29/11/2021

மழை நேர உஷார் நடவடிக்கைகள்...

    


மழை நேரத்தில் அவசர சிகிச்சை அல்லது மருத்துவ உதவிக்கு டாக்டரை நேரில் சந்திக்க முடியாது. அதனால் முன்கூட்டியே உங்கள் குடும்பத்தினர் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவரின் தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளவும்.

மழை நேரங்களில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கமான நேரத்தில் இயங்கும் என்பது உறுதியற்ற நிலை. எனவே தேவையான மளிகை, காய்கறி பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம். காய்கறிகளில் சீக்கிரம் அழுகிவிடாத காய்கறிகள் மற்றும் கிழங்கு போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான அவசர நேர மருந்துகள் மாத்திரைகள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

சிறுவர்களுக்கு ரமணன் இருக்கிறார். பெரியவர்களுக்கு வழியில்லை. அலுவலகம் சென்றுதான் தீரவேண்டும். அதனால் ஓரளவுக்கு நல்ல மழைக்கோட்டை வாங்கி பயன்படுத்துங்கள்.

கிரைண்டர், மிக்சி போன்ற மின்னணு பொருட்களின் மின் இணைப்பை வேலை நேரம் போக மற்ற நேரங்களில் துண்டித்து வைத்துவிடுங்கள். ஷாக் அடிக்காமல் பாதுகாக்க உதவும்.

மழைநேரத்தில் வீட்டின் வெளியே துணிகளை காய வைக்க முடியாது. அதனால் வீட்டின் உள்ளே காயவைப்பீர்கள். ஆனால் படுக்கும் அறையில் காயப்போடாதீர்கள். குழந்தைகளுக்கு அறையின் குளிர்ச்சியால் ஜலதோஷம் உருவாகும்.

மழை நேரம்தான் குழந்தைகளை கூடுதல் பாதுகாப்புடன் கவனிக்க வேண்டும். அதனால் எப்போதும் காய்ச்சிய நீரையே குடிக்க கொடுங்கள். நீங்களும் குடியுங்கள்.

சேட்லைட் சேனல் கனெக்ஷன் இருந்தாலும் முடிந்தால் இந்த மழை சீசன் முடியும்வரை கேபிள் இணைப்பு வாங்கி வையுங்கள். காரணம் எந்த நடிகர் விளம்பரம் செய்த டிடிஎச் ஆக இருந்தாலும் மழை இடி வெள்ள நேரங்களில் டிக்கெட் வாங்கி விடும்..

நண்பன் Vs மீ...

எப்ப பார்த்தாலும் ஆன்லைன்லயே இருக்கிறியே வெட்கமா இல்ல...

நா ஆன்லைன்ல இருக்கிறதை எப்ப பார்த்தாலும் பார்த்துக்கிட்டே இருக்கிறியே.. இது உனக்கு காவாலித்தனமா தெரியல...

அய்யோக்கிய பயலே...

🤣🤣🤣

பிராடு பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...


 

அல்லாரும் வாங்கி சாப்பிட்டு சந்தோசமா படிச்சுட்டு போங்க😁


 

அவ்ளோதாங்க விஷயம்... வேற ஒண்ணுமே இல்லைங்க மண்டியிட்ட பாஜக மோடி...


 

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...


எதிர் கட்சியாக இருக்கும் போது 7பேரை விடுதலை செய்ய வேண்டும் சுடலை...

ஆளும் கட்சியாக இருந்தால் 7பேர் விடுதலை தடை சுடலை...

திராவிடமாவது மயீராவது...

முஸ்லீம் மத வியாபாரிகளே... திமுக அடிமைகளே கேட்டுச்சா...


 

இந்த வருடத்தின் பாஜக வின் பயங்கரமான உருட்டு இதுதான்...


 

குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள்...

குளிர்காலம் என்றாலே சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்பதற்காக பழங்களை சாப்பிடுவதையே நிறுத்தி விடுவார்கள்..

இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.

எனவே குளிர்காலத்தில் எத்தகைய உணவுகள் சாப்பிடலாம் என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆரஞ்சு- குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் பிடிக்கும். ஆகவே அத்தகையவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது..

அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பசலைக் கீரை- பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

வேர்க்கடலை- வேர்க்கடலையை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், அதை சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

கொய்யாப்பழம்- இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது.

அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது.ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப்பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

கேரட் - கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன.

மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.

கிவி- இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில் அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.

சிக்கன் சூப்- சூப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்சா தாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

சொல்லப்போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட உலர் பழங்கள் தான் நல்லது. ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால், முக்கியமாக குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்...

இனிய இரவு வணக்கம் 😁

 


அண்ணன் சீமான் க்கு வருமானமே இல்ல பாவம் 😔

 


மாநாடு படத்தின் வசனம்...

 


மானங்கெட்ட கம்யூனிஸ்ட்...


கூட்டணி கட்சி படு கேவலமாக திட்டியும், எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் இ லோகத்தில் ஒரு கட்சி இருக்கிறது என்றால்..

அதற்கு பெயர்தான் கம்யூனிஸ்ட்...