விழுப்புரத்தில் நடந்த பாமக மாநாட்டில் பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு மத்தியில் சட்டப்படி மக்கள் அரசை எதிர் கொள்ள டாக்டர் அன்புமணி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 371 பற்றி மேடையில் பேசி, அதன் படி மக்கள் செல்லுங்கள் என்ற பாதையை அமைத்து கொடுத்திருக்கிறார்.
காஷ்மீருக்கு சிறப்புரிமைச் சட்டம் 370 இந்திய நடுவண் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு - காஷ்மீர் என்கிற இரண்டு வெவ்வேறான சிறப்பியல்புகளையும், அது இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதையும் விதி 370ன் கீழ் சிறப்பு அதிகாரங்களை அனுபவித்து வருகிறது.
இதன் படி, இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள்,
இம்மாநிலத்தின் இசைவு இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.
இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.
இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது. இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது. இப்படி மாநில சுயாட்சிக்கு வித்திடும் உரிமைகள் விதி எண் 370 கீழ் வருகின்றது. இது காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தும்.
இதை போன்றே மற்ற மாநிலங்களுக்கும் உரிமை அளிக்கும் விதி தான் 371. இதன் கீழ் மாநிலங்களுக்கு சிறப்புரிமை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், சிறப்புரிமை பெற்ற மாநிலங்களும் அதற்கான விதிகளும் பின்வருமாறு:
விதி 370 – ஜம்மு காஷ்மீர்
விதி 371 – மகாராஷ்டிர, குஜராத்
விதி 371A – நாகலாந்து
விதி 371B – அசாமின்
விதி 371C – மணிப்பூர்
விதி 371D – ஆந்திரப்பிரதேசம்
விதி 371E – ஆந்திரப்பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம் அமைத்தல்
விதி 371F – சிக்கிம்
விதி 371G – மிசோரம்
விதி 371H – அருணாசல பிரதேசம்
விதி 371 I – கர்நாடகா
இப்படி எல்லா மாநிலங்களும் தங்களுக்கான தேவைக்காக சிறப்பு விதியை உருவாக்கி கொள்ளும் போது, தமிழகம் மட்டும் மவுனம் காப்பது ஏன்?
நீட் வேண்டாம் என்று போராடுவதை விடுத்து தமிழகத்திற்கு சிறப்பு சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்க வேண்டும் இனி.
அதன் மூலம் எந்த வித சட்ட சிக்கலையும் எதிர் கொள்ளாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.
தமிழகத்தில் மாற்றம் ஒன்று நிகழ வேண்டும் என்றால் விதி 371 வேண்டும் என்று பலதரப்பட்ட மக்களும் களத்தில் இறங்கி குரல் கொடுக்க வேண்டும்.
அது ஒன்றே இந்திய அரசியலின்பால் தமிழகத்திற்கு கிடைக்கும் ஆதாயங்களில் ஒன்றாக அமையும்.
சிறப்பு பாராட்டுக்கள் டாக்டர் அன்புமணி அவர்களுக்கு...