17/11/2017
புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?
மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது.
புதிய ஆடைகள் அணிந்திருக்கும் போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை..
இது மட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம், எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம்.
புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்து வித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது...
துப்பாக்கி முனையில் செயின் பறிப்பு கொள்ளையனை மடக்கி பிடித்த இன்ஸ்பெக்டர்...
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அஷ்டலட்சுமி பிளாட் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி மல்லிகா (வயது 40). இவர் நேற்று இரவு காட்டுப்பாக்கம் மெயின் ரோடு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா கூச்சலிட்டார். உடனே அங்கு பொதுமக்கள் திரண்டனர்.
அப்போது அந்த வழியாக குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வந்து கொண்டிருந்தார். கூட்டத்தை பார்த்ததும் அவர் என்னவென்று விசாரித்தார். உடனே மல்லிகா நடந்தவற்றை கூறினார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் கொள்ளையனை விரட்டி சென்றார். அப்போது கொள்ளையர்கள் குமணன் சாவடி சந்திப்பு குதியில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டர் சார்லஸ் விரட்டி வருவதை பார்த்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஆளுக்கொரு திசையில் தப்பி ஓடினார்கள். அப்போது ஒருவனை இன்ஸ்பெக்டர் சார்லஸ் துரத்தி பிடித்தார். அவன் இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றான். இதனால் இருவரும் ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
ஒரு கட்டத்தில் கொள்ளையன் கத்தியை எடுத்து இன்ஸ்பெக்டரை குத்த முயன்றான். இதனால் அவர் துப்பாக்கியை எடுத்து கொள்ளையனை நோக்கி நீட்டினார். இதனால் பயந்து போன கொள்ளையன் கத்தியை கீழே போட்டான். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டரின் டிரைவரும் போலீஸ்காரருமான ஜெயபால், நுண்ணறிவு போலீஸ் டார்வின் ஆகியோர் கொள்ளையனை பிடித்துக் கொண்டனர். அங்கு திரண்ட பொதுமக்கள் கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் கொள்ளையனை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவனது பெயர் இர்பான் (வயது 35) என்றும், சென்னை பட்டாளம் ஷேக் மெய்தீன் தெருவை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது. தப்பி ஓடிய அவனது கூட்டாளி பெயர் தெரியவில்லை.
மல்லிகாவிடம் நகை பறிப்பதற்கு முன்பு அம்பத்தூர் மற்றும் அய்யப்பன் தாங்கல் பகுதியில் வழிப்பறி செய்துள்ளனர்.
கைதான கொள்ளையனிடம் இருந்து 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது. துப்பாக்கி முனையில் கொள்ளையனை மடக்கி பிடித்த இன்ஸ்பெக்டர் சார்லசை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள்...
ESP (Extra Sensory Perception)...
சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த ESP என அறியப்படுகின்றது.
இந்த ESP சக்தியில்..
இறந்த காலத்தை சொல்பவர்கள்
எதிர்காலத்தை சொல்பவர்கள்
நிகழ்காலத்தில் நடப்பவற்றை சொல்பவர்கள்
பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்
இன்றும் பலவகை உள்ளது, அது அவரவர் மூளையையும் அதன் சக்தியையும் வெளிப்படுத்துவதனைப் பொறுத்து வகைப்படும்.
மூளைக்குச் செல்லும் இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தி அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன.
இது நாம் யோசனை செய்யும் போது தலையை கைகளால் கசக்கிக் கொள்வது அல்லது நெற்றியின் பக்கத்தை தட்டுவது போன்ற செயற்பாடுகளை நாம் செய்வது இந்த வகையில் மின்னதிர்வினை ஏற்படுத்தும் செயல் முறையே.
சில எலிகளின் மூளையை பயன் படுத்தி இந்த மின்திர்வு செயற்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இதன் காரணமாக மூளையில் பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணரப்பட்டது.
மூளையில் இருக்கின்றன 4 பில்லியன்ஸ் செல்கள் ஆனால், மனிதர்கள் அதில் 10% வீதம் கூட முழுதாக பயன்படுத்துவதில்லை என்பதே ஆச்சரியம் மிக்க உண்மை, கணித அறிவியளாலர்களுக்கும் படிக்காத மனிதனுக்கும் கூட 100 செல்களுக்குள் தான் வித்தியாசம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 500 தொடக்கம் 1000 செல்களை படுத்திய காரணத்தால் அவர் அளப்பரிய கணித அறிவியளாலராக மாறினார் என்பதும் உண்மையே.
அமெரிக்காவில் மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம் பல விஞ்ஞானிகள் இணைந்து ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் தன்மைகள் பற்றியும் கலந்துரையாடினார்கள்..
அப்போது டாக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் கண்களை தியானத்தில் ஈடுபட்டுள்ளார் பின்னர் அவரது உடல் தானாக மேல் எழுந்து அவர்கள் கூடியிருந்த கட்டிடம் வழியாக சென்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
பௌதீக விதிகளை மீறிய இந்த செயல் காரணமாகவே ஆழ்மனதின் ஆற்றலும் ESP எனப்படும் மூளையின் அதீத சக்தியின் மேல் நம்பகத்தன்மை வளர்ந்து ஆராய்ச்சிகள் தொடர்ந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளில் ஒரு மனிதன் தனது ESP சக்தியின் மூலம் தன்னுடைய உடல் எடையினை அதிகரிக்க முடியும் 50 கிலோகிராம் உள்ள ஒருவர் 200 கிலோ கிராம் வரை தனது எடையினைக் கூட்டிக் கொள்ள முடியும் அதுவும் சர்வ சாதாரணமாக என கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வகையான பல ஆராய்ச்சிகளின் முடிவாக எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அவை மூளையின் சக்தியினால் செயற்படுத்த முடியும் என்பதும் அறியப்பட்டது...
வூடூ டாக்டர் பஸ்ஸார்ட்...
அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த வூடூ மனிதர் டாக்டர் பஸ்ஸார்டு (Dr. Buzzard).
அவர் இயற்பெயர் ஸ்டீபனி ராபின்சன் என்ற போதும் பஸ்ஸார்டு என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட ஒருவகைக் கழுகின் பெயரில் அழைக்கப்பட்டார்.
தென் கரோலினாவில் ப்யூஃபோர்ட் நகர (Beaufort County) எல்லைக்குட்பட்ட செயிண்ட் ஹெலெனா தீவில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பெயர் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.
சூனியம் வைப்பதிலும், சூனியம் எடுப்பதிலும் அவர் புகழ் அமெரிக்காவின் மற்ற மாகாணங்களிலும் பரவி இருந்தது.
அவர் பாட்டனாரோ, தகப்பனாரோ ஒரு அடிமையாக ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா வந்ததாகவும், அவரிடமிருந்து டாக்டர் பஸ்ஸார்ட் வூடூவைக் கற்றுக் கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
சிலர் அவர் இளைஞனாக இருக்கும் போது அவர் தலையில் ஒரு பறவை வந்து அமர்ந்து விட்டுப் போனதாகவும், அக்கணத்திலிருந்து அவர் வூடூ சக்திகளைப் பெற்றதாகவும் கூறுகிறார்கள்.
சூனியம் வைப்பது எடுப்பது தவிர இறந்த உறவினர்களின் ஆவிகளைத் தொடர்பு கொள்ளவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் கூட மக்கள் அவரிடம் அதிக அளவில் வந்தார்கள்.
நேரடியாக வந்தவர்களை விட பலமடங்கு அதிகமாய் அவரைத் தபாலில் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து தொடர்பு கொண்டார்கள்.
தபாலிலேயே பணம், செக், மணி ஆர்டர் எல்லாம் அனுப்பினார்கள்.
எதில் எல்லாம் கையெழுத்து போட வேண்டி வருமோ அதை எல்லாம் கிழித்து எறிந்து விட்டு மற்றதை மட்டும் டாக்டர் பஸ்ஸார்ட் எடுத்துக் கொண்டார்.
ஏனென்றால் சூனியம் சட்டப்படி குற்றமாக அக்காலத்தில் கருதப்பட்டது. கையெழுத்து போட்டு ஒரு சாட்சியம் உண்டாக்கி கைதாக அவர் விரும்பவில்லை.
நல்ல உயரமான அவர் எப்போதும் கருப்பு ஆடைகளையும் ஊதா கண்ணாடியையும் அணிந்து கொண்டிருப்பார். ஊதா கண்ணாடி இல்லாமல் அவரைப் பார்ப்பது மிகவும் அபூர்வம்.
அவர் கண்களை மற்றவர்கள் நேராகப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் அந்த ஊதா நிறக் கண்ணாடியை அணிந்து கொள்வதாக பலரும் நினைத்தார்கள்.
நீதிமன்ற வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வேண்டுபவர்கள் அவரிடம் பெரிய தொகையைத் தந்து விட்டால் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கையில் அவர் நீதிமன்றம் செல்வார். அங்கு அமர்ந்து ஏதோ ஒரு வூடூ வேரை மென்று கொண்டே அமர்ந்திருப்பார்.
அந்த நேரத்தில் எதிராளிகள் சரியாக வாதம் புரிய முடியாமல் போகுமென்றும், நீதிபதியும், ஜூரிகளும் அவருடைய வாடிக்கையாளருக்கு எதிராகத் தீர்ப்பு சொல்ல முடியாமல் போகும் என்றும் சொல்கிறார்கள்.
அல்லது குறைந்தபட்ச தண்டனை மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள்.
அதனால் பல நேரங்களில் அவர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தாலே ஒருவித இறுக்கமான சூழ்நிலை நிலவ ஆரம்பித்தது.
சில நேரங்களில் வழக்கு நடக்கும் போது பெரும்திரளாக பஸ்ஸார்ட் கழுகுகள் நீதிமன்ற வளாகத்தில் வருவதுண்டு.
அப்படி வந்தாலும் அது அவருடைய சக்தியால் தான் என்றும் தீர்ப்பு சாதகமாகவே இருக்கும் என்றும் மக்கள் நம்பினார்கள். அது உண்மையாகவே இருந்திருக்கிறது.
தொலைவில் இருந்து பணம் அனுப்பி உதவி கேட்கும் வாடிக்கையாளர்களின் பகுதி நீதிமன்றங்களுக்கு அவரால் செல்ல முடியாதல்லவா? அவர்களுக்கு அவர் மந்திரித்து மிக மென்மையான ஒரு பொடியை அனுப்பி வைப்பார்.
அந்தப் பொடியை நீதிமன்ற நாற்காலிகளிலும், மேசைகளிலும் ரகசியமாய் தூவி விட்டால் போதும். அந்த வழக்கு அவர்களுக்கு ஜெயம் தான்.
இது குறித்துப் பல புகார்கள் போனாலும் சரியான ஆதாரம் போலீசாருக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் சில சமயங்களில் அவரை அழைத்து அவர்கள் விசாரித்தது உண்டு.
அப்படி ஒரு விசாரணையில் அவர் அதிகாரிகளிடம் தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் ஆனால் தன்னிடம் விசேஷ சக்திகள் இருப்பதாகவும் சொன்னார்.
அவர் தன்னை ஒரு இரும்புப் பெட்டிக்குள் வைத்து சங்கிலிகள் வைத்துப் பூட்டினால் தன் சக்திகளைப் புரிய வைப்பேன் என்றும் அதிகாரிகளிடம் கூறினார்.
அதிகாரிகள் அவரைச் சந்தேகப் பார்வையுடன் பார்த்தனர். அப்படிச் செய்தால் இந்த ஆள் செத்து விட்டால் அது தேவையில்லாத பிரச்னை என்று அவர்களுக்குத் தோன்றியது.
ஆனால் அந்த ஆளே அப்படிச் சொல்கிறாரே, செத்துத் தொலைந்தால் அந்த ஊருக்கே பெரிய பிரச்னை தீருமல்லவா, எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கும், அதனால் அதை யாரும் பெரிது படுத்த மாட்டார்கள் என்றெல்லாம் எண்ணியவர்களாக அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.
சவப்பெட்டி போன்ற பெரிய இரும்புப் பெட்டி ஒரு சிறைக்குள் கொண்டு வரப்பட்டது. அவரை உள்ளே வைத்துப் பூட்டும் முன் அந்த அதிகாரி கடைசியாக ஒருமுறை டாக்டர் பஸ்ஸார்டிடம் கேட்டார். நிச்சயமாகத் தானே சொல்கிறீர்கள். உங்கள் மீது என்ன தான் குற்றச்சாட்டுகள் என்னிடம் இருந்தாலும், விசாரணை இல்லாமல் உங்களை சாகடிக்க நான் விரும்பவில்லை.
டாக்டர் பஸ்ஸார்ட் சொன்னார். கவலைப் படாதீர்கள். இப்போது மணி என்ன?
கடிகாரத்தைப் பார்த்த அதிகாரி பதினொன்று என்றார்.
நல்லது. மதிய சாப்பாட்டை ஒரு மணிக்கு என் குடும்பத்தோடு நான் உண்டு விடலாம் என்ற டாக்டர் பஸ்ஸார்ட் இரும்புப் பெட்டியில் படுத்துக் கொண்டார்.
என்ன தான் சூனியக்காரனாக இருந்தாலும் பலமாகப் பூட்டப்படும் இரும்புப் பெட்டியில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை அந்த அதிகாரிக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் பெரிய பிரச்னை ஒன்று ஒழிந்தது என்று எண்ணியவராக அவர் பெட்டியை மூடிப் பூட்டினார். பெரிய இரும்புச் சங்கிலி கொண்டு பெட்டியை பலமுறை சுற்றி அந்த சங்கிலியின் இருமுனைகளையும் சேர்த்து பெரிய பூட்டை வைத்துப் பூட்டி விட்டுச் சாவியை தன்னிடமே பத்திரமாக வைத்துக் கொண்டார்.
அவரும் அவருடன் இருந்த மூன்று போலீஸ்காரர்களும் அந்த இரும்புப் பெட்டி இருந்த சிறையையும் மூடி அதையும் பூட்டி விட்டு சிறைச்சாலைக்கு எதிராக இருந்த ஒரு ஓட்டலில் சாப்பிடப் போனார்கள். அப்போதும் அவர்கள் பேச்சு டாக்டர் பஸ்ஸார்ட் பற்றியே இருந்தது.
இரும்புப் பெட்டியில் பூட்டு, அதைச் சுற்றிய சங்கிலியில் பூட்டு, சிறை அறையில் பூட்டு என்று இத்தனை பூட்டுகளை உடைத்து ஒருவன் தப்பிக்க வழியே இல்லை என்று பேசிக் கொண்டனர். நிதானமாகச் சாப்பிட்டு விட்டு வரும் போது அந்த ஆள் உடலெல்லாம் நீலமாகிச் செத்திருப்பார் என்று ஒரு போலீஸ்காரர் சொன்னார்.
அவர்கள் சிறிது நேரம் கழித்துச் சென்று அந்த இரும்புப் பெட்டியைத் திறந்த போது ஒரு கருப்புப் பூனை இரும்புப் பெட்டிக்குள் இருந்து தாவிக் குதித்து ஓடியது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். என்ன ஆனது எப்படி ஆனது என்பதை அவர்களால் கடைசி வரை அறிய முடியவில்லை.
இந்த சிறைச்சாலை நிகழ்வு டெர்ரன்ஸ் செப்கே (Terrance Zepke) என்பவர் எழுதிய Lowcountry Voodoo: Beginner's Guide to Tales, Spells and Boo Hags என்ற நூலிலும் நான்சி ரைன் (Nancy Rhyne) என்பவர் எழுதிய Tales Of The South Carolina Low Country என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டர் பஸ்ஸார்ட் சூனியம் செய்ய பல வகை வேர்களையும், களிம்புகளையும், விலங்குகளையும், பாம்புகளையும் பயன்படுத்தி வந்தார் என்றாலும் கருப்புப் பூனையின் எலும்பினால் தான் பெரிய பெரிய காரியங்களைச் சாதித்துக் கொண்டார் என்ற கருத்து நிலவுகிறது.
கருப்புப் பூனையின் எலும்பு பற்றி நாம் முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். கருப்புப் பூனையில் உடல் எலும்புகளில் வூடூ சக்தி பெற்ற எலும்பு எது, அந்த எலும்பைப் பெறுவது எப்படி என்பதில் மட்டும் பொதுவாக வூடூ புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பதற்கும், டாக்டர் பஸ்ஸார்ட் குறிப்பிட்டிருப்பதற்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது. மிருகவதை எதிர்ப்புச் சட்டம் வந்து விட்ட இக்காலமாக இருந்தால் கைதாகி விட்டிருக்கக்கூடிய செயல்கள் இவரைப் போன்ற ஆட்களால், அக்காலத்தில் கருப்புப் பூனையின் எலும்புக்காகச் செய்யப்பட்டன. அது குறித்து பிற்கால பகுத்தறிவாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.
இப்படி சக்தி வாய்ந்தவராக இருந்த டாக்டர் பஸ்ஸார்டை வீழ்ததுவேன் என்று ஒரு வூடூ போலீஸ்காரர் வந்தது தான் விதியின் செயல்.
அந்த வூடூ போலீஸ் அதிகாரி பற்றியும், அவர் டாக்டர் பஸ்ஸார்டை எப்படி எதிர்கொண்டார் என்ற மிக சுவாரசியமான நிகழ்வுகளையும் அடுத்த பதிவில் பார்ப்போம்...
மூச்சுப் பயிற்சி...
மூச்சுப் பயிற்சி என்றாலே அது ஒரு சிக்கலான விஷயம் என்பது போல நினைக்க வேண்டியதாக இருக்கிறது.
காரணம் அது சம்பந்தமாக விதிக்கப்படும் அல்லது சொல்லப்படும் பயிற்சி முறைகளே.
எதற்காக மூச்சுப்பயிற்சி செய்கிறோம்? சுவாசத்தை சிரமமில்லாமல் எளிதாக்குவதற்கு.
எதற்காக சுவாசத்தை எளிதாக்கவேண்டும்? அப்போதுதான் நிறையக் காற்றை உள்ளிளுக்கவும் வெளிவிடவும் முடியும்.
எதற்காக நிறையக்காற்றை உள்ளிளுக்கவும் வெளிவிடவும் வேண்டும்?
அப்போதான் உள்ளிழுக்கப்படும் காற்றில் பிராணவாயு கூடுதலாக இருக்கும்.
எதற்காகப் பிராணவாயு கூடுதலாக இருக்கவேண்டும்? அப்போதுதான் இதயத்திலிருந்து சுத்திகரிப்புக்காக நுரையீரலுக்கு வரும் ரத்தம் உடனுக்குடன் பிராணவாயுமூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தடையில்லாமல் மீண்டும் இதயத்துக்கும் அதைத் தொடர்ந்து உடல் முழுவதும் வேகமாக எடுத்துச் செல்லப்படும்.
அப்படி வேகமாக எடுத்துச் செல்லாவிட்டால் என்ன ஆகும்? அதற்காகக் காத்திருக்கும் உடல் கட்டமைப்புகளில் இருக்கும் உட்கூறுகள் தங்களின் இயக்கத்துக்குத் தேவை யான சுத்த ரத்தம் உடன் கிடைக்காத நிலையில் திணறவேண்டி வரும்.
அது சரிப்படுமா? சாதரணமாகவே திணறல் ஏற்பட்டால் கடுமையாக உழைக்கும்போது, விளையாடும்போது, ஒடும்போது, படி ஏறும் போதெல்லாம் அதிகசக்தி தேவைப்படுவதால் அதிக ரத்த ஒட்டம் தேவைப்படுமே அதற்கு என்ன செய்வது?
அதற்குத்தான் பயிற்சியின் மூலம் நிறையக் காற்றை உள்ளிழுக்கவும் அதை நுரையீரலில் வைத்து சுத்திகரித்து உடனுக்குடன் தேவைக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் அனுப்பப் பயிற்சி மேற்கொள்வது.
அந்தப் பயிற்சியின்போது என்ன ஆகிறது?
சாதாரணமாக அதிகப்படியான வேலையோ விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற பழக்கமோ இல்லாதவர்களுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படாததால் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்தெடுக்கும் பணி நுரையீரலில் அதிகமாக நடக்காததால் அந்தப் பணி நடப்பதற்கான நுண்ணறைகள் குறைவான அளவே இயங்கு நிலையில் இருக்கும். மற்றவை எல்லாம் சுருங்கியோ அல்லது வேறு சிலவற்றால் அடைபட்டோ இருக்கும்.
அந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் வேலை செய்தாலோ மாடிப்படிகள் ஏறினாலோ கொஞ்சதூரம் ஓடமுயன்றாலோ வேகமாக நடந்தால்கூட வியர்த்து விறுவிறுத்து மூச்சிரைக்க ஆரம்பித்துவிடும். காரணம் அந்த கூடுதல் வேலைக்குத் தேவையான அளவு கூடுதல் ரத்த சுத்திகரிப்புப் பணி நுரையீரலில் நடக்க முடியவில்லை என்பதுதான் காரணம்.
இப்போது ஏன் மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அறிந்து கொண்டோமல்லவா?
அதை எப்படிச் செய்வது?
இந்த இடத்தில் ஒரு சிக்கல் உள்ளது. ஆதாவது இந்தத் துறையில் உள்ள யாராவது ஒருவரைக் கேட்டால் அவர் சொல்வதைப் பின்பற்றுவது அப்போதைக்கு எளிதாகத் தெரியும், ஆனால் பின்னால் அதைப் பெரும்பாலோர் செய்யமாட்டோம்.
காரணம் மூச்சுப்பயிற்சிக்கென்றே சொல்லப்பட்டிருக்கும் சில பல முறைகளைச் சொல்வார்.
நிச்சயம் பிராணாயாமத்தைச் சொல்வார். பிராணாயாமம் என்பது ராஜயோகம் கற்றுக்கொள்பவர்கள் அதன் எட்டுப்படிகளில் நான்காவது படியாக பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி வருகிறது. அதை அவர்கள் முழுமையாகப் பயின்றால் தான் அடுத்தடுத்த படிகள் வழியாக சமாதி நிலை என்னும் உச்ச நிலைக்குச் செல்ல முடியும்.
அதற்காக மூச்சை எப்படி இழுக்க வேண்டும், எப்படி விடவேண்டும், இரண்டு நாசிகளையும் மாற்றிமாற்றி எப்படிச் செய்யவேண்டும் உள்ளிளுப்பது, உள்ளே அடக்கி நிறுத்துவது, வெளியே விடுவது, வெளியில் நிறுத்துவது இப்படிப்பட்ட நிலைகளை எப்படிக் கையாள்வது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை வினாடிகள் எடுத்துக் கொள்வது, அந்த நேரத்தைப் படிப்படியாக எந்ந அளவு உயர்த்துவது போன்ற பலவிதமான முறைகளில் பயிற்சியைப் பெற வேண்டும்.
இதுவெல்லாம் சாதாரண வாழ்க்கை வாழ்பவருக்கு நடைமுறை சாத்தியமானது அல்ல. நிறையப் பேரைப் பார்க்கலாம். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து மூச்சுப் பயிற்சிக்குப் போவார்கள். போகும் வரை நான் யோகா வகுப்புக்குப் போகிறேன் என்று பெருமையாகச் சொல்வதைத் தவிர அதன்படி நடப்பவர் ஒரு சதவிகிதம்கூடப் பார்க்கமுடியாது.அதனால் என்ன பயன்?
ஆகையால் மூச்சுப் பயிற்சியால் என்ன பயனோ அதனைமட்டும் அடைவதற்காக நாம் சில எளிய முளைகளைக் கையாளலாம்.
ஆதாவது கீழே ஒரு விரிப்பின்மேல் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டோ அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டோ ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பயிற்சியைத் துவங்க வேண்டும். உடம்பை வளைக்காமல் நேராக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பக்கத்தில் சுவற்றில் ஒரு கடிகாரம் இருப்பது நல்லது. கீழே தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில்கூட நேராக நிமிர்ந்து வசதியாக உட்கார்ந்து கொள்ளலாம்.
அதன்பின் ஒரு பத்துத் தடவை முடிந்த வரை காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடவேண்டும். சுவாசம் சீரானதும் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கத் துவங்கும்போதும் சுவர்க்கடிகாரத்தில் ஒலிக்கும் வினாடிமுள் நகரும் சப்தத்தை எண்ணிக்கொள்ளவேண்டும்.
எத்தனை வினாடிகள் உள்ளிழுப்பதற்கு ஆகிறது என்று எண்ணிக்கொண்டு உள்ளிழுக்க முடியவில்லை என்றால் உடனே வெளிவிடத் துவங்க வேண்டும். வெளிவிடும் நேரம் எவ்வளவு என்பதையும் கணக்கிட்டுக் கொண்டு வெளிவிட முடியவில்லை என்றால் உடனே உள்ளிழுக்கவேண்டும்.
உள்ளிழுப்பதைவிட வெளிவிடுவதற்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகும். உள்ளிழுக்கும் நேரமும் வெளிவிடும் நேரமும் சேர்ந்ததுதான் ஒரு மூச்சுக்கான நேரம்.
ஒரே மாதிரி நேரக் கணக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூச்சு விட்ட பின்பு மிகவும் எளிதாக இருந்தால் மூச்சின் நேரத்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விநாடிகள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதை ஒரே நாளில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. மெதுவாக எப்போது முடியுமோ அப்போது உயர்த்திக் கொள்ளலாம். மூச்சுத் திணறாத அளவு எந்த அளவு வேண்டுமானாலும் நேரத்தைக் கூட்டிக்கொண்டே கொள்ளலாம்.
இந்தப் பயிற்சியின் காரணமாக நுரையீரலின் காற்றை உள்ளிழுக்கும் திறனும் அதன்மூலம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணிக்காகப் பிராணவாயுவை அளிக்கும் திறனும் அதிகரிக்கின்றது. காரணம் அதுவரை நுரையீரலின் திறக்காத அறைகளெல்லாம் திறக்கிறது. அங்கு இதற்கு முன் நடக்காத வேலைகள் எல்லாம் நடக்கிறது. அவ்வளவே!
இந்தப் பயிற்சிக்கு சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையில்லை. கெட்ட பழக்கங்கள் இல்லாமல் உடலைத் தூய்மையாக வைத்திருக்குமளவு இதன் பயன் கூடுதலாக இருக்கும்.
இந்தப் பயிற்சியினால் இதயத்துக்கும் ஓரளவு பயிற்சி கிடைக்கும்...
பட்டுப்போன்ற நீளமான கூந்தல் வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...
தலை முடி பிரச்சனை என்பது காலம் காலமாக உள்ள பிரச்சனை. அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. வயது அதிகரிக்க அதிகரிக்க, அழுத்தம் கூட கூட, கூந்தல் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பே. கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பெண்கள் பல வழிகளை தேடி ஓய்ந்து போகிறார்கள்.
முடி உதிர்தலை தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பல நுட்பங்களும் தொழில் நுட்பவியலும் வந்து விட்டது. ஆனால் அப்படிப்பட்ட இரசாயன பொருட்களைப் பயன்படுத்தி, கூந்தலின் தரத்தை ஏன் இழக்க வேண்டும். அதிலும் முக்கியமாக திருமணம் ஆகும் நேரத்தில் தீமை விளைவிக்கும் இரசாயன பொருட்களை பயன்படுத்தினால், கூந்தல் கலை இழந்து ஜீவன் இல்லாமல் போய் விடும். அதனால் தான் கூந்தலை பாதுகாக்கவும், கூந்தல் வளர்ச்சி அடையவும் சக்தி வாய்ந்த 15 இயற்கை வழிகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். அதைப் படித்து அவற்றைப் பயன்படுத்தி, நன்மையைப் பெறுங்கள்.
முட்டை மாஸ்க் - முட்டையில் புரதம், செலீனியம், பாஸ்பரஸ், ஜிங்க், இரும்பு, சல்பர் மற்றும் அயோடின் சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால், முடி உதிர்தலுக்கு எதிராக சண்டையிடவும், கூந்தலை பராமரிக்கவும் இது பெரிதும் உதவுகிறது. கூந்தலை அடர்த்தியாக்கவும் முட்டை பெரிதும் உதவும். அதிலும் இதனுடன் சேர்த்து கொஞ்சம் ஆலிவ் எண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம். பயன்படுத்தும் முறை: முட்டையின் வெள்ளை கருவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனை கலந்து ஒரு பேஸ்ட்டை தயார்படுத்தி, அதனை தலையில் சரிசமமாக தடவி, ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் கூந்தலை ஷாம்பு போட்டு அலசவும். இதனால் வறண்ட பாதிப்படைந்த கூந்தலை திடமாக்க ஆலிவ் எண்ணெய் உதவி புரியும்.
உருளைக்கிழங்கு ஜூஸ் - முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சி அடையவும் உருளைக்கிழங்கு ஜூஸ் பெரிதும் உதவி புரியும் என்ற விஷயம் பல பேருக்கு தெரியாத சிகிச்சையாகும். கூந்தல் வளர்ச்சி இயற்கையான முறையில் இருக்க வேண்டுமா? அப்படியானால் உருளைக்கிழங்கு ஜூஸைப் பயன்படுத்துங்கள். பயன்படுத்தும் முறை: உருளைக்கிழங்கு ஜூஸை தலை சருமத்தில் தேய்த்து, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். இதனால் உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி, கூந்தலை நீளமாகவும் திடமாகவும் வளரச் செய்யும்.
மருதாணி - கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக திகழ்கிறது மருதாணி. நரைத்த மற்றும் கலை இழந்த கூந்தலை பளபளக்க வைக்க மருதாணி உதவுவதால், இதனை ‘கூந்தல் இரசவாதி’ என்றும் அழைப்பதுண்டு. மேலும் இது முடியின் வேர் வரை சென்று, முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பயன்படுத்தும் முறை: ஒரு கப் மருதாணி பவுடருடன் அரை கப் தயிரை கலந்து சில மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் அந்த கலவையை தலை சருமத்தில் தேய்க்கவும். அது காயும் வரை காத்திருந்து, பின் கூந்தலை அலசவும்.
தேங்காய் பால் - தேங்காய் பாலில் புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் அதி முக்கிய கொழுப்புகள் வளமையாக உள்ளதால், முடி உதிர்வதையும் உடைவதையும் இது தடுக்கும். பயன்படுத்தும் முறை: தேங்காய் பாலை ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
க்ரீன் டீ - க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமையாக உள்ளதால், அது கூந்தல் பிரச்சனைகளுக்கு எதிராக போராடும். மேலும் இதில் பாலிஃபீனால்கள் மற்றும் அழற்சி விளைவிப்பதை தடுக்கும் ஆற்றல் உள்ளதால், கூந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். பயன்படுத்தும் முறை: இரண்டு க்ரீன் டீ பையை எடுத்து, ஒரு கப் வெந்நீரில் போட்டு விடவும். இந்த கலவையை தலை சருமத்தில் தடவவும். மேலும் தினமும் க்ரீன் டீயை பருகினாலும் முடி உதிர்தலை தடுக்கலாம்.
நெல்லிக்காய் - நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளதால், இது முடி வளர்ச்சிக்கு உதவி, பொடுகுத் தொல்லையைப் போக்கும்.
பயன்படுத்தும் முறை: நெல்லிக்காய் பவுடர் மற்றும் எலுமிச்சை சாற்றை சரிசமமாக கலந்து, இந்த கலவையை தலையில் தடவவும். அது காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுங்கள். மேலும் சீரான முறையில் நெல்லிக்காய் எண்ணெயை தடவினால், கூந்தல் கரு கருவென்று திடமாக வளரும்.
திராட்சை கொட்டை எண்ணெய் - (Grapeseed Oil) இந்த எண்ணெய் முடி சுரப்பிகளை ஊக்குவித்து மீண்டும் முடி வளர துணை புரியும். அதிலும் சுருட்டை முடி உடையவர்களுக்கு, இந்த எண்ணெய் பெரிதும் உதவி புரியும். பயன்படுத்தும் முறை: இரவு தூங்கும் முன் உங்கள் தலையில் இந்த எண்ணெயைத் தேய்த்து, மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து கூந்தலை அலசவும்.
கற்றாழை மற்றும் தேன் - கற்றாழையில் வைட்டமின் ஏ, பி, ஈ, செலீனியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது. தலை சருமத்தை சுத்தப்படுத்தி, பொடுகை நீக்க இது உதவும். அதனால் இது கூந்தலுக்கு மிகவும் நல்லது. பயன்படுத்தும் முறை: இரவு தூங்கச் செல்லும் முன் கற்றாழை ஜெல்லை தலையில் தடவிக் கொள்ளுங்கள். மறுநாள் காலை அதை கழுவிக் கொள்ளலாம். சிறிது கற்றாழை ஜெல்லை தேனுடன் சரிசமமாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலை சருமத்தில் தடவி, ஒரு 30 நிமிடம் வரை ஊற வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசுங்கள்.
ஓட்ஸ் - ஓட்ஸ் என்பது முடிக்கான இயற்கை மாய்ஸ்சுரைசராகும். அது தலை முடியை வழவழப்பாகவும், திடமாகவும் ஆக்குவதோடு மட்டும் இல்லாமல், பொடுகையும் நீக்கும். பயன்படுத்தும் முறை: அரை கப் ஓட்ஸை, 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் கால் கப் பால் ஊற்றி கலக்கவும். இந்த கலவையை முடியின் வேரிலிருந்து நுனி வரை தடவுங்கள். ஒரு 20 நிமிடம் வரை ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசுங்கள். இந்த கலவையை தடவும் முன், முடியானது சிக்கல் இல்லாமலும் வறட்சியுடன் இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
வெங்காய ஜூஸ் - வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளது. இது கொலாஜென் திசுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அதனால் மறுபடியும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் வெங்காயம் இரத்த ஓட்டத்தை தூண்டும். அதுமட்டுமின்றி தலை சருமத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும். பயன்படுத்தும் முறை: வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, அதிலிருந்து சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி, ஷாம்பு தேய்க்கும் முன்னதாக ஒரு 30-45 நிமிடம் வரை ஊற வைக்கவும். வெங்காயத்தில் எரிச்சலூட்டும் வாசனை வருவதால், அதனுடன் பன்னீர் அல்லது தேனை சிறிதளவு கலந்து கொள்ளுங்கள்.
ஆப்பிள் சீடர் - வினிகர் வினிகர் தலை முடியில் உள்ள அமில காரச் சமன்பாட்டை திருப்பி கொண்டு வர உதவும். அமில காரச் சமன்பாடு திரும்பப் பெற்று பராமரிக்கப்படுவதால், தலை முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் முடியை பளபளப்பாகவும், திடமாகவும் வைக்கும். குறிப்பாக இரசாயன பொருட்களை முடிக்கு பயன்படுத்துவதால், முடியில் பதிந்திருக்கும் இரசாயனங்களையும் நீக்கும். பயன்படுத்தும் முறை: ஆப்பிள் சீடர் வினிகருடன் சரிசமமான அளவில் தண்ணீரை கலந்து, முடிக்கு ஷாம்பு போட்ட பின் இந்த கலவையை ஒரு முறை முடியில் தேய்க்கவும். இது தலை முடியை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
எலுமிச்சை சாறு - வினிகரை போல எலுமிச்சை சாறும் தலை முடியில் உள்ள அமிலகாரச் சமன்பாட்டை திருப்பி கொண்டு வர உதவும். பயன்படுத்தும் முறை: கை நிறைய பாதாமை எடுத்து தண்ணீரில் இரவு ஊற வையுங்கள். மறுநாள் காலை அதன் தோலை நீக்கி அதனை அறைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, தலையில் மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தலை முடியை அலசுங்கள்.
சரியாக சாப்பிட்டு மன அழுத்தத்தை குறைக்கவும் பழங்கள், காய்கறிகள், கறி மற்றும் மீன்களை அதிகமாக உண்ணுங்கள். சரியான கொழுப்பு நிறைந்த உணவை உண்ணுங்கள். எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். போதுமான அளவு இரும்பு, ஜிங்க் மற்றும் வைட்டமின் சி உள்ள உணவுகளை உண்ணுங்கள். ஏனெனில் கூந்தல் பிரச்சனைக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகும். அதனால் மன அழுத்தத்தை தவிர்க்கவும். நேரம் கிடைக்கும் போது நற்பதமான காற்றை உள்வாங்குங்கள். சில உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். போதுமான அளவு தூக்கத்தை பெற்று ஆரோக்கியமான வாழ்வை பெற்றிடுங்கள்...
மின் துறை ரகசியங்கள்...
உங்கள் வீட்டு மின் அளவி (மீட்டர்) ஓடவில்லையா... அல்லது புகைந்து விட்டதா.... கவலை வேண்டாம்...
மின் அளவி மின்சார வாரியத்தின் சொத்து... அதன் பழுதுகள் வாரியத்தையே சாரும்...
எக்காரணம் கொண்டும் எங்கள் வீட்டு மின் அளவி பழுதாகி விட்டது மாற்றி கொடுங்கள் என்று அலுவலகம் சென்று எழுதி மட்டும் கொடுத்து விடாதீர்கள்...
அப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் மாற்ற ஆகும் செலவு உங்களை சாரும்...
அதை தவிர்த்து ... மின் கணக்கீட்டாளர் வரும் போது அவரிடம் சொல்லி
அவர் மூலம் புகாராக பதிவு செய்தால் செலவே இல்லாமல் மீட்டர் மாற்றி கொடுப்பார்கள்...
ஆனால் உங்கள் மூலம் எழுதி வாங்கவே முயற்சிப்பார்கள்... மசியாதீர்கள்....
விழிச்சுக்கோங்க... பொழச்சுக்கோங்க....
எகிப்து- சூடான் எல்லைப்பகுதிக்கு நானே ராஜா- இந்தியரின் அதிரடி நடவடிக்கை...
எகிப்து – சூடான் எல்லையை ஒட்டி பிர்தாவில் (Bir Tawil) 2 ஆயிரத்து 60 சதுர கிலோ மீட்டர் கொண்ட நிலப் பகுதி உள்ளது. இந்த நிலப்பகுதியை எந்த நாடுமே உரிமை கொண்டாடாத நிலையில், அங்கு சென்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சுயாஷ் தீக்சித் என்பவர், பிர்தாவிலை ’கிங்டம் ஆஃப் தீக்சித் நாடு’ என அறிவித்துள்ளார்.
கிங்டம் ஆஃப் தீக்சித் நாட்டிற்கு தானே அரசன் என பிரகடனப்படுத்திக் கொண்ட அவர், தனது நாட்டுக்கு தேசியக்கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த நாட்டில் குடியேற விரும்புபவர்கள் முதலில் செடி நடவேண்டும் என சட்டம் இயற்றியுள்ளார்.
தனது நாட்டை அங்கீகரிக்குமாறு ஐ.நாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்...
மீண்டும் ஆரம்பம் ஜாக்டோ-ஜியோ போராட்டம்...
ஜேக்டோ- ஜீயோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஜேக்டோ ஜியோ போரட்டத்தில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள் மீது அரசு எடுத்துள்ள பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக இரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.
2. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வேண்டும்.
3. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையை 30.11.2017க்குள் தவறாமல் பெற்று பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திடவேண்டும்.
4. இதுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படாத சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் போன்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
5. 8வது ஊதியக்குழுவில் வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. 24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில் மாபெரும் கோரிகை ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் லட்சக்கனக்கான ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 1.12.2017 அன்று நடைபெற உள்ள ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
பாஜக மோடி 2011 : உங்களுக்கெல்லாம் அசிங்கமே இல்லையா...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருக்கும் போது கவர்னர் எப்படி அதிகாரிகளை அழைத்து அதிகாரம் செய்யலாம் ? மத்திய அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறிய மத்திய அரசாட்சியை கவர்னர் மூலம் நடத்த முயல்வது அசிங்கம் சொன்னது மோடி ஆண்டு 2011..
http://www.thehindu.com/news/national/beniwal-helping-congress-run-parallel-government-in-gujarat-says-modi/article2484805.ece
பாஜக-வோடு பாமக கூட்டணிக்கு போயிடுவாங்களோனு சீமான் கேள்வி எழுப்பியதில் என்னடா தப்பு? ஏற்கனவே நீங்க கூட்டணி வைத்தவர்கள் தானே? - அண்ணன் சீமான் ரசிகர்களின் கேள்வி..
வரும் தேர்தலில் நாதக தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவை ஆதரித்து மேடைதோறும் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என ஓட்டு கேட்டு பரப்புரை செய்வார்கள். ஏனென்றால் ஏற்கனவே அதுபோல காசுவாங்கி கொண்டு பிரச்சாரம் செய்தவர் தானே நாதக..
ரசிகர்கள் : அப்போது சீமான் அதிமுகவை ஆதரித்தது ஏன் தெரியுமா? திமுக அரசை அடியோடு ஒழிக்கனும் என்று தான்.
ஆமா பாமகவும் தமிழீழத்தை அழித்து ஒழித்த காங்கிரசை ஒழிக்க தான் பாஜகவோடு கூட்டணி வைத்தோம். அது என்னடா நீங்க செய்யறத மட்டும் நியாயப்படுத்துறிங்க?
ரசிகர்கள் : சீமான் திராவிடம் மற்றும் பாஜகவோடு கூட்டணி வைக்க மாட்டோம்னு மேடையில் சத்தியம் செய்திருக்கிறார்.
ஈழப்பெண்ணை தான் திருமணம் செய்துக் கொள்வேன்னு கூடத்தான் மேடையில் சத்தியம் செய்தார். ஆனா தெலுங்கர் கயல்விழியை தானே கட்டிக்கிட்டார்..
பாமக தமிழராக தனித்து நிற்கும் போதெல்லாம் பெரியாரின் பேரனாக திமுக - அதிமுக வுக்காக கருப்புச் சட்டை போட்டு பிரச்சாரம் செய்தவர் தானே உங்க அண்ணன் சீமான்..
திராவிடத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி கொண்டு.. வளர்ந்துள்ள தமிழர் கட்சியான பாமக வை தானே எதிர்த்துக் கொண்டிருக்கிறார் உங்க அண்ணன் சீமான்...
மேடையில் மட்டுமே பேசி பேசி கல்லா கட்டாமல்.. ஆக்கப் பூர்வமாக தமிழர்களுக்கு எதாவது நன்மைகளை செய்ய சொல்லுங்கள் உங்க அண்ணன் சீமானை...
அதன் பிறகு பாமக வை குறை சொல்லலாம்...
ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 14...
உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று இடம்பெறும் தீர்க்க தரிசனம் 14-ம் பகுதியாகும். இந்த 14-ம் தீர்க்க தரிசனம் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.
32-ம் தீர்க்க தரிசனமான நமது ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இடம் பெற்றுள்ள முக்கிய நிகழ்வு ஒன்று தற்போது தமிழகத்தில் கால தாமதமின்றி நடைபெறும் என்றும், அப்பொழுது பொள்ளாச்சி பகுதியில் பூமி சம்பந்தப்பட்ட திரட்டு ஒன்று வெளிவரும் என்றும், இதனால் தமிழகத்திற்கு வர உள்ள பேராபத்து ஒன்றின் அறிகுறியாக இதனை கருத வேண்டும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
தற்சமயம் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்றும், அமைச்சரவையில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படும் சம்பவம் ஒன்று விரைந்து நடக்க இருப்பதாகவும் 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
பூமி சம்பந்தப்பட்ட பேரதிர்வு சம்பவம் ஒன்று வடமாநிலத்தின் தென்பகுதியில் தற்போது நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்களின் மரண நிகழ்வு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும், இது நிகழ்வதற்கு முன் குஜராத்தில் மழைநீரால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஒன்று நடைபெற உள்ளதாக 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
காலஞ்சென்ற தமிழக முதல்வர் பற்றிய இரகசியம் ஒன்று தற்போது கசிய இருப்பதாகவும், இதனை மூத்த அரசியல்வாதி ஒருவர் பகிரங்கமாக வெளியிடுவார் என்றும், இதற்கு தமிழக நடிகர் ஒருவர் முக்கிய காரணமாக இருப்பார் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி இனி மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்றும், அதற்கான துவக்க காலமாக இக்காலம் இருக்கும் என்றும், தேவச் செய்தி ஒன்றை கிறிஸ்துவ சபை ஒன்று தமிழகத்தில் வெளியிடும் நிகழ்வு தற்போது நிகழ உள்ளதாக 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
தமிழகம் மழையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என்றும், மக்கள் தற்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் ஒரு எச்சரிக்கை குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.
தமிழக காவல்துறையில் பல மாற்றங்களை தமிழக அரசு மேற்க்கொள்ளும் என்றும், இதற்கு நீதித்துறையிலிருந்து பல கண்டனங்கள் எழும் என்றும், அச்சமயத்தில் தமிழகத்தில் மக்கள் மத்தியில் பல சலசலப்புகள் உருவாகும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
அமெரிக்க தென்பிராந்திய மாகாணம் ஒன்றில் பெரிய அழிவுச் சம்பவம் ஒன்று தற்போது நிகழப் போகிறது என்றும், அது உள்நாட்டில் உள்ள சிலரால் திட்டமிட்டு நடத்த இருப்பதாக 14-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு தருகின்றது.
பாபிலோன் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நிலப்பரப்பு என்றும், இப்பகுதியில் நடைபெறும் சிறு, சிறு சம்பவங்களை மக்கள் அரசு கவனிக்க வேண்டும் என்றும், இல்லையேல் சுயதோன்றிகளாக பலர் தற்போது அதிகாரத்திற்கு வரும் சம்பவங்கள் தற்சமயம் நடக்க கூடும் என 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
பெங்களுர் நகரப்பகுதியில் திடீரென்று ஒரு சம்பவம் நடக்கும் என்றும், இது நடந்து முடிந்த 9-ம் நாளில் இதே போன்று ஒரு சம்பவம் ஆந்திராவில் நடக்கும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இறைவனின் பிரவேசம் இப்பூமியில் தற்போது நிகழும் காலமாக இருப்பினும் அவரைப் பற்றி முழுமையாக மக்கள் அறியும் காலமாக வரும் 2018 ஜுன் மாதம் இருக்கும் என 14-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.
மனித வாழ்க்கை என்பது தான் சார்ந்துள்ள சமுதாயம் மட்டும் அல்ல, தான் சார்ந்திராத பல சமூக அமைப்புகள் அதற்கு காரணமாக இருப்பதை மக்கள் சமூகம் என்று ஏற்றுக் கொள்கிறதோ அன்றே மக்கள் மத்தியில் ஒரு இணக்கமான நட்பு தோன்றி வளர ஆரம்பித்து விடும். அந்தவகையில் உலகம் தழுவிய அளவில் ஒரு அமைப்பு ஒரு ஆன்மீகச் செய்தியினை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் என்றும், அச்சமயத்தில் அனைத்து சமூக அமைப்பை சார்ந்தவர்களும் அப்பொழுது ஒன்றிணைவார்கள் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கே தருகின்றது.
உண்மைகள் உறங்குவதில்லை என்ற வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 5-ம் தீர்க்க தரிசனப் பகுதியிலிருந்து ஒரு முக்கிய நிகழ்வு வரும் காலத்தில் அதாவது இன்னும் ஒரிரு மாதத்தில் மிகப்பெரிய அளவில் நடக்க இருப்பதாக 14-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
புனர்ஜென்ம கணக்கு ஒன்று இப்பூமியில் தற்போது திரும்பிப் பார்க்கப்பட உள்ளது என்றும், அதற்கான நிகழ்வு ஆன்மீக குடில் ஒன்றில் நடைபெற இருப்பதாகவும், அதில் “கல்கி“ பற்றிய குறிப்புச் செய்தியினை அடுத்த வாரத்தில் அச்சபை வெளியிடும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது. அதனை காண அதுவரை காத்திருப்போம்.
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...
Subscribe to:
Posts (Atom)