16/11/2021

கூட்டணி பிச்சைக்காக என்னனெல்லாம் செய்ய வேண்டிருக்கு... . அம்பேத்கர்_சுடர்... விசிக திருமா...

 


உங்களுக்கு தெரியுமா ?

 


அருவா நாடு என்ற நாடு பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்தது...

இதை அருவா வடதலை நாடு என்றும் கூறுகிறது புராண தமிழ் நூல்கள்..

இதன் தலைநகரம் கச்சி என்ற ஊர் குறிப்பிடப்பபடுகிறது..

இந்த கச்சி என்ற ஊர் இன்றைய காஞ்சிபுரம் தான்..

மற்றைய அரச மரபு போன்றே கோட்டை கொத்தளங்கள் உடையது இந்த காச்சி என்ற இன்றைய காஞ்சிபுரம் இங்கே அனிமை என்ற பகுதியில் ஒரு புத்த பள்ளி இருந்த்தாக வரலாறு கூறுகிறது..

இதை கட்டியது யார் தெரியுமா ?

சோழன்..

ஆதாரம் மணிமேகலை 28 மற்றும் 175 /176..

இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா ?

5 நூற்றாண்டுக்கு பின் ஹியூசாங் காஞ்சிபுரத்தை காண வந்த பொழுது காஞ்சிபுரத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்த ஆலயங்கள் இருந்த்தாகவும் 10,000 புத்த துறவிகள் இங்கே வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார்.

அதாவது சோழ மன்னனுக்கு பின் 500 வருடம் கழித்து இப்படி பெருவாரியான புத்தமக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இவர்கள் என்ன  ஆனார்கள் இவர்களில் ஆலயங்கள் எப்படி இடிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது.

ஆனால் சிந்திப்பதற்கு எந்த தடையும் இல்லை இந்த சம்பவத்திற்கு

ஆதாரம்..

பெரும்பாணாற்றுப்படை அடி 373..

இதில் இன்னொரு வரலாறும் ஒளிந்துள்ளது..

சோழன் கட்டிகொடுத்தது புத்த பள்ளி விகாரை தான்..

அதாவது கோவில் அல்ல..

ஆரம்பக்காலத்தில் புத்தருக்கு சிலை வணக்கம் இல்லை புத்த மதத்தவர்களை கடவுள் மறுப்பாளர்களாகவே ஆரம்பகால புத்த மதத்தை பின் பற்றுகின்ற வரைகளை கூறியுள்ளனர்...

சோழ மன்னன் காலத்தில் இருந்து 500 வருடங்களுக்குள் தான் புத்த மதம் கடவுள் கொள்கையையாக திரிக்கப்பட்டது என்பது இதன் வாயிலாக அறிய முடிகிறது...

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா 😁

 


இந்த தீவுக்கு ஆண்கள் சென்றால் அம்பூட்டு தான் 😁

 


உலகத்திலே நெல் செடிகள் பூந்தொட்டியில் வைத்து சேதத்தை பார்வையிடும் உலகமகா நடிகர் இவர் மட்டும் தான்😜

 


முடிவிலி சின்னத்தின் ரகசியம் என்ன?

சமீபத்தில் முகப்புத்தம் அதன் மெட்டா என்ற புதிய முடிவிலி போன்ற லோகோவை யும் அறிமுகப்படுத்தியது...

அறிவியல் மற்றும் அமானுஷ்யம் இவை இரண்டிலும் மிகவும் பிரபலமான மற்றும் பரவலான சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது...

வழக்கமான அறிவியலின் படி, முடிவிலி சின்னம் என்பது அனைத்து அறிவியலிலும், இயற்பியலிலும், HTML குறியீட்டிலும் கூட பயன்படுத்தப்படும் ஒரு கணித சின்னமாகும். 

ஆனால் உண்மையில் இது எங்கிருந்து வந்தது என்றால் அதற்கு நாம் எகிப்து நோக்கி தான் பயணப்பட வேண்டும்...

முடிவிலியின் அடையாளமானது வாட்ஜெட் தேவியின் சின்னங்களான யுரேயஸிலிருந்து வந்தது...

அதாவது அது ஒரு தெய்வீக பாம்பு...

இப்போது புரிந்திருக்குமே யாம் எதற்காக இந்த பதிவை பதிவேற்றுகிறோம் என்று...

பார்வோன்களின் முடிசூட்டு காலத்தில், இந்த தெய்வீக பாம்பினால் முடிசூட்டப்படும் வரை அவர்கள் இராஜாவாகவே அல்லது இராணியாகவோ அங்கிகரிக்கப்பட மாட்டார்கள்...

அதே அங்கிகாரம் தான் இன்று முகப்புத்தகத்திற்கு கிடைத்திருக்கிறது...

இந்த நாகர்கள் அன்றிலிருந்து இன்று வரை ஒரே முறையை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு அதையே வரலாற்றெங்கிலும் செய்து வருகிறார்கள்..

மழை Vs மாணவர்கள் 😁

 


பிராடு பாஜக கிரிமினல் உ.பி. யோகி கலாட்டா...

 


இலுமினாட்டி - பூமியின் 33° இணைக்கோட்டின் அமானுஷ்யம்...

 


பூமியின் அச்சிலிருந்து 33° அளவெடுத்து ஒரு இணைக்கோடு வரைந்து அதில் குறுக்கிடும் இடங்களையும் அந்த இடங்கள் சார்ந்து வரலாற்றில் நடந்த நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்ப்பீர்களானால் ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்.

பூமியின் 33° இணைக்கோட்டுப் பகுதி அத்தனை முக்கியத்துவமுள்ளது.

எண் கணித நிபுணர்களிடம் 33 ஆம் எண்ணின் சிறப்பு என்ன என்று கேட்பீர்களானால் அவர்கள் பல்வேறு காரியங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள்.

அமானுஷ்ய சடங்குகள் நிறைந்த ப்ரீமேசன்ஸ் இயக்கத்தின் மிக உன்னத நிலையாக 33-டிகிரி போற்றப்படுகிறது.

இந்த நிலையை எட்டியவர்களை 33° ஃப்ரீமேசன் என்றழைப்பார்கள்.

இவர்களது பழமை வாய்ந்த போனிக்ஸ் கோவிலும் சரியாக பூமியின் 33° இணைக்கோட்டில் தான் வருகிறது.

உலகின் ஆகப்பெரிய அமானுஷ்யங்களை சுமந்து கொண்டிருக்கும் பெர்முடா முக்கோணமும், அள்ள அள்ளக் குறையாத மர்மங்களை உள்ளடக்கிய கிரேட் பிரமிடும் இதே இணைகோட்டில் தான் இருக்கிறது.

செழிப்பான, நாகரீகமிக்க தேசமாயிருந்து முற்றிலும் கடலில் மூழ்கி அழிந்து போனதாக நம்பப்படும் அட்லாண்டிஸ் தீவும், விவிலியத்தில் கடவுளுக்கு எதிரான சைத்தானின் நகரமாக சொல்லப்படும் பாபிலோனும் இந்த 33° இணைக்கோட்டுப் பகுதியில் தான் இருந்தது.

சரி எல்லாம் இருந்துட்டுப் போகட்டும் அதனால் என்ன என்கிறீர்களா?

33-ஆம் எண் சைத்தானுக்கு உகந்த எண்களிலேயே மிக முக்கியமான எண்ணாகும்.

எனவே தனக்கு மிகவும் உகந்த அந்த இடத்தில் தனக்கு இரத்த பலிகள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று சைத்தான் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

எனவே உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் சிலர் வேண்டுமென்றே சுய லாபத்துக்காக அந்த இடத்தில் விபத்துகளையும், யுத்தங்களையும் நிகழ்த்தி சைத்தானுக்கு நரபலிகளை கொடுப்பதாக சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் (Conspiracy Theorists) குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் இவர்கள் குற்றச்சாட்டுக்கு அதிகாரபூர்வ ஆதாரங்கள் ஏதுமில்லை.

ஆதாரங்கள் ஏதுமில்லாவிட்டாலும் சம்பவங்களின் புள்ளிகளை இணைத்துப் பார்க்கும் போது நமக்கும் பயத்தில் முதுகுத்தண்டு சில்லிடவே செய்கிறது.

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நாகசாகி இந்த 33° இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் தலைநகரையோ அல்லது இராணுவ தளங்களையோ தானே தகர்க்க வேண்டும்.

எந்த முக்கியத்துவமும் இல்லாத ஹிரோஷிமா நாகசாகி மீது குண்டு வீசப்பட்டதேன், அது சைத்தானை திருப்திப்படுத்தத் தான் என்று சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் வாதிடுகிறார்கள்.

வட ஆப்பிரிக்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்று அனுதினமும் மக்கள் இரத்தம் சிந்தி மரிக்கும் பகுதிகள் இந்த இணைக்கோட்டில் தான் வருகிறது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான். F.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது சரியாக 33 டிகிரி அளவுள்ள இடத்தில் தான்.

உலகம் முழுவதும் இந்த33° இணைக்கோட்டுப் பகுதியில் 600 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

எப்போதும் துப்பாக்கி சத்தம் கேட்கும் பகுதிகளான ஈராக், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகள் இந்த இணைக்கோட்டில் தான் வருகின்றன.

1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரோஸ்வெல் என்ற நகரத்தில் வேற்று கிரகவாசிகளின் விண்கலம் நொறுங்கி அதில் பயணம் செய்த ஏலியன்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடமும் இதே இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

விவிலியத்தில் இறைவனுக்கும் சைத்தானுக்கும் கடைசி யுத்தமாக அர்மெகதோன் நடைபெறப் போகும் இடம் என்று நம்பப்படும் மகிடோ மலையும் இந்த 33 டிகிரி இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தது தனது 33 வது வயதில் தான், சைத்தான் சொர்க்கத்தில் இருந்த இறை தூதர்களில் மூன்றில் ஒரு பங்கை தன் பக்கம் இழுத்துக் கொண்டதாக விவிலியம் சொல்லுகிறது. அது சரியாக 33.33 சதவிகிதமாகும்.

இந்த 33 என்ற எண் இலுமினாட்டிகளின் கடவுளுக்கு பிடித்த எண். பிரிமேசன் என்ற அமைப்பை பற்றி ஒரு பதிவில் சொல்லியிருக்கேன் நியாபகம் இருக்கா.

அதில் அதிகபச்ச உயர்நிலை 33° தான்.

இதை பற்றி இன்னும் நிறைய இருக்கு அப்புறம் பார்க்கலாம்...

வங்கி Vs உச்சநீதிமன்றம் கலாட்டா...

 


தமிழகத்தில் உள்ள கேவலமான நினைவு சின்னம்...

 


மராட்டிய மன்னர்களை பற்றிய ஆஹா ஓஹோ புகழ் ஆங்காங்கே காண முடிகிறது..

தமிழக சரபோஜிகள் ஆங்கிலேயனுக்கு கால் கழுவி கிடந்த்தர்கு இன்னொரு வரலாற்றையும் கூறுகிறேன் பாருங்கள்..

1815 வது வருடம் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய படைக்கும்.. நெப்போலியனுக்கும் இன்றைய நெதர்லாந்தில் உள்ள வாட்டர்லூ  என்றழைக்கப்படும் இடத்தில் யுத்தம் நடக்கிறது..

அதாவது சண்டையிட்டவர்கள் இருவருமே அன்னியர்கள் இதுல தமிழனுக்கு என்ன வேலை தொடர்ந்து படியுங்கள்..

இந்த போரில் ஆங்கிலேயர்கள் வென்றார்கள் நெப்போலியன் படை தோல்வி அடைகிறது.

ஆங்கிலேயர்கள் வென்ற சந்தோஷத்தை தமிழர்கள் நாங்களும் கொண்டாட வேண்டுமாம்.

இதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான நினைவுச்சின்னம் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள மனோரா கட்டிடம்.

இதை தமிழனின் செல்வத்தில் ஆங்கிலேயன் மனது குளிர கட்டியவன் இரண்டாம் சரபோஜி.

ஆங்கிலேயர் வென்றால் தமிழர்கள் நாங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டுமோ ?

அப்படியானால் சுதந்திரத்திற்கு பாடுபட்ட எத்தனையோ மக்கள் ஆங்கிலேயனின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலியானார்களே அவர்களின் நிலை என்ன ?

செத்தாலும் பரவாயில்லை இது தானே இவர்கள் கொள்கை.

இதே தாக்கம் தானே இன்றும் இவர்களிடம் உள்ளது.

ஆங்கிலேயரின் கார்ப்பரேட் கம்பனிகள் உயர எம் நாட்டவர் செத்தாலும் பரவாயில்லை என்பதெல்லாம் வேறு என்ன ?

இதுல கொடுமை என்னவென்றால் நெடுவாசல் அருகே தான் இந்த நினைவு தூண் உள்ளது.

அந்த காலத்திலும் ஆங்கிலேயனின் அதிகாரம் தான்.

இப்போதும் நியூட்ரினோ என்ற பெயரில் அவனுங்க அதிகாரம் தான்..

அய்யோக்கிய பிராடு பயலுங்க...

 


இனி யாராவது Bro சொல்லுங்க.. அப்புறம் இருக்கு குந்தாணிகளுக்கு...

 


எல்லாரும் வந்து காபி குடீச்சுட்டு போங்க...


ஒரு காலத்தில் ரோமர்களுக்கே வேலை கொடுத்தவர்கள் இந்த தமிழர்கள் ஆனால் இப்போது..?

 


இயேசு நாதர் பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டுகளாக தமிழக எகிப்து வணிக தொடர்பு இருந்துள்ளது..

எகிப்து அரசன் ஃபாரோ (பிர்அவுன்) காலத்திலேயே தமிழக வியாபாரிகள் பாரோவிடம் வியாபார தொடர்பு வைத்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்துவந்த நிலையில் தான் பல வருடங்கள் கழித்து ரோமர்கள் எகிப்தை கைப்பற்றுகின்றனர். இந் நேரத்தில் ரோமர்களுக்கும் வியாபார தொடர் தொடர்கிறது.

கப்பல் வழியே செல்லும் போது கடல் கொள்ளையர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றது.

இதை தடுக்க கப்பலில குறிப்பார்த்து வில் எய்தக்கூடிய படைகளையும் சேர்த்தே கூட்டி சென்றனர் இருப்பினும் சொற்பமான பொருட்களை மட்டுமே கொள்ளையர்ககளிடமிருந்து காப்பாற்றி எகிப்து கொண்டு சேர்தனர்.

இதை உணர்ந்த கிரேக்க வாணிபர்கள் தமிழகத்திற்கு வரும் கப்பலில் உரோம படை வீரர்களையும் அழைத்து சென்றது.

இப்படி இந்தியாவுக்கு வந்த உரோம வீரர்களின் கரடுமுரடான தோற்றம் போர்கள் செய்தே பழகிய இவர்களது பழக்க வழக்கங்கள் தமிழக அரசர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதன் அடிப்படையில் இந்தியாவில் முதன் முறையாக பாண்டிய மன்னன் பரம்பரையை சேர்ந்த ஒரு அரசன் உரோம மன்னன் அகஸ்டஸ் சீசருக்கு இரண்டு தூதுக்குழுக்களை அனுப்பினர்.

ஒரு தூதுக்குழு சீசரை சந்திந்த நாள் கிமு 20 இல் டெரெகோனா என்ற தீவில் சந்தித்த்தாகவும்..

இரண்டாவது தூதுக்குழு கிமு 26 இல் Island of samous இல் சீசரை சந்தித்த்தாக வரலாறு உள்ளது..

இதன் பின் ரோம வீரர்கள் பாண்டிய மன்னர்கள் அரசவையில் பாதுகாப்பு அதிகாரிகளாக அமர்த்தப்பட்டனர்.

இதை வர்ணித்து தமிழ் புராண புத்தகமான முல்லை பாட்டு அடிகள் 59 இல் இருந்து 66 வரை காணலாம்.

இவர்கள் தமிழக அரசவையில் சைகை செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்துக் கொண்டனராம்.

ம்ம் ரோமானியர்களுக்கே வேலை கொடுத்த எம் மூதாதையர்கள் எங்கே...

எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்து கொடுத்து விட்டு வேலை இல்லாத திண்டாட்டத்தை உருவாக்கி தன் பிழைப்புக்காக அயல்நாடுகளில் வேலை செய்து வருவோரையும் அந்த வரி இந்த வரி என்று திருடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே..

இன்றைய அரசியல்வாதிககளுக்கு மிகப்பெரிய செருப்படி தான் இந்த பதிவு...

இந்தா வாரேன் ☺

 


இனிய காலை வணக்கம் 😔

 


திருடியே...

 




திருடுவதற்கு 
எவ்வளோ இருந்தும்...

என் இதயத்தை மட்டும்
ஏன் திருடினாய் பெண்ணே....