16/08/2018

தமிழகத்தில் உள்ள பல அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது...


தமிழகத்தில் மேட்டூர், அமராவதி, முல்லைப்பெரியாறு மற்றும் பவானி சாகர் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. 

ஒரு சில அணைகளில் நீர் திறந்து விடபட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு தற்போது நீர் வரத்து வினாடிக்கு 89015  கன அடியாக குறைந்துள்ளது.  இங்கிருந்து வினாடிக்கு 80518 கன அடி நீர் வெளியேற்றபடுகிறது. 

அது தவிர கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

அணையின் நீர் மட்டம் 120.31 அடியாக உள்ளது.

அமராவதி அணையில் நீர் மட்டம் முழு கொள்ளளவான 90 அடியில் 87.90 அடியை அடைந்துள்ளதால் வினாடிக்கு 2800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

அணைக்கு வினாடிக்கு 2966 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு 136 அடியை எட்ட உள்ளது.   நீர் வரத்து தொடர்வதால் அணையில் இருந்து விரைவில் நீர் திறக்கப்படலாம் என கருதப்படுகிறது. 

கரையோர மக்களுக்கு  முதற்கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5593 கன அடி நீர் வந்துக் கொண்டிருந்தது.  அது தற்பொது 8926 அடியாக அதிகரித்துள்ளது. 

இந்த அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளதால் வினாடிக்கு 3800 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.