23/08/2018

Shiva shiva shankara song....


Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…

Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara
Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara

Shiva shiva shankara hara hara shankara
Jaya jaya shankara digiraaraa
Priya thandava shankara prakata shubhankara
Pralaya bhayankara digirara
Om parameswara paraa
Om nikileswara haraa
Om jeeveswareswara kanararaa
Om manthreswara swaraa
Om yuktheswaraa sthiraa
Om nandeswaraamaraa raavetaa ||Shiva||

Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara
Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara

Aakasalingamai aavahincharaa
Dama damamani damarukha dwani salipi jadathani vadilinchara
Sri vayulingamai sancharinchara
Anuvanuvuna thana thanuvuna nilichi chalaname kaliginchara
Bhasmam cheesy asurulanu agni lingamai layakaara
Varadai munchey jalalingamai ghoraa
Varamai vasamai prabalamou bhulingamai balamidara
Jagame nadipe panchabhutha lingeswara karunichara ||Shiva||

Viswesa lingamai kanikarinchara
Vidilikhithamunika bara bara cheripi amrutham kuripinchara
Ramesa lingqamai mahima choopara
Palu shubhamulu gani abhayamulidi hithamu sathathamu andinchara
Grahanam nidhanam baaparaa kalahasthi lingeswaraa
Pranam neevai alinganameera
Edalo koluvai hara hara athma lingamai nilabadaraa
Dhyuthivai gathivai sarva jeevalokeswara rakshindaraa ||Shiva||

Sarva pravitha darpa prabhava vipra preritha para

Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…
Bham bham bho…. Bham bham bho…

Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara
Sarpa pravith darpa praabhava vipra preritha paraa
Dikpoora prada karpoora prabha arpinthumu shankara

எல்லாம் ஒலி மயம்...


தமிழனின் செவிப்பறை ஏதேனும் ஓர் உலோகத் தகட்டில் செய்யப்பட்டிருக்கிறதோ என்னமோ?

ஏனெனில் அன்றாட வாழ்வில் இத்தனை இரைச்சல்களுக்கு ஈடுகொடுப்பவன் தமிழனைத் தவிர உலகில் வேறு யாரும் இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

சரி அந்த ஒலியை பற்றி ஒரு சில விசித்திரங்கள்.

பிரபஞ்சத்திற்க்கு மூன்று தன்மைகள் உண்டு. ஒன்று இடைவெளி அல்லது தூரம், மற்றொன்று ஒலி சப்தம்,
மூன்றாவது வெற்றிடம்.

ஒலியே நித்திய ஆன்மாவாக கருதப்படுகிறது. ஒலி பிரபஞ்சம் முழுவதும் பயணித்து எங்கும் பரவி கிடக்கின்றது.

பிரபஞ்சத்தில் பரவிகிடப்பது போல் நமது உடலிலும் ஒலி பரவியுள்ளது.
நிச்சயமாக ஓசை தரக்கூடிய கருப்புக் களிமண்ணால் நாமே மனிதனைப் படைத்தோம். (அல் குர்ஆன் 15 : 26-27)

ஒரு ஒலியை, ஒலி அளக்கும் கருவியான ஆசிலாஸ்கோப்பிற்குள் செலுத்தினால், அது அந்த ஒலிக்கு ஏற்ப ஒரு வடிவத்தைக் கொடுக்குமாம். ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு ஒலி இருக்கிறது.

இந்து வேதங்களில் ஒலி அலைகளுக்கு தான் அங்கே முக்கியத்துவம் உள்ளது.(படைத்தவனுக்கு அல்ல) இந்தப் பிரபஞ்சத்தை ஒலி வடிவமாக மாற்றி, அந்த ஒலியை உச்சரிப்பதன் மூலம் இந்த பிரபஞ்சத்தை நமக்குள் எதிரொலிக்கச் செய்ய முடியும் என்கிறது இந்து வேதங்கள்.

ஒலியின் மீது ஆளுமை பெறுவதன் மூலம், வடிவத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியுமாம். ஒலியைப் பற்றி வேதங்கள் விளக்கம் கொடுப்பது இதுதான் அதாவது ஒலி (சத்தம்) என்பதுவும் சக்தியின் ஒரு வடிவமே.

மேலும் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உடலிலிருந்தும் இயற்கையாக ஒலி வெளி வருகிறதாம். அதை உரிய முறையில் பயன்படுத்தி கான்ஸர் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய முடியுமாம்.

நமது அறிவியல், மருத்துவம் மற்றும் இதிகாசத்தில், ஒலிக்கு குணப்படுத்தும் இயல்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது நமது உடல் இயல்பு நிலையில் எல்லா செயலுக்கும் பிரீக்குவேன்சி எனப்படும் அதிர்வெண்களில் இயங்கிக் கொண்டிருக்கும். இதய துடிப்பிற்கு என்றே ஒரு அதிர்வெண் உண்டு.

நியூரோன்கள் எரிக்கப்படுவதற்கு ஒரு அதிர்வெண் உண்டு. ஒவ்வொரு மனிதருக்கும் அதிர்வெண் வித்தியாசப்படும் தினசரி வேலை பளுவால் ஏற்படும் அழுத்தம், குறைவான தூக்கம் மற்ற வெளிப்புற காரணங்களால் இந்த இயல்பு நிலை மாறுகிறது.

ஒலி சிகிச்சையின் மூலம் உடல் அந்த இயல்பு நிலைக்கு மாறி சரியான அலைவரிசையில் செல்ல உதவுகிறது.

இசையில் இருக்கும் அதிர்வு தூண்டல்கள், மனதை தளர்த்தி, கார்ட்டிசோல் அளவை குறைத்து வாழ்க்கை தரத்தை அதிகரிக்கிறது.

இதிலிருந்து ஒவ்வொரு மனிதருக்கும்
தனிதன்மைவாய்ந்த ஒலி அதிர்வெண் உள்ளது என்பது தெரியவருகிறது.

எனக்கு வேடிக்கையாக ஒன்று தோன்றுவதைச் சொல்ல வேண்டும்.
ஒலி அழிவுடையதா?  அழிவற்றதா?

அழிவு இல்லை என்றால் அவை பிரபஞ்சம் முழுக்கு பரவியுள்ளதா?

அப்படியென்றால் இந்த பூமிகிரகத்தில் வந்தசென்ற, வசித்த ஜீவராசிகள் எழுப்பிய ஒலிகள்  அழியாமல் இந்த கிரகத்தில் சூழன்றுக் கொண்டு தானே இருக்கும்.

அதாவது இந்த கிரகத்தில் உள்ள ஜீவராசிகள் எழுப்பிய ஒலிஅலைகள் மூலகூறுகள் அழியாமல் பரவிக்கிடக்கிறது என்பதுதானே உண்மை

எனவே அந்த ஒலி அலைவரிசையை கிரகித்து பிரித்து உணரும் ஆற்றல் உடைய கருவியை மட்டும் உருவாக்கினால் போதும். தனிதன்மை உடைய  மேலே கூறிய ஒலி அலைகளை கேட்கலாம். குல வழிபாட்டாளர்கள் கவனத்திற்க்கு இதன் மூலம் மூதாதையர்கள்  பேச்சுகளையும் கேட்க முடியும்.

நன்றாகத்தான் கதையளக்கிறார் இவர்  என்று நினைப்பீர்கள். கனவுகள் வேண்டுமானால் மாயையாய் இருக்கலாம். உணர்வுகள் எப்படி மாயையாக இருக்கும்? நீங்கள் நினைப்பதில் தப்பு இல்லை. ஆனால், அதற்கும் அறிவியல் ஆராய்ச்சியர்கள் தகுந்த காரணத்தை ஆராய்ந்த வந்துள்ளனர்.

அதில் முதன்மையானவர் உலகின் தொழினுட்ப வரலாற்றில் ஒரு புரட்சியையே தோற்றுவித்த தலைசிறந்த விஞ்ஞானியாக இன்று பலராலும் போற்றப்படும் “நிக்கோலா டெஸ்லா” (Nikola Tesla) என்பவர், 1900 – 1943 காலப்பகுதிகளில், சக்தி அலைகளை அடிப்படையாகக் கொண்ட பல விசித்திரமான ஆய்வுகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் ஜென்னி என்பவர் ஒலி அலைகளின் வடிவம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்தார்
பத்தாண்டு காலம் க்ளிசெரின்,
பாதரஸம், ஜெல், பவுடர்,இரும்பு போன்ற ஊடகங்களில் ஒலி அலைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை முறையாக ஆராய்ந்து அவற்றைக் குறிப்பெடுத்தார். குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவதைக் கண்டு இவர் அதிசயித்தார். ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்ட போது சிக்கலான படங்கள் உருவாக ஆரம்பித்தனவாம்.

இறுதியாக...

யதா வ்யாக்ர ஹரேத் புத்ரம்

தஷ்ட் ராபிர்ன  பிதாயேத்

பிதா பதன் பேதாப்யாம்

தத் வர்ணம் ப்ரயோஜயேத்
-பாணிணி

ஒரு பெண்புலியானது எப்படி தன் குட்டியைத் தன் வாயில் கவ்வி அதன் பற்களால் கடியுறாதபடி எடுத்துச் செல்கிறதோ அதே போல ஒருவன் ஒரு வார்த்தையை உச்சரிக்க வேண்டும்…

தாய்ப்பால்...


இறைவன் படைப்பில் ஆண், பெண் என்று பிறித்துள்ளான். இதில் ஆணை விட பெண்ணே மேம்பட்ட பரிணாமமாக கருதுப்படுகிறாள்.

அவள் வாழ்க்கையில் தாய்பால் அளிப்பது என்பது மிக அற்புதமான, அவசியமான விஷயம்.

ஆனால் இதை பலரும் இன்று ஆபாசம் என்று சொல்லுகிறார்கள்.

Discovery channel ல ஒரு மான் அல்லது மாடு அல்லது ஆடு அல்லது யானை என ஏனய விலங்குகள் தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை இயற்கையின் அழகு என்று கண்டு ரசிப்ப்போம்.

ஆனால் இதுவே ஒரு பெண்ணுக்கு என்றால் அதை ஏன் ஆபாசமாக பார்க்கிறோம்.

ஓரு பெண் தனது குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பது என்பது அற்புதமான விஷயம். அதுதான் பேரன்பின் ஆதி ஊற்று.

சரி இது நம்ம concept ல எப்படி set ஆகுது ன்னு பார்ப்போம்..

ஓரு பெண் தனது குழந்தை எவ்வாறு வளர வேண்டும். அவள் அந்த குழந்தையின் மீதான அன்பை எவ்வாறு காடுகிறாள் மற்றும் மேலும் அது அவளது ஆற்றலை எவ்வாறு குழந்தைக்கு கடத்துகிறது..

தாய் தனது எண்ண அலைகளை ஒன்றினைத்து தனது குழந்தைக்கு முத்ததின் மூலம் வெளி ப்படுத்துவால். அதன் மேம்பட்ட பரிணாமம் தான் தாய்ப்பால்...

தாய்ப்பால் மூலம் தாய் தனது குழந்தையை எண்ண அலைகலால் ஒன்றினைத்து ஒரு wireless connection ஐ உண்டாக்குகிறாள்...

அண்டத்தின் இயக்கமும் இதன் வழியே நடக்கிறது.

மேலும்... பிறந்த குழந்தை யாரும் சொல்லி தராமலேயே தெரியும் ஒரே இயக்கம் தனது தாயிடம் தாய்ப்பால் குடிப்பது.... இது தான் இயர்க்கை இயங்கியல்...

பிரபஞ்ச இயக்கமும் இது தான்...

பிரபஞ்சம் பற்றி சித்தர் சிவவாக்கியர்...


ஆன அஞ்சுஎழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்சுஎழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்சுஎழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்சுஎழுத்துளே அடங்கலாவல் உற்றதே

அகண்டமும், பிரபஞ்சமும், மும்மூர்த்திகளும், அ, உ, ம எனும் ஓங்கார மூல ஓசைகளும் மற்றயாவும் அஞ்சு எழுத்திலே சிவாயநம என்பதில் அடங்கியவை...

இலுமினாட்டி களின் Project Blue Beam...





உணவே மருந்து...


உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி செரிமாணத்தை ஊக்குவிக்கும் அங்காயப்பொடி...

ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள கேரள வெள்ள நிவாரணம் ரூ. 700 கோடியை பாஜக மோடி அரசு ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...


வெளிநாட்டு நிதியினை ஏற்காமல் உள்நாட்டு நிவாரண நிதியை மட்டும் உபயோகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அடப்பாவிகளா.. நீங்களும் செய்ய மாட்டீங்க, அடுத்தவன் உதவி செய்றதையும் கெடுக்குறீங்களே.. இது நியாயமா....?

தமிழர் மாண்பு...


திராவிடமும் - திராவிடத் தலைவர்களின் மறுபக்கமும்...


அண்ணாவின் நாவல்கள் நாடகங்களைப் பற்றி கேட்டால்.

அண்ணாவை விட பல மடங்கு அதிகமாக நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியவர்கள் இருக்கிறார்கள்.

சினிமாவிற்கு வசனம் எழுதுவதும், நாவல் எழுதுவதும் பெரிய சாதனை அல்ல.

அதற்கு எல்லாம் பேரறிஞர் என்ற பட்டம் கொடுப்பது தகாது.

இத்தனைக்கும் அண்ணா எழுதியதில் பலதும் சொந்த சரக்கல்ல – பலவும் தழுவல்கள் தான்.

யேல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவில்லை – அது வெறும் புரளி.

டூரிஸ்டுகள் போவது போல அண்ணாவும் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து விட்டு வந்திருக்கிறார் – அவ்வளவு தான்.

இது போல பல புரளிகளும் அண்ணாவின் காலகட்டத்தில் சுற்ற விடப்பட்டன.

அவர் படிக்கிற காலத்தில் எழுதிய விடைத்தாள்களை படித்து அதன் ஆழத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டு கல்லூரியில் எடுத்து தனியாக வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூட புரளிகள் உண்டு.

எழுத்தாளர் கல்கி அண்ணாவை தென்னாட்டு பெர்னாட்ஷா என்று புகழ்ந்தது, ஒரு வஞ்சப் புகழ்ச்சியே என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அண்ணாவின் குட்டை உடைத்திருக்கிறார்.

அண்ணாதுரையின் மனப் பிறழ்வுக்கு ஒரு உதாரணம் கம்பரசம் என்கிற அவரது புத்தகம்.

அந்த புத்தகத்தில் அவர் பனிரெண்டாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு முப்பது நாற்பது பாடல்கள் மட்டும் எடுத்து எழுதி கம்பராமாயணம் மொத்தமும் ஆபாசம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார்.

இதனால் சிறுமைப்படுவது கம்பன் அல்ல, தெலுங்கர் அண்ணா துரைதான்...

ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்...


தீபாவளியே கொண்டாட தேவையில்லை..


இருப்பினும் தமிழினம் இன்னும் திருந்தவில்லை...

ஆகையால் சீனர்கள் பிழைக்க நாம் பண்டிகை கொண்டாடத் தேவையில்லை...

தமிழனின் தயாரிப்புகளை ஆதரிப்போம்...

மாற்றம் என்பது நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும், அதுதான் சிறந்த மாற்றம்...


ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்...


இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் எண்ணம் இருக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.

இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்...

அறிகுறி 1 : எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 2 : எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

அறிகுறி 3 : எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 4 : ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

அறிகுறி 5 : ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 6 : நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 7 : எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

அறிகுறி 8 : ஒருவரால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 9 : சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 10 : ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்...

மேற்கு இந்தியா எனும் பாக்கிஸ்தான்...


நம் முன்னோர்களின் ஸ்டெம் செல் தெரபி - தொப்புள்கொடி தாயத்து...


இதுபோல் மூடநம்பிக்கைகள் என நாம் புறக்கணித்தவை பல...

இப்போதொன்றும் காலம் கடந்து விடவில்லை. எழுதப்படாத நம் மூதாதையரின் அறிவியல் அறிவை, நாம் நடைமுறையில் மீட்டெடுக்க மீள் முயற்சி செய்வோம். ஆரோக்கிய வாழ்க்கையை சாத்தியப்படுத்துவோம்...

ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...


வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை...

பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளி தான் வைக்க வேண்டும்.

நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே 'டிம்' செய்ய வேண்டும்.

வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு 'இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும் போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

கார்களில் செல்வோர் 'சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்...

எழுதி வச்சுக்கோ... அடுத்த தீர்ப்பில் நமக்கு ஆப்பு உண்டு...


விநாயகர் ஊர்வலம் தமிழகம் வந்த கதை...


இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி விநாயக சதுர்த்திக்கு தமிழகம் தயாரானதா என்று வினா எழுகையில் யோசிக்காமல் விடை வந்து விழும் இல்லையே என்று..

தமிழர்களெல்லாம் எப்போது இந்துக்களாக மாறிப்போனார்களோ அப்போதே கருப்பராயன்களையும் சுடலையாண்டிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு விநாயகனை முன்னுக்கு அமர வைக்க ஆரம்பித்து விட்டார்கள்..

இன்று கிராமம் தோறும் விநாயக சிலைகளை நிறுவி விழா எடுக்க ஆரம்பித்து விட்டான் தமிழன்.

தமிழனின் பாரம்பரிய பண்டிகையாம் பொங்கல், அதை கொண்டாடுவதைக் காட்டிலும் சதுர்த்தியைக் கொண்டாடும் ஆவல் என்னமோ இந்த இருபது ஆண்டுகளில் தமிழனுக்கு அதிகரிக்கத் தான் செய்திருக்கிறது.

தமிழ்க் கடவுள் என்று போற்றிக் கொண்டே முருகனை புறந்தள்ளி விநாயகனை முன்னுக்கு வைக்கிறானே தமிழன்..

பாழடைந்து சிதைந்து போய் கிடக்கும் குலதெய்வத்திற்கு சிலை திறக்காத தமிழன் வருடா வருடம் விநாயகனுக்கு சிலை திறக்க முதல் வரிசையில் வந்து நிற்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

மூத்த தமிழர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவிற்கு இளைய தமிழன் முன்னவன் ஸ்தோத்திரம் முறையாகப் பாடுகிறான். மாரியம்மன்களும் பராசக்திகளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றன. இங்கே யார் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம் தப்பில்லை.. முன்னவன் ஆகும் அளவிற்கு விநாயகனுக்கு முக்கியத்துவம் யார் தந்தது என யோசிக்கப் பார்க்கத் தோன்றுகிறது.

விநாயகன் யார்? தெய்வம் தானா? சிவபெருமானின் பிள்ளையா?பிறப்பெப்படி? பிறப்பில் சர்ச்சை இருக்கிறதே, பல கதைகளை புராணம் சொல்லுகிறதே, என நாத்திக பேசவும் விரும்பவில்லை. 

விநாயகப்பெருமான் இன்று இவ்வுலகில் அவதரித்த நாள் ஆகவே  இன்றைய நாளில் நாம் எல்லோரும் இந்துக்கள் என சொல்லியபடி வாருங்கள் தமிழர்களே.. சிலை தூக்கலாம்.. கடலில் சென்று கலக்கலாம் என்று நான் போற்றுவதிலும் அர்த்தமில்லை.
 
மராட்டியர்களின் குலதெய்வமான விநாயகன் எப்போது தமிழகம் நோக்கி வந்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்னமே ஆய்வுகளை மேற்கொண்டு சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி பண்டை காலத்தில் இப்படி ஒரு தெய்வம் இருக்கும் செய்தி தெரியாமலே தமிழன் இருந்திருக்கிறான் என்ற உணமை பதியப்பட்டிருக்கிறது. அப்படியானால் விநாயகனை தமிழகத்திற்கு இறக்குமதி செய்தவன் யார்? விநாயகன் தமிழகம் வந்த பின்னணி என்ன என்பதையும் முன்னோர்களின் தேடல் நமக்கு பதிலாக நிற்கிறது.

விநாயகன் என்றொரு வடிவமே கி.பி.5 ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தோன்றிருக்கும் என்று தமிழர் வேதத்தில் மறைமலை அடிகள் குறிப்பிடுகிறார்.

அப்படியானால் 4 ம் நூற்றாண்டில் குப்த பேரரசு ஆட்சி நடத்தியது. அது முற்றிலும் இந்து மத ஆட்சி தான். அப்போது அங்கு விநாயகன் என்றொரு இந்து கடவுள் இருந்ததாக எந்தவொரு வரலாறும் இல்லை. இடைச்செருகல் தான். 

பல்லவர் காலத்தில் தான் விநாயகன் தமிழகம் வந்திருக்கிறான் என்று தனது ஆராய்ச்சியின் முடிவில் 'ஞான விநாயகன்' எனும் கட்டுரை வாயிலாக முனைவர். சோ.ந. கந்தசாமி சொல்கிறார்.

முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத் தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட் டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.

"பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட்டாக
 கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே"

என்று திருஞான சம்பந்தர் பாடுகிறார். நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். என்றும் சொல்கிறார். திருஞான சம்பந்தர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகனை வாதாபியிலிருந்து பல்லவர்கள் கொண்டு வந்ததால் 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தால் விநாயகனை போற்றுவர் என்று சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராச மாணிக்கனார் தான் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும் சாளுக்கியர்கள் எந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தார்கள் என்று. தன் தந்தையான முதலாம் மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை அவனது தலைநகரான வாதாபி சென்று அவனை வீழ்த்தி அந்நகரை தீக்கிரையாக்கி விட்டு 'வாதாபி கொண்டான்' என்ற பட்டப்பெயரோடு நரசிம்ம வர்மன் வந்தான் என்பது வரலாறு.

இது நடந்தது கி.பி 642 ம் ஆண்டு. அந்த நேரத்தில் பல்லவர்களின் கண்ணுக்குப் பட்ட வித்தியாசமான உருவச்சிலைதான் யானை முகத்தோடு இருந்த விநாயகச் சிலை. அதை தமிழகம் கொண்டு வந்திருக்கலாம் என்பது புலப்படுகிறது, அப்படி கொண்டு வந்த சிலையை வைத்த இடம் கணபதீச்சுரமாக இன்றும்  நிற்கிறது.

சரி விநாயகன் தமிழகம் வந்தாகி விட்டது. விநாயக சதுர்த்தி வீறு கொண்டு எழுந்தது எப்போது?

சாளுக்கியர்கள் ஆண்ட வாதாபி இன்றைய மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மராட்டியத்தை சத்ரபதி சிவாஜி ஆண்ட போது தேசிய விழாவாக இதை அறிவிக்க மராட்டிய மக்கள் தத்தம் வீடுகளில் வைத்து விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்து மத ஈர்ப்பு கொண்டவர்கள் அவ்விழாவைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த பாலகங்காதர திலகர் இதை குடும்ப விழாவாகக் கருதாமல் ஊர் கூடி செய்யலாம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் செய்யலாம் என அறிவிக்க இந்துமத காங்கிரஸார்  ஆங்காங்கு நடத்த அது மெதுவாக தமிழகத்திற்கும் இடம் பெயர்ந்தது.

இன்று தமிழ்ர்கள் கொண்டாடும் ஒரு முக்கிய விழாவாக மாறிப் போயிருக்கிறது. இந்துக்கள் கூடி பக்தியைக் காட்டாமல் தங்களின் சக்தியைக் காட்டுவதாக இந்த விழா மாறிப்போனது தான் வருத்தப் பட வேண்டியதாயிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள். பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றாலே இந்துக்களுக்கு கொண்டாட்டத்தையும் மற்ற சிறுபான்மை மதத்தினருக்கு திண்டாட்டத்தையும் கொடுக்கும் என கடந்த காலம் சொல்கிறது.

சிலை ஊர்வலத்தின் போது மற்ற மதத்தவரை இழிவு படுத்தும் நோக்கில் இந்துக்கள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஒவ்வொரு சதுர்த்தியின் போதும் சிறுபான்மை இனத்தவர் குரலெழுப்ப கேட்டிருப்போம்..

சதுர்த்தி என்பது இந்துக்களின் பக்தியைக் காட்டுவதாக இல்லாமல் இந்துக்களின் பலத்தைக் காட்டுவது போல நாளடைவில் மாறிப்போனது வருத்தமளிக்கத்தான் செய்கிறது.

மற்ற மதத்தினரோடு இருக்கும் பிரச்சனையை தீர்த்து கொள்ளவும் அவர்களைப் பழி வாங்கவும் இந்நாள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

என்னதான் வேற்றுமையில் ஒற்றுமை என்று நம் நாட்டைப் போற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் அனைத்தும் பொய்மை என்பது புத்திக்கு புலனாகத்தான் செய்யும்.

மனிதனுக்கு மனிதன் மதச் சாயம் பூசிக்கொண்டு தான் சமத்துவம் பேசுகிறான். எந்த திருவிழாவிற்கும் இல்லாத பாதுகாப்பை அரசு இந்த விழாவிற்கு தருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலவரம் நடப்பது உறுதி என்று அரசுக்கும் தெரிந்திருக்கிறது. கலவரம் என்றால் தடுப்பதற்கான வழிமுறைகளை அரசு வகுத்து வைத்திருக்கிறது. மாறாக கலவரமே நடைபெறாமல் இருக்க என்ன வழிமுறை வகுத்திருக்கிறதென தெரியவில்லை.

வட இந்தியாவில் இருந்து மத கலவரம் செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்பட்டது தான் இந்த விநாயகர் சதுர்த்தி என்னும் பிள்ளையார் பிறந்த நாள் (பிள்ளையார் உருவாக்கபட்ட நாள்).

இந்த விநாயகர் சதுர்த்தி பல ஹிந்து மக்களால் அமைதியாக வீட்டிலே கொண்டாடபடுகிறது. சில ஹிந்து மத வெறியர்கள் விநாயகர் சதுர்த்தியை ஹிந்து முஸ்லிம் இடையே கலவரம் ஏற்படுத்துவதற்காகவே கொண்டாடுகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த விநாயகர் ஊர்வலத்தால் நடந்த கலவரங்கள் ஏராளம் ஏராளம். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளுமே....

என்று ஒருசாரார் வேதனையைடவது தொடர வேண்டாமே என்று ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே விநாயகனை வணங்குபவர்கள் வேண்டிக் கொள்ளுங்கள்...

ஸ்டெர்லைட் ஆலையின் கைகூலியாக அதிமுக அரசு...


மனமற்ற நிலை...


இருபத்து நான்கு மணி நேரமும் மனமற்ற நிலைபெறுவதுதான் இறுதிச் சாதனை.

இப்படிச் சொல்வதால், மனதை பயன்படுத்தவே கூடாது என்பதல்ல.

மனமற்ற நிலை பற்றி எதுவும் தெரியாதவர்களே அப்படிச் சொல்வார்கள்.

அது பொய்.

மனமற்ற நிலை என்றால், மனம் உன்னைப் பயன்படுத்தக் கூடாது என்று பொருள்..

மனமற்ற நிலை என்றால்,மனதை அழித்து விடுவது அல்ல. மனதை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைப்பது.

அது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் எந்த வினாடியும் மனதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உன் பணியாளாக இருக்க வேண்டும்.

நீ சும்மா இருந்தால்கூட 'கடக்கடக் கடக்கடக்' என்று போய்க் கொண்டே இருக்கும். அப்போது உன்னால் எதுவுமே செய்ய முடியாது.

பரிதாபமாக நின்று விடுவாய்..

மனமற்ற நிலை என்பது...

மனதைச் சரியான இடத்தில் ஒதுக்கி நிறுத்தி வைப்பது. அது ஒரு வேலையாள் என்ற முறையில் மனம் பெரிய கருவி தான்.

ஆனால், எஜமானனாகி விடுவது துரதிர்ஷ்டம். அது ஆபத்தானது. உன் வாழ்வையே ஒழித்துக் கட்டிவிடும்.

மற்றவர்களோடு தொடர்பு கொள்ள நீ விரும்பும் போது மனம் ஒரு ஊடகம் மட்டுமே.

ஆனால் நீ தனித்திருக்கையில் மனம் தேவையில்லை. எப்பொழுது பயன்படுத்த வேண்டுமோ அப்பொழுது மட்டும் பயன்படுத்தினால் போதும்.

இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்.

மனம் பல மணி நேரம் மௌனமாக இருந்தால்... அது புத்துணர்ச்சி பெற்று விடும். இளமை துடிப்புடன், படைப்பாற்றலுடன், உணர்வுகளுடன், புதுப்பிறவி எடுத்து விடும். அந்த ஓய்வில் ஏற்படுபவை இவை...

ISIS அமைப்பை உருவாக்கியதே இஸ்ரேலும் அமெரிக்காவும் தான்...


இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை தீர்மானிக்கும் இடத்தில் மலையாளிகளே உள்ளார்கள்...


தமிழர்களோ தங்கள் தாய் நிலமான தமிழ்நாட்டில் கூட ஆட்சி இல்லாமல் sentimental idiotsஆக கருணாநிதி பெரியவரா செயலலிதா பெரியவரா என கூஜா தூக்கிக் கொண்டு இருக்கிறோம்.

இலங்கையில் நம் இனம் அழிந்த போது பத்து கோடி தமிழர்களும் நாதியற்றுகிடக்க இதுவே காரணம்.

ஆபத்து காலத்தில் தமிழர்களுக்காக குரல் எழுப்ப ஒரு நாடும் வராததற்கும் இதுவே காரணம்...

பாமக தொடர்த வழக்கில்... சேலம் 8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை...


மதுரை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக நடந்துள்ள நிகழ்வு...


தோழர் முகிலன் சிறையில் இருந்தாலும் சரி வெளியில் இருந்தாலும் சரி அவருடைய செயல்பாடுகள் எப்பொழுதும் ஒட்டுமொத்த மக்களுக்கானதாகவே இருக்கும்.

தோழர் முகிலன் கடந்த 335 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இதில் குறிப்பாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

மதுரை சிறையில் முகிலனுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளை சுட்டிக்காட்டி ஏற்கனவே திருச்சி வழக்கறிஞர் திரு.கென்னடி அவர்கள் நீதிப்பேராணை மனு (writ petition) ஒன்றை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த 17.8.2018 அன்று இரண்டாம் விசாரணைக்கை வந்தது. அன்று வழக்கறிஞர் திரு.அழகுமணி அவர்கள் நீதிமன்றத்தில் முகிலன் சார்பாக ஆஜரானார்.

அப்போது முகிலன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை நடக்கிறது, சிறையில் மனித உரிமை மீறப்படுகிறது என வாதிட்டார். எனவே ஒரு தலைமை குற்றவியல் நடுவர் (CJM) ஒருவர் முகிலன் மீதான தனிமை சிறை சித்ரவதைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு சுந்தரேசன் அவர்கள் தானே சிறைக்கு சென்று ஆய்வு செய்வதாக கூறினார்.

அதனடிப்படையில் கடந்த 18.8.2018 அன்று மாணபுமிகு நீதிபதி சுந்தரேசன் அவர்கள் சிறைக்கு சென்று முகிலனை விசாரித்தார்.

மதுரை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி நேரடியாக சிறைக்கு சென்று ஆய்வு நடத்தியது

இதுவே முதல் முறை...

நீதிபதி அவர்கள் முகிலனின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். சுமார் 25 நிமிடங்கள் ஆய்வு செய்தார். மேலும் முகிலனும் தனது குறைகளையும் தன் மீதான சித்ரவதைகளையும் எழுத்துப் பூர்வமாக நீதிபதி அவர்களிடம் தந்துள்ளார்.

அவைகள் பின்வருமாறு...

1. மதுரை மத்திய சிறையில் முழு நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும். தற்போது சுமார் 3 மணி நேரமே மருத்துவர்கள் உள்ளனர்.

2. சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தும் வகையில் வெறும் ஊசி, மருந்து (தூங்க செய்வது) மட்டுமே கொடுக்கப்படுகிறது. அவர்களின் மனநல குறைபாட்டை சரி செய்ய போதிய மருத்துவ வசதி வேண்டும்.

3. சிறையில் அனைத்து கழிவறைகளிலும் தண்ணீர் செல்லும் வகையில் சரி செய்தல், கழிப்பறை தொட்டிகள் உரிய முறையில் மூடப்பட வேண்டும். கழிவறைகள் அனைத்தும் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட வேண்டும்.

4. மதுரை நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகளுக்கு மட்டுமே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை லோக் அதாலத் நடைபெறுகிறது, அதை 2 மாதத்திற்கு ஒருமுறை அனைத்து குற்றவியல் நீதிமன்றங்களிலும் விசாரணை சிறைவாசிகளுக்கு லோக் அதாலத் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

5. மத்திய சிறைகளில் மாவட்ட ஆட்சி தலைவர், சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவ துறை அதிகாரிகள் முறையான கால இடைவெளியில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

6. சிறைவாசிகளுக்கு அறிவொளி இயக்கம் போல் கல்வியறிவு பெற  வசதி செய்ய வேண்டும்.

7. சிறைவாசிகள் ஒவ்வொருவருக்கும் சிறையில் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கும் படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

8. சிறையில் தொலைபேசி பேச (ஒரு மாதம்) ரூ.45ஐ ஒரு மாதத்தில் அனுமதிக்கப்பட்ட உரையாடல் செய்யும் வகையில், கட்டிய தேதியில் இருந்து ஒரு மாதம் பேச ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது அவ்வாறு இல்லாமல் உள்ளது.

9. சிறையில் உள்ள தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் தமிழில் பொதிகை தெரியும் படி ஏற்பாடு செய்ய வேண்டும். 3 மணி நேரம் மட்டுமே தமிழில் தெரிகிறது, மற்ற நேரங்களில் இந்தி மட்டுமே ஒளிப்பரப்பப்படுகிறது. இது இந்தி திணிப்பாகும்.

10. சிறையில் வழங்கப்படும் உணவுகள் தரம் மற்றும் அளவு முறையாக இல்லை இதை சிறை விதிப்படி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

என 10 கோரிக்கைகளை நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்களுக்கும், நீதிபதி அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும்...

தனக்கென வாழும் வாழ்க்கை இறகைவிட லேசானது, ஆனால், மக்களுக்காக வாழ்வது மலையைவிட கடினமானது...

பாஜக மோடியும் ஏமாற்று வேலைகளும்...


கண்டங்கத்திரி மருத்துவப் பயன்கள்...


மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவை தான் கற்ப மூலிகைகள்.

கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது. இதில் மூலிகைகள் பல உள்ளன. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.

கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது. இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை.

இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்
வீசுசுரஞ் சன்னி விளைதோடம்-ஆசுறுங்கால்
இத்தரையு னிற்கா, எரிகாரஞ் சேர்க்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்

-அகத்தியர் குணவாகடம்

பொருள் - கண்டங்கத்திரிக்கு காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், சன்னி, வாதம், தோஷ நோய்கள், தீச்சுரம், வாதநோய், ரத்தசுத்தி போன்றவற்றைத் தடுக்கும் குணமுண்டு.

கண்டங்கத்திரியின் மருத்துவப் பயன்கள் சுவாச நோய்களுக்கு...

இன்றைய புறச்சூழ்நிலை மாறுபாட்டால் உண்டான அசுத்தக் காற்றை சுவாசிக்கும்போது அவை உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணி நுரையீரலைப் பாதிக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான பிராண வாயுவை தடை செய்கிறது. இதனால் மூச்சுக் குழல் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. சளிபிடித்துக் கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல் மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது.

சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு.

கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அகத்தியர் கூறும் கருத்து இதோ...

மாறியதோர் மண்டைச்சூலை
கூறியதோர் தொண்டைப்புண்
தீராத நாசிபீடம்.

தலையில் நீர் கோர்த்தல், சூலை நீர் எனப்படும் கப நீர், பித்த நீர் இவற்றை சீராக்கி செயல்படுத்தி மாற்றவும், தொண்டையில் நீர்க்கட்டு, தொண்டை அடைப்புகள், மூக்கில் நீர் வடிதல், சளி உண்டாதல் போன்றவற்றிற்கும், மூச்சுத் திணறல், இருமல், ஈழை, இழுப்பு இவற்றிற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் பெருமான் கூறுகிறார்.

இன்றைய சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் முதல் பெரிய அளவில் வியாபார நோக்கோடு சித்த, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் மருந்துசெய் நிறுவனங்கள் வரை சித்த, ஆயுர்வேத மருந்துகளில் கண்டங்கத்திரியை உபயோகிக்கின்றனர்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் குணமுள்ளவை. அந்த வகையில் ஒத்த குணமுடைய மூலிகைகளான கண்டங்கத்திரி, இண்டு, இசங்கு, தூதுவளை சம அளவு எடுத்து அதனுடன் ஆடாதோடை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவைத்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் மேற்கண்ட சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் குணமாகும்

மாற்றுமுறை...

கண்டங்கத்திரி இலை, இண்டு இலை, இசங்கு இலை, தூதுவளை இலை, ஆடாதோடை இலை இவற்றை நிழலில் காயவைத்து சம அளவு எடுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.

கண்டங்கத்திரி கஷாயம்...

இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து இரண்டாகப் பிரித்து காலையில் 1 பங்கை 2 கப் நீரில் கொதிக்க வைத்து 1 கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்தவேண்டும். அவ்வாறே மற்றொரு பங்கை மாலையில் செய்து அருந்தவேண்டும். இது தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.

கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை, வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது.

கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும், ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு. அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.

கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

கண்டங்கத்திரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதனை முறைப்படி பயன்படுத்தி நாமும் நோயின்றி வாழ்வோம்.

கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து “தசமூலம்” என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத் திரியும் ஒன்றாகும்.

மருத்துவ பயன்கள்...

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண் டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல் லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும். கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்...

ஒரு முழு அடிமை இனமாக என் தமிழகத்தை மாற்ற அனைத்து திட்டங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது...


திமுக கருணாநிதி பூர்வீகம் ஆந்திராவில் ஓங்கோல்...


படத்திலுள்ள தெலுங்கு பத்திரிக்கை செய்தியின் சுருக்கம் கீழே...

கருணாநிதி முன்னோர்கள் ஓங்கோலைச் சேர்ந்தோர்..

கலைஞர் கருணாநிதியின் மூதாதையர்களின் சொந்த ஊர், ஆந்திராவில் , ஒங்கோலுக்கு அருகே உள்ள செருக்கொம்முபாளையம் என்ற ஊர்.

கருணாநிதியின் மூதாதையர்கள், ஒங்கோலுக்கு அருகே உள்ள பெள்ளூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான பாடகர்கள் ஆக இருந்தார்களாம்.

இதை கருணாநிதியே 1960 ல் ஒங்கோல் சென்றிருந்த போது கூறியுள்ளார்.

கருணாநிதி 1960ல் எலூர் நகரத்தில் நடந்த நாவல் வெளியீடு விழாவில் பங்கேற்று அங்கு வந்த ஓங்கோல் நகரை சேர்ந்த கொம்பள்ளி பாலகிருஷ்ணாவை சந்தித்துள்ளார்.

அவரிடம் கருணாநிதி தன் பூர்விகம் பற்றி கூறியுள்ளார்.

இதை பாலகிருஷ்ணா தாம் பணிபுரிந்த கல்லூரி விழாவில் கூறியுள்ளார்.

தற்போது அவரும் மறைந்து விட்டார்.

ஆனால் அன்று தெரிவித்தவற்றை அவர் மாணவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்.

சமஸ்தான பணி சரியாக இல்லை என்பதால் அவர் முன்னோர்கள் மதராஸ் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் கருணாநிதி.

இதிலிருந்து இவர்கள் விஜயநகர ஆட்சி காலத்தில் வந்தவர்கள் அல்லர் என்பதும் கிபி 1800 க்கு பின்பு வந்தவர்கள் என்பது தெளிவாகிறது.

கருணாநிதிக்கு இரு தலைமுறை முன்பு அவர் முன்னோர்கள் ஓங்கோல் பகுதியில் வசித்து வந்தனர்...

புரோக்கர் வைகோ நாயுடு திருட்டு அரசியல்...


பாரிமுனை என்ற பெயர் வர காரணம் என்ன.?


மெட்ராசுக்கும் பாரீசுக்கும் என்ன தொடர்பு?

பிரெஞ்சுக்காரர்களுடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரிட்டீஷார் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதிக்கு பிரான்சின் தலைநகரத்தின் பெயர் வர எப்படி அனுமதித்தார்கள்?

சென்னையின் மையப் பகுதியான பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பாரிமுனையைக் கடக்கும் போது இப்படி ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம்.

இந்த கேள்விக்கான விடையை நான் தேடிய போது, சற்றும் எதிர்பாராத ஒரு பதில் கிடைத்தது.

பாரீசுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஒரு சுவாரஸ்யமான மனிதர்தான் இந்த பெயர் வரக் காரணம் என்றும் தெரிய வந்தது.

தாமஸ் பாரி என்ற அந்த மனிதர், இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இருந்து இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக 1788ஆம் ஆண்டு மெட்ராசுக்கு வந்தார்.

கிழக்கு இந்திய கம்பெனியாரிடம் அனுமதி பெற்று தனி வர்த்தகராக தம்மை பதிவு செய்து கொண்ட பாரி, பல்வேறு பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டார். ஆனால் அவரின் முக்கியமான வியாபாரம் வட்டிக்குப் பணம் கொடுப்பது.

வட்டி என்றால் சாதாரண வட்டி அல்ல 12.5% வட்டி, இதுதவிர 1% கமிஷன் வேறு. ஆனாலும் அவரிடம் வட்டிக்கு வாங்க நிறையப் பேர் இருந்தார்கள்.

திப்பு சுல்தான் போன்றவர்களோடு சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் என்பதால், நிறைய இளவரசர்களும், கிழக்கிந்திய அதிகாரிகளும் போர்த் தேவைகளுக்காக பாரியிடம் கை ஏந்தினார்கள். பாரியின் வியாபாரமும் ஓஹோவென்று இருந்தது.

இதனால் 1792இல் பாரி சொந்த அலுவலகம் ஒன்றைத் தொடங்கினார். இந்த அலுவலகம் பல்வேறு துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

திடீரென வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட, அனைத்தையும் விட்டுவிட்டு 1796இல் கர்நாடக நவாப்பின் கருவூல அதிகாரியாக சிறிது காலம் பணி புரிந்தார்.

பின்னர் 1800இல் கிளைவ் பிரபு ஆளுநராக வந்த பிறகு மெட்ராசில் வர்த்தகர்களின் நிலை மாறியது.

கிழக்கிந்திய கம்பெனிக்கு தொடர்பில்லாத தனி வர்த்தகர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி, கோட்டையைவிட்டு வெளியேற்றினார் கிளைவ்.

அப்போது தான் தாமஸ் பாரி, இப்போது பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பகுதிக்கு வந்தார்.

ஒரு பக்கம் சீற்றம் காட்டும் கடல், மறுபுறம் உள்ளூர் மக்கள் தங்கியிருக்கும் கருப்பர் நகரம் என அதிகம் பேர் விரும்பாத இடமாக அது இருந்தது. அங்கு வாலாஜா நவாப்பிற்கு சொந்தமான வீடு ஒன்று இருந்தது. அதைத்தான் வாங்கி அலுவலகமாக மாற்றினார் பாரி.

1817ஆம் ஆண்டிலேயே அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் அடுக்குமாடிக் கட்டடமாக அது இருந்தது.

மெல்ல வியாபாரத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்த பாரி, நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தார்.

இந்த சூழலில் தான் அவருக்கு பார்ட்னராக வந்து சேர்ந்தார் ஜான் வில்லியம் டேர் (John William Dare).

பாரி கட்டடத்தின் பெயர் 'டேர் ஹவுஸ்' என்று இருப்பதற்கு இந்த டேர்தான் காரணம்.

கடல் மற்றும் கப்பல்கள் பற்றிய அறிவு டேருக்கு நிறைய இருந்ததால், பாரியும் இவரும் சேர்ந்து கப்பல் தொழிலில் நங்கூரம் பாய்ச்சி பணம் பார்த்தனர்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக 1823இல் இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்தார் பாரி. அவரின் வழியனுப்பு விழாவுக்காக உள்ளூர் வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தங்க டீ கப்பை தயார் செய்தனர். ஆனால் பாரி திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதால், அவர் ஊருக்கு போகாவிட்டாலும் தயார் செய்த கப் வீணாகிவிடக் கூடாது என்று அந்த கோப்பையை 1824 பிப்ரவரி மாதம் அவருக்கு பொதுமக்கள் வழங்கினர்.

இந்தளவு மக்கள் மனதில் இடம் பிடித்ததற்கு பாரியின் மனிதாபிமானமும், ஏழைகளுக்கு அவர் செய்த உதவிகளும் தான் காரணம்.

இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்த பாரியால், தனது பரலோகப் பயணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

விடைபெறும் கோப்பையைப் பெற்றுக் கொண்ட அதே 1824ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தொழிற்சாலை ஒன்றை ஆய்வு செய்யப் போன போது காலரா வந்து உயிரிழந்தார் பாரி.

உல்லாசமாக வாழ்க்கை நடத்திய தாமஸ் பாரி இரக்க மனசுக்காரரும் கூட. அவர் எழுதி வைத்த உயிலே, இதற்கு அத்தாட்சி.

தனது உறவினர்களுக்கு மட்டுமின்றி வேலைக்காரர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்தவர் பாரி.

தன் வீட்டில் வளர்க்கப்பட்ட கண் பார்வையற்ற மேரி என்ற பெண்ணிற்கு மாதம் 11 ரூபாயும், செல்லா என்ற வேலைக்காரப் பெண்மணிக்கு மாதம் தலா 5 ரூபாயும், மற்ற வேலைக்காரர்களுக்கு மூன்ற மாத ஊதியமும் வழங்க வேண்டும் என்று தமது உயிலில் எழுதியிருந்தார்.

தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த மேரி ஆன் என்ற பெண்மணிக்கு மாதம் 5 ரூபாயும், உயில் எழுதப்பட்ட தேதியில் இருந்து 9 மாதத்திற்குள் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு 50 ரூபாயும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பாரி உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

பாரியின் மறைவுக்கு பின்னர் அவரது தொழில்களை டேர் பார்த்துக் கொண்டார்.

1838இல் குதிரை மீதிருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு அவரும் விண்ணுலகம் போய்ச் சேர்ந்தார்.

ஆனால் இரு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், அந்த இரண்டு வர்த்தகர்களின் பெயர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை.

எங்கிருந்தோ வந்து, சென்னை வீதிகளில் அலைந்து திரிந்து, மெட்ராஸ் என்ற மாநகரின் வரலாற்றில் இடம் பிடித்து விட்ட அந்த இருவரையும், பாரிமுனையும், அங்கிருக்கும் டேர் ஹவுசும் இன்றும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

தாமஸ் பாரியின் உடல் கடலூரில் அவர் அடிக்கடி சென்று வழிபட்ட தேவாலயத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது.

முருகப்பா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பாரி நிறுவனம் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க தூதரகமும் சிறிது காலம் இந்த பாரி கட்டடத்தில் இருந்து இயங்கி இருக்கிறது...

கடலூர் மக்களுக்கு உதவிகரம் நீட்டுங்கள்...


குடிநீர், உணவு, உடை, அவசர கால மருந்துக்கள், மெழுகுவத்தி, போர்வை போன்ற அத்தியாவசிய பொருட்கள் தேவை...

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி விவசாயி பரிதாப சாவு...


தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை, திருமலைத் தெருவைச் சேர்ந்தவர் நல்லக்கண்ணு மகன் நெல்லையப்பன் (37), விவசாயி. இவர் நேற்று வல்லநாட்டில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இன்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியது.

இது குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு மாமா வேலை செய்யும் அதிமுக அரசு...


கடுவெளிச் சித்தர் பாடல்...


எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன்.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அதிலும் சுயம்பு பிழம்பாய், சுய பிரகாசமாய் இருக்கும் தேவாதி தேவன் சிவசங்கரன், அவன் ஒடுங்குவது தொண்டருள்ளத்தில் தான், அதுவே அவன் வாசம் செய்யும் மெய் தலம், (அதிலிருக்கும்) தன்னை துதிப்பவர்க்கு, வணங்குபவர்க்கு, (அவர் வேண்டும்) பதவியை அளித்தருளுவான்.

இதை அறிந்து பாபஞ்செய்யாதிரு மனமே, இல்லையெனில் நாளை கோபங்கொண்டு தெய்வத்திடம் உரய வேண்டிய உன் ஆன்மாவை எமன் கொண்டோடிப் போவான்...

இலுமினாட்டியும் 13ம் எண்ணும்...


நிழலுலக ஆயுதம் - Chemtrails...



சதி கோட்பாடு பகுதி -1...

ஹெலிகாப்டர் சத்தம் கேட்டாலே ஓடிப்போய் வானத்தை பார்ப்பது நம் மரபணுவில் வந்தது.  அதை வேடிக்கைப் பார்ப்பதில் ஒரு அற்ப ஆனந்தம்.   

ஜெட் விமானம் பறந்து சென்ற தடத்தை நீல நிறப் பின்னனியில் பார்ப்பது ஒரு அழகான ஓவியம் போலிருக்கும். 

இந்தத் தடங்கள் ஆங்கிலத்தில் Contrail என்று அழைக்கப் படுகிறது. 

வேதியல் தெளிப்பு எச்சங்களுடன் Chemical sprayed வானில் தெரியும் விமானப் புகைத்தடமே Chemtrails. 

Chemical + Trail  —>  Chemtrail...

வேதிப் பொருட்கள் (இரசாயன) + தடம்  —> வேதித்தடம் என பெயர் வைக்கலாமா? 

செயற்கை மழையைப் (Cloud Seeding) பற்றி தமிழ்நாடு அறிவியல் பாடப் புத்தக்கத்திலேயே உள்ளது. 

அதீத பஞ்சம் வரும் போது விமானங்கள் மூலம் சில இரசாயண பொருட்களைத் தூவி செயற்கையாய் மழை வரவைக்க இயலும்.  இதனுடைய உல்ட்டாவும் சாத்தியமே. 

அதே விமானங்கள் கொண்டு செயற்கையாய் மழையை தடுத்து நிறுத்தி பஞ்சம் கொண்டு வரவும் இயலும்.

-தொடரும்.......