18/11/2018

டெல்டா பகுதிக்கு உதவுவோம்...


மீன் சாப்பிடுவதால் இதய நோய்யை தவிர்க்கலாம்...


மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு கூறுகிறது.

வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது. வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேகவைக்கும் தட்டில் (ஓவன்) பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது.

கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என பேராசிரியர் டொனால்டு தெரிவித்தார்...

கஜா செயற்கை புயலா?


கஜா புயல் தாக்கிய பகுதிகளும் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள இடங்களும் ஒன்றாக இருப்பது தற்செயலானதா?

HAARP குறித்து தெரிந்தவர்களுக்கு இந்த சந்தேகம் வரும்...

https://www.google.com/amp/s/www.globalresearch.ca/haarp-secret-weapon-used-for-weather-modification-electromagnetic-warfare/20407/amp

ருமாட்டிக் காய்ச்சல் (Rheumatic Fever) காய்ச்சல் குணமாக...


காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற பழமொழி காய்ச்சலின் கொடுமையை மிக எளிதாய் உணர்த்துகின்றது.

காய்ச்சல் வந்தாலே உடலை சோர்வாக்கி ஆளை படுத்த படுக்கை ஆக்கி விடும்.

உண்மையில் காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல அது ஒரு போர்களத்தின் உஷ்ணம்.

நமது உடலில் உள்ள நல்ல நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெளியில் இருந்து வரும் கெட்ட கிருமிகளுக்கும் நடக்கும் போராட்டத்தின் விளைவே காய்ச்சல் ஆகும்.

இந்த போராட்டத்தின் தன்மையை பொறுத்து உடலின் வெப்பம் அதிகரிக்கும். மிகப் பெரிய பெரிய போராட்டமாய் இருந்தால் உடலின் வெப்பம் 100 டிகிரிக்கு மேல் கொதிக்கும். காய்ச்சல் ஏற்படும் நாட்கள் மற்றும் அதன் தன்மையை பொறுத்து காய்ச்சலின் வீரியத்தை கண்டறியலாம்.

இந்த காலகட்டத்தில் தினம் தினம் ஒரு புது பெயரில் காய்ச்சல் வருகின்றது. அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். இந்த கால உணவு முறைகளில் ஏற்பட்ட அபரிமிதமான மாற்றம் தினம் ஒரு புது நோய்க்கு வழிகோலுகின்றது. முந்தைய காலங்களில் உணவே மருந்தாய் நம் முன்னோர்கள் உண்டு வந்தனர். இந்த காலத்தில் உணவை விஷமாய் உண்டு வருகிறோம். அதன் காரணமாகவே நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகிறது. அதனால் மிக எளிதில் காய்ச்சல் தொற்றிக் கொள்கிறது.

தீவிர காய்ச்சலை மிக சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் அளவுக்கு சென்று விடும். இயற்கை மருந்தை எடுத்துக் கொண்டாலும் அல்லது இரசாயன மருந்தை எடுத்துக் கொண்டாலும் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரிடம் சென்று விட வேண்டும். மருத்துவரிடம் காய்ச்சலுக்கு முந்தைய நாளின் அறிகுறியில் இருந்து நீங்கள் எடுத்துக் கொண்ட மருந்துகள் வரை அனைத்தையும் தெளிவாய் சொல்லி மருத்துவம் பார்க்க வேண்டும்.

பொதுவாகவே குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் நோய் எதிப்பு சக்தி குறைவாகவே காணப்படும். அதனால் இவர்களுக்கு காய்ச்சல் அடித்தால் சாதரணமாக விட்டு விடக் கூடாது. குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இயற்கை நோய் எதிர்ப்பு உணவுகளை தினம் கொடுத்து அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் வலிப்பும் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும். அது ஃபெப்ரைல் ஃபிட்ஸ் ஆக இருக்கக்கூடும். மிக கவனத்துடன் பார்க்க வேண்டிய காய்ச்சல் இது.

குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் மூட்டு வலியும் சேர்ந்து வரலாம். இந்த காய்ச்சல் ருமாட்டிக் காய்ச்சலாக (Rheumatic Fever) இருக்கக்கூடும். இந்த ருமாட்டிக் காய்ச்சல் வந்தால் ஒரு நாலைந்து நாட்கள் ஆளை படுக்க வைத்து விடும். பின்பு குணமாகிவிடும். ஆனால் ருமாட்டிக் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்காமல் சாதாரணக் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்து விட்டு விட்டால் அது பிற்காலத்தில் அதாவது ஒரு பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு பிறகு இதய நோயில் கொண்டு போய் விட்டு விடும். இதய வால்வில் அடைப்பு என இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். இதை போன்று காய்ச்சலுடன் மூட்டு வலியும் சேர்ந்து வந்தால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ருமாட்டிக் காய்ச்சலுக்கான பரிசோதனையும் பார்க்கப்படுகின்றது. மற்ற நாடுகளில் இதற்கான விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை.

அடிக்கடி காய்ச்சல் களைப்பு வந்தால் அது காசநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். காய்ச்சல் என்று இல்லை எந்த நோயும் அடிக்கடி வந்தால் அது சம்பந்தமாய் முழு பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம்.

பெரும்பாலனோர்க்கு லேசான காய்ச்சல் அடித்தால் தாமாகவே உடனே ஒரு பாரசிட்டமால் போட்டுக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. குழந்தைகளுக்கும் இதைப் போன்றே உடனே பாரசிட்டமால் கொடுக்கிறார்கள். நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை நாமாகவே கெடுத்துக் கொள்ளும் தவறான அணுகுமுறை இது. இதை தவிர்த்து விட்டு உடம்புக்குள் இயற்கை மருந்துகள் கொடுத்து, உடம்புக்கு வெளியில் சுத்தமான துணியை நல்ல நீரில் நனைத்து பிழிந்து அக்குள்களில் வைத்துக் கொள்ளலாம். அந்த துணியை நீளமாக மடித்து நெற்றியில் பற்றுப் போடலாம். மேலே கூறியது போல் அதிக காய்ச்சல் அடித்தாலோ, நடுக்கம் வந்தாலோ, உளறல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

காய்ச்சலுக்கு நம் வீட்டிலேயே உள்ள பொருட்களைக் கொண்டு இயற்கை மருந்துகள் செய்து கொடுக்கலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.

காய்ச்சல் குணமாக மிளகு மருந்து...

காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம். இந்த மிளகு கஷாய நீரை ஆற வைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் குடித்தால் காய்ச்சல் குணமாகும். ஒவ்வொரு முறை குடிக்கும் முன் லேசாக சுட வைத்து இளஞ்சூட்டில் குடித்தல் நல்லது. இந்த மருத்துவத்தை மொத்தமாக செய்து வைத்துக் குடிக்காமல் தினம் தினம் புதிதாக தயார் செய்து குடித்து வந்தால் நலம். இரண்டே நாட்களில் காய்ச்சல் குணமாகும். மிளகின் காரம் அதிகம் இருந்தால் அதில் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

காய்ச்சல் குணமாக சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை மருந்து...

காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் கறிவேப்பிலை ஒரு கையளவு சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். அரைத்த கலவை மை போன்று இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் மருந்தை ஒரு சிறிய நெல்லிக்கனி அளவு எடுத்து காலையும் மாலையும் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் குணமாக வல்லாரை, மிளகு, துளசி மருந்து...

வல்லாரை இலை, துளசி இலை மற்றும் மிளகு ஆகியவற்றை ஒரு கைப்பிடி வீதம் எடுத்துக் கொண்டு நன்கு அரைக்க வேண்டும். மை போல் அரைத்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின் காய்ச்சல் உள்ளவர்களுக்கு வேளைக்கு ஒரு உருண்டை வீதம் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்தச் செய்தால் காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் குணமாக துளசி, இஞ்சி மருந்து...

காய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் குணமாக பார்லி அரிசி, பால் மருந்து.

காய்ச்சல் குணமாக பார்லி அரிசி வாங்கி சாதம் வைப்பது போல் தண்ணீருக்கு பதில் பாலில் வேக வைத்து கொடுக்கலாம். காய்ச்சல் அடிக்கும் போது நாவில் ருசி அவ்வளவாக இருக்காது. சாப்பாடும் சாப்பிட தோன்றாது. அந்த மாதிரி சமயங்களில் இந்த பார்லி பால் சாதம் கை கொடுக்கும்...

கஜா புயல் தந்த எச்சரிக்கை...


நல்லா சாப்பிட்டாச்சு, இனி உறுப்படியா சிந்திக்கணும்...


ஒரு வட்டத்திற்குள்ளயே சிக்காதீங்க..

ஏன்னா நீங்க சிந்திக்க கூடாது என்பதற்காகவே, இங்கு அனைத்தும் வளர்க்கப்படும், நீங்களும் அதுதான் உங்கள் தேவையென கருதி அதையே தின்னுட்டு இருப்பீங்க...

ஒரே இடத்துல தின்னாதீங்க, கொஞ்சம் வெளியே வாங்க...

அனைத்து கருத்தியலையும் நேரடியாக எதிர்க்க இங்கு இதுவரை எந்த தலைவனும் வரவில்லை...


இங்கு என்பது தமிழ்நாட்டில்..

நட்பு ரீதி, அரசியல் நாகரீகம் எனக்கூறி மக்களை பிரித்து வைத்து ஏமாற்றுவதற்கு தான் கட்சிகளும், கட்சி தலைவன்களும் போட்டி போட்டு தினந்தோறும் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்...

இலக்கியத்தில் தமிழர்நாடு...


கேள்வி: இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா?

தமிழ் :

தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது. முக்கியமானவை மட்டும் தருகிறேன்.

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
- புறநானூறு 58.

அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
- புறநானூறு 50.

தமிழ் வையைத் தண்ணம் புனல்
- பரிபாடல் 6.

தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார், கொள்ளார் - பரிபாடல் 9.

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் - பரிபாடல் 4.

தமிழர் :

தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து - புறநானூறு 19. (இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்).

மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் - புறநானூறு 35 (தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்).

தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள் - பரிபாடல் 8 (தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்).

அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை - சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை.

தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காண - முத்தொள்ளாயிரம் 24.

தமிழர்நாடு :

தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது,

தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த
- அகநானூறு 31

இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது,

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
- தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்

தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.

தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம் - பரிபாடல் 9

தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்
- புறநானூறு 51 (தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்க மாட்டானாம். தனக்குத் தான் அது சொந்தம் என்பானாம்)

கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக் - பதிற்றுப்பத்து 63 (செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து).

தமிழகப்படுத்த இமிழிசை முரசின்
- அகநானூறு 227 (தமிழகம் எனும் சொல்).

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த. - சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை).

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு  - சிலப்பதிகாரம், வேனில் காதை (வரம்பு அதாவது எல்லை).

தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
- சிலப்பதிகாரம், நாடுகாண் காதை.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
- சிலப்பதிகாரம், காட்சிக் காதை.

குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்

- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை.

தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை - மணிமேகலை (தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி).

யார் தமிழன்? ஏது தமிழ்? எங்கே தமிழர்நாடு? போன்ற வந்தேறித்தனமான கேள்விகளுக்கு இதற்கு மேலும் பதிலளிக்க முடியாது...

புமல் மீட்புப் பணியில் சகாயத்தின் சகாக்கள்...


சுயநலமான நான் நான் என்ற தற்சார்பை ஒருபோதும் பேசாதீர்கள்...


தற்சார்பை வாழ்வியலாக கொண்ட தமிழீழ கருத்தியலை முழுவதுமாக செயல்படுத்த வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது..

ஏனெனில் மக்களுக்கான கருத்தியல் இல்லாத எந்தவொரு தற்சார்பும் சாத்தியமில்லை..

கருத்தியல் இல்லாமல் தற்சார்பை விதைப்பீர்கள் என்றால், அது ஒருநாள் கண்டிப்பாக எதிரிகளால் கைப்பற்ற பட்டு வணிகமாக மாறும்...

இந்த வலிகள் உணர்த்துவது ஒன்றே ஒன்று தான்...


உங்களுக்கு எதுவும் நடக்காத வரை, என் வலிகள் உங்களுக்கு வெறும் புகைப்படம் மட்டும் தான்..

ஒருவேளை என் சாதி/மதம்/சமூகம் இந்த உலகத்தை ஆளலாம்,

ஆனால் நான்..?

நாங்கள் ஏன்..? பிறந்தோம் என சிந்திப்பதற்குள்ளயே, எங்களின் வாழ்க்கை முடிந்து விடுகிறது...

அனுதாபத்தையும், உதவியையும் நான் எதிர்பார்க்க வில்லை..

இந்த நிலைமைக்கு எங்களை ஆக்கிய, அரசியலை அடுத்த தலைமுறைக்கு எடுத்து கூறுங்கள்..

ஏதோ ஒரு பெரும் பணக்காரனின் சொத்தை விற்றால், உலகம் முழுக்க இருக்கின்ற ஏழ்மையை ஒழித்து விடலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

அவன் ஏன்..? இன்னும் அப்படி செய்யவில்லை என கேளுங்கள்..

ஏழ்மை இங்கு உருவாகவில்லை, யாரோ சிலரின் பேராசைக்காக உருவாக்கப்படுகிறது...

இதில் எது உண்மை...




உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நாடு முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒரு கோடி பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது...


சர வெடிகளுக்கு தடை, பசுமை வெடி உற்பத்தி, பட்டாசுகள் தயாரிக்க பெரிதும் பயன்படும் பேரியத்திற்கு தடை  என அடுத்தடுத்த உத்தரவுகளை பட்டாசு தொழிலுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் பட்டாசு உற்பத்திகள்  இனி நடைபெற வேண்டும் என அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் கட்டுப்பாட்டுத் துறை ( பெசோ) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

காற்று மாசு கொடுமையால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களை காக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை வரவேற்கும்  அதே வேளையில் அத்தீர்ப்பின் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் ஒருகோடி ஏழை மற்றும் கீழ்தட்டு தொழலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிற உண்மையையும் சுய ஆட்சி கட்சி உணர்ந்துள்ளது

1960 களின் கடைசியில் மேற்கு வங்கத்தில் கைரிக்சா தொழிலுக்கு மாற்றாக ஆட்டோ ரிக்சா தொழிலை அறிமுகப்படுத்திய போது, பெருமளவுக்கு அத்தொழிலாளர் பாதிக்கப்பட்டனர். ஆனால் மேற்குவங்க அரசு, அத்தொழிலாளர்களுக்கு வேறு தொழிலுக்கு மாறுவதற்கான பயிற்சியும் மற்றும் பொருளாதார உதவி மற்றும் நிவாரணம் கொடுத்ததுபோல் பட்டாசு தொழிற்சாலை மூடப்படுவதால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு, நிவாரணமும் மாற்றுத் தொழிலுக்கான பயிற்சிக்கான ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று சுயஆட்சி இந்தியா கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் உச்ச நீதிமன்றமே கோடிட்டுக் காட்டிய பசுமை பட்டாசுகள் குறித்து மேற்கொண்டு தகவல்கள் திரட்டி பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்படும் தொழிலாளிகள் வாழ்வு பாதுகாப்பு பெற  தமிழக அரசு உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் நாடு சுய ஆட்சி இந்தியா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது .

கே. பாலகிருஷ்ணன்,மாநிலத் தலைவர்
செல்: 94446 27827

எஸ். எரோணிமுஸ், மாநில பொது செயலாளர், செல்:94431 91787

சுய ஆட்சி இந்தியா, தமிழ் நாடு...

கருத்தியல் விதைப்பு...


இயற்கை முறைக்கு மாறுவோம்.. ஆரோக்கியமாக வாழ்வோம்...


ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.

மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.

மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

அதிக தலைவலி இருக்கும் போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எளிய இயற்கை வைத்தியம்

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horse gram) கொடுக்க வேண்டும்.

13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.

50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.

54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்... ஆரோக்கியமாக வாழ்வோம்...

எந்த புயலானாலும் சுங்கசாவடியை கடந்து செல்ல வேண்டுமானால் சுங்க வரி செலுத்தியே ஆக வேண்டுமென கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது...


அதான் அடிச்சி நொறுக்கிவிட்டு போய்விட்டது...

கஜா புயல் செய்த ஒரே நற்செயல் இதுதான்...

கன்னடர் கேட்ட கர்நாடகா...


1928 இல் கன்னடர் ஒன்றுகூடி ஒரு குழுவை நியமித்தனர்.

அக்குழு கன்னடர் வாழும் பகுதிகளை கணக்கில் கொண்டு வரைபடம் ஒன்றைத் தயாரித்தனர்.

இந்தியாவை விட்டு வெள்ளையர் சென்றபிறகு தமக்கென மொழிவாரி மாநிலம் கேட்டுப் பெற இந்த முன்னெடுப்பைச் செய்தனர்.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைபடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் நீலகிரி, கொள்ளேகால், ஓசூர் ஆகியன சேர்க்கப்பட்டிருந்தன.
இதில் கொள்ளேகாலம் அவர்களிடம் போய்விட்டது...

மராட்டிய ரஜினி யின் சிஸ்டம் இது தான்...


மராட்டிய ரஜினி யின் சிஸ்டம் இது தான்...


அசாம் பவன் படையெடுக்கும் வடஇந்திய குடியேற்றம்...


தமிழகத்தில் சரவண பவன் திறப்பது போல பிற மாநிலத்தவர்கள் நலம் காக்க பவன்கள் திறக்கப்படுகிறது. ஒடிசா மக்களின் பதிவை பதிய பாதுகாக்க ஒடிசா பவன் அதனை தொடர்ந்து ஆசாமி பதிவை பதிய பாதுகாக்க அசாம் பவன். எவன் எவனோ வருகிறான் வாழுகிறான் ஆனால் எங்கள் தொப்புள் கோடி உறவுகள் மட்டும் தமிழகத்தில் முகாமில் சிறைப்பட்டு உள்ளார்கள் 

மெல்ல ஊடுருவும் பிறமொழி அரசியல் அபாயம்...

தமிழகத்தில் வட இந்தியர்கள் குடியேற்றம் கணிசமாக அதிகரித்து வருவது அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றன என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 77.5 லட்சமாகி இருக்கிறது என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கணக்கில் வராத எண்ணிக்கையையும் சேர்த்தால் ஒரு கோடி வர வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் வட இந்தியர் குடியேற்றம் அதிகரித்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் சவுகார்பேட்டை, வேப்பேரி ஆகியவை வட இந்தியர்கள் ஆதிக்கப் பகுதியாகும்.

தேர்தல் காலங்களில் இந்தியில்தான் பிரசாரம் செய்ய வேண்டும்; இந்தியில் தான் போஸ்டர் ஒட்ட வேண்டும் என்கிற நிலைமை இருந்து வருகிறது. ஆனாலும் இதை மவுனமாக கடந்து சென்று கொண்டிருக்கிறது தமிழகம்.

குக்கிராமங்களில் வடஇந்தியர்கள்...

இப்போது தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட வட இந்தியர்கள் குடியேற்றங்கள் அதிகரித்திருக்கிறது. அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஒரு தனியார் மில் பணிக்காக ஒடிஷாவைச் சேர்ந்த 70 பேர் அழைத்துவரப்பட்டு ஒரு காலனி போன்ற குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்கிற செய்தி வெளியாகி இருந்தது. இப்படி வட இந்தியாவில் இருந்து கொத்து கொத்தாக தமிழக தொழிற்சாலைகளுக்காக தொழிலாளர்கள் 'இறக்குமதி' செய்யப்படுகின்றனர். இங்கே கிடைக்கும் சொற்ப கூலி அவர்களுக்ககு சொர்க்கமாக இருக்கிறது; இங்கே முறைகேடாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் பெற்றுவிட முடியும். அப்புறம் என்ன சுகமான வாழ்வு.. இதற்காக படையெடுத்து வருகின்றன பெருந்தொழிலாளர்கள் கூட்டம் ஒரு பக்கம்.

அரசியல் நெருக்கடிக்கு வாய்ப்பு...

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் கணிசமாக வாழ்கிற போது அம்மாநில மக்கள் தமிழகத்தில் வாழ்வதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. அதேநேரத்தில் இதை கடும் விழிப்புடன் தமிழக அரசுடன் அணுக வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இத்தகைய வெளிமாநிலத்தவர் குடியேற்றம் தமிழக சமூக, அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆராய தனி அமைச்சகமே தேவை என்கின்றனர் இவர்கள். ஏனெனில் தமிழகத்தில் தற்போது ஜாதிவாரியாக வேட்பாளர்களை நியமிக்கும் அவலம் இருக்கிறது. காலப்போக்கில் சவுகார்பேட்டையை உள்ளடக்கிய தொகுதியில் தாங்களே தீர்மானிக்கும் சக்தி என்பதால் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும் கட்சிக்கே என்கிற முழக்கம் எழுந்துவிட்டால் தமிழக அரசியலில் நெருக்கடி உருவாகிவிடும்.

பிற மாநில குடியேற்றம்...

கர்நாடகாவில் கன்னடர்களுக்கு இணையாக தமிழர்கள் இருந்தபோதும் தமிழர் பகுதிகளில் மட்டும் தமிழரை வேட்பாளராக நிறுத்தும் போக்கு இருந்தது. ஆனால் தற்போது அது மாறி வருகிறது. தமிழகத்திலும் பிற மாநிலத்தவர் வாழும் பகுதிகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளர் என்கிற முழக்கம் எழும் அபாயத்தைத்தான் இத்தகைய குடியேற்ற அதிகரிப்பு சுட்டிக்காட்டுகிறது. தமிழக அரசியல் கனத்த தாக்கத்தைத் ஏற்படுத்தக் கூடிய, புதிய ஊடுருவலாக இருக்கும் மொழி அரசியல் அபாயம் தொடர்பான உரத்த விவாதம் அவசியமே!

தமிழர் ஆய்வுக் கூடம்...

Who Killed Brite Durai? கொன்றது யார்?


மழை வரும் வரை காத்திருந்து, தாமதமாக மழைக்காலத்தில் தொடங்கப்பட்ட கால்வாய் வேலைகள் ஓர் உயிரை விலையாக வாங்கிக்கொண்டது. மழைநீர் கால்வாய் அமைக்கிறேன் பேர்வழி என்று மழைக்காலத்தில் அவசரகதியில் பாதுகாப்பின்றி நடத்தப்பட்ட வேலைகளால் கிழக்கு தாம்பரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் மரணித்து இருக்கிறார்.

கடந்த 11ம் தேதி இரவு ப்ரைட் துரை (Brite Durai) அவரது நண்பர் ஒருவருடன் வாகனத்தில் சென்று மழைநீர் கால்வாய்க்காக வெட்டப்பட்ட மணலில் மோதி விபத்து ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ப்ரைட் மோதிய வேகத்தில் கால்வாய் குழியில் பாய்ந்து விழ, அவரது நண்பர் அம்மணலிலே விழுந்து மயக்கமானதாகவும், குழியில் தண்ணீர் நிரம்பியிருந்த சூழலில் பிரைட் அதில் மூழ்கி மரணித்தார் என்றும் செய்திகள் கிடைக்கின்றன..

ப்ரைட்டை கொன்றது யார்?

அவசரகதியில் பாதுகாப்பில்லாமல் இந்த வேலையை தொடங்கிய அதிகாரிகளும், அதை கேள்வி கேட்காத நீங்களும் தான். இன்று ப்ரைட் நாளை யார்? நாமாக கூட இருக்கலாம். அலட்சியத்தின் விலையாக நம் உற்றாரின் உயிரை கொடுக்க உங்களுக்கு மனமிருக்கிறதா?

நாம் இந்த அரசு அமைக்கும் கட்டமைப்பு வசதிகளில் இரவுகளில் கூட விழித்து கொண்டிருக்க வேண்டும் போல. உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.. இனியொரு முறை இந்த நிலையை நாம் சந்திக்க  கூடாது.

ப்ரைட்டின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்...

அஜினமோட்டோவின் விளைவுகளைப் பற்றி உலகெங்கிலும் அறிவார்கள்...


எனினும், இது குறித்து தெளிவான கருத்துக்கள் வெளிவர மறுக்கின்றன. ஏனெனில், அஜினமோட்டோ தொழில் மிகவும் பரவி உள்ளன, இந்தியா உள்பட உலகம் முழுவதும்.

இந்த விளைவுகள் உறுதியானவை என்று சொல்லப்பட்டால், எண்ணற்ற ரெஸ்டாரெண்ட்களையும், உணவகங்களையும்,நெகிழியில் அடைப்பட்ட உணவு வகைகளையும் மூட வேண்டியது தான். குறிப்பிட்டு சொல்லக் கூடிய சில பெரிய உணவு தயாரிப்பு நிறுவனங்களில் அஜினமோட்டோவை தாராளமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பது 100% உண்மையே.

குறிப்பு:- நம்மூர் உணவகங்களில் Unlimited food என்ற பெயரில் சோற்றில் அஜினமோட்டோவை கலக்கப்படுகிறது என்பதும் உண்மை தான், எனென்றால் வீட்டில் உண்பது போல உங்களால் அதிகளவு சோறு உட்கொள்ள இயலாது...

நான் ஏன் பாமக அன்புமணி இராமதாஸ் அவர்களை ஆதரிக்கிறேன்...


அன்புமணி உலக அளவில் நான்கு பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்...

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது (Luther L. Terry Award)...

உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Tobacco Control)...

உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Leadership)...

உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் விருது (Rotary International Polio Eradication Champion award)...

நம் அருகிலுள்ள சைக்கோக்கள்...


முக்தி...


மீண்டும் ஒரு தாயின் அரவனைப்பு இயற்கை மட்டுமே...


மழை 

இரண்டு கைகளையும் நீட்டி வானத்தை பார்த்து மழையின் ஒவ்வொரு சொட்டும் நம் முகத்தில் படும் போது ஓவ்வொரு உணர்வுகள்...

இரண்டு கைகளையும் மழை தாயுடன் தட்டி விளையாடும் சுகம்...

அந்த தண்ணீரை குடித்து உடல் குளிர்ச்சி அடைவது ஒரு சுகம்...

தனது கால்களையும் ஆர்பரித்து விளையாடுவது ஒரு சுகம்...

மர இலைகளில் வடியும் தண்ணீரை ரசிப்பது  ஒரு சுகம்..

மகிழ்ந்து இருங்கள் இந்த கணத்தில்...

டாக்டர் எல்லிஸ் சில்வரும்... வேற்றுக்கிரகவாசி உண்மைகளும்...


மனிதன் இயற்கையை மிஞ்சிய கடவுள்( சக்தி) ஏதும் இல்லை என்று உணரும் தருணத்தில்...


அவர்களுது கடவுள் சிலைகள், வழிபாடுகள், தத்துவங்கள், கதைகள், போதைனைகள், கலாச்சாரம், ஆசை, பேராசை, அறிவு அனைத்தும் அவர்கள் மனதில் தவுடு பொடி ஆகும்..

மனிதனும் சாதரான உயிரினம் என்று நினைத்தே ஆக வேண்டும்...

நம் நாட்டின் இயற்கை பொருட்களை இனியாவது உபயோகிக்க தொடங்குங்கள்...


உங்களது தந்திரம் உங்களுக்கு உதவாது...


ஏனெனில், யாருடன் நீங்கள் தந்திரமாக செயல்படுகிறீர்கள் இயற்கையுடன்.

யாரை ஏமாற்றி கொண்டு இருப்பதாய் நினைத்து கொள்கிறீர்கள்?

அலை, கடலை ஏமாற்ற நினைக்கிறதா?
இலை, மரத்தை ஏமாற்ற முயற்சிக்கிறதா?
மேகம், வானத்தை ஏமாற்ற முயற்சி செய்கிறதா?

யாரை நீங்கள் ஏமாற்ற வேண்டும்?
யாருடன் விளையாடி கொண்டிருக்கிறீர்கள்?

இது புரிந்து கொள்ளப்பட்டுவிட்டால், மனிதன் வெகுளியாகிவிட்டால், அவனது கபட தந்திரங்களை விட்டுவிட்டால் எளிதாக ஏற்று கொள்வான்.

இயற்கை உள்ளதை உள்ளவாறே ஏற்றுகொண்டு அதனுடனே செல்வதை தவிர வேறு வழியே இல்லை பிறகு அங்கு எந்த தடையும் இருக்காது.

பிறகு அவன் தந்தையுடன் செல்லும் குழந்தை போல் சொல்லலாம் ஆழ்ந்த நம்பிக்கையுடன்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள் - பூமி மனிதர்களுக்கு உரியது இல்லை... டாக்டர் எல்லிஸ்...


டாக்டர் சில்வரின் இந்த கோட்பாடு நாம் மனிதர்கள் பற்றி ஒரு குறிப்பிட்ட உண்மையை அடிப்படையாக கொண்டது.  மனிதர்கள் பொதுவாக விலங்கு இராச்சியத்தின் உறுப்பினர்கள் மத்தியில் காணப்படவில்லை. இதுவே சில அசாதாரண பிரச்சினைகளை காண்பிக்கும் என்று கூறுகிறார்.
பூமியின் மீதுள்ள நிலைமைகளை சமாளிக்க மனித உடல் உருவாக்கப் டவில்லை என்றும் அவர் அறிவுறுத்துகிறது.

டாக்டர் சில்வர் கூறுகிறார், "மனிதர்கள் பூமி கிரகத்தின் மிகவும் வளர்ந்த இனம் என்று கருதினாலும், பூமியின் சுற்றுச்சூழலுக்கு வியக்கத்தக்க மற்றும் தகுதியற்றதாகவே மனித உடலமைப்பு உள்ளது. சூரிய ஒளி உணர்திறன் பண்புகளே இதை நிரூபிக்கின்றன.

எங்கோ குறைந்த உலக ஈர்ப்புடன் உருவாகிய மனிதன், அதிக புவிஈர்ப்பு பாதிப்பால் மோசமான முதுகுபாதிப்புகள் ஏற்படுவது. அபாயகரமான நோய்கள், மேலும் பல காரணங்களை டாக்டர் எல்லிஸ் சில்வர் தனது படைப்பில் சுட்டிக்காட்டினார்.

இப்போது மனிதர்கள் பூமியில் இறங்கினாரா? என்பது பற்றி ஒரு வித்தியாசமான தர்க்கம் உள்ளது. அவரை பொறுத்தவரை, நாங்கள் எங்கள் கிரகத்தின் போர் காரணமாக  வெளியேற்றப்பட்டோம் மற்றும் எங்களுக்கு சிறை கிரகமாக பயன்படுத்தப்பட்டது பூமி கிரகம் மட்டுமே.

மிகவும் முன்னேறிய வேற்றுகிரக இனம் மனிதர்களின் இயல்பான வன்முறையைத் தாங்கி நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை, எனவே அவர்கள் எங்களுக்கு ஒரு தண்டனையாகவே இங்கே தள்ளினர்.

டாக்டர் எல்லிஸ் சில்வர் மனிதர்கள் பூமியிலுள்ள மற்ற உயிரினங்களுடன் சேர்ந்து பரிணாம வளர்ச்சியடையாமல் இருப்பதாகவும், நாம் இன்னொரு உலகத்திற்க்கு சொந்தமான மனிதர்களாக இருக்கிறோம் என்றும் மேலே கூறிய கோட்பாடுகளை "Humans are not from Earth" என்ற தனது படைப்பில் கூறுகிறார்.

இப்போது இதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ. இதற்கிடையில், நான் ஒரு ஏலியன் திரைப்படத்தை பார்க்கிறேன். Predators 2010.

சரி, கேள்வி என்னவென்றால், நாம் எப்படி இங்கே வந்தோம்?

விசித்திரமாக மனிதர்கள் பூமியில் உள்ள மற்ற இனங்களுடன் இணைந்து பரிணாம விளைவில் உருவாகவில்லை.

ஆனால் மாறாக 60,000 மற்றும் 200,000 ஆண்டுகளுக்கு முன்னால் பூமிக்கு முழுமையான ஹோமோ சாபியன்களாக வேறு எங்கோ உருவாக்கப்பட்டு இங்கே வந்தோம்.!

சில விஞ்ஞானிகள் மனித படைப்பு, பாக்டீரியாக்கள் கொண்ட வால் நட்சத்திரம். விண்வெளி இருந்தது பூமியில் விழுந்ததின் விளைவே என்று கூறியதை நினைவில் கொள்ளவும். இப்போது இது நமது பரிணாம வளர்ச்சி பற்றிய நமது அறிவையே சவால் அழைக்கிறது. அவர் இந்த கோட்பாட்டை நம்புவதற்கும் மற்றவர்கள் நம்பிக்கை வைப்பதற்கும் உண்மை உள்ளது.
அன்னூக்கியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்..

இதை பற்றிய ஒரு புராண வசனம்:
எந்த உடலாக இருந்தாலும் அது பலகோடி ஜீவன்களின் கூட்டுத் தொகுப்பே ஆகும். இப்படி உடலாக அமைந்த செல்களே தேவர்கள். இந்த செல்களை அழிக்கும் நோய் கிருமிகளே அசுரர்கள்.

மனித உடல் முப்பது முக்கோடி (30000000000000000000000) தேவர்களின் கூட்டமைப்பு ஆகும். இந்த தேவர்கள் யார் என்பதை முன்பே பார்த்து உள்ளோம்.

ஆனால் இப்போது பூமியின் மேல் வாழும் மனித இனம் உண்மையிலேயே அசுர இனம் தான், காரணம் கனிம வளம் எடுக்கிறோம் என்ற பெயரில் பூமியை சிதைப்பது...

இங்கே மனிதனின் மனம் மாறும் வரை ஏதும் மாறாது...


முதலில் உங்கள் மனதில் இருக்கும் குப்பைகளை தூக்கி எறியுங்கள்..

எதையும் அதிகமாக ஈர்க்காதீர்கள்
மனிதன் மட்டுமே ஆயிரம் குப்பைகளை மனதில் போட்டு வாழ்கிறான் வாழ்வை நேசிக்கமால்..

மகிழ்ந்து இருங்கள் எது வந்தாலும்
வாழ்க்கை என்பதே மகிழ்ந்து இருக்க மட்டுமே...

மேக்ஸ் ஸ்பியர்ஸ் சும்... வேற்றுக்கிரகவாசி உண்மைகளும்...


அவரது உடல் மீது எந்த பிரேத பரிசோதனை நடத்தப்படாவிட்டாலும், இயற்கை காரணங்களால் இறந்துவிட்டார் என அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் யுஎஃப்ஒக்கள் மற்றும் அரசாங்க மூடிமறைத்த விவரங்களின் இருண்ட விசாரணையே மேக்ஸ் ஸ்பியர்ஸ் இறந்து போயிருக்க விரும்பும் எதிரிகளை உருவாக்கியிருக்கலாம், என அவரது தாயார் வனேசா பேட்ஸ் கூறுகிறார்.

அவரது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் தனது தாயிடம் சில்லிங் உரை செய்தியில் ஸ்பியர்ஸ் இவ்வாறு எழுதினார்: "உன் பையன் குழப்பத்தில் இருக்கிறான். எனக்கு ஏதாவது நடந்தால், விசாரிக்கவும். "

சதித்திட்டத்தில் இருந்தவர்கள், சத்தியத்திற்கு மிக நெருக்கமாக வேற்றுகிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்தும் போதுதான் இவ்வாறான மர்ம மரணங்கள் ஏற்ப்படுவதாக சதி கோட்பாட்டாளர்கள் நீண்டகாலமாக நம்புகின்றனர்.

மற்றொருவர் சதி கோட்பாட்டாளர், கிரேக் ஹெவ்லெட், கூறுகிறார் "அவர் பேசுவது உண்மை இல்லையென்றால், அவர்கள் ஏன் அவரைக் அழிக்க வேண்டும்?

காகங்களும் என் நட்பும்...


தினமும் என்னை சந்திக்காமல் செல்வது கிடையாது எனது நண்பர்கள்...

காலையில் உணவு அருந்தும் வேலையில் முதல் உணவு இவர்களுக்கு எங்கே இருந்தாலும் நான் அழைக்காமல் வந்து விடுவார்கள்..

(மனதில் மட்டுமே நினைத்து  அழைப்பேன்)..

மதியம் நான் வீட்டிற்கு வந்தவுடன் எங்கே இருந்தாலும் என்னை தேடி வருகிறார்கள்..

உணவு வைக்கும் வரை பொருமை காத்து தன் நண்பர்களை அழைத்து உணவு உண்டு விட்டு..

நன்றி சொல்லிவிட்டு செல்கிறார்கள்..

என்னை பார்க்கும் பார்வை அவ்வளவு அழகு.. அது ஒரு உணர்வு...

நான் செல்லும் வழியில் எதாவது ஒரு ஆபத்து வரப் போகிறது என்றால்.. எங்கிருந்தாலும் என் முன்பு வந்து எச்சரிக்கை தந்து காப்பதிலும் தவறாமல் செய்கிறார்கள்...

நான் தனிமையில் எங்கிருந்தாலும்.. தன் நண்பர்களோடு என்னை சூழ்ந்து.. உன்னுடன் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லி... அங்கேயும் வந்து உணவு கேட்டு உண்பார்கள்...

தன் நட்பையும்.. நன்றியை... எப்போதும் மறவாத என் நம்பிக்கைக்குறிய நண்பர்கள்...

கான்ராட் லிகோஸ்டேனஸின்...


திடீரென்று பறந்து சென்ற பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் விமானிகள்...


நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பறந்து சென்ற பறக்கும் தட்டுகளைக் கண்டு விமானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரிட்டிஷ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானி கடந்த நவம்பர் 9-ஆம் தேதி அதிகாலை அயர்லாந்தைச் சேர்ந்த ஷானன் நகர வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டார். அப்போது அவர் தாங்கள் பறந்துகொண்டிருக்கும் இடத்தில் ஏதேனும் ராணுவ நடவடிக்கைகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் ஏன் என்று கேட்டபோது, நாங்கள் பறக்கும் பகுதியில் எதோ ஒன்று வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

அதன் பின் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள் சோதித்த பார்த்தபோது, அப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லையே என்று பதிலளித்துள்ளனர்.

கனடாவின் மாண்ட்ரீயலிலிருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்த அந்த விமானி ஒரு பிரகாசமான ஒளி வேகமாக வடக்கு நோக்கிச் சென்றுள்ளதைப் பார்த்துள்ளார்.

தன் விமானம் போகும் பாதைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லையென்றாலும் அது என்னவாக இருக்கும் என்று அச்சத்திலே இப்படி கட்டுப்பாட்டு அறையிடம் கேட்டுள்ளார்.

இவர் மட்டும் இந்த காட்சியை பார்க்கவில்லை, மான்செஸ்டர் நகரை நோக்கிப் பறந்து கொண்டிருந்த வெர்ஜின் விமானத்தின் விமானியும் எதோ ஒன்று வேகமாக நகர்வதைப் பார்த்துள்ளார்.

அவரும் இவர்களின் உரையாடலில் இணைந்தார். அது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த விண்கல்லாக இருக்கலாம் என்றும் ஒரே பாதையில் இதேப் போன்று பல மிக வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாக கூறினார்.

அவர், அதை இட் வாஸ் லைக் மாக் 2 என்று விவரித்தார். இது கேட்கும் ஒலியின் வேகத்தை விட இரு மடங்கு ஆகும். இந்த இரண்டு விமானிகள் பார்த்தது வேற்றுகிரகவாசிகளின் நடமாட்டமாக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளதால், அதைப்பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன...

https://m.dailyhunt.in/news/india/tamil/dinasuvadu-epaper-dinasuva/tideerenru+baranthu+tattukkal+barappathai+kandu+athircchi+adaintha+vimanikal-newsid-101699207