11/10/2018

திமுக ஸ்டாலின் கலாட்டா...


தமிழ்மொழி மீட்பு போராளி மாயூரம் ச.வேதநாயகம் பிறந்தநாள் 11.10.1826...


வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிடுவது அக்கிரமம்...

வேதநாயகம் தமிழில் கவிதைகள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். இவர் இயற்றிய கவிதைகள் 'சர்வ சமய சமரசக் கீர்த்தனை' என்னும் பெயரில் நூல் வடிவில் வெளி வந்துள்ளன. வேதநாயகர், மாவட்ட நீதிபதி (முனிசீப்) பதவியில் இருந்து பணி புரிந்திருக்கிறார். மாயூரம் (இன்றைய மயிலாடுதுறை)  நகர மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தமிழில் 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்னும் நாவல் இயற்றி, தமிழ் உரை நடைக்குச் சிறப்புத் தேடியுள்ளார். இவரின் சம காலத்தவரான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், கோபால கிருஷ்ண பாரதியார் ஆகியோரோடு நெருங்கிய உறவும் கொண்டவர். ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆங்கில மொழி மோகம்  கொண்டு வழக்கறிஞர்கள் திரிவதைக் கண்டு வேதனை அடைந்தார். 'நீதி மன்றத்தில் தமிழ் வேண்டும்' என்று முதன் முதலில் முழக்கமிட்ட தமிழ்ப்போராளியின் கனவு இன்னும் நிறைவேறாமலே  உள்ளது. தமது சீற்றத்தை எழுத்தாகவும் பதிவு செய்துள்ளார். அவற்றை 'மாயூரம் வேத நாயகம்' நூலிலிருந்து தொகுக்கப்பட்டதை கீழே தருகின்றோம்!

"ஆங்கிலம் ஒன்றையே கற்றார்; தங்கள்
ஆவியோடு ஆக்கையை விற்றார்
தாங்களும் அந்நியர் ஆனார் இன்பத்
தமிழின் தொடர்பற்றுப் போனார்".

தமிழகக் கோர்ட்டுகளிலே தமிழ் வக்கீல்கள் தமிழில் வாதிக்காமல், ஆங்கிலத்திலே வாதிக்கிறார்கள். தேச மொழியும் தமிழ்; கோர்ட்டிலே வழங்குகிற மொழியும் தமிழ் நியாயாதிபதியும் தமிழர்; வாதிக்கிற வக்கீலும் தமிழர்; கட்சிக்காரர் தமிழர் -எல்லாம் தமிழ் மயமாக இருக்க, யாருக்குப் பிரதியாக அவர்கள் ஆங்கிலத்தில் விவாதிக்கிறார்களோ தெரிய வில்லை.

நியாயாதிபதி அல்லது வக்கீல் ஆங்கிலராய் இருந்தால் ஆங்கிலத்திலே வாதிப்பது நியாயம். தமிழ் நியாயாதிபதி முன், தமிழ் வக்கீல் ஆங்கிலத்திலே வாதிப்பது ஆச்சரியமல்லவா?

தமிழ் வக்கீல்கள் தாய்மொழியைத் தள்ளி விட்டு அந்நிய மொழியிலே வாதிப்பது அசந்தர்ப்பமல்லவா?

தமிழ் நன்றாகத் தங்களுக்குப் பேச வராது என்று கெளரவம் போலச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். இதனினும் இழிவு வேறொன்றுமில்லை.

சட்ட நூல்கள் ஆங்கிலத்திலே அமைந்து கிடப்பதாலும், சட்ட நுணுக்கங்களுக்குரிய சரியான பதங்கள் தமிழிலே இல்லாமையாலும் தாங்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அது அறியாமையே; உண்மையல்ல. தமிழ் நூல்களைத் தக்கபடி ஆராய்ந்தால் பதங்கள் அகப்படாமல் போகா. இரண்டொரு குழூஉக் குறிகளுக்குத் தமிழ் சொற்கள் இல்லையென்றால் அவற்றை மட்டும் ஆங்கிலத்திலே வழங்கினால் அவர்களை யார் கோபிக்கப் போகிறார்கள்!

தமிழ் நியாயாதிபதிகளும் வக்கீல்களும் தாங்கள் பயின்ற ஆங்கிலம் மறந்து போகாதிருக்க அதை வழங்கி, நியாய பரிபாலகத்தைக் குளறுபடி செய்வது ஒழுங்கா?

விசாரணைகள், தீர்ப்புகள், அபராதங்கள், ஆக்கினைகளை அனைவரும் அறிவது நல்லதல்லவா? விவகாரங்களைக் கேட்டு, அதனால் விவேகம் அடைவதற்காகக் கோர்ட் வாசல்களிலே மக்கள் கூடுகின்றனர். ஆனால் அவர்களுக்குத் புரியாத மொழியிலே விவகாரம் நடப்பதால் குருடன் கூத்துப் பார்க்கப் போன கதையாய் முடிகிறது.

சுருங்கச் சொன்னால், தமிழ் நியாயாதிபதி முன் ஆங்கிலத்திலே வாதிக்கின்ற தமிழ் வக்கீல்கள் தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறார்கள்.

ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக் கண்டு பிடித்து நீதி வழங்குவது கோர்ட்டார் கடமை. தாய்மொழியிலே கோர்ட் நடவடிக்கைகள் நடந்தால் மட்டுமே உண்மை வெளியாகுமேயன்றி, மக்களுக்குப் புரியாத மொழியில் நடந்தால் எப்படி உண்மை வெளியாகும்?

சிலர் ஆங்கிலம், இந்தி முதலிய பிற மொழிகளைப் படிக்கத் தொடங்கி, அந்த மொழியும் தெரியாமல், பேசத் தெரியாதவர்களாய் விடுகிறார்கள். இவர்கள் பிறமொழிகளில் முழு அறிவுடையவர்களாக இருந்தும் சொந்த மொழியைப் படிக்காமல் இடை வழியில் விட்டு விடுகிறார்கள்.

வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிப்பது அக்கிரமம் என்று சில தமிழ் நியாயாதிபதிகளுக்குத் தெரிந்திருந்தும் அதைக் கண்டித்தால், தங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று மற்றவர்கள் நினைப்பார்களே என்று ஆங்கில வாதத்திற்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். நடவடிக்கைகளையும் அவர்கள் ஆங்கிலத்திலேயே நடத்துகிறார்கள். சில சமயங்களிலே நியாயாதிபதியும் வக்கீலும் ஆங்கிலத்தை நன்றாகப் படியாதவர்கள். அதனால் ஒருவர் சொல்வது ஒருவருக்குத் தெரியாமல் கைச்சண்டை செய்து சங்கடப்படுகிறார்கள். கோர்ட்டுகள் நாடகச் சாலையாகத் தோன்றுகின்றன.

சொந்த மொழியில் பிழை இல்லாமல் இரண்டு வரி சேர்த்தெழுதத் தெரியாமலும் தங்களுடைய பெயர்களையே ஒழுங்காக எழுதத் தெரியாமலும்,  'வைத்திய நாதன்'  என்பதற்குப்  'பைத்திய நாதன்'  என்று கையெழுத்துப் போட்டுக் கொண்டு உயிர் வாழ்கிறார்கள்.

ஐரோப்பாக் கண்டத்தில் தன்னுடைய கையெழுத்தையே பிழையற எழுதத் தெரியாதவனுக்கு ஓர் அலுவலும் கிடைக்காது.

பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளைப் பயின்று விட்டுத் தாய்மொழியாகிய தமிழை அறியாதவர்கள் மாதா வயிறெரிய மகேசுவரி பூஜை செய்பவர்களுக்கு ஒப்பாவார்கள்.

தமிழைப் புறக்கணிப்பவர்கள் தமிழ் நாட்டில் வசிக்க யோக்கியதை உடையவர்கள் அல்லர். அவர்கள் எந்த ஊர் பாஷையைப் படிக்கிறார்களோ, அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடம்"

-மாயூரம் வேதநாயகம்.

(ம.பொ.சிவஞானம் எழுதிய 'ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு' நூலிலிருந்து)..

பேய்மிரட்டி (ANISOMELES MALABARICA)...


1) மூலிகையின் பெயர் - பேய்மிரட்டி.

2) தாவரப்பெயர் - ANISOMELES MALABARICA.

3) தாவரக்குடும்பம் - LAMIACEAE.

4) வேறு பெயர்கள் - இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய்மிரட்டி, எருமுட்டைப் பீ நாறி, சற்று வட்டமான இலையுடைய இனம் ஒற்றைப் பேய் மிரட்டி எனவும், வெதுப்படக்கி எனவும் அழைக்கப் படுகிறது.

5) தாவர அமைப்பு - இது தமிழகமெங்கும் தானே வளர்கிறது. எதிரடுக்கில் அமைந்த வெளிரிய வெகுட்டல் மணமுடைய நீண்ட இலைகளையும் வெளிரிய கருஞ்சிவப்பு மலர்க் கொத்தினையும் உடைய செடி. சுமார் மூன்றடி உயரம் வளரும். வரட்ச்சியைத் தாங்கக் கூடியது. விதை மற்றும் தண்டுகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

6) பயன் படும் பாகங்கள் - செடி முழுதும். (சமூலம்).

7) மருத்துவப் பயன்கள் - பசி மிகுத்தல், குடல்வாயு அகற்றல், வியர்வை பெருக்குதல், காச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்தல், அசிவு தணித்தல் ஆகிய குணங்களை உடையது.

பேய் மிரட்டியினால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம்
போகும்.

பேய்மிரட்டிப் பூண்டால் கழிச்சல், மாந்த சுரம், வீக்கம், பேய்மிரட்டு என்னும் படியான கிரக தோஷம் முதலியன போகும் என்க.

உபயோகிக்கும் முறை - இதன் சமூலம் கசப்புச் சுவையுள்ளது இதைக் கியாழமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி, இருமல், சீதசுரம் போம். ஒரு பலம் சமூலத்தைத் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு அரைப்படி சலம் விட்டு 1/8 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 2 வேளை கொடுக்கலாம். அல்லது கால் ரூபாய் எடை ஓமத்தையும் கால் ரூபாய் எடை மிளகையும் ஒரு புது சட்டியில் போட்டு அடுப்பிலேற்றி வறுத்துக் கரியான சமயம் கால் படி சலம் விட்டு ஒரு பலம் பேய்மிரட்டி இலையைக் குறுக வரித்து சேர்த்து நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 3 வேளை கொடுக்கலாம். இத்தகையக் கியாழங்கள் குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் சமயம் காணுகின்ற பேதியைக் குணப்படுத்த இன்றியமையாத தாகும். இதன் மூலத்தை ஒரு பெரிய பாண்டத்தில் போட்டுச் சலம் விட்டு கொதிக்க வைத்து வேது பிடிக்கச் சுரம், தலைவலி முதலியன போம்.

இலையைக் கொதிக்க வைத்து வேது பிடிக்க விடாத வாதசுரம் தீரும்.

இலைச் சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்குக் கொடுக்க பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி தீரும்.

இலையை நீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடிக்கச் சீதவாதசுரம், முறை சுரம், மலக்கழிச்சல் தீரும்.

ஒரு பிடி நெற்பொறி, 2 இலை நீரில் காய்ச்சி மணிக்கு ஒரு முடக்குக் கொடுத்து வரக் காலரா தீரும்.

10 கிராம் மிளகையும் 3 கிராம் ஓமத்தையும் புது சட்டியிலிட்டு வறுத்துக் கருகிய சமயம் அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்கும் போது 40 கிராம் பேய் மிரட்டி இலைகளைச் சிதைத்துப் போட்டு 125 மி.லி. யாகக் காய்ச்சி 15 மி.லி. யாக மூன்று வேளை கொடுத்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.

இந்த இனத்தில் இலை நீளமாக இருப்பதை இரட்டைப் பேய்மிரட்டி என்றும் இலை வட்டமாக இருப்பதை ஒற்றைப் பேய் மிரட்டி என்றும் கூறுவதுண்டு. இவை முறையே ஆண் பெண் எனக் கருதப் படுகின்றன. ஆண் பிள்ளைகளுக்குக் காணுகின்ற நோயிக்கு பெண் இலையும், பெண்களுக்குக் காணுகின்ற நோய்களுக்கு ஆண் இலையும் சிகச்சைக்கு ஏற்றது என்பது அறிவாளர்களின் கருத்து.

பேய்பூதகண தோஷங்களுக்கு வேப்பிலையைக் கொண்டு மந்திரித்து அடிப்பதைப் போல் பேய் மிரட்டி இலைகளையும் கத்தையாகக் கட்டிக் கொண்டு அடிப்பது வழக்கம் ஆகையால் இது பேய் மிரட்டி எனக் கூறப்பட்டது.

பேய் மிரட்டியின் இலையானது வெதுப்படக்கும் என்றும் வெளுப்பான பேதி, கிலேஷ்மகிரகணி, தாபம், ரூட்சை அள்ளு மாந்தம், வாதாதிக்கம், உட்சுரம், ரத்த தாது விலுண்டாகின்ற மலினம் ஆகியவற்றைப் போக்கும் என்க.

பேய்மிரட்டியின் பச்சிலையை அகல் விளக்கில் திரியாகப் போட்டால் ஒளிரும்.

சமூலம் - ஒரு செடியின் வேர், இலை, தண்டு, பூ, பட்டை எல்லாம் சேர்த்து என்று பொருள். வையித்தியத்தில் உபயோகிக்கும் சொல்.

கோரசுரம் - கடுமையான சுரம் என்று பொருள்.

கியாழமிட்டு - திரவமாக கூழ் போன்று அரைப்பது என்று பொருள்.

அள்ளுமாந்தம் - குழந்தையின் வயறு எக்கி வியாதியால் துன்பப் படுவது.

ரூட்சை - என்பதும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு வித நோயாகும்...

இலுமினாட்டி - பெட்ரோல் GST ல் சேர்காதது ஏன்?


எண்ணமின் அலைகளின் பயணம்..


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல்தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...

பாஜக வின் சதி வேலைகள் ஆரம்பம்...


தாமிரபரணி மகாபுஷ்கரம் நிகழ்ச்சிக்கு சுவீதா சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு...


தாமிரபரணி மகாபுஷ்கரம் நிகழ்ச்சிக்கு சுவீதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு சுவீதா சிறப்பு ரயில் (82610) அக்டோபர் 14ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு மறுநாள் காலை 5 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

நாங்கள் கார்ப்ரேட் என்பதை அவர்களின் தயாரித்த ஒன்றை வைத்தே எதிர்க்க முயல்கிறோம்...


மக்களை ஏமாற்றுவதற்காக பலவற்றை மறைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை.

இதுவரை மக்களை அடிமையாக்கிய அனைத்து அடிமை கருத்தியலையும் எதிர்க்க வேண்டும், அதுதான் சிறந்த கருத்தியல்.

இது ஒற்றை கருத்தியல் இல்லை, மக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து, ஒருமித்த கருத்துக்களை விதைக்க முற்படும் சிறிய கூட்டம் நாங்கள்.

தோல்வியை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் இருக்கிறது,

ஆனால் கட்சிகளுக்கு முட்டு கொடுக்கும் முட்டாள்தனம் எங்களிடம் இல்லை...

தமிழகத்தில் எருமை மாட்டினம் அழிக்கப்பட்டு வருகிறது...


அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாக மக்கள் குரல் ஒளித்ததால்... சஸ்பெண்ட் ரத்து...


உளுந்து - மருத்துவப் பயன்கள்...


நோயின் பாதிப்பு நீங்க...

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய:

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக:

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை:

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற:

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு:

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்:

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்...

ஆன்மா, ஆன்மீகம், மன அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் பற்றி அறிவோம்...


நம் ஆன்மா என்பது என்ன என்று கேள்வி கேட்பவர்கள் உள்ளனர்.

பலருக்கு  இது  குறும்புக் கேள்வி.

சிலருக்கு இது புரியாத புதிர்.

மிகக் சிலர் கொஞ்சம் புரிந்தவர்.

வெகு சிலர் அதிகம் புரிந்தவர்.

நன்கு புரிந்தவர்கள் சொற்பம்.

அவர்களிடமிருந்து கேள்விகள் வராது.

ஆன்மாவைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு இந்த பதில்...

இறந்த மனிதனிடம் எது இல்லையோ, அதுவே வாழும் மனிதனுக்கும், இறந்தவனுக்கும் உள்ள வித்தியாசம் -ஆன்மா..

அது மின்சாரம் போன்ற ஒரு சக்தி என்று வைத்துக் கொள்ளலாம்.

அது இல்லை எனில் உயிர் இல்லை.

சக்தி இல்லை எனில் சவம்.

இந்த ஆன்மாவை உணர்வது ஆன்மீகம்.

ஆன்மீகம் என்பது நம்மை உணர்வது.

கடவுள் வழிபாடு குறித்த நேரடி வார்த்தை அல்ல...

திமுக வும் வழிப்பறி திருட்டும்...


பாஜக வின் ஏமாற்று வேலைகள்...


நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று நினைத்தோம் அதனால் பெரிய வாக்குறுதிகளை அளித்தோம். ஆச்சரியமாக ஆட்சிக்கு வந்துவிட்டோம்.

இன்று மக்கள் எங்களை நம்பி அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்கிறார்கள். எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது.

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் : நிதின் கத்காரி...

இலுமினாட்டிகளும் ஹிட்லரும்...


ஆந்திராவில் மனைவியின் தகாத உறவால் மனம் வெறுத்துப் போன கணவர், இரண்டு குழந்தைகளை கொலை செய்து தற்கொலைக்கு முயற்சி...


ஆந்திர மாநிலம் ஜூப்பாடு பங்களா கிராமத்தை சேர்ந்தவர் தானுஜ் ராவ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சி  என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தானுஜ் ராவிற்கு 7 வயதில் மகளும், 4 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஜான்சி பாய் வேறு ஒரு ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தானுஜ் ராவ், தன் மனைவியை பல முறை கண்டித்தும், தொடர்ந்து தகாத உறவு மேற்கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தானுஜ் ராவ், தன் மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனினும். தொடர்ந்து ஒழுங்கீனமாக செயல்பட்டதால் மன வருத்தத்தில் இருந்த தானுஜ் ராவ், தன் குழந்தைகளை முதலில் கொன்று அருகே உள்ள குளத்தில் வீசி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதனையடுத்து குளத்தில் வீசப்பட்ட குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

சர்க்கரை நோயின் ரகசியம்...


தமிழை சிதைப்பது சரியா?


நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழை சிதைக்கின்றோம். பிற மொழி சொற்களை தமிழில் ஏற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிற மொழி எழுத்துக்களை தமிழில் ஏற்பது என்பது தமிழை சிதைக்கும் செயலாகும்.

பிற மொழி வார்த்தைகளை  தமிழில் எழுதும் பொழுது நாம்  'ஸ', 'ஜ', 'க்ஷ', 'ஷ' ,'ஸ்ரீ', 'ஹ'  என்ற கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம்.

சமசுகிருத, பிராகிருத வார்த்தைகளுக்கு ஏற்ற ஒலியோசை கிடைக்க நாம் அந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம். இது அவசியம் அற்றது.

நீங்கள் ஆங்கிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிற மொழி எழுத்துக்களை அவர்கள் ஏற்பதில்லை.

நாம்  கிரந்த எழுத்துக்களை எழுதி தமிழை சிதைக்க வேண்டாம் என்று அனைவரையும்  கேட்டுக் கொள்கிறேன்.

சமஸ்கிருதம்  என்று எழுதாமல் சமசுகிருதம்  என்றே எழுதலாம்..

மஹாத்மா என்று எழுதாமல்
மகாத்மா என்றே எழுதலாம்..

ஜப்பான் என்று எழுதாமல்
சப்பான் என்றே எழுதலாம்..

ஸ்ரீ ரங்கம் என்று எழுதாமல்
திருவரங்கம் என்றே எழுதலாம்..

பக்ஷி என்று எழுதாமல்
பட்சி என்றே எழுதலாம்..

ஹரி என்று எழுதாமல்
அரி  என்றே எழுதலாம்..

ஆயிஷா என்று எழுதாமல்
ஆயிசா என்றே எழுதலாம்...

மார்பகம் - பெண்களின் உடம்பில் உள்ள இயற்கையான பகுதி,அதை கவர்ச்சியாக நினைக்காதே நண்பா..


ஓர் உயிரை ஊட்டி வளர்க்க பெண்மைக்கு கடவுள் தந்த கொடை மார்பகம்.

அதை கவர்ச்சி உறுப்பு ஆக்கப்பட்டதே பாலியல் வறட்சியின் ஆரம்பம்.

பெண்களின் மார்பகம் என்பது, குழந்தைக்கான உயிர்ப்பால் சுரக்கும் இடம். ஆனால், எல்லாக் காலங்களிலும் அது வெறும் காமத்துக்கான தசைக் குவியலாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது.

மார்பகம் என்பது குழந்தைக்கு உயிர் ஊட்டும் உறுப்பு என்பதை  ஆண்கள் நினைத்தால் அது கவர்ச்சிபொருள் ஆகாது, அதை பெண்கள் நினைத்தால் காட்சிபொருள் ஆகாது.

பிறந்த குழந்தைக்கும், தாய்க்குமான உறவு மார்பகம், தொப்புள்.

அதை ஆபாசமாக்கியது, நாகரீக வளர்ச்சி என்னும் உடை கலாச்சாரம்...

தற்சாற்பு வாழ்வியல் பாகம் -1...


ஒரு மருத்துவ ரீதியான அலசல்...

வெயில் காலத்தில் உடல் தன்னை குளிர்ச்சி செய்து கொள்ள வியர்வையை உண்டாக்கி உடலில் உள்ள சூட்டை வெளியே தள்ளும்... (தண்ணீர் குடித்தவுடன் சிலருக்கு வியர்வை வரும் - அப்படி என்றால், அவர்களது உடல் புற தட்ப வெட்பத்திற்கு ஏற்ப தன்னை சீர் செய்து கொள்கிறது என்று பொருள்படும்).

மழை காலத்தில் புற சூழல் முழுவதும் குளிர்ச்சி யாக இருப்பதால், உடல், சூட்டை ஏற்படுத்துகிறது... (அதனால் தான் மழைக்காலத்தில் உடலில் சூடு மிதமாக இருந்து கொண்டே இருக்கும் & பல் உயிர் பெருக்கமும் நிகழும்).

மண் ணால் கட்டப்பட்ட குடிசை வீடுகளில் வாழ்ந்து இருக்கிறீர்களா...

வாழ்ந்தவர்களுக்கும் வாழ்பவர்களுக்கும் நன்கு புரியும், வெயில் காலத்தில்... குடிசை வீட்டில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்... (கூறையில் நாம் எதை கொண்டு மேய்கிறோமோ, அதன் தன்மையை பொருத்து சிரிதளவு குளிர்ச்சியும் இருக்கும்).

அதே மழை காலத்தில், குடிசை வீடுகளில் கதகதப்பாக இருக்கும்...

நாகரீக வளர்ச்சியின் அடையாளங்களில் ஒன்றான சிமெண்ட்டு, டைல்ஸ் .... ஆன வீடுகளில், புற சூழல் எப்படி இருக்கிறதோ இந்த வீடுகளிலும் அதே சூழல் தான் தென்படும்... அது வெயிலாக இருந்தாலும் சரி குளிராக இருந்தாலும் சரி...

மருத்துவ ரீதியாக இதை அனுகினால், நம் உடல் தன்னை புற தட்ப வெட்பத்திற்கு நேர் மாராக தயார் செய்வதற்கு, நம் முன்னோர்களின் மண் வீடு உதவுகிறது... இதனால், உடலுக்கு அதிக சிரமம் இல்லாமல், நன்றாக இயங்க முடிகிறது...

நாகரீக வீடுகளில் வீட்டிற்கு வெளியேவும் உள்ளேயும் ஒரு மாதிரியான, தட்ப வெட்பம் நிலவுவதால், உடல் தன்னை தற்காத்துக் கொள்ள தினறுகிறது...
இதனால் பல வியாதிகள் உண்டாகிறது...

அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது என்பதை உணர்ந்து இயற்கையோடு இணைந்து  வாழ்ந்தார்கள்...

அதனால் ஆரோக்கியமாக பல்லாண்டு வாழ்ந்தார்கள்...

(நம் முன்னோர்களின் வீடுகளைப் பற்றி எழுத துவங்கினால் அவ்வளவு அதிசயங்கள் காத்திருக்கிறது... அதை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த பாகங்களில் காண்போம்...).

தற்சார்பு வாழ்க்கையை நோக்கி நகர்வோம் வாருங்கள்...

முனைவர்.பா.ஜெயப்ரசாத்...

வாயால் வடைசுட்டு திசை திருப்பும் பாஜக கூஜா நீதிமன்றம்...


விஷமாக மாறிவரும் இட்லி தோசை மாவு.. உஷார் மக்களே...


கடந்த சில ஆண்டுகளாக இட்லி,தோசை மாவை கடைகளில் வாங்கும் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை அறியாமல் மக்கள் இதை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் பெண்கள் வேளைக்கு போகாமல் வீட்டில் இருப்பார்கள். அதனால் அவர்களால் வீட்டு வேலைகளை எளிதாக செய்யமுடிந்தது. அனால் இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துவதென்பது பெரும் கஷ்டம் என்பதால் பெண்களும் வேளைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கின்றனர்..

இதன் விளைவு, சாதாரண இட்லி தோசைக்கான மாவை அரைப்பதற்கு கூட நேரம் இல்லை. கடைகளில் விற்கப்படும் மாவில் கலக்கப்படும் உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. அனால் உண்மையில் மாவு சுகாதாரமாக தான் தயாரிக்கப்படுகிறதா?

மாவை வெள்ளை நிறமாக காட்ட அதில் பிளீச்சிங் பவுடர் கலப்பதில் இருந்து, அதில் புளிப்பு வாசனை வராமல் இருக்க பலவித கெமிக்கல்கள் கலக்கப்படுவதோடு அதில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம் போன்றவையும் கலக்கப்படுகின்றன என அவ்வவ்போது குற்றசாட்டுகள் எழுதவண்ணமே உள்ளன..

அதே போல் மாவை அரைக்க பயன்படுத்தும் தண்ணீர் சுத்தனமானதா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி தான். சுத்தமான தண்ணீரை கொண்டு மாவரைக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கே பல நூறு லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சமயங்களில் கூட மாவிற்கு தட்டுப்பாடு வருவதில்லை.

அப்படியானால் இவர்களுக்கு மட்டும் சுத்தமான தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது என்பதும் கேள்விக்குறியே..
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் மாவை உட்கொள்வதால், சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலருக்கும் தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் வாங்கும் மாவின் தரம் குறித்து அறிவது மிகவும் முக்கியம்..

அடுத்த தலைமுறை பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ்வதும் நோய்வாய்ப்பட்டு போவதும் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. ஆகையால் முடிந்தவரை பாக்கெட்களில் விற்கப்படும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து. மிளகாய் தூளில் இருந்து மாவு வரை அனைத்தையும் நாமாக அரைத்துக் கொள்வதே சிறந்தது...

தமிழகம் மற்றும் இந்தியாவிற்கு வர இருக்கும் பேராபத்து...


மழைநீரை சேமிப்பதற்கு விரைவில் தடை... உண்மையை உடைக்கும் தமிழன்...

https://youtu.be/6RqrZMnIL4w

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்...


பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது..

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும்.

சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.

புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.

ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்க வேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்...

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும்.

திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது.

பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக் கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்க முடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்...

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,
எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்...

பீட்சா உண்மைகள்...


சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்...


1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்...

பாஜக அடிமை அதிமுக எனும் வக்கற்ற அரசு...


கண்ணடிக்கலாம் வாங்க...


தலைப்பை படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் சின்னதாக ""ஷாக்'' அடித்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.

இது ஏதோ இளைஞர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக இந்தக் கட்டுரையில் எதுவோ சொல்லப் போகிறோம் என யாரும் எண்ணிக் கொள்ள வேண்டாம்.

இது எல்லா தரப்பினருக்கும், எல்லா வயதினருக்கும் உரிய ஒரு பொதுவானது.

அந்த விசயத்தைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

கண்ணடிப்பது என்பது மிகச்சிறந்த ஒரு தியானம்.

கண்ணடிப்பதால் நமது உடலுக்கு, மனதிற்கு, புத்திக்கு, கண்களுக்கு என அனைத்திற்கும் பலவிதத்தில் நன்மைகள் உண்டாகிறது.

ஒரு நிமிடம் தொடர்ந்து கண்ணடிப்பது என்பது ஒரு மணிநேரம் தொடர்ந்து தூங்குவதற்கு சமமாகிறது.

கண்ணடிப்பது என்பது கம்ப்யூட்டரில் ரீஃப்ரஷ் என்ற ஒன்றைப் பயன்படுத்துவது போலாகும்.

அதாவது (Refresh) என்ற பட்டனை அழுத்தி கம்ப்யூட்டரை ரீஃப்ரஷ் செய்து கொள்வது போல நமக்கு இந்த கண்ணடித்தல் பயன்படுகிறது.

தினசரி யாரெல்லாம் இந்தக் கண்ணடித்தலை அதிக நேரம் செய்கிறார்களோ அவர்கள் மனதிற்குப் பிடித்தது போல வாழ்பவர்கள் என்று கொள்ளலாம்.

தினசரி யாரெல்லாம் குறைவான நேரம் கண்களை இமைத்து வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் புத்திக்குப் பிடித்தது மாதிரி வாழ்பவர்கள் எனக் கொள்ளலாம்.

பெண்களின் கண்களை வேடிக்கைப் பார்த்திருந்தால் உங்களுக்கு ஒரு விசயம் புரிந்திருக்கும். அதிகமுறைகள் ஒரு நாளில் கண்சிமிட்டுபவர்களாக அவர்கள் இருப்பதைப் பார்க்கமுடியும்.

ஆண்கள் எப்பொழுதுமே குறைவாகத்தான் கண்களை சிமிட்டுவார்கள். சில நுட்பமான வேலைகளில் ஈடுபடும் பொழுது இயல்பாகவே கண்களை சிமிட்டுவது குறைந்து போய்விடும் அது என்னென்ன வேலைகள் தெரியுமா ?

கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். சாப்ஃட்வேர் இன்ஜினியர்கள். பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் புத்திக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய துறையில் வேலை செய்பவர்கள் தொழில் நுட்பக்கலைஞர்கள், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்பவர்கள் போன்றோரை உதாரணமாக சொல்லலாம்.

சுருக்கமாக புத்திக்கு அதிகம் வேலைதரக் கூடியவற்றைச் செய்பவர்களுக்கு கண் சிமிட்டுதல் என்பது குறைவாக இருக்கும்.

இவ்வாறு கண்சிமிட்டுதல் குறையும் பொழுது டென்சன், கோபம், பயம், தூக்கமின்மை குழப்பம் ஆகியவை வருவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே நாம் இப்பொழுது கண்சிமிட்டும் பயிற்சியை அறிமுகப்படுத்த போகிறோம்.

ஒரு நிமிடம் தொடர்ந்து கண்சிமிட்டுவது ஒரு மணிநேரம் தூங்குவதற்கு சமமாக இருக்கிறது.

தூக்கம் தான் நமது உடல், மனம், புத்தி ஆகிய மூன்றிற்கும் புத்துணர்வு ஊட்டக் கூடியதாக இருக்கிறது. அதனால் நமது கண்களைப் பாதுகாப்பதற்கு தூங்காமல் தூங்குவதற்கு ஒரு பயிற்சியைச் செய்ய இருக்கிறோம்.

ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டும் பயிற்சி தான் இது.

ஒரு நிமிடம் தொடர்ந்து கண்களைச் சிமிட்ட வேண்டும். கண்களைச் சிமிட்டும் பொழுது வேகமாக சிமிட்டக் கூடாது. அதே சமயத்தில் மிக மெதுவாகவும் சிமிட்டக் கூடாது.

ஒரே சீரான அளவில் கண்களைச் சிமிட்ட வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டும் பயிற்சியைச் செய்யலாம். அதிகபட்சமாக மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

ஆனால் ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டினால் போதுமானது.

கண்களைச் சிமிட்டும் பொழுது முழுக் கவனத்தையும் கண்களின் மீது வைக்க வேண்டும். கண்களுக்கு முன்னால் தெரியும் காட்சி மறைந்து மறைந்து தெரிவதை பார்க்க வேண்டும்.

ஒரு கண் சிமிட்டலுக்கும், அடுத்த கண்சிமிட்டலுக்கும் இடையே போதுமான கால அவகாசம் இருக்க வேண்டும். அவசர அவசரமாக செய்வதால் எந்த பலனும் கிடைக்காது.

இவ்வாறு ஒருநாளில் ஒரு முறை முதல் ஐந்து அல்லது பத்து முறை வரை கண்களை சிமிட்டலாம்.

இதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?

தூக்கமின்மை என்ற வியாதி குணமாகிறது. தூங்கும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என எண்ணுபவர்களுக்கு இந்தப்பயிற்சி உதவி செய்கிறது.

தூக்க மாத்திரை பயன்படுத்தி தூங்குவோர் இனிமேல் இந்த கண்சிமிட்டலைச் செய்து வருவதால் ஒவ்வொரு மாதமும் தூக்க மாத்திரைகளின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்து பின்னர் ஆறுமாதங்களில் முற்றிலும் நிறுத்திவிடலாம்.

டென்சன், பயம், கோபம், கவலை போன்றவைகள் குறைகிறது. கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், சாப்ஃட்வேர் இன்ஜினியர்கள் மூளைக்கு அதிகமாக வேலை கொடுப்பவர்கள் என அனைவரும் இதன் மூலம் தங்கள் வேலைகளை சிறப்பாக இப்பயிற்சி மூலம் செய்யமுடியும்.

இதனால் கண்களுக்கு கீழள்ள கருவளையங்கள் மறைகிறது. நாம் மனதிற்கு பிடித்தது போல வாழ்வதற்கு ஆரம்பித்து விடுவோம்.

எனவே கண்சிமிட்டுதல் என்பது ஒரு நல்லபயிற்சி என்பதைப் புரிந்து கொண்டு ஒருநாளில் இரண்டு மூன்று முறைகளாவது ஒரு நிமிட அளவிற்கு கண்களைச் சிமிட்டுவதை இனிமேல் வழக்கமாகச் செய்வோம்.

நாம் ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ்வோம்.

குறிப்பு : கண்களைச் சிமிட்டும் பொழுது தயவுசெய்து மற்றவர்களைப் பார்த்து சிமிட்டிவிடாதீர்கள். இதனால் வரும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

எனவே யாரும் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்து கண்களைச் சிமிட்டுங்கள்.

கண்களைச் சிமிட்டுவோம்...
ஆரோக்கியமாக வாழ்வோம்...
கண்ணடிக்கலாம் வாங்க...
ஆரோக்கியமாக வாழலாம் வாங்க...
வாழ்க வையகம்...

தமிழின விரோதி பாஜக பொன். ராதா வின் அலறல்...


வெண் குஷ்டம் என்ற வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான நிருபிக்கப் பட்ட வீட்டு வைத்தியம்...


உள் மருந்தாக...

காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து,
சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன்
சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும்..

நீர் அதிகமாக அருந்த வேண்டும்...

உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும்...

வெளி மருந்து (மேற் பூச்சு மருந்து)...

௧) வேப்பம் கொழுந்து
௨)கஸ்துரி மஞ்சள்
௩) நாட்டுப் பசு மோர் (வீட்டில் தயாரித்தது)

வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு
தேவையான அளவு வீட்டில் தயார் செய்த நாட்டுப் பசு மோர் மோர் விட்டு
அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து காலை பொழுது (6 முதல் 8 க்குள்) பாதிப்பு உள்ள இடங்களிலும், விருப்பம் இருந்தால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.

இது போல 90 நாட்கள் செய்தால்
வெண்புள்ளிகள் மறைந்து
இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும்.

பாதிப்புகள் அதிகமாக இருந்தால்
சற்று கால தாமதம் ஏற்படும் ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.

உள் பிரயோகம் மற்றும் வெளிபிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்..

தக்காளி, புளி, வெங்காயம், வாழைப்பழம், ஆப்பிள் பிரெட், கார்ன் புட்ஸ், வைட்டமின் “C” உள்ள பொருள்கள்,

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு,

அசைவம், வெள்ளை சர்க்கரை , ஊறுகாய், மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.

வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக பயன் படுத்தக் கூடாது..

எந்தவித side-effect வும் ஏற்ப்படுத்தாது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 15 படகுகளில் சென்ற 514 மீனவர்களை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் இருக்கும் இடங்கள் கணிக்கப்பட்டுள்ளன .

கடலுக்கு சென்று திரும்பாத 132 படகுகளில் 86 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.-ஆர்.பி.உதயக்குமார்...

2030 இல் உலகம் மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும்...


மழையும் நம் முன்னோர்களும்...


தூக்கணாங்குருவி கூடு வாசல் தெற்கு நோக்கினால் மழை. வடக்கு நோக்கினால் வறட்சி.

மரத்தின் உள்பக்கம் காகம் கூடு கட்டினால் பெருமழை. வெளிப்பக்கம் கட்டினால் அதிக மழை பெய்யாது....

RedAlert பொய்த்தாலும் நம் முன்னோர் கணித்த மழை அறிகுறிகள் ஒருபோதும் பொய்த்ததில்லை...