போலீகாரன் தப்பு செஞ்சுட்டு.. அந்த தப்ப விசாரிக்க அதே போலீஸ் ஸ்டேனனிலுள்ள இன்னோரு போலீஸ்...
நல்ல நியாயம் வரும் 😁
அடிச்சா இனி திருப்பி அடிக்கனும்.. அப்போ தான் பொது மக்கள் மேல் கை வைக்க பயப்படுவார்கள்...
போலீகாரன் தப்பு செஞ்சுட்டு.. அந்த தப்ப விசாரிக்க அதே போலீஸ் ஸ்டேனனிலுள்ள இன்னோரு போலீஸ்...
நல்ல நியாயம் வரும் 😁
அடிச்சா இனி திருப்பி அடிக்கனும்.. அப்போ தான் பொது மக்கள் மேல் கை வைக்க பயப்படுவார்கள்...
கச்சத் தீவை கொடுக்கும் போது மூடிக்கிட்டு இருக்க வேண்டியது. அப்புறமா கச்சத் தீவை மீட்போம் என்று கத்த வேண்டியது.
திருமங்கலம் பார்முலா என்று ஒன்றை கண்டு பிடிச்சு ஓட்டுக்கு பணம் கொடுத்து பழக்க வேண்டியது. அப்புறமா இதை அடுத்தவன் செஞ்சா இது ஜனநாயகமா இல்ல பண நாயகமா என்று கத்த வேண்டியது.
இலவச டிவி கொடுக்க வேண்டியது. அப்புறமா இலவசத்தை கொடுத்து மக்கள பிச்சக்காரங்களா ஆக்கிட்டாங்க என்று கத்த வேண்டியது.
இனப் படுகொலை செய்யும் போது ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று சொல்லிட்டு மந்திரி பதவி கேட்டு அலைய வேண்டியது. அப்புறமா டெசோ, மயிறு, மட்டை என்று கத்த வேண்டியது.
மதுவிலக்கை ரத்து பண்ண வேண்டியது. அப்புறமா பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கத்த வேண்டியது.
நாலு எலக்சனா இது தான் என் கடைசித் தேர்தல் என்று சொல்ல வேண்டியது. அப்புறமா 93 வயதல்ல 103 வயசானாலும் உங்களுக்கு உழைப்பேன் என்று உளர வேண்டியது.
ஜல்லிக் கட்டுக்கு தடை போட வேண்டியது. அப்புறமா ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று கத்த வேண்டியது.
மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட வேண்டியது. அப்புறமா தெரியாமல் கையெழுத்து போட்டுட்டோம் என்று கத்த வேண்டியது.
இந்தி திணிப்பிற்கு கையெழுத்து போட வேண்டியது. அப்புறமா இந்தி திணிப்பை எதிர்க்கிறேன் என்று கத்த வேண்டியது..
காட்பாடி அருகே உள்வாங்கிய எல்லை...
20 தமிழர்களைக் கொன்று, தமிழகக் கோவிலை ஆக்கிரமித்தது என ஆந்திராவின் அட்டூழியம் தற்போது காட்பாடி அருகே ஆந்திர எல்லை தமிழகத்திற்கு உள்ளே நீட்டிக்கும் வரை வந்துவிட்டது.
போன ஆண்டு தாளூர் எல்லையை கேரளா ஆக்கிரமித்தது.
தமிழர் எல்லையைக் காக்க ஒரு படை இல்லை.
தமிழ் மண் சுருங்கிக் கொண்டே வருகிறது...
திடீர்ன்னு ராத்திரி ரெண்டு மணிக்கு கணவனை எழுப்புறா மனைவி..
மனைவி:அரண்மனை படத்தோட ஹீரோயின் யாருங்க?
கணவன் : ஹன்சிகா மோத்வானி, லக்ஷ்மி ராய், ஆண்ட்ரியா.
மனைவி : உங்க அம்மா என்னைக்கு செத்து போனாங்க?
கணவன் : 2011வது வருஷம், திங்கட்கிழமை, அக்டோபர் 17ம் தேதி சாய்ந்திரம் மூணு மணிக்கு...
மனைவி : நம்ம வீட்டுக்கு எதிர் வீட்டுல குடி வந்திருக்காளே கவிதா, அவ எப்போ குடி வந்தா?
கணவன் : போன புதன் கிழமையோட ரெண்டு மாசம் முடிஞ்சது. ஆனாம்மா, எதுக்கு நடுராத்திரி எழுப்பி வச்சு இந்த கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்க?
மனைவி : இன்னைக்கு என்னோட பிறந்த நாள்.
அமைதி..
குண்டூசி விழுந்தா கூட சத்தம் கேட்குற அளவு அமைதி..
இனி என்ன நடந்து இருக்கணும்ன்னு சொல்லணுமா? ஸ்டார்ட் ம்யூசிக்... செத்தாண்டா சேகரு...
😁😁😁
இறைவன் இருக்கிறான் என்பதை நம்பாதவர்கள் கூட மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்..
கோடானு கோடி உயிர்கள், உலகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் நம் கற்பனைக்கும் எட்டாத அண்டவெளியில் துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறன என்பதைப் பார்க்கும் போது அதை இயக்குகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதை நாத்திகர்களாலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
இன்று அந்த இறைவனைத் தங்கள் மதத்தவராக பல மதத்தவரும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவன் பெயரால் தர்மங்களும் நடக்கின்றன. அதர்மங்களும் நடக்கின்றன. இறைவனின் பெயரால் யுத்தங்களும், சண்டைகளும் சர்வசகஜமாக நடப்பதை வரலாறு பதிவு செய்கிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். செத்து மடிகிறார்கள்.
உண்மையில் இறைவனுக்கு என்று ஒரு மதம் இருக்கிறதா? இருந்தால் இறைவன் எந்த மதத்தவன்? பல மதங்கள் தங்களுடையவன் என்று உரிமை கொண்டாடுகின்றனவே, உண்மையில் பல மதக் கடவுள்கள் இருக்கின்றனரா?
பல மதக் கடவுள்கள் இருந்திருந்தால் இந்த உலகில் இன்று நடைபெறும் மதச்சண்டைகள் போல கடவுள்களுக்கும் யார் சிறந்தவன் என்ற போட்டி ஏற்பட்டு இருக்கும். அண்ட சராசரங்கள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும். அது இது வரை நிகழவில்லை, பிரபஞ்சம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் பல மதக் கடவுள்கள் இருக்க வாய்ப்பேயில்லை. எனவே இறைவன் ஒருவனாக அல்லது ஒரே சக்தியாகத் தான் இருக்க முடியும் என்று சுலபமாகக் கணிக்க முடிகிறது.
இருப்பது ஒரு இறைவன் என்றால் அவன் ஒரு மதத்தவனாக இருக்க முடியுமா? அப்படி ஒரு மதத்தவனாக இறைவன் இருந்திருந்தால் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஓஹோ என்று சுபிட்சமாகவும், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க மற்ற மதத்தினர் எல்லாம் கீழான நிலைகளிலும், சொல்லொணா கஷ்டங்களுடன் இருக்க வேண்டும். அது தான் லாஜிக்காகத் தெரிகிறது.
ஆனால் இன்றைய உலகில் எல்லா மதத்திலும் சுபிட்சமாக உள்ளவர்களும் இருக்கிறார்கள், எதிர்மாறாக மிகவும் கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது இறைவன் ஒரு மதத்தைச் சார்ந்தவன் என்ற நிலைபாடும் அடிபட்டுப் போகிறது.
இருப்பது ஒரு இறைவன், நாமெல்லாரும் அவன் சிருஷ்டிகள் என்றால் மதம் என்ற பெயரிலும், தங்கள் கடவுள் என்ற பெயரிலும் மனிதர்கள் சண்டை போடுவது எதற்காக?
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.
தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.
சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),
கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),
வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),
தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),
மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)
ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது.
இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.
இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.
உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா?
உலகத்திலேயே வெள்ளத்தை பார்வையிட.. சாமியான பந்தல் அமைத்து பார்வையிட்ட ஒரே கோஷ்டி நம்ம விடியல் கோஷ்டி தான் 🤦♂️🤦♂️🤦♂️
அது சரி , கரும்பு காட்டுக்குள்ள சிமெண்ட் ரோடு போட்ட ஆளூ தான் இவங்க 🤣😂
ஐரோப்பியர்கள் தமது மதத்தை பரப்பும் நோக்கில் தமிழகம் வருகை தரும் காலம் அது...
ஏறத்தாழ 15 ம் நூற்றாண்டு...
தரங்கம்பாடியில் லூதரன் சமய போதனைக்கு அனுப்பப்பட்ட உழியர்கள் ஒவ்வொருவரும் நாட்குறிப்பு எழுத வேண்டும் என்று டென்மார்க் அரசர் கட்டளையிட்டார்.
தரங்கம்பாடிக்கு வந்துசேர்ந்த ப்ளெட்சோ வும் சீகன்பால் லும் இதை தினசரி கடமையாக எழுதியுள்ளனர்.
அவர்களது கையெழுத்து குறிப்புகள் அந்தகாலக்கட்டம் மட்டும் அல்ல இன்றும் கூட பிராமணர்கள் எவ்வாறெல்லாம் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தார்கள் என்று தெளிவாக எழுதி வைத்துள்ளனர்.
அதை அப்படியே இங்கு பதிகின்றேன்..
பிராமண சமூகம் தமிழர்களை புராண கதைகளையும் பொய்களையும் கூறி ஏமாற்றுகிறார்கள்..
பல கடவுள் கொள்கை.. வழிபாடுகளை உருவாக்கி இதன் வழி அவர்கள் சவுகர்யமாக வாழ்கின்றனர்.
கடவுளும் மனிதர்கள் போல சாப்பிடுவதாக கூறி படையலை வைப்பது அதை பிராமணர்கள் எடுத்துக் கொள்வதுமாக வழக்கமாகிறது..
அதே வேளையில் திருவள்ளுவர் குறிப்பிட்ட ஆதிபகவன் கடவுள் கொள்கையை தமிழர்கள் மறக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
26/5/1714 என்ற தேதியிட்ட நாட்குறிப்பில் கூறுகிறார்.. தமிழர்கள் தங்கள் வழிபாட்டில் பிராமணர்களுக்கு அன்னதானம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவள்ளுவரும் சிவ வாக்கியரும் அப்படி எங்கே கூறுகிறார்கள்.. இதெல்லாம் கட்டுக்கதை என்றும் பிராமணர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தோம்..
விளைவு சீகன்பால்கை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாகவும் அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் அன்றைய நாட்குறிப்பு உள்ளது..
ஆதாரம்.
J. Thomas Phillips thirty four conference between the danish missionaries and the malabariyan tamil bramans.. in east India London 1719 page 82...
கஷ்டத்துல கூடவே இருக்கிறவன் தான் உண்மையான நண்பன்னு சொல்றதை ஏத்துக்க முடியாது...
நண்பனுக்கு கல்யாணமான பிறகு, அவன் கூடவே இருக்க முடியுமா...
பிரச்சனை இல்லாமல் வாழ பிரியப்படும், சிங்கிள்ஸ்கள் சங்கம்...
😁😁😜
கட்சியையும் சாதியையிம் மறந்து தெலுங்கரெல்லாம் ஆந்திர மகாசன சபாவின் கீழும், மலையாளிகள் கேரள சமாசத்தின் கீழும் ஒன்று திரண்டனர்.
கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் தமிழரை மட்டுமே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எனப் பிளவுபடுத்தினர்..
இதனால் மற்றவர்கள் இன வழியல் ஒன்றுபட, தமிழர்கள் மட்டுமே சாதியால் மென்மேலும் கூறுபட்டனர்.
உள்ளபடியே தமிழ்ப்பார்ப்பனரை எல்லாம் அரசுப் பதவியிலிருந்து இறக்கி விட்டு பார்ப்பனரல்லா கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் அந்த இடங்களில் போய் தாங்கள் அமர்வதற்கான ஒரு நொண்டிச் சாக்காகவே அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு இருந்தது.
தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி..
ஆந்திரர்களோ , கன்னடர்களோ, மலையாளிகளோ என்றுமே தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொண்டதும் இல்லை, ஏற்றுகொண்டதும் இல்லை. ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்..
தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, மலையாளி, கன்னடச் சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும்..
தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட தமிழகத்தின் நலிந்த சாதியினர் மட்டும் ஆதிதமிழர் என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என இழிவுபடுத்தப்பட்டனர்..
அந்த ஆதிதமிழரை ஆதி திராவிடர் என்றும், பிறரை சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும், சாதி இந்துக்கள் என்ற சொல்லை ஆக்கியும் அறிமுகப்படுத்தியும், தமிழர்களை சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக்கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க...
இத்திராவிடக் கருத்தியலின் விளைவாகத் தமிழர்கள் ஒரு தனி இனமெனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்.
தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டு விட்டதால் இனப் பற்றும், இன மானமும், இன நலனும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பட்டுள்ளனர்...