தமிழனின் செவிப்பறை ஏதேனும் ஓர் உலோகத் தகட்டில் செய்யப்பட்டிருக்கிறதோ என்னமோ?
ஏனெனில் அன்றாட வாழ்வில் இத்தனை இரைச்சல்களுக்கு ஈடுகொடுப்பவன் தமிழனைத் தவிர உலகில் வேறு யாரும் இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.
சரி அந்த ஒலியை பற்றி ஒரு சில விசித்திரங்கள்.
பிரபஞ்சத்திற்க்கு மூன்று தன்மைகள் உண்டு. ஒன்று இடைவெளி அல்லது தூரம், மற்றொன்று ஒலி சப்தம்,
மூன்றாவது வெற்றிடம்.
ஒலியே நித்திய ஆன்மாவாக கருதப்படுகிறது. ஒலி பிரபஞ்சம் முழுவதும் பயணித்து எங்கும் பரவி கிடக்கின்றது.
பிரபஞ்சத்தில் பரவிகிடப்பது போல் நமது உடலிலும் ஒலி பரவியுள்ளது.
நிச்சயமாக ஓசை தரக்கூடிய கருப்புக் களிமண்ணால் நாமே மனிதனைப் படைத்தோம். (அல் குர்ஆன் 15 : 26-27)
ஒரு ஒலியை, ஒலி அளக்கும் கருவியான ஆசிலாஸ்கோப்பிற்குள் செலுத்தினால், அது அந்த ஒலிக்கு ஏற்ப ஒரு வடிவத்தைக் கொடுக்குமாம். ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு ஒலி இருக்கிறது.
இந்து வேதங்களில் ஒலி அலைகளுக்கு தான் அங்கே முக்கியத்துவம் உள்ளது.(படைத்தவனுக்கு அல்ல) இந்தப் பிரபஞ்சத்தை ஒலி வடிவமாக மாற்றி, அந்த ஒலியை உச்சரிப்பதன் மூலம் இந்த பிரபஞ்சத்தை நமக்குள் எதிரொலிக்கச் செய்ய முடியும் என்கிறது இந்து வேதங்கள்.
ஒலியின் மீது ஆளுமை பெறுவதன் மூலம், வடிவத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியுமாம். ஒலியைப் பற்றி வேதங்கள் விளக்கம் கொடுப்பது இதுதான் அதாவது ஒலி (சத்தம்) என்பதுவும் சக்தியின் ஒரு வடிவமே.
மேலும் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உடலிலிருந்தும் இயற்கையாக ஒலி வெளி வருகிறதாம். அதை உரிய முறையில் பயன்படுத்தி கான்ஸர் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய முடியுமாம்.
நமது அறிவியல், மருத்துவம் மற்றும் இதிகாசத்தில், ஒலிக்கு குணப்படுத்தும் இயல்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது நமது உடல் இயல்பு நிலையில் எல்லா செயலுக்கும் பிரீக்குவேன்சி எனப்படும் அதிர்வெண்களில் இயங்கிக் கொண்டிருக்கும். இதய துடிப்பிற்கு என்றே ஒரு அதிர்வெண் உண்டு.
நியூரோன்கள் எரிக்கப்படுவதற்கு ஒரு அதிர்வெண் உண்டு. ஒவ்வொரு மனிதருக்கும் அதிர்வெண் வித்தியாசப்படும் தினசரி வேலை பளுவால் ஏற்படும் அழுத்தம், குறைவான தூக்கம் மற்ற வெளிப்புற காரணங்களால் இந்த இயல்பு நிலை மாறுகிறது.
ஒலி சிகிச்சையின் மூலம் உடல் அந்த இயல்பு நிலைக்கு மாறி சரியான அலைவரிசையில் செல்ல உதவுகிறது.
இசையில் இருக்கும் அதிர்வு தூண்டல்கள், மனதை தளர்த்தி, கார்ட்டிசோல் அளவை குறைத்து வாழ்க்கை தரத்தை அதிகரிக்கிறது.
இதிலிருந்து ஒவ்வொரு மனிதருக்கும்
தனிதன்மைவாய்ந்த ஒலி அதிர்வெண் உள்ளது என்பது தெரியவருகிறது.
எனக்கு வேடிக்கையாக ஒன்று தோன்றுவதைச் சொல்ல வேண்டும்.
ஒலி அழிவுடையதா? அழிவற்றதா?
அழிவு இல்லை என்றால் அவை பிரபஞ்சம் முழுக்கு பரவியுள்ளதா?
அப்படியென்றால் இந்த பூமிகிரகத்தில் வந்தசென்ற, வசித்த ஜீவராசிகள் எழுப்பிய ஒலிகள் அழியாமல் இந்த கிரகத்தில் சூழன்றுக் கொண்டு தானே இருக்கும்.
அதாவது இந்த கிரகத்தில் உள்ள ஜீவராசிகள் எழுப்பிய ஒலிஅலைகள் மூலகூறுகள் அழியாமல் பரவிக்கிடக்கிறது என்பதுதானே உண்மை
எனவே அந்த ஒலி அலைவரிசையை கிரகித்து பிரித்து உணரும் ஆற்றல் உடைய கருவியை மட்டும் உருவாக்கினால் போதும். தனிதன்மை உடைய மேலே கூறிய ஒலி அலைகளை கேட்கலாம். குல வழிபாட்டாளர்கள் கவனத்திற்க்கு இதன் மூலம் மூதாதையர்கள் பேச்சுகளையும் கேட்க முடியும்.
நன்றாகத்தான் கதையளக்கிறார் இவர் என்று நினைப்பீர்கள். கனவுகள் வேண்டுமானால் மாயையாய் இருக்கலாம். உணர்வுகள் எப்படி மாயையாக இருக்கும்? நீங்கள் நினைப்பதில் தப்பு இல்லை. ஆனால், அதற்கும் அறிவியல் ஆராய்ச்சியர்கள் தகுந்த காரணத்தை ஆராய்ந்த வந்துள்ளனர்.
அதில் முதன்மையானவர் உலகின் தொழினுட்ப வரலாற்றில் ஒரு புரட்சியையே தோற்றுவித்த தலைசிறந்த விஞ்ஞானியாக இன்று பலராலும் போற்றப்படும் “நிக்கோலா டெஸ்லா” (Nikola Tesla) என்பவர், 1900 – 1943 காலப்பகுதிகளில், சக்தி அலைகளை அடிப்படையாகக் கொண்ட பல விசித்திரமான ஆய்வுகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் ஜென்னி என்பவர் ஒலி அலைகளின் வடிவம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்தார்
பத்தாண்டு காலம் க்ளிசெரின்,
பாதரஸம், ஜெல், பவுடர்,இரும்பு போன்ற ஊடகங்களில் ஒலி அலைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை முறையாக ஆராய்ந்து அவற்றைக் குறிப்பெடுத்தார். குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவதைக் கண்டு இவர் அதிசயித்தார். ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்ட போது சிக்கலான படங்கள் உருவாக ஆரம்பித்தனவாம்.
இறுதியாக...
யதா வ்யாக்ர ஹரேத் புத்ரம்
தஷ்ட் ராபிர்ன பிதாயேத்
பிதா பதன் பேதாப்யாம்
தத் வர்ணம் ப்ரயோஜயேத்
-பாணிணி
ஒரு பெண்புலியானது எப்படி தன் குட்டியைத் தன் வாயில் கவ்வி அதன் பற்களால் கடியுறாதபடி எடுத்துச் செல்கிறதோ அதே போல ஒருவன் ஒரு வார்த்தையை உச்சரிக்க வேண்டும்…
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.