கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு ஊராட்சிக்குட்பட்ட பகுதி கணேஸ்நகர். இந்த பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடியிறுப்புகள் உள்ளன. இங்குள்ள சாலைகள் அனைத்து முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் போதிய வாறுகால் வசதி இல்லாத காரணத்தினாலும், இருக்கின்ற வாறுகால்கள் பாரமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் சாலைகள் முழுவதும் சாக்கடை நீர் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் டெங்கு காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளதால் இவற்றை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மற்றும் வாறுகால் ஆகியவற்றை சீர் செய்யவேண்டும், டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேதமடைந்த, சாக்கடை நீர் தேங்கி இருக்கும் சாலையில் மல்லி, தக்காளி செடி நாற்றுக்களை நட்டி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர செயலாளர் பரமராஜ், தாலூகா செயலாளர் பாபு, தாலூகா குழு உதவி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஸ், மந்திதாப்பு கிளை உறுப்பினர்கள் செண்பகராஜ்,மாரியப்பன், தாலூகா பொருளாளர் முப்பிடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.