27/11/2017

தமிழ் தேசிய மாவீரர் நாள்...


உடல்கள் அழிந்தாலும் உடல் கொண்ட நினைவுகளும், சிந்தனைகளும் அடுத்த தலைமுறைக்கு கடத்தபட்டு பயணித்து கொண்டு தான் இருக்கும்...

மாவீரர்கள் நாள் போற்றுவோம்.....

குஜராத்திகளுக்கு மட்டும் சலுகையா ? ஐஐடி நுழைவுத்தேர்வுகள் குஜராத்தி மொழியில் மட்டும் நடத்தப்படுகின்றன. அத்தேர்வுகளை தமிழில் ஏன் நடத்தப்படுவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்...


மேலும், ஐஐடி உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அனைத்து எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஐஐடி கூட்டு நுழைவுத்தேர்வுகள் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அடுத்த ஆண்டும் குஜராத்தி மொழியில் நடத்தப்படவுள்ளது. தமிழ் மொழியிலும் அத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வரும் நிலையில் அதை ஏற்க மத்திய இடைநிலை கல்வி வாரியம் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி), தேசியக் கல்வி நிறுவனங்கள்(என்ஐடி), இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐஐடி), இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வுகள் (IIT - JEE) நடத்தப்படுகின்றன. ஐஐடி தவிர்த்த மற்ற கல்வி நிறுவனங்களில் முதன்மைத் தேர்வின் அடிப்படையிலும், ஐஐடி மற்றும் அதற்கு இணையான கல்வி நிறுவனங்களில் இறுதி நிலைத் தேர்வான அட்வான்ஸ்டு தேர்வின் அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இத்தேர்வுகள் தொடக்கம் முதலே ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.

2013-ம் ஆண்டில் குஜராத்தியிலும் இத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை விடுத்ததை ஏற்று அதற்கு அடுத்த ஆண்டு முதல் அம்மொழியிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஐஐடி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் ஒரே மாநில மொழி குஜராத்தி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது...

இரட்டை இலையில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள் - அதிமுக மதுசூதனன்...


மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரஷியா பயணம், 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது...

       
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் மூன்று நாள் ரஷியா பயணத்தின் போது பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நிலைகளிலும் எதிர்க்கொள்வது மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுத்தல் ஆகிய இரு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து ஆகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரஷியாவில் ராஜ்நாத் சிங் அந்நாட்டு உள்துறை மந்திரி விளாடிமிர் கோலோகோல்ட்சேவ் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் மற்றும் அனுபவ பரிமாற்றம், அவற்றை ஒடுக்குவதில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த உதவியாக இருக்கும். போதைப்பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பாக ரஷியா உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து கூட்டு நடவடிக்கையாக திட்டம் ஒன்றையும் இந்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு வகுக்கிறது. ‘இந்தியா–ரஷியா இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதற்கான 70–வது ஆண்டை இரு நாடுகளும் இந்த ஆண்டு கொண்டாடுகின்றன.

இந்த தருணத்தில் இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்’ என ராஜ்நாத் சிங் டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்...

இந்திய தடயவியல் துறை லட்சனம்...


சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்...


உடலில் சிறுநீரகம் ஒரு முக்கிய உறுப்பாகும். எனவே அத்தகைய சிறுநீரகத்தை சுத்தமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அதிலும் தற்போது நிறைய பேருக்கு சிறுநீரகக் கற்கள் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால், அத்தகைய சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

மேலும் சிறுநீரகம் தான் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அவ்வாறு நச்சுக்களை வடிகட்டும் போது, அந்த நச்சுக்களானது சிறுநீரகத்திலேயே தங்கிவிடுவதால், அவற்றை உடலில் இருந்து வெளியேற்ற சரியான உணவுகளை சாப்பிட வேண்டும்.

மேலும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதற்கு பல உணவுப் பொருட்கள் உள்ளன. இத்தகைய உணவுப் பொருட்கள் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை மட்டுமின்றி, ஆபத்தான பல கெமிக்கல்களை முற்றிலும் வெளியேற்றிவிடும். அதிலும் பூண்டு, வெங்காயம் மற்றும் மீன் போன்றவை சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.

ஆனால் பலர் இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டார்கள். குறிப்பாக சைவ உணவாளர்கள், இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பார்கள். ஆகவே தான், அத்தகையவர்களுக்காக மிகவும் சிறந்த சைவ உணவுப் பொருட்களை பட்டியலிட்டுள்ளோம்.

அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது தண்ணீரையும் அதிகம் பருக வேண்டும்.

முட்டைகோஸ் : இந்த பச்சை இலைக்காய்கறியானது சிறுநீரகத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின் கே அதிகமாகவும் நிறைந்துள்ளது.

சிவப்பு திராட்சை : சிவப்பு நிற திராட்சையில் ஒருசில ஃப்ளேவோனாய்டுகள் நிறைந்துள்ளன. அதிலும் ரெஸ்வெராட்ரால் என்னும் இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் ஃப்ளேவோனாய்டு அதிகம் நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி : ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மக்னீசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்ற சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

பார்ஸ்லி : சைவ உணவாளர்கள், இந்த கீரையை அதிகம் உணவில் சேர்த்தால், சிறுநீரகம் மற்றும் உடல் முழுவதுக்கும் நல்லது. அதிலும் இதனை சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிட்டால், சிறுநீரக கற்களானது கரைந்துவிடும்.

காலிஃப்ளவர் : இது சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு உணவுப் பொருளாகும். ஏனெனில் காலிஃப்ளவரில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சிறுநீரகங்கள் சுத்தமாக இருக்கும்.

ஆப்பிள் : ஆப்பிள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக வைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி அதிகம் நிறைந்திருப்பதால், அது உடல் முழுவதுக்கும் மிகவும் நல்லது.

ப்ளூபெர்ரி : ப்ளூபெர்ரியில் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் அந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது.

இஞ்சி : சைவ உணவாளர்கள் உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது, சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, இரத்தத்தையும் சுத்திகரிக்கும்.

தயிர் : தயிரும் செரிமானத்தை அதிரிக்கும் மற்றும் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா இருப்பதால், அது சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. முக்கியமாக இந்த உணவை சைவ உணவாளர்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆலிவ் ஆயில் : ஆலிவ் ஆயில் நிறைந்துள்ள நன்மைக்கு அளவே இல்லை. ஏனெனில் அத்தகைய எண்ணெயை உணவில் சேர்த்தாலும், சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது...

மனசாட்சி இல்லாம பேசுறான் பாருங்க அதிமுக அமைச்சர்...


தமிழக வாழ்வுரிமைக் கட்சி உடைந்தது...


பாஜக குஜராத்தி மோடியின் மக்கள் விரோத அரசு...


குஜராத்திகள் IIT நுழைவுத்தேர்வை குஜராத்தியில் எழுதலாம். அப்போ மற்ற மொழி மக்களின் நிலை...

தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் - விசிக எனும் தமிழின துரோக கட்சி (கர்நாடகா கிளை)...


திருமா: சென்னை நதிநீர் உரிமை மாநாடு நீரியல் வல்லுநர் விவசாய சங்கங்கள் என் தலைமையில் தோழமை கட்சிகளுடன் கூட்டுகிறோம்..

நிருபர்: கர்நாடக விசிக காவிரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக படங்கள்
ஃபேஸ்புக் வாட்சப்பில் பரவுகிறதே
ரத்தத்தைக்கூட தருவோம் தண்ணீர் தரமாட்டோம் என்று..

திருமா: கர்நாடகாவில் விடுதலை சிறுத்தைகள் இயங்குகிறார்கள்,
அம்மாநில உரிமைகளுக்காக அவர்கள் குரல் கொடுத்திருக்கலாம்நான் இது பற்றி விசாரித்து சொல்கிறேன்.

நிருபர்: உங்களுக்கு தகவல் வரவில்லையா?

திருமா: இல்லை இதுவரை தகவல் இல்லை..

https://m.youtube.com/watch?v=SPtzbQ2_GE8

சென்னை சங்கீதா ரெஸ்டாரன்டில் நவீன கொள்ளை...


வால்நட் (அக்ரூட்)...


வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணமாகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும்.

உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு பயம் பலருக்கு இருக்கிறது.இதனால்தான் கடுங்குளிரிலும் காலை நேர, நடைப்பயிற்சிக்குப் பலர் அவசரம் அவசரமாக ஓடுகின்றனர். இந்தப் பயத்தை ஆறுமாதங்களில் முற்றிலும் நீக்கிவிடலாம். தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வரவும். இதனால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து புள்ளி வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமாகிறது.

சரி, வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே, இதனால் உடல் எடை அதிகரிக்காது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட்டைச் சாப்பிட்டு வரலாம்.

வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பதாகும். இது. முதுமை மறதி, நினைவ7ற்றல் இழப்பு, மனத் தளர்ச்சி எனப்படும் டெமென்சியா நோயைத் தவிர்க்கவும் இது உதவும். அல்செமியர்ஸ் நோயுடன் தொடர்புடைய இரத்த உரைவுக் கட்டிகளை இந்த வால்நட் சத்து கரைக்கிறது என்று என்று ஒரு அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம். மேலும் வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. ஆண்மை குறைபாட்டினால் படுக்கை அறையில் சரியாக செயல்பட முடியாமல் இருந்த 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்,தினசரி 75 கிராம் அளவுள்ள வால்நட் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குபின் அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்த போது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உற்சாகமும், ஆண்மையும் அதிகரித்து இருந்தது தெரிய வந்தது.

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்...

நட்ஸ் உடலுக்கு மட்டும் தான் ஆரோக்கியத்தை தரும் என்று நினைக்க வேண்டாம். நட்ஸ் சாப்பிட்டால், உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும். இதுவரை நட்ஸில் பாதாம் எண்ணெடியை வைத்து மட்டும் தான் சருமத்தை பராமரிப்பது பற்றி தெரியும். ஆனால் அந்த நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம். அத்தகைய பலன் என்னவென்று பார்ப்போமா.

சுருக்கங்கள்...

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

தொற்று நோய்கள்...

சருமத்தில் ஏதேனும் பூஞ்சைகள் தாக்கி, அதனால் தொற்றுநோய்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை போக்குவதற்கு வால்நட் எண்ணெய் சிறந்ததாக உள்ளது. அதற்கு வால்நட் எண்ணெயை ஏதேனும் மூலிகை எண்ணெயையுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

தோல் அழற்சி...

சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.

உடல் நோய்கள்...

வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

வால்நட் நியூட்ரி பால்ஸ்
தேவையானவை...

ஓட்ஸ் 1 கப்
பாதாம் பருப்பு 10
வால்நட் 10
முந்திரிபருப்பு 10
பிஸ்தா பருப்பு 10
கறுப்பு எள் 1 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த திராட்சை 10
தேன் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் 1 கப் (பொடித்தது)

செய்முறை...

ஓட்ஸை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

பாதாம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் வால்நட், முந்திரிபருப்பு, பிஸ்தா நான்கையும் சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

கறுப்பு எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

உலர்ந்த திரட்சையை நெய்யில் பொறித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீருடன் வெல்லத்தை
சேர்த்து கொதிக்க விடவும். கம்பி பாகு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் பொடி பண்ணிய ஓட்ஸ் ரவை போல் உடைத்த நட்ஸ் கலவை, வறுத்த எள், பொறித்த திராட்சை, தேன், நெய் சேர்த்து அதனுடன் கம்பிபாகு வெல்லத்தை ஊற்றி நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.

இது சத்து நிறைந்த குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டி ஆகும்.

வால்நட் முந்திரி பர்ஃபி
தேவையானவை...

வால்நட் பருப்பு - ஒரு கப்,
முந்திரி - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
சர்க்கரை - ஒன்றரை கப்,
நெய் - அரை கப்.

செய்முறை..

வால்நட்டின் ஓட்டை உடைத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.

கடாயில் கால் டீஸ்பூன் நெய் விட்டு வால்நட், முந்திரிப் பருப்புகளை வறுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியை குறைந்த ஸ்பீடில் இயக்கி, பருப்புகளை பொடித்துக் கொள்ளவும்.

சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, கம்பிப் பதத்துக்கு வந்ததும் பொடித்த பருப்புகளை சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்துக் கிளறி, கடாயில் ஒட்டாமல் நுரைத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். குறைந்த நேரத்தில், சுலபமாக செய்யக் கூடிய சுவையான ஸ்வீட் இது.

வால்நட் - முந்திரி பர்ஃபி: தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து செய்தால் சுவை கூடும்.

வால்நட், பாதாம் பாயாசம்..

வால்நட் : 25 gm
பாதாம் : 10 pcs
சர்க்கரை : 100 gm
நெய், ஏலம் : சிறிது

வால்நட் பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அந்தக் கலவையை சிறிது தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி வந்தவுடன் அதில் சர்க்கரையைப் போட்டு கரைந்து வந்தவுடன் நெய், ஏலப்பொடி போட்டு கலக்கி இறக்கவும்...

தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியாவதற்கு தயாரா உள்ள நிலமையில் எனோ இன்னும் வரவில்லை...


தமிழில் இந்த திரைப்படத்தின் பெயர் நான் திரும்ப வருவேன்...

தேர்தல் ஆணையமும் ஏமாற்று வேலையும்...


தொப்பி தினகரனுக்கு ஆதரவாக எடப்பாடி, ஜெயக்குமார், செங்கோட்டையன், அவரு இவருன்னு ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக வெளியான லிஸ்ட் இது...

இந்த லிஸ்டைக் காண்பிச்சுதான் தேர்தலை நிறுத்துனாங்க.

அப்போ டம்மி முதல்வரா இருந்த எடப்பாடி இப்போ நிஜமாவே முதல்வர் ஆகிட்டாரு.

இப்போ அதே தொகுதிக்கு திடீர்னு தேர்தல் வருது. ஆனா முதல்ல சொல்லப்பட்ட அந்தக் குற்றச்சாட்டு என்ன ஆச்சு?

தினகரன், எடப்பாடி & கோ திடீர்னு உத்தமர்களா ஆகிட்டாங்களா?

தேர்தல்கமிஷனே உன் விலை என்ன? இப்போ உன்னை யாரு வாங்கியிருக்காங்க?

அன்புச்செழியனால் தான் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக கூற முடியாது. அன்புச்செழியன் இல்லையென்றால் பாதி படங்கள் திரைக்கு வந்திருக்காது - முட்டு கொடுக்கும் சீமான்...


பேய்கள் ஜாக்கிரதை...


நாம் வாழ்கின்ற இந்த பிரபஞ்சத்தி த் பல விதமான விதிகள் இருக்கு. ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சக்தி நிலையில இயங்குது.

ஆற்றல் அலைகளாக மாற்றபட்டு அணுக்களின் வழியே பயணிக்கிது.

ஒவ்வொரு அலையும் அணுவை அடைந்தவுடன் அது தான் இருக்கும் சக்தி நிலையில் இருந்து, தூண்டபடும் சக்தி நிலைக்கு உயருது. இவ்வாறுதான் அலைகள் பிரபஞ்சத்தில் பயணிக்கிறது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியை உமிழ்கிறது. அதை நம் கண்கள் கிரகித்து காட்சியாக தெரிகிறது.

ஆனால் அனைத்தையும் நம்மால் காண முடிவதில்லை. உதாரணம் பூமி முப்பரிமாண அமைப்பை உடையது.

நாம் காண்பது ஒரு பரிமாணம் மட்டுமே. அதே போல நம் உடலும் இரண்டு பரிமாண தோற்றங்களை கொண்டது. நமக்கு தெரிவது ஸ்தூல உடல் மட்டுமே.

சூட்சம உடல் தெரிவதில்லை. ஸ்தூல உடல் அணுக்கள் உமிழும் ஒளியே சூட்சம உடல். மரணத்திற்கு பின்பு ஸ்தூல உடல் மட்டுமே அழிகிறது.

சூட்சம உடல் அழியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பழக்கபட்ட விதத்தில் சுற்றித்திரிகிறது. பிறகு பிரபஞ்ச அணுக்களின் இடையூரினால் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு கரைந்துவிடுகிறது. ஒளி உடல் இருக்கும் வரை எண்ண பதிவின் தொடர்பு இருக்கும்.

தீராத ஆசையிலேயும் தீராத பாசத்திலேயும் தீராத கோபத்திலேயும் செத்தவன் ஆவியாக அலைவான்.

ஆவியை அடிக்கடி நினைத்து பயம் கொள்ளும் மனித மூளை அதன் அலைவரிசையில் தற்செயலாக தொடர்பு கொண்டு விடுகிறது. பிறகு அவர்களுக்கு அமானூசிய அனுபவம் ஏற்படுகிறது.

உயிர் பிரிந்த பின்னும் அது உடலையே சுற்றிசுற்றி வந்து மீண்டும் உடலில் புக முயற்சிக்கிறது. அந்த ஆவி மற்றவர்களை இடையூறு செய்கிறது.

வேறு உடலில் புகுந்து அந்த உடலை தன் கட்டுபாட்டிற்கு கொண்டு வருகிறது. அதனால் மந்திரவாதிகளால் பல்வேறு சடங்குகள் செய்து உடலில் இருந்து விரப்படுகிறது.

அந்த ஆவி மிகவும் பயந்து அலைகிறது. பிறகு மெல்ல மெல்ல உலக வாசனைகள் அற்று மோன நிலையில் ஆழ்ந்த உறக்க நிலையை அடைகிறது.

ஐம்புலன்கள் இல்லாமலேயே ஆவி நிலையில் நம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியும். சூட்சம உடலால் ஒளி வேகத்தில் பயணிக்க முடியும்.

ஆவிகளை தொடர்பு கொண்டு சாதாரணமாக பேசும் கருவிகளை கண்டு பிடிக்கும் காலம் விரைவில் வரலாம்...

தன் வளர்ப்பு தாய் இறந்த 22 நாளில் உணவு உண்ணாமல் தன் உயிரை விட்ட நாய் - நன்றி கெட்ட மனிதரைவிட நாய்கள் மேலடா...




திடீர் கோடீஸ்வரி பாஜக வானதி சீனிவாசன்...


ஊழலை ஒழிக்க வந்த ஆர்எஸ்எஸ் உத்தமர்களில் தமிழக உத்தமர் வானதி சீனிவாசனின் ஊழல்கள்..

வானதி சீனிவாசன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மின்விசிறியை தவணை முறையில் வாங்கி அதில் கடைசித் தவணை கட்ட முடியாத ஒரு எளிய நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியாக இருந்திருக்கிறார்.

அக்காவை கூட்டம் மற்றும் போராட்டங்களில் பேச அழைக்கும் பா.ஜ.கவினர் அவருக்கு போக்குவரத்து மற்றும் வழிச்செலவுக்கு பணம் கொடுத்து உதவி வந்துள்ளனர்.

ஆனால் இன்று அக்கா வானதி சீனிவாசன் சில பல கோடிகளுக்கு அதிபதி. இதை நாம் சொல்லவில்லை. இதைச் சொன்னது அதே பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவரும், திருச்செந்தூரில் இருக்கும் முக்கிய பிரமுகருமான பாலசுப்பிரமணிய ஆதித்யன். இனி அவரே பேசுகிறார், கேளுங்கள்.

கடந்த 2003 -ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள். வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம்.

அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன்.

அது மட்டுமல்ல மையிலாப்பூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.

யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்...

அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ.  50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்...

அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.

ஐந்தாண்டுகளில் அக்காவின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதாவது 525 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறுகிய காலத்தில் இவ்வளவு பணமும் சொத்துக்களும் எப்படி வந்தன?

அத்தனையும் தானும் தனது கணவர் சீனிவாசனும் வழக்குறைஞர் தொழில் செய்து சம்பாதித்தவை என்று வானதி சமாளிக்கக் கூடும். வழக்கறிஞர் ஊதியம் எவ்வளவு...? மத்திய அமைச்சர் பினாமி என்ற கருத்து வேறு..? உறுதிப்படுத்துவதாக உள்ளது வருமானம்.

ஆனால், இந்தச் சொத்துக்கள் வானதி குடும்பத்தினர் ஊழல்களாலும், தங்களது அரசியல் சொல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்தவை என்று அம்பலப்படுத்துகிறார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்யனும், பா.ஜ.க-வைச் சேர்ந்த அவரது நண்பர் சங்கரநாராயணனும். சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) என்ற நிறுவனத்தில், வானதி சீனிவாசன் திட்டமிட்டு அவரது தம்பி சிவகுமார் கந்தசாமியை களமிறக்கி நடத்திய வங்கி மோசடியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

சென்னையிலுள்ள சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) 1995 -ம் ஆண்டு துவங்கப்பட்ட மென்பொருள் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக வானதியின் கணவர் சீனிவாசன் இருந்திருக்கிறார்.  வானதியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் படி அந்நிறுவனத்தின் 20,000 பங்குகளையும் வைத்துள்ளார்.

சைலாக் சிஸ்டம்ஸ், ஜூலை 20, 2007 அன்று ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,600,000 பங்குகளை வெளியிட்டது. வர்த்தகம் தொடங்கும் போது அதன் ஆரம்ப விலை ரூ. 350-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் செய்வதற்கு, யார் வசம் எவ்வளவு பங்குகள் உள்ளன, எத்தனை பங்குகள் சந்தையில் வெளியிடப்படுகின்றன போன்ற இதர விவரங்களை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) கொடுக்க வேண்டும்.

சைலாக்கின் நிறுவனர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளைப் பற்றி பொய்யான மற்றும் தவறான தகவல்களை கொடுத்ததாகக் கண்டறிந்த செபி, இந்நிறுவனதையும், அதன் நிறுவனர்கள் சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரையும் பங்கு சந்தையிலிருந்து தடை செய்து 2012 -ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தன. இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவர் வானதியின் கணவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி, இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் வசூலித்த சேவை வரி சுமார் ரூ.3 கோடியை அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

மேலும், 2012 -ம் ஆண்டு காலகட்டத்தில் தனது ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் கொடுக்காமலும் இருந்துள்ளது. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியையும் (PF) அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

சைலாக் நிறுவனம் தனது தொழில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 2009-2013 காலகட்டத்தில், யூனியன் வங்கி, பெடரல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல நூறு கோடிகளை கடனாகப் பெற்றது. ஆனால், அவற்றை தொழில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தாமல், முறைகேடாக பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் அதன் நிறுவனர்கள். அவற்றுள் சைலாக்கின் ஐரோப்பிய கிளை (Zylog systems Europe Ltd) வாங்கிய சொத்துக்களும் அடக்கம். அதாவது இந்திய வங்கிகளில் வாங்கிய கடனைக் கொண்டு வெளிநாட்டில் முறைகேடாக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த கால கட்டத்தில் ஐரோப்பிய கிளையின் இயக்குனராக வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி இருந்துள்ளார்.

மேலும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையையும் கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளது இந்நிறுவனம். இதனால் 2013-ம் ஆண்டு அவ்வங்கிகள் சுமார் ரூ.740 கோடியை வராக்கடனாக அறிவித்தன. அத்துடன், மத்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்திய பொதுத்துறை வங்கிகளை பட்டை நாமம் போட்டு ஏமாற்றிய கயவர்கள் பட்டியலில் மல்லையா மற்றும் இதர முதலாளிகள் மட்டுமல்ல, சைலாக் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் இராமானுஜம் ஷேஷரத்தினம் போன்ற ஆர்.எஸ்.எஸ்-காரர்களின்  நிறுவனங்களும் உள்ளன. ஆம், வானதியின் வர்க்கம் மேம்பட ‘வர்த்தக’ வசதி செய்து கொடுத்த சைலாக் நிறுவனத்தின் மூலவர்கள் சாட்சாத் ஸ்வயம் சேவகர்கள்.

கடன் கொடுத்த வங்கிகள், கடன் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தன. அதில் அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட நவம்பர் 2014 -ல் தீர்ப்பளித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.

மோடி அரசு பதவியேற்ற பின் நவம்பர், 2014-ல் வானதியின் கணவர் சு. சீனிவாசன் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுகிறார். இதற்குப் பின் 2015 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சைலாக் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி சைலாக் தாய் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்க பரிந்துரைக்கப் படுகிறார்.

மோடி அரசு, “என் நாடு, என் அரசு, என் குரல்” என்ற முழக்கத்துடன் அரசில் மக்கள் பங்கேற்கும் திட்டத்தை அறிவித்து ’என் அரசு’ (mygov.in) என்ற வலைத்தளத்தை நடத்தி வருகிறது. அந்த வலைத்தளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை சைலாக் நிறுவனம் 2015 -ம் ஆண்டில் பெற்றது.

இப்போது எல்லாப் புள்ளிகளையும் இணைத்து பாருங்கள். தலை மோடி அரசு முதல் வால் வானதி வரை இந்த ஊழல் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை ஆற்றியுள்ளார்கள்.

இதனிடையே சைலாக் நிறுவனத்தின் துணை நிறுவனமான சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் 2009 -ம் ஆண்டு யூனியன் வங்கியிலிருந்து ரூ.61.5 கோடியை குறுகிய கால கடனாகப் பெற்றுள்ளது. இணைய சேவை வழங்கல் தொடர்பான வைஃபை (WiFi) திட்டத்தில் பொருட்களை வாங்க முதலீடு செய்வதற்கென்று இந்தக் கடன் பெறப்பட்டது. இந்தக் கடனை சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை.

அது மட்டுமல்ல, போலியான நிறுவனங்களை உருவாக்கியும், போலியான ரசீதுகளை உருவாக்கியும் பொருட்களை வாங்கியதாக கணக்குக் காட்டியது சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம். அப்படி உருவாக்கப்பட்ட பெயர்ப்பலகை நிறுவனங்களின் மூலம், வங்கியில் பெறப்பட்ட நிதியை வெளியேற்றி விட்டு, நட்டமடைந்து விட்டதாக ஏமாற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டறிந்த யூனியன் வங்கி, சைலாக் நிறுவனர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) புகார் அளித்தது. மோசடி மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் ஜனவரி 30, 2017 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் தான் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது  தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்தை மீட்பதற்கு நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்கள். ஏடிஎம் வரிசையில் நின்று செத்த மக்களைக் கொச்சைப் படுத்தினார்கள்.

ஆயினும் வானதி சீனிவாசனின் இந்த ஊழலை மறுப்பதற்கு அவரோ அவரது பக்தாள் கூட்டமோ கடப்பாறையை விழுங்க வேண்டியிருக்கும்...

சித்தர்கள் காட்டிய கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவிலும்...


நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து, வென்று சிவத்தை (கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை (சித்தர்களை) வழிபட்டு இருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை.

ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"

- ஆசான் திருமூலர்

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது.
ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.

-ஆசான் வள்ளலார் - 14.

குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
-ஆசான் கருவூர் முனிவர் -11-

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம்..

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள்.

அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும்.

மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள்.

என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது.

அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள்..

அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.

எனவே, ஞானிகளை பூஜிப்போம், நலம் பெற்று வாழ்வோம்..

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும்.

நம் உள்ளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும்.

ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும் தான். எனக்கும் சேர்த்துத் தான்...

தரக்குறைவாக விமர்சித்து போஸ்டர் ஓட்டியதால் உசிலம்பட்டியில் பரபரப்பு...


திலீபனின் இறுதி உரையிலிருந்து…


என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது..

நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன.

நான் திருப்தி அடைகிறேன்.

இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன்.

ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.

நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான்.

நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன்.

ஆனால் பெரும் பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.

நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.

நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும்.

மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..

இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.

எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல் தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்..

எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது..

இதில் பிழைகள் இருக்கலாம்.. இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்..

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...

நவம்பர் 27 அண்ணன் தியாகதிபம் லெப்.கேணல் திலீபனின் 54வது பிறந்தநாள்... புகழ் வணக்கம் அண்ணா...


தமிழ் தேசிய மாவீரர்கள் நாள்...


உன்னத இலட்சியத்திற்காக.. தமது உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை.. தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட முடியாது..

எமது இன விடுதலைப் போராட்டத்திற்காக தங்களுடைய உயரிய உயிரையே அர்ப்பணித்த மாவீரர்களுடைய தினம் எப்போதும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

அவர்களது மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் ஒரு போதும் முடியாது...