02/06/2018

இராசராச சோழனை பற்றி வந்தேறிகளின் பொய்க் கூற்றும் அதற்கான பதிலும்....


பொய்க் கூற்று….

ராசராசசோழன் என்கிற, அய்யோக்கியனும் தொடர்கிற , அவனின் வாரிசுகளும்..

ராஜராஜ சோழன் போன்ற மக்கள் வீரோதியை, தேவதாசி முறையை கொண்டு வந்து பெண்களை இழிவு படுத்தியவனை, வட இந்தியப் பார்ப்பனர்களை தமிழகத்தில் கொண்டு வந்து இறக்கி, பார்ப்பனியத்தை வலுப்பெறுச் செய்தவனை,­ பல புத்தக்கோயில்களை இடித்தவனை, சைவ சமயத்திற்கு விளக்குப் பிடித்தவனை ‘தமிழ் மன்னர்களின் தலைசிறந்தவன், இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டவன்’ என்று கூச்சமில்லாமல் பெருமை கொள்கிறார்கள்.

இதில் பல சாதிக்காரர்கள் இவனை தங்கள் சாதிக்காரன் என்று பெருமை பொங்க உரிமை கொண்டாடுகிறார்கள்.

இதில் சில அறிவாளிகள் என்கிற அறிவு கோணையர்களும் அடக்கம்...

இதற்கானப் பதில் :

அடிமைப் பெண்கள் பெண்களை ஏற்றுமதி செய்யும் வணிகம் தான் அது. விஜயநகரப் பேரரசில், பெண்கள் ரோமப் பேரரசுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். (மேலது நூல் / 76).

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெசுலி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005).

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விசயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 69 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 70 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 23 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

(மேலது நூல்).

தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் (வடுக வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி) பொதுமகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஅள்ளியில் காணப்படுகிறது.

(கி.பி1113) (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17).

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராசசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது.

அடியார் என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும்.

தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334).

பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.

கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருசுணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேசுவர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது (கர். கல் VAK 105).. (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19).

இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர்.

மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை, ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.

இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.

விசய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.

கோயில்களின் நிர்வாகம் முழுக்க ஆரிய மனுவாதிகளிடம் (பிராமணர்களிடம்) ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் (தெலுங்கு வந்தேறிகள், கன்னட வந்தேறிகள், மலையாள வந்தேறிகள்) காலத்தில்தான்.

இன்று நாம் காணும் மனுவாத (பிராமண) ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விசய நகர – தெலுங்க நாயக்க திராவிடர்களே...

இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

வந்தேறிகளின் கை ஓங்க விட்டுக் கொண்டு இருக்கும் நம்மவர்கள் உணர்ந்து தெளிவாக வேண்டும்…

இப்போது புரிகிறதா தமிழர்களே..

திராவிடர்களுக்கு ஏன் தாலி பிடிப்பதில்லை என்று...

தாசி கலாச்சாரம் திராவிடனின் கலாச்சாரம் அதை தமிழர்களின் மேல் திணித்து தமிழர் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள்..

கெட்டி பொம்மலுவை - கட்டப் பொம்மனாக திரித்து காட்டியது போலத் தான்...

விழித்தெழு தமிழா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.