கல்கி எழுதிய 'மோகினித்தீவு' படித்திருக்கிறீர்களா?
1942ல் சப்பான் பர்மாவின்மீது படையெடுத்து ரங்கூனை(யகூன்) கைப்பற்ற முனையும்போது அங்கே வாழ்ந்த பர்மா தமிழர்கள் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறுகிறார்கள்.
பல்வேறு இடர்களுக்கு நடுவில் அவர்கள் பாதி தொலைவு வந்ததும் ஒரு சப்பானிய போர்கப்பல் (க்ரூஸர்) அவ்வழி வருவதாகத் தகவல் வருகிறது; கப்பலின் நாயகர் (கேப்டன்) அருகிலுள்ள ஒரு தீவுக்குள் கப்பலை மறைவாக கரையொதுக்குகிறார்; அந்த கப்பலில் இருந்து இறங்கி அந்த தீவை பார்வையிடச் சென்றவர்களில் ஒருவர் இலக்கியவாதி;
பின்னாட்களில் அவர் அமரர் கல்கியைச் சந்தித்து தாம் அந்த தீவில் காதல் மணம் புரிந்த சோழ இளவரசனையும் பாண்டிய இளவரசியையும் சந்தித்ததாக கற்பனையான ஒரு கதையைக் கூறுகிறார்; இது 1950ல் கல்கி எழுதி 'மோகினித் தீவு' என்ற புதினமாக வெளிவருகிறது.
அந்தக் கதையில் என் மனதில் நின்றது எது தெரியுமா?
அந்த இளவரசனிடம் கல்கியின் நண்பர் போர் நடக்குமுன் தப்பிவந்ததை கூறுகிறார். அதற்கு "தமிழர் நிலை அப்படி ஆகிவிட்டதா? போருக்கு தமிழர் பயப்படும் நிலையும் வந்துவிட்டதா?" என்று அந்த இளவரசன் அதிர்ச்சியாகக் கேட்கிறார்.
தமிழர்களுக்கு போரும் சாவும் புதிதல்ல.
ஆயிரமாயிரம் போர்க்களங்களையும் முள்ளிவாய்க்கால்களையும் கடந்துதான் நாம் தாக்குப்பிடித்து இன்றுவரை மிஞ்சியிருக்கிறோம்.
அதற்கு காரணம் நம் வீரம்.
தமிழன் என்றாலே வீரம்.
நம்மைப்போன்ற பல பழங்குடிகள் இன்று காணாமல் போய் விட்டனர், நாம் அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டோம், இவ்வளவு காலம் தாக்கு பிடித்தது நம் வீரத்தால் தான்.
வீரம் என்பது வெட்டிவீழ்த்துவது மட்டுமில்லை இழப்புகளை மீறி நிமிர்ந்து நிற்பதுதான் வீரம்.
இருகால்கள் இழந்த நிலையில் தள்ளாத வயதில் குதிரைகூட உயிரோடு எஞ்சியிராத போர்க்களத்தில் இருவர் தோளில் தூக்கிக்கொள்ள இருகைகளில் வாளேந்தி களத்தில் புகுந்து எதிரிகளை சிதறடித்த 96விழுப்புண்களே பதக்கங்களாகக் கொண்டிருந்த விஜயாழய சோழன் வழிவந்த தமிழர்களே...
கரிகாலன் இமயமலையைக் குடைந்து அமைத்த பாதை சோழா கணவாய் (chola pass) என்ற பெயரில் இன்றும் இருக்கிறதே, அவன் வழிவந்த நம்மிடம் அவ்வீரம் எப்படி இல்லாமல் போகும்?
உங்களுக்கு வீரத்துறக்கம் என்றால் தெரியுமா?
பிறந்தகுழந்தை இறந்தே பிறந்தால் விழுப்புண் இல்லாத அதன் மார்பில் வாளால் கீறி புதைத்து வீரத்துறக்கம் (வீரசொர்க்கம்) அடைந்து விட்டதாக எண்ணிக் கொள்வர்.
குழந்தை இறந்த துயரம் ஏற்படுத்திய வெற்றிடத்தை வீரவுணர்வால் நிரப்பிய இனம்.
இன்று ஒப்பாரி மட்டுமே வைக்கும் இனமாக ஆனது ஏன்?
எதிரிகள் மிகப்பெரிய வெற்றி நம்மை கொன்றுவீசியது அல்ல, நம்மை நாமே இழிவானவர்களாக நினைத்துக்கொள்ள வைத்ததுதான்.
நாம் காது குத்துவதும், அலகு குத்துவதும், தீமிதிப்பதும், நோன்பிருப்பதும், மலை சுற்றுவதும், காளையடக்குவதும் வெறும் சடங்குகளில்லை போர்ப் பயிற்சியின் வடிவம்.
நாம் கேடயம் அணிந்ததே கிடையாது, வாளின் கூர்மைதான் கேடயம், மாரில் தைத்த ஈட்டியை எடுத்து போரிட்ட வம்சம், தனியறையில் துணையேயில்லாமல் தானே பிள்ளை ஈன்றுகொண்ட இனம்.
இன்று பிணங்களின் படத்தைக் காட்டி நீதிப்பிச்சை கேட்கும் கூட்டமாக மாறியதுதான் நம் தோல்வி.
மே18 இனப்படுகொலை நாள் என்றால் ஒன்றாம் தேதியிலிருந்தே ஒப்பாரி தொடங்கி விடுகிறது.
அவர்கள் உயிரைத் துறந்தது நாம் கூடி அழவா?
இல்லை, அவர்கள் நமக்காக விட்டுச் சென்றது ஒரு காரணம்.
நமக்கு என்ன தான் பெரிதாக கொடுமை நடந்து விட்டது என்று மற்றவர்கள் கேட்டால் காரணம் சொல்லத்தான் அவர்கள் மொத்தமாக செத்து விழுந்தார்கள்.
அந்தப் படுகொலை நிகழ்வை வேற்றினத்தார் எத்தனை முயன்றும் மறைக்க முடியாமல் இன்று உலகத் தமிழரிடம் விழிப்புணர்வு பரவிவருகிறது,
2009 நடந்த படுகொலை 2018 வரையில் 98% தமிழர்களிடம் பரவலாகத் தெரிந்துவிட்டது.
பத்து ஆண்டாகி விட்டதே என்று எண்ணாதீர்கள். சூடு இன்னமும் பரவிக் கொண்டிருக்கிறது.
புலிகளே தமிழகம் வாருங்கள்...
தமிழக விடுதலைக் குழுக்களே மீண்டும் களத்தில் இறங்குங்கள்...
தமிழ் மக்களே தலைவர் வழியில் போராடும் இளைஞர்களுக்கு தயங்காமல் ஆதரவு தாருங்கள்.
ஒருபிடி தமிழ் மண் கூட மாற்றான் கையில் இருக்கக்கூடாது.
மண்ணை மீட்போம் அல்லது மண்ணோடு மண்ணாக கலந்துவிடுவோம்.
அழுதுவடியும் அடிமை இனமாக இருக்க வேண்டாம்.
போர்க்குற்றக் கதைகளெல்லாம் நம் தலைமுறைகளுக்கு உரமூட்ட மட்டுமே பயன்படட்டும்.
இதுவரை அழாமல் இருந்தவன் மாந்தனில்லை.
இனியும் அழுது வழிந்தால் அவன் தமிழனில்லை.
இது திருப்பியழிக்கும் நேரம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.