31/05/2017

மருத்துவம் - 12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்...


Kidney Failure : கத்திரிக்காய்
Paralysis : கொத்தவரங்காய்
Insomnia : புடலங்காய்
Hernia : அரசாணிக்காய்
Cholesterol : கோவைக்காய்
Asthma : முருங்கைக்காய்
Diabetes : பீர்கங்காய்
Arthritis : தேங்காய்
Thyroid : எலுமிச்சை
High BP : வெண்டைக்காய்
Heart Failure : வாழைக்காய்
Cancer : வெண்பூசணிக்காய்

உணவு பழக்கம் பழமொழி வடிவில்...

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே.

பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா.

சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல.

தன் காயம் காக்க வெங்காயம் போதும்.

வாழை வாழ வைக்கும்.

அவசர சோறு ஆபத்து.

ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்.

இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.

ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை.

இருமலை போக்கும் வெந்தயக் கீரை.

உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி.

கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்.

குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை.

கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை.

சித்தம் தெளிய வில்வம்.

சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி.

சூட்டை தணிக்க கருணை கிழங்கு.

ஜீரண சக்திக்கு சுண்டக்காய்.

தலை வலி நீங்க முள்ளங்கி சாறு.

தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை.

பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.

மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.

வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.

வாத நோய் தடுக்க அரைக் கீரை.

வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.

பருமன் குறைய முட்டைக்கோஸ்.

பித்தம் தணிக்க நெல்லிக்காய்.

உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்.

நலம் உடன் வாழ்வோம்...

நம்ப முடியாத உண்மைகள்...


வல்லரசு கனவும் மேற்கத்திய தாக்கமும்...


2020 இல் இந்தியா வல்லரசாகி விடும்..

அப்புறம் என்ன எல்லாவற்றுக்கும் டிஜிட்டல் மயம் தான்..

இப்பவே க்ளீன் இந்தியா டிஜிட்டல் இந்தியா எல்லாம் வந்து விட்டது.

இன்னும் 3 வருசத்துல இந்தியாவை கொண்டு போய் முதலாளிகளுக்கு அடகு கொடுத்துவிட்டால் அவர்கள் ஏற்கனவே வல்லரசு கனவை உருவாக்கி மக்களை மயக்கி வைத்துள்ள வல்லரசு பட்டத்தை தந்து விடுவார்கள்.

பின்னர் என்ன விவசாயம் சுத்தமாக செத்து விடும் அதற்கு முன்னோட்டமாக தான் விவசாயிகள் சாவதை கள்ளத்தொடர்பில் சாவுறானுக என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

அய்யா சில வருடங்களுக்கு முன்பு கோழி எல்லோர் வீட்டிலும் இருக்கும் கிராமத்தில் அவைகளென்று தனி கோழி கூடைகள் இருக்கும், காலையில் சேவல் கூவியதும் கோழி கூட்டத்தை திறந்து விட்ட பின்பு..

அது பாட்டுக்கு தன் சக குஞ்சிகளுடன் செடிகொடி இடங்களில் மண்ணை கீறி கீறி இரைகளை உண்ணும், பின்பு அங்கையே அது கழிவையையும் உரமாக இட்டுவிட்டு செல்லும்..

திடீர் விருந்தாளிகள் வந்தால் கவலையே படவேண்டாம்...

கொல்லையில் உள்ள செடிகளில் இரண்டு தக்காளி கொஞ்சம் பச்சை மிளகாய் எடுத்து அம்மியில் அரைத்து மசாலா தயாரித்து ஏற்கனவே வளர்த்து வந்த கோழிகளில் ஒன்றை அறுத்து குடும்பமே உட்கார்ந்து சாப்பிட்டு உண்டு மகிழ்ந்து வந்த இனம் நாங்கள்.

அதை அப்படியே குத்தி குதறுவது போன்று அந்த கோழிகளை மட்டம் தட்ட மிகவும் லேசாக 30 ரூபாய்க்கு பிராய்லர் கோழி வந்தது, அதிலும் நம் மக்களை முட்டாளாக்காக வெள்ளை கலரில் பார்க்கும் பொழுதே தகதகன்னு இருக்கும் அமைப்பில் பிராய்லர் கோழிகளை உருவாக்கினார்கள்..

நன்றாக யோசித்து பாருங்களேன்...

பிராய்லர் கோழி உடலுக்கு மிகவும் கேடு என்று தெரிந்தும் எத்துனை பேர் நாட்டு கோழியை நாம் உண்ணுகிறோம்..

காரணம் என்ன தெரியுமா ? இது ஒரு வகையான திட்டமிட்டு காய் நகர்த்தும் காரியம்..

திரைப்படங்களில் ஆரம்பத்தில் கண்கள் காமத்தை காண்பித்தார்கள் பின்பு இரட்டை அறுத்த வசனங்கள் பின்பு முத்தம் பின்னர் உதட்டு முத்தம்..

இப்பொழுது தெளிவாக  கட்டில் ஆடுதல், முக்கல்கள் முனகல்கள் ஆபாச தழுவல்கள்..

ஆரம்பத்தில் நாம் இதை சும்மா போயிட்டு போவுது என்று விட்ட விளைவு. இன்று இதுவரை நிக்கிறது..

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்..

இன்றைய சமூக அவலங்களுக்கு  மிகப்பிரதான காரணம் இந்த சினிமா கூத்துகாரணுக்கள் தான்..

அப்படி தான் தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரம் , பண்பாடு , உணவு முறைகள் , எல்லாவற்றையையும் அழித்துவிட்டு நாம் கையேந்தி பிச்சை கேட்க வேண்டும் அயல் நாட்டவனிடம்..

இதற்காக உருவாக்கப்பட்டது தான் வல்லரசு..

உலகத்திலையே ஒரு நாடு நாட்டு மக்களுக்குகாக எவருமே செய்யாத செயலை செய்தது..

அது தண்ணீருக்காக செயற்கை பிரமாணட ஆறு ஆயிரக்கணக்கில் நீண்டு கொண்டே செல்லும் இந்த ஆறை
உருவாக்கிய மனிதர் கடாபி..

அவருடைய நாடான லிபியாவை எவனுமே வல்லரசாக அங்கீகரிக்கவில்லை.. காரணம் அவர் உலக முதலாளித்துவத்தை
கடுமையாக எதிர்த்தார்..

அமரிக்கா பல வருடம் பொருளாதார தடை விதித்த போது.. இவன் யார்  மக்களுக்கு தடை விதிப்பது என்று இங்கே விளையும் பொருட்கள் எம் விவசாயிகளுக்கு மட்டும் தான் பின்னர் தான் மத்தவனுக்கு என்று ஒலிபெருக்கியை வைத்து அமெரிக்காவுக்கு எதிராகவே இருந்தார் , அதன் விளைவு அவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார்..  

விவசாயியை சாவடித்து விட்டு வல்லராசக ஆக்குவது தான் இவனுக இலட்சியமே..

இதற்க்கு மிக தெளிவாகவே சொல்கிறேன் இன்றைய அத்துணை அரசுகளும் உடந்தை தான்..

2020 வல்லரசாக ஆக்கிவிட்டு
தக்காளிக்கு பதிலாக கையில்
தங்கத்தை வைத்து எதை தின்பீர்கள்  ?

நம் நாட்டின் இன்றைய நிலை...


நம்ப முடியாத உண்மைகள்...


இந்த வரியெல்லாம் வங்கிகளாலும் அரசாங்கத்தாலும் எப்படி பங்கு போடப்படுகிறது என்று நமக்கு வெளிப்படையாக கூறியிருக்கிறார்களா? இந்த மதிப்புகள் தோராயம் தான்...

சீமான் கலாட்டா...


அனுராதபுரம் தமிழர் மண்ணாக இருந்தது...


1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர் அங்கே ஒருவருக்கும் சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார்..

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவுசெய்துள்ளார்.

ஆனால் இன்று அனுராதபுரம் சிங்களவர் பெரும்பான்மை மண்.அருவியாற்றுக்கு அந்தப்பக்கம் இருந்த சிங்கவன் இன்று அதற்கு மறுமுனையில் உள்ள திருகோணமலை வரை எப்படி பெரும்பான்மை ஆனான்?

சிங்களவர் வதவதவென்று பிள்ளைகளைப் பெற்று தமிழர் மண்ணில் குடிபுகுந்து குடிபுகுந்து மெல்ல மெல்ல நம் நிலத்தை விழுங்கி இன்று கச்சத்தீவு வரை வந்துவிட்டனர்.

Population density map of sri lanka என்று தேடுங்கள்.

இலங்கைத் தீவில் சிங்களப்பகுதியில் மக்களுக்கு இடநெருக்கடி அளவுக்கதிமாக இருப்பதும், தமிழர் பகுதி நெருக்கடி இல்லாமல் இருப்பதும் புரியும்.

இந்த 'பெருகி குடியேறி ஆக்கிரமிக்கும்' திட்டம் அண்டை இனங்களால் கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ் மண்மீது நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.
தமிழர்கள் இனப்பெருக்கம் இயற்கையாக பெருகுகிறது.

ஆனால் நம்மைச் சுற்றியுள்ள இனங்கள் இயற்கையை முறி அளவுக்கதிகமாக இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.
ஹிந்தியர், தெலுங்கர், மலையாளி, கன்னடவர், சிங்களவர் என நம்மைச் சுற்றியுள்ள எல்லா இனங்களும் இதையே செய்கின்றன.

திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு, மைசூர், மாண்டியா, பெங்களூர், கோலார், சித்தூர், நெல்லூர், பொலநறுவை, அனுராதபுரம், புத்தளம் என இன்றைய தமிழக மாநிலத்தைப் போல பாதிஅளவு பெரிய நிலம் இவ்வாறே பறிபோனது.

தமிழகத்தில் திட்டமிட்டு குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி இன்று இந்திய ஒன்றியத்தில் மக்கட்தொகைக் குறைப்பில் முதல் மாநிலமாக ஆக்கிவிட்டனர்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அந்நியர்கள் குடிவந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஆகவே தமிழர் நிலத்தில் வந்து குடியேறும் வேற்றின வந்தேறிகள் எவருக்கும் இனி ஆதரவளிக்காதீர்கள்.

நீங்கள் இரக்கம் பார்க்கலாம் ஆனால் காலூன்றியதும் எவனும் நன்றியை நினைக்கமாட்டான்.

முக்கியமாக, குறைந்தது இரண்டு பிள்ளைகளாவது கட்டாயம் பெற்றுக் கொள்ளுங்கள்.

திண்ணை வரை கொடுத்து விட்டோம், வீட்டையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள் தமிழர்களே...

முறை கேடா அனுமதி கொடுத்தால் இப்படி தான் நடக்கும்...


பாஜக மோடியால் தமிழகம் தொடர்ந்து நசுக்கப் படுவதற்கான பெரிய உண்மை தெரியுமா?


விவசாயிகள் தமிழர்கள் தொடர்ந்து நசுக்கப்பட்ட காரணம் என்ன தெரியுமா ?

கேரளாவில் இருந்து தடையும் கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீரையும் தமிழகத்திற்கு தடுப்பதற்கு காரணம் டெல்டா பகுதி என்று சொல்ல கூடிய தஞ்சை பகுதி விவசாயம் தான்...

ஆப்பிரிக்கா தைவான் இந்தோனிஷியா போன்ற நாடுகளில் இந்திய அரிசி தான் பெரிதும் விரும்பக்கூடிய ஒன்று..

இந்திய அரிசியில் முதலிடம் வகிப்பது பஞ்சாப் மாநில அரிசிகள் இரண்டாவது இந்தியாவிலையே அதிக ஏற்றுமதி செய்யக்கூடிய அரிசியாக இருப்பது டெல்டா மாவட்டத்தின் தஞ்சை அரிசிகள் தான்..

இவைகள் மூலம்..

22 டன் பெறுமதியான ஒரு கண்டெய்னர் 75 இலட்சத்திற்கு ஏற்றுமதியாகிறது..

இது தான் கார்ப்பரேட்டுகளுக்கு உள்ளுக்குள் புழுங்கும் விஷயம் இதை விடக்கூடாது என்பதே தமிழகம் தனித்து விடுவதற்கு காரணம்..

விவசாயத்திற்கு அடிப்படை தேவை தண்ணீர்..

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீரை நிறுத்துவோம்..

பாலாற்று தண்ணீரையும் நிறுத்துவோம்.

காவேரி நீரையும் நிறுத்துவோம்...

இப்போ என்ன செய்வீங்க என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியாக இன்னுமமும் பூமியில் உள்ள தண்ணீரை எடுத்தே விவசாயம் செய்தனர் தமிழக விவசாயிகள்..

இப்போது தான் மீத்தேன் திட்டம் அதே போன்று ஹைட்ரொ கார்பேன் திட்டம் என்று பூமியில் உள்ள நீரையும் உறிஞ்சி விட்டால் நீ என்ன செய்ய முடியும் ? என்பதாக ஒரு மறைமுக போரை அரசியல் வாதிகள் மூலம் விவசாயிகளுக்கு தொடுத்து இருப்பது அந்நிய கார்ப்பரேட் தொழிலதிபர்கள்..

இன்னும் பாருங்கள் எல்லா மாநிலத்துக்கும் விவசாயி கடன் தள்ளுபடி.. ஆனால் தமிழக விவசாயி சிறுநீர் குடித்தும் நிர்வாணமாக போராட்டம் செய்தும் கண்டு கொள்ளவில்லை என்பது புரிகிறதா ?

அதே போன்று சில மாதங்களுக்கு முன்பு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறன்..

அப்போது கடுமையாக எதிர்த்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு..

எல்லாவற்றையும் சிந்தித்து பாருங்கள்...

நம்ப முடியாத உண்மைகள்...


காது ல இந்த இடத்துல கை வைச்சு அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை...


உடல் எடை அதிகரிப்பது தற்போது பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.

அதிகம் கஷ்டப்படாமல் காதில் விரல் வைத்து சிறிய பயிற்சியை செய்வதன் மூலம் கூட உடல் எடையை குறைக்க முடியும்.

காதின் கீழ் நுனி அருகில் முக்கோணம் வடிவு உள்ள இடத்தில் விரலை வைக்க வேண்டும். பின்னர் தாடையை திறந்து மூட வேண்டும்.

தாடையை திறந்து மூடும் போது நாம் விரல் வைத்திருக்கும் எந்த இடம் அதிகம் அசைகிறதோ அது தான் பயிற்சி செய்ய சரியான புள்ளியாகும்.

இது தான் காதையும், தாடையையும் இணைக்கும் புள்ளியாகும்.

அங்கு விரல் வைத்து ஒரு நிமிடம் அழுத்த வேண்டும்.

சரியான உணவு பழக்கத்துடன் இந்த எளிய பயிற்சியை தினம் செய்து வந்தால் விரைவில் உடல் எடை குறைய தொடங்கும்...

நம்ப முடியாத உண்மைகள்...


இந்த நூலை எழுதியவர் தமிழர் கிடையாது. இவருக்கு இந்த பெயர் மாற்றத்தை சொல்லிக் கொடுத்தது யார்?

இளமையில் இயேசு என்ன செய்தார் என்று பைபிளில் கூட இல்லை. புத்தகத்தை வாங்கி படியுங்கள்...

நம்ப முடியாத உண்மைகள்...


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டிறைச்சிக்கு தடையில்லை... சொல்வது மேகாலயா பாஜக...


பாஜக தமிழிசை கலாட்டா...


தமிழக முதலமைச்சர் எடப்பாடிக்கு கையிறு பார்சல்...


மத்திய அரசின் மாட்டுக் கறி தடை உத்தரவிற்கு இடைக் கால தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை...


மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிக்காமல் பாராளுமன்றத்தில் எந்த சட்ட திருத்தமும் செய்யாமல் எப்படி மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது, பெரும்பாலான மக்கள் உண்ணும் உணவாக மாட்டிறைச்சி உள்ளது - நீதிபதிகள் கேள்வி...

4 வாரத்தில் பதல் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவு...

ஜெயலலிதா சசிகலாவின் 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய 6 மாவட்ட கலெக்டருக்கு தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கடிதம்...


இலுமினாட்டி யும் இரகசியமும்...







ஞானதிருஷ்டி (CLAIRVOYANCE)...


clairvoyance என்ற பிரஞ்சு வார்த்தைக்கு clair - clear (தெளிவான) மற்றும் voyance - vision (பார்வை) என்று பொருள்படுகிறது.

ஞானதிருஷ்டி(clairvoyance) யின் முலமாக நிகழ்காலத்திலோ அல்லது எதிகாலத்தில் உள்ள ஒரு பொருளையோ, மனிதனையோ, அல்லது நிகழ்வுகளையோ இருந்த இடத்தில் இருந்த படியே ஆழ்மனதின் உதவியுடன் பார்த்தல் ஆகும்.

ஞானதிருஷ்டி(clairvoyance) ஆனது நமது புராணங்களில் பல்வேறு இடங்களில் காணலாம்..

எடுத்துக்காட்டாக : மகாபாரதத்தில் போர்க்களத்தின் காட்சிகளை சஞ்ஜயன் ஞானதிருஷ்டி மூலமாக திருதராஷ்டிரனுக்கு எடுத்துரைப்பார்...

பாஜக வின் மோடியும் ஊழலும்... 2016...


டெலிபதி (TELEPATHY)...


டெலிபதி (Telepathy) என்பது கிரேக்க சொற்களான tele (தூரம்) மற்றும் patheia ( உணர்வு) இருந்து வந்தது..

இது மனித மற்றும் பிற உயிரினங்களுடன் வார்த்தை மொழி , உடல் மொழி அல்லது எந்த ஒரு பிற உபகரணங்களின்றி ஆழ்மனத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் முறையாகும்..

இது ESP - இன் ஒரு பகுதியாக விளங்குகிறது. டெலிபதி (Telepathy) இன்றளவும் விஞ்ஜானிகளளால் முழுவதும்மாக ஏற்றுக் கொள்ளப்படாத விவாத பொருளாகத்தான் உள்ளது..

டெலிபதி (Telepathy) அனுப்புவார்களிடம் (sender or agent) பெறுபவர்கள் (receiver or percipient) நேரடியாக ஆழ்மனத்தின் மூலம் தகவல்களை பெறுவார்கள்.

ஆனால் இது இன்று வரை அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இரட்டையர் (Twins) களிடம் இந்த டெலிபதி (Telepathy) அதிகமாக செயல்படுகிறது என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது...

ஒவ்வொரு வருடமும் இரண்டு உலகப் போர் நடந்து கொண்டு உள்ளது...


இரண்டாம் உலக போரில் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 60 இலட்சம்.

இன்று உலகமெங்கும் பட்டினிச்சாவு எண்ணிக்கை 130 இலட்சம்.

அப்படியாயின் இன்று ஒவ்வொரு ஆண்டும் இரண்டு உலகப்போரில் சாகும் மக்கள் பசியினால் உலகம் முழுவதும் சாகிறார்க்ள்.

இந்தியாவில் மட்டும்  வருடத்திற்கு 10,000 பட்டினியால் சாகிறார்கள்.

எம் மக்கள் ஒருவகையில் இந்த 130 லட்சம் மக்களுமே அதிஷ்டசாலிகள்.

ஏன் தெரியுமா ?

ஏறக்குறைய 700 கோடி பேர் உள்ள உலக மக்கள் தொகையில் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பசியின் கொடுமையை அனுபவித்து கொண்டே இரவு படுக்க செல்கிறார்கள்..

இந்தியாவில் அண்டை நாடுகள் போர் தொடுத்து வந்து இந்தியர்களை கொன்று குவித்தால் அதற்கு பொறுப்பு இந்தியாவின் பிரதமர் தான்..

அதே போன்று பசியால் வாடி வருடத்திற்கு 10,000 பேர் சாகிறார்கள் என்றால்கூட பிரதமர் ஆட்சி செய்ய தெரியாமையே காரணம்..

இத்தனை உயிரையும் காப்பாற்றி விட்டு வாருங்கள் பிறகு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்...

அரசாங்க சுற்று பயணமாக ஜெர்மனிக்கு சென்றுள்ள பாஜக மோடி...


இந்தியாவின் வளர்ச்சி குறித்து முன்னாள் உலக அழகி Priyanka Chopra வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்...

மாட்டு கறி தடையை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு, அவசர வழக்காக ஏற்றது உயர் நீதிமன்றம்...


கோமதி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் உணவு என்பது தனிமனித அடிப்படை உரிமை அதில் அரசு தலையிட அதிகாரம் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரனைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது மதுரை உயர் நீதிமன்ற கிளை.

இன்று பிற்பகல் வழக்கை விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது...

மாட்டுக் கறி தடை சட்டத்திலிருந்து எருமை மாடுகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்...


தைராய்டு பிரச்சனையா? இதெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்கள்...


உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்ற காரணங்களினால் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே தைராய்டு நோயாளிகள் அன்றாடம் முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

பால் : நம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு அயோடின் சத்து அவசியமாகிறது. எனவே தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால், தேவையான அயோடின் சத்துக்களை பெறலாம்.

யோகர்ட் : தயிரிலிருந்து தயாரிக்கப்படும் யோகர்ட் (குறைந்த கொழுப்புள்ள தயிர்) அதிக அயோடின் சத்துள்ள உணவாகும். எனவே, தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக் கொள்ளலாம்.

இறைச்சி : தைராய்டு ஏற்பட துத்தநாகச் சத்து குறைபாடும் ஒரு காரணமாகும். எனவே துத்தநாக சத்துக்கள் உள்ள கோழிக்கறி மற்றும் மாட்டிறைச்சியை சமைக்கும் போது, அயோடின் உப்பைப் பயன்படுத்தி சாப்பிடலாம்.

முட்டை : ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது. எனவே இந்த உணவில் இருந்து தேவையான அயோடின் சத்து கிடைப்பதால் தினமும் ஒரு முட்டையை சாப்பிடலாம்.

தானியங்கள் : தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் விட்டமின் B உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், அது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து, தைராய்டு சுரப்பியை சீராக்க உதவுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட பேக்கரி உணவுகள், சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற சல்பர் நிறைந்த உணவுகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற அயோடின் சத்துக்களை உறிஞ்சும் காய்கறி வகைகளை சாப்பிடக் கூடாது...

பிரமிடு தமிழர் கட்டியது... எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்...


பிரமிடு தமிழர் கட்டியது...

16 டன் எடையுள்ள துல்லியமாகச் செதுக்கப்பட்ட கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, 13 ஏக்கரில், மயிரிழைகூட மாறாது நேர்த்தியாக, செப்பமாக பிரமிடு அமைத்தவர்கள் தமிழர்கள்.

350 அடி உயரத்துக்கு 260 கோணத்தில், மேலேறிச் செல்ல அம்புபோல் நீண்ட பாதையைக் குடைந்து உருவாக்கியவர்கள் தமிழர்கள்.

மற்ற இனமெல்லாம் நாடோடிகளாய் திரிந்த காலத்தில் நாகரிகத்தின் உச்சத்தில், நகர நாகரிகத்துடன், பொறியியல் நுட்பத்துடன், மூடநம்பிக்கைத் துளியும் இன்றி வாழ்ந்த இனம் தமிழினம்.

ஆனால், ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பினால் மூடநம்பிக்கைகளில் மூழ்கி இன்று அடிமை வாழ்க்கை, அவல வாழ்க்கை வாழ்கிறான்.

பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல்..
எகிப்தை ஆண்டவர்கள் தமிழர்கள்..

பிரமிடு என்பது தமிழ்ச் சொல்...

இறந்தவர்களை எரிப்பது ஆரியர் வழக்கம். ஆனால், இறந்தவர்களை புதைப்பது தமிழர் (திராவிடர்) மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = பெருமிடு என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

எகிப்து தமிழர் மண், அங்கு ஆண்டவர்கள் தமிழர்கள், கிளியோ பாட்ரா தமிழ்ப் பெண் பொன்றவற்றை அடுத்தடுத்து அறிவோம்.

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.. ஆண்டவர்கள் தமிழர்கள்..

ஆதாரங்கள் இதோ...

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

Asiatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

Heinrich Kari Brugsh - History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey  என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர் என்கிறார்.

தமிழ் மன்னர்கள் பெயர் மற்றும் கிளியோபாட்ரா பற்றி அடுத்து பார்ப்போம்....

எகிப்தில் ஆண்ட மன்னர்கள் தமிழர்கள்

அங்கு ஆண்ட மன்னர்கள், “தொட்டகாமன்” “அகநாடன்: போன்ற பெயருடையவர்கள். இப்பெயர்கள் தூயத் தமிழ்ச்சொற்கல் என்பதன் மூலம் மன்னர்கள் தமிழர்கள் என்பது உறுதியாகிறது.

அதே போல் கிளியோபாட்ரா ஒரு தமிழ்ப்பெண். அவரது கருநிறமே அதற்குச் சான்று. மேலும் அப்பெயர் ஒரு தூயத் தமிப்பெயரின் திரிபு.

கிளியோ பத்தரை என்பதே கிளியோ பாட்ரா என்று மாறியது. கிளிபோன்ற அழகி. பத்தரை மாற்று தங்கம் என்னும் பொருள் உடையது அது.

அதே போல் மெசப்பட்டோமியா பகுதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். மெசப்பட்டோமியா என்பது, தூயத் தமிழ்ப்பெயரின் திரிபு.

மிசைப்பட்டணம் என்பதே அப்படி மாறியது...

மிசையென்றால் மேடு. மேட்டில் உள்ள நகரம் என்பது அதன் பொருள். அதுவே மிசப்பட்டிணம் -----> மெசப்பட்டோமியா என்று மாறியது...

நம்ப முடியாத உண்மைகள்...


ராஜபக்சே கொடுத்த பணத்தில்தான் ஈழம் பற்றி படம் எடுத்தார்கள் – நடிகர் ராஜ்கிரன்...


ராஜ்கிரண் : இந்தப் படம் புலம் பெயர்ந்து தமிழகம் வரும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணுக்கும், இங்குள்ள கட்டிடத் தொழிலாளிக்கும் இடையில் மலரும் காதலைச் சொல்லும் படம் இது.

மனிதாபிமானம் என்பது அனைவருக்குமே இருக்கின்ற ஒன்று. இருந்தாக வேண்டிய ஒன்று. அதன் தேவையென்ன என்பதை இந்தப் படம் நிச்சயமாக உணர்த்தும்.

படத்தில் காதலும் உண்டு. ஆனால் அதன் பின்னணியில் அந்தப் பெண்ணுக்கு ஒரு சோக்க் கதையும் உண்டு. அதில்தான் ஈழத்தின் பிரச்சினை சொல்லப்பட்டிருக்கிறது.

இதில் எந்தவொரு அரசியலும் இல்லை. அரசியல் சார்பான கருத்துக்களும் இல்லை. ஆனால் அதையும் தாண்டி ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய மனிதாபிமானத்தைச் சொல்கிறது.

ஈழத் தமிழர் விடுதலை போராட்டம் பற்றிய உண்மையான படங்கள் எதுவும் தமிழில் இதுவரை வந்ததில்லை.

சமீபத்தில் ரிலீஸான ஈழம் தொடர்பானது என்று சொல்லப்பட்ட இரண்டு தமிழ்த் திரைப்படங்களும் சிங்களச் சார்புடன், ராஜபக்சே கொடுத்த பணத்தில் தயாரிக்கப்பட்ட படங்கள்தான்.

அவைகள், ஈழத் தமிழர் போராட்டத்தையும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்திய படங்கள்தானே தவிர, அவை ஈழத் தமிழர் பற்றிய உண்மையான படங்களே அல்ல.

இங்கேயுள்ள அகதி மக்கள் படும் கஷ்டத்தை அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கமும் உணரவில்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பர்மா போன்ற நாடுகளின் அகதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்திய மக்களைப் போன்ற வசதி, வாய்ப்புகளை வழங்கியிருக்கும் இந்திய ஏகாதிபத்திய அரசு, ஈழத் தமிழ் அகதி மக்களுக்கு மட்டும் அந்த சம உரிமையை வழங்க மறுத்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தில் இந்திய அரசு பல்லாண்டு காலமாக கையொப்பமிட மறுத்து வருகிறது. அதில் கையெழுத்திட்டால் ஈழத்து அகதிகளுக்கு முறையான வசதி, வாய்ப்புகளை செய்து தர வேண்டுமே என்று மத்திய அரசு அஞ்சுகிறது.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இங்கே படம் எடுக்க முடியாது. காரணம் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையும், அதை முழு மூச்சாகப் பின்பற்றும் திரைப்பட தணிக்கைக் குழுவும் அதை அனுமதிக்காது.

எனவேதான் இயக்குநர் சத்யசிவா, இந்தப் படத்தை ஒரு காதல் கதையாக எடுத்திருக்கிறார். இதனால்தான் படத்திற்கு  ஒரு வெட்டுகூட சொல்லாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது தணிக்கைக் குழு.

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட துயரங்களை நினைவு கூறவும், ஈழத் தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளவும், மனித நேயத்தை புதுப்பித்துக் கொள்ளவும் இந்தப் படம் நிச்சயம் துணை செய்யும்.. என்றார் ராஜ்கிரண்...

-29.04.2015.

ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்...


இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும்
ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய்
பேசினார்.

அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.
பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக
கண்காணிப்பதற்கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய
உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா’ அமைப்பும்
இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள்.

அவர்கள் போய் இலங்கை விமானப் பயணிகளின் லிஸ்ட்டை செக்
செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள்.

அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள்
களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய
ஆரம்பித்தது” என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடை பெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார்.

அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என
அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக்கொண்டார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன். "நான் தமிழீழக் கனவை நினைவாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தப்பித்துச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்” என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். "அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார்’ என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.

கடந்த மாதம் சின்ன ரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக் கிறார்கள்.

"தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளியே வருவார்’
என ரூபன் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்கள்.

அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள்.

அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும்
சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த
நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

தமிழீழ வானத்தில்
விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத்தொடங்கியிருக்கின்றன.!

-25.04.2014