மழை வரும் வரை காத்திருந்து, தாமதமாக மழைக்காலத்தில் தொடங்கப்பட்ட கால்வாய் வேலைகள் ஓர் உயிரை விலையாக வாங்கிக்கொண்டது. மழைநீர் கால்வாய் அமைக்கிறேன் பேர்வழி என்று மழைக்காலத்தில் அவசரகதியில் பாதுகாப்பின்றி நடத்தப்பட்ட வேலைகளால் கிழக்கு தாம்பரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் மரணித்து இருக்கிறார்.
கடந்த 11ம் தேதி இரவு ப்ரைட் துரை (Brite Durai) அவரது நண்பர் ஒருவருடன் வாகனத்தில் சென்று மழைநீர் கால்வாய்க்காக வெட்டப்பட்ட மணலில் மோதி விபத்து ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ப்ரைட் மோதிய வேகத்தில் கால்வாய் குழியில் பாய்ந்து விழ, அவரது நண்பர் அம்மணலிலே விழுந்து மயக்கமானதாகவும், குழியில் தண்ணீர் நிரம்பியிருந்த சூழலில் பிரைட் அதில் மூழ்கி மரணித்தார் என்றும் செய்திகள் கிடைக்கின்றன..
ப்ரைட்டை கொன்றது யார்?
அவசரகதியில் பாதுகாப்பில்லாமல் இந்த வேலையை தொடங்கிய அதிகாரிகளும், அதை கேள்வி கேட்காத நீங்களும் தான். இன்று ப்ரைட் நாளை யார்? நாமாக கூட இருக்கலாம். அலட்சியத்தின் விலையாக நம் உற்றாரின் உயிரை கொடுக்க உங்களுக்கு மனமிருக்கிறதா?
நாம் இந்த அரசு அமைக்கும் கட்டமைப்பு வசதிகளில் இரவுகளில் கூட விழித்து கொண்டிருக்க வேண்டும் போல. உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.. இனியொரு முறை இந்த நிலையை நாம் சந்திக்க கூடாது.
ப்ரைட்டின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.