தலைப்பை படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் சின்னதாக ""ஷாக்'' அடித்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.
இது ஏதோ இளைஞர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக இந்தக் கட்டுரையில் எதுவோ சொல்லப் போகிறோம் என யாரும் எண்ணிக் கொள்ள வேண்டாம்.
இது எல்லா தரப்பினருக்கும், எல்லா வயதினருக்கும் உரிய ஒரு பொதுவானது.
அந்த விசயத்தைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
கண்ணடிப்பது என்பது மிகச்சிறந்த ஒரு தியானம்.
கண்ணடிப்பதால் நமது உடலுக்கு, மனதிற்கு, புத்திக்கு, கண்களுக்கு என அனைத்திற்கும் பலவிதத்தில் நன்மைகள் உண்டாகிறது.
ஒரு நிமிடம் தொடர்ந்து கண்ணடிப்பது என்பது ஒரு மணிநேரம் தொடர்ந்து தூங்குவதற்கு சமமாகிறது.
கண்ணடிப்பது என்பது கம்ப்யூட்டரில் ரீஃப்ரஷ் என்ற ஒன்றைப் பயன்படுத்துவது போலாகும்.
அதாவது (Refresh) என்ற பட்டனை அழுத்தி கம்ப்யூட்டரை ரீஃப்ரஷ் செய்து கொள்வது போல நமக்கு இந்த கண்ணடித்தல் பயன்படுகிறது.
தினசரி யாரெல்லாம் இந்தக் கண்ணடித்தலை அதிக நேரம் செய்கிறார்களோ அவர்கள் மனதிற்குப் பிடித்தது போல வாழ்பவர்கள் என்று கொள்ளலாம்.
தினசரி யாரெல்லாம் குறைவான நேரம் கண்களை இமைத்து வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் புத்திக்குப் பிடித்தது மாதிரி வாழ்பவர்கள் எனக் கொள்ளலாம்.
பெண்களின் கண்களை வேடிக்கைப் பார்த்திருந்தால் உங்களுக்கு ஒரு விசயம் புரிந்திருக்கும். அதிகமுறைகள் ஒரு நாளில் கண்சிமிட்டுபவர்களாக அவர்கள் இருப்பதைப் பார்க்கமுடியும்.
ஆண்கள் எப்பொழுதுமே குறைவாகத்தான் கண்களை சிமிட்டுவார்கள். சில நுட்பமான வேலைகளில் ஈடுபடும் பொழுது இயல்பாகவே கண்களை சிமிட்டுவது குறைந்து போய்விடும் அது என்னென்ன வேலைகள் தெரியுமா ?
கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். சாப்ஃட்வேர் இன்ஜினியர்கள். பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் புத்திக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய துறையில் வேலை செய்பவர்கள் தொழில் நுட்பக்கலைஞர்கள், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்பவர்கள் போன்றோரை உதாரணமாக சொல்லலாம்.
சுருக்கமாக புத்திக்கு அதிகம் வேலைதரக் கூடியவற்றைச் செய்பவர்களுக்கு கண் சிமிட்டுதல் என்பது குறைவாக இருக்கும்.
இவ்வாறு கண்சிமிட்டுதல் குறையும் பொழுது டென்சன், கோபம், பயம், தூக்கமின்மை குழப்பம் ஆகியவை வருவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே நாம் இப்பொழுது கண்சிமிட்டும் பயிற்சியை அறிமுகப்படுத்த போகிறோம்.
ஒரு நிமிடம் தொடர்ந்து கண்சிமிட்டுவது ஒரு மணிநேரம் தூங்குவதற்கு சமமாக இருக்கிறது.
தூக்கம் தான் நமது உடல், மனம், புத்தி ஆகிய மூன்றிற்கும் புத்துணர்வு ஊட்டக் கூடியதாக இருக்கிறது. அதனால் நமது கண்களைப் பாதுகாப்பதற்கு தூங்காமல் தூங்குவதற்கு ஒரு பயிற்சியைச் செய்ய இருக்கிறோம்.
ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டும் பயிற்சி தான் இது.
ஒரு நிமிடம் தொடர்ந்து கண்களைச் சிமிட்ட வேண்டும். கண்களைச் சிமிட்டும் பொழுது வேகமாக சிமிட்டக் கூடாது. அதே சமயத்தில் மிக மெதுவாகவும் சிமிட்டக் கூடாது.
ஒரே சீரான அளவில் கண்களைச் சிமிட்ட வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டும் பயிற்சியைச் செய்யலாம். அதிகபட்சமாக மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.
ஆனால் ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டினால் போதுமானது.
கண்களைச் சிமிட்டும் பொழுது முழுக் கவனத்தையும் கண்களின் மீது வைக்க வேண்டும். கண்களுக்கு முன்னால் தெரியும் காட்சி மறைந்து மறைந்து தெரிவதை பார்க்க வேண்டும்.
ஒரு கண் சிமிட்டலுக்கும், அடுத்த கண்சிமிட்டலுக்கும் இடையே போதுமான கால அவகாசம் இருக்க வேண்டும். அவசர அவசரமாக செய்வதால் எந்த பலனும் கிடைக்காது.
இவ்வாறு ஒருநாளில் ஒரு முறை முதல் ஐந்து அல்லது பத்து முறை வரை கண்களை சிமிட்டலாம்.
இதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?
தூக்கமின்மை என்ற வியாதி குணமாகிறது. தூங்கும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என எண்ணுபவர்களுக்கு இந்தப்பயிற்சி உதவி செய்கிறது.
தூக்க மாத்திரை பயன்படுத்தி தூங்குவோர் இனிமேல் இந்த கண்சிமிட்டலைச் செய்து வருவதால் ஒவ்வொரு மாதமும் தூக்க மாத்திரைகளின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்து பின்னர் ஆறுமாதங்களில் முற்றிலும் நிறுத்திவிடலாம்.
டென்சன், பயம், கோபம், கவலை போன்றவைகள் குறைகிறது. கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், சாப்ஃட்வேர் இன்ஜினியர்கள் மூளைக்கு அதிகமாக வேலை கொடுப்பவர்கள் என அனைவரும் இதன் மூலம் தங்கள் வேலைகளை சிறப்பாக இப்பயிற்சி மூலம் செய்யமுடியும்.
இதனால் கண்களுக்கு கீழள்ள கருவளையங்கள் மறைகிறது. நாம் மனதிற்கு பிடித்தது போல வாழ்வதற்கு ஆரம்பித்து விடுவோம்.
எனவே கண்சிமிட்டுதல் என்பது ஒரு நல்லபயிற்சி என்பதைப் புரிந்து கொண்டு ஒருநாளில் இரண்டு மூன்று முறைகளாவது ஒரு நிமிட அளவிற்கு கண்களைச் சிமிட்டுவதை இனிமேல் வழக்கமாகச் செய்வோம்.
நாம் ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ்வோம்.
குறிப்பு : கண்களைச் சிமிட்டும் பொழுது தயவுசெய்து மற்றவர்களைப் பார்த்து சிமிட்டிவிடாதீர்கள். இதனால் வரும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
எனவே யாரும் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்து கண்களைச் சிமிட்டுங்கள்.
கண்களைச் சிமிட்டுவோம்...
ஆரோக்கியமாக வாழ்வோம்...
கண்ணடிக்கலாம் வாங்க...
ஆரோக்கியமாக வாழலாம் வாங்க...
வாழ்க வையகம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.