வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட..
வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடுகிறோம்..
கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்... இப்படி நிறைய வேண்டாம் கள் உண்டு.
நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்கிறோம்...
எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது..
வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்..
பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான்.
நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி..
நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது. காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.
அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம்.
நோய் வேண்டாம் என்று எண்ணுவதை விட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம்.
சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.
கடன்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெருப்பின். எப்படி செல்வம் வரும் என நம்புவது? என்று கேட்கலாம்.
எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை, எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது? என்பதும் நியாயமான கேள்வி தான்..
என்ன பேசினாலும் சண்டையில் தான் முடிகிறது என்பதும் இருக்கக்கூடும்..
உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும்.
எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்..
எண்ணம் மாறக்கூடியது என்றால் செயலும் மாறக்கூடியது. நம் விதியும் மாறக்கூடியது.
விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத் தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.