விவசாயிகள் தமிழர்கள் தொடர்ந்து நசுக்கப்பட்ட காரணம் என்ன தெரியுமா ?
கேரளாவில் இருந்து தடையும் கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீரையும் தமிழகத்திற்கு தடுப்பதற்கு காரணம் டெல்டா பகுதி என்று சொல்ல கூடிய தஞ்சை பகுதி விவசாயம் தான்...
ஆப்பிரிக்கா தைவான் இந்தோனிஷியா போன்ற நாடுகளில் இந்திய அரிசி தான் பெரிதும் விரும்பக்கூடிய ஒன்று..
இந்திய அரிசியில் முதலிடம் வகிப்பது பஞ்சாப் மாநில அரிசிகள் இரண்டாவது இந்தியாவிலையே அதிக ஏற்றுமதி செய்யக்கூடிய அரிசியாக இருப்பது டெல்டா மாவட்டத்தின் தஞ்சை அரிசிகள் தான்..
இவைகள் மூலம்..
22 டன் பெறுமதியான ஒரு கண்டெய்னர் 75 இலட்சத்திற்கு ஏற்றுமதியாகிறது..
இது தான் கார்ப்பரேட்டுகளுக்கு உள்ளுக்குள் புழுங்கும் விஷயம் இதை விடக்கூடாது என்பதே தமிழகம் தனித்து விடுவதற்கு காரணம்..
விவசாயத்திற்கு அடிப்படை தேவை தண்ணீர்..
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீரை நிறுத்துவோம்..
பாலாற்று தண்ணீரையும் நிறுத்துவோம்.
காவேரி நீரையும் நிறுத்துவோம்...
இப்போ என்ன செய்வீங்க என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியாக இன்னுமமும் பூமியில் உள்ள தண்ணீரை எடுத்தே விவசாயம் செய்தனர் தமிழக விவசாயிகள்..
இப்போது தான் மீத்தேன் திட்டம் அதே போன்று ஹைட்ரொ கார்பேன் திட்டம் என்று பூமியில் உள்ள நீரையும் உறிஞ்சி விட்டால் நீ என்ன செய்ய முடியும் ? என்பதாக ஒரு மறைமுக போரை அரசியல் வாதிகள் மூலம் விவசாயிகளுக்கு தொடுத்து இருப்பது அந்நிய கார்ப்பரேட் தொழிலதிபர்கள்..
இன்னும் பாருங்கள் எல்லா மாநிலத்துக்கும் விவசாயி கடன் தள்ளுபடி.. ஆனால் தமிழக விவசாயி சிறுநீர் குடித்தும் நிர்வாணமாக போராட்டம் செய்தும் கண்டு கொள்ளவில்லை என்பது புரிகிறதா ?
அதே போன்று சில மாதங்களுக்கு முன்பு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறன்..
அப்போது கடுமையாக எதிர்த்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு..
எல்லாவற்றையும் சிந்தித்து பாருங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.