16/08/2018

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட விஜய் ஆண்டனி மயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன் ஆவார்...


யார் மயூரம் வேத நாயகம் பிள்ளை என கேட்பீர்கள்.

1878இல் இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் எனற புதினம்மே தமிழில் முதன் புதினம்மாகும்.

செயுள் வடிவில் எழுதுவதையே நடை முறையாக  கொண்டிருந்த தமிழ் இலக்கணம் உரைநடை கதை புனைவு என்று மாறியது.

இவர் மொத்தம் 16 நூல்கள் எழுதியுள்ளார்...

வீணை இசைப்பதில் வல்லவர். விஜய் ஆண்டனி இசை பயணம் அங்கு ஆரம்பித்ததா என்று தெரியவில்லை.

கி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த அன்றைய  சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து " சித்தாந்த சங்கிரகம் "  என்ற நூலாக 1862ல் வெளிட்டார்.

மேலும் 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார்.


மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் போன்றோர் இவரது சமகாலத்து நண்பர்கள் ஆவார்கள்.

1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும்
பாதிக்கப் பட்ட மக்களுக்கு மயூரம் வேதநாயகம் பிள்ளை கொடையளித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.