கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம், கருக்கஞ்சாவடியில் வசித்தவர் செல்வி. இவரது கணவர் முனியப்பன். இவர்களுக்கு அவருக்கு 14 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துச் செய்த செல்வி தனியாக வசித்து வந்தார். குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
தினமும் பணிக்குச் செல்லும்போது அதே பகுதியில் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றும் தௌலத் என்பவருடன் கடந்த இரண்டு வருடமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தனிமையில் இருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. செல்வியின் பணத்தேவைகளுக்காக தௌலத் அவ்வப்போது பணம் கொடுப்பதுண்டு.
இந்நிலையில் மாலை 4 மணி அளவில் செல்வி வேலை செய்யும் கடைக்கு தௌலத் வந்துள்ளார். கடையில் செல்வி மட்டும் இருப்பதை அறிந்து அங்கு வந்த தௌலத் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் திடீரென அங்கிருந்த கத்தியால் செல்வியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் செல்வி அலறவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் தௌலத் தப்பி ஓடிவிட்டார்.
கத்தியால் குத்துப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி போலீஸார் செல்வியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தப்பி ஓடிய தௌலத் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தான் காவேரிப்பட்டினத்தில் வசிப்பதாகவும், கிருஷ்ணகிரியில் துணி கடையில் வேலை செய்வதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வியுடன் பழக்கம் ஏற்பட்டு தொடர்பில் உள்ளதாக கூறியுள்ளார்.
அவ்வப்போது செல்விக்கு பணம் உதவி செய்து வந்த நிலையில் இன்று தனக்கு 2000 பணம் தேவைப்படுவதாக செல்வி கேட்டதை அடுத்து தான் பணம் கொடுப்பதற்க்காக செல்வி பணி புரியும் கடைக்கு வந்ததாகவும், அப்போது செல்வி வேறு ஒரு ஆணுடன் செல்போன் பேசிகொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அது தொடர்பாக கேட்டதை அடுத்து தங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதனால் ஆத்திரம் அடைந்த தான் கடையில் இருந்த கத்தியை எடுத்து செல்வியை சரமாரியாக குத்தியதாகவும் செல்வி உயிரிழந்ததை அடுத்து தான் போலீஸில் சரணடைந்ததாக தெரிவித்துள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.