28/05/2017

சித்தர்கள் இரகசியம்...


டாஸ்மேனியா இன அழிப்பு.. பிரிட்டனின் கோர தாண்டவம்...


ஆஸ்த்ரேலியாவிலிருந்து 320 கி.லோ மீட்டர் தூரத்திலுருந்த அழகிய தீவு. நாய்கள் அற்ற தீவு…. அங்கு 5000 க்கும் மேற்பட்ட டாஸ்மேனியர்கள் என்ற பழங்குடி மக்கள் தனிக்கலாசாரத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

1810 ம் ஆண்டு… பிரித்தானியர்களின்… இடம் பிடிக்கும் ஆசையின் ஒரு அங்கமாக… இந்த தீவை வெள்ளையர்களின் இரண்டு கப்பல்கள் அடைந்தன.

இதற்கு முதல் வெளி உலகத்தையே அறிந்திராத அந்த கருமையான மக்கள்… இந்த வெள்ளை உருவங்களை பார்த்ததும் இயல்பாகவே பயந்தார்கள்.


இதை உணர்ந்த வெள்ளையர்களின் பல கப்பல்கள் தீவிற்கு படையெடுத்தன.
பலர் கூட்டம் கூட்டமாக காரணமின்றி ( இடம் பிடிக்க வேண்டும்… வளங்கள் சூறையாடப்பட வேண்டும் என்ற வெள்ளையர்களின் காரணத்துக்காக)
சுட்டுக் கொள்ளப்பட்டார்கள். பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பை பறி கொடுத்தார்கள். சிறுவர்கள்… அடிமைகளாக்கப்பட்டு… இவர்களின் சூறையாடல்களுக்காக அமர்த்தப்பட்டனர். டாஸ்மேனியர்களால் எதிர்ப்பைக்காட்ட முடியவில்லை.

வெளியுலக தொடர்பற்ற அவர்களுக்கு இந்த யுத்தம், ஆயுதம் எல்லாமே புதுசாகவும் ஏன் என்றும் விளங்கவில்லை. ஏன் சாகிரோம் என்பது தெரியாமலே பரிதாபமாக உயிர் நீத்தார்கள்.


1828 ஆம்… ஆண்டு வெள்ளையர்களின் அரசு நிறுவப்பட்டு… எதிரே தென்படும் எந்த ஒரு வெள்ளையரல்லாதவரையும் கொல்லலாம்… ஒரு கறுப்பனை கொன்றால் 3 பவுண்ட்ஸ்… ஒரு குழந்தையை பிடித்து வந்தால் 1
பவுண்ட் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது.

இப்படி சட்டம் வந்ததும்… என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்ல
வேண்டியதில்லை. 5000 பேராக இருந்த சமுதாயம்… 75 ஆக்கப்பட்டது… அதில் 72 ஆண்களும்… 3 பெண்களும் மிஞ்சினார்கள். இரும்பு சங்கிலிகளால்
சேர்க்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இந்த காலப்பகுதியில்… ஐரோப்பியாவில் இந்த கொடூர இன அழிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதனால்… மீதமானவர்களை கொல்ல முடியாமல்… இருள் சிறைக்குகையில் அடைத்து வைத்தார்கள். அங்கும்… நய
வஞ்சகமாக… உணவு, மருத்துவம் மறுக்கப்பட்டு… கொஞ்சம் கொஞ்சமாக
கொல்லப்பட்டார்கள்.


1869 ம் ஆண்டு… 2 பெண்களும்… 1 ஆணும் எஞ்சினார்கள். இறுதியாக அந்த
ஒரு கருப்பு ஆணும் உணவின்றி இறந்து போக…

இதைக் கேள்விப்பட்ட… ஐரோப்பிய சமுதாய விஞ்ஞானிகள்… அவர்கள் குரங்குக்கும் மனிதனுக்கும்
இடைப்பட்ட உயிரினமாக இருக்கலாம் என்று கூறி… அந்த உடலை கூறுபோட்டு எடுத்துக் கொண்டார்கள்.

(காரணம் ஒன்றும் பெருசில்லை… ஒரு அழிந்துபோன இனத்தின் இறுதி மனிதனின் எச்சங்கள் என்று அதை பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரே நோக்கம் தான்)..

1876 இறுதிப் பெண்… ஏற்கனவே இறந்த இருவடைய உடலையும்… கண் முன்னேயே… துண்டாக்கி எடுத்துப் போனதை பார்த்திருந்தவள். உடல் நிலை மோசமாகி… தனது பாசையில் ஏதோ முனகிக்கொண்டிருந்தாள். அது என்ன என்பதை ஆஸ்த்ரேலிய பழங்குடி ஒருவர் மூலம்… மொழி பெயர்க்கப்பட்டது.


எங்கள் சம்பிரதாயப்படி… இறந்த உடலை கடலின் நடுவே சென்று மூழ்கடிக்கப்பட வேண்டும்… தயவு செய்து… என்னுடலை சின்னா பின்னமாக்காதீர்கள்… என் கடைசியாசையை ஆவது நிறைவேற்றுங்கள்….என்று கதறினால்.

இதை கேட்டு சிரித்த வெறியர்கள்… அப் பெண் இறந்ததும்… அங்கு ஒரு பக்கத்தில் புதைத்தார்கள்.

சிறிது காலத்தில் அதை தோண்டி எடுத்து… டாஸ்மேனியா மியூஸியத்தில்… இறுதி பழங்குடி பெண் என்ற வாசகத்துடன் தொங்கப் போட்டு இருந்தார்கள்.

இந்த கேவலமான செயலை… பின்னர் வந்த பல வெள்ளையர்கள் எதிர்த்ததால்.


1947 இல் அந்த கூடு ஒரு தனியறையில்
போட்டு மூடப்பட்டது.

1976 ம் ஆண்டு… மக்கள் கூட்டமாக நுழைந்து அந்த பெண்ணின்  எலும்புக்கூட்டை அவள் விரும்பிய படி கடலில் மூழ்கடித்து அடக்கம் செய்தார்கள்.

(சம்பவ மூலம் : மனிதருள் மிருகம் என்ற எழுத்தாளர் மதனின் நூலில்
இருந்து எடுக்கப்பட்டது)...

களப்பிரர்கள் வரலாற்றில் மறைந்து வாழ்ந்ததின் மர்மம் என்ன.?


ஏற்கனவே சொன்ன களப்பிரர்கள் ஆட்சியில் எந்த புலவர்களும் இவர்களை புகழ்ந்து பாடவும் இல்லை எழுதவும் இல்லை..

அசோகர் காலத்திலையே கல்தூண்களை வைத்து வீரத்தை நிரூபித்தார் அசோகர்..

அப்படி பார்க்கப்போனால் அசோகருக்கும் இவர்களும் சில நூற்றாண்டு வித்யாசங்கள் உண்டு, அப்படி இருக்கையில் ஏனோ களப்பிரர்கள் செய்ய தவறியது பெரிய அதிர்ச்சியாகவே உள்ளது.

சரி களப்பிரர்கள் காலத்தில் தோற்றுப் போன சேர சோழ பாண்டியர்களின் நிலை என்ன அவர்கள் களப்பிரர்களால் ஒடுக்கப்பட்டு செய்வதியாமல் இருந்துளார்களோ என்று அந்தப்பக்கம் யோசித்தால்.

பெரிய திருப்பமாக பாண்டியர்களின் ஒருவர் இலங்கையில் சில இடங்களை வென்று அங்கே ஆட்சி அமைத்ததாக தெரிகிறது.

சோழர்களும் இரேணாட்டில் ஆட்சி அமைத்ததாகவும் வரலாறு கூறுகிறது.

அப்படியாயின் சேர சோழ பாண்டிய மன்னர்கள் வலிமையிழந்து விடவில்லை..

அப்படியாயின் எதனால் களப்பிரர்களின் பக்கம் இவர்கள் சீண்டவே இல்லை இது தான் கேள்விக்குறி ?

இதற்கு காரணம் மறு  உலகப்பயணம் ?

அதாவது பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிராவார் உறுவது பெரும் பேரின்பம் என்ற கூற்றுப்படி...

அறநெறியை வலியுறுத்தி பிறவா நெறியான அதாவது இறப்பு பிறப்பு இல்லாத நிரந்தர மறு உலக வாழ்வுக்கு இவர்கள் பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது..

அதெல்லாம் இல்லையென்று வாதிட்டால், வேறு என்ன காரணத்தையும் எவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை..

இந்த காலகட்டத்தில் தான் புத்த மதமும் உருவாக்கிக்கொண்டு இருக்கும் நேரம் அவைகளும் மறு உலக வாழ்க்கை ஒன்றுள்ளது அதன் காரணியாகத்தான் இந்த உலக இன்பங்களை ஒதுக்கி துறவறம் மேற்கொண்டு மறு உலக வாழ்க்கைக்காக தம்மை தயார் படுத்தி கொள்ளல் வேண்டும்.. என்ற பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது..

அதன் காரணமாக தமிழக பகுதிகளில் விகாரைகள் எழும்ப தொடங்கின..

ஆனால் இந்த களப்பிரர்கள் இதனை ஆதரிக்கவும் இல்லை தடுக்கவும் இல்லை காரணம் இவர்கள் ஆதரித்தால் இன்றைய புத்தமத வரலாற்றில் களப்பிரர்கள் பற்றிய செய்தி வந்து இருக்கும் ஆனால் வரவில்லை..

ஆகவே இவர்கள் துறவறத்தை ஆதரிக்கவில்லை அதேசமயம் மறு உலக வாழ்க்கை என்பதை ஆணித்தரமாக நம்பி இருக்கின்றனர்.

அதனால் தான் இவர்கள் ஒரு பாரம்பர்ய தொன்மையான தமிழகத்தை ஆண்ட பொழுது கூட நாங்கள் அரசர்கள் என்ற சின்ன கர்வம் கூட இல்லாமல் எந்த கல்வெட்டையும் செதுக்காமல் எந்த கட்டிடத்தையும் கட்டாமல் சிறந்த ஆட்சி செய்து விட்டு..

இன்று வரலாற்றில் நாங்கள் யார் என்றே தெரியாமல் மறைந்து வாழ்ந்து விட்டு சென்றுள்ளனர்..

இவர்களது கூற்றை மக்கள் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் ஆதரவு அளித்ததால் தான் சேர சோழ பாண்டியன் கூட இவர்களை நெருங்க விடாமல் தடுத்துள்ளது..

ஆதாரம் நூட்கள் : களப்பிரர்கள் காலத்தில் தமிழகம்.

ஆசிரியர் : மயிலை சீனி வெங்கடசாமி.

இரண்டாவது ஆதாரநூல் : வேதமும் சைவமும்.

ஆசிரியர் :சு கோதண்ட ராமன்...

ரஜினியின் போருக்கு தயாராகும் அமைச்சர்கள்...


பாஜக மோடியும் மாட்டு இறைச்சி தொழிலும்...


Narendra Modi Sir, This is regarding the GO on ban in consumption of beef, slaughter & rules regarding raising cow etc.

*Point 1*
India ranked # 2 in beef export last year. India has contributed to world's 19.6% of beef export in year 2016 i.e., 1,850,000 metric ton.

India is also one if the key exporter of cara beef / buffalo meat

Total number of slaughters in 2016 according to the GAIN report is 38,750,000

So Why our Animal welfare board which cares so much for Cow didn't pressurize the GOI to Ban Export? Apparently more cow die due to export of beef.


*Point 2*
The Indian Constitution does not expressly recognize the fundamental right to food. However, Article 21 of the Con- stitution of India guarantees a fundamental right to life and personal liberty. The expression ‘Life’ in this Article means a life with human dignity and not mere survival or animal ex- istence. The Right of Food is inherent to a life with dignity, and Article 21 should be read with Articles 39 (a) and 47 to understand the nature of the obligations of the State in or- der to ensure the effective realization of this right. Article 39(a) of the Constitution, enunciated as one of the Directive Principles, fundamental in the governance of the country, requires the State to direct its policy towards securing that the citizens, men and women equally, have the right to an adequate means to livelihood. Article47 spells out the duty of the State to raise the level of nutrition and the standard of living of its people as a primary responsibility. The citizen’s right to be free from hunger enshrined in Article 21 is to be ensured by the ful llment of the obligations of the State set out in Articles 39(a) and 47.The reading of Article 21 together with Articles 39(a) and 47, places the issue of food security in the correct perspective, thus making the Right to Food a guaranteed Fundamental Right which is enforceable by virtue of the constitutional remedy provided under Article 32 of the Constitution. Therefore it is the obligation of the state to be proactive in strengthen- ing people’s access to food. The state must ful ll the right directly whenever an individual or group is unable, for reason beyond their control to enjoy the right to adequate food with the means at their disposal. The state’s role in strengthening the food security is more prominent in ensuring availability of food and ensuring access to the households. Particularly for poor households. And also it is the duty of the state to improve the food through its policies.

So it's not under the jurisdiction of GOI to determine who eats what. Rather it's the obligation of State.


*Point 3*
How a farmer raises a cow should be discussed, analyzed with the involvement of the farmers and the specialists. Rather than based on the input given by select few elites.

Once the Cow's reproduction of "Good calves" reduces, they become expense units for the farmers. Small & Marginal farmer or agricultural laborer cannot afford the maintenance of it. Hence they sell in the shandi for slaughter or highest payer who can afford the up keep.

Before setting a hard rule, the government should train the farmers & educate them. Farmers in villages in Nagapattinam, Thiruvarur district's are not even aware of the techniques available as part of Natural farming training.

Instead of simplifying the lives of the farmers again here we are trying to make more tougher by introducing Genetically Modified Mustard.

Did BT Cotton did not teach us enough?
Did the death in the cotton producing belt is not enough?
Were the farmers not burdened with loan enough?

Most of the villagers are able to somehow survive because Cattle is still major part of their living.

In Rural Tamilnadu Farmers get Rs. 23 to 25 and the same full cream milk is sold in Chennai by aavin at 45 and privates at 52/ltr

Please work on the parity between how much private companies make and what the farmers get out of selling milk.

The contamination of milk due to inducing chemicals is another crime that's being reported but i am yet to see if any major milk processing companies have been closed or even heavily penalized.


Source :
http://beef2live.com/story-world-beef-exports-ranking-countries-0-106903

https://gain.fas.usda.gov/Recent%20GAIN%20Publications/Livestock%20and%20Products%20Annual_New%20Delhi_India_8-31-2016.pdf

https://www.worldwidejournals.com/indian-journal-of-applied-research-(IJAR)/file.php?val=January_2014_1388583722_ee78c_36.pdf

மாட்டு இறைச்சி தடை சிருபான்மையாருக்கு எதிரானது இல்லை இந்துக்களுக்கு எதிரானது...


பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


தமிழர்கள்: இங்கு எல்லோரும் வாழலாம் ஆனால் தமிழர் தான் ஆள வேண்டும்...


ரசினி: தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொள்கிறார்கள்..

தமிழர்கள்: உன் கடவுள் பால் தாக்கரே தமிழர்களை படுகொலை செய்து விரட்டி அடித்தான். மராட்டியம் மராத்தியர்களுக்கே என்றான். அவனை கடவுள் என்ற போது கூட உங்களை ஒன்றும் செய்யவில்லை .

வந்தாரை வாழவைப்போம் தமிழரை தான் ஆள வைப்போம் என்று தான் சொன்னோம். நாங்களாக கீழ்தரமானவர்களா.. நன்றி கெட்ட ரஜினியே..

பிறப்பால் மட்டுமே ஒருவன் தமிழன்...


போதும் போதும் அடிமைப்பட்டு இருந்தது போதும்...

பிறப்பால் மட்டுமே ஒருவன் தமிழனாக இருக்க முடியும்..

யூத இனத்தை பாருங்கள்   எபிரேயு  என்கின்ற ஈப்று மொழியை தாய் மொழியாக கொண்ட பிறப்பு அடிப்படையாக கொண்டவர்களே யூதர்கள்..

ஏசு யுத இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், யூதர்கள் கிருத்துவ சமயத்தை ஏற்பதில்லை..

தங்கள் மூதாதையர் சமயமான யூத சமயத்தையே தேசிய சமயமாக ஏற்கிறார்கள். ஏசுவையும்-கிருத்துவத்தையும் மறுக்கிறார்கள். சிறுமான்மை யூதர்களே கிருத்துவத்தை பின்பற்றுகிறார்கள்..

தங்களின் கடைசி இறை துாதராக மோசஸ் என்னும் மோசேவை மட்டுமே ஏற்கிறார்கள்..

ஈப்று மொழியில் இருக்கும் யூத சமயத்தின் புனித நுாலான தோராவை படிப்பதிலும், சாலமன் ஆலயத்தின் மொட்டை சுவற்றை வழிபடுவதிலும் பெருமிதம் கொள்கிறார்கள். ஏசுவால் படைக்கப்பட்ட விவிலியத்தை யூதர்கள் ஏற்பதில்லை..

1948-க்கு முன்பு நாடற்ற யூதர்கள் உலகெங்கும் படுகொலை செய்யப்பட்டதும் அவர்களிடமிருந்த செல்வங்களும் பறிக்கப்பட்டது.

யூதர்கள் சுயநலவாதிகள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லை. ஆனால், மொழி, இனம், மண், சமயம் போன்றவற்றின் விடுதலைக்கான முயற்சியில் யூததர்களை மிஞ்ச உலகில் யாரும் இல்லை..

ஒருவர் யூத சமயத்திற்கு மாற வேண்டுமானால், பல தேர்ச்சிகளை பெற்றாக வேண்டும்..

ரபிக்கல் என்னும் யூத குருமார்கள் சாதாரணமாக பிர சமயத்தார் யூத சமயத்திற்கு மாறுவதை ஏற்க்க மாட்டார்கள்..

யூத சமயத்தில் இணைந்து விட்டால் மட்டுமே, ஈப்று மொழியை பேசிவிட்டால் மட்டுமே கானா தேசமாக இருந்த இன்றை இசுரேலில் வாழ்ந்துவிட்டால் மட்டுமே ஒருவர் யூதனாக முடியாது...

யூதனாக வேண்டுமென்றால் பிறப்பு அடிப்படையில மட்டுமே யூதனாக முடியும்..

அப்படித்தான் தமிழர்களும் பிறப்பு அடிப்படையில் மட்டுமே தமிழராக முடியும்.

யூதர்கள் தங்களது தேசிய இன வரையரையாக ஒரு தொடர்ச்சியான  தொண்மையான நிலப்பகுதி ஒரு மொழி, ஒரு பொருளியல் வாழ்க்கை என்பதுடன் மிக அடிப்படையாக சமயத்தையும் வரையாரையாகக் கொண்டு யூத தேசமான இசுரேல் தேசத்தை படைத்திருக்கிறார்கள்.

அது போல் தமிழர்கள் நாமும் பிராமணியத்தை மறுக்கும், சமக்கிருதத்தை மறுக்கும் , இந்து துவாவை மறுக்கும் தமிழ் பக்தி இலக்கியங்களையே கருவரையில் பாடப்படும் தமிழர் சமயமாக பாவானார் , மறைமலை அடிகளார், கா.சு. பிள்ளை சொன்னது போல் தமிழர் சமயத்தை அடிப்படையாக கொள்ள வேண்டும்.

அப்படி பிறப்பு அடிப்படையிலேயே தமிழின வரையரை அமையப்பட வேண்டும்..

தவறினால் ரசினி போன்றவர்கள் தான் 42 ஆண்டுகள் தமிழ் நாட்டில் இருக்கிறேன் ஆகையால் நான் பச்சைத் தமிழன் என்று தமிழினத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் தலைமை தாங்கி தமிழினத்தை அடிமைப்படுத்தும் சூழல் உருவாகும்.

போதும் போதும்..

மதுரை நாயக்கரிடம், தஞ்சை மராட்டியரிடம், ஆர்காடு நவாப்புகளிடம்,  ஆங்கிலேயரிடம், நீதிக்கட்சி - திராவிடக் கட்சிகளிடம் - இந்தியத்திடம் அடிமைப்பட்டு இருந்தது போதும்..

பிறப்பு அடிப்படையிலேயே தமிழினம் வரையரை செய்யப்பட வேண்டும்

அது பாசிசம் என்றால், பாசிசமாகவே இருந்துவிட்டு போகட்டும்...

திருப்பூர் உடுமலைப்பேட்டை SBI ஏடிஎம் ல் ஒட்டப்பட்ட போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி , ATM ஐ பொதுமக்களே இழுத்து மூடினர்...



கோல்டன் ரேஷியோ... இயற்கையின் கணிதம்...


உங்களுக்கு golden ratio என்பதை பற்றி தெரியுமா?

Fibonacci number...?

இவை நம்மை சுற்றி இயற்கையில்.. இயற்கையாகவே அமைந்து உள்ள ஒரு அதிசய கணிதம்..

இவைகள் என்னவென்பதை பற்றி இன்று பார்ப்போம்..

உங்களுக்கு "pi " என்பதை பற்றி தெரிந்திருக்கும்.. அதாவது.. அந்த 3.14....
ஆனால் "phi" பற்றி தெரியுமா?

இது கிரேக்க எழுத்துக்களில் 21 வது எழுத்து. கணிதத்தில் இதுதான் " கோல்டன் ரேஷியோ" காண சிம்பல்.

ஒரு பெரிய கோட்டை இரண்டாக பிரிக்கிறீர்கள்.. சரிபாதியாக அல்ல ஒன்னு பெரிது ஒன்னு சின்னதாக... இப்போது அந்த பெரிய கோட்டை சின்ன கோட்டை கொண்டு வகுத்தால் வரும் என் இருக்கிறதே.. அது அந்த கோட்டின் மொத்த நீளத்தை பெரிய கோடை கொண்டு வகுத்தால் வரும் எண்ணுக்கு சமமாக இருப்பதை ... அந்த விகிதாசாரதைதான் Golden ratio  என்கிறார்கள்.

கோல்டன் ரேஸ்யோவை  குறிக்க phi யை பயன் படுத்த காரணம்.. முன்பு சொன்ன அந்த விகிதாச்சாரம் phi இன் மதிப்பாகிய 1.6 க்கு நெருக்கமாக இருப்பது தான்.

இந்த phi ஆர்வலர்கள் ஆய்வாளர்கள்
அந்த காலத்தில் கட்டபட்ட.. மர்மம் நிறைந்த கட்டிடமான  பிரமிட்.. இந்த கோல்டன் ரேஷியோ படி கட்ட பட்டுள்ளதை கவனித்தார்கள்.  க்ரேட் பிரமிடு கிசா இருக்கிறதே அதன் ஓவொரு பக்கத்திலும் அதன் நீளம் 786 அடி. மேலும் அதன் உயரம் 481 அடி.. அதாவது  இவை இரண்டுக்கும் உள்ள விகிதம் 1.57  .அதாவது phi யின் மதிப்புக்கு மிக நெருக்கமாய்.

இப்படி பிரமிடுகளில் மட்டும் அல்லாமல் பழைய கட்டிடங்கள் பல வற்றில் இந்த கோல்டன் ரேஸ்யோ பயன்படுத்த பட்டிருப்பதை கவனிதார்கள்.

பிபோனாச்சி நம்பர் என்பதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள்.

1200 களில் லியனார்டோ பிபோனச்சி
என்ற கனிதவியலாளரால் இது கண்டுபிடிக்க பட்டது.


அதாவது 0,1,1,2,3,5,8,13,21,34, இப்படி எழுதுவது தான் பிபோநாச்சி நம்பர்..

இதில் உள்ள சிறப்பு என்ன என்று கவனித்தால் எந்த ஒரு நம்பரும் அதற்கு முந்தய இரு நம்பர்களின் கூட்டு தொகையாக இருக்கும்.

இந்த எண்களின் மாறும் விகிதம் தான் கோல்டன் ரேஷியோ.... இது phi மதிப்பிற்கு நெருக்கமாக உள்ளது.. அதிலும் எண்கள் பெரிதாக பெரிதாக phi மதிப்பாகிய 1.618 ஐ அதிகம் நெருங்குகிறது.

உதாரணமாக 3 கும்5 கும் இடையிலான விகிதம் 1.666 ஆனால் 13 க்கும் 21 க்கும் இடையிலான விகிதம் 1.625... இன்னும் பெரிய என்னானால்... 144 கும் 233 கும் பார்த்தால் 1.618 இப்படி....

லியர்னடோ டாவின்ஸி தான் வரைந்த ஓவியங்களில் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

அவரது லாஸ்ட் சப்பர் ஓவியத்தில் இயேசு தனது சீடர்களுடன் உணவு உண்ணும் காட்சியில் உள்ள மேஜை மற்றும் சில பொருட்களில் இந்த விகிதாச்சாரத்தை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. அவரது மோனோலிசா ஓவியம் கூட இதை பயன் படுத்தி வரைய பட்டது தான்.

இதை மனிதன் பயன்படுத்தி இருக்கிறான் என்பதை இவ்வளவு நேரம் நான் சொன்னது இல்லை ஆச்சர்யம்..
இனி சொல்ல போவது தான் ஆச்சர்யம்..

 இயற்கை தனது படைப்பில் இதை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
ஒரு சூரிய காந்தி பூவில் மையத்தில் சுருள் சுருளாக  இருக்கிறதே அந்த டிசைன் அதை உற்று கவனித்தால் கோல்டன் ரேஷ்யோ படி அமைந்துள்ளதை கவனிக்கலாம்..

ஒரு மரத்தில் கிளைகள் அதில் இலைகள் எப்படி எந்த எண்ணிக்கையில் படி படியாக வளர்கிறது என்று பார்த்தால் இந்த விகிதம் தான்.

தாவரத்தில் மட்டும் அல்ல ஒரு நத்தையின் ஓடு இந்த விகித அடிப்படையில் தான் சுருளாக இருக்கிறது.. விலங்குகளின் உடலமைப்பை கவனித்தால் இந்த விகிதம் இருக்கிறது.

அவ்வளவு ஏன் மனிதனின் கைகள் மற்றும் விரல்கள் இந்த விகிதத்தில் தான் அமைந்துள்ளது என்றால் பார்த்து கொள்ளலாம்.

இப்போது இனொன்று சொல்கிறேன் இயற்கை உயிரினங்களில் மட்டும் இல்லை .. பல இயற்கை ஆற்றல்களில்.. படைப்புகளில் இதை வெளிப்படுத்துகிறது.. என்பது இன்னும் ஆச்சரியமானது.

சூறாவளி ஏற்படும் போது அதன் சுழல் கவனித்தால் இந்த விகிதத்தை பார்க்கலாம்..

கடல் அலையை கவனித்தால் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பார்க்கலாம்.

இன்னும் எங்கெங்கே இயற்கை இதை பயன் படுத்துகிறது என்பதை ஆராய மனிதன் சிரிதினும் சிறிதான DNA சுருளை ஆராய்ந்து பார்க்க அந்த சுருளே இந்த விகிதத்தில் தான்  அமைந்துள்ளது என்பதை பார்த்து அதிசையித்தான்..

பிறகு பெரிதினும் பெரிதான கேலக்சிகளை அதன் சுருள் அமைப்பை ஆராய்ந்த மனிதன் இந்த பிரபஞ்சமே அந்த கோல்டன் ரேஷியோ வை பயன்படுத்தி அமைந்துள்ளதை கண்டு மேலும் அதிசயித்து போனான்..

இந்த பிரபஞ்சம் அறிவியலால் ஆனது என்று எப்போதும் சொல்லி வந்துள்ளோம்..

ஆனால் அது நாணயத்தின் ஒரு பக்கம் தான் அதன் அடுத்த பக்கத்தில் பிரபஞ்சம் முழுக்க.. முழுக்க கனிததால் ஆனது என்ற அதிசயத்தை வியந்து நோக்கி இன்றைய கட்டுரையை நிறைவு செய்கிறேன்...

ஸ்டான்லி மேயரின் இந்த கண்டுபிடிப்பு Failure என பின்னாட்களில் செய்தி வந்தது?


வரலாறு மாறி இருக்க வேண்டியது தடுக்கப்பட்டது யாரால்?

பாஜக மோடியும் விவசாயம் அழிப்பும்...


பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


திறந்தது இவர் தான்.. ஆனால் அவர் நின்னு போஸ் கொடுக்கிற பாலம் மன்மோகன்சிங் திட்டம் போட்டு கட்டியது...

உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....


நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
 
1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.

வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
 
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.

விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


நெடுவாசல் போராட்டம் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. தெரிந்து கொள்ளுங்கள் ஊடகங்களின் உண்மையை...


மதத்தின் பெயரால் நாட்டை பிளந்தவர்கள் இப்போது ஜாதியின் பெயரால் பிளக்க முயற்சிக்கிறார்கள்.. இது தான் பாஜக வின் உண்மை முகம்...


பாஜக விற்கு 2.5 கோடி மாட்டு இறைச்சி நிறுவனம் நிதி கொடுத்துள்ளது...



இலுமினாட்டி யும் பொம்மைகளின் உளவியலும்...


பெற்றோர்களே குழந்தைக்கு என்ன பொம்மை வாங்க போறீங்க..?

நாமெல்லாம், குழந்தையாக இருந்த போது ஒரு சில பொம்மைகளே கடைகளில் விற்கப்பட்டன, நம் அப்பாக்களால் என்ன பொம்மை வாங்கி தர முடிந்ததோ அதை நாம் பொக்கிசமாக கருதி விளையாடினோம்..

அப்போதெல்லாம் நமது பாரம்பரிய விளையாட்டு பொம்மைகள் பல புழக்கத்தில் இருந்தது .

(எ.கா) மரப்பாச்சி பொம்மை, சொப்பு சாமான், கிலுகிலுப்பை, இராட்டினம் மற்றும் பல, அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு தாயாரிப்பு பொம்மைகளான ரோபோ பொம்மைகள், நெகிழி உறுவ பொம்மைகள் இருந்தன.

இவைகளையே நாம் பெரும்பாலும் பயன்படுதினோம்..

ஆனால் 1995குப் பிறகு பிறந்தவர்கள் , பொம்மைகளால் மாபெரும் உலக அரசியலுக்கும், உலகவர்த்தகத்துக்கும் உள்ளானாவர்கள்..

பொம்மைகளை வைத்து வர்த்தகம் இருக்க வாய்ப்புண்டு, ஆனால் அரசியல் எப்படி என்று தானே சிந்திகிறீர்கள்..?

ஆம் நம் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு பின்னால் ஒரு மறைக்கப்பட்ட அரசியல் உண்டு.

அதுவும் சாதாரண அரசியல் அல்ல, நம் சமுதாயப் போக்கையே மடை மாற்றிய அரசியல்..

நான் விடயத்திற்கே வருகிறேன் , இந்த அரசியலுக்கு பெயர் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை (Hypersexualization or children).

இந்த காலத்து குழந்தைகள் ஊடகங்கள் மூலம் பாலியல் சார்ந்த தவறான புரிதலால் வளர்கப்படுகிறார்கள்.

அதாவது ஒரு பெண் குழந்தை ஆறு வயது நிறைவடையும் போதே பாலியல் வெளிப்பாடு (sexual appeal) தான் அவர்களது மதிப்பை முடிவு செய்கிறது என்ற சிந்தனை கொள்கிறார்கள்.

பெண்களை ஒரு பாலியல் பதுமைகளாக உணர வைப்பதே இந்த அரசியல்.

இதை திட்டமிட்டு ஊடகங்கள் மூலமாக பரப்புகிறார்கள்..

அதாவது குழந்தைகள் பார்க்கும் கார்டூன் படங்களில் கூட பெண் கதாபாதரங்களை மிகவும் கவர்ச்சியாக (அறைகுறை ஆடைகளுடன்) காட்டுகிறார்கள்.

இதன் விளைவாக சராசரியாக ஒரு ஆறு வயது பெண் சுய பாலின கவர்ச்சி உணர்தலுக்கு (self-sexual realization ) ஆளாகிறார்கள்.

அதாவது தனது பாலியல் வெளிப்பாடே அவர்களுக்கு பாராட்டுகளை வாங்கி தரும் என்ற நம்பிக்கைக்கு உள்ளாகிறார்கள்.

இது இளம் பெண்களிடமும் (teen age), பெண்களிடம் தற்போது இயல்பாக பார்க்க இயலும்.

இது சமுதாயத்துக்கு ஒரு தவறான வழிகாட்டுதலை தருகிறது.

குறிப்பாக ஆண்களுக்கு பெண்கள் மீதான பார்வையை மாற்றுகிறது.

சொல்லவா வேண்டும், இப்போது வரும் தமிழ்ப்பாட்டுகளின் சாரமே பெண்களை இழிவுபடுத்துவதும், கேலி செய்வதும், திட்டுவதுமாகவே உள்ளது இல்லை என்றால் அவர்களின் உடல் அழகை போற்றுவதாக உள்ளது..

தற்போதுள்ள குழந்தைகள் இணையம், ஸ்மார்ட் போன், டேபிலட், போன்று பலசாதனங்களை பயன்படுத்துகிறார்கள், இவர்கள் இவைகளால் பெரிதும் தாக்கத்துக்குள் உள்ளாகிறார்கள்.

இவர்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் குழந்தைகளை தவறான பாதையில் இட்டு செல்கிறது..

தற்போதுள்ள குழந்தைகள் இந்த கார்டூன் ஊடகங்களில் வரும் பொம்மைகளை தான் பெரிதும் விரும்பி வாங்க ஆசைபடுகிறார்கள்..

(எ.கா) காமிக் கதாபாத்தரங்கள், இல்லை என்றால் பெண் குழந்தைகள் பார்பி பொம்மைகளை வாங்குகின்றனர்..

காமிக் பொம்மைகள் குழந்தைகளுக்குள் வக்கிரத்தை, கோபத்தை, திமிரை உருவாக்கும் .

பார்பி பொம்மைகள் உங்கள் பெண் குளந்தைகளை கவர்ச்சிப் பாதையில் இட்டு செல்லும்.

அவர்களுக்கு இவைகள் பொருப்பு, அன்பு போன்ற நல்ல குணங்களை தருவதில்லை..

முடிந்த வரையில் உங்கள் குழந்தைகளுக்கு விலங்கினங்கள் சார்ந்த பொம்மைகள் (stuffed toys that resemble animals ) எ.கா டெடி பொம்மைகள்.. இல்லை என்றால் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் எதாவது வளருங்கள், அது உங்கள் குழந்தைக்கு அன்பு , இயற்கையை பற்றிய புரிதல், அறிவியல் தெளிவு, போன்றவற்றை உருவாக்கும்.

முடிந்த வரை நீங்கள் தொலைக்காட்சியில் நேரம் செலவிடுவதை நிறுத்துங்கள்.

இந்த சூப்பர் சிங்கர் மற்றும் நடன நிகழ்ச்சி போன்ற போட்டிகளில் உங்கள் குழந்தைகளை பங்கேற்க்க வைக்க எண்ணாதீர்கள்.

முடிந்த வரை அந்த நிகழ்சிகளை தவிருங்கள், இது போன்ற நிகழ்சிகளில் வரும் குழந்தைகளை அதீத கவர்ச்சி, பகட்டு வாழ்கை வாழ்வது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது.

அந்த குழந்தைகளை பார்த்து வளரும் குழந்தைகள் அதே போன்ற அர்த்தமற்ற வாழ்கையை தேர்வு செய்கிறார்கள்.

இந்த தொலைக்காட்சி குழந்தை நட்சத்திரங்கள் பலர், பருவ வயதில் திரைத்துறையில் கவர்ச்சி நடிகைகள் ஆவார்கள் ( wait and watch, every pop star has become one in Hollywood ).

இதை பார்த்து வளரும் உங்கள் குழந்தைகளும் தவறாக வழிநடத்தப் படுவார்கள்.

தற்போதுள்ள தொலைக்கட்சிகளில் பெற்றோர்களை மதிக்காத பையனோ. பெண்ணோ தான் கதாநாயகன் , கதாநாயகி மற்றும் அப்பா , அம்மாவை கிண்டல் கேலி செயும் காட்சிகள் பல இடம் பெறுகிறது.

இது உங்கள் குழந்தைக்கு உங்களை மதிக்கணும் என்ற எண்ணத்தை சுத்தமாக இல்லாமல் செய்துவிடும்.

நிறைய குழந்தைகளிடம் பேசுங்கள் , ஒரு நாளைக்கு ஒரு தமிழ் கதை சொல்லுங்கள், அது வரலாறு மற்றும் பஞ்சதந்திர தத்துவக் கதைகலாக கூட இருக்கலாம்.

கல்வி என்பது நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது , பள்ளிக்கூட , அடிமை உளவியல் மெக்காலேயின் பாடத்திட்டம் அல்ல என்பதை மறக்காதீர்கள்.

உங்கள் மகள்களுக்கு கற்பும் , தமிழ்ப் பண்பாடும். உங்கள் மகன்களுக்கு ஒழுக்கமும், வீரம் சார்ந்த கருத்துக்களை புரிய வையுங்கள்..

திருக்குறளை மனபாடம் செய்ய வைப்பதை தவிர்த்து, அதன் அற்புதமான கருத்துக்களை உங்கள் குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.

பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் தருவதை உங்கள் குழந்தைகளிடம் பகிறாதீர்கள்.

முடிந்த வரையில் அன்னியர்களின் எந்த ஒரு கருத்தையும் உங்கள் குழந்தைகளிடம் பதிய வைக்காதீர்கள் .

உங்கள் குழந்தைகளின் எதிர்காலமே தமிழர்களின் எதிர்காலம், அடுத்த தலைமுறை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் .

உங்களைச் சுற்றி நடக்கும் இலுமினாட்டி (illuminati) அரசியலை தேடுங்கள், விடைகள் கிடைக்கும்.

அதை புரிந்து கொள்ள முயற்சியுங்கள், உலக அரசியல் நம்மை தாக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை...

விசிக வும் தமிழின துரோகி திருமாவும்...


விடுதலைச் சிறுத்தை கட்சி நிறுவனர் மலைச்சாமி தேவேந்திரர் வரலாற்றை கட்சி மேடைகளில் பேசாத துரோகி திருமா வை உன்மை விடுதலை சிறுத்தைகள் புறக்கணிக்க வேண்டும்...

ராசபக்சே கையால் பரிசு வாங்கியதற்க்கு வருத்தப்படாத போராளி தலைவர் திருமாவளவன்...

வெயிலைத் தாக்குப் பிடிக்க.....


வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.

உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.

குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.

வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.

இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது...

நீயும் பொம்மை நானும் பொம்மை நம்ம கூட இருக்க எம்பி எம்எல்ஏ எல்லோரும் பொம்ம...


உலகை அச்சுறுத்திய வயிற்றுப் போக்கு...


1664ம் ஆண்டுகளில் 400,000 மக்கள் தொகையில் 70,000 பேரைப் பலிகொண்ட மாபெரும் தொற்று வியாதிக்குப் பேர் வாந்தி வயிற்றுப்போக்கு...

இதன் தாக்கம் மேற்குலகை அன்றைய காலகட்டத்தில் செய்வதறியாது நின்றது, ஏறக்குறைய பல பேரை பலியிட்டு இதற்கு காரணத்தை கண்டு பிடித்தனர்..

அதில் முக்கியமானது சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவு..

இதை இரண்டை சரி செய்தாலே மக்களை காப்பாற்றிவிடலாம் என்று யோசனை சொன்னார்கள்.

இதற்கிடையில் கிருஸ்துவ சபை இதை நிராகரித்தது இது ஆண்டவனின் சாபம், இதில் கைவைக்க நாங்கள் அனுமதி தரமாட்டோம் என்றது..

பின்னர் தான் மதகுருமார்கள் பலர் இந்த வாந்தி பேதியின் தாக்கத்தால் இறக்கும் நிலையில் அவர்கள் தங்கள் கூற்றை மாற்றிக் கொண்டனர்.

பின்னர் சுகாதாரமான குடிநீர் உணவு மூலம் இதை கட்டுப்படுத்தினார்கள்..

மட்டுமின்றி பிரமாண்ட போர்கள் கூட இந்த வயிற்றுப்போக்கு மூலம் நிரந்தரமாக தடை செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு..

ஆனால் இந்த நோயை மேற்கத்திய பணக்கார நாடுகள் ஆயுதமாக அந்நிய ஏழை நாட்டின் மீது செலுத்தி வந்தனர் என்ற கொடூர வரலாற்றையும் நாம் மறந்து விடக்கூடாது..

2004ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 2.5 பில்லியன் வயிற்றுப்போக்கு நோயாளிகள் ஆதாரப்பூர்வாமாக பதியப்பட்டுளார்கள்..

அதில் ஐந்து வயதிற்கும் குறைவான 1.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.

இவற்றில் பாதிக்கும் மேலானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள்...

வளமான ஆப்பிரிக்காவை வளமிழக்க செய்த மிகப்பெரிய துரோக நடவடிக்கையில் இதுவும் ஒன்று..

இன்றைய மேற்கத்திய பணக்கார நாடுகள் ஏறக்குறைய அனைத்தும் ஏழைகளின் வயிற்றில் அடித்து அவர்களை கொன்று குவித்து உருவாக்கப்பட்டது தான்..

அதில் மிகவும் முக்கியமான இரண்டு கேடுகெட்ட நாடுகள் அமெரிக்க இத்தாலி...

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் - நன்றி கெட்ட ரஜினி...


எகிப்து பிரமிடுகள் தன்னுள் ஒரு மின்னியல் தத்துவத்தை மறைத்து வைத்துள்ளது...


அதனை உலகிற்கு தெரியாமல் மறைத்தது மட்டுமல்லாமல் அதனை வெறும் பிணவறை என்றவாறு பரப்பியது யாரோ?

ஆடு, மாடு, ஒட்டகம், கோழி இறைச்சிகளை உண்பது மக்களின் தொன்று தொட்ட கலாச்சாரம் , மத்திய அரசின் தடை தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல் - மத்திய அரசின் மாட்டுக்கறி தடை சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்...


கடலில் உருவான குட்டி நாடு...


நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா?

கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு.

இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும்.

இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நாடு.

இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் அல்லவா?

அப்படி அந்தப் போர் தொடங்கிய போது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது.

கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்த துறைமுகத்தைக் கட்டியிருக்கிறார்கள்.

போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் போடுவதற்காக இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

போர் முடிவடைந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ரப் டவர் எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டு விட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

1967-ம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இந்தத் துறைமுகத்துக்குப் போய்த் தங்கிவிட்டார்.

இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். இங்கு வந்த பேட்ஸ், ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார்.

அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்பப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிறைய முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார்.

இந்த நாட்டுக்கென்று தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.

கடலுக்குள்ள ஒரு குட்டி கட்டிடத்தில்தான் இந்த நாடே இருக்கிறது. ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போன போது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள்.

1987-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனாலும் முடியவில்லை.

சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார்.

தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள்.

ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக் கொண்டு தான் வர வேண்டும்.

ஒரு கட்டிடமே தனி நாடாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறதல்லவா?