05/08/2021

திராவிடமும் தெலுங்கு சாதி வெறியும்...

 


இசை வேளாளர் என்று இதுவரை இல்லாத ஒரு சாதியை, தனக்குத்தானே ஒரு சாதியை உருவாக்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுத்தது தெலுங்கு அரசியல் ஆதிக்கமே..

அதே போல் தான் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களை ஆதித்தமிழர் என்றும்..

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஆதி திராவிடர் என்றும்.. மாற்றும் வல்லமையை தெலுங்கு அரசியல் ஆதிக்கத்தால் வந்த ஆதிக்க மனப்பான்மையே..

தெலுங்கர்களை தமிழர்களாகவும்

தமிழர்களை திராவிடர்களாகவும்

சித்தரித்து தமிழனை அழிக்க கருணாநிதி (திராவிடக் கட்சிகள்)  செய்த சூழ்ச்சியே..

அரசியல் ஆதிக்கம் இல்லாத தமிழர்களால் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

இதனை உடைத்தெறிய தமிழர்கள் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவது ஒன்றே வழி..

தமிழர்களாய் ஒன்றிணைவோம்..

ஆரசியல் அதிகாரத்தை திராவிடத்திடம் இருந்து தட்டிப் பறிப்போம்...

கொரோனா ஊரடங்கு கலாட்டா...

 


என்னங்க இத்தன நாளா வீட்டுக்குள்ள அன்ராயார்ரோட இருந்தீங்க இப்ப என்ன வேஷ்டி கட்டுறீங்க...

அட கிருக்கு கழுதை, நாளைல இருந்து வேலை இருக்கு வேலைக்கு வாங்கனு கூப்ட்டாங்க...

வேஷ்டி கட்டி மறந்து போச்சேனு கட்டிபார்த்துகிட்டு இருக்கேன்...

திருட்டு திமுக...

 


ஒன்றியம் போய் இப்போ " பாரத மாதா"  வந்து விட்டது... 

முட்டு கொடுத்த சிறுபான்மை தலித்திய அடிமைகள் கூட்டம் இப்போ எங்கப்பா...

சித்தர் ஆவது எப்படி - 3...

 


சித்தத்தை சீர் செய்யும் முதல் படி-கனல் தன்மை அறிதல்..

சித்தத்தை சீர் செய்தல் மூலம் சித்தர் ஆவது எளிமையாகிறது.. மற்ற பூதங்கள் திறன் பட செயல் பட மாறுபட்ட முரண் பாடுகளை உடைய சித்தத்தை சீர் செய்ய அவசியமாகிறது.. சித்தத்தை சீர் செய்வதின் மூலம் ஆன்மீகம் முன்னேற்றம் மிக எளிதாகிறது..

சித்தத்தை சீர் செய்வது என்பது ஆன்மீக பணியில் 100 ல் 95 பங்கு செய்து முடித்தது போல... அதனால் தான் சித்தத்தை சீர் செய்து ஆன்மீகத்தில் உச்சத்திற்கு சென்றவர்களை சித்தர்கள் என்கிறோம்...

இப்பொழுது சித்தத்தை சீர் செய்யும் வழியினை ஆராய்வோம்..

இயல்பாக சித்தம், எண்ணக் குவியலால் ஆனது என்று முன்பே அறிந்தோம்....

பல ஜென்மங்களின் அனுபவங்கள் சூட்சும பதிவுகளாக சித்தத்தில் புதைந்துள்ளன... அதற்கு முன்னால் அனுபவம் என்னவென்று பார்ப்பது அவசியமாகிறது..

ஓர் அனுபவம் என்பது பஞ்சபூதங்களால் கூட்டாக அனுபவப் படுவது.

இதில் நிலம் நீர் பூதங்கள் உருவமாக திடமாக இருப்பதால், அவைகள் வெளிச்சத்தின் உதவியால் இயங்குவதால் அனுபவபடும் பொருளின் உருவ தோற்றத்தை நுகருகிறது..

காற்றும் ஆகாயமும் அருவமாக உருவமற்ற நிலையில் இருப்பதால் அவற்றை உணர்வாக நுகருகிறது...

மனம் என்ற பூதம், சித்தத்திலிருந்து தன்னை வந்து அடைந்த எண்ணத்தை நுகரும் போது அதை வெளிச்சமாகவும் உணர்வாகவும் பிரித்து வெளிச்சத்தை நீர் மண் பூதத்திற்கும், உணர்வை காற்று ஆகாய பூதத்திற்கும் அனுப்புகிறது...

ஆகையால் தான் மனம் என்ற பூதத்தை நெருப்பின் அம்சமாக கூறுகின்றனர்.

அதாவது நெருப்பிற்கு வெளிச்சத்தை தரும் சுடரும், சூடு என்ற உணர்வை தரும் கனலும்,இருப்பதால், மனத்திற்கு நெருப்பை உதாரணமாக வைத்தார்கள்...

முக்கியமாக அறிய வேண்டியது என்ன வென்றால் பிரபஞ்ச பேராற்றல் வருகின்ற பொழுது, அந்த ஆற்றலை உணர்வாக எடுத்துக் கொண்டால், அது தேக ஆற்றலாக மாறிக்கொள்கிறது..

அதே வெளிச்சமாக மாறும் பொழுது பொறி புலங்கள் வழியாக உலக தொடர்பு கொண்டு விரையமாகிறது..

ஆனால் எண்ணம் பெரும்பாலும் வெளிச்சமாகவும், குறைந்த அளவாய் உணர்வாகவும் இருக்கும்.. அதனால் தான் எண்ணங்களில் வெளிச்சம் அதிகமாக இருக்கும்..

ஆனால் காமம் கோபம் இரண்டில் உள்ள எண்ணங்களில் உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.. ஆனாலும் அது வெளிச்சத்தை விட குறைவாகவே இருக்கும்...

சித்தத்தில் வெளிவரும் எண்ணங்கள் மனதை சாரும் போது, வெளிச்சமாகவும் கனலாகவும் பிரிக்கின்ற ஒரு செயலை பார்த்தோம்.. அதே நேரத்தில் கனலானது வெளிச்சமாகி மாறி வெளி சார்புகளை நோக்கி சென்று விரமாகக் கூடிய செயலும் நடக்கிறது...

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் நம்முடைய தேக அமைப்பில் உள்ள பொறி புலன்கள் வெளியே உள்ள சார்புகளில் பொருள்களில் இயல்பாகவே ஈர்க்கப்பட்டு வெளிச்சமாகி மாறி விடுகிறது..

இதன் காரணமாக தான் பகல் நேரங்களில் பொறி புலன்கள் அதிகமாக வேலை செய்து தேக கனல் பெரும்பாலும் வெளிச்சமாக மாறி நம் ஆற்றல் குறைய தொடங்குகிறது...

ஆற்றல் குறைவால் உறக்கம் வர தொடங்குகிறது.. உறக்கத்தில் பொறி புலன்கள் செயல்பாடு மிக மிக குறைவாக உள்ளதால், கனல் பெருகி தேகம் புத்துணர்ச்சி பெறுகிறது...

இந்த கனலை பற்றி சற்று அறிந்து கொள்வோம்..

எப்படி சூரிய ஒளி அலைவரிசை பூமியில் பட்டு பூமி சூட்டை, வெப்பத்தை பெறுகிறதோ அதே போல் பேரண்ட பேராற்றலின் அலைவரிசை தான், உயிர் ஆற்றல் பெறுவதற்கு மூல ஆதாரமாக உள்ளது.. இதை சில யோகிகள் காந்த அலை சக்தி என்று சொல்லிகிறார்கள்....

அதைதான் தேக கனலாக இங்கே நாம் புரிந்து கொள்கிறோம்.. தேகத்தில் இந்த கனல் ஒரு குறிபிட்ட அளவிற்கு கீழே குறைந்தால் தேகம் வலு இழந்து மரணம் அடைகிறது..

சித்தர்களிடம் இந்த கனலை தேகம் பூரணமாக பெற்றக் கொண்டபின் அந்த கனலை சூட்சம, நுண்ணிய தேகமாக மாறுகிறது.. அந்த சூட்சம தேகம் அளவற்ற கனலை பெறக்கூடிய ஆற்றல் உள்ளது..

ஆனால் சூட்சும தேகத்தை பழகி கொண்ட மனிதன் அளவற்ற ஆற்றல் அடைவதற்கு எல்லையே இல்லை.. ஒரு குறிபிட்ட ஆற்றலை பெறும் தகுதி உடைய தூல தேகத்தில் வாழும் மனிதன் தன் சூட்சும தேகத்தின் மூலம் அளவற்ற பிரபஞ்ச ஆற்றலான கனலை பெறும் தகுதி உடையவன் ஆகிறான்..

இந்த தூல தேகம் தன் சூட்சும தேகத்தின் உதவியால் பல பிரமிக்க வைக்கும் செயல்களை செய்யும் திறனை பெறுகிறது...

இந்த ஒரு இரகசியத்திலே சித்தர் ஆகும் பாதையில் இந்த பிரபஞ்ச கனல் மிக முக்கியமாக உள்ளதால், நம் தேக கனலை தக்க வைக்கவும் தேக கனலை பெருக்கவும் உகந்த உளவுகளை இனி வரும் பகுதிகளில் பார்ப்போமாக....

என் உயிர் தோழியே...

 




முதன் முதலில் நான்...
கண்ணீர் விட்டு அழுதது...

உறவுகளின் 
மரணத்திற்காக அல்ல...

உயிர் நட்பின்
மரணத்திற்காக...

இன்று வரை
நிலைகொள்ளாமல்...

தவிக்கிறது என் மனம்...

எனக்கு தெரியும்...

இன்று வரை நீ
என்னை சுற்றி வட்டமிட்டு
கொண்டுதான் இருக்கிறாய்...

என்னால் உணரமுடிகிறது...
பார்க்கத்தான் முடியவில்லை...

பாடாய் படுகிறது மனம்...
நானும் வருகிறேன்...

உன் நினைவுகளோடு
சிறிது காலம் வாழ்ந்துவிட்டு...

சமூக விரோதி பாஜக சங்கி செயல்...

 


50 ரூபாய்க்கு பெட்ரோல் தர்றேன்னு ஆட்சிக்கு வந்தவன்.. 7 மாசத்துல 67 தடவை விலை ஏத்திருக்கான் 😡

 


ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவாவை எதிர்த்த சுவாமி விவேகானந்தர்...

 


விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு விழா. அஞ்சல் தலை வெளியீடு, நினைவு நாணயம் வெளியிடுதல், முக்கிய வீதி களுக்குப் பெயர் சூட்டுதல் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மையம் என்று ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம கூட்டம் சுவாமி விவேகானந்தரை உரிமை கொண்டாடியது...

ஆனால் உண்மை என்ன வென்றால் சுவாமி விவேகானந்தர் ஆர்.எஸ்.எஸ். இந்து வெறிக்கும், வர்ணாசிரம கொள்கைகளுக்கும் எதிரானவர்.

இந்த விவேகானந்தர் யார்?

அவரின் ஒரு பக்கத்தை மட்டும் வெளியே காட்டி விட்டு மறுபக்கத்தை மறைப்பதேன்.

சுவாமி விவேகானந்தர் பார்ப்பனீயத்தைப் பற்றியும், இந்து மதத்தின் ஜாதிய தன்மை குறித்தும் ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி குறித்தும் ஆதி சங்கரரின் குறுகிய இதயம் குறித்தும் அவர் எழுதியதை ஏன் இவர்கள் வெளிப்படுத்தவில்லை?

உண்மையிலேயே விவேகானந்தர் மீது பற்றும் அவர்தம் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணமும் அவர்களிடத்தில் இருக்குமேயானால் விவேகானந்தர் கருத்துக்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பரப்ப வகை செய்திட வேண்டும்.

இந்துக்கள் ஏன் மதம் மாறினார்கள்?

அதற்க்கு வர்ணாசிரம் ஜாதி வெறி எப்படி காரணமான இருந்தது என்பது பற்றி விவேகானந்தர் தனது (தர்மசக்கரம் - துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11) நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்..

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர்.

பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்..

பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது.

மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன.

ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு..

ஆதி சங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறும் கருத்தை பாருங்கள்..

சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை;  அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப் பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத் துவத்தில் பெருமை பாராட்டுபவர்..

பசுவதையும் - இந்துமதமும்  குறித்து விவேகானந்தர் கருத்து..

தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை.

மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடைகிறதென நான் எண்ணவில்லை என்று கோமாதா பாதுகாப்பு சங்கங்களை நோக்கி சுவாமிஜி சாடுகிறார்.

இந்துத்துவா வை  சராமாரியாக சாடுகிறார் விவேகானந்தர்...

இதற்கு முதலில் பதிலைச் சொல்லி விட்டு, விவேகானந்தரின் ஆண்டு விழாவை விசேடமாக நடத்துங்கள்..

இந்துவெறி, வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய மகானை ஏதோ உங்கள் கருத்துக்களை சொல்லும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேடர் போல் சித்தரிக்க உங்களுக்கு மானம், ரோசம் இல்லை...

டேபிள்ல வை‌க்க ஒரு தமிழ் மன்னர் சிலை கூடவா கிடைக்கல.? 🙄

 


பாஜக மோடி கூச்சமே இல்லாம சொல்றான் 🤦

 


நம்மால் இந்த கணித வலையிலிருந்து தப்ப முடியும்...

 


உங்கள் வாழ்நாளை சுரண்டும் இந்த கணிதவலை 9..

நீங்கள் சாப்பிடும் இந்த ஒவ்வொரு பருக்கைக்கும் இந்த ஒன்பதுக்கும் சம்மந்தம் உள்ளது.

உழைத்தால் தான் சோறு இதை உருவாக்கியது யார் இயற்கையா?

இந்த இயற்கை நீங்கள் உண்ணும் உணவுக்கு பணம் கேட்டதா?

எங்கு இருந்து வந்தது இந்த பணம்? நாகரிகமா?

சரி பணம் கேட்காமல் கொடுக்கும் இயற்கை எங்கே போனது?

நாம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அடிமை ஓட்டத்திற்கு காரணமான பணத்தின் சூத்திரம் ஒன்பது, இதன் இயக்கவியல் ஒன்பது.

அதாவது பணத்தை அளவீடு செய்வது வணிக வருடம் (commercial year, finacial market).

360 நாள்கள் (360 days) 3+6+0=9.

எல்லா வங்கிகளும் இதன் அடிப்படையில் தான் இயங்குகிறது.

எதற்காக ஓடுகிறோம் என சிந்தித்து பாருங்கள்.

சரி இதற்கு என்ன நிரந்தர தீர்வு என கேட்கிறீர்களா?

பதில் அதே 360 நாட்கள் தான்...

உலகில் உள்ள ஓவ்வொரு மனிதனும் இந்த அடிமை ஓட்டத்தை 360 நாட்கள் நிறுத்தினால் என்னவாகும் என யோசித்து பாருங்கள்.

இந்த 360 நாட்களும் நாம் எதும் செய்ய வேண்டாம் ஒரு புல்லையும் புடுங்க வேண்டாம்.

நமக்காக இந்த இயற்க்கையே செய்யும் காகம், குருவி, புழு, பூச்சி என எல்லா இயற்கை படைப்புகளும் செய்யும்.

மரங்கள், செடி, கொடிகள் தானாக வளரும் காடுகள் கிடைக்கும்.

இயற்கையை மீட்டெடுக்கலாம்.

இந்த அடிமை ஓட்டத்தை எப்படி ஓடலாம் என 15% மட்டுமே சிந்திக்கும் இந்த மூளை, இயற்கை சூழ்நிலையில் இயற்கையோடு இயற்கையாய் இருக்கும் போது அதற்கு மேலும் செயல்படும் உங்களின் ஓவ்வொரு அசைவும் இயற்கையை உணரும்...

பிராடு பாஜக மோடியின் இன்றைய பொய்கள்...

 


9 வயது தலித் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, நீதி வேண்டி களத்தில் ராகுல்...

 


வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்...

 


உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு..

முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....

எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது, குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்....

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும் போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

கன்னடன் கமல் Vs தெலுங்கர் கருணாநிதி...