11/10/2018

தற்சாற்பு வாழ்வியல் பாகம் -1...


ஒரு மருத்துவ ரீதியான அலசல்...

வெயில் காலத்தில் உடல் தன்னை குளிர்ச்சி செய்து கொள்ள வியர்வையை உண்டாக்கி உடலில் உள்ள சூட்டை வெளியே தள்ளும்... (தண்ணீர் குடித்தவுடன் சிலருக்கு வியர்வை வரும் - அப்படி என்றால், அவர்களது உடல் புற தட்ப வெட்பத்திற்கு ஏற்ப தன்னை சீர் செய்து கொள்கிறது என்று பொருள்படும்).

மழை காலத்தில் புற சூழல் முழுவதும் குளிர்ச்சி யாக இருப்பதால், உடல், சூட்டை ஏற்படுத்துகிறது... (அதனால் தான் மழைக்காலத்தில் உடலில் சூடு மிதமாக இருந்து கொண்டே இருக்கும் & பல் உயிர் பெருக்கமும் நிகழும்).

மண் ணால் கட்டப்பட்ட குடிசை வீடுகளில் வாழ்ந்து இருக்கிறீர்களா...

வாழ்ந்தவர்களுக்கும் வாழ்பவர்களுக்கும் நன்கு புரியும், வெயில் காலத்தில்... குடிசை வீட்டில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்... (கூறையில் நாம் எதை கொண்டு மேய்கிறோமோ, அதன் தன்மையை பொருத்து சிரிதளவு குளிர்ச்சியும் இருக்கும்).

அதே மழை காலத்தில், குடிசை வீடுகளில் கதகதப்பாக இருக்கும்...

நாகரீக வளர்ச்சியின் அடையாளங்களில் ஒன்றான சிமெண்ட்டு, டைல்ஸ் .... ஆன வீடுகளில், புற சூழல் எப்படி இருக்கிறதோ இந்த வீடுகளிலும் அதே சூழல் தான் தென்படும்... அது வெயிலாக இருந்தாலும் சரி குளிராக இருந்தாலும் சரி...

மருத்துவ ரீதியாக இதை அனுகினால், நம் உடல் தன்னை புற தட்ப வெட்பத்திற்கு நேர் மாராக தயார் செய்வதற்கு, நம் முன்னோர்களின் மண் வீடு உதவுகிறது... இதனால், உடலுக்கு அதிக சிரமம் இல்லாமல், நன்றாக இயங்க முடிகிறது...

நாகரீக வீடுகளில் வீட்டிற்கு வெளியேவும் உள்ளேயும் ஒரு மாதிரியான, தட்ப வெட்பம் நிலவுவதால், உடல் தன்னை தற்காத்துக் கொள்ள தினறுகிறது...
இதனால் பல வியாதிகள் உண்டாகிறது...

அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது என்பதை உணர்ந்து இயற்கையோடு இணைந்து  வாழ்ந்தார்கள்...

அதனால் ஆரோக்கியமாக பல்லாண்டு வாழ்ந்தார்கள்...

(நம் முன்னோர்களின் வீடுகளைப் பற்றி எழுத துவங்கினால் அவ்வளவு அதிசயங்கள் காத்திருக்கிறது... அதை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த பாகங்களில் காண்போம்...).

தற்சார்பு வாழ்க்கையை நோக்கி நகர்வோம் வாருங்கள்...

முனைவர்.பா.ஜெயப்ரசாத்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.