03/08/2017

மின்சாரத்தை (மித்ரவருனசக்தி) கண்டு பிடித்தது ஒரு தமிழனே...


மின்கலத்தை கண்டுபிடித்தவர் வோல்ரா என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழரே சற்று விழியுங்கள்… மின்சாரத்தை கண்டு பிடித்தது ஒரு தமிழனே…..

கிறிஸ்து வருவதற்கு முன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழன் மின்கலத்தை கண்டு பிடித்து விட்டான்…. வியப்பாக உள்ளதா? கீழே படியுங்கள்….

சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

“சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்”

புரியவில்லை என்றால் விடுங்க‌…, நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.

இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்..

ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்.

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? என்று யோசிக்கிறீர்களா?

மித்ரவருனசக்தி என்றால் மின்சாரம் என்பது தாங்க பொருள்.

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி [Baghdad Battery] என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ் தொடரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திவிடவில்லை.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார்.

இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால electroplating என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1891 ஆம் ஆண்டு Rao Saheb Krishnaji Vajhe புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, வேறு சில மேதாவிகளுடன் சேர்ந்து இதனை செய்து பார்த்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்.

எப்படி இருக்கிறது தமிழனின் அறிவியல்?

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப் பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிஷம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

அகத்தியர் தமிழன் என்கிறீர்கள் ஆனால் அவர் ஏன் சமஸ்கிருதத்தில் எழுதினார் என்பது இங்கு பலரது கேள்வி. உங்களுக்கும் கூட இது எழலாம். அதை முழுவதுமாய் இங்கு விலக்க முடியாது ஆனால் சுருக்கமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழும் சமஸ்கிருதமும் பாரதம் முழுவதும் பரவி இருந்த மொழிகள் என்பதை நாம் உணர வேண்டும்.

அதே நேரம் படத்தில் இருப்பது அகத்தியர் தயாரித்த மின்கலம் ஏன்று இந்த கட்டுரையில் எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. இந்த பதிவில் உள்ள ஸ்லோகம் மட்டுமே அவருக்கு சொந்தமானது. இருந்தாலும் இந்த அறிவியல் உண்மையாய் இல்லாவிட்டால் ஒரு வெளிநாட்டு தனியார் தொலைகாட்சி நிறுவனம் இதை அங்கீகரித்து இருக்காது என்பதையும் நாம் உணர வேண்டும்...

அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில் இருந்த ஆவணங்கள் பறிமுதல்: வருமானவரி புலனாய்வு பிரிவு...


கோவை மருத்துவமனையில் 32 பேருக்கு டெங்கு...


இலுமினாட்டி லுசிபெரியனிசக் கொள்கையானது...


பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களுடைய இயக்கங்களாக வேறுபட்ட செயல்பாடுகளுடன் இயங்கி வந்துள்ளது.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இயக்கம் ஆட்சி (dominant) செய்துள்ளது. ஒரே கால கட்டத்திலும் இக்கொள்கை வேறுபட்ட பெயர்களிலும் இயங்கி வந்துள்ளது.

freemasontry என்பதை இதன் பொதுப் பெயராகக் கொள்ளலாம்.

ஈசா நபி உயர்த்தப்பட்டதில் இருந்து முஹம்மது நபியின் காலம் வரை 2 இயக்கங்கள் அதிகம் செயல்பட்டது.

1. ஜெசுவிஸ்ட். Jesuit - இப்போது இது வத்திக்கானை ஆட்சி செய்யும் கூட்டமாக மட்டும் சுருங்கி விட்டது.

2. ப்ரியோரி டி சியோன் (Prieuré de Sion or Priory of Sion).

இவை இரண்டும் ஈசா நபி கொண்டு வந்த உண்மையான மார்க்கத்தை அழிப்பதற்காக பாடுபட்ட இயக்கங்களாகும்.

ஈசா நபி பிறந்த மண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாத இத்தாலியில் உள்ள வத்திக்கானுக்கு கிறித்தவ தலைமையை மாற்றி அமைத்தது இவர்களின் வெற்றிக்கு சான்றாகும். ( இதன் முழு வரலாறு பின்னர் விளக்கப்படும்).

முகம்மது நபிக்குப் பிறகு சிலுவை யுத்தக் காலப் பகுதியில் ஆட்சி செய்த இயக்கம் தான் நைட் டேம்ப்லேர்ஸ்.

இன்றைய காலத்தில் பெயர்பெற்று விளங்கும் இயக்கம்தான் இலுமினாட்டி.

இஸ்ரவேல் சமுதாய மக்கள் வாழ்ந்த பிரதேசம் கானான், ஜெரூசலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும். வரலாற்று ஆசிரியர்களால் kingdom of israel என அழைக்கப்படும் பிரதேசம் இதுவே.

ஈசா நபி உலகத்தில் இருந்த காலத்தில் இன்ஜீல் பெரிய அளவு வளரவில்லை. அவர்கள் உயர்த்தப்பட்டவுடன் இன்ஜீலின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது. ஆனாலும் ஈசா நபியைக் கொல்ல முயன்ற யூதர்களின் கை தான் அப்பிரதேசத்தில் ஓங்கி இருந்தது.

ஈசா நபி உயர்த்தப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெருசலத்தை ரோமர்கள் (இத்தாலியர்கள்) கைப்பற்றினர்.

இவர்கள் பல கடவுள் வழிபாடு செய்வதால் இவர்கள் pagans என அழைக்கப்பட்டனர்.

இவர்கள் யூதர்களுக்கு அதிக அளவில் அட்டூழியம் செய்தனர்.

குறிப்பாக ஒரு கடவுள் கொள்கையைச் சொல்லும் இன்ஜீலை உடைய யூதர்களுக்கு அதிகம் அநியாயம் செய்தனர். ஏன் எனில் இன்ஜீல் ரோமர்களின் மதத்தை அழிக்கும் என்று பயந்தனர்.

அநியாயம் செய்யச் செய்ய, எதிர்க்க எதிர்க்க இன்ஜீலின் வளர்ச்சி இன்னும் அதிகமாகியது. சத்தியம் இப்படித்தான் வரலாறு நெடுகிலும் வளர்ந்தது.

எந்த அளவுக்கு என்றால் 300 ஆண்டுகளில் இன்ஜீல் ரோமப் பேரரசு வரை பரவியது. பல கடவுள் கொள்கைக்கும் ஒரு கடவுள் கொள்கைக்கும் நிலவிய இந்தப் போராட்டத்தை நிறுத்தி இன்ஜீலை அழிக்க எந்த ரோம அரசராலும் முடியவில்லை. இந்தக் காலக் கட்டத்தில் தான் கான்ஸ்டடீன் (constantine the great ) ரோமர்களின் அரசராக வருகிறார் (கிபி 306).

இவர் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிவிட்டார். இன்ஜீல் என்பது அடித்து ஒழிக்க முடியுமான மார்க்கம் அல்ல. மாறாக அணைத்து ஒழிக்க வேண்டிய மார்க்கம்.

இவர் இன்ஜீல் உடையவர்களை எந்த அளவு அணைத்தார் என்றால் அவர் கிபி 312 இல் இன்ஜீல் மார்க்கத்தை தழுவியே விட்டார். கிபி 313 இல் கிறித்தவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன் மிலான் ஆணையை ( Edict of Milan) ஏற்படுத்தி அவர்களுக்கு மதச்சுதந்திரம் அளித்தார்.

துருக்கியின் இன்றைய இஸ்தம்பூலை கேந்திர நகரமாக மாற்றி அதற்கு தனது பெயரான கொன்ஸ்தாந்து நோபிள் என்று பெயர் வைத்தவரும் இவர்தான்.

இந்தக் காலக் கட்டத்தில் உண்மையான இன்ஜீலோடு ஏராளமான பித்அத்களும் கலக்க ஆரம்பித்துவிட்டது. இதன் பின்னர் இவர் ரோமர்களையும், இன்ஜீலை உடையவர்களையும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாட ஏற்பாடு செய்தார்.

இதன் முதல் சந்திப்புக்குப் பெயர் council of nicea என அழைக்கப்படும். இதில் முதன்மையாகப் பேசப்பட்ட விடயம் தான் எமக்கிடையே ஒற்றுமை முக்கியம் என்பது. ஒற்றுமைக்காக நாம் இரண்டு தரப்பாரும் சில மார்க்க விடயங்களை விட்டுத் தர வேண்டும் என்று பேசப்பட்டது.

இதில் முக்கியமாக சொல்லப்பட்ட விடயம் இன்ஜீலில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கை முடிந்த அளவு அஜெஸ் பண்ண வேண்டும் என்பது. தவ்ராத்தின் (அவர்கள் மொழியில் 10 commandments ) சில பகுதிகள் நீக்கப்பட்டன. சிலை வழிபாடு புகுத்தப்பட்டது. உத்தியோகபூர்வமாக இன்ஜீல் modify பண்ணப்பட்ட கிறித்தவமாக மாற்றப்பட்டது இந்த ஒப்பந்தத்தில் தான்.

இதற்கு nicene creed (கிபி 325) என்று பெயர்.
இதன்போது அங்கிருந்த மிகச்சில இன்ஜீல் வேதத்தை ஓரளவு பிடிப்போடு பின்பற்றியவர்கள் கடுமையாக எதிர்த்தனர். அவர்களின் வாதம் எடுபடாமல் போகவே கடைசியில் அவர்கள் வெளிநடப்பு செய்து கலப்படம் கலந்த இன்ஜீலை தனித்தனியாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

(இவர்களின் வரலாறு தனியாக பேசப்பட வேண்டியது. குறைந்த தகவலே உண்டு. )

இவ்வாறு மாற்றப்பட்டதற்கு ஆதாரமாக இன்று கூட கிரித்தவ ஆலயங்களின் கட்டடக் கலை, சிலைகள் போன்றவை யூத கலாச்சாரம் அல்லாது ரோமக் கலாச்சாரமாகக் காணப்படுகிறது.

ரோமன் கத்தோலிக்கம் என்ற பெயர்கூட இதற்கு மிகப்பெரிய சான்றாகும்.

அந்த ஒப்பந்தத்தை ஒத்துக்கொண்ட இன்ஜீலை உடைய மக்களையும், ரோமர்களையும் வைத்து ரோம அரசாங்கம் கிறித்துவத்தை நிறுவியது.

இதுதான் ஈசா நபி கொண்டு வந்த இன்ஜீல் என்று உலகத்துக்கு அறிவித்தது.

இவர்களிடம் ஆட்சி இருந்ததால் உண்மையான ஓரிறைக் கொள்கையாளர்களை விட இலகுவாக தமது பிரச்சாரத்தைப் பரப்ப இலகுவாக இருந்தது.

இதுதான் அரசியல் ரீதியாக இன்ஜீல் ரோமன் கத்தோலிக்கமாக மாறிய சுருக்கமான வரலாறு...

பாஜக ஏழைகளின் சொத்துகளை மேலும் பல மடங்குகள் உயர்த்தவும்...


அத்தாணி, அம்பாணி போன்ற பண முதலைகளுக்கு வரி ஏயிப்பு செய்யும்...

மக்களின் ரேஷன் கார்டுகள் பிடுங்கப்பட்டதாம்...

பாமக அன்புமணி அவர்களின் காவிரி விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி...


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ரயிலில் அளித்த உணவில் முடி...



பெங்களுரில் இருந்து சென்னைக்கு சதாப்தி ரயில் வந்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ரயில் கேண்டீனில் சமைத்த உணவை வாங்கியள்ளார். அதில் அவருக்கு அளித்த வடையில் முடி இருந்துள்ளது.

இதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்ட நீதிபதி, ரயில் பயணிகளுக்கான கருத்து படிவத்தில் உணவு தரம் மோசம் என தனது கருத்தை பதிவு செய்து கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது...

அடேய் இது யார் பார்த்த வேலை டா...


ஆமா ஆமா எங்களுக்கு குமாரசாமி தான் வேணும்....


சென்னை கிண்டி சாலையில், சிக்னலை மறைக்கும் அரசியல் கட்சி பேனர், சிக்னலையே ஆஃப் செய்த பரிதாபம் , அவதிப்படும் வாகன ஓட்டிகள்...


எப்பொழுது போடப்படும் சிக்னல் லைட் என்று வாகன ஓட்டிகள் கேள்வி...

பாமக அன்புமணியை ஆதரித்து கமல் ட்விட்டர்...



Dr.=அன்புமணி.. நீர் சொன்னீர் = ஊழல்..

முந்தி சொல்வதைவிட முன்னேற்றம் பின் = மாற்றம் முன்னேற்றம் என்று சொல்லும் அன்புமணியின் பின்னால் செல்வதே பெருமை..



அன்புமணியை பின்பற்றுவதால் தொண்டன் அல்ல.. மக்களின் ஒருவன்...

தேவைப்படுவோர் உபயோகித்துக் கொள்ளலாம்...


எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்துக்கு 2000 நூல்களை உடனடியாக கொடுத்து இருக்கிறாராம் திமுக ஸ்டாலின். எல்லாம் திராவிடம் எழுதிய பொய், புரட்டு நூல்கள்...


சென்ற பிறந்த நாளில், எனக்கு மாலைகள், சால்வைகள் வேண்டாம், புத்தகங்களாக வழங்குங்கள் என்று மு.க. ஸ்டாலின் கட்டளையிட, திமுக தொண்டரடிகளும் அவருக்கு புத்தகங்களை வழங்கினார்கள்.

எல்லா நூல்களும், திராவிடம், திராவிட வரலாறு, வடுக தெலுங்க ராமசாமி நாயக்கனின் அண்ட புளுகுகள், திராவிட சோட்டா வீரமணியின் ஆகாச புளுகுகள், திராவிட அலம்பி அண்ணாத்துரை, திராவிட கொள்ளைக்காரன்  கருணாநிதி உள்ளிட்ட திராவிட தில்லாலங்கடிகள் எழுதிய நூல்கள் தான்..

இந்த திராவிட குப்பைகளை அள்ளி  எடுத்து,  திராவிட பேட்டா மு.க. ஸ்டாலின் யாழ்ப்பாண நூலகத்துக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். இந்த நூல்களை யாழ்ப்பாண நூலகத்தார் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

தமிழர்களை அவமானப்படுத்தி திராவிடர்களால் புனையப்பட்ட இந்த நூல்களை எக்காரணம் கொண்டும் ஏற்கவேண்டாம்.  வந்து சேர்ந்த அளவிலேயே அவற்றை அழித்து விடவேண்டும்.

இந்த நூல்களை நூலகத்தார் ஏற்றுக் கொள்வார்களேயானால்,  யாழ்ப்பாண நூலகத்தை சிங்களவன் தான் ஒருமுறை கொளுத்தி அழித்தான் என்றால், தமிழர்களும் இன்னொருமுறை கொளுத்தி அழிக்க வேண்டும்...

இந்திய நாட்டின் மூத்த குடிமக்கள் தமிழர்களே...


கடந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன. இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.
இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

ஆனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

பாவாணர் என்னும் தமிழன் கண்டுசொன்ன உண்மை..

இப்போது வெளிவந்துள்ள இந்தச் செய்தி இப்படி இருக்க, தமிழினத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர் – ஆய்வாளர் – பன்மொழிப் பயின்ற மேதை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இந்த உண்மையயயும்; இதற்கு மேலே இன்னும் பல உண்மைகளையும் தம்முடையை 50ஆண்டுகால ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார் என்பது நம்மில் பலர் அரியாமல் இருக்கலாம்.

1.மாந்தனின் முதல்மொழி தமிழே.
2.அந்தத் தமிழே ஆரியத்திற்கு மூலம்.
3.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டம்.

என்னும் முப்பெரும் உண்மைகளைக் கண்டுகாட்டினார் – மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டினார்.

பாவாணருடைய கண்டிபிடிப்பை ஆதிக்க இனத்தவரும் கற்றறிந்த இந்திய மேதைகளும் தமிழினப் பகைவர்களும் ஏளனமும் ஏகடியமும் செய்தார்களே அன்றி, இதுவரை எவரும் சான்றுபட மறுக்கவில்லை.

பாவாணர் கண்டறிந்து சொன்ன தமிழியற் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்புச் செய்து மறைப்பதற்கே இந்தியாவின் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாவும் சொல்லப்பட்டவர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாவாணர் என்ற ஒரு பேரறிஞரின் கண்டு பிடிப்புகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழினப் பகைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்; இப்போதும் இருந்துவருகின்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறு.

ஆனால், பாவாணர் அன்று கண்டு சொன்ன உண்மைகள் இன்று மற்றவர்கள் வாயிலாக – மாற்றார்கள் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போது வந்துள்ள இந்தச் செய்தியும் அதையேதான் பறைசாற்றுகிறது.

காலம் ஒருநாள் கண்டிப்பாக மாறும். உண்மைகள் தற்காலிகமாக மறைக்கப்படலாம். ஆனால், முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இல்லாமல் செய்துவிட முடியாது. (மறைந்துபோன பழந்தமிழர் நாடு - குமரிக்கண்டம்).

உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.

அப்போது, உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம் – உலக இனங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம் – உலக மொழிகளின் வரலாற்று ஆவணங்கள் புதுப்பிக்கப்படலாம்.

அனைத்திற்கும் காலம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும். அப்படி, காலம் பதில் சொல்லும் காலத்தில் அதனை எண்ணிப் பெருமைபடுவதற்கு.. ஒருவேளை பூமிப்பந்தில் எந்த மூலையிலும் ஓர் ஒற்றைத் தமிழன்கூட இல்லாமல் போகலாம்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-2...


அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

முன்பு குறிப்பிட்ட டெல்·பை ஆரக்கிள், ·ப்ளோரிடாவின் குறி சொல்லும் பெண்மணி ஆகியோர் எப்படி தாங்கள் நேரில் கண்டிராத அந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள் என்பதை நம்மால் அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை.

ஆனால் எல்லா நாட்டுப் புராணங்களிலும், மதநூல்களிலும் இது போன்ற அற்புதச் செயல்கள் ஏராளம் உள்ளன. இதற்கும் ஒருபடி மேலாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அசரீரியோ, தேவதூதர்களோ சொல்லும் நிகழ்வுகள் எல்லா மதநூல்களிலும் உள்ளன.

தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் ஜனிப்பான். அவன் உன்னைக் கொல்வான் என்று கம்சனுக்கு அசரீரி சொன்ன கதையை நாம் அறிவோம். கம்சன் அதைத் தடுக்க எல்லா வழிகளைப் பிரயோகித்தும் நடப்பதை மாற்ற முடியவில்லை. இயேசு கிறிஸ்துவும், முகமது நபியும் பிறப்பதும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதாக அந்த மதநூல்கள் சொல்கின்றன.

இதெல்லாம் நிஜம் தான் என்று நம்ப முடியாத பகுத்தறிவு வாதிகள், இது மதவாதிகளின் கட்டுக் கதை என்று சொல்லலாம். மற்றவர்கள் இதெல்லாம் தெய்வ சக்தி அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பு சக்தி என்று நினைக்கலாம். ஆனால் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் சாதாரண மனிதர்கள் சிலருக்கும் அப்படிப்பட்ட அற்புத சக்திகள் கிடைத்த போது, அது பகுத்தறிவுக்கோ, மற்ற அறிவுக்கோ எட்டாத விஷயமாக அனைவரையும் குழப்பியது.

1967 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிகாகோ ரேடியோவில் ஒரு பேட்டியில் ஜோசப் டிலூயிஸ் என்ற 'கிரிஸ்டல் பந்து ஞானி' அந்த வருட இறுதிக்குள் ஒரு பெரிய பாலம் இடிந்து விழும் என்றார். மூன்று வாரம் கழித்து 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓஹையோ நதியின் குறுக்கே இருந்த "வெள்ளிப்பாலம்" இடிந்து விழுந்து பலர் இறந்தனர்.

1968, ஜனவரி எட்டாம் தேதி நாட்டில் பெரிய கலவரம் வரும் என்றார். 1968, ஏப்ரல் ஏழாம் தேதி சிகாகோவில் பெரிய கலவரம் வந்து ஐயாயிரம் மத்திய அரசுப்படையினர் வந்து அடக்க வேண்டியதாயிற்று.

1969, ஜனவரி 16 ஆம் தேதி சிகாகோ நகரின் ஓட்டலின் ஒரு பாரில் நுழைந்து அங்குள்ள சர்வரிடம் சிகாகோவின் தெற்குப்பகுதியில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தைப் பற்றி அன்றைய தினப் பத்திரிக்கையில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று கேட்க அங்குள்ளவர்கள் திகைத்துப் போனார்கள். முன்பே அவர் இது போன்ற விஷயங்களில் பிரபலமானபடியால் அன்றைய பத்திரிக்கைகளில் ஒன்றும் வராவிட்டாலும் ரேடியோவிலாவது ஏதாவது செய்தி வருகிறதா என்று ரேடியோவைப் போட்டார்கள். அப்போது இரவு மணி 11. ஆனால் ரேடியோவில் விபத்தைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. அது வரை நடக்கவில்லை என்பதை அறிந்த டிலூயிஸ் உறுதியாகச் சொன்னார். "இந்தப் பகுதியில் கடந்த 25 வருடங்களில் இது போன்ற பெரிய விபத்து நடந்திருக்காது. அப்படிப்பட்ட விபத்து நடக்கும்."

இரண்டு மணி நேரம் கழித்து சிகாகோவிற்குத் தெற்கே இல்லினாய்ஸ், சென்ட்ரல் ரயில்கள் பனிமூட்டத்தின் காரணமாக மோதிக் கொண்டன. 47 பேருக்குப் பலத்த காயம். மூன்று பேர் இறந்தனர். அவர் கூறியது போல அதுவே அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் மிகப்பெரிய விபத்து.

1969, மே 21ல் டிலூயிஸ் "இண்டியானாபோலிஸ் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும். அதில் 79 பேர் மரணமடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் 330 என்ற எண் அதில் சம்பந்தப்படும்" என்றார். 1969, செப்டம்பர் 9 ஆம் தேதி அலிகனி ஏர்லைன்ஸ் விமானம் ஒரு தனியார் விமானத்துடன் மோதி 79 பயணிகள் இறந்தனர். விபத்து நேர்ந்த நேரம் மதியம் 3.30.

1968 டிசம்பர் 15 ஆம் தேதி டிலூயிஸ் "கென்னடி குடும்பத்திற்கு தண்ணீர் மூலம் ஒரு கண்டம் இருக்கிறது. ஒரு பெண் நீரில் மூழ்கியதைப் பார்த்தேன்" என்றார். 1969, ஜூலை 18 ஆம் தேதி மேரிஜோ என்னும் பெண் எட்வர்டு கென்னடியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சம்பவம் எட்வர்டு கென்னடியின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

பொதுவாகவோ, எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும்படியாகவோ சிலர் எதை எதையோ சொல்வதுண்டு. அப்படிச் சொல்வதில் ஏதாவது ஒன்று பலித்து விட்டால் அதை விளம்பரப்படுத்தி நல்வாக்கு சித்தர் என்றோ முக்காலமும் உணர்ந்த மகான் என்றோ பெயர் வைத்துக் கொள்வதுண்டு. உதாரணத்திற்கு "அடுத்த ஆண்டு ஒரு பெரும் ரயில் விபத்து நடக்கும். நாட்டில் எங்காவது குண்டு வெடிக்கும். புதியதாக ஒரு நோய் வந்து மனிதர்களைத் தாக்கும்" என்று நான் சொன்னால் மூன்றில் இரண்டு கண்டிப்பாகப் பலிக்க சாத்தியமுண்டு. உடனே நான் விகடனில் அன்றே இந்த தேதியில் இப்படிச் சொன்னேன் என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படி இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது. ஆனால் டிலூயிஸ் அப்படி பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லவில்லை. அவர் சொன்னது எல்லாமே அப்படி சொல்ல முடிந்த விஷயங்கள் அல்ல.

இப்படி நடப்பதை முன் கூட்டியே சொல்லி திகைப்பில் ஆழ்த்திய டிலூயிஸ் ஒரு சாதாரண முடிதிருத்தக் கலைஞர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் கடற்படையில் சேர்ந்தார். பணியிலிருந்து விலகுவதற்கு முன்பு ஒரு முறை தான் வேலைக்கு செல்லும் கிடங்கில் ஏதோ ஒரு பெரிய விபத்து ஏற்படுவதாக அவர் உள்ளுணர்வு சொல்ல அவர் அன்று வேலைக்குப் போகாமல் இருந்து விட, உண்மையாகவே அங்கு ஒரு பெரும் விபத்து அன்று நிகழ்ந்தது. அன்று வேலைக்குப் போகாததால் அவர் உயிர் தப்பித்தார். பிறகு இவர் கிரிஸ்டல் பந்தைப் பார்த்து எதிர்காலக் கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த ஆரம்ப உள்ளுணர்வின் பின் இவருடைய எல்லா முன்கூட்டிய கணிப்புகளைக் கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும். எல்லாமே விபத்துக்கள் பற்றியதாகத் தான் இருந்தன.

ஜோசப் டிலூயிஸிற்கு இப்படி விபத்துகளை அறியும் சக்தி கிடைத்ததென்றால் சில மனிதர்களுக்கு திடீரென்று வேறு மாதிரியான அபூர்வ சக்திகள் கிடைத்த நிகழ்ச்சிகளும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

அவற்றையும் பார்ப்போமா?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....

திராவிடத்தைத் தமிழ்கொண்டு தாக்கிய பாவணர்...


தமிழர்கள் திரவிடர்கள் அல்லர்
திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்..

தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி..
திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது..

பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாதது போல்,
வடமொழி கலந்து ஆரிய வண்ணமாய்ப் போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது..

தமிழ் தூய்மையான தென்மொழியென்றும்
திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழி என்றும் வேறுபாடு அறிதல் வேண்டும்.

தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையுங் கலப்பது போன்றது.

தமிழ் என்னுஞ்சொல்லிலுள்ள, உணர்ச்சியும் ஆற்றலும்
திரவிடம் என்னுஞ்சொல்லில் இல்லை.

திரவிடம் முக்கால் ஆரியமாதலால்,
அதனொடு தமிழையும் இணைப்பின்,
அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போலக் கெட்டுப்போம்.
பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்.

வடமொழியை நட்பாகக்கொள்ளும் திரவிடத்திற்கும்,
பகையாகக்கொள்ளும் தமிழுக்கும்
சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.

தமிழ் தனித்தியங்கும், திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

தமிழ் வேறு திரவிடம் வேறு என்பதுடன்
ஆரியமும்திராவிடமும் ஒன்றேயென அறிக.

நடந்தது பிராமணர் ஆட்சி,
நடப்பது திரவிடர் ஆட்சி,
நடக்கவேண்டியது தமிழர் ஆட்சி.

- பாவணர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா.. சத்தமில்லாமல் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் விலை...


ஒரு நிகழ்ச்சி காரணமாக மதுரைக்கு கிளம்பிய கொளத்தூர் மணியை பாதி வழியில் மடக்கிய காவல்துறையினர்...


நீங்கள் மதுரைக்கு செல்லவேண்டாம்,  சென்னைக்குத் திரும்பி செல்லுங்கள் என்று சொன்னார்கள்.

எதற்கு என்று கொளத்தூர் மணி கேட்க, சமீபத்தில் நீங்கள் வீரத்தமிழர் ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களை ஒருமையில் அவன், இவன், அவன் சிலைகளை உடைக்கவேண்டும்  என்று பேசி இருக்கிறீர்கள். இது கேட்டு மதுரை மக்கள் கோபமாக இருக்கிறார்கள். நீங்கள் அங்கே போனால் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை . அதனால் தயவு செய்து  திரும்பி செல்லுங்கள் என்று சொல்ல, பயந்துபோன கொளத்தூர் மணி சென்னைக்கு ஓடி வந்து விட்டார்.

வரும் அக்டொபர்  மாதம் ஐயா பொன். முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சிக்கு கூட மு.க. ஸ்டாலினை அனுமதிக்கக்கூடாது என்று மதுரை மக்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

சசிகலா , தினகரன் உள்ளிட்ட தேவர் சமுதாயத்தினருக்கு எதிராக அவர் செய்துவரும் எதிர் செயல்களால் கோபமுற்றுக்  கிடக்கிறது தமிழர் தேவர் சமுதாயம்.

ஆகவே இந்தவருடம் ஸ்டாலின் கூட மதுரை தாண்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது...

புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்க்கர் சொத்துக்கள் முடக்கம், கல்குவாரிக்கு சீல் - மாவட்ட நிர்வாகத்திற்கு வருமான வரித்துறை உத்தரவு...


ஆர்கே நகர் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள அவரின் 100 ஏக்கர் நிலமும் முடக்கப்பட்டுள்ளது...

பாஜக வும் தமிழின துரோகி தமிழிசையும்...


நேர்மையின் இமயம் தோழர் ப.ஜீவானந்தம்..


பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு என்ன காமராஜ் என்று கேட்டார். என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?  என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.

உடனே ஜீவா, நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார். காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும் நின்று கொண்டே பேசினார்கள்.

 நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன் என்றார் காமராஜர்.

காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும் என்று ஜீவா மறுக்க, அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம் என்று அழைத்தார்.

அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் என்று அனுப்பி வைத்தார். கண்டிப்பாக வரணும் என்றார் காமராஜர். விழாவுக்கு அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா. என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, நல்ல வேட்டி  ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே.. என்றார். உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர். விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின்
வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார். ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்....? என்றார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர், ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்றார்.

உடனே காமராஜர், ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான்  என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது. நோய்  வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா. தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... காமராஜருக்கு போன் பண்ணுங்கள்.. என்பது தான்.

இனி எங்கே கான்பது இது போன்ற தலைவர்களை அடித்தட்டு மக்களோடு மக்களாக வறுமையை உனர்ந்த, பகிர்ந்த தலைவர்கள், கர்மவீரர், ஜீவா, கக்கன் போன்ற தலைவர்கள்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-1...


ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள் பண்டைய கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரபலம்...

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் க்ரோசியஸ் என்ற மன்னன் அரசியலில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க ஆரக்கிள்களிடம் குறி கேட்க எண்ணினான். அதற்கு முன் அந்த ஆரக்கிள்கள்களுக்கு உண்மையில் அந்த அற்புத சக்திகள் உள்ளனவா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். உடனே அவன் ஏழு திசைகளில் ஏழு ஆரக்கிள்களிடம் தன் சேவகர்களை அனுப்பி "இன்றிலிருந்து சரியாக நூறு நாட்கள் கழித்து அவர்களிடம் கேளுங்கள் "இந்த நேரத்தில் எங்கள் அரசர் க்ரோசியஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் உடனடியாக வந்து சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.

அந்த நூறாவது நாள் வந்ததும் க்ரோசியஸ் எந்த யூகத்திலும் அந்த ஆரக்கிள்கள் தன் செயலைச் சொல்லி விடக்கூடாது என்று எண்ணி வழக்கமாகச் செய்யும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வினோதமான ஒரு காரியம் செய்தான். ஒரு ஆமையையும் ஒரு ஆட்டையும் கொன்று இரண்டையும் ஒரு பெரிய வெண்கலப் பாத்திரத்தில் போட்டு வெண்கலத் தட்டால் மூடி வேக வைத்துக் கொண்டிருந்தானாம். டெல்·பை என்ற ஆரக்கிள் "எனக்கு ஆமை வாசனை தெரிகிறது....நெருப்பில் ஒரு ஆட்டுக்குட்டியின் சதையும் பொசுங்குகிறது தெரிகிறது. அது வெண்கலப்பாத்திரத்தில் போடப்பட்டிருக்கிறது. அதன் மூடியும் வெண்கலம்" என்று கூறினாராம்.

அரசர் அந்தப்புரத்தில் இருக்கிறார், மந்திரிகளுடன் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறார் என்று யூகத்தில் சொல்வது சுலபம். அது பல நேரங்களில் பலிக்கவும் கூடும். ஆனால் க்ரோசியஸ் மன்னன் செய்து கொண்டு இருந்ததைச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அந்த ஆரக்கிளிடம் அந்த சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை இது போன்ற கதைகள் ஏராளம். ஒரு உண்மை சம்பவம் இருந்தால் ஆயிரம் கற்பனைச் சம்பவங்கள் புனைக்கப்படுகின்றன. கேட்பவைகளில் இருந்தும் படிப்பவைகளில் இருந்தும் உண்மையான சம்பவத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. எதை யார் கூறுகிறார்கள், கூறுபவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது, எந்த ஆதாரத்தில் சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து உண்மை என்று நம்பக்கூடியதை மட்டுமே நான் இந்த உளவியல் தொடரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றில் சொல்லப்பட்ட அந்த சம்பவத்தைப் பார்த்தோம். 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ·ப்ளோரிடாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அந்த நகரில் ஒரு மத்திய வயது நபர் ஒரு நாள் வீட்டை விட்டு தன்னுடைய டிரக்கில் கிளம்பிப் போனவர் பின் திரும்பி வரவேயில்லை. உடனடியாகப் போலீசில் தெரிவிக்கப்பட்டது. யாரும் கொன்றிருக்கவோ கடத்தியிருக்கவோ வாய்ப்பில்லை என்பதை போலீசார் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தனர். ஆனால் பிறகு அவரைக் கண்டு பிடிக்க முயன்ற போலீஸாரின் முயற்சி வெற்றி பெறவில்லை. தீயணைப்புப் படையினர் உதவியும் பெற்று பல இடங்களில் சுமார் 16 மாதங்கள் முயன்று தோற்ற போலீசாருக்கு ஒரு அபூர்வ சக்தி படைத்த பெண்மணியின் உதவியைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. காணாமல் போன மனிதர்கள், பொருட்கள் பற்றி அந்தப் பெண்மணி துப்பு தருவதில் வல்லவர் என்று சொல்லப்பட்டது.

நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும் முயற்சி செய்வதில் நஷ்டமில்லை என்று அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன்னிடம் ஒரு மாதத்திற்கு அப்பாயின்மென்ட் இல்லையெனவும் ஒரு மாதம் கழித்து காணாமல் போன நபரின் ஏதாவது சில உடைமைகளை எடுத்துக் கொண்டு வருமாறும் அதிகாரியிடம் சொன்னார். அந்த அதிகாரியும் அந்த நபரின் ஷ¥, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியிடம் சென்றார்.

அந்த நபரின் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிய அந்தப் பெண்மணி சில நிமிடங்களில் சில துப்புகள் தந்தார். அந்த நபரின் உடல் இன்னும் அந்த டிரக்கின் உள்ளே தான் இருக்கிறது. எங்கிருந்தோ கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதால் அந்த மனிதர் அந்த டிரக்கோடு கீழே ஏதாவது பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அந்த இடத்தின் அருகே சிவப்பு செங்கல்கள், பழைய ரெயில்வே டிராக் தென்படுகின்றன என்றும் சொன்னார். அந்த மாகாண வரைபடத்தில் ஒரு சதுரத்தை வரைந்து அந்த இடத்தில் தேடச் சொன்ன அந்தப் பெண்மணி 1,2,4,5 எண்களுக்கு சம்பந்தமுள்ள இடங்களில் பார்க்கச் சொன்னார்.

அந்த அதிகாரி சில நாட்கள் அந்தப் பெண்மணி வரைபடத்தில் வரைந்த சதுரத்திற்குள் இருக்கும் இடங்களில் எல்லாம் தேடி சலித்துப் போனார். அந்த நபரின் உடல் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்மணியை நம்பி வந்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்ட அந்த அதிகாரி திரும்பத் தயாரான போது ஓரிடத்தில் சிவப்பு செங்கல்கள் கொண்ட நிலப்பரப்பு தொலைவில் தெரிந்தது. அவருக்குள் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது. அந்த இடத்தை நோக்கி விரைந்தார். அது ஒரு கைவிடப்பட்ட குவாரி. அங்கே சென்று ஆராய்ந்த போது ஒரு பழைய ரெயில்வே டிராக்கைக் காண முடிந்தது. அந்த டிராக்கும் புல்களால் மூடப்பட்டிருந்தது. அந்த குவாரியின் உச்சியில் சென்று பார்த்த போது சுமார் எழுபதடிக்குக் கீழே ஒரு பெரிய நீர்நிலை இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த நீர் நிலை முழுவதும் சகதியும், புற்களும் மண்டியிருந்தன.

அந்தப் பகுதி ஹைவே 45க்கு அருகே இருந்தது. அங்கிருந்து 2.1 மைல் தூரத்தில் அந்த உச்சி இருந்ததைக் கணக்கிட்ட அந்த அதிகாரிக்கு எல்லாம் அந்தப் பெண்மணி சொல்வதற்கு ஒத்து வருவது போலத் தோன்றியது. உடனே கடற்படையினரின் உதவியை நாடி அவர் அந்த நீர்நிலையில் ஏதாவது டிரக் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல கடற்படையினர் வந்து தேட டிரக்குடன் அந்தக் காணாமல் போன நபரின் உடலை 25 அடி ஆழத்திலிருந்து மீட்க முடிந்தது.

உள்ளூர் மக்களும், போலீஸ் அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் பின்பு இந்நிகழ்ச்சியை ஆராய வந்த ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இது ஒன்றும் பிரமாதமான விஷயம் அல்ல என்றார். அந்தப் பகுதியே பல குவாரிகள் நிறைந்தது என்பதால் அந்த நபர் அதில் ஏதாவது ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று யூகிப்பது சிரமமல்ல என்றும் சிவப்பு செங்கல்கள், பழைய ரயில்வே டிராக் போன்றவை குருட்டாம் போக்கில் சொல்லப்பட்டு உண்மையாகிப் போன ஹேஷ்யங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஆனாலும் இது போன்ற சிரமமில்லாத யூகங்களை வைத்து போலீசாரால் 16 மாதங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதும் அந்தப் பெண்மணியின் துப்புகள் இல்லை என்றால் அந்த நீர் நிலையை எப்போதாவது தூர் வாரும் வரை அந்த நபரின் உடல் கிடைத்திருக்காது என்பதும் உண்மையல்லவா என்று கேட்டதற்கு இந்தக் கேஸில் அது உண்மை என்று முன்பு தேடிய உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்புப் படை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.

இந்த கி.மு, கி.பி நிகழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....

மகாபாரதமும் - பாரதமும்...


துரியோதனனும் ஸ்டாலினும்...

ரெண்டு பேரும், சொந்த திறமையினால் விட, பிறப்புரிமையை முன்னிறுத்தி, அரசாள நினைத்தவர்கள்..

பீஷ்மரும் அத்வானியும்..

இருவரும் மகுடம் தரிக்கவில்லை. மரியாதை கிடைத்தது. ஆனாலும், இறுதிக்காலத்தில் கையறு நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்.

அர்ஜுணனும் கெஜ்ரிவாலும்..

அதீத திறமையுடையவர்கள்! தர்மத்தின் பக்கம் நின்றதால், மிக உயர்ந்த நிலைக்கு வளர்ந்தவர்கள்!.. ஆனால், தர்மத்தின்படி வாழ்வதின் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.

கர்ணனும் மன்மோஹன் சிங்கும்...

அதிபுத்திசாலிகள். ஆனால், அதர்மத்தின் பக்கம் நின்றதால்,.. வாழ்வில் எந்தவித உயர்வும் காணாதவர்கள்..

சகுனியும் மோடியும்..

இருவரும் நிஜமான போர்/சண்டை செய்ததில்லை.!.. வெறும் கீழ்த்தரமான தந்திரங்கள் மட்டுமே செய்தனர்.

திருதராஷ்டிரனும் சோனியா வும்..

மகன்(கள்) மேல் வைத்த கண்மூடித்தனமான பாசத்தால், நிதரிசனத்தை காணமுடியாத குருடர்களானவர்கள்...

பகவான் கிருஷ்ணரும் அப்துல் கலாமும்..

இருவரையும் கொண்டாடுவோம்,.. ஆனால் அவர்கள் உபதேசித்தவற்றை எதையும் பின்பற்ற மாட்டோம்,..

இவ்வளவு தான்,...
மஹாபாரதமும், .. பாரதமும்...