18/09/2018

செப்டெம்பர் 17 - திராவிட எதிர்ப்பு நாள்...


தமிழர்கள் தன்மானமும் சுயமரியாதையும் இழந்த நாள்.

எவனொருவன் தமிழையும் தமிழரையும்  இறுதி மூச்சு வரை இழிவு செய்தானோ அவனையே தந்தை என்று தமிழர்கள் வணங்கிய அவலம்.

இதை விட ஒரு உளவியல் தாக்கம் தமிழர்களுக்கு வேறு எதுவும் இல்லை.

தமிழ்ச் சாதிகளுக்குள் நிரந்தர பகை மூட்டி தமிழர்களை திராவிட அடிமைகளாக மாற்றிய ஒருவனுக்கு பிறந்த நாள் இன்று.

ஒழுக்கம், பண்பாடு என்ற அனைத்தையும் மறுத்த கயவனுக்கு பிறந்த நாள்.

பார் போற்றும் நாகரீகம் கொண்ட தமிழனுக்கு வரலாறு இல்லை, பண்பாடு இல்லை என்று பிதற்றிய பித்தனுக்கு பிறந்த நாள்.

தமிழர் நாட்டிலேயே தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்தி அதை தமிழர்களையே ஏற்க வைத்த பெரும் பகைவனின் பிறந்த நாள்.

தமிழர் மதத்தையும், தமிழர் மெய்யியலையும் இழிவு செய்து தமிழர்களுக்கு அறிவே இல்லை என்று கூறிய அற்பனின் பிறந்த நாள்.

தமிழகத்திற்கு வரவேண்டிய தமிழர் நிலப்பகுதிகளை அண்டை மாநிலத்திற்கு தாரை வார்க்க காரணமாக இருந்த நயவஞ்சகனின் பிறந்த நாள்.

திராவிடம் என்ற கருத்தை விதைத்து தமிழர் அடையாளத்தை சிதைத்தவனின் பிறந்த நாள்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை மலமென்று கூறிய அறிவுக் குருடனின் பிறந்த நாள்.

தமிழர்களுக்கு கருப்பு நாளான இன்றைய நாளை சிறப்பு நாளாக கொண்டாடும் மானமற்ற தமிழர்கள் வாழும் வரை...

தமிழர்கள் வேற்றின மக்களுக்கு நிரந்த அடிமைகளாகவே வாழ வேண்டி இருக்கும்.

தமிழா தன்மானம் கொள்..

இறுதி வரை இனவெறி கொண்ட பகைவனை போற்றுவதை நிறுத்து.

திராவிட மாயையில் இருந்து வெளியேறி தமிழனாக தலை நிமிர்ந்து நில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.