26/10/2018
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம்..
தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன.
நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.
அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது.
இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் பதிப்புரிமை (copyright) வாங்கி விடும்.
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.
அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.
திருமண வீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர்.
அதில் யார் எப்படி என்று தெரியாது.
எனவே தான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும்.
தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.
இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.
மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே.
தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும்.
எதற்கு தாலிதங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா?
மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே..
இதில் வருத்தம் அளிக்கும் விசயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.
கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.
கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.
மேலும் கோபுரகலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன.
பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா?
முறையான பராமரிப்பு அற்ற காரனங்களுக்ககவே அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது.
முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லை.
சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று?
இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்...
சித்தராவது எப்படி - 24...
சுவாச ஒழுங்கில் சூரிய கலை சந்திர கலை...
சுவாசத்தோடு இருக்கின்ற நாம் அதில் செம்மையாக இருக்கும் போது அதாவது ஒழுங்காக இருக்கும் போது ஏற்படுகின்ற உயர்வுகள் முன்னேற்றங்கள் அளவிட முடியாதது..
அப்படி பட்ட உயர்வுகளை தன்னிடமே வைத்துக் கொண்டுள்ள அந்த சுவாச ஒழுங்கில் இருப்பது அவ்வளவு எளிதா என்ன?
ஆமாம் அது சற்று என்ன மிகவும் கடினமே..
அதற்கு இடையூறு செய்கின்ற தடைகளை வெல்லுவது என்பது ஒன்று சேர்ந்து வரும் மிக பெரிய பூதங்களை வெல்லுவதற்கு இணையானது..
கவர்ச்சி என்பது துளியும் இல்லாத இந்த சுவாச ஒழுங்கு மனதிற்கு புலப்படாத ஒருநிலை நோக்கி நகர்ந்து ஒரு தோன்றா நிலை என்ற அதி உன்னத நிலை நோக்கி நகர்த்தி செல்லுவதால் அந்த தெய்வநிலைக்கு இடையூராக பூத கணங்கள் என்ற எண்ண தடைகள், தடை செய்வது சகஜமே..
சரி இந்த சுவாச ஒழுங்கில் சூரியகலை சந்திர கலை என்று வெளி விடுகின்ற மூச்சும் உள்வாங்குகின்ற மூச்சுமாக பார்த்தோம்..
ஆனால் சந்திர கலை சூரிய கலை என தனித்தனியாக உணர முடிந்ததா ?
இரண்டும் ஒன்றாகவே இருக்கும் பொழுது எந்த முன்னேற்றமும் காண முடியாது..
ஆனால் தனித்தனியாக உணர வேண்டும் என்றால் வெளி விடுகின்ற சூரிய கலை முழுமையும் தோன்றா நிலையாக இருந்தால் மட்டுமே சூரிய கலை சந்திர கலை தனித் தனியாக பிரியும்..
அதற்கு ஓம் நமசிவய என்ற மந்திரத்தின் கால அளவினை பிடித்துக் கொண்டு சூரிய கலை முழுமைக்கும் தோன்றா நிலை உணரவும் அதே நிலையில் சந்திர கலையும் அந்த தோன்றா நிலைக்கு சென்று விடாமல், நம் மனதின் திறனை இழந்து விடாமல் சந்திர கலையில் உள் வாங்கும் மூச்சை நம் மனதால் பற்றி நாமே உள் வாங்க வேண்டும்..
இதில் நாம் என்பது மனதாக உள்ள நாம் தான்...
அந்த சந்திர கலையில் நம் அதி தேவையான ஒன்றை நினைக்கும் போது அந்த தேவைக்கான தடைகள், அந்த தோன்றா நிலையில் கரைந்து போகும் அதிசயம் நடக்கிறது...
தடைகள் கரைந்து நீங்கிய நிலையில் அந்த தேவை நிறைவேற்றப் படும் அதிசயமும் நடைக்கிறது...
மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால் தோன்றா நிலையினை சூரிய கலையில் பெற்ற உடன் நம் சந்திர கலை சுத்தமாக தோன்றா நிலையை பூரணமாக கவ்விக் கொண்டு அமாவாசை போன்ற சந்திரகலையும் தோன்றா நிலைக்கு சென்று மறைந்து விடுகிறது..
பயிற்சியில் தொடரும் போது, தோன்றாநிலை நீங்கிய பிறைகளாக சந்திர கலை வளர்ந்து வளர்ந்து பௌர்ணமியான முழு நிலவு ஆகிறது..
அந்த முழு மதிநிலையில் மட்டுமே நமது ஆசைகள் ஒழிந்து தேவைகள் முன் நிறுத்தப் படுகின்றன..
ஆசைகள் வேறு தேவைகள் வேறு என்பதை முன் பகுதிகளில் தெளிவாக கூறி இருக்கின்றது..
அனைத்துக்கும் ஆசைபடு என்ற கருத்தை விட்டு விட்டு அனைத்து தேவைகளையும் உணர் என்ற சத்தியத்தை பிடித்தால் பெரும் நன்மை அடையலாம்...
நோய் நீங்குதல், தரித்திரம் நீங்குதல், தன்னை சார்ந்தவர்களுக்கு உதவாத அவலநிலை, பாதகமான சூழ்நிலைகளை எதிர் கொள்ளல் போன்ற, மிக அவசியமான தேவைகள் மட்டுமே இந்த சந்திர கலை மதியான நிலையில் உதிக்கும்..
அந்த தேவைகளின் தடைகளை இந்த சூரிய கலை போக்கும் அதிசயத்தை இந்த மனம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை... இல்லவே இல்லை..
ஆனால் தேவைகள் பூர்த்தியாகும் அதிசயத்தை நீங்கள் விரைவில் உணரலாம்..
சந்திர கலையை மதி ஆக்குவதற்கு மிக சிரமமா என்ற கேள்விக்கு பதில் சராசரி மனிதனுடைய திறமையில் சற்று தீவிரமாக பயின்றால் மூன்று அல்லது நான்கு வாரத்திற்குள் இது சாத்தியமாகும்...
உங்கள் அனைத்து தேவைகளையும் நிறைவேற இந்த சுவாச ஒழுங்கு முற்றிலும் கவர்ச்சி அற்ற ஒன்று என்பது மிக முக்கியமான தடை..
மதியிலே வைக்கப் படும் தேவைகள் கண்டிப்பாக சூரிய கலையின் தோன்றா நிலையால் நிறைவேற்றப் படும் என்பது சத்தியமான உண்மை..
தெய்வத்திடம் பக்தியோகத்தில் முறையாக நிற்கும் மனிதன் முதலில் அந்த தெய்வத்திடம் தோன்றா நிலையினை உணர வேண்டும்..
தெய்வத்தின் இயல் நிலை என்ற தோன்றா நிலையை உணராமல் செய்யும் பக்தியோகம் ஒரு பலனும் அளிக்காது..
தெய்வத்திடம் முறையிட்டு பல தோல்விகளை கண்டு துவண்டு போன மனிதன் தானாக அனுபவப் படும் தோன்றா நிலை மூலமாகவும் அதன் பின் சந்திர கலையை முழு மதியாகவும் அனுபவப் படும் போது மட்டுமே தெய்வதிடமிருந்து பலன் பெறப் படுகிறது..
அந்த நிலைக்கு வர பல ஆண்டுகள் ஒடி விடும்.. அதற்கு காரணம் ஆன்ம இலாபம் துளியும் இல்லாத நிலை..
காட்டில் வாழ்ந்த கண்ணப்பருக்கு தன்னுடைய அப்பாவித்தனம் மூலம் ஏழே நாட்களில் தோன்றா நிலைக்கு சென்று அன்பு என்ற முழு மதி நிலை அடைந்ததால், இறை தரிசனம் கிடைத்தது.. அவருக்கு அப்பாவி தனம் மிகவும் உதவியது..
ஆனால் அப்பரோ தனது என்பது வயதில் கடினமான கைலாய மலையில் பயணப் பட்டு அதில் அடைந்த சோர்வில் துவண்டு தோன்றா நிலைக்கு தள்ளப்பட்டு பின் தன் ஒரே குறிகோளான இறை தரிசனம் என்ற ஒரே தேவையால், கலைகள் நிரம்பிய மனம் ஒரே தேவையான இறைதரிசனம் என்ற ஒன்றால் மதியாகி, அந்த கைலாயமே தன் சொந்த ஊரிலேயே காணும் வல்லமை பெற்றார்.. அதற்குள் அவர் காலம் எண்பதற்கு மேல் தாண்டி விட்டது..
சில சமயங்களில் சில யோக பயிற்சிகளை குறை கூறுவது ஆன்மா இலாபம் துளியும் கிடைக்காது முடிவில் தோல்வி ஒன்றையே தழுவும் படியாக தருவதை தான்..
அதில் கற்றுக் கொள்பவர்கள் மேலும் மேலும் இடர் படக் கூடாது என்ற அன்பின் காரணமாகதான்... மற்றபடி வேறு ஒன்றும் இல்லை...
தோன்றா நிலை வெளிப்படாத வெளி சுவாசம் சூரியகலை அல்ல.. அதன் பெயர் வெளி சுவாசம் மட்டுமே..
தோன்றா நிலை உடைய வெளி சுவாசம் மட்டுமே சூரிய கலை எனப்படும்... உள் வாங்கும் சுவாசத்தில் மதி நிலை தோன்றா விட்டால் அதன் பெயர் உள் சுவாசம் என்றே கொள்ள வேண்டும்..
அது சந்திர கலைகள் நிறைந்தது.. பலவித ஆசை என்ற எண்ண ஆதிக்கங்களால் நிரப்பப்பட்டது..
ஆனால் ஒரே எண்ணமான தேவையை மட்டும் உடைய மதியான உள் சுவாசத்தை ஏக கலையான பௌர்ணமியை சந்திர கலை எனலாம்..
இப்படியாக சுவாச ஒழுங்கின் மூலம் சந்திரகலை சூரிய கலை பெற்று நம் உடல், வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து பின் சித்தராகும் உயர்ந்த குறிகோளை நோக்கி நகருவோம்...
இலுமினாட்டிகள் ஒரு முன்னறிமுகம்...
உலகை அடிமையாக்க துடிக்கும் அடிமைகள் பற்றிய ஒரு சின்ன அறிமுகம்..
இலுமினாட்டிகள், ஜல்லிகட்டு போரட்டத்திற்கு பிறகு நம்மில் சிலருக்கு மட்டுமே இந்த வார்த்தை புதிதாக இருக்கும் என்று கருதுகிறேன். இன்று உலகில் நடக்கும் 90% அதிகமான பிரச்சனைகளை திரைக்கு பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் இரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த இலுமினாட்டிகள்.
தொடக்கம்: சற்றேறக் குறைய சுமார் 5000 வருடங்களுக்கு முன் பேரரசர் சாலமனின் (pbuh) ஆட்சி காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஆற்றலின் மீது கொண்ட கர்வத்தால் தன்னை வெல்ல யாருமில்லை என்று ஒருவன் எண்ணிக் கொண்டிருந்தான் (A1 13). அவன் மனித இனத்தை சேர்ந்தவன் இல்லை. இந்திய மரபு வழி கலாச்சாரம் ராக்ஷ்சர்கள் என்று அடையாளப்படுத்தும் ஒரு (ஜின்) இனத்தை சேர்ந்தவன்.
இந்த இனத்தை சேர்ந்தவர்களைத் தான் நாம் வேற்றுகிரக வாசிகள் என்று அழைக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவனது கர்வத்தினால் அவனுக்கு ஏற்பட்ட பேராசையால் அவன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் அடைக்கி ஆள வேண்டும் என்று எண்ணத்துடங்கினான்.
இறைவன் பேரரசர் சாலமனுக்கு (pbuh) முழு மனித ஆற்றலையும் உணர்ந்து அதை பயன்படுத்தும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்திருந்தான். அதன் மூலம் அவர் பூமியில் இருந்த (மனித, ரக்ஷ்ச, பறவை, விலங்கு, காற்று என) அனைத்து இனங்களின் மீதும் அதிகாரம் செலுத்தி ஆட்சி புரிந்தார்.
இவரது ஆட்சி, A1 13 கு தனது பேராசையை செயல்படுத்தி வெற்றியடைய முடியும் என்ற எண்ணத்திற்கு வழுசேர்த்தது.
எனவே அவன் தனது திட்டங்களை செயல்படுத்த தொடங்கினான். அதேகால கட்டத்தில் பாபிலோனில் வாழ்ந்த ஒருவனை (தஜ்ஜால்) இவன் சந்தித்தான், அந்த மனிதனும் அரசர் தாவூதின் (pbuh) குடும்பத்தை சேர்ந்தவன் தான், ஒருவகைக்கு பேரரசர் சாலமனுக்கு (pbuh) சகோதர முறை. பேரரசர் சாலமனை (pbuh) போல் அவனும் (ஓரளவுக்கு) மனித ஆற்றலை உணர்ந்திருந்தான், அதே நேரத்தில், அவனுக்கு பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மீது பெரும் பொறாமை இருந்தது.
அதை அறிந்து கொண்ட A1 13 அவனோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான், அதன் படி முழு மனித ஆற்றலை உணர்ந்து பயன்படுத்தும் வழி முறைகளை இவன் அவனுக்கு கற்றுக் கொடுத்து பூமியில் உள்ள அனைத்து இனங்களின் மீதும் ஆட்சி செலுத்தும் அரசனாக அவனை நியமிப்பதாகவும், அதற்கு பகரமாக அவன் தனக்கு கட்டுபட்டவனாக இருந்து தனது இலக்கை அடைய போராட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டான்.
பிறகு அவனுக்கு மனித உடலை சறியாக பயன்படுத்தும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்தான். தஜ்ஜால் முன்பைவிட இப்போது அதிக அளவில் மனித ஆற்றலை பயன்படுத்தக் கூடியவனாக இருந்தான்.
இந்த நிலையில் வேறொரு காரணத்திற்காக A1 13 யின் குடும்பத்தார்கள் மற்றும் அவனது இனத்தின் மீது நடத்தபட்ட சிறைப்பிடிப்பில் பேரரசர் சாலமனால் (pbuh) இவன் எதேச்சையாக சிறை பிடிக்கப்பட்டான். அவசரபட்டு எதையாவது செய்யப்போய் அது தனது இலக்கை அடைவதை விட்டும் தன்னை தடுத்துவிடலாம் என்பதால் அவன் எதுவும் செய்யாமல் பேரரசர் சாலமனுக்கு கட்டுபட்டவன் போல் அமைதியாய் இருந்தான்.
ஆனால் முன்பை விட தனது ஆற்றலை அதிகம் உணர்ந்திருந்த தஜ்ஜாலின் பொறாமை அவனை அமைதியாக இருக்க விடவில்லை. அவன் பேரரசர் சாலமனுக்கு எதிராக கலகம் செய்யத் தொடங்கினான்.
தானே உண்மையான கடவுள் என்று அவன் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய தொடங்கினான். அதனால் பேரரசர் சாலமன் (pbuh) அவனோடு போர் செய்து அவனை வீழ்த்தினார்.
அவர் அவனை கொல்லவே விரும்பினார், என்றாலும் அது முடியாமல் போகவே, (கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள) ஒரு தீவில் அவனை சிறை வைத்தார்.
என்றாவது ஒருநாள் இவன் இந்த சிறையை உடைத்தக் கொண்டு மக்களுக்கு மத்தியில் வெளியாகுவான் என்று பேரரசர் சாலமன் (pbuh) கருதினார்.
எனவே, அவர் அவனது நெற்றியில் காஃப் ஃபே ரே அதாவது மறுப்பாளன் என்று வாள் கொண்டு எழுதினார், அவன் வெளிப்படும் போது மக்கள் அதைக் கொண்டு அவனை அடையாளம் கண்டு கொள்வார்கள்.
பேரரசர் சாலமனின் (pbuh) மரணத்திற்கு பிறகு விடுதலை அடைந்த A1 13 மிகுந்த சிரமத்திற்கு பிறகு தஜ்ஜால் சிறை வைக்கப்பட்ட அந்த தீவை கண்டு பிடித்தான்.
அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் தஜ்ஜாலை விடிவிக்க முடியவில்லை.
(பிற்காலத்தில் அவனை விடுவிப்பதற்கான சரியான கால சூழலை பூமியில் ஏற்படுத்திய பிறகு அந்த சங்கிலியை உடைத்துக் கொள்ளலாம் என்று தன் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறான் என்று சில ஆய்வுக்கு குறிப்புகள் சொல்கின்றன.).
பிறகு அவன் அரசர் தாவூதின் குடும்பத்தார்களில் தஜ்ஜாலை போலவே பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மீது பொறாமை கொண்ட 13 நபர்களை தேர்ந்தெடுத்தான்.
பேரரசர் சாலமனின் (pbuh) ஆட்சி கட்டிலுக்கு கீழ் பொதைக்கப் பட்டிருந்த ஆட்சி குறிப்புகளை திருடி அதற்கு இடையிடையில் சூனியத்திற்கான (காபாலா) மந்திரங்களை எழுதி இதன் மூலம் தான் சாலமன் (pbuh) ஆட்சி நடத்தினார் என்று அவர்களை நம்ம வைத்தான்.
இவற்றை முயற்சி செய்தால் தஜ்ஜாலை விடுதலை செய்து அவனது தலைமையில் நீங்கள் இந்த பூமி முழுவதையும் ஆளலாம் என்று பேராசை காட்டினான்.
இவ்வாறாக 13 அடிமைகள் கொண்டு தொடங்கப்பட்ட இந்த குழுவும், இந்த குழுவையும் இந்த குழுவின் மூலம் உலகையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கும் அந்த 13 பேரின் இரத்தவழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இலுமினாட்டிகள் என்று அறியப்படுகிறார்கள்.
நோக்கம்:
இலுமினாட்டிகள் இந்த வார்த்தைக்கு, ஒளி பெற்றவர்கள் அல்லது ஞானம், முக்தி அடைந்தவர்கள் என்று பொருள், தாங்கள் மட்டுமே அதீத ஞானம் பெற்றவர்கள் என்றும் தாங்கள் மட்டுமே உலகை ஆள தகுதிவாய்ந்தவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு இரகசிய குழுவை சேர்ந்த 13 குடும்பத்தார்களை குறிப்பதற்கு இப்போது இந்த சொல் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருகிறது.
இவர்களது நோக்கம் என்னவென்பதை இவர்களது பாஷையில் சொல்வதென்றால் ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். The New World Order (NWO) அதாவது புதிய உலக கட்டளை. புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால், பூமி முழுவதையும் ஒரே தலைமைக்கு கீழ் அதாவது தங்களது அரசனது ஆட்சி அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே இவர்களது நோக்கம், இதையே இவர்கள் NWO என்று அழைக்கின்றனர்.
கடந்த 5000 வருடங்களாக தங்களது நோக்கத்தில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பெரும்பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட காலமாக இவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு மகா யுத்தம், அதில் தங்களின் அரசனான தஜ்ஜாலையும் அவனது கடவுளான A1 13யையும் எதிர்க்கும் மக்களை முழுமையாக அழித்து விட்டு, மக்கள் தொகையை கணிசமாக குறைத்து விட்டு, பிறகு தஜ்ஜாலை விடுவித்து பூமி முழுவதையும் ஒற்றை தலைமைக்கு கீழ் கொண்டு வந்து இறுதியாக A1 13ஐ இந்த பிரபஞ்சத்தின் கடவுளாக ஆக்க வேண்டும் என்பதே இவர்களின் ஒரே நோக்கம்.
அந்த மகா யுத்தத்தில், இலுமினாட்டிகள் வென்றால் எஞ்சி இருக்கும் மக்களை அடிமைப்படுத்தி ஆள தஜ்ஜால் விடுவிக்கப்பட்டு அழைத்து வரப்படுவான்.
நாம் வென்றால் யுத்தத்தின் போக்கை கட்டுப்படுத்தி தனக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்க (கோபத்தில்) அவனே சங்கிலிகளை உடைத்துக் கொண்டு வெளியாக்குவான்.
ஆக, யார் வென்றாலும், தோற்றாலும் யுத்தத்தின் முடிவில் தஜ்ஜால் வெளிப்படுவான்.
துருவ மாற்றக் காலத்தில் தான் அவன் வெளிப்பட வேண்டும் என்ற A1 13யின் திட்டப் படி அந்த மகா யுத்தம் துருவ மாற்றக் காலத்தை கணக்கிட்டே நடத்தப்படும்.
பி.கு: இலுமினாட்டிகளின் தொடக்கம் பற்றியும் A1 13 பற்றியும் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களுக்கு மதரீதியான 100% நேரடி ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
மதரீதியான குறிப்புகளையும், மதங்களுக்கு வெளியில் இருந்து கிடைக்கும் குறிப்புகளையும் ஒருங்கிணைக்கும் பொது கிடைத்த தர்க்க ரீதியான வடிவமைப்பையே நான் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன். இவர்களின் தொடக்கம் பற்றிய எனது குறிப்புகள் 80% ஆதாரப் பூர்வமானதும் உறுதி செய்யப்பட்டதுமே தவிர 100% அல்ல. இறைவன் நாடினால் கூடிய விரைவில் 100% வெளிப்படையான ஆதாரங்கள் கிடைக்கும்...
தகவல் - முஸ்தபா
மதிமாறன் முதலியார் தன்னை ஓரு சமூக போராளியாக காட்டிக்கொண்டு வயிறு வளர்ப்பவர்...
அவரது மனைவியும் தனது சாதியைச் சேர்ந்த முதலியார் சமூகம் தான்.
தோசையில் கூட சாதி பார்க்கும் இந்த பகுத்தறிவு..
திருமண வயதை அடைந்துவிட்ட தனது ஓரே மகனுக்காவது விரைவில் தலித் சமூகத்தில் பெண் எடுத்து பேச்சில் மட்டுமல்ல செயலிலும்... தான் நிஜமான சாதி மாறுப்பான் என்பதை நிறுப்பிப்பார் என நம்புவோம்...
மெலிசாய் தோசை சுடுவது அனுபவதில் வருவதுடா... கைபழக்கம்டா...மதிமாறா.
பெண்ணுக்கு பெண் மாறுபடும். அதுக்கெல்லாம் சாதியாடா.. கொடுமை...
கற்பழிப்பு...
பிரபஞ்சம் ஒரு குழந்தை தனது தாயோட கருகுடத்துல வளர்ந்து கிட்டு இருக்குனு சொன்னேன் , நாம பாக்கும் அதே கருடம் தத்துவம் தான் என்றேன்.
அதே தான்.. பெண்ணோட கருகுடத்தில் தான் தூய கருப்பு சக்தி இருக்கு அது கன்னித்தன்மை இருக்கும் வரை தூய கருப்பு ஆற்றால இருக்கும் (dark energy ) அந்த கருப்பில் வெளியிலிருந்து தகவல் வந்து அதை சூழ்ந்து விட்டால் அதோட தூய சக்தி கலங்காமாகும் / வீரியம் இழக்கும்.
இதனால தான் கற்பழித்து னு சொல்லுறாங்க (loss of virginity) கருப்பை அழித்தல்.
பல ரக பட்ட விந்தணுவின் data கள் கருவின் data களோடு இணைந்து புது ரக மரபணுவை உருவாக்கும் அதோடு வேறு data விந்தணுவில் உள்ள தகவலின் தாக்கம் இருந்தால் கலப்படமான படைப்பு கிடைக்கும்.
பிரபஞ்சத்தில் வெளிச்சம் நட்சத்திர போன்ற எல்லாமே கருப்போடு கலப்படமானது !பிரபஞ்சம் தன்னை வெளிப்புறமாக பரப்பிக்கொண்டே போனாலும் ஆரம்பத்திலிருந்து அதாவது உள்ளிருந்து வெடித்த நட்சத்திரங்கள் அழிந்து கொண்டே வரும் அப்போ அங்க தூய்மையாக இருக்கும் அங்க தான் வீரியமிக்க கருப்பு ஆற்றல் இருக்கும் (pure dark energy ).
எனவே தான் இந்த பிரபஞ்சத்தின் படைப்பாளி , அண்டத்தை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்தின் பிண்டத்திற்கான சொந்தகாரர் ஒரு பெண் என்று சொல்கிறார்கள்...
பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக.....
சங்க இலக்கிய அறிவியலில் சூரியனும் விமானமும்...
சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.
சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும்.
அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது.
அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும்.
ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு.
அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது.
அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை.
இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.
செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே
இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்.
நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது.
அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது...
இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு.
அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப
இதன் பொருளைப் பாருங்கள்!
விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.
இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம்.
இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம் பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும்.
விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.
எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள் என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது.
பலகணியில் இருந்து புறப்பட்டதால் உலங்குவானூர்தியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.
கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள்...
இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி!
இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள்.
ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன.
மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை.
ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.
மண்ணின் மேல் அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.
விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது.
விமானப் பறப்பை நேரில் கண்டானா?
இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா?
தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.
இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான்...
சில சிகிச்சை முறைகள்...
தமிழ் மருத்துவ முறைப்படி இருபாலருக்குமுரிய சிகிச்சை முறைகள்...
மனிதகணம் எனப்படும் மானிட மருத்துவம்.
தேவகணம் எனப்படும் தெய்வ மருத்துவம்.
ராட்சச கணம் எனப்படும் நிசாசர மருத்துவம்.
என இவை முப்பெரும் பிரிவாகக் கூறினாலும், அவற்றின் உட்பிரிவுகளாக வேறு சிலவற்றையும் கூறலாம்.
பொதுவாக வேர்பாரு, தழைபாரு, மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரு என்பதற்கிணங்க மூலிகை மருந்துகளால் தீராப் பிணிகளை -பற்ப செந்தூரங்களினாலும், இவ்விரு முறைகளால் நீங்காப் பிணிகளை அறுவை, அக்கினி,காரம் இவற்றைக் கொண்டு நீக்க வேண்டுமெனவும் அறியவும்.
மானிட மருத்துவம்: இது தாவரங்களினாலான குடிநீர், சூரணம்,மணப்பாகு, இளகம், மாத்திரை, சுரசம், பிட்டு, வடகம், போன்றவற்றால் சிகிச்சை செய்வதாகும்.
தேவ மருத்துவம்: சகல பிணிகளும் இயற்கை, செயற்கை காரணங்களினாலும், சில துர் தேவதைகளினாலும் - சில பூர்வ சென்ம தீவினைகளினாலும் ஏற்படுகிறது.
குட்டம், சுவாசகாசம், சயம் போன்ற கொடிய பிணிகள், முற்பிறவியின் பயனோடு இணைந்தும், பிறவி இலக்கினம் - நட்சத்திரம் இவற்றின் அடிப்படையிலும் ஏற்படுவதாகும்.
இத்தகைய நோய்களுக்கு மருந்துகள் மட்டுமின்றி, தேவதைக் குற்ற நீக்க முறைகளும் தேவைப்படும்.
எனவே இது, பூர்வ கருமானு சாரத்தையே காரணமாகக் கொண்டு - தாது சீவ இனங்களாகிய இரசம், கெந்தி, பாடாணம், உப்பு, உலோகம், முத்து, பவளம் போன்றவைகளினாலான பற்பம், செந்தூரம், சுண்ணம்,கட்டு, களங்கு, குளிகை, திராவகம், செயநீர் போன்ற உயர்ந்த மருந்துகளால் சிகிச்சை செய்வதாகும்.
இராட்சச மருத்துவம்: இது கத்தி, கத்திரி, குறடு, சலாக்கை, போன்ற கருவிகளைக் கொண்டு அறுவை, கீறல், சுட்டிகை, குருதி வாங்கல், கொம்பு கட்டல், அட்டைவிடல், போன்ற முறைகளில் சதையை அறுத்து செய்யும் சத்திர சிகிச்சையாகும்.
இதை ஏன் பதிவு செய்கிறேன் என்றால் நமது குருமார்களாகிய சித்தர்கள் முப்பது பிரிவுகளாக பிரித்து மருத்து முறைகளை வகுத்துள்ளார்கள்.
உலகில் உள்ள அனைத்து மருத்துவ முறைகளும் சித்தாவிலிருந்து பிரதியெடுக்கப்பட்டவை என்பதற்கே...
ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்...
பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப் பிறந்தோமா? என்று.
நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.
சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.
ஆனால், பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.
சூரியன் தன் ஈர்ப்புச் சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.
கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதி தான். நாம் உயிர் வாழும் பூமி. இந்த பூமியை இயக்கிக் கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம் ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.
உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.
இதுவரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும். இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்.
ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.
நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.
நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங் களுக்கு உருவம் கொடுப்பதுதான்.
ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.
ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்...
வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
UFO watchdog Streetcap1 வேற்றுகிரக வேட்டைகாரர்கள் [பார்வையாளர்கள்] நல்ல வேலை செய்து உள்ளனர்.
அவர்களது மிக சமீபத்திய புகைப்படம். பெரிய பொருள் ஒன்று [நமது கிரகத்தை விட பெரிய] சூரியனுக்கு அருகில் சென்றதை படம் எடுத்திருக்கிறார்கள்.
புகைப்படம் உண்மையானது என NASA வின் SOHO சேவையகம் சரிபார்த்து உள்ளது...
கடந்த சில மாதங்களாக நமது நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்திருக்கின்றன, அதேபோன்று வடிவங்கள் மற்றும் அளவிலான பொருள்களின் முந்தைய பார்வைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்த விஷயங்கள் வெறும் படக் கலைக்கூடங்களின் கைவரிசை என்று எப்போதும் ஒரு தரப்பு கூறி வந்தாலும், நாசாவின் அமைதி இந்த கருதுகோளை நிராகரிப்பதை காணமுடிகிறது. அதாவது அவர்களது விசித்திரமான வடிவியல் வடிவங்கள் செயற்கை மூலங்களைப் பரிந்துரைக்கின்றன.
இந்த அடையாளம் தெரியாத மிதக்கும் பொருட்கள். யுஎஃப்ஒ ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. யுஎஃப்ஒ ஆர்வலர்கள் நினைக்கிறார்கள். அது பூமி அளவிலான பொருள் என்பதால். அவர்கள், கண்டம்-அளவிலான விண்கலத்தை கட்டியெழுப்பும் திறனுடைய ஒரு மிக முன்னேறிய நாகரிகத்தின் வெளிப்பாடு தான்.
நமது சூரிய மண்டலத்தில் அவர்கள் இருப்பது மனித இனத்தின் மேல் உள்ள ஆர்வத்திற்கு சான்றாக கூட இருக்கலாம் என்கின்றனர். எங்கள் வீட்டு வாசலில் ஒரு வேற்றுகிரக நாகரீகம் சந்தேகத்திற்கு இடமின்றி வந்துள்ளது.
ஆனால் இந்த மிகப்பெரிய பொருள் உண்மையில் ஒரு வேற்றுமை படைப்பாளியின் படைப்பு என்பதை நாசா நிராகரிக்காமல், ஏன் பொது மக்கள் பார்வைக்கு விட வேண்டும்.?
புவனா ஷேசன் என்ற பாடகியும் வைரமுத்து மீது தனது முகநூல் பக்கத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்...
சின்மயி 15 ஆண்டுகளுக்க முன்பு நடந்த சம்பவங்களை கூறிய நிலையில் இவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லியிருக்கிறார்.
ஒரு விளம்பர பாடல் ஒன்றை பாட சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த வைரமுத்து, உங்கள் குரல் இனிமையாக உள்ளது…பாடி முடித்துவிட்டு தன்னை பார்க்கும்படி கூறினார். இதைத் தொடர்ந்து அவரிடம் பேசிவிட்டு போன் நம்பரை பரிமாறிக் கொண்டோம்.
பின்னர் அடிக்கடி போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, இசையமைப்பாளர் ரஹ்மானிடம் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறினார். ஒரு கட்டத்தில், அறிவுப் பூர்வமான ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருந்தேன்…என் தேடல் உன்னில் முடிந்து விடுமோ என்று நினைக்கிறேன் என காதல் வலை வீசினார். ஆனால் நான் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டேன்.
அடுத்த நாள் என்னை அழைத்து, உன் கண்கள் என்ன கூர்வாளா… என் கவிதையே துண்டு துண்டாகி உன் காலடியில் விழுந்து கிடக்கிறதே என மீண்டும் வலை வீசினார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன். பின்னர் மலேஷியாவில் விருது வழங்கும் விழா ஒன்று நடக்க உள்ளது. அதற்கு வருகிறாயா என கேட்டார்.
அதற்கு நான் பாடவா ? அல்லது தொகுத்து வழங்கவா ? என கேட்டேன்.அதற்கு வைரமுத்து இரண்டும் இல்லை என்றார. அவரது எண்ணத்தை நான் புரிந்து கொண்டதால் நான் மறுத்துவிட்டேன். அதன் பிறகு பல முறை என்னை தொடர்பு கொண்டு மலேஷியா வருகிறாயா என கேட்டு தொந்தரவு செய்தார். ஆனால் நான் கடுமையாக மறுத்து விட்டேன் என்று புவனா பதிவிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துகிட்டா லைஃப்ல அழகாக செட்டில் ஆகிவிடலாம் என கவிஞர் வைரமுத்து ஆசை வார்த்தை காட்டினார். ஆனால் தொடர்ந்து நான் கடுமையாக மறுத்துவிட்டதால் என்னை மிரட்டத் தொடங்கினார். உனக்கு இனிமேல் எந்த வாய்ப்பும் இலலாமல் செய்தவிடுவேன்… என் செல்வாக்கு தெரியுமா ? என பல வகைகளில் தொந்தரவு கொடுத்தார்.
அவர் சொன்னதுபோலவே செய்தும் காண்பித்தார்…நல்ல குரல் வளம் இருந்தும் எனக்கு பாட வந்த வாய்ப்புகளை எல்லாம் கிடைக்கவிடாமல் செய்தார்.
இதனால் நொந்துபோன நான் அழுதேன். பின்னர் வேறு வேலைக்கு சென்றுவிட்டேன். என்னுடைய பாடும் கனவை முற்றிலுமாக தகர்த்து எறிந்தவர் வைரமுத்துன் என திட்டவட்டமாக தெரிவித்தார்...
தமிழின துரோகிகள்.. விசிக திருமா vs பாஜக தமிழிசை...
சென்னையில் 1000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள மால் ஒன்று. அதை திராவிடன் ஒருவருக்கு வாங்கிக் கொடுக்க திருமாவளவனும் , மார்வாடி ஒருவருக்கு வாங்கிக் கொடுக்க தமிழிசையும் முயற்சி செய்ததில் ஏற்பட்ட நேரடி மோதலின் காரணமாக பல விஷயங்கள் வெளியில் வந்து விட்டது.
இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் வெளியில் பேசி விட்டார்கள்.
நிலங்களை மிரட்டி கையகப்படுத்துவது தான் திருமாவளவனின் முழுநேர வேலை என்று திருமாவளவனின் பெயரை நேரடியாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியே தமிழிசை பேட்டி கொடுத்தார்.
அதற்கு திருமாவளவன் பதில் சொல்லாவிட்டாலும், அவரது கட்சியினர், தமிழிசை வட சென்னையில் பாதி இடங்களை வளைத்து போட்டு விட்டார் என்று புகார் சொல்லி, தமிழிசையின் வீட்டின் முன் போராட்டங்கள் நடத்தி அவரது கொடும்பாவியை எரித்து மகிழ்ந்தார்கள்.
மொத்தத்தில் இருவருக்கும் இடையிலான மோதலே இவர்கள் யார், எப்பேர்ப்பட்ட கிராதகர்கள் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டி விட்டது.
1000 கோடி பெறுமானமுள்ள கட்டிடம் என்றால், 2 சதவீத கமிஷனாக எப்படியும் 20 கோடி கிடைக்கும். இதற்காக நடந்த நேரடி மோதலில் இவர்கள் இனங்காணப்பட்டு விட்டார்கள்.
இவர் இந்தப்பக்கம், அவர் அந்தப்பக்கம் என்று வேறுவேறு திசைகளில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருந்தால் இவர்களை பற்றி நமக்கு தெரிய வந்திருக்காது.
ஒரே வியாபாரத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட நேரடி மோதல் இவர்களின் நமக்கு உணர்த்தி விட்டது...
பூணூல் போட்டக் குயவர்...
வேறு எந்த சாதியையும்..
அவன்-இவன்,
அந்த பய -இந்த பய,
அந்த புத்தி - இந்த புத்தி,
அதுக - இதுக
என்று பேசினால் பிற்போக்கு..
ஆனால்,
பார்ப்பனர்களை..
பாப்பான்,
பாப்பாரப்பய,
பார்ப்பன புத்தி, குடுமி,
பூணூல்,
அவாள்,
என்றெல்லாம் பேசினால் அது மட்டும் முற்போக்கு..
இப்பொது முற்போக்கிற்கு வந்த சோதனையைப் பாருங்கள்..
1837 ல் வரையப்பட்ட இந்த ஓவியம் பூணூல் போட்டபடி ஒரு குயவர் பானை செய்யும் காட்சியை கண்முன் நிறுத்துகிறது.
"Seventy-two Specimens of Castes in India" எனும் புத்தகத்தில் இது இடம் பெற்றுள்ளது.
நம்புங்க மக்களே..
பூணூல்னா பார்ப்பான்..
ஒரு பூணூல் ஒரு கோடி ரூபாய்..
அது போட்டவன் உயர்சாதி..
சமஸ்கிருத ஆரியனின் அடையாளம்..
பூணூல்..பூணூல்.. பூணூல்...
இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும் சமூக வலைதளங்கள்...
முகப்புத்தகத்தில் தன் சுயவிவரங்களை கூறுவதும், புகைப்படம் பதிவேற்றுவதும்,
Dubsmash, Musically, Tik tok என தன் தனித்திறமை என காணொளிகளை பதிவேற்றுவது.
எங்களின் தனிப்பட்ட சுதந்திரம், அதை பற்றி எங்களுக்கே கவலையில்லை.
நீ ஏன் அதற்கு இப்படி பதிவாக போடுகிறாய் என முட்டு கூறுபவர்களுக்கு..
தனக்கு எதுவும் ஆகாத வரை இங்கு எதுவும் பாதிப்பு இல்லை என்ற உளவியல் மனநிலை இருக்கின்ற வரை,
என் போன்றோரின் பதிவுகள் முட்டாள்தனமாக தான் இருக்கும்...
21 மாத சிறை தண்டனைக்கு பிறகு முதல் முறையாக பரோலில் வெளியே வரும் இளவரசி...
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முதல் குற்றவாளியாக மறைந்த ஜெயலலிதாவும், அடுத்தடுத்த குற்றவாளிகளாக சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டனர். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவர் மட்டும் விடுவிக்கப்பட எஞ்சிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2017 பிப்ரவரி 14ல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 3 பேரும் அடைக்கப்பட்டனர். பெண்கள் சிறையில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். சுதாகரன் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 5 நாட்கள் அவர் இறந்த போது 13 நாட்கள் என மொத்தம் 18 நாட்கள் சசிகலா பரோலில் வெளியே வந்துள்ளார். இளவரசியும், சுதாகரனும் சிறை சென்ற 21 மாதத்தில் ஒரு முறை கூட பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்டனை கைதி இளவரசியிடம், சகோதரர் உடல்நிலை சரியில்லாமல் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை பார்ப்பதற்கு வரும்படியும் உறவினர் ஒருவர் சிறையில் இளவரசியை சந்தித்து தகவல் தெரிவித்துள்ளார்.
அதை ஏற்ற இளவரசி தனது வக்கீல் மூலம் பரோல் மனுவை சிறைத்துறை எஸ்.பி சோமசேகரிடம் அளித்தார். தமிழக அரசு தடையில்லா (என்.ஓ.சி) சான்று வழங்கிய பின் இளவரசிக்கு பரோல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இளவரசிக்கு, கர்நாடக சிறைத்துறை 15 நாள் பரோல் வழங்கியுள்ளது. பரோல் வழங்கப்பட்டதை அடுத்து இன்று இளவரசி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார்...
பாஜக - காங்கிரஸ் இரண்டுமே மக்கள் விரோதிகள் தான்...
மாநில கட்சிகளுக்கு மட்டுமே வாக்களித்து மாநில கட்சிகளின் கூட்டணியால் மத்தியில் மைய ஆட்சி அமையுமானால் அதுவே உண்மையான ஒன்றிய மைய அரசாக இருக்கும்...
தேசிய கட்சிகளுக்கு வாக்கு செலுத்துவது மத்தியில் அதிகார குவியலை உருவாக்கி எதேச்சதிகாரமாக செயல்படும் சர்வாதிகார போக்கே எழ வழி செய்யும்
தமிழ்நாட்டை பொருத்தவரை கடந்த நாடளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பதிவான வாக்குகள் ஒரு தமிழ்தேசிய கட்சிக்கு போகுமானால் உலக அளவிலான புரட்சியை தமிழ்நாட்டிலிந்து செய்யலாம்
அதை கார்பரேட்கள் விடாது கார்பரேட்களின் கங்காணிகள் விடமாட்டார்கள்...
என் உள் மனமே...
இறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவனிடம் சகலவிதமான சக்திகளையும் வைத்தே படைத்திருக்கிறான்.
ஆனால் நாம் தான் நம்மிடமுள்ள சக்திகளைப் பற்றி தெரியாமலும், அதன் ஆற்றல்களை எப்படி வெளிக்கொணர்ந்து இயக்குவது என தெரிந்துகொள்ளாமலும் வாழ்க்கையில் பலவித ஏமாற்றங்களுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இறைவன் உள்மனம் மூலமாக இயங்கி நாம் பிறந்தது முதல் இறப்புவரை நம்மைக் காப்பாற்றி நம் உடம்பை இயக்கிக் கொண்டே இருக்கிறார்.
இந்த உண்மையை உணர்ந்து கொண்டு நம்மிட முள்ள சக்திகளை எப்படி உபயோகிப்பது எனவும் தெரிந்து கொண்டால் நாம் வாழ்க்கை யில் நமது கஷ்டங்களை எல்லாம் நிவர்த்தி செய்துகொண்டு ஆனந்தமாக வாழலாம்.
நம்மிடம் தேங்கிக் கிடக்கும் மகா சக்திகளை கண்டுபிடித்து அவைகளை நாம் உபயோகப்படுத்தி நமக்கு வேண்டிய செல்வங் கள், தொழில்கள், படிப்பு ஆகிய வசதிகளை மேம்படுத்திக்கொண்டு இன்பமாக வாழலாம்.
இதற்குத் தேவை திட நம்பிக்கையும், தைரியமுமே. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். நம்மேல் நமக்கே ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ஆத்ம சக்தியை (will power) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆத்ம சக்தி என்பது நம்மிடம் உள்ளது தான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது. உருவம் அற்றது தான். ஆனால் அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் மட்டுமே அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.
நம்மிடமுள்ள அளப்பரிய சக்தியை நமக்கு நாமே உணர்வதில் மனதை ஒருநிலைப் படுத்துதல் (Concentration) மற்றும் தன்னை அறிதல் (Know theself) ஆகிய இரண்டு செயல்கள் முக்கியமானவை.
மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது ஒன்றிலேயே சூழ்ந்து சிந்தனையை சிதறவிடாமல் நிறுத்துவது ஆகும்.
ஒன்றை அடைய வேண்டும் என்ற விருப்பமானது உறுதியுடனும், திடமுடனும் யாரிடத்தில் வேரூன்றி இருக்கிறதோ அவரே அந்த விருப்பத்தில் திட சித்தத்தை செலுத்தி தான் விரும்பியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்...
இஸ்ரேல் ராணுவத்தின் பாராசூட் பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் யூரிகெல்லர்...
இவர் கூர்ந்து பார்த்தால் கரண்டி கத்தி ஸ்பூன் தட்டு போன்ற உலோகங்கள் எல்லாம் தானாகவே வளைய ஆரம்பித்தன.கெல்லரின் இந்த அதீத சக்தி விஞ்ஞானிகளுக்கு பெரும் புதிராக இருந்தது.
1973 ஆம் ஆண்டு பி.பி.சி ரேடியோவில் யூரிகெல்லரின் செயல் விளக்கங்களைப் பற்றி ஒலி பரப்பினார்கள் அப்போதே பல வீடுகளில் இரும்பு பொருட்கள் வளைவதாக போன்கள் அலறின. இதை நேரில் பார்காத சிலர் நம்ப மறுத்தனர்.
யூரிகெல்லர் பத்திரிக்கை வாயிலாக ஒரு அறிக்கை விட்டார் டி.வி. நிகழ்ச்சியில் தோன்றி நான் பார்க்கிறேன் உங்கள் வீட்டில் டி.வி யின் முன்பாக பொருட்களை வைத்து சோதித்துப் பாருங்கள் என்றார்.
குறிப்பிட்ட அன்றைய தினம் நாடு முழுவதிலும் உள்ள பலர் தம் வீட்டு டி.வி முன்பாக வேலைக்கு உதவாத கரண்டிகள், கத்திகள், லாடங்கள், இரும்பு பொருட்களை வைத்திருந்தனர்.
சில நிமிடங்களில் டி.வி யில் யூரிகெல்லர் தோன்றினார் கைகளை கட்டிக் கொண்டு ஏதோ பிரார்த்தனை செய்தவாறு உற்று நோக்கினார்.
என்ன ஆச்சரியம் நாடு முழுவதிலும் டி.வி யின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வளைந்து சுருண்டன ஓடாத கடிகாரங்கள் ஓடின. சில வீடுகளில் டேபிள், சேர்கள் கூட வளைந்தன. அவரவர் வீட்டில் பொருட்கள் வளைந்ததாக எங்கும் இதே பேச்சு இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் மட்டுமே யூரிகெல்லர் உலகப் புகழ்பெற்றவராகி விட்டார்.
கலிஃபோர்னியா மென்லே பார்க்கில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (S.I.R) கெல்லரை அழைத்தது அங்கு கெல்லருக்கு பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
எல்லாவற்றிலும் கெல்லர் வெற்றி பெற்றார்.
எஸ்.ஐ.ஆர் நடத்திய சோதனைகளில் ஒன்று யாருக்கும் தெரியாமல் ஆறு படங்களை வரைந்து அதை ஒரு கவரில் போட்டு அதை ஒரு பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு அந்த பெட்டியை ஒரு லாக்கரில் வைத்து அந்த லாக்கரை பல மாடிகள் கொண்ட ஒரு அரையினுள் வைத்து பூட்டுக்கும் சீல் வைத்தனர்.
கெல்லரிடம் அந்த படங்களை வரைந்து காட்டுமாறு கேட்டனர் கெல்லர் மிக சரியாக அந்த படங்களை வரைந்து காட்டினார்.
விஞ்ஞானிகள் இதை ESP power என்றனர். கெல்லரோ என்னையும் மீறி ஏதோ ஒரு சக்தி எண்னை இப்படி செய்விக்கிறது என்கிறார்.
ESP POWERக்கு ஒரு எல்லை உண்டு இந்த ஆற்றல் அதையும் மீறிய செயல் எனவே இது ஒரு அமானுஷ்ய சக்தியின் ஆற்றலாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...
முரண்...
நட்பு ரீதியாக வேண்டுமானால் முரண் என்பது பெரிய பாதிப்பு இல்லை..
ஆனால் கருத்தியல் பயணத்தில் சிறிய முரண்களை நீங்கள் எளிதாக கடந்து செல்வீர்கள் என்றால்,
உங்கள் பயணத்தில் அந்த முரண்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிதர்சனம்..
நல்ல விவாதங்கள் இருக்குமேயானால் உங்களின் பயணம் சிறந்ததாக அமையும்..
விவாதமே இல்லாத பயணத்தில் முரண்களே அதிகம் காணும்..
அதை முடிந்தளவு களைய முற்படுங்கள்..
100 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 20 வயது இளைஞர்.. போதையில் வெறிச்செயல்...
100 வயது மூதாட்டியை, 20 வயது இளைஞர் ஒருவர் மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள சக்தனா பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 100வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த நிலையில் வீட்டில் தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி வித்தியாசமாக சத்தம் போடுவதை கண்ட பேத்தி ஒருவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது அவர் கண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, தனியறையில் படுத்திருந்த மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததைக் கண்ட பேத்தி, உடனடியாக சத்தம் போட்டு வீட்டில் இருப்பவர்களையும் அக்கம்பக்கத்தினரையும் வரவழைத்தார். உடனடியாக அங்கத்தவர்கள் இளைஞரை பிடித்து நையப் புடைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளைஞரை பிடித்து விசாரித்த போது தான் தெரிந்தது அவருக்கு வயது வெறும் 20 தான் என. பிறகு அவரது போதையை தெரிவித்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், குடிபோதையில் இருந்ததால் என்ன செய்கிறோம் என அறியாமல் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து 20 வயது இளைஞரை கைது செய்த போலீசார், அவரை கல்யாணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட நூறு வயது மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், அவரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்து வருகின்றனர்...
"பாபா வங்கா" முன்னாள் ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு எரிமலை மலைத் தொடரின் அடிவாரத்தில். மாக்கடோனியாவில் உள்ள Strumica வில் உள்ள Vangelia Pandeva Dimitrova கிராமத்தில் பிறந்தார். 12 வயதில் ஒரு புயலில் அவரது பார்வை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தனது முதல் ஞானப்பார்வையை பெற்றார்.
பாபா வங்கா கூறிய தீர்க்கதரிசனங்கள்:
2025: ஐரோப்பாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட பூஜ்ஜியத்தை எட்டும்.
2028: வேற்றுகிரக உயிரினங்கள்.
புதிய ஆதாரங்களை கண்டுபிடிப்பதில் நம்பிக்கையுடன், மனிதகுலம் வீனஸ் நோக்கி பறக்கிறது.
2033: உலக வெப்பமயமாதல் மூலம் துருவ பனி மூடிகள் உருகுவதால் உலக நீர் நிலைகள் உயரும்.
2043: ஒரு இஸ்லாமிய கலிபாவில் ஐரோப்பாவின் மாற்றம் முடிவடைந்தது. ரோம் தலைநகர் பெயரிடப்பட்டது. உலகப் பொருளாதாரம் முஸ்லிம் ஆட்சியின் கீழ் வளர்கிறது.
2066: ரோம் திரும்பப் பெறும் முயற்சியில் முதன்முறையாக அமெரிக்கா ஒரு புதிய காலநிலை மாற்றம் ஆயுதத்தை பயன்படுத்தும் மற்றும் கிறிஸ்தவத்தை மீண்டும் கொண்டுவருகிறது.
2076: கம்யூனிசம் ஐரோப்பாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் திரும்பும்.
2100: மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை சூரியனால் "குளிர் பிரதேசங்கள் சூடாக மாறும்.
2130: வேற்றுகிரகவாசிகளின் உதவியுடன், மனித நாகரீகங்கள் நீருக்கடியில் வாழ்கின்றன.
2170: முக்கிய உலக வறட்சி.
2187: இரண்டு பெரிய எரிமலை வெடிப்புகள் வெற்றிகரமாக நிறுத்தப்படும்.
2201: சூரியனின் வெப்பமண்டல மாற்றத்தால் வெப்பநிலை குறைகிறது.
2262: கிரகங்கள் மெதுவாக மாறும். செவ்வாய் ஒரு வால்மீன் மூலம் அச்சுறுத்தப்படும்.
2354: செயற்கை சூரியனின் விபத்து மேலும் வறட்சியை ஏற்படுத்தும்.
2480: இரண்டு செயற்கை சூரியன்கள் இருண்ட நிலையில் பூமியை விட்டுச்செல்லும்.
3005: செவ்வாய் கிரகத்தில் ஒரு போர். கிரகத்தின் பாதையை மாற்றும்.
3010: ஒரு வால்மீன் சந்திரனை தாக்கும். சந்திரன் பூமியைப் பாறை மற்றும் சாம்பலால் வட்டமடிக்கும்.
3797: இந்த நேரத்தில், பூமியில் உள்ள அனைத்தும் இறக்கும். எனினும், மனித நாகரீகம் ஒரு புதிய நட்சத்திர அமைப்புக்கு செல்ல, போதுமானதாக இருக்கும்...
Subscribe to:
Posts (Atom)