03/03/2019

ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள்...


ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது.

எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.

மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு...

தமிழக கம்யூனிஸ்ட்கள்...


ஏன் தமிழ் சாதிக்குள் சிறு பிரச்சனையை பெரிதாக்கி தமிழர்களை பிரித்தாள்கிறார்கள் என்பதற்கு இந்த பட்டியலை பார்த்தாலே புரியும்...

துன்பம் நிரந்தரமாய் நீங்க...


துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள். அதைக் கண்டு ஓட வேண்டாம். அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டு தான் வரும்.

அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.

மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச் செய்யும்.

அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.

நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.

உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும். அது மரண வலியாகத் தான் இருக்கும்.

அதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம். தரையில் புரண்டு அழலாம்.

அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம், கவலை என்று ஏற்படும் போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.

அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ, அப்படி அதிகப் படுத்தி, அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.

அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.

அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால், அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.

அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.

நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ, அதனுடன் கலந்து விட்டீர்களோ, அதன் பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.

ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.

இப்போது உங்கள் வலி, துயரம், கவலை, இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி, பூரிப்பாக மாறி இருக்கும்.

இதை நீங்கள் அனுபவத்தில் தான் உணர முடியும்...

பாக்கிஸ்தான் மட்டும் பக்கத்து நாடா இல்லனா.. பாஜக விற்கு அரசியலே இல்ல.. வெளுத்து வாங்கும் சீமான்...


https://youtu.be/qcDamunICZM

Subscribe The Channel For More News...

தற்சார்பு வாழ்வியல் முறை...


ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த நிலம். அந்த நிலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் கட்டாயம் உழைக்க வேண்டும்.

அந்தந்த கூட்டுக் குடும்பத்தில் உள்ள வயதான மூத்தார்களை மட்டும் ஒரு கட்டத்தில் உழைப்பிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு கணக்கு வழக்கு, நிர்வாகம், கல்வியளித்தல் போன்ற பொறுப்புக்களை அளிக்கலாம்.

ஒவ்வொரு குடும்பமும் ஒரு தொழில் நிறுவனம் போல செயல்பட்டு தங்களுக்குத் தேவையான பொருட்களை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும்.

தேவைக்கு மிஞ்சியதை ஊர்
வார சந்தைக்கு கொண்டு போய் விற்றுவிட்டு மாற்றுப் பொருட்களை வாங்கி வரலாம்.

நெய்தல் திணையினரும் சொந்த நிலங்களை வைத்துக் கொண்டு நீண்டகால பயிர்களான தென்னை, சவுக்கு போன்ற பயிர்களை வளர்த்துவிட்டு மீன்பிடித் தொழிலை மட்டும் பிரதானமான தொழிலாக வைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரே சீரான அளவு கொண்ட நிலங்கள் மட்டுமே வழங்கப்படும்.

இதன் மூலம் மானாவாரி மருதநில கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு சாதிவாரி நால்வர்ண பகுப்பிற்கான அவசியமே இல்லாமல் போகும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீட்டுக் கொல்லை என்கிற ஆதித்தமிழரின் பழையமுறை மீண்டும் மலரும்.

நெல் உற்பத்தி வீட்டுக் கொல்லை அளவிற்கு சுருங்கிப் போவதால் செயற்கை தட்டுப்பாட்டை எவராலும் ஏற்படுத்த முடியாது.

நெல் ஓரிடத்திற்கு சென்று குவிவது தடுக்கப்பட்டு அனைவருக்கும் சமச்சீரான நெல் உணவு மிகக்குறைந்த விலைக்கு தொடர்ந்து கிடைக்கும்...

சிந்தித்து பார் தமிழா...


தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை உள்ளே விட்ட திராவிட மலையாளி எம்.ஜி.ஆர்...


தமிழகத்தில் மீத்தேன் (அதாவது ஹைட்ரோகார்பன்) கண்டறியும் ஆய்வு,
ONGC யால் முதன்முதலாக 1977 ல் எம்.ஜி.ஆர் அனுமதியுடன்  தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு..

1986 ல் முதன்முதலாக 75% மீத்தேன் கிடைக்கும் Natural gas எடுக்கும் பணி அவரது ஆட்சியிலேயே 1986 நரிமணத்தில் தொடங்கப்பட்டது.

அதே ஆண்டு களப்பாள் பகுதியிலும் தொடங்கப்பட்டது.(இன்றுவரை நடந்தும் வருகிறது).

1996 ல் மீத்தேன்(CH4) அதாவது ஹைட்ரோகார்பன்(CH) எடுக்க மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தமிழக அரசுக்கு கட்டளை இடுகிறது.

அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன்
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஆ.ராசா அனுமதி கொடுத்தார்.

அதை நெடுவாசல் அமைந்துள்ள தொகுதியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் அங்கீகரித்தார்.

இதை அந்த பகுதி எம்.எல்.ஏ வான கம்யூனிஸ்ட் கட்சி ராஜசேகர் எதிர்க்கவில்லை, ஒத்துழைத்தார்.

தற்போது அந்த நாசகார திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி மிக மூர்க்கமாக செயல்படுத்துவது அ.தி.மு.க.

அதை இயக்குவது மத்திய பா.ஜ.க மோடி அரசு.

அதற்கு ஆதரவாக செயல்படுகிறது தமிழக பா.ஜ.க.

எதிர்ப்பது போல நடிப்பது தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்...

ஆக...  தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட், பா.ஜ.க, காங்கிரஸ் அனைவரும் இதில் கூட்டாளிகள்...

உங்க காலில் பாத வெடிப்பா.? கவலையை விடுங்க.. வீடியோ பாருங்க...


https://youtu.be/TQmahtrymCE

Subscribe The Channel For More Tips...

தமிழர்கள் பயன்ப்படுத்திய பலவகை பாரம்பரிய பாத்திரங்களின் மகிமை...


மண் பாண்டத்தின் மகிமை...

மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது.

உணவில் சுவையைக் கூட்டக்கூடியது.
நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்.

உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.

மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக்காமல் இருக்கும்.
தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.

வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது.

பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.

பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.

இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும் போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும்.

உடலை எஃகு போல உறுதிப்படுத்தும்.

கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே...

பாஜக மோடி கலாட்டா...


தமிழிலக்கியங்களும் தமிழிசையும்...


உலகின் தொன்மை வாய்ந்த மொழிகளில் செவ்வியல் மொழி என்னும் பெருமையுடன் வாழும் மொழி தமிழ்மொழி ஆகும். தமிழ் மொழியில் தொல்காப்பியம் தொடங்கி புதுக்கவிதை வரையிலும் ஏராளமான இலக்கியங்கள் வாழ்ந்து வருகின்றன. இயல், இசை, நாடகம் என முத்தமிழாகப் போற்றப்படுவது தமிழ்மொழி ஆகும்.

இசைத்தமிழாகிய தமிழ் இசை தொல்காப்பியர் காலம் முதற்கொண்டு சிறப்புடன் திகழ்வதைக் காண முடிகிறது. தமிழ் இசையானது தனக்கே உரிய தனித்தன்மையுடன் விளங்குகின்ற அதே வேளையில் தமிழ் இலக்கியங்களில் இரண்டறக் கலந்திருப்பதை இவண் காணலாம்.

கலைஞர்களிடம் உள்ள அழகுணர்ச்சியின் வெளிப்பாடாகப் பிறப்பதே கலை ஆகும். கலைகளைப் படைக்கும் கலைஞன் அவற்றால் தான் மகிழ்வதோடு அக்கலையைச் சுவைப்பவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறான்.

நுண்கலைகளில் ஒன்றாகச் சிறப்பிற்குரியதாகப் போற்றப்படுவது இசைக்கலை ஆகும். ஓசையை அடித்தளமாகக் கொண்டு, செவி நுகர் கனியாக அமைவது இசைக்கலை ஆகும்.

ஒலியைக் குறிப்பிடத்தக்கவை என்றும் (குயிலின் கூவல்) குறிப்பிட்டுக் காட்ட இயலாத குழப்ப ஒலிகள் (சந்தை இரைச்சல்) என இரண்டாகப் பிரிக்கலாம். இசைக் கலையில் நுட்பமான முறையில் ஒலியைப் பிரித்து உணர வேண்டியுள்ளது. ஒலியின் நுட்பத்தைப் பகுத்தறியும் ஆற்றல் உடையோர்க்கே வாய்ப்பதான இசைக்கலை ஓர் அரிய கலை எனலாம்.

இசைக்கலையின் அமைப்பு...

எழுத்துக்களை உருவாக்கிச் சொற்களைப் பொருள் தருமாறு அமைப்பது போல் ஒலியின் பகுதிகளைச் சுவை தருமாறு இணைத்து இசை உருவங்களான பணிகளை உருவாக்கி இசைக் கலையைப் படைக்கிறான் மனிதன்.

ஏழு இசைகள் என்பது இந்தியா எங்கும் பரவலாகக் காணப்படும் ஒன்றாக விளங்குகிறது. சங்கப் பாடல்களில் ஏழிசைப் பற்றிய குறிப்புகள் உண்டு. மேற்கத்திய இசையைக் காட்டிலும் கிழக்கத்திய இசை மிகச் சிறப்பானதாகவும் முழுமை பெற்றதாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தமிழிசையும் கருநாடக இசையும்...

இசையானது எல்லா உயிர்களையும் ஈர்க்கும் தன்மை படைத்ததாக விளங்குவதோடு மனித சமுதாயத்தின் உயர்ந்த பண்பாட்டு விழுமியத்திற்குச் சான்றாக விளங்குகிறது. "இசை என்பது மொழி, இனம், நாடு கடந்த பொதுமை உடையது. எந்நாடும் உரிமை கொள்ளத்தக்கதாகும்.

பொதுமை நிலை கொண்ட இசையை ஒரு மொழிக்கு மட்டும் உரியது என்றோ ஒரு மொழியே இசை என்றோ கட்டுப்படுத்துதல் அத்துணைச் சிறப்பும் முறைமையும் உடையதன்று.

ஆனால் இனம் காரணமாக அஃதாவது மொழிவழி அமைந்த இனத்தவர் காரணமாக இசையை உரிமைப்படுத்தலாம் என்னும் வெற்றிச்செல்வன் அவர்கள் கூற்று நோக்கத்தக்கது. ஆகவே இசைக்கு மொழி இல்லை என்றாலும் மொழிக்கு இசை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசையின் சிறப்பும் தொன்மையும்...

தமிழ் மக்கள் பழங்காலத்தில் இருந்தே தங்கள் அறிவுத்திறனால் இசையமைப்பு முறையை அமைத்திருந்தனர். இதனைத் தொல்காப்பியக் குறிப்புகளிலிருந்தும் சங்க இலக்கியப் பாடல்களில் இருந்தும் அறியமுடிகிறது.

தமிழில் இருந்து அழிந்துபோன இசை நூல்களாகச் சிற்றிசை, பேரிசை, இசைநீல், இசை நுணுக்கம், இசை விளக்கம், பஞ்சமா பிரதீயம், பண் அமைதி, பண் வரி விளக்கம் பாட்டும் பண்ணும், இசைக் கூறு முதலானவை இருந்ததை அறிய முடிகிறது.

பழந்தமிழ் மக்கள் சுரங்களையும், சுருதிகளையும் ராகம் உண்டாக்கும் விதிகளையும் நன்கு உணர்ந்து பன்னிரண்டாயிரம் ராகங்களைப் பாடி வந்தார்கள் என்று பழந்தமிழ் இசை நூல்கள் கூறுகின்றன.

இசை அமைப்பு, பண் அமைப்பு, தாள அமைப்பு, வண்ணங்களை இனிமையாகப் பாடுதல் ஆகியவற்றில் பண்டைத் தமிழர் தனித்திறமை பெற்றவராகத் திகழ்ந்தனர்.

கருநாடக இசை - விளக்கம்...

பக்தி மணம் கமழும் நாயன்மார்கள், ஆழ்வார்களின் இசைப்பாடல்கள் வட நாட்டினரையும் வெகுவாகக் கவர்ந்தன. வடமொழித் திறமை உடைய சாரங்கதேவர் கி.பி.1210 - 1241 வரையுள்ள காலத்தில் தமிழகம் வந்து தேவாரப் பண்களை அறிந்து தமது வடமொழி சங்கீத ரத்னாகர் என்னும் நூலில் தேவாரப் பண்கள் சிலவற்றைப் போற்றி வைத்துள்ளார்.

சாரங்க தேவர் எழுதிய சங்கீத ரத்னாகரத்தில் கர்னாடக இசையின் மூலக்கரு அமைந்திருப்பதாகக் கருதலாம். வடமொழியில் வல்ல சாரங்க தேவர் சங்கீத ரத்னாகரத்தை வடமொழியில் எழுதினார்.

அந்நூலிலுள்ள இசையமைப்பு முறை தேவாரம், திவ்விய பிரபந்தத்தில் உள்ள தமிழிசைப் பண்ணமைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டது. சங்கீத ரத்னாகரத்தின் வாயிலாகத் தமிழிசை வடநாடுகளுக்கு அறிமுகமானதாகக் கூறலாம்.

மேலும் கருநாடக இசை பற்றிக் குறிப்பிடும்போது, "தமிழரிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும் கிளைப்பண்களையும் வகுத்தும் பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும் "கருநாடக சங்கீதம் எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்" என்று வெற்றிச்செல்வன் தம்முடைய இசையியல் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியமும் தமிழிசையும்...

கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர், இன்றைய மொழியியலின் அடிப்படை அலகான ஒலியின் நுட்பத்தை அறிவியல் பூர்வமாக உணர்ந்து இலக்கணம் வகுத்தவர். உயிர், உயிர்மெய், மெய் ஆகிய எழுத்துக்கள் அளபெடுப்பதை இசை நீட்டம் எனக் குறிப்பிடும் தொல்காப்பியர் அதனைக் குறிப்பிடும்போது.

இசையோடு சிவனிய நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல்.1:33 2-3) என்று கூறுகிறார். இதிலுள்ள "நரம்பின் மறைய" எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது இசையைப் பற்றியும் "யாழ்" போன்ற இசைக் கருவியையும் உள்ளடக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக்கலையுடன் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது.

தொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடு தொடர்புடைய ஆழ்ந்த பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்துள்ளன. தொல்காப்பியர் வண்ணத்தை 20 வகையாகப் பிரித்துப் பெயர்களைச் சுட்டி நூற்பா இயற்றியுள்ளார்.

இவ்வண்ணங்களை வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம் என இசைத்தன்மையை உயர்த்தும் வகையில் அமைத்துள்ளார். தொல்காப்பியர் பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்து மற்றும் இசைத்தன்மையைக் கொண்டு பாகுபாடு செய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன, பரிபாட்டு என்பது "இசைப்பா" என்கிறார் பேராசிரியர்.

பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம். ஊடல்தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்க இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது. ஐவகைப் பண்களையும் இசைக்கருவிகளையும் தொல்காப்பியர் விரிவாகக் கூறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களும் தமிழிசையும்...

இசை உணர்வின் எழுச்சியால் இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பண்டைத் தமிழரின் இசைப்புலமையை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. பரிபாடலுக்கு இசைவகுத்தோர் பதின்மர் ஆவர். மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகியன இசைப்பாடல்கள் என்பன குறிப்பிடத்தக்கது.

சங்ககாலப் பண்ணும் இசைக் கருவியும்...

சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள், மட்டுமல்லாது பாணர், பாடினியர், ஆடல் மகளிர் போன்றறோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர். ஆம்பல் பண், காஞ்சிப் பண் காமரம், குறிஞ்சிப் பண், செவ்வாழி பண், நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன.

சங்க காலத் தமிழர் பண்களைப் பல்வேறு இசைக் கருவிகள் துணையோடு இசைத்துப் பாடியுள்ளனர். யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம் முதலான இசைக்கருவிகள் இருந்துள்ளன.

சங்கம் மருவிய நூல்களும் தமிழிசையும்...

நீதி நூல்கள் பதினெட்டும் தமிழிசையின் நுட்பத்தைச் சிறப்பாக எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன. சிறந்த பண்ணிசைக் கருவியான யாழைப் பற்றிக் குறிப்பிடும்போது, "குழலினிது யாழினிது என்ப" (குறள்:66) பண்ணமையா யாழின் கீழ்ப்பாடல் பெரிதின்னா" (இன்னா. 31.1) என நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன. "குழலினினியமரத் தோவை நற்கின்னா" (இன்னா.35.2) "சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவ போல்" (பழமொழி: 28:1-2) போன்ற பாடல் வரிகள் சங்கம் மருவிய காலத் தமிழிசைச் சிறப்பை உணர்த்துவன ஆகும்.

"செவ்வழி யாழ் பாண் மகனே" (திணை மாலை 124-1) "பாலையாழ் பாண் மகனே" (திணை மாலை 133:1); "தூதாய்த் திரியும் பாண்மகனே"  (ஐந்திணை 22:1-2) போன்ற பாடல் வரிகள் இசைக் கலைஞர்களைப் பற்றிக் கூறுவதைக் காண முடிகிறது. ஆரவாரம் நிறைந்த சங்க கால இசை மரபானது. சமண பௌத்த தாக்கம் நிறைந்த சங்கம் மருவிய காலத்தில் அடக்கத்தோடு ஆடம்பரமின்றி அமைதியாக இலங்கியது.

காப்பியங்களும் தமிழிசையும்...

கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலிருந்து 12- ஆம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்தில் சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம் வரையில் காப்பியங்கள் பல தோன்றியுள்ளன. இசையானது மனித வாழ்க்கையின் ஒரு கூறு ஆகும். காப்பியங்கள் பலவும் பழந்தமிழ் இசைச் சுரங்கங்களாகவே அமைந்துள்ளன. அவற்றுள்ளும சிலப்பதிகாரம் இசைச் செய்திகளை மிகவும் அதிகமாகத் தருகிறது. அடுத்த நிலையில் பெருங்கதை இசை மலிந்த காப்பியமாகக் காட்சி அளிக்கிறது.

சிலப்பதிகாரமும் தமிழிசையும்...

சிலப்பதிகாரம் தமிழிசைக் காப்பியமாகும். இசை ஆசிரியரின், தன்னுமை ஆசிரியரின் அமைதி பற்றி இளங்கோ அடிகள் கூறுகிறார். தன்னுமைக் கருவியின் பயன்பாட்டுச் சிறப்பை ஆக்கல், அடக்கல், மீத்திறம் படாமை என இளங்கோ அடிகள் கூறுகிறார். யாழின் அமைப்பு, யாழிசை அமைப்பு, யாழாசிரியரின் திறமை முதலியன கூறப்படுகின்றன.

வரிப்பாடல், தெய்வம் சுட்டிய வரிப்பாடல், குடைப்பாடல் முதலியன இசையின் நுட்பத்தைப் புலப்படுத்துவன. புகாரில் இசை வல்லுநர்கள் இருந்ததை, "அரும்பெறன் மரபில் பெரும்பாண் இருக்கையும் (சிலப்:535-37) என்ற அடியாலும் வீணை இசைக் கருவி இருந்ததை, "மங்களம் இழப்ப வீணை மண்மிசைத்" (சிலப்.6:18-23) என்ற அடியாலும் உணர முடிகிறது.

உலகின் தொன்மை வாய்ந்த மனித இனங்களுள் தமிழினத்தின் தனிச்சிறப்பாகத் தமிழ் இலக்கியங்களும் தமிழிசையும் அமைந்துள்ளன. தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் வளர்ச்சி அடைந்து வருவதைப் போலவே தமிழிசையும் இரண்டாயிரமாண்டு பழமையுடன் சிறந்து விளங்கி வருகிறது.

தமிழிலக்கியத்தின் அமைப்புகளில் வடமொழி ஆதிக்கம் செலுத்தும்போது எல்லாம் அதனை மீறி இலக்கியம் வளர்ந்தது போல் தமிழிசையில் வடமொழி, தெலுங்கு போன்ற மொழிகள் ஆதிக்கம் செலுத்த முனைந்தபோது அவற்றை எதிர்த்து வளர்ந்து வந்துள்ளது.

தமிழிலக்கியங்களும் தமிழ் இசையும் தமிழரின் பண்பாட்டு அடையாளம், வரலாற்றுக் கருவூலம், எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்தின் அழியாச் செல்வம் என்றால் அது மிகையாகாது...

அதிமுக கூட்டணியில் தேமுதிக உறுதி... திமுக ஸ்டாலின் கதறல்...


அதிமுக கூட்டணி கட்சிகள்...

அதிமுக - 21
பாமக - 7 + 1
தேமுதிக - 5 + 1
பாஜக - 5
தமாக - 1
புதக - 1

திமுக கூட்டணி கட்சிகள்...

திமுக - 23
காங்கிரஸ் - 10
கம்யூனிஸ்ட் - 2
விசிக - 1
மதிமுக - 1
முமுக - 1
கொங்கு - 1
ஐஜேகே - 1

தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம்...


பயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய உடற்பயிற்சி அல்லது மல்யுத்தம் (Gymnastics) பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான்.

சிலம்பம், களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது.

தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய கம்பத்தின் மீதும், கயிற்றில் தொங்கும் கம்பத்தின் மீதும், அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மீதும் தாவி ஏறி ஆசனங்கள் செய்யும் மல்லர் கம்பம் வித்தையும் மிக அருகி வரும் கலைகளில் ஒன்றாகும்.

வீரம் செறிந்த விளையாட்டான மல்யுத்தம், சிலம்பம், களாரி, போன்று மல்லர் விளையாட்டிலும் நம் முன்னோர்கள் சிறப்பு பெற்ற கலைகள் ஆங்கிலேயர்களாலும் அன்னிய ஊடுருவலாலும் அழிக்கபட்டது போல் மல்லர் கம்பம் விளையாட்டும் நம்மில் இருந்து அழிக்கபட்டது.

மல்லர் கம்பம் யோகாசனம், தியானம் போன்று மனதையும் உடலையும் கட்டுபடுத்தி செய்யும் உடல் பயிற்சி ஆகும்.

சிலம்பத்துக்கும் மல்லர் விளையாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சிலம்பத்தில் வீரன் நிலையாக நின்றிருப்பான் கம்புதான் சுற்று சுழலும். ஆனால் மல்லர் விளையாட்டில் கம்பம் நிலையாக இருக்க வீரன் அதன் மேல் சுற்றி சாகசம் புரிவான்.

மகாராசி(ஷ்)டிரா, உத்திரபிரதேசம், குச(ஜ)ராத் போன்ற வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன. மகாராசிடிராவில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறைவணக்கத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறும்.

இதுபோல் பிரேசில், யேர்மனி, யப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மல்லர் விளையாட்டு பிரபலமடைய தொடங்கியுள்ளன.

திராவிட, பார்பண ஆட்சிகளில் தமிழர் கலைகளும் தமிழர்களும் மதிக்கபடுவதில்லை . மனிதர்களுக்குப் பயன்படும் தமிழர் சொல்லிய நல்ல விசயங்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் கொடுப்பதும் இல்லை. இன்றும் இவ் அங்கிகாரம் நிலுவையில் இருக்கின்றது.

ஆங்கிலய ஆட்சியில் தமிழர்கள் தற்காப்புக் கலைகள் அழிக்கபட்டன. தற்காப்புக் கலை பயின்ற தமிழர்கள் சிந்தனைவாதிகளாகவும் அடிமைப்பட விரும்பாமல் இருந்ததே இதற்குக் காரணம்.

பிற்காலத்தில் திராவிட பார்பண ஆட்சியிலும் தமிழர் கலைகள் தமிழர் வரலாறு, தமிழர் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்க பட்டன. இதற்கு இந்து எதிர்ப்பு என்று காரணம் சொல்ல பட்டது.

தமிழ் சித்தர்கள் சொல்லிகொடுத்த யோகாசனம், தியானம் என்ற மக்களுக்கு பயன் படக்கூடிய உன்னத கலைகள் கூட இந்துமத முத்திரை குத்தி ஒதிக்கிவைக்க பட்டன திராவிட ஆட்சியில். , பார்ப்பண ஆட்சியில் தமிழர் அங்கிகாரங்கள் இழந்தனர்.

இப்படியான கலைகள் அழியாது இருக்க வேண்டுமானால் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது...

சினிமா வும் உளவியல் அரசியலும்...


மரவள்ளிக் கிழங்கு....


மரவள்ளி என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது.

இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான கார்போவைதரேட்டுக்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.

மரவள்ளிக் கிழங்கு என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் சவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது.

மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாகவும் பல்வேறு தொழில்துறைகளில் இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனப்படும் நச்சுப் பொருள் காணப்படுகின்றது.

இப்பொருள் இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு "இனிப்பு" மரவள்ளி, "கசப்பு" மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. முறையாகச் சமைக்கப்படாத "கசப்பு" மரவள்ளி கோன்சோ என்னும் நோயை உருவாக்கக்கூடும்.

"கசப்பு" மரவள்ளிப் பயிர், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றை அண்டவிடாதிருப்பதால், பயிர் செய்பவர்கள் "கசப்பு" மரவள்ளியையே பெரிதும் விரும்புகின்றனர்.

மரவள்ளிக் கிழங்கு பெரிய அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது. உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் 6% உற்பத்தி செய்யப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் மற்ற சில நாடுகள் பிரேசில்,கொலம்பியா, வெனின்சுலா, கியூபா, போர்ட்டோ ரிகோ, கையிட்டி, டொமினிக்கன் குடியரசு, மேற்கிந்தியத் தீவுகள், நைசீரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்சு மற்றும் இந்தோனேசியா ஆகும்.

உலகெங்கும் சுமார் 15.7 மில்லியன் கே(ஹெ)க்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. ஒரு கெக்டேருக்கு சராசரி 10 தொன்கள் மரவள்ளிக் கிழங்கு வீதம் 158 மில்லியன் தொன்கள் உற்பத்தியாகிறது. மரவள்ளி கிழங்கு பயிரிடப்படும் கண்டங்களில் 51.44 மில்லியன் கெக்டேர் அளவில் ஆப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆசியா 3.97 மில்லியன் கெக்டேர் அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

உலகளவில் மரவள்ளிக் கிழங்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் 57%-ம் (சுமார் 95 நாடுகளில்) ஆசியாவில் 25%-ம் விளைவிக்கப்படுகிறது. மண் வளம் போன்ற எவ்விதமான வேளாண் சூழலையும் தாங்கி வளரக்கூடிய பயிராதலால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் குறிப்பாக, ஆப்பிரிக்கா,அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் ஒரு முதன்மைப் பயிராக மரவள்ளிக் கிழங்கு விளங்குகிறது...

ஆரியம் - திராவிடம் இரண்டும் தமிழினப் பகைவர்களே...


உலக நாடுகளே உனக்கு எதிராக தான் இருந்தது என்பதே கூறிக்கொண்டு...


இன்றைக்கும் அதே மனநிலையில் தான் அனைத்து நாடுகளும் இருக்கின்றன..

அதற்கு சிறிய உதாரணம் சாகர்மாலா திட்டம்,

எதிர்ப்புகள் இருந்தாலும் உன் மண்ணில் இருந்தே தொடங்கப்படுகிறது..

ஒவ்வொரு வாரமும் உனக்கு கான்சப்ட் கொடுக்கப்படுகிறது, நீ சிந்திக்க கூடாது என்பதற்காக...

யாரையும் எப்போதும் நம்பாதே..

அதுவும் எந்த நாடுகளையும் எளிதாக ஆதரித்து விடாதே..

ஒவ்வொரு நாடும் தன் அதிகாரத்தை தற்காத்து கொள்கிறது..

அதற்கு மூலதனம் உன் அறியாமை மற்றும் உணர்ச்சிவசப்படுதல்...

வெகுசன மக்கள் அனைத்து இடத்திலும் ஒரே போன்று தான் இருக்கிறார்கள்..

இந்த அடிமை சமூகத்தில் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்று..

எந்த விடயம் உனக்கு சாதகமாக பிரபலப்படுத்த படுகிறதோ,

அதன் மீது எப்போதும் கேள்விகளை கேள்...

எச்ச மீடியாக்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது...


ஆன்மீகம் ஒரு அறிவியல்...


இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்...

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது.

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும்.

அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது..

இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும்..

அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள்.

நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை...

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இரகசியம் பற்றி தெரியுமா.?


https://youtu.be/gF-kTmQaBzM

Subscribe The Channel For More News...

நீங்கள் நடத்தும் திருமணத்தில் புரோகித பி.பாமணன் சொல்லும் மந்திரத்தின் தமிழாக்கம் இதோ பாருங்கள் பின்பு பகுத்தறிவு பெறுங்கள்...


https://youtu.be/jmghuuV3q6k

Subscribe The Channel For more News...

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)

இனிமேலும் இந்த சாஸ்திரம் சடங்குகள் மற்றும் மந்திரங்கள் தேவையா தமிழர்களே சிந்தியுங்கள் ?

பாஜக மோடியின் திருட்டு அரசியல் கலாட்டா...


திருட்டு திராவிடம்...


அது என்ன டா வந்து குடியேறிவர்கள் மட்டும் மதம், நாட்டுப்பற்று, மனிதநேயம் என்று மாநிலம் கடந்த விடயங்களை வலியுறுத்துகிறீர்கள்?

திருட்டு நாய்களா...

அதை போய் உங்கள் மாநிலத்தில் உன் இனத்தாரிடம் சொல்லுங்கடா வந்தேறிகளா..

வேசி ஊடகம் இந்து தமிழ்...


NOAH : வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


‘புராணக்கதைகளைப் பற்றி இப்போது ஏன் சிந்திக்க வேண்டும்? அவையெல்லாம் பழங்கால கட்டுக்கதைகள் தானே?’ என்று நாம் நினைக்கலாம். புராணங்களில் பெரும்பாலானவை கட்டுக்கதைகளின் அடிப்படையில் புனையப்பட்டிருந்தாலும், மற்றவை உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.

இதற்கு உதாரணமாக, உலகளாவிய ஜலப்பிரளயத்தை, அதாவது பெருவெள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட அநேக புராணக்கதைகளையும் பழங்கதைகளையும் சொல்லலாம்.
பொதுவான இந்த சம்பவத்தின் நடவடிக்கையாக, கீழுள்ள கதைகளே உலகின் அனைத்து புராணங்களிலும் ஒருசில மாற்றத்துடன் கூறப்பட்டிருக்கும்.

பைபிளில் நோவாவின் ஜலப்பிரளயத்தில் எட்டு பேர் மட்டுமே தப்பிப்பிழைத்தார்கள் என்று கூறப்படுகிறது. ( முக்கியமாக: நோவா தனது பேழையில் நீர்வாழ் உயிரினங்களை ஏற்றியதாக எந்தவித குறிப்புகளும் இல்லை.) அதன் பின்னர் சுமார் 1,400 வருடங்களில் பூமியின் மக்கள் தொகை ஐந்து கோடியை எட்டியிருக்கலாமென மக்கள் தொகையியல் நிபுணர்கள் சிலர் ஊகிக்கிறார்கள். 8 பேரிலிருந்து 1,400 வருடங்களுக்குள்ளாக சுமார் ஐந்து கோடி பேராக அதிகரித்தது என்று கூறுவது நம்ப முடியாதது.
எனினும் இந்த நோவா வம்சத்தின் ஒரு கூறிப்பிட்ட சமூகம் இந்த பூமியில் வாழ்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

இது ஒருபுறமிருக்க, நவீன அறிவியலின் பரிணாமவியல் கொள்கைபடி: நீர்வாழ் உயிரினமான ஒருசெல் உயிரிலிருந்தே அனைத்துவித உயிரினங்களின் தோற்றம் உருவானதாக கூறப்படுகிறது. சார்லஸ் டார்வின் அவர் எழுதிய உயிரினத் தோற்றம் பற்றி படைப்பில் இவ்வாறு கூறுகிறார்.

“என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாக உருவாகவில்லை, உயிரினங்களின் ஒரு சிறு தொகுதியிலிருந்துதான் மற்ற எல்லா உயிரினங்களும் தோன்றின.” காலங்கள் செல்லச் செல்ல சாதாரண உயிரின வகைகள் என்று அழைக்கப்படுகிற, முதன்முதல் தோன்றிய இந்தச் “சிறு உயிரினத் தொகுதியில் சிறுசிறு மாற்றங்கள் நிகழ்ந்ததால்” கோடிக்கணக்கான வித்தியாசமான உயிரினங்கள் பூமியில் தோன்றின என்பதாக டார்வின் கூறினார்.

இந்தச் சிறிய மாற்றங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மீன்கள் ஊர்வனவாகவும், மனிதக் குரங்குகள் மனிதர்களாகவும் மாறுவதற்குத் தேவையான பெரிய மாற்றங்களை நிகழ்த்தின என்கிறார்கள் பரிணாமவாதிகள். இப்படி நடந்ததாகச் சொல்லப்படுகிற பெரிய மாற்றங்களை
“மேக்ரோ எவல்யூஷன்” என்று அழைக்கிறார்கள்.

இறுதியாக: பிரளய காலத்தில் தப்பிய உயிரினங்களான நோவாவின் சந்ததியினர் ஒருபுறம் பூமியில் வாழ்கிறார்கள். ஜலப்பிரளயத்தில் அழிக்க முடியாத, அறிவியல் பரிணாமவியல் கோட்பாடுகள் படி உருவான உயிரினங்கள் மறுபுறம் இந்த பூமியில் வாழ்கிறார்கள். இந்த இரண்டு கோட்பாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளே. கேள்வி என்னவென்றால்
இவர்களில் யார் கடவுளின் தூயப்படைப்பு?

எனது கருத்து: ஜலப்பிரளயத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் இருந்து ஆரம்பமான உலக ஜனத்தொகை இன்று 700 கோடியையும் தாண்டியிருக்கிறது என்பது நம்புவதற்கு கொஞ்சம் கடினமானது.

அதாவது பூமியில் உள்ள தேவைகளின் நிமித்தமாக, இந்த அதிகப்படியான மனித இனம் உருவாக்க மனிதர்களை படைத்தது . வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்த #வேற்றுக்கிரகவாசிகளே என்பதே அது.

இது இப்போதைய மனித சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் என்றாலும் உண்மை இதுவே என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பல அதிகார மட்டங்களும் இந்த உண்மைகள் வெளி வருவதனை தடுக்கின்றன . காரணம் உலகத்தில் இதனால் பல குழப்பங்களும் , கட்டுப்பாடற்ற தன்மையும் ஏற்படும் என்பதால் எனக் கூறப்படுகின்றது.

பண்டைய காலங்களில் பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்ததற்கான ஆதாரங்கள். அவர்களின் படைப்பினங்கள் மூலமாக பூமி முழுவதும் சாட்சிகள் உள்ளன . அப்படி என்றால் அவர்கள் ஏன் வந்தார்கள் ? பூமியில் அவர்களுக்கு என்ன தேவை இருந்தது ? மனிதர்களை எப்படி உருவாக்கினார்கள் ? இப்போது அவர்கள் எங்கே ? மதங்கள் ஏன் உருவாக்கப்பட்டன ? அவர்களை பற்றிய தேடலின் மூலமே இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்...

உடல் எடையை குறைக்கும் மூலிகை டீ செய்வது எப்படி.?


https://youtu.be/48VGE-JJDRs

Subscribe The Channel For More Tips...

தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலையின் மகத்துவம்...


ஆள் பாதி ஆடை பாதி என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஒருவர் அணிந்திருக்கும் ஆடை அவரது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்து இயம்பும் என்பர். ஆடை என்பது ஒருவரை அடையாளம் காட்டுவதற்குரிய ஒன்று.

ஒருவர் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு, அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர், எந்தச் சமயத்தைச் சார்ந்தவர், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவர் என்பன போன்றவற்றை அறிய இயலும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவர் அணியும் ஆடையும் ஒருவரது பண்பாட்டை வெளிப்படுத்தும்.

வேட்டி : தமிழர்களுக்கே உரித்தான தனித்துவமான ஆடையாகவுள்ள வேட்டி,  தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக விளங்குகின்றது.

சேலை அணிதல் தமிழ்ப் பெண்களுக்கு  கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது போலவே வேட்டி அணிவது ஆண்களுக்கு முக்கியமானதொரு பண்பாட்டுச் சின்னமாக விளங்குகின்றது.

தட்ப வெப்ப நிலமைகளுக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்பவர்கள் கனம் குறைந்த இலேசான ஆடைகளை அணிய முற்பட்டிருந்ததினால்  ஒன்றும் வியப்புக்குரியதல்ல. அந்த வகையில் தமிழர்களின் ஆடையாக வேட்டி அணிதல் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வேட்டி அணிதலைப்பற்றி சிந்திக்கிற போது கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின் வேட்டியணிதல் வழக்கத்திற்கு வந்துவிட்டது என்பர் இலக்கிய ஆய்வாளர்கள். தொல்காப்பியகாலம், சிலப்பதிகார காலத்தில் வேட்டி அணியும் வழக்கம் இருந்துள்ளது என்பர்.

சேலை : தமிழ்ப் பெண்கள் சேலை அணிவது, நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழக்கம். இப்பழக்கத்தின் பின்புலம் தமிழர் பண்பாட்டின் ஒரு கூறு.

பொதுவாகக் குளிர் மிகுந்த பகுதிகளில் வாழ்பவர்கள், உடலின் பெரும் பகுதியையும் ஆடையால் போர்த்திக் கொள்வர். பூமத்திய ரேகைக்குப் பக்கத்திலிருப்பவர்கள் மிகவும் குறைந்த அளவு ஆடையையே அணிந்து கொள்வர். ஆனால், பூமத்திய ரேகைக்குப் பக்கத்து நிலத்தில் வாழும் தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் உடலின் பெரும்பகுதியை மறைக்கும் சேலையை ஏன் அணியவேண்டும்?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் தமிழ்ப் பெண்களிடம் எதிர்பார்க்கக் கூடிய பண்பு நலன்கள். இவை அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எதிர்பார்க்கப்படுபவை. அச்சமும், நாணமும் கொண்ட பெண், தான் அணியும் ஆடையின் வாயிலாகவும் அவற்றை வெளிப்படுத்துகிறாள். எனவே, தன் உடலின் பெரும்பகுதியையும் போர்த்தக் கூடிய ஆடையாகிய சேலையை அணிகிறாள். இது தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாகத் திகழ்கிறது...