28/07/2020

கொரோனாவுக்கு பின்பு கட்டமைக்கப்படும் "புதிய உலகம்" எப்படி இருக்கும்...?


அதிநவீன டிஜிட்டல் உலகமாய் மாறியிருக்கும்.

ஒரே உலகம், ஒரே அரசு, ஒரே குடிமகன், ஒரே சட்டம், என்ற நிலையில் இருப்போம்.

ஒட்டு மொத்த அதிகாரமும் ஒருவனின் கையில் இருக்கும்.

RFID Chip ஒவ்வொரு மனிதனின் கைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.

இதுவே தனிமனித அடையாளம், பணப்பரிவர்த்தனை, மருத்துவம், கல்வி  வியாபாரம் பயணங்கள், விமானம் போக்குவரத்து, போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும்.

இயற்கை சுற்றுப்புற சூழல்கள் அழிக்கப்பட்டு, நம்மை சுற்றி நவீன எலெட்ரிக்கல் சாதனங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.

மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மிருகங்களை போல், மனிதர்கள் அடைக்கப்பட்டிருப்பார்கள்.

பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்காக அடிமையாய் நாம் இருப்போம்.

மனிதர்களை கட்டுப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் பொறுப்பில், அதிநவீன ட்ரோன்கள், Artificial intelligence Robots, பணியில் அமர்த்தப்பட்டிருக்கும்.

நாம் அடிமைகள் என்பதை உணராமல் இருக்க, அதிவேக இணைய சேவைகள், அதன் உபகரணங்கள், கேளிகை விடுதிகள், போதை பொருட்கள், விபச்சாரங்கள், ஆடம்பரங்கள் என அணைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பார்கள்.

விவசாயம், விவசாய நிலம் அனைத்தும்  முழுவதும் அழிக்கப்பட்டிருக்கும்.

நமது தற்சார்பு வாழ்கை முறை முழுவதும் அழிக்கப்பட்டிருக்கும்,

வீட்டில் ஆடு, மாடு, கோழி, பன்றிகள்  போற்றவற்றை வளர்க்க தடை செய்யப்பற்றிருக்கும்,

Stem cells மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை முறை இறைச்சி விற்பனை அமலில் இருக்கும்.

உணவு, உணவு பொருட்கள், தண்ணீர், என அனைத்திற்கும், ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் 100 சதவீதம் கையேந்தும் நிலையில் இருப்போம்.

தண்ணீர் பயன்பாட்டிற்கு, குறிப்பிட்ட அளவில் தான் போர் போட வேண்டும் என்ற சட்டம் அமலில் இருக்கும்.

தண்ணீரும், மின்சாரமும் குறிப்பிட்ட அளவே விநியோகம் செய்யப்படும்.

சுவாசிக்கும் காற்றிற்கு ஒரு கார்ப்ரேட் நிறுவனம் உரிமம் வாங்கியிருக்கும்.

குழந்தைகள் பெற்றுக்கொள்ள முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கும்.

தடுப்பூசி வழங்கவோ, பிற மருத்துவ பரிசோதனைகள் செய்யாவோ, பெற்றோர்களிடமோ, யாரிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை, என்ற சட்டம் இருக்கும்.

இயற்கை முறை வைத்தியம், பாரம்பரிய முறை வைத்தியம் என அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும்.

கடல் பகுதிகள் அனைத்தும் தனியார் வசம் இருக்கும்.

சிறு, குறு வணிகம் முழுவதும் ஒழிக்கப்பட்டிருக்கும்.

தங்கம் மற்றும் சொத்துக்கள் குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும்.

நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும், கனிமங்கள், இயற்க்கை வளங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்ற சட்டம் இருக்கும்.

மலைப்பகுதிகளில் மக்கள் வாழ தடை செய்யப்பட்டிருக்கும். மேலும் மக்கள், காடுப்பகுதிகள், மலைப்பகுதிகளுக்கு செல்லவும் தடை செய்யப்பட்டிருக்கும்.

2030ஆம் ஆண்டில் இவையெல்லாம் சாதாரண செய்தியாகவே இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள பலவற்றிக்கு, தற்போதே அடித்தளம் போட்டு விட்டார்கள். நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு புது உலகை உருவாக்க திட்டமிட்டுள்ளனர், சுற்றி பாருங்கள் தெரியும்.

விழித்துக்கொள்வோம்...

பாஜக மோடி கலாட்டா...


உடற்கூறு கணிதம்: 21600 மூச்சுக்காற்று...


எண்ணும் எழுத்தும் - 21600 மூச்சுக்காற்று...

உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது.

இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம்.

இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது.

ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள்.

இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம் (அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.

உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.

ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.

இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.

இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும்.

பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை.

5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.

இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம். இதுவே அனைத்து வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.

10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூச்சின் கணக்கு...

1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில் நாளின் முதல் பாதியில் 10800 மறு பாதியில் 10800.

2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.

நேரத்தின் கணக்கு...

1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்.

2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400 விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1 மூச்சு.

3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் ).

சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு...

1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000.

2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1 மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360 மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்).

3. 60 கடிகைகள் = 1 நாள்.

4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்.

ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது..

1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்.

2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்.

3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்.

4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்.

நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும் இரண்டமறியாத மூடன்' என்கிறார்.

8 என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது.

2 என்பது 'உ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது.

இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்
தகும்...

ஊரடங்கு பின்னால் இருக்கும் அரசியலை ஆராய துவங்குங்கள்...


இந்தியா வில் வளர்ச்சி முன்னேற்றம் என்ற சட்ட திருத்தங்கள் அனைத்தும் பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கு தடையாக வரும் சாமானியனையும், சக உயிர்களையும் சுட்டு கொல்லத்தான்.. EIA 2020 சட்டம்...


கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அதிகம் பேச துவங்கிவிட்டன...



ஐரோப்பிய கண்டத்தில் ஆசிய கண்டத்தில் பெரும் நிறுவனங்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்துவது பெரும் நெருக்கடியாகவும் சவாலாகவும் மாறி வரும் சூழலில் அவர்களின் கண் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது அதிகம் படதுவங்கிவிட்டது..

அவர்களின் முதலீடு யாவும் மறைமுகமாக இந்திய நிறுவனங்களுக்கு வருகிறது..

இதற்கு தான் 100 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதித்தார்கள்..

இதற்காக தான் மேக் இன் இந்தியா திட்டத்தை துவங்கினார்கள்..

இப்போது இதற்காக தான் சுற்றுச்சூழல் குறித்து புதி மதிப்பீடு பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக உருவாக்கப்படுகிறது..

இதெல்லம் நெடுங்காலம் மிக நேர்த்தியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது..

ஊடகங்கள் இதை பெரிய அளவு பேசாது.

இந்த கொரோன நோய் தொற்றை வைத்து மக்களை வீட்டில் அடைத்து ஒரு பெரும் நாடகம் நடத்தி தங்கள் திட்டங்களை மெல்ல மெல்ல நகர்த்தி வருகிறது மத்திய அரசு.

இதை சரிசெய்ய நிறுவனங்களுக்கு எல்லா சலுகைகளும் வழங்க வேண்டும் என்ற பேரில் இதையெல்லாம் மேலும் வேகமாக செயல்படுத்துவார்கள்.

இப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் விடயத்தில் இவர்கள் ஆடும் புது நாடகம் பற்றி புரிந்தவர்களுக்கு எதிர் காலத்தில் இவர்கள் நிகழ்த்த போகும் நாடகங்கள் பற்றி யூகிக்க முடியும்.

குறைந்த பட்சம் மக்கள் இதை விவாதிக்கவாவது வேண்டும்...

கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?



கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது.

கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.

குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.

பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும் இது. இந்த வெட்டுதல்-வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்...

இன்று திமுக ஸ்டாலினை விமர்சிப்பவர்கள் நாளை அறிவாலயத்தின் வாசலில் வாட்ச் மேனாக நிற்க நேரிடும்- வைகோ நாயுடு...


எல்லாம் முன் அனுபவத்துல சொல்றாரு போலருக்கு😏

வேறொருவர் நிலத்தை அபகரிப்பது, ஆக்கிரமிப்பது, ஆட்களைக் கொண்டு மிரட்டுவது, போன்ற தேர்தல் நேரத்து கட்சிப்பணிகளில் பிசியாக இருக்கும் திருப்பூர் திமுக நிர்வாகிகள்...


திராவிடலு பகுதி - 9...



அன்றைய மதராச மாகாணத்தில் 1916ல் முதல் திராவிடக்கட்சியான 'நீதிக்கட்சி' பிறந்ததும் அதோடு சேர்ந்து தமிழ்,தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மூன்று நாளிதழ்கள் பிறந்தன.

தமிழ் - திராவிடம்
தெலுங்கு- ஆந்திர பிரகாசிகா
ஆங்கிலம்- ஜஸ்டிஸ்

இதில் தெலுங்கில் திராவிடப் பெயர் பயன்படுத்தப்படவில்லை என்பதை கூர்ந்து நோக்குக.

அதாவது தமிழரை திராவிடர் என்று ஏமாற்றிவிட்டு, ஆந்திரருக்கு முன் அவர்கள் இனத்திற்கான கட்சியாகவே ஜஸ்டிஸ் கட்சி காட்டிக் கொண்டது புலனாகும்.

இக்கட்சியை இனி 'ஐஸ்டிஸ்' கட்சி என்றே அழைப்போம்.

இந்த கட்சி அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சி செலுத்திய அழகைப் பார்ப்போம்.

இக்கட்சி ஆண்ட 1916 முதல் 1936 வரையான காலகட்டத்தில் முதல்வராக இருந்தவர்களைப் பார்ப்போம்.

திரு.ஏ.சுப்புராயலு ரெட்டி
(7-12-20 முதல் 11-77-21)
பனகல் அரசர்
(19-12-23 முதல் 3-12-26)
திரு.பி.முனுசாமி நாயுடு
(27-10-30முதல் 4-11-32)
பொப்பிலி அரசர்
(5-11-32 முதல் 1-4-37)
சர்.கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
(1-4-37 முதல் 14-7-37)

இவர்களில் எவரும் தமிழர்  இல்லை. எப்படி இருப்பர் ?

திராவிடம் என்பதே தமிழ்ப்பிராமணரை (அதாவது தமிழரை) பின்னுக்குத் தள்ளப் பிறந்ததாயிற்றே..

நன்கு கவனிக்க இவர்கள் அனைவரும் ஆதிக்கவர்த்தினர் ஆவர்.

அதற்காக அக்கட்சியில் தமிழர் குறைவென்று நினைக்க வேண்டாம்.

தமிழ் வாக்காளர் குறைவென்றும் நினைக்கவேண்டாம்.

சரி.நிறையபேர் தாழ்த்தப்பட்டோர்க்கு உரிமை பெற்றுத்தருவதே திராவிடம் என்று முழங்குகின்றனர்.

கிடையவே கிடையாது.

வந்தேறிய பிராமணரிடம் குவிந்து இருக்கும் அதிகாரத்தை மண்ணின் மைந்தருக்கு (அதாவது அவர்கள் பார்வையில் திராவிடருக்கு) பெற்றுத் தருவதாகக் கூறிக்கொண்டு தாழ்த்தப்பட்ட, பிராமணரல்லாத தமிழர் வாக்குகளைப் பெற்ற பிறகு, அவ்வாக்குறுதியை ஒருநாளும்  நிறைவேற்றியதில்லை.

அக்கட்சியில் திரு.ரெட்டைமலை சீனிவாசன், திரு.எம்.சி.ராசா, திரு.வி.ஐ.முனுசாமி, திரு.என்.சிவராஜ் ஆகியப் பட்டதாரி தாழ்த்தப்பட்டத் தலைவர்கள் முன்னனியிலிருந்தனர்.

இவர்களில் எவரும் ஒருமுறைகூட அமைச்சராகவிட்டதில்லை.

திராவிடம் என்பது பிராமணரின் அதிகாரத்தை மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் பிடுங்கிக்கொள்ள உருவாக்கப்பட்டது.

அதாவது தமிழ்நாட்டில் மட்டும்.

அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி இனி எந்தக்காலமானாலும் சரிஆந்திர - கேரள - கன்னட மக்கள்  தம் இனத்தைக் கூறுபோடும் திராவிடத்தைத் துளியும் ஏற்றுக்கொள்வதில்லை.

தமிழகத்தில் கட்சிப் பெயர்களில் திராவிடம், தாழ்த்தப்பட்டோரைக் குறிக்க ஆதிதிராவிடர் எனும் சொற்றொடர் எல்லாம் திட்டமிட்டே புகுத்தப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டத் தெலுங்கு மக்கள் ஆதிதெலுங்கர் என்றே அழைக்கப்படுகின்றனர்.

தமிழகம் தவிர மற்ற எந்த இடத்திலும் திராவிடம் என்கிற பெயரோ, இயக்கமோ, கட்சியோ, நாளிதழோ எதுவும் இன்றுவரை வழக்கில் இல்லை.

திராவிடம் என்பது தமிழரை ஏமாற்றி தமிழகத்தை வேற்றினத்தவரின் கல்வி, வேலை மற்றும் தொழில் வேட்டைக்களமாக மாற்றித்தருவதே ஆகும்.

1936 ல் நடந்ததைப்பற்றி இப்போதென்ன கவலை என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம் இன்றும் தமிழர் தமது அத்தனையையும் வேற்றினத்தவருக்கு 'மொய்' எழுதிவருகின்றனர்.

மற்ற இனத்தவரிடம் பரப்புரை செய்யாமலேயே இயல்பாக இருந்த இனவுணர்வு அவர்களைக் கொடிய திராவிடத்திலிருந்து காத்தது, ஆனால் அன்றையத் தமிழுணர்வாளர் கரடியாய்க் கத்தியும்கூடத் தமிழருக்கு அதெல்லாம் 'செவிடன் காதில் ஊதிய சங்காகிப்' போனது.

அந்தத்தவறை இன்று நாமும் செய்யக்கூடாது.

திராவிடத்தின் பிறவி குணத்தைத் தெரிந்து கொண்டோம்.

மேலும் அலசலாம் தான்.

ஆனால் இது ஒரு குறிப்பிட்டக் கட்சியை விமர்சிப்பதாகிவிடும்.

1930க்குப் பிறகு திராவிடத்தின் அசுரப்பாய்ச்சல் பற்றியும், திராவிடம்  புதுவடிவம் எடுத்ததாகவும் தவறுகள் களையப்பட்டதாகவும் திராவிடவாதிகள் கூறலாம்.

அதையும் அலசத்தானே போகிறோம்...

- தொடரும்...

கன்னியாகுமரி - கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா உறுதி - 20 வது எம்.எல்.ஏ....



ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி..

இதுவரை 4 அமைச்சர்கள் உட்பட 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்...

கட்சில யாரும் சேர மாட்டேங்குறாங்கன்னு 5 முறை குண்டர் சட்டத்தில் கைதான ரவுடிக்கு எல்லாம் இளைஞரணி தலைவர் பதவி வழங்குறானுங்க பாஜாக... அப்புறம் எப்படி மலரும்?


அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் அச்சம் : ஏலியன்ஸ்களால் கடத்தப்படலாம்...


ஏலியன்ஸ் குறித்த தகவலை விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வெளியிட்ட நிலையில் ஏலியன்களால் கடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அமெரிக்கர்கள் அதிக அளவில் காப்பீடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வேற்று கிரகங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை நிறுவி, ஆராய்ச்சி செய்து வருகிறது.

இதன் முடிவுகள் கடந்த சில தினங்களுக்குள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேற்று கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் கலிபோர்னியாவில் நாசா விஞ்ஞானி மரியோ பெரஸ், நாசா மேற்கொண்ட கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் 219 கிரகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த கிரகங்களுடன் சேர்த்து, இப்படி கண்டு பிடிக்கப்பட்டுள்ள மொத்த கிரகங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 34 என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறு புதிய கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வரும் நிலையில், வேற்று கிரகவாசிகளால் தாங்கள் ஒரு வேளை கடத்தப்பட்டு விடக்கூடும் என கருதி அமெரிக்காவில் 40 ஆயிரம் பேர் காப்பீடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை ஏலியன்ஸ்கள் தாக்குவது போலவும், வேற்று கிரகவாசிகள் அடிமைப்படுத்துவதை போலவும் ஹாலிவுட் படங்கள் வெளியாகி வருகின்றன.

அதே பாதிப்பில் அமெரிக்கவாசிகள், வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்படலாம் என்ற கற்பனையில் கனவு கண்டு காப்பீடு செய்கிறார்களோ என்னவோ?

நம் ஊரில் எலிக்கு பயப்படுவது போல அமெரிக்காவில் ஏலியன்ஸ்க்கு பயப்படுறாங்க போல...

ஏன்டா பாஜக நாராயணா நீ சோத்தை தான் திங்குறீயா.. என்ன பொழப்பு டா உனக்கு...


பாஜக மோடி கலாட்டா...


திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கம் ஏன்.?

                   
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார். “தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில்
எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு”

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

ஆதாரம் - கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)...

பாஜக மாணவர் அமைப்பு லட்சணம்...


பாஜக எனும் பாலியல் ஜல்சா கட்சி விஞ்ஞானிகள் 🤣


வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் என தெரியுமா..?



வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும்..

வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும்..

ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி என்றாவது உங்களுக்குள் எழுந்திருக்கிறதா..?

அதற்கான விடை தான் இந்த கட்டுரை..

நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை..

அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது..

முக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட..

கர்பிணி எப்போது தன் கணவனை பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, ஏன் எதற்கு என அனைத்திற்கும் காரணம் இருக்கின்றன..

காரணம் 1..

ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம். இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர்..

காரணம் 2..

ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்..

காரணம் 3..

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது.
பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர்.

காரணம் 4..

மேலும், வளைகாப்பில் வளையல் போடும் நிகழ்வு சிறப்புக்குரியது.
ஆம், கர்ப்பிணி பெண்ணின் வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு போன்றது, இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்..

காரணம் 5..

ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம்.
இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம்.
வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள்.
இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள்..

காரணம் 6..

சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது.. அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில்.
இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள்..

காரணம் 7..

மேலும், சுகப்பிரசவம் நடக்க, தாயும், சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால், இன்றோ பெண்கள் சுக பிரசவம் என்றாலே அச்சம் கொள்கின்றனர். அதற்கு காரணம், சரியான அளவு உடல் வேலை இல்லை, உடலில் தெம்பும் இல்லை..

எனவே, வலியை மனதில் கொண்டு சிசேரியன் செய்துக் கொள்ள தலையாட்டி விடுகிறார்கள்...

தமிழக அதிமுக அரசு கட்டிய 140 வீடுகளை காணலயாம் 😂😅


மற்ற நாடுகள விட கொரோனா பாதிப்பு குறைவாம் பாஜக மோடியின் புதிய உருட்டு 🤣🤣🤣


திராவிடலு பகுதி - 8...



1900களில் பிராமண ஆதிக்கத்தையும் அதைப் பிடுங்கிக்கொள்ள ஆதிக்கசாதியர் பிராமணருடன் போட்டியிட்டதையும்,  திராவிடப் பரப்புரை முடுக்கிவிடப்பட்டதையும் பார்த்தோம்.

முதலாம் உலகப்போர் 1914 தொடங்கி 1918 ல் முடிந்த பிறகு ஆங்கிலேய அரசின் பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து இந்திய விடுதலைப் போராட்டம் வீறிட்டெழுந்தது.

அப்போது நாடுமுழுவதும் காங்கிரசை விட செல்வாக்காக இருந்தது 'அன்னிபெசண்ட்' அம்மையாரின் 'அகில இந்திய ஹோம்ரூல் லீக்'.

இதன் சென்னைக்கிளை தமிழ் பிராமணர் கட்டுப்பாட்டில் இருந்தது
(உண்மையாகவே விடுதலையை நோக்கமாகக் கொண்ட தமிழ் பிராமணர்).

இந்நேரத்தில் இந்திய சட்டசபை உறுப்பினர் 19 பேர் கையொப்பமிட்ட கூட்டறிக்கை ' பூரண சுயாட்சி'  கோரியது.

ஏதேது ஆங்கிலேயர் சுயாட்சி வழங்கினால் அது ஹோம்ரூல் மூலமாக தமிழ்ப்பிராமணருக்குப் போய்விடுமோ என்று வேற்றுமொழி ஆதிக்க சாதியினர் பதற்றமடைந்தனர்.

இந்நிலையில்தான் அவர்கள் தமக்கென்று ஒரு கட்சியை தொடங்குவது என்று தீர்மானித்தனர்.

இவ்வாறு அவர்கள் தோற்றுவித்த முதல் திராவிடக் கட்சியான 'நீதிக்கட்சியின்' முகத்திரையை சற்று  விலக்கிப் பார்ப்போம்.

இக்கட்சியை தொடங்கிய இருவரில் முதலில் டாக்டர்.டி.எம்.நாயர் பற்றி அறிவோமாக.

மலையாளியான இவர் முதலில் காங்கிரசில் இருந்தார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் தமிழ்ப்பிராமண வாக்காளர் நிறைந்த திருவல்லிக்கேணித் தொகுதியில் நான்குமுறை வெற்றிபெற்றவர்.

பிறகு ஒருமுறை தொல்வியைத் தழுவினார்.

தமிழ்ப்பிராமணர் மீது வந்ததே கோபம், உடனே தமிழரல்லாத இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முடிவெடுத்தார். அப்போது சென்னை மாநில கவர்னராக இருந்த 'வெல்லிங்டன் பிரபுவை' சந்தித்தார்;

தமிழரல்லாத இயக்கத்தை  பிராமணரல்லாத இயக்கம் என்கிற பெயருடன் தொடங்குவாயாக என்று கவர்னர் ஆசி வழங்கினார்.

இவரை சகமலையாள ஆதிக்க வர்க்கத்தினர் தூண்டினர்.

இரண்டாமவர் தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர்.பி.டி.தியாகராயர். இவர் தனிப்பட்ட முறையில் பண்பான மனிதராகவே பலருக்கும் தோன்றியவர்.

இவர் நீதிக்கட்சியான 'ஜஸ்டிஸ் கட்சி'யைத் தோற்றுவித்து அதன் தலைவராக தனது கட்சியின் கொள்கைப்பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த முதல் அறிக்கையே தமது கட்சிக்கு வித்தூன்றிய சர்.அலெக்சாண்டர் கார்ட்யூவுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிட்டு,
இந்தியர்கள் ஒரேடியாக ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரம் கோரக்கூடாதென்று கூறியது.

அதேபோல 19 டெல்லி சட்டசபை உறுப்பினர் ஒப்பமிட்டு சுயாட்சி கோரியதையும் வன்மையாகக் கண்டித்தது.

தவிர நாட்டில் வாழும் பல்வேறு மக்களுக்கு இடையே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கக்கூடியவர் ஆங்கிலேயரே என்று கொஞ்சமும் ஒளிவு மறைவின்றி அப்பட்டமான தமது ஆங்கிலேய விசுவாசத்தை வெளிப்படையாகக் காட்டியது.

ஆங்கிலேய ஆளுகையில் ஒட்டுமொத்த நாடே அடிமைப்பட்டுக் கிடக்கும்போதே தமது நலனில் மட்டும் அக்கறை கொண்ட புண்ணியவான்களின் பாசறைதான் திராவிடக் கூடாரம் என்பதை இதைவிடத் தெளிவாக கூற வேண்டியதில்லை.

திராவிடவாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆங்கிலேயரை எதிர்த்ததே கிடையாது.

எப்படி எதிர்ப்பர்? ஆங்கில வல்லாதிக்கத்தின் நீட்சி தானே திராவிட ஆதிக்கம்.

அப்படி இருந்தும் இந்தக் கட்சி 1936வரை ஆட்சியும் செலுத்தி தமிழர் எவரையும் ஆளவிடாமல் தாழ்த்தப்பட்டவரையும் மேலே வரவிடாமல் சாதனை மேல் சாதனை புரிந்ததை பார்க்கத்தானே போகிறோம்.

- தொடரும்...

தமிழ்நாட்டில் நடக்கும் ஏராளமான குற்ற சம்பவங்களின் பின்னணிகள் அனைத்திலும் திமுவி னர் தான் என்றும் முன்னணியில் இருக்கிறார்கள்...



அரசியல் போட்டியில் நடத்தப்பட்ட கொலைச் சம்பவங்களில், வில்லாபுரத்தைச் சேர்த்த மதுரை பெண் கவுன்சிலர் லீலாவதியின் படுகொலைச் சம்பவம் மிகப்பெரிய ஒன்றாகும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஏப்ரல் 23,1997ல் லீலாவதி வில்லாபுரம் கடைத் தெருவில் பட்டப்பகலில் ஈவு இரக்கமின்றி திமுகவினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்...

ஏன் இவன பத்தி பேசுறீங்க இவன பிரபலபடுத்தாதீங்கன்னு நிறைய பேரு சொல்றீங்க...



இப்ப இருக்குற இந்த உசார் அப்ப அவனுங்க அன்னா ஹசாராவே இறக்குனப்ப யாருக்கும் இல்ல...

மாரிதாஸ் முதன் முதலா மோடிய ஆதரிச்சி புத்தகம் எழுதும்போது யாருக்கும் எந்த விழிப்புணர்வும் இல்லாம அவனையும் விட்டாச்சி...

அந்த மாதிரி இப்ப யாரும் ஏமாந்துவிட கூடாதுன்னுதான் இப்ப இவன பத்தி இவ்ளோ பேசுறோம்...

உங்களுக்கு தெரியலாம் இவன் சங்கின்னு ஆனா அப்பாவி மக்கள் நிறைய பேரு இவன் பேசுறத பாத்து கண்டிப்பா ஏமாந்து போக வாய்ப்பு நிறைய...

இனி ஒரு எந்த ஒரு சங்கியையும் எந்த ஒரு வேசத்துல வந்தாலும் வெச்சி செய்வோம்...

அதிமுக கலாட்டா...


MGR சிலை மேல காவி துண்டு போத்துனதுக்கு பொங்குனானுங்க இங்க கட்சி கொடியில சிவப்பு கலர காணோம் காவி கலர் இருக்கு....😀


மாதவிடாய் நேரத்தில் பெண்களின் வாயிலிருந்து எந்த சாபத்தையும் வாங்கிவிடாதீர்கள்...அது அப்படியே பலிக்கும்...



அந்த நேரத்தில் நல்ல வார்த்தையை வாங்குங்கள்...

ஏனெனில் பெண் இயற்கையாக பலி கொடுக்கிறாள்... ஆண் அதை புரிந்து கொண்டு செயற்கையாக பலி கொடுக்கிறான்...

இதை தடுக்கதான் ஆளும்வர்க்கத்தால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு நோய்களை செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது...

இன்னும் கொரோனா வை மட்டும் தான் விற்கவில்லை பாஜக மோடி...


தமிழக அதிமுக அரசின் மின்சார கட்டண கொள்ளை...


அண்ட, பிண்ட விசாரம்...



அண்டத்திற்குள் பிண்டம்...
பிண்டத்திற்குள் அண்டம்...

அண்ட, பிண்ட விசாரம்...

பொதுவாக அண்டம் என்றால் இந்தப் பிரபஞ்சத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள்.

ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன.

நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும்.

பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும்.

அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.

அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.

அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும்.

அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் சூட்டினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை.

அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் சூட்டைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளது.

மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது.

அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது சித்தபெருமக்கள் கூறி இருக்கிறார்கள்.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே...

எப்போதும் திசை திருப்பும் ஊடகத்தை கண்டும், அதிகார வர்க்கத்தை கண்டும் கூட பயம் இல்லை...


ஆனால் முழு நேரமும் பொழுதுபோக்கிற்காக  கூத்தாடிகளை தலையில் தூக்கி கொண்டாடி கொண்டிருக்கும் இந்த நாகரீக கூட்டத்தை பார்த்தால் தான் பயமாக இருக்கிறது..

ஆக சிறந்த திசை திருப்பல் கூட்டம்..😠😠😠

இந்தியாவை காப்பாற்ற முடியுமா என்பது? கேள்விகுறி தான்...



ஆனால் தமிழ்நாட்டை காக்க முடியும்
நாம் நினைத்தால்...

TNRejectsEIA2020

அனைவரும் தன் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்..

https://t.co/aVcx4DKW66

இந்த லிங்ல நேரடியாக
மின்னஞ்சல் அரசுக்கு சென்று விடும்...

இந்த மின்னஞ்சல் (email) EIA2020 ஆல் நாம் பாதிக்கப்படும்  பிரச்சினைகளை மற்றும் நமக்கு எதிரான அரசின் திட்டத்தை கைவிட கோருகிறது...

விஞ்ஞான தமிழ் மெஞ்ஞானம்...



21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்...

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

- திருமந்திரம்-2008

விஞ்ஞான நோக்கம் - ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி என்ற சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான்=> குவார்க்=> க்ளுவான்=>!!!???) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள்(Higgs boson)” எது என்ற சோதனை நடந்துவருகின்றது.

செயல்படும் முறை - லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில்(வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று பிறகு வெளிப்படும் துகள்களில் அணுவின் அடிப்படத் துகள்களையே (ப்ரோட்டான்=>குவார்க்=>க்ளுவான்=>) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள்துகள்(Higgs boson) ஏதுனும் வெளிப்படுகின்றாதா என்று சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

மெய்ஞ்ஞான நோக்கம்...

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

-திருமந்திரம்-2008

விளக்கம் -

அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான்=>குவார்க்=>க்ளுவான்)
ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒருதுண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணுவை நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதுலும் கைகூடும்.

மேற்கண்ட இருநிகழ்வுகளிலும் நோக்கமும், செய்முறியும் எந்தளவுக்கு ஒத்துபோகின்றது என்று தாங்களே நன்கு உணர்வீர. ஏனெனில் நாம் இதை தற்பொழுது மதிப்பெண்களுக்காக படிக்கவில்லை.

ஒர் இயற்பியல் மாணவனாக சில கேள்விகள்..

க(1). இத்திருமந்திரத்தையே கிரேக்கர், எகிப்த்தியர். ரோமாணியர் போன்றோர் எழுதியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்னவாகியிருந்திருக்கும்?

(2). ஒரு தமிழர் தமிழில் எழுதிருந்தால் அதில் அறிவியல் கருத்துக்கள் இருக்காதா?

(3). ஆன்மீகத்தில் அறிவியலும், அறிவியலில் ஆன்மீககருத்துக்களை (உண்மையில் ஆன்மீகம் என்பது வேறு, கடவுள் என்பது வேறு, மதம் என்பது வேறு, மதபோதகர் என்பது வேறு,) பிரதிபளிக்கும் நிகழ்வுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாதா?

(4). திருமூலர் இதை நிருப்பித்து எழுதினார என்றால் கோட்ப்பாட்டு இயற்பியலில்(Theoretical Physics) எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் அதிஉயர் கணினியில் (Super Computer) கூட நிருபிக்க முடியாது என்பதே உண்மை. எ.கா அற்புதமான இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கொளகை(Special Theory of Relativity), பொது சார்பியல் கொள்கைகளை(General Theory of Relativity) சோதனை செய்து கண்டுபிடிக்கவில்லை காரண காரியங்களை வைத்தே கண்டுபிடித்தார்.

திருமூலர் போன்ற சித்தர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக மட்டுமள்ளாமல் நம்மை விட பல பல மடங்கு மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பதே உண்மை.

21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்...