ஹொலேஷ்வர் கோவில் எனவும் அழைக்கப்படும் ஹொய்ஸ்லேஷ்வரா கோயில், 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஹலேபீடு, கர்நாடகத்தின் தலைநகரில் உள்ள ஒரு பெரிய நினைவுச்சின்னமாகும்.
இந்த கோவிலில் உள்ள சிற்பங்கள், நவீன கால விண்வெளி வீரர்களுக்கு மிகவும் ஒத்திருக்கிறது. அவர்கள் தலையை மூடிக்கொண்டிருக்கும் தலைக்கவசங்கள், கையுறைகள், தொலைநோக்கி மற்றும் ஏவுகணைகளையும் வைத்துள்ளனர். ஆனால் இந்த செதுக்குதல் 900 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிப்பது மட்டுமல்ல.
இரண்டு வகையான தெய்வங்களுக்கிடையில் நடந்த ஒரு போரின் காட்சியை அது சித்தரிக்கிறது. இதில் இடது பக்கத்தில் மனித இனத்தின் கடவுள் (தேவர்கள்)என்று அழைக்கப்படுபவர்களையும், வலது பக்கத்தில் வேற்றுக்கிரகவாசிகள் (அசுரர்கள்) என்று அழைக்கப்படும் கடவுளர்களை நீங்கள் காணலாம். இந்த தெய்வங்கள் முற்றிலும் வேறுபட்ட முக அம்சங்கள், தலைக்கவசங்கள், கையுறைகள் மற்றும் ஆயுதங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
பண்டைய இந்திய நூல்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கடவுள்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வானத்திலிருந்து இறங்கி வந்தவர்கள், என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றன. கடவுளின் இந்த இரண்டு இனங்கள். பழங்கால இந்து நூல்களில் மட்டும் விவரிக்கப்படவில்லை, பூர்வ ஈரானில் தோன்றிய இன்னுமொரு பண்டைய சமயத்தில், ஜோரோஸ்ட்ரிய நூல்களில் ஒரே தெய்வங்கள் சிறிய வேறுபாடுகளுடன் சித்தரிக்கப்படுகின்றன.
இந்த இரண்டு மதங்களுமே தேவாஸ் என்று தேவர்களையும் குறிப்பிடப்படுகிறார்கள், அசுரர்கள் ஜொராஸ்டிரியஸில் அஹூராஸ் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இந்த மத நூல்கள் வெறுமனே கற்பனை கதைகள் என்று கூறிவிட முடியாது, இந்த இரண்டு பண்டைய மதங்கள் ஆயிரக்கணக்கான மைல்களால் பிரிக்கப்பட்டிருக்கிறது, மேலும் கடவுளின் இந்த இரண்டு இனங்கள் துல்லியமாக சித்தரிப்பதையும், காணமுடியுகிறது. இந்த தேவர்கள் மற்ற கிரகங்களிலிருந்து வந்ததாக பண்டைய இந்த இரு மத நூல்களும் தெளிவாகக் கூறுகின்றன.
சரி இந்த சிற்பங்களில் காணப்படும் தொலைநோக்கிகள். நட்சத்திரங்களையும் கிரகங்களையும் கவனிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதா? என்றால் இல்லை. இந்த செதுக்கல் காட்சியை நீங்கள் பார்த்தால், இது ஒரு போர்க்களமாகும். தேவர்கள் எல்லோரும் கேடயங்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அவர்களின் கால்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் தங்களின் தந்திரோபாய அமைப்பைக் காட்டும் விதத்தில் சரியாக அமைந்திருப்பதை நீங்கள் காணலாம்.
ஆனால் போர்க்களத்தில் தொலைநோக்கி ஏன் தேவை? இங்கே ஒரு தலைவன் ஒரு தேரில் காட்டப்படுகிறான். அவன் தேவா சாதனம் போன்ற ஒரு கம்பி வைத்திருப்பதைக் காணலாம், இது பல ஏவுகணைகளை போன்று உள்ளது. மேலும் இது பல ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வெளியிடுவது போன்று உள்ளது. மீண்டும், இந்த ஏவுகணைகளின் சிறப்பங்களை நீங்கள் ஒப்பிட்டு பார்த்தால் புரியும்.
உண்மையில், இந்த சிற்பங்கள் வெறுமனே அம்புகள் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர், இருப்பினும் இங்கே காட்டப்பட்டுள்ள, வேற்றுலக கடவுளர்கள் வைத்திருப்பது தெளிவாக அம்புகள் இல்லை என்று நிரூபிக்கின்றன. அம்புகள் நீளமாகவும் பயணிக்க மெல்லியதாகவும் இருக்க வேண்டும், ஆனால் இந்த அம்புகள் மிகவும் அடர்த்தியாக இருக்கின்றன. மேலும் இந்த சிற்பங்களில் உள்ள அம்புகள் சுட்டிக்காட்டப்பட்ட விளிம்பில் இல்லை, அவை நவீன கால ஏவுகணை போன்ற வட்டமான தலை கொண்டிருக்கிறது.
ஏவுகணைகளின் வலதுபுறத்தில், அசுரர்களை நாம் பார்க்கலாம். நிச்சயமாக, இந்த இரண்டு படைகள் இடையே உண்மையான இடைவெளி குறைக்கப்பட்டது, ஏனெனில் ஒரு செதுக்குவதில் உண்மையான தூரம் காட்ட வழி இல்லை. ஆயுதங்களைப் பற்றி நாம் புரிந்து கொள்ளும்போது, இந்த தேவர்கள் ஒரு தொலைநோக்கி பயன்படுத்துவதை புரிந்து கொள்ள, இந்த கடவுளர்கள் வாள்களாலும் ஈட்டிகளாலும் சண்டையிடவில்லை, அவர்கள் போரில் ஏவுகணைகள் மற்றும் வான் தாக்குதல்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே, அவர்கள் ஒரு தொலைநோக்கி கொண்டே ஏவுகணைகளை மற்றும் விமானங்களை பார்க்க முடியும்.
இறுதியாக இந்த சிற்பங்கள் உண்மையிலேயே, இந்த கிரகத்தை கைப்பற்ற இரு வானுலக கடவுளர்களுக்கு இடையேயான போரைத்தான் குறிப்பிடுகிறது. மேலும் முன்பே கூறியதுபோல, நாம் வரலாறு என்று நம்பிக்கொண்டிருப்பவைகள், உண்மையில் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக தான் உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.