16/08/2018

வேறொரு ஆணுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன்.. அடுத்து நடந்தது என்ன...


திருச்சியை சேர்ந்தவர் ஐயப்பன். லாரி டிரைவரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஐயப்பன் லாரி டிரைவர் என்பதால் பெரும்பாலான நாட்கள் வெளியூர் சென்று வருவது வழக்கம். இதற்கிடையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுகந்திக்கும் முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த முஜிபுர் ராகுமான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் கள்ள காதலாக மாறி உள்ளது. இருவரும் ஐயப்பன் இல்லாத சமயத்தில் உல்லாசமாக இருந்து வந்தனர். மேலும் சுகந்தி தனது இரண்டு குழந்தைகளையும் முஜிபுர் ரகுமான் வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்த தொடங்கி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு முஜிபுர் ரகுமானை அவரது உறவினர்கள் வந்து அழைத்து சென்று விட்டனர். இதனை அடுத்து சுகந்திக்கு அதே பகுதியை சேர்ந்த பல ஆண்களுடன் தொடர்பு ஏறப்பட்டது.

இதனை அடுத்து தான் தனியாக இருப்பதாகவும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறும் சுகந்தி தனது கணவன் ஐயப்பனை அழைத்தார். இதனை நம்பி ஐயப்பன் சுகந்தியுடன் வந்து இணைந்தார். கணவன் வந்து தன்னுடன் தங்கினாலும் சுகந்தி ஆண்களுடானான தொடர்பை நிறுத்தவில்லை.

இந்த தகவல் ஐயப்பனுக்கு தெரிய வந்ததால் இனிமேலாவது திருந்தி வாழ்  என்று கூறினார். அதற்கு அவரும் ஒப்பு கொண்டார். ஆனால் சமீபத்தில் சுகந்தி வீட்டில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தைகளை விளையாட வெளியில் அனுப்பி விட்டார். பின்னர் வீட்டில் காய்கறி நறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் வேளச்சேரி பகுதியில் ரோந்து பணியின் போது கைது செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.