18/09/2018
நந்தியாவட்டை மருத்துவக் குணங்கள்...
நந்தியாவட்டை ஒரு செடியினம். இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும். இதன் பூக்கள் வெந்நிறமாக இருக்கும். மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும் காணப்படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. இதன் பிறப்பிடம் வட இந்தியா.
இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகு பூஞ்செடியாக வளர்க்கிறார்கள். இச்செடி 3, 5 அடி உயரத்திற்கு வளரக் கூடியவை.
இவை முக்கியமாக கண் நோயிக்கான மருந்தாகப் பயன்படுகிறது.
நந்தியாவட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்படுகின்றது.
இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என 2 வகை உண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை.
கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுத்தால், கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.
இதன் வேரை மென்று துப்பினால் பல் வலி குணமாகும்...
புது மாப்பிள்ளைக்கு பெட்ரோலை பரிசாக அளித்த நண்பர்கள்...
பெட்ரோல் விலை வரலாறு காணாத ஏற்றத்தில் சென்றுக்கொண்டிருக்கும் வேளையில் திருமண தம்பதியினருக்கு பெட்ரோலை பரிசளித்த சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழபருத்திக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவருக்கும் நாகை மாவட்டம் செம்பியவேலன்குடி கிராமத்தைச் சேர்ந்த கணினி ஆசிரியை கனிமொழிக்கும் நேற்று குமராட்சியில் உள்ள அன்னை கோகிலாம்பாள் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் மண மக்களுக்கு பல்வேறு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போழுது மாப்பிள்ளை இளஞ்செழியனின் சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஒருங்கிணைந்து 5 லிட்டர் பெட்ரோலை வாங்கி அதனை கேனோடு மணமேடையில் இருந்த மணமக்களுக்கு பரிசு அளித்துள்ளனர்.
திருமண தம்பதிக்கு பெட்ரோல் கேனை பரிசளித்த பார்த்த திருமணத்திற்கு வந்தவர்கள் குழம்பினார்கள். தம்பதிகளும் ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முழித்துள்ளனர். இதனைப் பார்த்த பரிசளித்த நண்பர்கள் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை கடுமையாக ஏறி வரும் நிலையில் பரிசு பொருளாக பெட்ரோல் கொடுத்தால் புது மண தம்பதிகளுக்கு உபயோகமாக இருக்கும் எனக் கொடுத்தோம் என கூறியுள்ளனர். இதனை கேட்ட திருமண தம்பதிகள் உட்பட அனைவரும் ஆச்சரியத்துடன் சிரித்தனர். இதனால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் பெட்ரோல் விலை குறித்தும், அதனை பரிசாக வழங்கியது குறித்தும் பரவலாகப் பேசினார்கள்...
போக நாதர் நூல்களின் விவரம்....
தமிழ் கடவுளான பழநி தண்டாயுத பாணியை வழிபட்ட போகர். தற்போது பழநியில் அருள்பாலிக்கும் தண்டாயுத பாணியின் சிலையினை நவபாசானம் என்கிற ஒன்பது விஷங்களினால் ஆன கூட்டுக் கலவையினால் உருவாக்கியவர் இவர்.
போகர் ஆகாய மார்க்கமாக செல்லக் கூடிய ஊர்தியை உருவாக்கி சீன தேசம் சென்றதாகவும், அங்கு போதிக்கும் பணியை மேற்கொண்ட போகருக்கு சீனாவில் "போ-யாங்" என்ற பெயர் வழங்கப் பாட்டதாகவும் சொல்லப் படுகிறது.
இவர் கைலாய மலை அருகே தங்கி இருந்த காலத்தில் எழுதிய ஏழாயிரம் பாடல்கள் தான் பின்னாளில் போகர் சப்த்த காண்டம் என்று அழைக்கப் படுகிறதாம்.
இது தவிர.
போகர் 12000
போகர் நிகண்டு 1700
போகர் வைத்தியம் 1000
போகர் வைத்தியம் 700
போகர் சரக்கு வைப்பு 800
போகர் ஜெனன சாகரம் 550
போகர் கற்பம் 360
போகர் கற்பம் 300
போகர் உபதேசம் 150
போகர் இரண வாகடம் 100
போகர் நானா சாராம்சம் 100
போகர் கற்ப சூத்திரம் 54
போகர் வைத்திய சூத்திரம் 77
போகர் மூப்பு சூத்திரம் 51
போகர் ஞான சூத்திரம் 37
போகர் அட்டாங்க யோகம் 24
போகர் பூஜா விதி 20
போகர் மாந்திரீகம் 74
போகர் மலை வாகடம்
போகர் வாலை ஞான பூஜாவிதி
போகர் வர்ம சூத்திரம்
போகர் பஞ்ச பட்சி சாஸ்திரம்
இப்படி கணக்கில்லா நூல்களை இயற்றியதாக கூறப்படுகிறது.
பழுத்த ஞானியான போகர் இறுதியாக வந்து தங்கிய இடம்தான் பழநி. தற்போது பழநி கோவில் வளாகத்திலேயே அவருடைய சமாதி இருக்கிறது...
அமைச்சர் செல்லூர் ராஜு வீடு அருகே மறியல்: சாலை அமைக்காததால் பொதுமக்கள் ஆத்திரம்...
மதுரையில் சாலை வசதி கேட்டு, அமைச்சர் செல்லூர் கே. ராஜுவின் வீடு அருகே மறியல் நடந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீடு, மதுரை செல்லூரில் உள்ளது. நேற்று காலை 38-வது வார்டு பகுதி மக்கள், வியாபாரிகள் திடீரென திரண்டு அமைச்சரின் வீட்டின் அருகே சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வாகனப் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.
மேலும் மறியல் நடத்தியவர்கள் எந்த நேரத்திலும் அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து செல்லூர் போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 38-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
போராட்டம் குறித்து அப் பகுதி மக்கள் கூறியதாவது: அகிம்சாபுரம் மெயின் ரோடு, ஜான்சிராணிபுரம்,மகாத்மா காந்திபுரம், சுயராஜ்யபுரம் பகுதி யில் சாலைகள் அமைக்க கற்களை பரப்பி உள்ளனர். ஆனால், இதுவரை சாலை அமைக்கவில்லை.
அதுபோல செல்லூர் மார்க்கெட் சாலையும் அமைக்கவில்லை. அப்பகுதியில் உள்ள மாநகராட்சி சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லை. பாதாள சாக்கடை வசதி செய்து கொடுக்க நீண்ட நாளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.
அதனால், மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்க அமைச்சரின் வீட்டின் அருகே போராட்டம் நடத்தினோம் என்றனர்...
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு...
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
அவற்றைத் தெரிந்து கொள்வோம்..
அ __எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த
இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தருகின்றன. அவற்றைத் தெரிந்து கொள்வோம் பிறர்க்கும் தெரியப்படுத்துங்கள்...
கன்னட ஈ.வே.ரா எனும் பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்...
பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்பதற்கு ஆயிரம் விளக்கம் கொடுக்கும் புண்ணியவான்கள், உண்மையில் தமிழின் மீதோ, தமிழரின் மீதோ பெரியார் வைத்திருந்த கண்ணோட்டத்தை பற்றி கவலை பட்டது இல்லை.
ஒருக்காலும் பெரியார் தமிழை ஆட்சிமொழி ஆக்கவோ, பாட மொழியாக்கவோ முயன்றதே இல்லை. அதற்காக அவர் இந்தியை எதிர்த்து போராடியதும் இல்லை. அவர் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தையே முன்வைத்தார். இதில் தமிழுக்கு எந்த இடத்தில் பெரியார் தொண்டாற்றி உள்ளார் என்று நீங்களே பார்த்து சொல்லுங்களேன்.
விடுதலை 1965 மார்ச் 3 அன்று எழுதிய ஆசிரிய உரையில்..
நீதானே முன்பு இந்தியை எதிர்த்தாய்? இப்போது ஏன் இப்படி ('தமிழ்நாடு தமிழருக்கே') சொல்கிறாய்? என்று கேட்பீர்களானால், சொல்கிறேன்.
இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால், நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டு விடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன், இந்தி எதிர்ப்பு மொழி சிக்கல் அல்ல; அரசியல் சிக்கல் தான்.
குடி அரசு ஏட்டில் இந்திப் புரட்டு என்னும் தலைப்பில் 20.1.1929 அன்று பெரியார் எழுதிய ஆசிரியர் உரையில்..
இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும் -- அல்லது வணிகத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்ச்சிக்க வேண்டுமேயன்றி, வேறு மொழியைப்பற்றி எண்ணுவது முட்டாள்த் தனமோ சூழ்ச்சியோ தான் ஆகும்.
தமிழ்ப் படிப்பதனாலாவது, தமிழ்தாய்ப் பற்றினாலாவது மனிதனுக்கு தன்மான உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று ஐயப்பட வேண்டி இருக்கிறது.
பெரியார் 14.8.1948 அன்று சென்னையில் ஆற்றிய ஓர் உரையில்..
காலையில் நான் இம் மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், 'தமிழை விட ஆங்கிலத்தைக் கட்டாயப்பாட மாக்கினால், அதற்க்கு வாக்களிப்பேன்' என்று கூறினேன்' -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், மூன்றாம் தொகுதி , ப.1763..
ஈ.வே.கி. சம்பத் நடத்தி வந்த தமிழ் செய்தி ஏட்டின் பொங்கல் மலரில்,
தமிழ் ஒரு 'நியூசென்ஸ்' தமிழ் புலவர்கள் யாவரும் குமுக எதிரிகள்" -- கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார், ப.414..
"சனியனான தமிழுக்கு" விடுதலை 16.3.1967, ஆசிரியவுரை, கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார், ப.477
விடுதலை ஏட்டில் 'தாய்ப்பால் பைத்தியம்' என்னும் தலைப்பில் பெரியார், 'எனக்கு தமிழ் பற்றும் இல்லை. நான் தமிழனும் இல்லை!" என்று எழுதியுள்ளார். -- புலவர் வி.போ.பழனிவேலன், ஈ.வே.இரா. பெரியாரும், இந்தியும் (கட்டுரை), தென்மொழி தி.பி.1996, பங்குனி (1964 மார்ச்), ப.59.
தாய்மொழிக் கல்வி என்னும் அடிப்படை மனித உரிமையை கடுமையாக விமரிசித்து பெரியார் கூறியதாவது,
இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ் தாயின் பாலை நேரே அருந்தி வளர்த்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், (இந்த அன்பர்கள் உட்பட) எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள வாழ்க்கை நிலையே வேறாக -- அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக -- ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரமுள்ள உழைப்பாளர்களாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன் -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93.
தாய்ப்பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு, அஃது எதற்குப் பயன்படுகிறது? -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93.
இன்றைய முற்ப்போக்குக்கு முதல் எதிரி தாய்ப்பால் குடித்த மக்கள்தானே? -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93
பெரியாரின் கூற்றுப்படி தாய் மொழி மீது பற்று வைத்தால் அது பிற்போக்கு! பற்று இல்லை எனில் முற்போக்கு! என்ன ஒரு சித்தாந்தம்.....? மேலும் வாசியுங்கள்.
இன்றைக்கு எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்ப்பட வேண்டுமானால், (ஆங்கில) புட்டிப் பால் தானே எண்ணங்கள், செயல்முறைகள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படை கருத்துகள் முதலியவற்றை அறிந்து வரும்படி, நம் மக்களை மேல்நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இதுபோல் எதற்காவது பயன்படுகிறதா? -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93.
பெரியார் வானளாவ புகழும் எந்த ஆங்கிலேயரும் 'முற்போக்கு' என்னும் சாக்கில் தத்தம் தாய்மொழியை என்றாவது மறந்தது உண்டா? யோசியுங்கள் தமிழர்களே....
ஸ்டாலின் மொழியியல் கொள்கையானது, தமிழகத்தில் உள்ள பொதுவுடைமை கட்சிகளை தமிழ் மக்களோடும் மண்ணோடும் ஓட்டம்விடாமல் செய்த கொள்கை ஆகும். அதன்படி மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தத்தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்ற வேர்ருக்கருவியே அன்றி வேறில்லை என்பதை பெரியார் அப்படியே முன்மொழிகிறார்.
இதை தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொன்னோர் மொழி என்பதும், மொழிப்பற்று என்பதும் ஆனவற்றை எல்லாம் மொழிக்கு எதை பொருத்துவது? என்று சொல்லி சீறுகிறார் பெரியார்.-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93.
அட தமிழருக்கு இயல்பாய் தோன்றிய தாய் மொழி பற்றுக்கு கூட பிராமணர் தான் காரணம் என்பது பெரியாரின் அறிய கண்டுபிடிப்பு.
இந்தி கட்டாயம் என்பதால் தானே தமிழ் மொழிப் பைத்தியம் நமக்கு ஏற்ப்பட்டது? இது பார்ப்பனர்களின் திறமையே ஆகும், -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93
ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கனக்காக -- அகர வரிசையாக --- எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால், அதற்க்கேற்ற தமிழ் எழுத்தையே எடுத்து கொள்ளலாம் எனும் சொன்னதோடு, மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்ப்பட்டால் நான் மிக மிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன் -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89.
உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்;பேச பழகுங்கள்;பேச முயலுங்கள்; தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள் -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் , இரண்டாம் தொகுதி , பப 988-89
என்றும் தமக்கே உரிய பாணியில் தமிழ் தொண்டாற்றி உள்ளார் பெரியார்.
தமிழர்களே..
'ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதனுடைய மொழியை அழி' என்பது தான் வல்லரசு நாடுகளின் உத்தி..
தேவநேய பாவாணர் கிட்டத்தட்ட கெஞ்சி கேட்டும் ஒரு தமிழ் வழி பள்ளியை கூட திறக்க உதவி செய்யாத பெரியார், புற்றீசல் போல ஆங்கில வழி பள்ளிகளையே திறந்தார்/திறக்க முன் நின்றார். அந்த ஆங்கில வழி பள்ளிகளே இன்று சமச்சீர் கல்வி போன்ற குறைந்த பட்ச உரிமையை எதிர்த்து கொடி பிடிக்கின்றனர் என்பது உபரித் தகவல்..
வாழ்க பெரியாரின் தமிழ் தொண்டு... வளர்க அவரின் புகழ்....
வரலாற்றில் சூனியக்காரிகளின் வேட்டை 1...
ஆரம்ப காலகட்டத்தில் தி விச் ஹண்ட் என்று சொல்லக்கூடிய சூனியக்காரிகளை உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் ஏராளம்..
அக்காலகட்டத்தில் உள்ள மூட நம்பிக்கையின் படி கடலில் ஏற்படும் சீற்றங்களுக்கும் புயலுக்கு சூனியக்காரிகளே காரணம் பல கப்பல்களை கவிழ்த்து மனித காவு வாங்கிக் கொள்கின்றனர் என்று நம்பப்பட்டது..
இதற்கான தீர்வை இன்றைய அயர்லாந்து ஸ்காட்லாண்ட் இங்கிலாந்தும் சேர்ந்த பிரதேசங்களை உள்ளடக்கி ஆட்சி செய்த மன்னரான கிங் ஜேம்ஸ் ஆட்சி காலத்தில் தான் முதன் முதலில் சூனியக்காரர்களை வேட்டையாடும் வழக்கம் ஏற்பட்டது..
இவர்கள் சூனியக்காரர்கள் என்று அறியப்பட்டால் அவர்களின் வீட்டில் ஒரு கருப்பு துணியை கட்டிவிட்டு வந்து விடுவார்கள் அரச பாதுகாப்பு படையினர்.
பொதுவாக அக்காலகட்டத்தில் நம்பக்கூடிய நம்பிக்கை கருப்பு என்பது சாத்தானின் அடையாளம்..
[ஆனால் இந்த சூனியக்காரிகள் என்று சொல்லக்கூடிய பெண்கள் அதை எடுத்து ஆடையாகவே அணிந்து கொள்வார்கள் அவர்களுக்கு பயம் இல்லை]..
பின்னர் அவ்வூர் மக்கள் அந்த கருப்பு துணி கட்டிய வீட்டை ஒதுக்குவார்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாக அந்த பெண்ணை அப்புறப்படுத்துவார்கள் ..
பின்னால் ஒரு நாளில் அரசாங்க அதிகாரிகள் வந்து உயிருடன் மக்கள் மத்தியில் சூனியக்காரி என்று சொல்லக் கூடிய பெண்ணை எரித்து விடுவார்கள்..
உண்மையில் சூனியக்காரிகள் என்றால் யார் ?
இவர்களால் எரித்து கொல்லப்பட்ட சூனியக்காரிகள் என்பவர்கள் ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவல்..
அவர்கள் உண்மையில் யார் ?
பேசுவோம்.. அதிர்வு தகவலுடன்.. அடுத்த பதிவில் சந்திப்போம்...
பணம் எனும் போதை...
பணத்தைப்பற்றி மிகவும் பொருட்ப்படுத்தாதே...
ஏனெனில் சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம் அது.
துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால் பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று மக்கள் நினைப்பது தான்.
பணத்திற்க்கும் சந்தோஷத்திற்க்கும் சம்பந்தம் இல்லை..
நீ சந்தோஷமாக இருக்கும் பொழுது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ அதனை சந்தோஷத்திற்காக உபயோகப்படுத்துவாய்.
நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும் போது உன்னிடம் பணம் இருக்குமயானால், நீ அந்த பணத்தை மேலும் சந்தோஷம் இல்லாமல் இருப்பதற்காக பயன்படுத்துவாய்.
பணம் வெறும் ஒரு சார்பற்ற சக்தி...
தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்...
உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ஓர் காய்கறி என்று சொல்லும் போது அனைவரும் பரிந்துரைப்பது பீட்ரூட்டைத் தான். அத்தகைய பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், அதனை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.
அதிலும் பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும் புற்றுநோய் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால், அதனைத் தடுக்க பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வர நல்ல பாதுகாப்பு உடலுக்கு கிடைக்கும். இதுப்போன்று இன்னும் நிறைய நன்மைகள் பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் கிடைக்கும்.
கல்லீரல் செயல்பாடு..
பீட்ரூட் ஜூஸை குடிப்பதன் மூலம், அதில் உள்ள குளுதாதயோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் இந்த ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.
இரத்தணுக்கள் அதிகரிக்கும்..
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள். முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
அழற்சியினால் ஏற்படும் வீக்கம் குறையும்..
கிருமிகளின் தாக்கத்தினால் உடலினுள் அழற்சி ஏற்பட்டு வீங்க ஆரம்பிக்கும். ஆனால் பீட்ரூட் ஜூஸை ஒரு டம்ளர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதனைத் தடுக்கும்.
புற்றுநோயைத் தடுக்கும்..
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று புற்றுநோய செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும் என்பது. மேலும் ஆய்வுகளிலும் பீட்ருட்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளதால் புற்றுநோய் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடல் சுத்தமாகும்..
உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால் தான் நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும். அத்தகைய டாக்ஸின்களை பீட்ரூட்டில் உள்ள பீட்டாலயின் என்னும் பொருள் வெளியேற்றச் செய்யும். உங்களுக்கு உடலை சுத்தம் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடல் சுத்தமாகும்.
ஸ்டாமினா அதிகரிக்கும்..
பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் கட்டுப்படும்..
பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ரைட்ரேட் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் வராமல் பாதுகாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸைக் குடித்து வாருங்கள்...
செப்டெம்பர் 17 - திராவிட எதிர்ப்பு நாள்...
தமிழர்கள் தன்மானமும் சுயமரியாதையும் இழந்த நாள்.
எவனொருவன் தமிழையும் தமிழரையும் இறுதி மூச்சு வரை இழிவு செய்தானோ அவனையே தந்தை என்று தமிழர்கள் வணங்கிய அவலம்.
இதை விட ஒரு உளவியல் தாக்கம் தமிழர்களுக்கு வேறு எதுவும் இல்லை.
தமிழ்ச் சாதிகளுக்குள் நிரந்தர பகை மூட்டி தமிழர்களை திராவிட அடிமைகளாக மாற்றிய ஒருவனுக்கு பிறந்த நாள் இன்று.
ஒழுக்கம், பண்பாடு என்ற அனைத்தையும் மறுத்த கயவனுக்கு பிறந்த நாள்.
பார் போற்றும் நாகரீகம் கொண்ட தமிழனுக்கு வரலாறு இல்லை, பண்பாடு இல்லை என்று பிதற்றிய பித்தனுக்கு பிறந்த நாள்.
தமிழர் நாட்டிலேயே தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்தி அதை தமிழர்களையே ஏற்க வைத்த பெரும் பகைவனின் பிறந்த நாள்.
தமிழர் மதத்தையும், தமிழர் மெய்யியலையும் இழிவு செய்து தமிழர்களுக்கு அறிவே இல்லை என்று கூறிய அற்பனின் பிறந்த நாள்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தமிழர் நிலப்பகுதிகளை அண்டை மாநிலத்திற்கு தாரை வார்க்க காரணமாக இருந்த நயவஞ்சகனின் பிறந்த நாள்.
திராவிடம் என்ற கருத்தை விதைத்து தமிழர் அடையாளத்தை சிதைத்தவனின் பிறந்த நாள்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை மலமென்று கூறிய அறிவுக் குருடனின் பிறந்த நாள்.
தமிழர்களுக்கு கருப்பு நாளான இன்றைய நாளை சிறப்பு நாளாக கொண்டாடும் மானமற்ற தமிழர்கள் வாழும் வரை...
தமிழர்கள் வேற்றின மக்களுக்கு நிரந்த அடிமைகளாகவே வாழ வேண்டி இருக்கும்.
தமிழா தன்மானம் கொள்..
இறுதி வரை இனவெறி கொண்ட பகைவனை போற்றுவதை நிறுத்து.
திராவிட மாயையில் இருந்து வெளியேறி தமிழனாக தலை நிமிர்ந்து நில்...
ஈழவர்...
பலரும் கேரளாவில் தற்போது இருக்கும் ஈழவர் சாதி தமிழர் என்கின்றனர்.
நான் அவ்வாறு கூறமாட்டேன்.
அவர்கள் தமிழ் வம்சாவழி அவ்வளவுதான்.
நாம் விடுதலைக்காக போராடும் போது அவர்கள் மலையாளிகள் பக்கம் தான் சேர்வார்கள்.
இதை கவிமணி அவர்கள் முன்பே கூறி அறுபது ஆண்டுகள் முன்பு மண்மீட்பு போராட்டமும் இனவுணர்வும் உச்சத்தில் இருந்த போதும் கண்கூடாகக் கண்டோம்.
கேரள மக்கட்தொகையில் 21% வரை இருக்கும் இவர்கள் தற்போது தமிழ் பேசும் பகுதியில் இருந்து தொலைவில் இருக்கிறார்கள்.
தமிழையும் அறவே மறந்துவிட்டனர்.
அவர்களில் சிறிதளவு கூட தமிழ் தாய்நிலத்தில் வாழ்வதில்லை.
எனவே ஈழவர்கள் இனத்தால் தமிழர் தான் என்று புரியவைப்பதும் நமது இனத்திற்குள் சேர்த்துக் கொள்வதும் மிகவும் கடினம்.
கேரளாவில் நாயர் நம்பூதிரி தவிர பிறர் தமிழினத்தவர் என்றாலும், அது நடைமுறையில் அவ்வாறு இல்லை.
தமிழை அறவே மறந்த தமிழினத்தாரில் நாடார்கள் மட்டுமே விதிவிலக்கு.
மலையாளம் பேசினாலும் தம்மை மலையாளிகளாக அவர்கள் கருதுவதில்லை.
அதற்கு காரணம் அவர்கள் பெரும்பான்மை தமிழகத்தில் இருப்பதும் தமிழகத்திற்கு அருகில் வாழ்வதுமே.
நான் சொல்வது சரிதானா என்பதை வருங்காலம் சொல்லும்...
மனிதனால் நினைத்ததை சாதிக்க முடியும்...
மனிதனால் முடியாத காரியம் எதுவும் இல்லை. நம்மால் எதையும் செய்து முடிக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். மனித சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியானாலும் காரியங்களை செய்து முடிக்க முடியாது.
இந்த சக்தியை தெரிந்து பயன்படுத்தி பலவிதமான சித்துக்களையும் காட்டி மறைந்த பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள், நாயன் மார்கள், ஆழ்வார்கள், மகான்கள் போன்றவர்கள் எல்லா மதத்திலும் தோன்றி மறைந்து இருக்கிறார்கள்.
இவைகளை தெரிந்தும், படித்தும், கேட்டும் இன்னமும் செயல்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். காரணம் நம்மை நாம் அறியாததே. நமது சக்தியின் தன்மையை நாம் தெரிந்து செயல்பட்டால் இவ்வுலகில் நாம் சுகபோக வாழ்வு வாழலாம்.
அதற்கு, முதலில் நமது எண்ணங்களை நமக்கு எது தேவையோ அதிலேயே நிறுத்தி வைக்க வேண்டும். மனதில் வேறு பல எண்ணங்கள் புகவிடாமல் மனம் அலைபாயாமல் – நமது என்ன அலைகளை சிதறவிடாமல் ஒரு பிடியாக நாம் நினைத்த காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
ஆத்ம சக்தி என்ற நமது மனோதிட சக்தியை நமது எண்ணம் எதுவோ அதிலேயே இருக்கச் செய்ய வேண்டும்.
நமது விருப்பங்களை இடைவிடாமல் ஏற்றத் தாழ்வு இல்லாமல் சமநிலையில் வைராக்கியத்துடன் எண்ணி அதிலேயே ஊன்றி கவனத்தைச் செலுத்தி வரவேண்டும்.
நாம் விரும்பும் காரியம் முடியும்வரை அதிலேயே மனதை வைத்து செயல்பட வேண்டும். வேறு சிந்தனை கூடாது. எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் மனதைத் தளரவிடாமல் நம்பிக்கையுடனும் வைராக்கியத்துடனும் இருந்து நினைத்ததை சாதிக்க வேண்டும்.
நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒரு எண்ணத்தை மனதில் நிறுத்தி தொடர்ந்து அமைதியாவும், அழுத்தமாகவும் அந்த எண்ணத்தை பற்றியே மனதில் தியானத்துக் கொண்டு இருப்பதே மனதை ஒரு நிலைப்படுத்தும் நிலையாகும்.
இந்த மனதை ஒரு நிலைப்படுத்தும் விதத்தைப் பயிற்சிகளினால் தான் பழக்கத்துக்குக் கொண்டுவர முடியும். மனதை ஒரு நிலைப்படுத்தி நிற்பது கடினம். காரணம் மனதில் ஆயிரக்கணக் கான எண்ணங்களை வைத்துக் கொண்டு நம் சிந்தனையை பல வழிகளிலும் சிதரவிட்டுக் கொண்டு பலவற்றையும் எண்ணிக்கொண்டே இருப்பதுதான்.
நமக்கு எது வேண்டுமோ அந்த எண்ணத்தையே அடிக்கடி மனதில் எண்ணி அதே எண்ணத்தில் விடாப்பிடியாக இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியும்.
வாழ்க்கையில் தினசரி நாம் நமது மனதை ஒரு முக்கியமான கருவியாக எல்லா வகையிலும் நல்லது-கெட்டது இரண்டுக்குமே உபயோகப் படுத்தி வருகிறோம். மனம் இயங்காமல் எதையும் செயல்படுத்த முடியாது...
சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவக் குணமா..?
சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.
இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது
பழத்தில் உள்ள சத்துக்கள்..
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்..
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
முகப் பருக்கள் குணமடையும்..
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.
மேனி பளபளப்பாகும்..
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்
எலும்பு பலமடையும்..
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்..
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்..
சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.
இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.
பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.
பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.
சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.
காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.
சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது...
இலுமினாட்டி யூனிலிவர் நிறுவனம்.. நாகரிக அடிமைகளுக்கான பதிவு. நேரம் இருந்தால் படியுங்கள்...
யூனிலிவர். இது பல வருடங்களுக்கு முன்னர் உருவான நிறுவனம். 190 மேற்பட்ட நாடுகளில் வியாபாரம் செய்கிறது. 400-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இதற்கு சொந்தம். இது அதிகம் கவனம் செலுத்துவது 13 தயாரிப்புகளில் மட்டுமே.
பல நிறுவனங்கள் இதற்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள Hindustan Unilever இதன் துணை நிறுவனம்.
உணவு வகைகளில் இருந்து அழகு சாதனப் பொருட்கள் என பல தயாரிப்புகள் இதனுடையதே.
இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.
இதன் பிரபலமான தயாரிப்புகள்...
Annapurna salt and spices.
Bru coffeeBrooke Bond (3 Roses, Taj Mahal, Taaza, Red Label) tea.
Kissan squashes, ketchups, juices and jams.
Lipton tea.
Knorr soups & meal makers and soupy noodles.
Kwality Wall's frozen dessert.
Modern Bread, ready to eat chapattis and other bakery items(now sold to Everstone Capital).
Magnum (ice cream).
இவை வெறும் உணவுப் பொருட்களே..
இன்னும் வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், என பல உள்ளன..
close up நன்றாக இல்லை என்று pepsodent வாங்கினாலும் சரி, எந்த சோப்பு வாங்கினாலும் இவர்களுக்கு லாபமே.
தமிழ் நாட்டில் கொடைக்கானலில் கண்ணாடி தயாரிப்பதாகக் கூறி அரசிடம் அனுமதி பெற்று பாதரசம் தயாரித்தது இந்த நிறுவனம்.
17 ஆண்டுகளில், 135 டன் பாதரசம் பயன்படுத்தி உள்ளது.
சராசரியாக ஆண்டுக்கு 90 லட்சம் தெர்மா மீட்டர்கள் தயாரித்துள்ளது. சராசரியாக 20 லட்சம் தெர்மா மீட்டர்கள் உடைந்து வீணாகியுள்ளன.
2000ல் பழனி மலை பாதுகாப்பு குழு நடத்திய ஆய்வில்தான் பாதரச கழிவால் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
பின்னர் 289 டன் கண்ணாடி, பாதரசக் கழிவுகள் கப்பல் மூலம் திருப்பி அனுப்பப்பட்டது.
தொழிற்சாலை இயங்கிய 6.5 ஏக்கர் நிலத்திலும் அருகில் உள்ள காப்பு காடுகளிலும் பாதரசம் கலந்துள்ளது.
கொடைக்கானல் நீர்பிடிப்பு பகுதி என்பதால் அலட்சியப்படுத்தாமல் முறையாக சுத்திகரிக்க வேண்டும்.
ஒரு கிலோ மண்ணில் பாதரசத்தின் அளவு 10 மில்லி கிராம் அளவுக்குள் இருப்பது போல் சுத்திகரிக்க நிறுவனம் சம்மதம் தெரிவித்தது.
உலக அளவிலான தரத்தில் கூறுவது என்றால் ஒரு கிலோ மண்ணில் பாதரசத்தின் அளவு 1 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்நிலையில், 10 மில்லி கிராம் என்ற அளவைவிட 25 மில்லி கிராம் அளவாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உங்களை பயன்படுத்த வேண்டாம் என கூறவில்லை. எதைப் பற்றியும் தெரியாமல் இருக்காதீர்கள். தயவு செய்து பாரம்பரியத்தை மறக்காதிர்கள். நம் முன்னோர்கள் இதைப் பயன்படுத்தி வாழவில்லை.
அவர்கள் ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நாம் ஆரோக்கியமாகவே இல்லை. குழந்தைகளுக்கு ஆரோக்கியம் என்ற பெயரில் விஷத்தை வாங்கி தருகிறோம்.
இந்த பதிவால் நாங்கள் பணம் சம்பாதிக்க போவதில்லை. உங்களில் ஒருவர் மாறினாலும் போதும்.
சில மேதைகள் எங்களுக்கு மத சாயம் பூச முயற்சி செய்கிறீர்கள். வாழ்நாள் முழுவதும் ஜால்ரா தட்டி கொண்டே இருங்கள். எங்களை முட்டாள்கள் என்றும், பைத்தியம் என்று நினைத்தாலும் பரவாயில்லை. உலக அரசியல் தெரிந்தால் புரியும்.
எங்களை கோமாளிகள் என்று வைத்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஆட்டு மந்தையாக இருக்கு ஆசைப்படாதீர்கள்.
வாழ்நாள் முழுவதும் விளக்கை சுற்றும் விட்டில் பூச்சிகளாக இருக்கு வேண்டாம்.
உலகம் அது இல்லை. நாகரிகத்தின் மேல் ஆவல் கொண்ட முட்டாள்கள் இருக்கும் வரை எதுவும் மாறாதது.
நீ யார் என்று மறந்து விடாதே. எங்களை எவ்வாறு வேண்டுமானாலும் நினைத்து கொள்ளுங்கள். நாங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
இது முதல் பதிவு. இன்னும் பல நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில் தருகிறேன். இது ஆரம்பம் மட்டுமே...
மூலிகைகளும், தீரும் நோய்களும்...
1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்.
2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்.
3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு.
4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு.
5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.
6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்.
7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்.
8. வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்.
9. அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்.
10. வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்.
11. நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.
12. நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்.
13. சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்.
14. மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்.
15. திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு.
16. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்.
17. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு.
18. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்.
19. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்.
20. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்.
21. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்.
22. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்.
23. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்.
24. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்).
25. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்.
26. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.
27. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்.
28. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்.
29. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்.
30. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்.
31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.
32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்.
33. கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்...
கன்னியாஸ்திரியை பலமுறை பலாத்காரம் செய்த பிஷப் திடீர் ராஜினாமா.. எதிர்ப்பால் சொந்த மாநிலத்திற்கு பறந்தார்...
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை பலாத்காரம் செய்திருப்பதாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் பிராங்கோ முலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி சக கன்னியாஸ்திரிகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைகோர்ட்டில் வழக்கு இதைத் தொடர்ந்து பேராயர் பிராங்கோ முலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதில், 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு உள்ளது. பேராயருக்கு எதிரான புகாரை போலீசார் சரிவர விசாரிக்கவில்லை எனக்கோரி கேரள ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திடீர் ராஜினாமா இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதனால், பிராங்கோ முலக்கல் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். பிஷப் பிராங்கோ முலக்கல் மீதான புகார் வாடிகன் வரை சென்றுள்ள நிலையில் அவர் இன்று திடீரென பதவி விலகியுள்ளார்...
பிரமிடுகளும்... வேற்றுக்கிரகவாசிகளும்...
நமக்கு பிரமிடுகள் என்றவுடன் நினைவில் வருவது எகிப்து கெய்ரோவில் உள்ள, கிசா மற்றும் மூன்று பிரமிடுகள் தான்...
ஆனால் உலகெங்கும் பல பிரமீடுகள் உள்ளன. மத்திய அமெரிக்காவில் 1000 க்கும் மேற்பட்ட பிரமிடுகள் உள்ளன. சீனாவில் 300 பிரமிடுகள் மற்றும் சூடானில் 200 க்கும் மேற்பட்ட பிரமிடுகள் உள்ளன. எகிப்தில் சுமார் 120 பிரமிடுகள் மட்டுமே உள்ளன.
இந்த புதிரான அமைப்பு ஏன் நம் கிரகத்தின் மீது அமைந்துள்ளது? உலகெங்கிலும் உள்ள அனைத்து பழங்கால நாகரிகங்களும், பண்டைய மாயா, அஸ்டெக்குகள், இன்கா, பண்டைய சீனர்கள் மற்றும் பலர் இந்த supermassive கட்டமைப்புகளை ஏன் உருவாக்கினார்கள்? மேலும், உலகெங்கிலும் பல பிரமிடுகள் ஏன் வடிவமைப்பில் ஒரே மாதிரி இருக்கின்றன?
நம் முன்னோடிகள் பிரமிடுகளை யாருக்காக கட்டியுள்ளார்கள் என்பதை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாதது ஏன்? வேற்றுகிரக பார்வோனுக்கும் அரசர்களுக்கும் நித்திய நிம்மதியான இடங்களாக சேவை செய்ய அவர்கள் விரும்பினார்களா?
உலகம் முழுவதும் எழுப்பியுள்ள பிரமிடுகள் தற்செயல் தானா?
அவர்களில் பெரும்பாலோர் எப்படி ஒத்திருக்கிறார்கள்? பூர்வகால கலாச்சாரங்கள் எப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இணைந்திருக்க முடியும்?
எல்லாவற்றிற்கும் மேலாக, பிரமிடுகள் கல்லறைகளாக பயன்படுத்தப்படவில்லை, ஆனால் முற்றிலும் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை திருப்திபடுத்தவே பண்டைய மக்கள் இதை கட்டியிருக்ககூடும். அவைகளே உலகம் முழுவதும் உள்ள பூர்வகால கலாச்சாரங்களை வழிநடத்த ஒன்றினைத்திருக்க வேண்டும்...
வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
திருமுலாவின் (Tirumala, Tirupati) புனித மலைகளில் காணப்படும் ஒரு வித்தியாசமான கல் வளைவு இது. இந்த கல் வளைவானது மிகப்பெரியது, அது 26 அடி அகலமும் 10 அடி உயரமும் கொண்டது, மற்றும் புவியியலாளர்கள் இத்தகைய அமைப்பு கொண்ட கல் வளைவு வேறெந்த பகுதிகளிளும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.
இது ஒரு இயற்கையான கட்டமைப்பைப் போல் இல்லை. இது செயற்கையாக புத்திசாலி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது என்று பல இடங்களில் கல்வெட்டுக் குறிப்புகள் இருப்பதாகத் விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்..
ஆனால் அரசாங்கத்திடம் இந்த அமைப்பு பற்றி சில மர்மமான விசயங்கள் உள்ளது. இயற்கையான உருவாக்கம் என்றால் ஏன் 8 அடி உயர வேலி தேவைப்படுகிறது? இது ஒரு இயற்கை ராக் உருவாக்கம் என்றால், அது ஏன் பூட்டப்பட வேண்டும்? பொதுமக்களுக்கு உள்ளே நுழைய அனுமதிக்காமல் மூடப்பட்டிருப்தன் இரகசியம் என்ன? இந்த பகுதியில் என்ன நடக்கிறது? இந்த இடத்தில் உள்ளே என்ன இருக்க முடியும்?
கடந்த தசாப்தத்தில் மக்கள் செல்போன்கள் மற்றும் காமிராக்களைப் பயன்படுத்தி ஆரம்பிக்கையில் ஏதோ விசித்திரமாக நடந்தது. என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பல மக்கள் தங்கள் செல்போன்கள் மற்றும் காமிராக்கள் வளைவுக்கு அருகே வந்தபோது இறந்துவிட்டதாக புகார் தெரிவித்தனர்.
ஒரு மனிதர் பாறைகளை நெருங்கிய போது மயக்கம் அடைந்தார் எனவும் டாக்டர்கள் பரிசோதித்த போது அவரது இதயமுடுக்கி பேஸ்மேக்கரை இந்த கதிர்கள் நிறுத்திவிட்டதை கண்டுபிடித்தனர். இந்த அமைப்பு உள்ள பகுதிகளில் மின்னணு உபகரணங்களுடன் குறுக்கிடும் சில வகையான emf கதிர்வீச்சுகளை வெளியிடுவதாக கூறிகின்றனர்.
இந்த பகுதியை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், அவர்கள் தங்கள் செல்போன்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு வினோதமான கதிரியக்கத்தை இந்த பாறை இயற்கை உருவாக்கம் வெளிப்படுத்துவதையே இந்த எல்லா ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன.
உண்மையில் இது ஒரு Stargate எனவும் நீல நிற கடவுள் விஷ்ணு அவரது கிரகத்தில் இருந்து பூமிக்கு இதன் வழியாக வந்ததார் என உள்ளூர் மக்களும், சதி ஆலோசனை வல்லுநர்களும் தெரிவிக்கிறார்கள்...
Subscribe to:
Posts (Atom)