இருபத்து நான்கு மணி நேரமும் மனமற்ற நிலைபெறுவதுதான் இறுதிச் சாதனை.
இப்படிச் சொல்வதால், மனதை பயன்படுத்தவே கூடாது என்பதல்ல.
மனமற்ற நிலை பற்றி எதுவும் தெரியாதவர்களே அப்படிச் சொல்வார்கள்.
அது பொய்.
மனமற்ற நிலை என்றால், மனம் உன்னைப் பயன்படுத்தக் கூடாது என்று பொருள்..
மனமற்ற நிலை என்றால்,மனதை அழித்து விடுவது அல்ல. மனதை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைப்பது.
அது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் எந்த வினாடியும் மனதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உன் பணியாளாக இருக்க வேண்டும்.
நீ சும்மா இருந்தால்கூட 'கடக்கடக் கடக்கடக்' என்று போய்க் கொண்டே இருக்கும். அப்போது உன்னால் எதுவுமே செய்ய முடியாது.
பரிதாபமாக நின்று விடுவாய்..
மனமற்ற நிலை என்பது...
மனதைச் சரியான இடத்தில் ஒதுக்கி நிறுத்தி வைப்பது. அது ஒரு வேலையாள் என்ற முறையில் மனம் பெரிய கருவி தான்.
ஆனால், எஜமானனாகி விடுவது துரதிர்ஷ்டம். அது ஆபத்தானது. உன் வாழ்வையே ஒழித்துக் கட்டிவிடும்.
மற்றவர்களோடு தொடர்பு கொள்ள நீ விரும்பும் போது மனம் ஒரு ஊடகம் மட்டுமே.
ஆனால் நீ தனித்திருக்கையில் மனம் தேவையில்லை. எப்பொழுது பயன்படுத்த வேண்டுமோ அப்பொழுது மட்டும் பயன்படுத்தினால் போதும்.
இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்.
மனம் பல மணி நேரம் மௌனமாக இருந்தால்... அது புத்துணர்ச்சி பெற்று விடும். இளமை துடிப்புடன், படைப்பாற்றலுடன், உணர்வுகளுடன், புதுப்பிறவி எடுத்து விடும். அந்த ஓய்வில் ஏற்படுபவை இவை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.