பத்தை, ஒரு வீட்டை, ஒரு நாட்டை மட்டும் நேசித்தால் போதாது. ஒட்டுமொத்த உலகத்தையும் மானுட குலத்தையும் நேசிக்கப் பழகுங்கள். அதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அழகாகும்.

நீங்கள் எதையெல்லாம், யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? மனத்துக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்த அன்புப் பட்டியலில் உள்ளவர்கள் மத்தியிலேயே அதிக நேரம் செலவிடுங்கள்.

அதன்மூலம் ஏற்படுகிற மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களுடைய செயல் திறனை உயர்த்தும், உங்களை ஒரு புதிய மனிதராக மாற்றிவிடும்.

2. நன்றிச் சாவி...

வாழ்க்கை இதுவரை உங்களுக்குத் தந்திருக்கிற, தந்து கொண்டிருக்கிற, இனி தரப்போகிற எல்லா விஷயங்களுக்காகவும் மனமார நன்றி சொல்லிப் பழகுங்கள். உரக்கச் சொல்ல வேண்டாம், மனத்துக்குள் அதை உணர்ந்தாலே போதும்.

நீங்கள் சந்திக்கிற எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவுகிறார்கள், ஏதாவது பாடம் சொல்லித்தருகிறார்கள். அந்த உதவி சிறியதோ, பெரியதோ, வாய் திறந்து நன்றி சொல்லுங்கள். உலகம் உங்களை இன்னும் நேசிக்கும். உங்களுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள்.

3. விளையாட்டுச் சாவி...

வாழ்க்கை என்பது சீரியஸான மேட்டர் அல்ல. மனம் விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், சும்மா பூந்து விளையாடுங்க..

சிறுவயதில் நாமெல்லாம் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தான். வயது ஏற ஏற, விளையாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.

அதனால் தான் அநாவசியப் பதற்றம், பரபரப்பு, டென்ஷன் எல்லாமே.

சின்ன வயதில் விளையாட்டாய் நிறைய கற்பனைகள் செய்வோம். ஆனால் வயது ஏறும்போது கற்பனைகளைக் குறைத்து விடுகிறோம்.

கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய வரம். அதை வைத்துக் கொண்டு நாம் எங்கேயும் பயணம் செய்யலாம். நம்முடைய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கற்பனைக் குதிரைக்கு ஓய்வே கொடுக்காதீர்கள். தொடர்ந்து ஓட விடுங்கள். அது மேலும் மேலும் புதிய இலக்குகளை கற்பனை செய்யட்டும். அதன்மீது உட்கார்ந்து சவாரி செய்யும் நீங்களும் புதுப்புது சிகரங்களைத் தொடுவீர்கள்.

நம்பிக்கை உள்ள ஒருவருக்கு எதுவும் சாத்தியம் என்கிறது பைபிள். நம் ஊரிலும் நம்பினோர் கெடுவதில்லை என்று ஒரு வாசகம் உண்டு.

மகாசக்தி எது என்று உங்களுக்கு புரியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. அப்படி ஒன்று உங்களுக்குள் எங்கேயோ இருக்கிறது என்று நம்பிக்கை மட்டும் வைத்து, அன்பு, நன்றி, விளையாட்டு என்கிற மூன்று சாவிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாமே...

இது என்னடா நோட்டாவுக்கு வந்த சோதனை...


திவாகரன் பேட்டி, நாளை நடக்கவிருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ரத்து செய்த அப்பல்லோ...


தனது மருத்துவமனைக்கு தொண்டர்களால் ஆபத்து வந்து விடும் என்பதற்காக அப்பல்லோ ரெட்டி தான் ஜெ மரணத்தை தாமதமாக அறிவிக்க சொன்னார் என்ற கருத்தில் திவாகரன் பேசியிருந்தார்...

கார்பரேட் வியாபார உண்மைகள்...


திறந்தவெளியில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை...


திருவள்ளூர் மாவட்டம் தலைமை அரசு மருத்துவமனையில் இன்று காலை ஒருவருடைய உடலுக்கு திறந்தவெளியில் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பான வீடியோ செய்தி சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

இந்நிலையில் திறந்தவெளியில் நடந்த இந்த உடற்கூறு ஆய்வு குறித்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் தயாளன் விளக்கம் அளிக்குமாறு தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்...

தமிழ்நாட்டிலுள்ள காளை நாட்டு மாடுகள் வகைப்பட்டியல்...


இதில் பல மாடுவகைகள் பீட்டாவால் ஏற்கனவே அழிக்க பட்டுவிட்டது...

அழிவை நோக்கி எண்ணூர், ஏற்கனவே எண்ணூரில் பல பகுதிகளை மத்திய அரசு நிறுவனங்களும், மாநில அரசு நிறுவனங்களும் ஆக்கிரமித்து பல தொழிற்ச்சாலைகளை கட்டி விட்டன...


அதனால் ஏற்கனவே எண்ணூரில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது..

இது மாசு கட்டுப்பட்டு வாரியத்துக்கு தெரிந்தும் ரூபாய் நோட்டுகளை நாய் மாதிரி கவ்விக் கொண்டு இன்றும் அமைதியாக இருக்கிறார்கள்..

இது பேதாது என்று தற்போது எண்ணூரில் ஆறே இல்லை என்று அரசு நிறுவனங்களே போலியாக ஒரு வரைபடத்தை தயாரித்து ஆற்றை அபகரித்து அதில் கட்டிடத்தை கட்டி எண்ணூரை மட்டுமல்ல மொத்த சென்னையையும் அழிக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சென்னை வெள்ளத்தை வடிய வைத்ததில் பாதி பங்கு கொசஸ்தலை ஆற்றிற்க்கு உள்ளது..

தற்போது அந்த ஆற்றையே கொள்ளையடிக்க முடிவு செய்துவிட்டனர்.

இளைஞர்களே ஜல்லிக்கட்டு, கதிராமங்களத்திற்கு குரல் கொடுத்த நீங்கள் தயவு செய்து எண்ணூருக்கும் குரல் கொடுங்கள்...

தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்...


1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி.. மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது...

புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்தபிராமணரும்-பஞ்சமரும் ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள், தமிழரும் அல்லாதார் என்றுஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.

ஹும்.. இந்த பாஷை சரிப்படாது..

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்...

தமிழ் வேளாளர் ஒருவர்,இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும், தெலுங்கர்கள் என்றும்...

தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்...

- பாரதி தமிழ்: பக்.403...

டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதா இறந்து விட்டார் - திவாகரன்...


கோவில்பட்டி அருகே சாலை மற்றும் வாறுகால் ஆகியவற்றை சீர் செய்ய வலியுறுத்தி நாற்று நாடும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்...


கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு ஊராட்சிக்குட்பட்ட பகுதி கணேஸ்நகர். இந்த பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடியிறுப்புகள் உள்ளன. இங்குள்ள சாலைகள் அனைத்து முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் போதிய வாறுகால் வசதி இல்லாத காரணத்தினாலும், இருக்கின்ற வாறுகால்கள் பாரமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் சாலைகள் முழுவதும் சாக்கடை நீர் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் டெங்கு காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளதால் இவற்றை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மற்றும் வாறுகால் ஆகியவற்றை சீர் செய்யவேண்டும், டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேதமடைந்த, சாக்கடை நீர் தேங்கி இருக்கும் சாலையில் மல்லி, தக்காளி செடி நாற்றுக்களை நட்டி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர செயலாளர் பரமராஜ், தாலூகா செயலாளர் பாபு, தாலூகா குழு உதவி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஸ், மந்திதாப்பு கிளை உறுப்பினர்கள் செண்பகராஜ்,மாரியப்பன், தாலூகா பொருளாளர் முப்பிடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்...

தமிழர்கள் புறங்கணிக்கப்படுவது சிறந்த உதாரணம்...


சூரியன் - சந்திரன் தூய தமிழ்ச் சொற்கள்...


சூரியன் - சமஸ்கிருத சொல்..

கதிரவன், ஞாயிறு, பகலவன், ஆதவன், அனலி, எல்லி, கனலி, வெய்யவன், அருக்கன், பரிதி - தூய தமிழ்ச் சொற்கள்..

சந்திரன் - சமஸ்கிருத சொல்..

நிலா, மதி, திங்கள், அம்புலி, நிலவு - தூய தமிழ்ச் சொற்கள்...

நம் விதியும் மாறக் கூடியது...


வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட..

வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடுகிறோம்..

கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்... இப்படி நிறைய வேண்டாம் கள் உண்டு.

நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்கிறோம்...

எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது..

வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்..

பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான்.

நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி..

நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது. காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.

அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம்.

நோய் வேண்டாம் என்று எண்ணுவதை விட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம்.

சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.

கடன்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெருப்பின். எப்படி செல்வம் வரும் என நம்புவது? என்று கேட்கலாம்.

எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை, எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது? என்பதும் நியாயமான கேள்வி தான்..

என்ன பேசினாலும் சண்டையில் தான் முடிகிறது என்பதும் இருக்கக்கூடும்..

உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும்.

எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்..

எண்ணம் மாறக்கூடியது என்றால் செயலும் மாறக்கூடியது. நம் விதியும் மாறக்கூடியது.

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத் தான்...

நேற்று ஜிக்னேஷ் மேவானி-பத்திரிக்கையாளர்கள் பிரச்னையில்....


இதுவரை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தாத நரேந்திர மோடியை எதிர்த்து இவர்கள் இப்படி செய்வார்களா என்று பல பதிவுகளை பார்த்தேன். மோடி வரையில் ஏன் போக வேண்டும்? எச்.ராஜாவுக்கு எதிராக என்ன செய்து கிழித்துவிட்டோம்?

அசௌகர்யமாக கேள்வி கேட்ட பல ஊடகவியலாளர்களை சமூக விரோதி என்று அந்த சந்திப்புகளின் போதே திட்டியிருக்கிறார் ராஜா. நாம் சும்மாதானே இருந்தோம்?

கடந்த வருடம் மார்ச் மாதம் தஞ்சாவூரில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிக்கையாளர் விவசாய நெருக்கடி பற்றி ராஜாவிடம் கேள்வி எழுப்பினார். அவரை தேசத் துரோகி, மோடி எதிரி என்று வசை பாடியதோடு “எவ்வளவு வரி கட்டியிருக்கிறீர்கள், அதை திருப்பித் தந்து விடுகிறேன்” என்று மிரட்டினார் ராஜா. அதன் பிறகு தமிழக ஊடக சூழலில் ஒரு சிறு அதிர்வு கூட ஏற்படவில்லை.

தஞ்சாவூரில் (அநேகமாக) ஒரு தமிழ் பத்திரிக்கையாளருக்கு அவமானம் நேர்ந்தால் அது எச்.ராஜாவின் சுதந்திரம். சென்னையில் தன்னை வன்மத்தோடு தொடர்ந்து வரும் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி தரமாட்டேன் என்று சொன்னால் அது ஜிக்னேஷ் மேவானியின் திமிர். எவ்வளவு மேட்டிமைத்தனம் நம்மிடம்?

நம் அதிகாரம், சுதந்திரம் எல்லாம் ஜிக்னேஷ் மேவானியை மட்டுமே புறக்கணிக்க உதவும். எச்.ராஜாவின் நிழலை கூட தொடாது...

தமிழ்நாடு மக்கள் வடநாட்டில உள்ள கல்லூரியில மரணம் அடைவது இப்போது வாடிக்கையாகிட்டு திட்டமிட்டு தமிழக மாணவர்களை சிதைக்கிறார்களா என்ற சந்தேகம் வலுக்கிறது...


நேரு, எய்ம்ஸ் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில உள்ள பல்கலைக்கழகத்தில் தான் இந்த நிலை...

உடனே குற்றவாளிகள் தண்டிக்க பட வேண்டும்...

நெய்வேலி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீஸ் விசாரணை...


கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொல்லுகாரன் குட்டையில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு...

இன்று கைபேசி வழியாக குறுந்தகவல் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக செய்திகளை அனுப்பியுள்ளதை அடுத்து தனியார் பள்ளியை...

காடாம்புலியூர் காவல்துறை விரைந்து வந்து பள்ளியை மோப்ப நாய்கள் கொண்டும்...

வெடிகுண்டு செயலிழக்க செய்யும் சிறப்பு காவல் பிரிவும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்..

இட்லி சாப்பிடும் போட்டியில் தொழிலாளி பலி...


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இட்லி சாப்பிடும் போட்டி ஒன்று நடந்தது.

இப்போட்டியில் பங்கேற்ற சின்னத்தம்பி என்ற கூலித் தொழிலாளி அவசர அவசரமாக இட்லிகளை சாப்பிட்டார்.

அப்போது ஒரு இட்லி அவருடைய தொண்டையில் சிக்கிக் கொண்டதால், சிறிது நேரத்திலேயே அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

தெலுங்கர்கள் தமிழகத்தில் தமிழராக வாழும் போது கிளிக்கியது...


இந்தி படித்தால் வட இந்தியாவில் வெட்டி கிழிச்சுருவேன் என்று அரைவேக்காட்டுத்தனமா பேசிகிட்டு இருக்கிற மானங்கெட்ட முட்டாள்களே...



நீ வடநாட்டிற்கு போனால் உன்னை இளக்காரமா தான் பார்ப்பான்... நீ பொணமாக தான் ஊருக்கு திரும்பி வருவா....

இந்தியன்-மண்ணாங்கட்டி என்று சொன்னாலும் வட இந்தியக்காரன் உன்னை எதிரியா தான் பார்ப்பான்...

இந்தியன் என்பது மாயை... தமிழர்களின் வளங்களை கொள்ளையடிக்க இந்திக்காரன்களால் உருவாக்கப்படும் போதை...

மீனவர்கள் தமிழ்நாட்டில் வாழ தகுதியற்றவர்களா....?


ஒவ்வொரு தமிழனும் மீனவனுக்காக  பகிருங்கள்...

தனிகட்சி துவங்கும் நிலை தற்போது ஏற்படவில்லை, அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் - டிடிவி தினகரன் அறிவிப்பு...


கைவிட வேண்டிய பத்து விஷயங்கள்...


1. வெறுப்பை கைவிடுங்கள். நீங்கள் விரும்பவதில் கவனம் செலுத்துங்கள்.

2. கடந்த காலத்தை கைவிடுங்கள், அதில் கற்ற பாடங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

3. கனகச்சிதமாகத் தான் இருப்பேன் என்ற கருத்தை கைவிடுங்கள்.

4. மக்களை எப்பொழுதும் மகிழ்விப்பராக இருப்பதை கைவிடுங்கள்.

5. எதிர்மறையான சுய பேச்சை கைவிடுங்கள்.

6. வீண் பேச்சுகளையும், எடை போடுவதையும் கைவிடுங்கள்.

7. உங்களை தாழ்த்தி நடத்த்த்துபவர்களை கைவிடுங்கள்.

8. கோபத்தால் வெகுண்டெழுவதை கைவிடுங்கள்.அமைதி தான் ஆற்றல்.

9. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிருங்கள்.

10. வருத்தப்படுவதை கைவிடுங்கள். எல்லாமே ஒரு காரணத்துக்காகத் தான் நடக்கிறது...

நம் கணிதத்தின் அற்புதம்...


பெங்களூருவை சுற்றி உள்ள பகுதிகளில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதாக செய்தி வெளிவந்துள்ளதால் தமிழகத்திலும் அதன் தொடர்ச்சியாக தொற்று பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது...


பெங்களூரில் உள்ள தாசரஹள்ளி பகுதியிலுள்ள கோழிக்கடைகளில் அடுத்தடுத்து கோழிகள் உயிரிழந்து வந்துள்ளன. மர்மமான முறையில் கோழிகள் உயிரிழப்பதை அறிந்த கடையின் உரிமையாளர் கால்நடை நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி உள்ளார்.

அதனையொட்டி கடைக்கு வந்த அதிகாரிகள் இறந்து போன கோழிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அனுப்பப்பட்ட ஆய்வில் இறந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே இறந்த கோழிகளும் நோய் பாதித்த கோழிகளும் தீக்கு இரையாக்கப்பட்டன. அதன் அடுத்தக் கட்டமாக அப்பகுதி வாசிகளிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அரசு, பாரீசில் உள்ள உலக விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்திருந்தது. அவர்களும் வந்து ஆய்வு நடத்தினர்.

அப்போது இது சாதாரண பறவைக் காய்ச்சல் இல்லை என்றும், அதிதீவிர H5N8 வகை வைரஸால் ஏற்பட்ட காய்ச்சல் என்றும் தெரியவந்தது.

இந்த அறிக்கை காரணமாக, பெங்களூரில் தற்சமயம் சிக்கன் விற்பனை குறைந்துள்ளது. மட்டன் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே, பெங்களூரிலிருந்து ஒசூர் வழியாக தமிழகம் கொண்டு செல்லப்படும் கோழிகளால் தமிழகத்திலும் பறவைக் காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளதால், கர்நாடக அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்...

ரஜினி தமிழன் இல்லை... அரசியல் களத்தில் இருக்கும் மிகப்பெரிய சவால் இதுதான் என சர்வேயில் தகவல்...


ரஜினி கட்சியால் 33 தொகுதிகளில் தான் வெல்ல முடியும் - ஆட்சி அமைக்க முடியாது  கருத்து கணிப்பு...

நான் ஒரு இனவெறியனாம்...


என்னால் அதை மறுக்க முடியவில்லை...

அழிவுக்குத் தள்ளப்படும் ஓர் இனத்தின் முடிவை...

அந்த இனத்திற்கான உரிமை மறுப்பை..

அந்த இனத்தின் உயிரிழப்பை..

தடுத்து நிறுத்தத் தேவை ஓர் இனவெறியன் தான் என்றால்..

நான் இனவெறியனாகவே இருந்து விட்டுப் போகிறேன்..

இன்றைய தமிழினத்தின் நிலையிலிருந்து அதை மீட்டெடுக்கும் இனவெறியர்களை மேலும் மேலும் உருவாக்கவே செய்வேன்..

நான்கே வரியில் கூறுகிறேன்.
இவ்வுலகத் தமிழரே...

நல்லவனாக இருக்கிறாயோ இல்லையோ.. வல்லவனாக இரு..

தமிழன் வாழவேண்டும் இல்லையேல்
எவனும் வாழக்கூடாது...