03/08/2017

திராவிடத்தைத் தமிழ்கொண்டு தாக்கிய பாவணர்...


தமிழர்கள் திரவிடர்கள் அல்லர்
திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்..

தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி..
திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது..

பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாதது போல்,
வடமொழி கலந்து ஆரிய வண்ணமாய்ப் போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது..

தமிழ் தூய்மையான தென்மொழியென்றும்
திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழி என்றும் வேறுபாடு அறிதல் வேண்டும்.

தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையுங் கலப்பது போன்றது.

தமிழ் என்னுஞ்சொல்லிலுள்ள, உணர்ச்சியும் ஆற்றலும்
திரவிடம் என்னுஞ்சொல்லில் இல்லை.

திரவிடம் முக்கால் ஆரியமாதலால்,
அதனொடு தமிழையும் இணைப்பின்,
அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போலக் கெட்டுப்போம்.
பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்.

வடமொழியை நட்பாகக்கொள்ளும் திரவிடத்திற்கும்,
பகையாகக்கொள்ளும் தமிழுக்கும்
சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.

தமிழ் தனித்தியங்கும், திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

தமிழ் வேறு திரவிடம் வேறு என்பதுடன்
ஆரியமும்திராவிடமும் ஒன்றேயென அறிக.

நடந்தது பிராமணர் ஆட்சி,
நடப்பது திரவிடர் ஆட்சி,
நடக்கவேண்டியது தமிழர் ஆட்சி.

- பாவணர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.