16/08/2018
இந்திய சதி கோட்பாடு - 1...
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் ஹோமி பாபாவை (Homi Bhabha) கொலை செய்தது சிஐஏ தானா என்பது பற்றியது..
கொலை சம்பவம் - ஹோமி பாபா உயிர் இழக்க காரணமான விமான விபத்தானது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவம் என்கிறது ஒரு சதி கோட்பாடு.
அமெரிக்கா - தோரியத்தில் (Thorium ) இருந்து சக்தியை பிரித்து எடுப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைவதை நிறுத்த அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (CIA) தான் ஹோமி பாபாவை கொலை செய்தது என்கிறார்கள் சில சதி கோட்பாட்டாளர்கள்.
ஆதாரம் : ஆனால், இந்த சதிகோட்பாடுக்கு இதுநாள் எந்த விதமான ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது...
கைவிடப்பட்ட நிலையில் கம்பர்.. தமிழக அரசின் கவனத்துக்கு...
கம்பர் எழுதிய ராமாயண காவியத்தை உலகமே போற்றுகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே அமைந்துள்ள கம்பரின் சமாதியோ பராமரிப்பின்றி காணப்படுகிறது. அங்குள்ள கம்பர் கோவிலுக்குச் செல்லும் சாலை, பல ஆண்டுகளாகவே குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
1,000 ஆண்டுகள் பழமையான கம்பர் நினைவிடம் தற்போது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இந்த நினைவிடத்தைப் பாதுகாத்து அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென்று வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதுசம்பந்தமாக விசாரணை நடத்திய நீதிமன்றம், கம்பர் நினைவிடப் பராமரிப்புத் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள கருதுப்பட்டி என்ற கிராமத்தில்தான் கம்பர் நினைவிடம் அமைந்துள்ளது. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். கம்பர் இயற்றிய ராமாயணத்தில் காதல் தமிழ், வீரத் தமிழ், ஆன்மிகத் தமிழ் என அனைத்தும் இருக்கும். அதனால்தான் இன்றும் இந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் சமாதி உள்ள இடத்திலிருந்து மண் எடுத்து குழந்தையின் நாக்கில் வைப்பது வழக்கமாக உள்ளது. அப்படிச் செய்வதால், குழந்தை நல்ல தமிழாற்றலுடனும் மிகுந்த தமிழ் அறிவுடனும் வளரும் என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை.
கம்பன் வாழ்ந்த காலம் கி.பி 9-ம் நூற்றாண்டு. தஞ்சை மாவட்டம் தேரெழுந்தூர் எனும் ஊரில் பிறந்தவர். தான் எழுதிய ராமாயணத்தை கி.பி 886-ல் திருவெண்ணெய் நல்லூரில் அரங்கேற்றினார். அதன் பின்னரே அவர் 'கவிச் சக்கரவர்த்தி' என அழைக்கப்பட்டார். சோழ மன்னன் குலோத்துங்க சோழனின் மகளுக்கும் கம்பன் மகனுக்கும் காதல் ஏற்படவே சோழ மன்னன் கோபம் கொண்டான். குலோத்துங்க சோழனின் அரசவையில் கொடிகட்டிப் பறந்தவர் கம்பர். புலவரின் குடும்பத்தில் தன் மகளுக்கு ஏற்பட்ட காதலை மன்னன் ஏற்கவில்லையென்றதும், மனம் வெறுத்தநிலையில் கம்பர் நாடோடியாகப் பல்வேறு இடங்களிலும் சுற்றித்திரிந்தார். இறுதியாக, சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் மாடு மேய்க்கும் சிறுவனிடம் முடிக்கரைக்கு கம்பர் வழிகேட்க, அந்த சிறுவனோ, "அடிக்கரை போனால் முடிக்கரை சென்றடையலாம்" என்று கவிநயத்துடன் சொன்னதைக் கேட்டு, அச்சிறுவனின் பேச்சாற்றல், கவிநயத்தால் கவரப்பட்ட கம்பர், "நாம் தங்க வேண்டிய இடம் முடிக்கரை அல்ல; நாட்டரசன்கோட்டைதான்" என்று முடிவு செய்தார். இதையடுத்து அங்கேயே தங்கினார் கம்பர். தன் இறுதி காலத்தையும் அங்கு கழித்தார்.
"தாடியுடன் தள்ளாத வயதில் வந்திருப்பவர் கம்பர்" என்று தெரிந்துகொண்டார் ஆவிச்சி செட்டியார். அதன் பிறகு ஆவிச்சி செட்டியார் தோட்டத்திலேயே தங்கியிருந்தார் கம்பர். மிகக் கொடிய வறுமையில் வாடிய கம்பர், நாட்டரசன்கோட்டையின் எல்லைப்புறத்தில் உள்ள ஆவிச்சி செட்டியார் தோட்டத்திலேயே மரணமடைந்தார். அவர் இறந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டு இன்றளவும் அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கும் மேல் வரலாற்றுப் பின்புலம்கொண்ட கம்பர் கோயிலில், அவரின் புகழைப் போற்றும்வகையில் அரசு சார்பில் எந்த விழாக்களும் நடத்தப்படுவதில்லை. இதனால், இப்பகுதியில் வாழும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் கம்பரைப் பற்றித் தெரியாத சூழல் நிலவுகிறது.
தவிர, கம்பர் சமாதி அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. புனித குளமாகக் கருதப்பட்ட கம்பன் குளம் பராமரிப்பு இல்லாததால், சிதிலமடைந்து நீர் வரத்தின்றிக் காணப்படுகிறது. தனியார் பராமரிப்பில் உள்ள கம்பர் கோயில் சுற்றுச்சுவர் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. கம்பன் விழாக்கள் மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட ஏராளமான வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. இதில் கம்பனுடைய இலக்கியங்கள் குறித்த பிரசங்கங்கள், பட்டிமன்றங்கள் நடக்கின்றன. ஆனால், அவர் இறுதிகாலத்தில் வாழ்ந்து உயிர் துறந்த ஊரான நாட்டரசன்கோட்டையில் கம்பனுக்குப் பெரிய அளவில் விழா எதுவும் நடத்தப்படுவதில்லை என்பது வேதனையான உண்மை.
"நாட்டரசன்கோட்டையில் கம்பன் மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய தமிழக அமைச்சர் தமிழ்க்குடிமகன் ஒரு விழாவில் அறிவித்தார். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. கம்பருடைய உண்மையான தமிழ்ப் பற்று, கம்பர் தமிழுக்கு ஆற்றியத் தொண்டு ஆகியன நாளடைவில் இப்பகுதியில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மறையும் நிலை உள்ளது.
“சிவகங்கை மாவட்டச் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் கம்பன் நினைவிடத்தையும் சேர்த்து, அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் அளவுக்குச் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்; கம்பன் குளத்தைச் சீரமைக்க வேண்டும்" என்பதே நாட்டரசன்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுபற்றி சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கந்தசாமி பேசும்போது, "நாட்டரசன்கோட்டையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை கண்ணாத்தாள் கோயில் திருவிழாக் காலங்களில் தனியார் அமைப்புகள் சார்பில் கம்பன் விழா நடத்தப்பட்டது. 10 நாள் நடக்கும் இந்த விழாவில் தினந்தோறும் பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது தனியார் சார்பிலும் விழா நடத்தப்படுவதில்லை; அரசு சார்பிலும் எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை. கம்பருக்கு மணி மண்டபம் அமைத்து, அவரின் நினைவைப் போற்றும் வகையில் இலக்கிய விழாக்கள் நடத்தப்பட வேண்டும். உலகமே கம்பரைப் போற்றுகிறது. மிகப்பெரிய காவியம் தந்த கம்பர் நினைவிடம் பராமரிப்பு இல்லாமல் இருப்பது தமிழர்களுக்கும், தமிழக அரசுக்குமான அவமானமாகவே கருதுகிறேன். எனவே, உடனடியாக கம்பருக்கு அரசு விழா நடத்த வேண்டும்" என்றார். கம்பர் குறித்த கோரிக்கைக்கு தமிழக அரசு கவனம் செலுத்துமா?
இதற்கு உடனடி தீர்வு முல்லை பெரியாறு அணையில் அதன் அதிகபட்ச கொள்ளளவான 152 அடி வரை தண்ணீர் தேக்குவதுதான்...
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நம்மால் 142 அடிக்குமேல் தண்ணீரை தேக்க முடியாது.
கேரள அரசு உடனே விரைந்து செயல்பட்டு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியாக தமிழகம் உயர்த்திக்கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அரசாணை பிறப்பித்தால் போதும்.
அந்த அரசாணை முல்லை பெரியாறு அணையின் மூலம் கேரள வெள்ள சேதத்தை பெருமளவு குறைக்கும்...
பனை...
பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.
நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.
தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.
பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை..
பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.
சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்ச முடியாது.
இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',
சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.
பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.
பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.
பயன் தரும் பாகங்கள் . . .
நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.
வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மருத்துவப் பயன்கள். . .
பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.
பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.
வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.
புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.
நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.
பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.
பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.
பனையோலை வேய்த இருப்பிடம் ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப் பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.
கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.
அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.
பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.
எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.
தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.
இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது...
தமிழ் படிக்காமலேயே தமிழ் நாட்டில் பட்டம் பெறவும் முடியும்..
தமிழ் பேசாமலேயே தமிழ் படத்தில் நடிக்கவும் முடியும்..
தமிழ் தெரியாமலேயே தமிழ் நாட்டில் தொழில் நடத்தவும் முடியும்..
தமிழ் அறியாமலேயே தமிழ்ச் சங்கத்துக்கு தலைமை ஏற்கவும் முடியும்..
தமிழைச் சரியாக உச்சரிக்காமலேயே தமிழ் வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் அறிவிப்பாளராக இருக்கவும் முடியும்..
தமிழ் எழுதாமலேயே தமிழக அரசின் பணியில் இருக்கவும் முடியும்..
இவ்வளவு ஏன்..
தமிழனுக்கு பிறக்காமலேயே தன்னை தமிழினக் காவலன் என்று சொல்லி தமிழ் நாட்டின் முதலமைச்சாரக இருக்கவும் முடியும்..
தமிழ் நாட்டில் தான் இப்படித் தமிழில்லாமல் முடியும்..
காரணம்..
தமிழர்களில் பலருக்கு பற்றில்லாமல் போய் விட்டது..
மொழியின் மீதும்.. வழி நடத்துதல் மீதும்...
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட விஜய் ஆண்டனி மயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன் ஆவார்...
யார் மயூரம் வேத நாயகம் பிள்ளை என கேட்பீர்கள்.
1878இல் இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் எனற புதினம்மே தமிழில் முதன் புதினம்மாகும்.
செயுள் வடிவில் எழுதுவதையே நடை முறையாக கொண்டிருந்த தமிழ் இலக்கணம் உரைநடை கதை புனைவு என்று மாறியது.
இவர் மொத்தம் 16 நூல்கள் எழுதியுள்ளார்...
வீணை இசைப்பதில் வல்லவர். விஜய் ஆண்டனி இசை பயணம் அங்கு ஆரம்பித்ததா என்று தெரியவில்லை.
கி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த அன்றைய சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து " சித்தாந்த சங்கிரகம் " என்ற நூலாக 1862ல் வெளிட்டார்.
மேலும் 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் போன்றோர் இவரது சமகாலத்து நண்பர்கள் ஆவார்கள்.
1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும்
பாதிக்கப் பட்ட மக்களுக்கு மயூரம் வேதநாயகம் பிள்ளை கொடையளித்தார்...
அரக்கர்...
அரக்கு நிறத்தில் இருப்போர் அரக்கர்.
அசுரன் என்பது வேறு.
சுராபானம் அருந்துவோர் சுரராம்.
அதை அருந்தாததவன் அசுரனாம் அவனே அரக்கன் என்றும் குறிக்கப்படுகிறானாம்.
பொதுமையான அறிவைப் பயன்படுத்தவும்.
ஒரு குறிப்பிட்ட மக்களை வேற்றினத்து மக்கள் அவர்கள் உடல்நிறத்தை குறிப்பிட்டு பெயர்வைத்து அழைப்பார்களா?
இல்லை அவர்கள் குடிக்கும் பானத்தை குறிப்பிட்டு பெயர் வைத்து அழைப்பார்களா?
சுர், சுள், சுல், சுறீர், சுரம் அனைத்தும் நெருப்பைக் குறிப்பது.
சூரன் என்பது கதிரவனைக் குறிக்கும்.
- பாவாணர்.
அதாவது குமரிக்கண்டம் முதல் இமயம் வரை தமிழர் வாழ்ந்த போது, வடக்குத் தமிழர் காலநிலையின் காரணமாக தெற்குத் தமிழரை விட வெளுத்த நிறமாக இருந்திருப்பர்.
அவர்கள் தெற்குத் தமிழரது தோல் சிறிது சிவப்பு கலந்த கரியநிறமாக இருப்பதைக் குறிப்பிட்டு அவர்களை அரக்கர் என்று அழைத்திருப்பர்.
இலக்கியங்களில் இராவணன் அரக்கன் என்று அழைக்கப்பட்டுள்ளான்.
ஆக அரக்கன் இழிவான சொல் இல்லை...
பிரபஞ்ச இரகசியம்...
நீங்கள் வாழ்வில் என்ன சாதிக்க விரும்புகிறேர்களோ , என்னவாக விரும்புகிறேர்களோ, நீங்கள் எப்படிபட்ட வாழ்க்கையை வாழ விரும்புகிறேர்களோ..
அவை அனைத்தையும் அமைத்து நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு கதையாக எழுதுங்கள். கதைக்கு பக்கங்கள் கணக்கில்லை. எழுதுங்கள் எழுதி கொண்டே இருங்கள்.
அந்த கதையின் நாயகன் நீங்கள் தான். உங்கள் கற்பனைக்கு எல்லை என்பதில்லை என்பதால் உங்கள் கதாபாத்திரத்தை கற்பனையால் நன்கு மெருகேற்றுங்கள்..
இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் போல உங்கள் கதை டைட்டானிக் , அவதார் போன்ற பிரமாண்டமான படைப்புகளாக இருக்கட்டும்..
கதை அனைத்தையும் நிகழ்கால வாக்கியங்களாக மட்டுமே எழுத வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..
நீங்கள் எழுதிய கதையை தினமும் காலையிலும் , இரவில் தூங்க செல்லும் முன்னர் வாசியுங்கள்..
வாசிக்கும் போது உங்கள் கதையை உங்கள் ஐம்புலன்களை பயன்படுத்தி மனதில் காட்சிப்படுத்தி பாருங்கள் உணருங்கள், அந்த கணத்தில் அது தான் உண்மையென்று ஆழமாக நம்புங்கள்..
நீங்கள் எழுதிய கதை மிக விரைவில் நிஜமாகும்...
தண்ணீர் வியாபாரம்...
2005 ஆம் ஆண்டு மார்ச் 27ந்தேதி நள்ளிரவு. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னர்ஸ்பர்க் நகரிலுள்ள ஒரு குடிசைப்பகுதியில் திடீரெனத் தீப்பற்றிக் கொண்டது. விழித்துக் கொண்ட மக்கள் தீயை அணைக்கப் போராடினர். அருகிலிருந்த பொதுக் குடிநீர் இணைப்பிலிருந்து நீரையெடுத்து தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் சற்றுநேரத்தில் அதிலிருந்து வந்து கொண்டிருந்த நீர் நின்றுவிட்டது. காரணம் அதில் பொருத்தப்பட்டிருந்த ப்ரீ-பெய்ட் மீட்டரில் காசு தீர்ந்துவிட்டது. அண்மையில்தான் பொதுக் குழாய்களில் ப்ரீ-பெய்ட் மீட்டர் பொருத்தும் பணியைச் செய்து முடித்திருந்தது அந்தத் தனியார் தண்ணீர் நிறுவனம்.
வேறு வழியின்றி அம்மக்கள் சாக்கடை நீரையள்ளி தீயை அணைத்து முடித்தனர். ஆனாலும் பல குடிசைகள் சாம்பலானதோடு இரு குழந்தைகளும் தீயில் கருகி இறந்துப் போயின. பொதுக் குழாய் அரசிடம் இருந்திருந்தால் நீர் கிடைத்திருக்கும். குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால் தனியார் நிறுவனமோ குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் வேண்டுமெனில் செல்பேசிக்கு ரீசார்ஜ் செய்வது போல் எவ்வளவு லிட்டர் நீர் தேவையோ அவ்வளவுக்குத் தண்ணீர் அட்டையில் பணம் கட்டி ரீசார்ஜ் செய்துக்கொள்ள வேண்டும் என்று விதித்திருந்தது. அன்று அட்டையில் போதிய பணமில்லாத காரணத்தால் குழாயில் நீர் நின்று போனது. இது தண்ணீர் தனியார்மயத்தின் கொடுமைக்குச் சான்று.
நான்கு கோடி மக்கள் தொகைக் கொண்ட ஜோகன்னர்ஸ்பர்க் நகரில் தனியார்மயம் அறிமுகமாகி இரண்டே ஆண்டுகளில் கட்டணம் செலுத்த முடியாமல் ஒரு கோடி நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 24X7 குடிநீர் என்பது பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் என்பது எழுதப்படாத விதி.
தென்னாப்பிரிக்காவை விடுங்கள்.
பணக்கார நாடான இங்கிலாந்தில் கூட 50 இலட்சம் இணைப்புகளுக்கு மேல் துண்டிக்கப்பட்ட வரலாறு உண்டு.
ஜோகன்னஸ்பர்க் நகரத்துக்குக் குடிநீர் வழங்கிய இந்தத் தனியார் நீர் நிறுவனம்தான். பெங்களூர் மாநகரத்துக்குத் தற்போது குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இரண்டு படுக்கையறைக் கொண்ட ஒரு வீட்டின் நீர் பயன்பாட்டுக்கு இந்நிறுவனம் ஓராண்டுக்கு வசூலிக்கும் தொகை ஏறத்தாழ 14,000 ரூபாய். இந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேன். இந்நிறுவனம் தான் கோவைக்கு வரப்போகும் சூயஸ்...
ஒன்றே குலம் ஒருவனே தேவன்...
திருமூலர் கைலாயப் பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர்.
இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது.
திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி எல்லாம் பெற்றவர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். இவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.
சகுனகிரி மலை பல சித்தர்கள் தங்கித் தவம் புரிந்த இடமாகக் கருதப்படுகிறது.
சதுரகிரி மலையின் விசேஷத் தன்மை பற்றி நந்தீசுவரர் தான் திருமூலருக்கு எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
நான்கு வேதங்களும் ஒன்று சேர்ந்து ஒரு உருவமாக அமைந்ததால் தான் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்ததாகத் திருமூலரின் சீடரான காலாங்கிநாதர் வருணிக்கிறார்.
இவரது திருவாக்கில் மலர்ந்த தமிழ் மந்திர தந்திரம் தான் திருமந்திரம்.
இதனை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார் எனப்படுகிறது.
இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார்.
இவர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும்.
இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார்...
யாருமே வசிக்க முடியாத ஒரு மர்மமான இடம் பூமியில் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதே இல்லையாம்...
கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடலுக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவில் பிரமாண்டமாய் தேங்கியிருக்கும் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான குட்டிக் குட்டித் தீவுகள் இருக்கின்றன.
அந்தத் தீவுகளில் ஒன்றுதான் ‘என்வைன்டினெட்’ என்றழைக்கப்படும் கொஞ்சூண்டு நிலப்பகுதி. துர்கனா ஏரியைச் சுற்றி வாழும் பழங்குடியின மக்களின் மொழியில் ‘என்வைன்டினெட்’ என்றால், ‘திரும்பி வராது’ என்று அர்த்தமாம். தீவுக்கு இப்படிப் பெயர் வந்ததற்குப் பின்னணியில் இருக்கும் கதைதான் சுவாரஸ்யமும், மர்மமும் நிறைந்தது.
1900-களில் என்வைன்டினெட் தீவில் ஏராளமான மனிதர்கள் வாழ்ந்தார்கள். மீன் பிடிப்பது அவர்களுடைய தொழில். பெரும்பாலும் தீவை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்றாலும், வியாபாரத்துக்காக அவ்வப்போது பக்கத்துத் தீவுகளுக்குச் சென்று வருவார்களாம்.
என்வைன்டினெட் தீவில் மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே ஆதாரம், அவர்கள் பக்கத்துத் தீவுகளுக்கு அடிக்கும் விசிட் தான்.
இந்த நிலையில், திடீரென சில நாட்கள் அந்தத் தீவில் இருந்து, வியாபாரத்துக்காகப் பக்கத்துத் தீவுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது.
அடுத்தடுத்த சில நாட்களில் மனிதர்களின் வருகை முற்றிலும் நிற்கவே, பக்கத்து தீவைச் சேர்ந்த சிலர் அந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். தீவுக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை.
பிறகு, பாதுகாப்புடன் பயணித்த இன்னொரு பழங்குடியினர் குழுவும் திரும்பி வரவில்லை. இது போதாதா? ‘தீவுக்குச் செல்பவர்கள் காற்றில் கரைந்து விடுகிறார்கள்’, ‘வேற்றுக் கிரகவாசிகள் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்’, ‘திடீரென வரும் ஒளி வளையம் மக்களைக் கொன்று விடுகிறது’ என ஏகப்பட்ட கதைகள் தீவை ஆக்கிரமித்தன. அன்று முதல் மர்மத் தீவாகவே மாறிவிட்ட என்வைன்டினெட்டுக்குள் யாரும் நுழைவதில்லை.
1934-ல் அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் என்பவர், தன்னுடைய குழுவினரோடு துர்கனா ஏரியை ஆராந்துகொண்டிருந்தபோது அவருடைய காதில் ‘என்வைன்டினெட்’ தீவின் கதைகள் கிசுகிசுக்கப்படுகிறன.
ஆர்வமான விவியன் ‘இந்தத் தீவுக்கு என்னதான் ஆச்சு?’ என்பதை ஆராய உடன் வந்திருந்த மார்டின், டைசன் என்ற இரு இளம் ஆராய்ச்சியாளர்களை அந்தத் தீவுக்கு அனுப்பிவைத்தார். மர்மத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்று ‘என்வைன்டினெட்’ தீவுக்குக் கிளம்பிய இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் விவியனுடன் வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள்.
பிறகு, ஹெலிகாப்டர் உதவியோடு தீவுகளை வட்டமடித்த அவர்களுக்கு என்வைன்டினெட் தீவில் என்ன தெரிந்தது?
பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. மீன், முதலை போன்ற சில உயிரினங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. மொத்தத்தில், அங்கே மனிதர்களும் இல்லை, மனிதர்கள் இருந்த தடயமும் இல்லை.
என்வைன்டினெட் தீவுக்கும் வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இங்குள்ள மக்கள் அழிந்து போனதற்கு வேறு ஏதேனும் இயற்கைச் சூழல்கள் காரணமாக இருக்குமா, தீவுக்குச் செல்லும் மனிதர்கள் ஏன் திரும்புவதில்லை எனப் பல கேள்விகளோடு, இன்றுவரை எட்ட நின்றே ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்...
தமிழகத்தில் உள்ள பல அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது...
தமிழகத்தில் மேட்டூர், அமராவதி, முல்லைப்பெரியாறு மற்றும் பவானி சாகர் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.
ஒரு சில அணைகளில் நீர் திறந்து விடபட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு தற்போது நீர் வரத்து வினாடிக்கு 89015 கன அடியாக குறைந்துள்ளது. இங்கிருந்து வினாடிக்கு 80518 கன அடி நீர் வெளியேற்றபடுகிறது.
அது தவிர கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் மட்டம் 120.31 அடியாக உள்ளது.
அமராவதி அணையில் நீர் மட்டம் முழு கொள்ளளவான 90 அடியில் 87.90 அடியை அடைந்துள்ளதால் வினாடிக்கு 2800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 2966 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு 136 அடியை எட்ட உள்ளது. நீர் வரத்து தொடர்வதால் அணையில் இருந்து விரைவில் நீர் திறக்கப்படலாம் என கருதப்படுகிறது.
கரையோர மக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5593 கன அடி நீர் வந்துக் கொண்டிருந்தது. அது தற்பொது 8926 அடியாக அதிகரித்துள்ளது.
இந்த அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளதால் வினாடிக்கு 3800 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது...
வேறொரு ஆணுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன்.. அடுத்து நடந்தது என்ன...
திருச்சியை சேர்ந்தவர் ஐயப்பன். லாரி டிரைவரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஐயப்பன் லாரி டிரைவர் என்பதால் பெரும்பாலான நாட்கள் வெளியூர் சென்று வருவது வழக்கம். இதற்கிடையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுகந்திக்கும் முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த முஜிபுர் ராகுமான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் கள்ள காதலாக மாறி உள்ளது. இருவரும் ஐயப்பன் இல்லாத சமயத்தில் உல்லாசமாக இருந்து வந்தனர். மேலும் சுகந்தி தனது இரண்டு குழந்தைகளையும் முஜிபுர் ரகுமான் வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்த தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு முஜிபுர் ரகுமானை அவரது உறவினர்கள் வந்து அழைத்து சென்று விட்டனர். இதனை அடுத்து சுகந்திக்கு அதே பகுதியை சேர்ந்த பல ஆண்களுடன் தொடர்பு ஏறப்பட்டது.
இதனை அடுத்து தான் தனியாக இருப்பதாகவும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறும் சுகந்தி தனது கணவன் ஐயப்பனை அழைத்தார். இதனை நம்பி ஐயப்பன் சுகந்தியுடன் வந்து இணைந்தார். கணவன் வந்து தன்னுடன் தங்கினாலும் சுகந்தி ஆண்களுடானான தொடர்பை நிறுத்தவில்லை.
இந்த தகவல் ஐயப்பனுக்கு தெரிய வந்ததால் இனிமேலாவது திருந்தி வாழ் என்று கூறினார். அதற்கு அவரும் ஒப்பு கொண்டார். ஆனால் சமீபத்தில் சுகந்தி வீட்டில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தைகளை விளையாட வெளியில் அனுப்பி விட்டார். பின்னர் வீட்டில் காய்கறி நறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் வேளச்சேரி பகுதியில் ரோந்து பணியின் போது கைது செய்தனர்...
அன்பை நிலை நாட்டுவதற்கு உருவானது தான் மதங்களாகும்...
எந்த மதமும் வன்கொடுமையை வலியுறுத்தவில்லை. ஆனால் மதங்களின் பெயரால் தான் வன்முறைகள் இன்று பரவலாக நடந்து வருகிறது.
அதற்கு காரணம் என்ன?
அன்பை போதிக்கும் மதங்களால் அராஜகங்கள் நிகழ்வது ஏன்?
என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் கிடைக்கும் பதில் ஒன்று தான்.
மதங்களை தவறுதலாக புரிந்து கொள்வதும் என்மதம் தான் உயர்ந்தது என்று மற்ற மதங்களை ஊதாசினப்படுத்தும் மனப்போக்கும் தான் மத வன்முறைகளின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது என்ற பதில் கிடைக்கும்.
மத வெறியையும் மத அறியாமையையும் நீக்குவதற்கு என்ன வழி என்று மக்களை நேசிக்கும் மனித நேயமிக்க சிந்தனையாளர்கள் பலரும் தங்களது அறிவாற்றலைக் கொண்டு ஆராய்ந்து வருகிறார்கள்.
அவர்களின் சிந்தனைக்கு உரமாகவும் சீர்திருத்தத்திற்கு வழியாகவும் எனக்கொரு யோசனை தோன்றியது அந்த யோசனையின் விளைவு தான் இந்த பதிவாகும்...
மதப்பிரச்சாரம் என்பது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும்.
ஆனால் அந்த பிரச்சாரம் எந்த நோக்கில் அமைந்திருக்கிறது என்றால் ஒன்றை தாக்கியும் இன்னொன்றை போற்றியும் தான் அமைந்திருக்கிறது.
இதில் தான் சிக்கல்களும் பிரச்சனைகளும் முளைவிடுகின்றன.
எனவே அந்த மதப்பிரச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதில் இன்னொரு விஷயத்தையும் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக இன்றைய மதப்பிரச்சாரம் என்பது சுய மதத்தினரிடம் அல்லாமல் மாற்று மதத்தினரிடம் தான் அதிகப்படியாக நடத்தப்படுகிறது.
எனவே காழ்புணர்ச்சி அற்ற வகையிலும் சுய மதத்தினரே தங்களது மதக் கருத்துகளை நன்கு புரிந்துணரும் வகையிலும் நமது நோக்கம் அமைந்திருக்க வேண்டும்.
அப்பொழுது தான் மதங்களில் புகுந்திருக்கும் வெறியுணர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.
ஆகவே அந்தந்த மத அறிஞர்கள் தங்கள் மக்களுக்கு தம் தமது மதக்கருத்துகளை புரியும் வண்ணம் போதித்து மாற்று மதத்தினரையும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
அப்பொழுது தான் மதங்களின் மீது பதிந்திருக்கும் வன்முறை என்ற கொடிய பாவம் கழுவப்படும்...
ஆரியமும் திராவிடமும் ஒன்றே...
வடுக ஆரியம் தமிழின வரலாற்றை திரித்து புரட்டு கதைகளை அவிழ்த்து நாசமாக்கியது...
பின்னால் வந்த திராவிடம் தன்னோட முன்னோர்கள் விட்டுச்சென்ற பணியை செவ்வனே செய்துக்கொண்டு இருக்கிறது...
ஐயப்பன் மலையாளி, ஐயப்பன் யாருக்கு பிறந்தான் என்று வியாக்கினம் பேசுதுங்க,
சரி ஐயப்பன் மலையாளியாக இருந்தால் அவனுடைய ஆபரணங்களை வழிப்பாட்டிர்க்காக, தென்காசி எதற்கு கொண்டு வருகிறார்கள்?
இன்று வரை அச்சன் கோயில் இருந்து ஐயப்பனுடைய ஆபரணங்களை தென்காசி கொண்டு வருகின்றனர்...
இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என பகுத்து ஆராயாமல், சில பகுத்தச்சா பன்னாடைகள் முற்றிலும் புறக்கணித்து எள்ளி நகையாடுகின்றனர்...
கருணைக்கிழங்கை கொண்டு பைல்ஸ் மற்றும் உடல் எடையை குறைப்பது எப்படி?
கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை.
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படவும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்த கருணைக்கிழங்கின் பலன்களை இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
பெண்களை வாட்டி எடுக்கும் வெள்ளைப்படுதலை தடுக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் வலி காணாமல் போய்விடும்.
மூல நோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக் கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்தி வந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்சனைகள் சரியாகி விடும்.
கருணைக்கிழங்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் வன சூரணாதி என்ற பெயரில் லேகியமாக விற்கப்படுகிறது...
கடல் கடந்த பேரரசு...
முதன்முதலாக கடல்கடந்த பேரரசை நிறுவியவர்கள் ஸ்பானியர்கள் (spanish empire) என்கிறது மேற்கத்திய வரலாறு.
ஆனால், முதன்முதலாகக் கடல் கடந்து தொலைதூரம் வரை தமது ஆதிக்கத்தை நிறுவியவர்கள் சோழர்களே ஆவர்.
இராசேந்திர சோழன் ஆட்சிக்குள் பல மன்னர்கள் இருந்தார்கள், ஆனால் அவன் வெளியிட்ட தங்க நாணயத்தில் மூவேந்தர் சின்னங்களான மீன், வில், புலி ஆகிய மூன்று மட்டுமே உள்ளன.
தமிழ் நாட்டாண்மை (தமிழ்த் தேசியம்) என்றைக்கோ தோன்றிவிட்டது. நமக்குத்தான் அது புரிவதில்லை...
Subscribe to:
Posts (Atom)