09/01/2019

உயரமாக வளர... உட்கொள்ள வேண்டிய உணவுகள்...


உயரப் பிரச்சனை இருப்பதற்கு உடலில் உள்ள உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் ஹார்மோனின் அளவு மிகவும் குறைவாக இருப்பது காரணமாகும்.

மேலும் உடலில் போதிய புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது.

இதற்கு ஒரு சில உணவுகளை உண்டால் உடல் உயரம் அதிகரிக்கும்.

ஆனால் அந்த சத்துக்களை உடலில் செலுத்துவதற்கு ஒரே முறை உணவு தான். ஆகவே அத்தகைய புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடலில் உள்ள உயரத்தை அதிகரிக்கும் ஹார்மோனின் அளவை அதிகரிப்போம்.

இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா...

வைட்டமின் ஏ : வைட்டமின் ஏ சத்து உடலில் உள்ள எலும்புகளில் கால்சியத்தை தங்க வைத்து, எலும்புகளுக்கு வலுவை தருகிறது. மேலும் வைட்டமின் ஏ உணவுகள் பார்வை குறைபாட்டை சரிசெய்து, சருமத்தை அழகாக்குகிறது. இதற்கு கீரைகள், பீட்ரூட், கேரட், பப்பாளி, தக்காளி, ஆப்ரிக்காட் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக தக்காளி, கேரட், பீட்ரூட்டை அடிக்கடி ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.

புரோட்டீன் : புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள பழுதடைந்த திசுக்கள் சரியாவதோடு, புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது. மேலும் புரோட்டீன் உணவுகளில் அமினோ ஆசிட் அதிகம் இருப்பதால், உடலில் சரியான வளர்ச்சி கிடைக்கும். ஆகவே அதற்கு புரோட்டீன் உணவுகளான பால், சீஸ், மீன், சிக்கன், ஓட்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

வைட்டமின் டி : உயரமாவதற்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியமானது. ஆகவே வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையவதோடு, வலுவடையவும். எனவே வைட்டமின் டி நிறைந்த உணவுகளான காளான், மீன், தானியங்கள், முட்டை, சோயா பால் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

கால்சியம் : எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த சத்து தான் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருக்கிறது. ஆகவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் மற்றும் முட்டை போன்றவற்றை தினமும் சாப்பிட்டால், உடல் உயரம் அதிகரிக்கும். மேலும் இந்த உணவுகள் நன்கு சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும்

கனிமச்சத்து : கனிமச்சத்துக்கள் எலும்பு திசுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஆகவே உடல் உயரத்தை இயற்கையாக அதிகரிக்க கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளான பச்சை பட்டாணி, பிராக்கோலி, கீரைகள், முட்டைகோஸ், பூசணிக்காய், கேரட், பருப்பு வகைகள், வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்...

தமிழர் பெருமைகள்...


பேன்சி கடையில் புகுந்து பெண் சரமாரி குத்தி கொலை.. கள்ளக்காதலன் வெறிச்செயல்...


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம், கருக்கஞ்சாவடியில் வசித்தவர் செல்வி. இவரது கணவர் முனியப்பன். இவர்களுக்கு அவருக்கு 14 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துச் செய்த செல்வி தனியாக வசித்து வந்தார்.  குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

தினமும் பணிக்குச் செல்லும்போது அதே பகுதியில் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றும் தௌலத் என்பவருடன் கடந்த இரண்டு வருடமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த பழக்கம் நாளடைவில் தனிமையில் இருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. செல்வியின் பணத்தேவைகளுக்காக தௌலத் அவ்வப்போது பணம் கொடுப்பதுண்டு.

இந்நிலையில் மாலை 4 மணி அளவில் செல்வி வேலை செய்யும் கடைக்கு தௌலத் வந்துள்ளார். கடையில் செல்வி மட்டும் இருப்பதை அறிந்து அங்கு வந்த தௌலத் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் திடீரென  அங்கிருந்த  கத்தியால் செல்வியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் செல்வி அலறவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் தௌலத் தப்பி ஓடிவிட்டார்.

கத்தியால் குத்துப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி போலீஸார் செல்வியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தப்பி ஓடிய தௌலத் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தான் காவேரிப்பட்டினத்தில்  வசிப்பதாகவும்,  கிருஷ்ணகிரியில் துணி கடையில் வேலை செய்வதாகவும்,  கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வியுடன் பழக்கம் ஏற்பட்டு தொடர்பில் உள்ளதாக கூறியுள்ளார்.

அவ்வப்போது செல்விக்கு பணம் உதவி செய்து வந்த நிலையில் இன்று தனக்கு 2000 பணம் தேவைப்படுவதாக செல்வி கேட்டதை அடுத்து தான் பணம் கொடுப்பதற்க்காக செல்வி பணி புரியும் கடைக்கு வந்ததாகவும், அப்போது செல்வி வேறு ஒரு ஆணுடன் செல்போன் பேசிகொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அது தொடர்பாக கேட்டதை அடுத்து தங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதனால் ஆத்திரம் அடைந்த தான் கடையில் இருந்த கத்தியை எடுத்து செல்வியை சரமாரியாக குத்தியதாகவும்  செல்வி உயிரிழந்ததை அடுத்து தான் போலீஸில் சரணடைந்ததாக தெரிவித்துள்ளார்...

தமிழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்கள் - அண்ணன் சீமான்...


கன்னட ஈ.வே.ரா எதிர்த்தது தமிழர்களான பார்ப்பனரையே.. மாற்றினத்தாரான பிராமணரை அல்ல...


உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்.

மறந்தும் உங்கள் வாயில் ‘பிராமணன்’ என்று வரக் கூடாது.

‘பார்ப்பான்’ என்று கூறுங்கள்.

கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது.

- ஈ.வே.ரா (விடுதலை 30.06.1957)...

ஜனவரி 22-ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் - உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு...


உளவியல் சொல்லும் உண்மைகள்...


1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்...

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்....

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..

3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்..

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்..

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்..

6. பேசும் போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்..

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்..

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்..

தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்...

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை..

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்..

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

அயோடின் உப்பில் சேர்க்க அவசியம் என்ன.?


புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் - தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு...


மத்திய அரசு இதுவரை கட்டியுள்ள மொத்த புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் = 567

இதில் தமிழகத்தில் கட்டப்பட்டவை = 0

ஆம். இது உண்மை.

ஒரிசா = 312
ஆந்திரா = 218
குஜராத் = 22
மேற்கு வங்கம் = 15

என பிற மாநிலங்களில் கட்டப்பட்டவையுடன் ஒப்பிடும்போது தமிழகத்தைத் திட்டமிட்டு புறக்கணித்திருப்பது புரிகிறது.

இதுமட்டுமல்ல.

இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் 353.

மாநில வாரியாக கீழ் வருமாறு,

மேற்கு வங்கம் = 150
குஜராத் = 112
கோவா = 40
கேரளா = 27
கர்நாடகா = 11
மகாராஷ்டிரா = 13
தமிழகம் = 0

தகவல்களுக்கு நன்றி:
விகடன் செய்தி
02.12.2018

மேற்கண்ட இரு பட்டியல்களில் புயலையே பார்க்காத மாநிலங்கள் கூட  உண்டு.

பிற மாநிலங்களை விட வரி என்கிற பெயரில் அதிகம் கொள்ளை போவது தமிழக பொருளாதாரம்.

ஆனால் தமிழகத்தை மட்டும் தவிர்த்துவிட்டு நடுவணரசு உலக வங்கியின் நிதியுதவியுடன் பாதுகாப்பு கட்டிடங்கள் கட்டி அதற்கு சாலைகளும் போட்டு தருகிறது.

நீலம், வர்தா, ஒகி, கஜா என வரிசையாக புயல் தாக்குவதோ தமிழகத்தை.

ஆனால் பாதுகாப்பாக இருப்பது மற்ற மாநிலங்கள்.

தமிழர்களின் உயிருக்கே இங்கு மதிப்பில்லை.

இது இனப்படுகொலை அன்றி வேறென்ன?

மராட்டிய ரஜினி vs கன்னட கமல்...


திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக விரோதம்...


இன்றைக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருகிற நிலையில் தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக இந்த முடிவு எடுத்தது ஏன்?

மத்திய அரசு காரணமா? அல்லது மாநில அரசா?

தேர்தல் அறிவிக்கும் போது கஜா நிவாரண நடைமுறை தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா?

அப்படி என்றால் அது என்ன தலைமை தேர்தல் கமிஷன்?

இன்று சுப்ரீம் கோர்ட்டில் 3 வழக்குகள் வருகின்றன. கோர்ட் தடை விதிக்காது என்று தேர்தல் ஆணையம் பயந்து இருக்கிறது.

எனவே தான் அது தன்னிச்சையாக தேர்தலை ரத்து செய்து அறிவித்திருக்கிறது.

ஆணையத்தை நம்பி டெபாசிட் பணம் கட்டிய சாமான்யர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது.

இப்படிப்பட்ட ஒரு ஜனநாயகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே அவமானம் தான்...

தினமலர் எனும் தமிழர் விரோத பத்திரிகை கலாட்டா...


குடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி...


உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு,

வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல்,

சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன.

அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.

அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன.

நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்சு(ஸ்) மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன.

இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரசு போன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன.

யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்...

ஆதார் எனும் பேராபத்து...


சிரிப்பு...


எல்லா வித பிரிவினைகளையும் உங்கள் மனது மட்டுமே பார்க்கிறது..

நீங்கள் அல்ல..

அதனால் மனதை ரசியுங்கள் சிரிப்புடன்..

ரசிப்பும் சிரிப்பும் தான் தேடலின் கவிதையாக வருகிறது...

ஈர்ப்பு விதியைப் பற்றி விஜய் சேதுபதி...


நேரம்...


நேரம் பின்னால் நீங்கள்  ஓடாதீர்கள்..

நேரத்தை உங்கள்  பின்னால் ஓட வையுங்கள்...

உங்களுக்கு ஏற்றார் போல் தான் இந்த இயற்கை முழுவதுமே உள்ளது..

எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்
உங்கள் வாழ்வை...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


நாகரிக மனிதர்கள் எனும் ரோபோக்கள்...


படித்த நாகரிகம் கொண்ட மனிதர்களையே  மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும், மாற்றிய
மனிதர்கள்..

முன்னோர் காலத்தில் படிக்காத காடுகளில் மகிழ்ச்சியாக இயற்கையுடன்
எந்த ஓர் வழிபாடுகளும் இல்லாமல் இயற்கை   உணர்வில் மட்டுமே   வாழ்ந்த மனிதர்களை எப்படியெல்லாம் தங்கள் சுய தேவைக்கு  மாற்றி இருப்பார்கள் இந்த நாகரிக  மனிதர்கள்..

மகிழ்ச்சி இருந்தால் எந்த ஓர் வழிபாடுகளும் தேவையில்லையே...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஹொலேஷ்வர் கோவில் எனவும் அழைக்கப்படும் ஹொய்ஸ்லேஷ்வரா கோயில், 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஹலேபீடு, கர்நாடகத்தின் தலைநகரில் உள்ள ஒரு பெரிய நினைவுச்சின்னமாகும்.

இந்த கோவிலில் உள்ள சிற்பங்கள், நவீன கால விண்வெளி வீரர்களுக்கு மிகவும் ஒத்திருக்கிறது. அவர்கள் தலையை மூடிக்கொண்டிருக்கும் தலைக்கவசங்கள், கையுறைகள், தொலைநோக்கி மற்றும் ஏவுகணைகளையும் வைத்துள்ளனர். ஆனால் இந்த செதுக்குதல் 900 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிப்பது மட்டுமல்ல.

இரண்டு வகையான தெய்வங்களுக்கிடையில் நடந்த ஒரு போரின் காட்சியை அது சித்தரிக்கிறது. இதில் இடது பக்கத்தில் மனித இனத்தின் கடவுள் (தேவர்கள்)என்று அழைக்கப்படுபவர்களையும், வலது பக்கத்தில் வேற்றுக்கிரகவாசிகள் (அசுரர்கள்) என்று அழைக்கப்படும் கடவுளர்களை நீங்கள் காணலாம். இந்த தெய்வங்கள் முற்றிலும் வேறுபட்ட முக அம்சங்கள், தலைக்கவசங்கள், கையுறைகள் மற்றும் ஆயுதங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

பண்டைய இந்திய நூல்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கடவுள்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வானத்திலிருந்து இறங்கி வந்தவர்கள், என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றன. கடவுளின் இந்த இரண்டு இனங்கள். பழங்கால இந்து நூல்களில் மட்டும் விவரிக்கப்படவில்லை, பூர்வ ஈரானில் தோன்றிய இன்னுமொரு பண்டைய சமயத்தில், ஜோரோஸ்ட்ரிய நூல்களில் ஒரே தெய்வங்கள் சிறிய வேறுபாடுகளுடன் சித்தரிக்கப்படுகின்றன.

இந்த இரண்டு மதங்களுமே தேவாஸ் என்று தேவர்களையும் குறிப்பிடப்படுகிறார்கள், அசுரர்கள் ஜொராஸ்டிரியஸில் அஹூராஸ் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இந்த மத நூல்கள் வெறுமனே கற்பனை கதைகள் என்று கூறிவிட முடியாது, இந்த இரண்டு பண்டைய மதங்கள் ஆயிரக்கணக்கான மைல்களால் பிரிக்கப்பட்டிருக்கிறது, மேலும் கடவுளின் இந்த இரண்டு இனங்கள் துல்லியமாக சித்தரிப்பதையும், காணமுடியுகிறது. இந்த தேவர்கள் மற்ற கிரகங்களிலிருந்து வந்ததாக பண்டைய இந்த இரு மத நூல்களும் தெளிவாகக் கூறுகின்றன.

சரி இந்த சிற்பங்களில் காணப்படும் தொலைநோக்கிகள். நட்சத்திரங்களையும் கிரகங்களையும் கவனிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதா? என்றால் இல்லை. இந்த செதுக்கல் காட்சியை நீங்கள் பார்த்தால், இது ஒரு போர்க்களமாகும். தேவர்கள் எல்லோரும் கேடயங்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அவர்களின் கால்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் தங்களின் தந்திரோபாய அமைப்பைக் காட்டும் விதத்தில் சரியாக அமைந்திருப்பதை நீங்கள் காணலாம்.

ஆனால்  போர்க்களத்தில் தொலைநோக்கி ஏன் தேவை? இங்கே ஒரு தலைவன் ஒரு தேரில் காட்டப்படுகிறான். அவன் தேவா சாதனம் போன்ற ஒரு கம்பி வைத்திருப்பதைக் காணலாம், இது பல ஏவுகணைகளை போன்று உள்ளது. மேலும் இது பல ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வெளியிடுவது போன்று உள்ளது. மீண்டும், இந்த ஏவுகணைகளின் சிறப்பங்களை நீங்கள் ஒப்பிட்டு பார்த்தால் புரியும்.

உண்மையில், இந்த சிற்பங்கள் வெறுமனே அம்புகள் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர், இருப்பினும் இங்கே காட்டப்பட்டுள்ள, வேற்றுலக கடவுளர்கள் வைத்திருப்பது தெளிவாக அம்புகள் இல்லை என்று நிரூபிக்கின்றன. அம்புகள் நீளமாகவும் பயணிக்க மெல்லியதாகவும் இருக்க வேண்டும், ஆனால் இந்த அம்புகள் மிகவும் அடர்த்தியாக இருக்கின்றன. மேலும் இந்த சிற்பங்களில் உள்ள அம்புகள் சுட்டிக்காட்டப்பட்ட விளிம்பில் இல்லை, அவை நவீன கால ஏவுகணை போன்ற வட்டமான தலை கொண்டிருக்கிறது.

ஏவுகணைகளின் வலதுபுறத்தில், அசுரர்களை நாம் பார்க்கலாம். நிச்சயமாக, இந்த இரண்டு படைகள் இடையே உண்மையான இடைவெளி குறைக்கப்பட்டது, ஏனெனில் ஒரு செதுக்குவதில் உண்மையான தூரம் காட்ட வழி இல்லை. ஆயுதங்களைப் பற்றி நாம் புரிந்து கொள்ளும்போது, இந்த தேவர்கள் ஒரு தொலைநோக்கி பயன்படுத்துவதை புரிந்து கொள்ள, இந்த கடவுளர்கள் வாள்களாலும் ஈட்டிகளாலும் சண்டையிடவில்லை, அவர்கள் போரில் ஏவுகணைகள் மற்றும் வான் தாக்குதல்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே, அவர்கள் ஒரு தொலைநோக்கி கொண்டே ஏவுகணைகளை மற்றும் விமானங்களை பார்க்க முடியும்.

இறுதியாக இந்த சிற்பங்கள் உண்மையிலேயே, இந்த கிரகத்தை கைப்பற்ற இரு வானுலக கடவுளர்களுக்கு இடையேயான போரைத்தான் குறிப்பிடுகிறது. மேலும் முன்பே கூறியதுபோல, நாம் வரலாறு என்று நம்பிக்கொண்டிருப்பவைகள், உண்மையில் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக தான் உள்ளது...

இன்னும் நாங்கள் கூறும் உலக வல்லாதிக்க வணிகர்களை நம்பாதவர்களுக்கு இந்த பதிவு...


குழந்தை ஏன்டி எனது சாயலில் இல்லை.. அரக்கனாக மாறிய தந்தையின் கொடூர செயல்...


திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

பெட்டிக்கடை வைத்திருக்கும் கார்த்திகேயனுக்கு மனைவியின் நடத்தை  மீது சந்தேகம் இருந்தது. இதனால் திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி கருத்தரித்து எப்படிஎன்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், குழந்தை பெற்ற பின்னர் ராஜேஸ்வரி கொழுந்தம்பட்டில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து காம்பாட்டு கிராமத்திற்கு சென்றார். வழக்கம் போல மனைவியுடன் சண்டை போட்ட கார்த்திகேயன், குழந்தை தனது சாயலில் இல்லை என்று தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு கார்த்திகேயன் தனது குழந்தையை அரிவாளால் தலையில் வெட்டினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

அவர்கள் வருவதற்குள் கார்த்திகேயன் குழந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார். கொடூர தந்தை கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்...

நெஞ்சு வலி குணமாக...


பிரபஞ்ச இரகசியம்...


புத்துணர்ச்சி பெற.. கவலைகள் நீங்க...

1.உங்களுக்கு நீங்களே இவ்வாறு கூறிக் கொள்ளுங்கள்..

கவலை என்பது வெறும் மனப்பழக்கம் தான்.

பிரபஞ்சத்தின் உதவியுடன் எந்தப் பழக்கத்தையும் என்னால் மாற்ற முடியும்.

2.கவலையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கவலையாளர் ஆகி விடுகிறீர்கள்..

கவலைக்கு நேரெதிரான, வலிமையான, நம்பிக்கை என்னும் பழக்கத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம் உங்களால் கவலையில் இருந்து விடுபட முடியும்.

3.உங்களால் திரட்டக் கூடிய விசுவாசத்தைக் கடைப்பிடிக்கத் துவங்குங்கள்..

விசுவாசம் என்னும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

தினமும் படுக்கையைவிட்டு எழுவதற்கு முன் முதல் வேலையாக.. நான் நம்புகிறேன் என்று உரக்க மூன்று முறை கூறுங்கள்.

4. இந்தச் சூத்திரத்தைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்..

நான் இன்றைய தினத்தையும், என் வாழ்க்கையையும், என் அன்பிற்கு உரியவர்களையும், என் வேலையையும் பிரபஞ்சத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்.

பிரபஞ்சத்தின் கைகளில் எந்தத் தீங்கும் இல்லை.

நல்லது மட்டுமே உள்ளது.

எது நிகழ்ந்தாலும் சரி,

அது இயற்கையின் விருப்பம்.

அது நல்லதாகவே இருக்கும்.

5.நேர் மறையாகப் பேசுவதற்குப் பயிற்சி செய்யுங்கள்...

இன்று மிக மோசமான நாளாக இருக்கப் போகிறது என்று கூறாதீர்கள்.

மாறாக இன்று ஓர் அற்புதமான நாளாக அமையப் போகிறது என்று சுய பிரகடனம் செய்யுங்கள்.

என்னால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது என்று கூறாதீர்கள்.

மாறாக இயற்கை சக்தியின் உதவியுடன் நான் அதைச் செய்வேன் என்று சுயபிரகடனம் செய்யுங்கள்.

6.கவலை பற்றிய உரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ளாதீர்கள்...

அனைத்து உரையாடல்களிலும் நம்பிக்கையைப் புகுத்துங்கள்.

மோசமான விஷயங்களுக்கு மாறாக உற்சாகமூட்டும் விஷயங்களைப் பற்றி பேசுவதன் மூலம் மனச்சோர்வூட்டும் சூழலை விரட்டி விட்டு, அனைவரும் நம்பிக்கை யையும் மகிழ்ச்சியையும் உணர உங்களால் உதவ முடியும்.

7. கவலையாளராக இருப்பதற்கு ஒரு காரணம்.. மனம் பய எண்ணங்களாலும், தோல்வி எண்ணங் களாலும், சோர்வூட்டும் எண்ணங்களாலும் நிரம்பி வழிவது தான்...

அதை முறிப்பதற்கு, நம்பிக்கை, மகிழ்ச்சி, புகழ், பொலிவு ஆகியவற்றைப் பற்றிய பகுதிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்து மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

அவற்றை மீண்டும் மீண்டும் கூறி வாருங்கள். அப்போது, நீங்கள் உங்கள் ஆழ் மனத்திற்குக் கொடுத்துள்ள தன்னம்பிக்கையை உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.

8.நம்பிக்கையான மக்களிடம் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

நேர்மறையான, விசுவாசத்தை உருவாக்கும் எண்ணங்களைச் சிந்திக்கும் படைப்புச் சூழல் உருவாவதற்குப் பங்களிக்கும் நண்பர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்

இது நம்பிக்கை மனப்போக்கை மீண்டும் தூண்டும்.

9. தங்கள் சொந்தக் கவலைப் பழக்கத்தை விட்டொழிக்க...

உங்களால் எத்தனை பேருக்கு உதவ முடியும் என்று பாருங்கள்.

மற்றவர்கள் தங்கள் கவலைகளில் இருந்து மீள்வதற்கு நீங்கள் அதிக  சக்தியைப் பெறுவீர்கள்.

10.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் கடவுளின் கூட்டாளியாகவும், நண்பனாகவும் வாழ்வதாகக் கற்பனை செய்யுங்கள்...

கடவுள் உண்மையிலேயே உங்களோடு நடந்து வந்தால், நீங்கள் கவலைப்படுவீர்களா? பயப்படுவீர்களா?

கடவுள் என்னோடு இருக்கிறார் என்று கூறுங்கள்.

நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன் என்று சத்தமாக சுயபிரகடனம் செய்யுங்கள்.

பிறகு அதை மாற்றி நீ இப்போது என்னோடு இருக்கிறாய் என்று கூறுங்கள். தினமும் அந்த சுய பிரகடனத்தை  மூன்று முறை கூறுங்கள்.

உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்...