23/08/2018

கடுவெளிச் சித்தர் பாடல்...


எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன்.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அதிலும் சுயம்பு பிழம்பாய், சுய பிரகாசமாய் இருக்கும் தேவாதி தேவன் சிவசங்கரன், அவன் ஒடுங்குவது தொண்டருள்ளத்தில் தான், அதுவே அவன் வாசம் செய்யும் மெய் தலம், (அதிலிருக்கும்) தன்னை துதிப்பவர்க்கு, வணங்குபவர்க்கு, (அவர் வேண்டும்) பதவியை அளித்தருளுவான்.

இதை அறிந்து பாபஞ்செய்யாதிரு மனமே, இல்லையெனில் நாளை கோபங்கொண்டு தெய்வத்திடம் உரய வேண்டிய உன் ஆன்மாவை எமன் கொண்டோடிப் போவான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.