02/06/2018

தமிழர்கள் பயன்படுத்திய காசுகள்...


தமிழர்கள் பயன்படுத்திய காசுகள் பற்றிய வரலாற்று தகவல்கள்...

மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார்.

பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறரிடமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.

ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது. இந்தக் காலக்கட்டம் அரப்பன்நாகரிக காலமாக இருக்கலாம்.

அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம். ஏனெனில் அரப்பன் களிமண் தகடுகளில் காளை உருவம்தான் மிகப் பெரியதாக காணப்படுகிறது.

மாடு மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது. குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவதில் இடர்பாடு ஏற்பட்டது. ஆதலால் - சோழிகளை - மையப் பொருளாகப் பின்னாளில் பயன்படுத்தினர்.

சோழிகளைக் கொண்டு குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவது எளிதாக இருந்தது. இம்முறையில் உயர்ந்த மதிப்பில் பொருள்களை வாங்க வேண்டுமானால் மூட்டை மூட்டையாகச் சோழிகளைத் தருதல் வேண்டும.

அது மட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்து போகக்கூடிய தன்மை கொண்டவை. இவ்வாறாக இருக்கும் நேரத்தில் உலோகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆதலால் உலோகத் தகட்டை மையப்பொருளாகக் கொள்ள முடிவெடுத்தனர். அவ்வுலோகத்திலும் செம்பு மற்றும் தங்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இரண்டுமே கடினமான பொருள்கள். ஆகையால் இவை அவர்களுக்கு நன்கு பயன்பட்டன.

செப்புத் தகட்டைச் சாதாரண பொருள்கள் வாங்குவதற்கும், தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அறிய பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தினர்.

தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவிலும், நெல்லிக்கனி வடிவிலும் நிறத்திலும் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இக்காசுகள் மக்கள் கூட்டு வாழ்க்கை நடத்தியபோது பயன் படுத்தப்பட்டவை.

பிறகு தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தபோது தங்களுக்கென சில குலச்சின்னத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அக்குழுக்கள் வெளியிட்ட காசுகளில் ஒவ்வொரு குழுவும் தங்கள் உண்மையே நிலைநாட்ட தங்களது குலச்சின்னத்தைச் செப்புத் தகட்டிலோ அல்லது வெள்ளித் தகட்டிலோ முத்திரையாகப் பதித்து வெளியிட்டனர்.

அப்பொழுதுதான் அவை தங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உரிமை பெறும். அத்தகைய காசுகள் முத்திரை பதிக்கப்பெற்ற காசுகள் என்று காசு இயல் வல்லுநர்களால் அழைக்கப்படுகின்றன.

அனைத்துக் குழுத்தலைவர்களுக்கும் தலைவனாக ஒருவன் உருவானான். அவனே வேந்தன் என்று அழைக்கப்பட்டான். அவ்வாறு உருவானவர்களே தமிழக மூவேந்தர்கள்.

அம் மூவேந்தர்களும் தங்களுக்கென சில காசுகளை வெளியிட்டார்கள் . அவை சதுரச் செப்புக் காசுகள் என்று வழங்கப் பெறுகின்றன.

சேரரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும் மறுபக்கம் வில் அம்பு உருவமும் அல்லது பனை மரம் உருவமும் இருக்கும்.

சோழரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும், மறுபக்கம் புலியினது உருவமும் காணப்படும்.

பாண்டியரது காசில் ஒருபக்கம் யானை உருவமும், மறுபக்கம் மீன் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

குறுநில மன்னரான மலையமான் காசில் ஒரு பக்கம் குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் சின்னமும் காணப்படும்.

குறுநில மன்னரான அதியாமான் காசில் ஒரு பக்கம் நீண்ட கழுத்தையுடைய குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் கரைகள் சின்னமும் காணப்பெறும்.

மேற்குறிப்பிட்ட சதுரச் செப்புக் காசுகளின் காலம் இற்றைக்குச் சற்றேற குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.

இதற்கு அடுத்தகட்ட வளர்ச்சி செப்புச் சதுர மற்றும் ஈய முட்டை வடிவக் காசுகளில் பண்டைத் தமிழ் எழுத்தில் மன்னர் பெயர் பொறித்து வெளியிடப்பட்டவை ஆகும்.

இதுவரை பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறிக்கப்பட்ட காசும், அதிய மன்னன் - சேந்தன் அதினன் எதிரான் - பெயர் பொறிக்கப்பட்ட காசும் தொ¢ய வந்துள்ளன. அவை கி.மு 4-3 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டவை.

காசு வெளியிடுவதில் இதற்கு அடுத்ததாக மன்னன் தலை உருவத்தோடு, மன்னரது பெயர் பொறிக்கப்பட்டு வெளியிடப் பெற்றிருப்பவை காணப்படுகிறது.

முதல் வகைக் காசில் ஒரு பக்கம் வாயிலில் நிற்கும் மன்னன் உருவமும், அவனைச் சுற்றிப் பண்டைத் தமிழ் எழுத்தில் கொல்லிப்புறை என்ற மன்னன் பெயரும் காணப்படுகின்றன. மறுபக்கம் வில் அம்பு உருவம்.

இரண்டாம் வகைக் காசில் மாக்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றாம் வகையில் குட்டுவன்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றுவகைக் காசுகளிலும் கோதை, பொறை, என்ற சேர அரசர்களின் பெயரொட்டுக்கள் காணப்பெறுவதால் இவை சேரர் காசுகள் என்பது தெளிவாகிறது. இக்காசுகளின் காலம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்

மலையமான் காசுகள்...

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன.

அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 - 300 ஆகும்.

இப்போது நாம் பயன் படுத்தும் காசுகள் பல காலங்களையும் பல நாகரிகங்களை தாண்டி வந்து உள்ளது...

தமிழக ஊடங்கங்களால் ஹீரோவாக சித்தரிக்கப்படும் இவர்கள் வெளி மாநிலங்களில் உள்ள ஊடகங்கள் வெளிப்படுத்தும் இவர்களின் உண்மை நிலை...


மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வு....


இயற்கை முறையில் மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வுகள்...

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை எனலாம். மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்...

1. மூட்டழற்சி(osteo arthritis) இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

2. முடக்குவாதம் (rheumatoid arthritis) இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்...

மூட்டழற்சி நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பின்போ, வேலை செய்த பின்போ வலி அதிகமாகும்.

முடக்குவாதம் இது ஆரம்பத்தில் தெரியாது. நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். முழு உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.

முடக்குவாதம் சில கிருமிகளினாலும், உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும், பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

வைத்தியம்...

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6. இரண்டு மேசைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை சர்க்கரை நாரத்தை (orange) சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும்.(இது ஒரு சு(ஸ்) பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்).

மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7. ஒரு மேசைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்...

1. வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.

2. காய்கறி ரசம் (Soup) அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

3. கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்க வேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்...

சாகர்மாலா - சிங்கப்பூர் உத்தரவு...


நாம் அழுதுவடியும் இனமல்ல... தமிழர்களுக்கு போரும் சாவும் புதிதல்ல...


கல்கி எழுதிய 'மோகினித்தீவு' படித்திருக்கிறீர்களா?

1942ல் சப்பான் பர்மாவின்மீது படையெடுத்து ரங்கூனை(யகூன்) கைப்பற்ற முனையும்போது அங்கே வாழ்ந்த பர்மா தமிழர்கள் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறுகிறார்கள்.

பல்வேறு இடர்களுக்கு நடுவில் அவர்கள் பாதி தொலைவு வந்ததும் ஒரு சப்பானிய போர்கப்பல் (க்ரூஸர்) அவ்வழி வருவதாகத் தகவல் வருகிறது; கப்பலின் நாயகர் (கேப்டன்) அருகிலுள்ள ஒரு தீவுக்குள் கப்பலை மறைவாக கரையொதுக்குகிறார்; அந்த கப்பலில் இருந்து இறங்கி அந்த தீவை பார்வையிடச் சென்றவர்களில் ஒருவர் இலக்கியவாதி;

பின்னாட்களில் அவர் அமரர் கல்கியைச் சந்தித்து தாம் அந்த தீவில் காதல் மணம் புரிந்த சோழ இளவரசனையும் பாண்டிய இளவரசியையும் சந்தித்ததாக கற்பனையான ஒரு கதையைக் கூறுகிறார்; இது 1950ல் கல்கி எழுதி 'மோகினித் தீவு' என்ற புதினமாக வெளிவருகிறது.

அந்தக் கதையில் என் மனதில் நின்றது எது தெரியுமா?

அந்த இளவரசனிடம் கல்கியின் நண்பர் போர் நடக்குமுன் தப்பிவந்ததை கூறுகிறார். அதற்கு "தமிழர் நிலை அப்படி ஆகிவிட்டதா? போருக்கு தமிழர் பயப்படும் நிலையும் வந்துவிட்டதா?" என்று அந்த இளவரசன் அதிர்ச்சியாகக் கேட்கிறார்.

தமிழர்களுக்கு போரும் சாவும் புதிதல்ல.

ஆயிரமாயிரம் போர்க்களங்களையும் முள்ளிவாய்க்கால்களையும் கடந்துதான் நாம் தாக்குப்பிடித்து இன்றுவரை மிஞ்சியிருக்கிறோம்.

அதற்கு காரணம் நம் வீரம்.
தமிழன் என்றாலே வீரம்.

நம்மைப்போன்ற பல பழங்குடிகள் இன்று காணாமல் போய் விட்டனர், நாம் அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டோம், இவ்வளவு காலம் தாக்கு பிடித்தது நம் வீரத்தால் தான்.

வீரம் என்பது வெட்டிவீழ்த்துவது மட்டுமில்லை இழப்புகளை மீறி நிமிர்ந்து நிற்பதுதான் வீரம்.

இருகால்கள் இழந்த நிலையில் தள்ளாத வயதில் குதிரைகூட உயிரோடு எஞ்சியிராத போர்க்களத்தில் இருவர் தோளில் தூக்கிக்கொள்ள இருகைகளில் வாளேந்தி களத்தில் புகுந்து எதிரிகளை சிதறடித்த 96விழுப்புண்களே பதக்கங்களாகக் கொண்டிருந்த விஜயாழய சோழன் வழிவந்த தமிழர்களே...

கரிகாலன் இமயமலையைக் குடைந்து அமைத்த பாதை சோழா கணவாய் (chola pass) என்ற பெயரில் இன்றும் இருக்கிறதே, அவன் வழிவந்த நம்மிடம் அவ்வீரம் எப்படி இல்லாமல் போகும்?

உங்களுக்கு வீரத்துறக்கம் என்றால் தெரியுமா?

பிறந்தகுழந்தை இறந்தே பிறந்தால் விழுப்புண் இல்லாத அதன் மார்பில் வாளால் கீறி புதைத்து வீரத்துறக்கம் (வீரசொர்க்கம்) அடைந்து விட்டதாக எண்ணிக் கொள்வர்.

குழந்தை இறந்த துயரம் ஏற்படுத்திய வெற்றிடத்தை வீரவுணர்வால் நிரப்பிய இனம்.

இன்று ஒப்பாரி மட்டுமே வைக்கும் இனமாக ஆனது ஏன்?

எதிரிகள் மிகப்பெரிய வெற்றி நம்மை கொன்றுவீசியது அல்ல, நம்மை நாமே இழிவானவர்களாக நினைத்துக்கொள்ள வைத்ததுதான்.

நாம் காது குத்துவதும், அலகு குத்துவதும், தீமிதிப்பதும், நோன்பிருப்பதும், மலை சுற்றுவதும், காளையடக்குவதும் வெறும் சடங்குகளில்லை போர்ப் பயிற்சியின் வடிவம்.

நாம் கேடயம் அணிந்ததே கிடையாது, வாளின் கூர்மைதான் கேடயம், மாரில் தைத்த ஈட்டியை எடுத்து போரிட்ட வம்சம், தனியறையில் துணையேயில்லாமல் தானே பிள்ளை ஈன்றுகொண்ட இனம்.
இன்று பிணங்களின் படத்தைக் காட்டி நீதிப்பிச்சை கேட்கும் கூட்டமாக மாறியதுதான் நம் தோல்வி.

மே18 இனப்படுகொலை நாள் என்றால் ஒன்றாம் தேதியிலிருந்தே ஒப்பாரி தொடங்கி விடுகிறது.

அவர்கள் உயிரைத் துறந்தது நாம் கூடி அழவா?

இல்லை, அவர்கள் நமக்காக விட்டுச் சென்றது ஒரு காரணம்.

நமக்கு என்ன தான் பெரிதாக கொடுமை நடந்து விட்டது என்று மற்றவர்கள் கேட்டால் காரணம் சொல்லத்தான் அவர்கள் மொத்தமாக செத்து விழுந்தார்கள்.

அந்தப் படுகொலை நிகழ்வை வேற்றினத்தார் எத்தனை முயன்றும் மறைக்க முடியாமல் இன்று உலகத் தமிழரிடம் விழிப்புணர்வு பரவிவருகிறது,

2009 நடந்த படுகொலை 2018 வரையில் 98% தமிழர்களிடம் பரவலாகத் தெரிந்துவிட்டது.

பத்து ஆண்டாகி விட்டதே என்று எண்ணாதீர்கள். சூடு இன்னமும் பரவிக் கொண்டிருக்கிறது.

புலிகளே தமிழகம் வாருங்கள்...

தமிழக விடுதலைக் குழுக்களே மீண்டும் களத்தில் இறங்குங்கள்...

தமிழ் மக்களே தலைவர் வழியில் போராடும் இளைஞர்களுக்கு தயங்காமல் ஆதரவு தாருங்கள்.

ஒருபிடி தமிழ் மண் கூட மாற்றான் கையில் இருக்கக்கூடாது.

மண்ணை மீட்போம் அல்லது மண்ணோடு மண்ணாக கலந்துவிடுவோம்.

அழுதுவடியும் அடிமை இனமாக இருக்க வேண்டாம்.

போர்க்குற்றக் கதைகளெல்லாம் நம் தலைமுறைகளுக்கு உரமூட்ட மட்டுமே பயன்படட்டும்.

இதுவரை அழாமல் இருந்தவன் மாந்தனில்லை.
இனியும் அழுது வழிந்தால் அவன் தமிழனில்லை.

இது திருப்பியழிக்கும் நேரம்...

உலக வங்கி உண்மைகள்...


செத்தாலும் பரவாயில்லை சுத்தமான காற்று வேண்டும் என துப்பாக்கியின் முன்கூட நின்று போராட ஏன் தூத்துக்குடி மக்கள் தயாரானார்கள்?


இது உண்மையான மக்கள் போராட்டமல்ல தூண்டிவிடப்பட்ட சதி என்று பேசுபவர்களுக்காக கீழ்க்கண்ட ஆதாரம்.

கடந்த பத்து வருடங்களில் வெறும் 10% மட்டும் தூத்துக்குடியில் ஜனத்தொகை  வளர்ந்திருக்கிறது. ஆனால் காற்றுமாசு தமிழகத்திலேயே மிக அதிகமாக இந்த பத்து ஆண்டுகளில் வளர்ந்திருப்பது தூத்துக்குடியில்தான்!!

இன்னும் நில மாசு நிலத்தடிநீர் மாசு மேற்புற நீர்மாசு கடல் மாசு இதெல்லாம் இருக்கிறது.

காற்று மாசு என்று வரும்போது மிக முக்கியமான ஒரு விஷயத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கடற்கரை ஓர நிலப்பகுதியின் காற்றுமாசு பெரிய அளவில் கடலை நோக்கிப் போய்விடும். ஆகவே பெரும்பாலும் கடற்கரையோர சென்னை போன்ற நகரங்கள் காற்றுமாசு அதிகமாக உள்ள பட்டியலில் முதலிடம் பெறுவது இல்லை.

தூத்துக்குடி ஒரு கடற்கரை நகரமாக இருந்தபோதிலும் அது தமிழகத்தில் காற்றுமாசில் முதல் இடம் பிடிக்கிறதென்றால் அங்கே ஏற்படும் காற்றுமாசின் அளவு கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாததாக மட்டுமே இருக்க முடியும்...

பற்பசையால் வரும் நோய்கள்...


மருதாணியின் மகத்துவங்கள்...


கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது மருதாணி..

பெண்களின் கைகளுக்கு அழகு சேர்ப்பது மருதாணி தான்..

மருதாணியில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன..

உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன், நகசுத்தி வராமல் தடுக்கும்..

இதன் வேர்ப்பட்டையை அரைத்து புண்களில் தடவினால் கால் ஆணி, புண் சரியாகும்..

தூக்கமின்மைக்கு தூக்க மாத்திரை சாப்பிடுவதற்கு பதிலாக, மருதாணி பூவினை ஒரு துணியில் சுற்றி, தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் தூக்கம் வரும்..

ஒரு சிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்..

இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி விட்டு, இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும்..

இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும், நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் அரைத்து போட்டு காய்ச்சலாம்..

இந்த எண்ணெயை நாளும் தலைக்கு தேய்க்க முடி வளரும், நரைமாறும்..

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு குளியல் சோப்புடன் சிறிது மருதாணியையும் அரைத்து பூசி வர கருந்தேமல் சரியாகும்...

மராட்டிய ரஜினி யும் தமிழின அழிப்பும்...


இராசராச சோழனை பற்றி வந்தேறிகளின் பொய்க் கூற்றும் அதற்கான பதிலும்....


பொய்க் கூற்று….

ராசராசசோழன் என்கிற, அய்யோக்கியனும் தொடர்கிற , அவனின் வாரிசுகளும்..

ராஜராஜ சோழன் போன்ற மக்கள் வீரோதியை, தேவதாசி முறையை கொண்டு வந்து பெண்களை இழிவு படுத்தியவனை, வட இந்தியப் பார்ப்பனர்களை தமிழகத்தில் கொண்டு வந்து இறக்கி, பார்ப்பனியத்தை வலுப்பெறுச் செய்தவனை,­ பல புத்தக்கோயில்களை இடித்தவனை, சைவ சமயத்திற்கு விளக்குப் பிடித்தவனை ‘தமிழ் மன்னர்களின் தலைசிறந்தவன், இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டவன்’ என்று கூச்சமில்லாமல் பெருமை கொள்கிறார்கள்.

இதில் பல சாதிக்காரர்கள் இவனை தங்கள் சாதிக்காரன் என்று பெருமை பொங்க உரிமை கொண்டாடுகிறார்கள்.

இதில் சில அறிவாளிகள் என்கிற அறிவு கோணையர்களும் அடக்கம்...

இதற்கானப் பதில் :

அடிமைப் பெண்கள் பெண்களை ஏற்றுமதி செய்யும் வணிகம் தான் அது. விஜயநகரப் பேரரசில், பெண்கள் ரோமப் பேரரசுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். (மேலது நூல் / 76).

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெசுலி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005).

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விசயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 69 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 70 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 23 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

(மேலது நூல்).

தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் (வடுக வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி) பொதுமகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஅள்ளியில் காணப்படுகிறது.

(கி.பி1113) (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17).

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராசசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது.

அடியார் என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும்.

தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334).

பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.

கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருசுணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேசுவர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது (கர். கல் VAK 105).. (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19).

இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர்.

மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை, ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.

இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.

விசய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.

கோயில்களின் நிர்வாகம் முழுக்க ஆரிய மனுவாதிகளிடம் (பிராமணர்களிடம்) ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் (தெலுங்கு வந்தேறிகள், கன்னட வந்தேறிகள், மலையாள வந்தேறிகள்) காலத்தில்தான்.

இன்று நாம் காணும் மனுவாத (பிராமண) ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விசய நகர – தெலுங்க நாயக்க திராவிடர்களே...

இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

வந்தேறிகளின் கை ஓங்க விட்டுக் கொண்டு இருக்கும் நம்மவர்கள் உணர்ந்து தெளிவாக வேண்டும்…

இப்போது புரிகிறதா தமிழர்களே..

திராவிடர்களுக்கு ஏன் தாலி பிடிப்பதில்லை என்று...

தாசி கலாச்சாரம் திராவிடனின் கலாச்சாரம் அதை தமிழர்களின் மேல் திணித்து தமிழர் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள்..

கெட்டி பொம்மலுவை - கட்டப் பொம்மனாக திரித்து காட்டியது போலத் தான்...

விழித்தெழு தமிழா...

மக்கள் விரோத காவல்துறை யின் துப்பாக்கி சூடு பிண்ணனி...


மருதாணி...


நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள்...

அதனால் நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது.

 மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது...

இவ்வளவுதாண்டா உலகம் முழுக்க நடக்கிற விசயம்...


எந்த இனம் தன் உரிமைக்காக தலைதூக்குகிறதோ... அவர்களின் தலைகளெல்லாம் வெட்டப்படுகிறது...

எகிப்த்தை ஆண்ட தமிழன்...


எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC).

இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக்கூறிக் கொண்டார் .

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்ச்சிக்காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள்.

ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.

இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman) ..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரனங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்..

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதம்...


நியூட்டன் விதியும் கர்மவினையும்...


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.

ஆம் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் எதிர்வினை உண்டு.

இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி அப்படித்தான் செயல்படுகிறது.

வெளிநாட்டவன் பல தவறுகள் செய்தாலும் அது அவனை பொருத்தவரை சரி எனவே அவன் நம்புகிறான்.

நம் ஆழ்மனம் எதை சரி என நினைக்கிறதோ அதை நாம் செய்தால் அது பாவத்தில் சேர்வதில்லை.

மனதின்கண் மாசிலன் ஆதல் என்பதின் அர்த்தம் இதுவே.

இந்த பிரபஞ்சத்தில் எதுவும் சரியும் இல்லை தவறும் இல்லை.

எனக்கு சரியாகப்படுவது, உனக்கு தவறாக படலாம். நமக்கு சரி எனப்படுவது, வேறு சமூகத்திற்கு தவறாக தெரியலாம்.

ஆம் நாம் எதை எப்படி புரிந்து கொண்டோம் என்பதில்தான் கர்மாவே செயல்படுகிறது.

ஆனால் எல்லா செயல்களும் மூலத்தை அடையவே நடக்கிறது என்பது மட்டும் உறுதி...

திராவிடர்களே பதில் சொல்லுங்கள்...


தமிழர்களே ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தை அனுமதிக்காதீர்கள்...


தோழர் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்...

உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலி யுறுத்தி தங்கள் வாழ்வுரிமைக்குப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப் பட்டு, 13 பேரை சுட்டுக் கொன்றார்கள்; அறுபதுக்கும் மேற் பட்டோரை சுட்டுப் படுகாயப்படுத்தினார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் 30.05.2018 அன்று தூத்துக்குடி சென்ற நடிகர் இரசினிகாந்து, இந்தப் போராட்டத்தை சமூக விரோதிகள் வழி நடத்தினார்கள் என்றும், இவ்வாறு போராட்டம் - போராட்டம் என்று நடத்திக் கொண் டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றும் கூறினார்.

அரசின் கணக்குப்படி 20 ஆயிரம் மக்கள் பங்கெடுத்த போராட்டம் - உண்மையில் இதைப்போல் இரண்டு மடங்கு கூடுதலான எண்ணிக்கையில்தான் மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். இந்த மக்கள் போராட் டத்தை சமூக விரோதிகள் வழி நடத்திய போராட்டம் என்று கொச்சைப்படுத்தியதன் மூலம் இரசினிகாந்து தன்னை மக்கள் விரோதி என்று அடையாளம் காட்டிக் கொண்டார்.

இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்தால் தமிழ் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று இரசினிகாந்து கூறியதில் ஓர் உட்பொருள் உள்ளது. இப்போது 13 பேரைத்தான் சுடுகாட்டிற்கு அனுப்பியுள்ளோம். இனி போராட்டங்கள் தொடர்ந்தால் அங்கெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்திதூத்துக்குடியில் செத்ததைவிட அதிக மக்களை சுடுகாட்டிற்கு அனுப்பு வோம் என்ற உட்பொருளில் தான் இரசினிகாந்து அவ்வாறு கூறியுள்ளார்!

காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து செயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் வரை தமிழர்கள் நடத்திய போராட்டங்கள்தான் தொழில் வளர்ச்சியையும் கொண்டு வந்தது; மக்கள் உரிமைகளில் முன்னேற்றங்களையும் கொண்டு வந்தது. உரிமைப் போராட்டங்களே இல்லாத சுடுகாட்டு அமைதியை இரசினிகாந்து விரும்புகிறார்.

நிலம், நீர், காற்று மூன்றையும் நஞ்சாக்கி மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் எந்தத் தொழிற்சாலையையும் - தொழிலையும் மூடச் சொல்லிப் போராடுவதுதான் மக்களைப் பாதுகாக்கும்; அப்போராட்டங்கள் இல்லை யென்றால், மக்கள் உயிரைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் கவலைப்படாத தொழில் துறை வேட்டை ஓநாய்களின் கொள்ளைகள் மட்டுமே மிஞ்சும்..

கடைசியாக ஒன்று...

இரசினிகாந்து மக்கள் விரோதி - தமிழர் விரோதி என்பதைப் புரிந்து கொண்டோம்! திரைப்படக் கொள்ளை வசூல் மட்டுமே அவரின் இலட்சியம் என்று தெரிகிறது. அத்துடன் ஆர்.எஸ்.எஸ். - மோடி குரலைத் தான் வெளிப்படையாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாக இரசினிகாந்தின் காலா திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று தமிழ் நாட்டுத் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்க வேண் டும். காலா படத்தைப் பார்க்க மாட்டோம் எனத் தமி ழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

கர்நாடகத்தைப் பாருங்கள்! காவிரிச் சிக்கலில் ஒப்புக்கு அரைகுறையாகத் தமிழ்நாட்டு உரிமை பற்றி இரசினிகாந்த் பேசினார். அதற்காகக் கர்நாடகத்தில் காலா படம் திரையிட அனுமதியில்லை என்று ஒட்டு மொத்தக் கன்னடர்களும் அரசும் முடிவெடுத்துள் ளார்கள்.

தமிழர்களே ஏமாந்தது போதும்; விழித்துக் கொள்வீர்.

கன்னட நாட்டு இரசினிகாந்தின் காலா படத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்காதீர்கள்.

கருப்பு என்பதை இந்தியில் “காலா” என்று பெயர் வைத்துள்ளார். தமிழ்த் திரைப்படத்திற்கு இந்திப் பெயரா? சிந்தியுங்கள்; செயல்படுங்கள்...

பூமிக்கு அடியில் வாழும் அறிவாந்த இனங்கள்...


கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதேசுவரர் கோவிலில் உள்ள சிற்பங்களில் ஒன்று...


பெண்கள் போர் பயிற்சியில் ஈடுபடுவதுப் போல் உள்ளது…

கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு கலைக்கூடம்...

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட நாள் இன்று நினைவு கூர்வோம்...


தமிழ் அழியவில்லை அழிக்கப்படுகிறது...

சீதாப்பழம்... சின்ன பழம்... பெரிய சத்துக்கள்...


சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும் பளபளப்பைக் கொடுக்கும்.

இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்கவைக்கும்.

பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.

சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். விதையை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல் மிருதுவாகும்.

பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

சீதாப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம்.

எல்லா வயதினரும் உண்ணக்கூடியது. குறைந்த விலையில் கிடைக்கக் கூடியது...

பாஜக - அதிமுக இனைந்து நடத்தும் தூத்துக்குடியில் தமிழினப் படுகொலை...


பிள்ளைகள் பிணமாக தொங்கும் பேய் தீவு – உண்மைச் சம்பவம்...


மெக்சிகோ நகரிலிருந்து 2 மணி நேரம் ஒரு கால்வாய் வழியாக பயணித்தால், ‘சோச்சி மில்கோ’ என்ற மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை அடையலாம்.

பல வருடங்களுக்கு முன் அந்த கால்வாய் வழியாகச் சென்ற ஜூலியன் சாண்டனா பரேரா, ஒரு இளம் பெண்ணின் பிணத்தையும் அவள் விட்டுச் சென்ற பொம்மையையும் கண்டறிந்தார்.

அவளது காலடிச் சத்தத்தையும், ‘அப்பா நீங்க ஏன், என்ன காப்பாத்தல?’ என்கிற அலறல் சத்தத்தையும் கேட்டு மிரண்டு போன அவர், அவள் விட்டுச் சென்ற பொம்மையை ஒரு மரத்தில் கட்டித் தொங்க விட்டார்.

தொடர்ந்து, பேயாய் அலையும் அந்த இளம் பெண்ணின் ஆன்மாவை சாந்தப்படுத்துவதற்காக கடந்த 50 வருடங்களாக அந்த தீவை பொம்மைகளால் அலங்கரிக்க ஆரம்பித்தார்.

இவ்வளவும் செய்த அவரே, சில வருடங்களுக்கு முன் அந்த தீவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தற்போது, இவரது குடும்பத்தினர் இவர் விட்டுச் சென்ற வேலையை செய்து வருகின்றனர்.

அங்கு வைக்கப்படும் பொம்மைகள் அனைத்திலும் அந்த பெண்ணின் ஆவி புகுந்து ஓலமிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷயம் ஊடகங்கள் மூலமாக கசிந்து தற்போது ஏராளமான புகைப்படக் கலைஞர்களும் சாகச விரும்பிகளும் அந்த தீவிற்கு வந்து பொம்மைகளை மரத்தில் தொங்க விட்டுச் செல்கின்றனர்.

பரேரா இறந்து 14 வருடங்கள் ஆன போதும், இன்னும் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக சில பார்வையாளர்களும், அது அவளது அலறல் சத்தம் இல்லை பரேராவின் அலறல் சத்தம் என்று சிலரும் கூறி வருகின்றனர்.

ஒரு சிலரோ, அவர் எந்த பொணத்தையும் பாக்கல, ரொம்ப நாளா இந்த தீவுப்பக்கம் தனியாவே இருந்ததால ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அவர இப்படி எல்லாம் செய்ய வச்சிருக்குதுன்னு கூலா சொல்றாங்க.

எது எப்படியோ, இப்ப வரைக்கும் இருட்டிய பிறகு அந்த தீவுக்குப் போக பலர் பயந்து நடுங்குவது தான் இந்த தீவோட ஹைலைட்...

உலக மக்களின் எதிரி அமெரிக்கா...


அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி....


ஒட்டியாணம் என்பது பெண்கள் இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது.

இந்த அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடையலங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் முற்காலக் கதை மாந்தர்களின் அணி வகைகளிலும் ஒட்டியாணம் இடம் பெறுவதைக் காண முடியும்.

ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில் செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசிய ஒட்டியாணங்கள் விலைக்கு கிடைக்கின்றன. தனி உலோகங்களால் மட்டுமன்றி கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங்களும் செய்யப்படுகின்றன.

ஒட்டியாணம் பொதுவாக உடைக்கு வெளியிலேயே அணியப்படுகின்றது. எனினும் பண்டைத் தமிழர்கள் இடையணிகளை உடைக்குள்ளும் அணிந்ததாகத் தெரிகிறது.

இத்தகைய இடையணிகள் நுண்ணிய உடையினூடாகத் தெரிவது பற்றியும் இலக்கியங்கள் கூறுகின்றன. இடையணிகளை ஆடைகளின் மேல் அணிந்து கொள்வது பற்றிய தகவல்களையும் இலக்கியங்கள் தருகின்றன...

தூத்துக்குடியில் இரவில் வீடு புகுந்து கைது செய்வதாக புகார்...


பெண்கள் அதிகம் பேசுவது ஏன....?


ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்?

பெண்கள்தான் அதிகம் பேசுபவர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதானாம். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பேசுகிறார்களாம்.

அதாவது ஒரு நாளைக்கு அவர்கள் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். அறிவியல்பூர்வமான தகவல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. இதுவரை பெண்கள் அதிகம் பேசுவார்கள் என்று சொல்லி வந்த நிலையில் அறிவியல் பூர்வமாகவே அதை உண்மை என்று சொல்லியுள்ளனர்.

ஆனால் பெண்கள் இப்படி அதிகம் பேசுவதற்கு அவர்களது வாய் மட்டும் காரணம் இல்லையாம். மாறாக பாக்சு(ஸ்)பி 2 என்ற புரதம்தான் காரணமாம்.

பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். ஆண்களை விட இது அதிகமாகும். ஆண்களை விட பெண்கள் ஒரு நாளைக்கு 13,000 வார்த்தைகள் அதிகமாக பேசுகிறார்களாம்.

பெண்கள் இவ்வாறு அதிக அளவில் பேச அவர்களது மூளையில் உற்பத்தியாகும் பாக்சு(ஸ்)பி 2 புரதம்தான் காரணமாம். இது பெண்களின் மூளையில் அதிகமாக சுரக்கிறதாம்.

மனிதர்களைப் பொறுத்தவரை பெண்களின் மூளையில் இந்த புரதம் அதிகம் சுரக்கிறது. எலிகளில், ஆண் எலிகளின் மூளையில் இது அதிகம் சுரப்பதால் ஆண் எலிகளிடம்தான் ஒலி (Sound) அதிகம் இருக்கிறதாம்.

இந்த பாக்சுபி 2 புரதத்திற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மொழிப் புரதம் என்று பெயரிட்டுள்ளனர். காரணம் இதுதான் பேச்சுக்களுக்கும் வார்த்தைப் பிரயோகத்திற்கும் முக்கியக் காரணம் என்பதால். எனவே ஆண்களே, இனியும் பெண்களை பொத்தாம் பொதுவாக வாயாடி என்று சொல்லாதீர்கள், வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல் கூராய்வு அறிக்கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து தான் இறந்தார்கள் என்று இருந்தால் மட்டுமே உடல்களை பெற்றுக் கொள்வோம் என உறவினர்கள் உறுதியாக உள்ளனர்...


இலுமினாட்டியும் குறியீடுகளும் : ஒற்றை கண்...


இவர்கள் தங்கள் அடையாளச் சின்னங்களை நமக்கு பரீட்சியமான கட்டிடங்கள், புத்தகங்கள்,  திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,  ஆல்பம் பாடல்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் வழியாக நமக்கு காட்டுகிறார்கள்..

இவை நம்மை பயமுறுத்துவதற்காகவும் தங்கள் தெனாவட்டை காட்டுவதற்காகவும் இன்னும் சில விடயங்களுக்காகவும்..

இந்த பதிவில் முக்கியமான ஓர் அடையாளத்தை பற்றி மட்டும் பார்ப்போம்..

பிரமீடின் மீது ஒற்றை கண்..

இதுவே இவர்களின் பிரதானமான அடையாளச் சின்னமாக அறியப்படுகிறது..

இதன் பொருள் என்ன?

இந்த பிரமீடை நோக்குங்கள்..

இதன் முழுமையான பொருளை நான் தற்பொழுது சொல்லப் போவது இல்லை. ஏனெனில் அது உங்களை எதிர்மறையாக பாதிக்கலாம்..

எனவே சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்..

அந்த பிரமூடில் 13 வரிசையில் கற்கள் உள்ளன..

இது 13 குடும்பங்களை குறிக்கும்.

மொத்தம் 72 கற்கள் நமக்கு தெரிகின்றன இது இவர்களின் இறைவனின் 72 பெயர்களை குறிக்கும் காபாலாவின் படி..

இது யூதர்களின் ஓர் வழிபாட்டு முறை..

மீண்டும் சொல்கிறேன் இலுமிணாட்டிகள் யூதர்கள் அல்ல..

யூதர்கள் இலுமினாட்டிகளின் சிறந்த பணியாளர்களாக இருக்கிறார்கள்.

அடுத்து மேலே உள்ள ஒற்றைக்கண் இது All seeing eye எல்லாவற்றையும் பார்க்கும் கண் என்று அழைக்கப்படுகிறது..

இது எகிப்திய கடவுள் 'ரா ' வின் கண் எனப் பொதுவாக பார்க்கப்படுகிறது..

ஆனால் நாம் வரலாற்றில் எகிப்துக்கு முன் சென்று இதன் பொருளை அறியலாம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்..

இந்த கண் முக்கோண வடிவ அதிகாரத்தின் உச்சியில் அமைந்துள்ளது..

தங்களுக்கு கீழ் தான் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் இதன் மூலம் காட்டுகிறார்கள்..

அவர்கள் நம்மை கண்காணிக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது..

இந்த அடையாளம் முக்கியமாக எங்கே உள்ளது தெரியுமா?

அமேரிக்காவின் ஒரு டாலர் நோட்டில்..

அடுத்தப் பதிவில் அடுத்த அடையாளச் சின்னத்தோடு சந்திப்போம் தமிழ் சொந்தங்களே..

இதனை நமது இசுலாமிய வழியை பின்பற்றும்  உறவுகள் தச்சால் என்கிறார்கள்..

நீங்களை தமிழை அறிந்தால் தான் இவர்களை முழுமையாக அறிய முடியும்...

இயற்கை என்னும் தாயை தேடி...