ஐரோப்பிய கண்டத்தில் ஆசிய கண்டத்தில் பெரும் நிறுவனங்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்துவது பெரும் நெருக்கடியாகவும் சவாலாகவும் மாறி வரும் சூழலில் அவர்களின் கண் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது அதிகம் படதுவங்கிவிட்டது..
அவர்களின் முதலீடு யாவும் மறைமுகமாக இந்திய நிறுவனங்களுக்கு வருகிறது..
இதற்கு தான் 100 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதித்தார்கள்..
இதற்காக தான் மேக் இன் இந்தியா திட்டத்தை துவங்கினார்கள்..
இப்போது இதற்காக தான் சுற்றுச்சூழல் குறித்து புதி மதிப்பீடு பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக உருவாக்கப்படுகிறது..
இதெல்லம் நெடுங்காலம் மிக நேர்த்தியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது..
ஊடகங்கள் இதை பெரிய அளவு பேசாது.
இந்த கொரோன நோய் தொற்றை வைத்து மக்களை வீட்டில் அடைத்து ஒரு பெரும் நாடகம் நடத்தி தங்கள் திட்டங்களை மெல்ல மெல்ல நகர்த்தி வருகிறது மத்திய அரசு.
இதை சரிசெய்ய நிறுவனங்களுக்கு எல்லா சலுகைகளும் வழங்க வேண்டும் என்ற பேரில் இதையெல்லாம் மேலும் வேகமாக செயல்படுத்துவார்கள்.
இப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் விடயத்தில் இவர்கள் ஆடும் புது நாடகம் பற்றி புரிந்தவர்களுக்கு எதிர் காலத்தில் இவர்கள் நிகழ்த்த போகும் நாடகங்கள் பற்றி யூகிக்க முடியும்.
குறைந்த பட்சம் மக்கள் இதை விவாதிக்கவாவது வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.